You are on page 1of 34

❖ காவேரி கூக்குரல் கடந்து வந்த பாதை

❖ 1998-ஆம் ஆண்டு ஐ.நா அமைப்பின் வல்லுனர்

குழு 2025-ஆம் ஆண்டுக்குள் தமிழக நிலங்களில்

60% பாலைவனமாகப் போகக்கூடிய அபாயம்

உள்ளதா சொன் னாங்க.

❖ சத்குரு அவர்கள் இது 2025 வரை கூட போகாது,

அதற்கு முன் னாடியே இந்த நிலைமை வந்துடும்

அப்படின்னு கணித்து சொன் னாங்க.

❖ இதை சரி பண் ற நோக்கத்தில்தான் தங்களுடைய

சிறு சிறு முயற்சிகளைத் துவங்கியது ஈஷா

அறக்கட்டளை.

❖ 2002-ஆம் ஆண் டோட துவக்க காலத்திலத்

தன் னார்வலர்கள் முயற்சியில் வனஸ் ரீ எக்கோ

சென் டர் அப்படின்னு ஒரு இயக்கத்தை துவக்கி,


வெள்ளியங்கிரி மலை பகுதிகளில் சில நூறு

தன் னார்வலர்களின் பங்களிப்பு மூலமா சுமார் 6

லட்சம் விதைகள் ஊன் றப்பட்டது. இன் னைக்கு

வறண் ட கோடை காலத்தில் கூட வெள்ளியங்கிரி

மலை பகுதிகள் பசுமையா இருப்பதற்கு இதுவும்

ஒரு முக்கிய காரணம் .

❖ 2004 - ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் .

❖ ஈஷா விவசாய இயக்கம் .

❖ ஈஷா பசுமை பள்ளி இயக்கம் .

❖ ஈஷா நர்சரி.

❖ ஈஷா மரம் சார்ந்த விவசாயம் , ஆகிய திட்டங்கள்

தொடக்கம் .

❖ ஈஷா விவசாய இயக்கம் ஆனது நஞ் சில்லா

உணவு உண் ண வேண்டும் என் ற நம்மாழ்வாரின்

எண் ணத்திற்கேற்ப இயற்கை முறைகளில்

உணவுப்பொருட்களை விளைவிக்கும்
முறைகளை விவசாயிகளுக்கு வழங்கி

வருகின் றனர் .

❖ இவ
் வியக்கம் மூலம் விவசாயிகளை

ஒருங்கிணைத்து பல நிகழ்ச்சிகள்

நடத்தப்பட்டுள்ளன.

❖ மாதிரி விவசாயிகளின் பண் ணைகளில் மற்ற

விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தின்

நுழைவாயிலாக உள்ள இடுபொருள் பயிற்சி

அளிக்கப்படுகிறது.

❖ இந்த இடுபொருள் பயிற்சியில் வளர்ச்சி ஊக்கி,

செயலுக்கு மற்றும் பூச்சிவிரட்டி போன் ற முக்கிய

இடுபொருட்களின் 13 வகையான

இடுபொருட்களை தயாரிப்பு மற்றும்

பயன் படுத்தும் விதம் பற்றிய நேரடி களப் பயிற்சி

அளிக்கப்படுகிறது.

❖ 12,000 மேற்பட்ட விவசாயிகள் இப்பயிற்சியில்

பங்கேற்று இயற்கை விவசாயம் செய் யும்

விவசாயிகளாக மாறி உள்ளனர் .


❖ ஈஷா நர்சரி:

❖ தமிழ்நாட்டின் 30 க்கும் மேற்பட்ட இடங்களில்

ஈசாநர்சரி செயல்பட்டு வருகிறது.

❖ விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் மிகவும்

குறைந்த விலையில் 3 ரூபாய் க்கு வழங்கி

வருகிறது.

ஈஷா பசுமை பள்ளி இயக்கம் :

❖ ஈஷா பசுமை பள்ளி இயக்கம் , பள்ளி

குழந்தைகளுக்கு விதை முதல் செடி வரை

உருவாக்கம் செயல்முறைகளை கற்றுக்கொடுத்து

வருகின் றது.

❖ இவ
் வியக்கம் பொதுமக்கள் மற்றும் பள்ளி

குழந்தை மாணவர்களுக்கு மரக்கன்றுகள் நட

வேண்டும் என் ற விழிப்புணர்வை

ஏற்படுத்துவதோடு,மரம் நடவேண்டும் என் ற

உன் னதமான செயல்களில் அவர்களை

ஈடுபடுத்தும் ஒரு கருவியாகவும் உள்ளது.

❖ இதுவரை மூன் ற லட்சம் கன்றுகள் வரை ஈஷா


பசுமைப் பள்ளி இயக்கம் மூலம் பள்ளி

குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் உதவியோடு

பொது இடங்களில் நடவு செய் யப்பட்டுள்ளது.

❖ ஈஷா மரம் சார்ந்த விவசாயம் :

❖ ஈஷா மரம் சார்ந்த விவசாய இயக்கம்

விவசாயிகள் தங்கள் நிலத்தில் உயர் மதிப்பு

வாய் ந்த டிம்பர் மரங்களை நடுவதற்கு

தேவையான ஆலோசனை மற்றும் செயல்முறை

விளக்கங்களை அளித்து வருகின் றனர் .

❖ இதன் மூலம் பல விவசாயிகள் மரப்பயிர்

விவசாயத்திற்கு மாறி இன்று பல

விவசாயிகளுக்கு முன் மாதிரியாக

விளங்குகின் றன.

❖ இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட

விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்

பெற்றுள்ளனர் .
❖ இதன் மூலம் 5 கோடி மரக்கன்றுகள் வரை

விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

❖ இந்தியாவின் உயரிய விருதான இந்திராகாந்தி

பரிவார் புரஸ் கார் விருது(2010) ஈஷாவோட

சுற்றுச்சூழல் செயல்பாட்டுக்காக அரசு

அங்கீ காரமா கிடைத்தது.

❖ 2017-ல இந்தியாவின் உயிர்நாடிகளான நதிகளை

மீட்கவும் , புத்துயிரூட்டவும் உருவானது தான்

நதிகளை மீட்போம் இயக்கம் . 16.2 கோடி

மக்களின் ஆதரவோடு உலகிலேயே மிகப்பெரிய

சுற்றுச்சூழல் இயக்கமாக இது வளர்ந்தது.

❖ நம் நதிகளின் கவலைக்கிடமான நிலை பற்றிய

விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த,


இந்தியாவின் பல மாநிலங்கள் வழியாக 9300

கி.மீ பயணத்தைத் தானே கார் ஓட்டிச் சென்று

சத்குரு மேற்கொண் டார் .

❖ காவிரியின் தற்போதைய நிலை பற்றியும் அதை

நாம் வளம் பெற செய் வதற்கான

நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என் ற

விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த

சத்குரு அவர்கள் காவிரியாறு தொடங்கும்

இடமான கர்நாடகா மாநிலம் தல காவிரியில்

இருந்து தமிழ்நாட்டில் உள்ள காவிரி ஆறு கடலில்

சேரும் இடமான காவிரிப்பூம்பட்டினம்

என்னுமிடம் வரை இருசக்கர மோட்டார்

வாகனத்தில் தானே பயணம் மேற்கொண் டார் .

❖ இந்த பேரணியின் மற்றுமொரு பிரம்மாண் ட

செயல் திட்டம் தாங்க இந்த காவிரி கூக்குரல்

இயக்கம் .
❖ காவேரி கூக்குரல் திட்டத்தின்

நோக்கங்கள் மற்றும் அடிப்படை

தகவல்கள் .

❖ காவிரி ஆறு கர்நாடக மாநிலத்தில்

உற்பத்தியாகிறது ஆனால் தமிழ்நாட்டில் தான்

அதிக தூரம் பயணம் செய் கிறது.

❖ காவிரியாறு 19 க்கும் மேற்பட்ட மாவட்டங்களை

வளம் செய் கிறது.

❖ கடந்த 70 ஆண்டுகளில் காவிரியாறு 40% வற்றி

போயிருக்கு. காவிரி வடிநிலத்தில் 50% க்கும்

மேற்பட்ட இடங்களில நிலத்தடி நீ ர் பெருமளவில்

குறைஞ்சு போச்சு.காவிரிப்படுகையில் உள்ள 80

சதவீதத்திற்கும் அதிகமான பசுமை பரப்பானது

அளிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் காவிரி

ஆறு கடலுக்கு போறதுக்கு முன் னாடியே

வற்றிவிட்டது.
❖ நிறைய பேரு இந்தத் தண் ணி ஆத்துல

ஓடுறதுனால ஆறோ, நதியோ தான் தண் ணீருக்கு

மூலம் -னு நினைக்கிறாங்க. ஆனா மரங்கள்தான்

தண் ணீருக்கு மூலம் . அடிப்படையா காவேரி

வடிநில பகுதியில் மரங்கள் நடுவது மூலமா

மண் ணோட நீ ர்பிடிப்பு தன் மையை

அதிகப்படுத்தி வருடம் முழுவதும் நதிகள்

வற்றாம ஓடுவதற்கு இது வழி செய் யும் .

அப்படிப்பட்ட ஒரு தொழில்நுட்ப தீர்வ தான் இந்த

திட்டம் செயல்படுத்துகிறது.

❖ காவிரி நதிக்கரையோர விவசாயிகளை 242

கோடி மரங்களை நடவு செய் வதற்கு ஊக்குவித்து

அதற்கான வழிமுறைகளையும் வழங்கி வராங்க.

காவேரிக்கு புத்துயிர் அளித்து விவசாயிகளின்

பொருளாதாரத்தை உயர்த்துவது இந்த

திட்டத்தின் நோக்கம் .

❖ விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்திற்கு

மாறுவது மூலமா 10 - 20 ஆண்டுகளில்


அவர்களுடைய வருமானம் பல மடங்கு

அதிகரிக்கும் .

❖ இதன் மூலம் காவிரி வடிநிலப் பகுதிகளில்

தண் ணீர் தக்க வைக்கும் ஆற்றல் 40 சதவீதம்

வரை அதிகரிக்கும் அப்படின்னு

மதிப்பிடப்பட்டிருக்கிறது

❖ . நம்ம நாட்டோட பசுமை பரப்பை 33% -ஆக

அதிகரிக்கனும் -னு 1998-ல முடிவெடுத்தாங்க.

❖ விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்தைப்

பின் பற்றினா இந்தப் பசுமைப் பரப்பை

அதிகரிக்குறதுக்கும் வழிவகுக்கும் .

❖ இந்தத் திட்டங்களின் மூலம் தோராயமாக ஒரு

லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மரம்

சார்ந்த விவசாயம் செய் யத் துவங்கி இன் னைக்கு


அவங்களுடைய நிகர லாபத்தை அதிகப்படுத்தி

நல்வாழ்வு வாழ்ந்துகிட்டு இருக்காங்க.

❖ குறைந்த செலவில் அதிக லாபம் ;

❖ வறண் ட மானாவாரி நிலத்தில் மரப்பயிர்

விவசாயம் ;

❖ மரங்களுக்கு இடையில் விளையும் ஊடுபயிரின்

லாபம் ;

❖ விலைமதிப்புள்ள டிம்பர் மரங்களை வளர்த்து

விவசாயிகளும் நன்கு லாபம் சம்பாதிக்க முடியும்

என்று நிரூபித்து வருகிறார்கள் .

❖ இது அத்தனைக்கும் உதாரணமாக இன்று பல

விவசாயிகள் உள்ளனர் .

டிம்பர் மரங்களுக்கான விற்பனை வாய் ப்பு

❖ செம்மரத்திற்கான விற்பனை வாய் ப்பு

❖ செம்மரத்தினை IUCN (International Union for

Conservation of Nature) அமைப்பு உலகத்தில் உள்ள


அரிய வகை மரங்களில் ஒன் றாக

வகைப்படுத்தியுள்ளது.

❖ இதனால் CITES (Convention on International Trade in

Endangered Species of Wild Fauna and Flora) என் ற

அமைப்பு உலகலாவிய செம்மர வியாபாரத்திற்கு

தடை விதித்திருந்தது.

❖ IUCN அமைப்பு செம்மரத்தினை Cretically Endanged

என்று சொல்லகூடிய மிகவும் ஆபத்தான

நிலையில் உள்ள மரம் என

வகைப்படுத்தியிருந்து.

❖ தற்போது இந்த அமைப்பு செம்மரங்களின்

எண் ணிக்கை அதிகரிப்பதால் Cretically Endanged

வகையிருந்து பிரித்து Near threatened

(அச்சுருத்தபட்ட வகை மரங்கள் ) எனப்படும்

வகையில் செம்மரத்தினை சேர்த்துள்ளது.

❖ 2019 ஆண்டு செம்மரம் வியாபாரத்திற்கான

தடையை CITES அமைப்பு சற்று தளர்த்தியுள்ளது.


❖ இந்தியாவிருந்து 300 andra டன் எடை அளவிற்கு

செம்மர கட்டைகளை வெளிநாடுகளுக்கு

ஏற்றுமதி செய்து கொள்ளலாம் என CITES

அனுமதி அளித்தது.

❖ தற்போது பல முன் னோடி விவசாயிகள்

சிறப்பாக செம்மரங்களை

வளர்த்துவருகின் றனர் .

❖ இவ
் வாறாக அதிகப்படியான விவசாயிகள்

செம்மரங்களை வளர்க்கும் போது அதற்கான

விற்பனை வாய் ப்பும் அதிகரிக்கும் .

❖ செம்மரங்களின் எண் ணிக்கை அதிகரிக்கும்

போது CITES மற்றும் IUCN அமைப்புகள் செம்மர

விற்பனைக்கான கட்டுபாடுகளில் விலக்கு

அளிக்கும் .

❖ அதுவரை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து

செம்மர வளர்ப்பை ஊக்குவிப்போம் .


❖ சந்தன மரத்திற்கான விற்பனை

வாய் ப்பு

❖ முதன் முதலில் தமிழ்நாட்டில் சந்தன மர

வளர்ப்பிற்காக 1882ல் தமிழக வன சட்டம்

உருவாக்கப்பட்டது.

❖ தனிநபர் சந்தனமரம் வளர்க்க இச்சட்டம்

வரையறுக்கப்பட்டது.

❖ இதற்கு அடுத்தபடியாக 2008ல் தமிழகத்தில் பட்டா

நிலங்களில் சந்தன மரம் வளர்ப்பு கொள்கையை

செயல்படுத்தப்பட்டது.

❖ இதன் படி எந்த ஒரு தனிநபரும் அவரது விவசாய

நிலங்களில் சந்தன மரத்தை

வளர்த்துக்கொள்ளலாம் , மரத்தை நட்டபின்

கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO) பதிவு

செய்துகொள்ளவேண்டும் .
❖ அறுவடை செய் யும்பொழுது மாவட்ட வன

அலுவலரிடம் Form 1 மூலம் அனுமதி பெற

வேண்டும் .

❖ பாரம் 1 ல்கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவு

செய் த சான் றிதல் , சிட்டா, அடங்கள் , மற்றும்

அறுவடைக்கு தயாராக உள்ள மரங்கள்

எண் ணிக்கை ஆகியவற்றை குறிப்பிட

வேண்டும் .

❖ மாவட்ட வன அலுவலரின் ஆணையின்

பெயரில் வனச்சரகர் அறுவடைக்கு தயாராக

உள்ள மரங்களை ஆய் வு மேற்கொள்வார் .

❖ இவரின் பரிந்துரையின் படி மாவட்ட வன

அலுவலர் மறு ஆய் வு மேற்கொண் ட பின் னர்

மாவட்ட வன குழுவிடமிருந்து வெட்டப்படும்

மரங்களை காப்பு காடுகளில் வளரவில்லை

என் பதை உறுதி செய் யப்படும் .


❖ இதை உறுதி செய் த பின் பும் பாரம் 1 ஐ மாவட்ட

வன அலுவலரிடம் இருந்து பெற்றுக் கொள்ள

வேண்டும் .

❖ இவ
் வாறு வெட்டப்பட்ட மரங்கள் வனத்துறை

அதிகாரிகள் அரசு சந்தன சேமிப்பு கிடங்கு

அனுப்பிவைக்கப்படும் .

❖ அறுவடை செய் யப்படும் மரங்கள் அனைத்துமே

நேரடியாக வனத்துறையின் மூலமாகவே அரசே

கொள்முதல் செய்து கொள்ளும் .

❖ அறுவடை செய் த மரத்தின் மொத்த விலையில்

வெட்டுக் கூலி மற்றும் இதர செலவிற்காக 20%

போக 80 சதவீத தொகையை விவசாயிகளிடம்

மூன்று தவணைகளாக வழங்கப்படும் முதல்

தவணை அறுவடை செய் த உடனேயும் ,

இரண் டாவது தவணை அடுத்த 30 நாட்களுக்குள் ,

மூன் றாவது தவணை மரத்தை விற்ற பின் பும்

விவசாயிகளுக்கு வழங்கப்படும் .
❖ தற்போது சந்தை நிலவரப்படி அரசின் விலை ஒரு

கிலோ சந்தன மர வைர கட்டையின் விலை

ரூபாய் தோராயமாக 7000 முதல் 1 7,500 ரூபாய்

வரை விற்கப்படுகிறது.

❖ சந்திர மரக்கட்டையின் தரத்தைப் பொறுத்து

விலையானது மாறுபடும் .

❖ எக்காரணத்தை கொண்டும் சந்தன மரத்தை தனி

நபரிடம் அல்லது தனியார் தொழிற்சாலைகள்

விற்பனை செய் ய கூடாது.

❖ அது சட்டப்படி குற்றமாகும் .

கிராம நிர்வாக அலுவலரிடம் மரம் வளர்ப்பதை

பதிவுசெய் தல்

❖ 1 வருடம் அல்லது 2 வருடம் வயதுடைய

மரக்கன்றுகளை கட்டாயமாக அடங்கல்

பத்திரத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் .


❖ இவ
் வாறு பதிவு செய் வது மரங்கள் வளர்ச்சி

அடைந்த பிறகு அதனை வெட்டும்போது இந்த

மரங்கள் காப்பு காடுகளில் இருந்து

வெட்டப்படவில்லை என் பதற்கு சான் றாக இந்த

அடங்கள் பத்திரம் இருக்கும் .

❖ அடங்கல் பத்திரத்தில் நாம் வளர்க்கும்

மரக்கன்றுகளை பதிவு செய் ய அந்தந்த

ஊர்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம்

தொடர்புகொள்ள வேண்டும் .

❖ பிறகு கிராம நிர்வாக அலுவலர் தங்களின்

தோட்டத்தை பார்வையிட்டு என் னென் ன

வகையான மரங்கள் தங்களின் தோட்டத்தில்

உள்ளன என் பதனை கணக்கிட்டு தங்களின்

அடங்கலில் பதிவு செய்து அவருடைய ஒப்புதல்

கையொப்பத்தை அளிப்பார் .
டிம்பர் மரங்களின் தற்போதைய தோராயமான

விலை மதிப்பு

தேக்கு - 2250 / சதுர அடி

மகாகனி - 600-800 / சதுர அடி

குமிழ் - 8000 - 10,000 / டன்

வேங்கை -

ஈட்டி - 1,00,000 / டன்

மலைவேம்பு - 6500 / டன் (18 இன் ச்

சுற்றளவுக்கு மேல் இருந்தால் )

(13 - 17 இன் ச் சுற்றளவு வரை

இருந்தால் ) - 3,000

அடிக்கட்டை - 1,000 / டன்

கருமருது -
மஞ் சள் கடம்பு -

1. பூவரசு - சந்தை நிலவரம் :

• இம்மரத்திற்கு என்றுமே நல்ல சந்தை விலை உள்ளது.

• நன்கு வளர்ந்த ஒரு டன் மரத்தை சுமார் , ரூபாய் 8000 முதல்

10000 வரை விற்பனை செய் யும் வாய் ப்புள்ளது.

2. நீ ர் மருது 🌱-
• மரம் வளர்ந்த பத்தாவது ஆண்டிலிருந்து மூன்று

ஆண்டுகளுக்கு ஒரு முறை பட்டையை உரிக்கலாம் . ஒரு

மரத்திலிருந்து 9-45 கிலோ பட்டை பெற இயலும் .

• தடி மரத்திற்காகவும் எரிபொருளாகவும் விற்கப்படும் நன்கு

வளர்ந்த மரம் , ஒரு கன அடி ரூபாய் 450-க்கும் மேல் விற்பனை

செய் யப்படும் வாய் ப்புள்ளது.

3. மாஞ் சியம் 🌱
• பல்வேறு மண் வகைகளில் வளரும் தன் மை கொண்டு

குறுகிய காலத்தில் அறுவடை செய் ய ஏற்றதால் , இதை

வளர்ப்பதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

• ஒரு கன அடி மரம் சுமார் 600 ரூபாய் வரை விற்பனையாகும்

வாய் ப்புள்ளது.

• 12-15 ஆண்டில் ஒரு மரம் சுமார் 10,000-15,000 ரூபாய் வரை

விலை போகும் வாய் ப்புள்ளது.

4.சந்தனம் 🌱
• உலகம் முழுவதிலும் நல்ல மதிப்பும் விற்பனை வாய் ப்பும்

அதிகம் உள்ள மரம் .

• இதன் வைரக் கட்டையின் மதிப்பு ஒரு டன் சுமார் 52.97

லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது ( தி இந்து 2013).

• மரம் வளரும் பகுதியைப் பொருத்து 20 வயதான ஒரு மரம் 4

அடி சுற்றளவும் 6.5 மீட்டர் உயரமும் இருக்கும் வாய் ப்புள்ளது.

• சராசரியாக 20 வருட மரம் ஒன் றில் 20-30 கிலோ வரை

வைரப்பகுதி கிடைக்கும் வாய் ப்புள்ளது.

• ஒரு கிலோ ₹5000 வரை விற்பனையாகும் வாய் ப்புள்ளது.


• நன்கு முதிர்ச்சி அடைந்த ஒரு மரம் 1,00,000 முதல் 1,50,000

ரூபாய் வரை விலை போகும் வாய் ப்புள்ளது.

5.தான் றிக்காய் - சந்தை நிலவரம் :

• தடி மரம் விற்பனைக்கு ஏற்றது.

• 15 முதல் 20 ஆண்டுகள் வளர்ந்த மரங்கள் சுமார் ஒரு டன்

எடை வரை அறுவடை செய் யப்பட்டுள்ளது.

• தற்போதைய நிலவரப்படி ஒரு கன அடி மரம் ரூபாய் 500

முதல் 600 வரை விற்பனை செய் யப்படும் வாய் ப்புள்ளது.

6. வாகை 🌱
-• எப்பொழுதும் நல்ல சந்தை நிலவரம் உள்ள மரங்களுள்

வாகை மரங்களும் ஒன்று.

• மரத்தின் வளர்ச்சியைப் பொறுத்து 10 முதல் 15

வருடங்களில் அறுவடை செய் யலாம் . ஒரு மரம் 10000 ரூபாய்

விலை போகும் வாய் ப்புள்ளது.

• தடி மரம் மற்றும் ஒட்டுப்பலகை நிறுவனங்களுக்கு

மூலப்பொருளாக பயன் படுகிறது.


• தற்போதைய நிலவரப்படி, தடி மர தேவைக்காக ஒரு டன்

மரம் ரூபாய் 4500 முதல் ரூபாய் 5000 வரை விலை போகும்

வாய் ப்புள்ளது.

• இதுமட்டுமில்லாமல் , மரச்சிற்பங்கள் செய் வதற்காக ஒரு டன்

மரம் அதிகபட்சமாக ரூபாய் 5000 வரை விலை போகும்

வாய் ப்புள்ளது.

7. பலா -விவசாயிகள் மரத்தை வெட்டி விற்பனை செய் யும்

வரை பலா பழத்தில் இருந்து வருவாய் பெறலாம் .

• நடவு செய் த ஐந்தாம் ஆண்டில் இருந்து காய் க்கத்

தொடங்கும் . நடவு செய் த பத்தாவது ஆண்டிலிருந்து ஒரு

மரத்திற்கு சுமார் 50 காய் கிடைக்கும் . இது படிப்படியாக

அதிகரித்து 100 காய் வரை கிடைக்கும் வாய் ப்புள்ளது.

• பலா பழங்கள் நல்ல விலைக்கு விற்பனையாகின் றன.

விவசாயிகள் சராசரியாக ஒரு கிலோ பழத்தை 10 முதல் 20

ரூபாய் வரை மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய் ய

வாய் ப்புள்ளது.
• மரங்களின் வளர்ச்சியைப் பொருத்து சுமார் 20-25

ஆண்டுகளுக்கு பிறகு மரத்தை வெட்டி விற்பனை செய் ய

முடியும் .

• சராசரியாக ஒரு கன அடி மரம் 1200 முதல் 2900 ரூபாய் வரை

விலை போக வாய் ப்புள்ளது.

8.செம்மரம் 🌱- சந்தை நிலவரம் :


• இதை ஏ(A), பி(B), சி(C), டி(D) என்று நான்கு தரங்களாக

பிரிப்பர் . நல்ல செம்மண் சரளை பூமியில் வறட்சி மிகுந்த

பகுதியில் வளர்த்தால் , இதன் இதயக்கட்டை அடர்த்தியான

பழுப்பு சிவப்பு நிறத்துடன் இருக்கும் . இது 'ஏ' தரமாகும் . இந்த

'ஏ' தர செம்மரம் 1 டன் 1 கோடி ரூபாய் க்கு விற்பனையாகும்

வாய் ப்புள்ளது. 'பி' தர மரம் 1 டன் 50 லட்சம் ரூபாய் க்கு

விற்பனையாகும் வாய் ப்புள்ளது. இவ


் வாறு தரத்திற்கு ஏற்ப

விலை நிர்ணயிக்கப்படுகிறது.

• 20 வயதான ஒரு மரம் சராசரியாக 10 மீட்டர் உயரமும் 100

சென்டிமீட்டர் சுற்றளவும் பெற்றிருக்கும் .

• இதன் வைரம் பாய் ந்த கருஞ் சிவப்பு நிற கட்டைகள் 25

ஆண்டுகளுக்கு மேல் வளர்ச்சி பெற்று இருந்தால் நல்ல

விலைக்கு விற்பனையாகும் . ஒரு மரத்திலிருந்து 25


ஆண்டுகளில் சுமார் 100 கிலோ வரை இதயக் கட்டை கிடைக்க

வாய் ப்புள்ளது. இது ஒரு டன் 10 லட்சம் முதல் 50 லட்சம் வரை

விலை கிடைக்க வாய் ப்புள்ளது.

9. ஆப்பிரிக்கன் மகோகனி 🌱 • இருபது வருடத்தில் ஒரு மரம்


100 சென்டி மீட்டர் சுற்றளவும் 10 மீட்டர் உயரமும் வளரும்

வாய் ப்புள்ளது; சுமார் 30 கன அடி தடி மரத்தை தரவல்லது.

• நன்கு வளர்ந்த மரம் ஒரு கன அடி சுமார் 600 ரூபாய் வரை

விற்பனை செய் ய வாய் ப்புள்ளது.

• 10-20 ஆண்டுகளில் ஒரு மரத்தின் மதிப்பு சுமார் 10,000-18,000

ரூபாய் வரை இருக்க வாய் புள்ளது.

10. இலுப்பை 🌱 -சந்தை நிலவரம் :


• இம்மரத்தின் விதைகளுக்கு நல்ல சந்தை மதிப்பு உள்ளது.

இலுப்பை எண் ணெய் கிராமங்களில் உணவிற்காகவும்

கோவில்களில் விளக்கு ஏற்றவும் பயன் படுகிறது.

• சந்தை நிலவரப்படி, ஒரு கிலோ விதை 20 ரூபாய் க்கு மேல்

விற்கப்படுகிறது.
• ஒரு முதிர்ந்த மரம் 20 முதல் 25 கிலோ விதைகளைத்

தரவல்லது.

• 20 ஆண்டுகளுக்கு மேல் வளர்ந்த மரங்கள் , சுமார் 80 கிலோ

முதல் 100 கிலோ வரை விதைகளைத் தரவல்லது.

• பெரம்பலூர் மாவட்டத்தில் பல இடங்களில் நன்கு வளர்ந்த

இலுப்பை மரங்கள் , 200 கிலோவிற்கு மேல் விதைகளைக்

கொடுத்துள்ளது.

• எண் ணெய் உட்கொள்ளப் பயன் படுவதால் தொடர்ந்து

வருவாய் பெறும் வாய் ப்புள்ளது

• திருச்சி மாவட்டம் , கருப்பத்தூர் கிராமத்தில் 40 ஆண்டுகள்

ஆன இலுப்பை மரம் சுமார் 450 கிலோ மகசூலைக்

கொடுத்துள்ளது.

• நன்கு முதிர்ச்சி அடைந்த மரங்கள் ஒரு கன அடி 1000

ரூபாய் க்கும் மேல் விலை போகும் வாய் ப்புள்ளது.

• 25-50 வருட மரம் ஒன்று 25,000 - 40,000 ரூபாய் வரை விலை

போகும் வாய் ப்புள்ளது.


• இம்மரத்தில் இருந்து எண் ணெய் எடுப்பது, பூ, சர்க்கரை,

புண் ணாக்கு, சீகைக்காய் என அனைத்துமே நல்ல விலை

போகும் .

12. குமிழ்

• நன்கு முதிர்ச்சியடைந்த 8 முதல் 10 வருட மரத்திலிருந்து

சராசரியாக 750 கிலோ முதல் 1 1/2 டன் வரை மரம் கிடைக்கும்

வாய் ப்புள்ளது.

• ஒரு டன் னிற்கு ₹8500 முதல் ₹12000 வரை பெறலாம் .

• ஒரு மரத்திற்கு சுமார் 10,000 ரூபாய் வரை விலை கிடைக்கும்

வாய் ப்புள்ளது.

13. வேங்கை -சந்தை நிலவரம் :

• தடி மரப் பயன் பாட்டிற்கு சிறந்த சந்தை மதிப்புடைய மரம் .

• 20 ஆண்டு களுக்கு மேல் வளர்ந்த மரங்கள் சராசரியாக 35

கன அடி தடி மரத்தை தரவல்லது. இவை சராசரியாக 150

சென்டி மீட்டர் சுற்றளவும் 15 மீட்டர் உயரமும் கொண்டிருக்கும் .

இவை, குறைந்தபட்சம் ஒரு கன அடி ரூபாய் 700 முதல் ரூபாய்

1000 வரை விலை போகிறது.

14. மகோகனி 🌳 -சந்தை நிலவரம் :


• 20 வருட மரம் ஒன்று சுமார் 25 முதல் 30 கன அடி வரை தடி

மரத்தைத் தரவல்லது. இது 100 சென்டி மீட்டர் சுற்றளவும் 10

மீட்டர் உயரமும் பெற்றிருக்கும் .

• தடி மரம் மற்றும் ஒட்டுப்பலகை சார்ந்த

தொழிற்சாலைகளுக்கு மரங்களை டன் ஒன்றுக்கு ரூபாய்

4500 முதல் ரூபாய் 6500 வரை விற்பனை செய் ய

வாய் ப்புள்ளது.

• நன்கு வளர்ந்த மரங்கள் ஒரு கன அடி, சுமார் ரூபாய் 600

முதல் 700 வரை விற்பனையாக வாய் ப்புள்ளது.

• மரங்களின் வளர்ச்சியைப் பொருத்து மரமொன்று 10000

ரூபாய் க்கும் மேல் விலை போகும் வாய் ப்புள்ளது.

15.வேம்பு! 🌳 -சந்தை மதிப்பு


• 1 டன் வேப்ப விதை ₹45000 முதல் ₹50000 வரை

விற்பனையாகும் வாய் ப்பு உள்ளது.

• 20 வயதுடைய ஒரு வேப்ப மரம் , சராசரியாக 6 அடி

சுற்றளவும் 20 அடி உயரமும் இருக்கும் .


• ஒரு கன அடி மரம் 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை

விற்பனையாகிறது.

• மரங்களின் வளர்ச்சியைப் பொருத்து, நன்கு வளர்ந்து

முதிர்ச்சியடைந்த 20 வருட மரம் இன்று ₹10000 முதல் ₹15000

வரை விலை போகும் வாய் ப்பு உள்ளது.

16. மஞ் சள் கடம்பு !

• 20 ஆண்டுகால மரம் சுமார் 30 முதல் 45 கன அடி வரை

வளர்ச்சி பெற்றிருக்கும் .

• ஒரு கன அடி மரம் 600 முதல் 2000 ரூபாய் வரை விலை

போகும் வாய் ப்புள்ளது.

• மரத்தின் வளர்ச்சியைப் பொருத்து குறைந்தபட்சமாக ஒரு

மரம் 5000 முதல் 12000 ரூபாய் வரை விலை போகும்

வாய் ப்புள்ளது.

17. தேக்கு !

• ஒவ
் வொரு தேக்கு மரமும் 15 ஆண்டுகளில் 10-15 கன அடி தடி

மரம் கிடைக்கும் . 20 முதல் 25 ஆண்டுகளில் , ஒவ


் வொரு மரமும்

25-30 கன அடி தடி மர மகசூலைத் தரவல்லது.


• ஒரு கன அடி மரம் குறைந்தபட்சமாக ₹600-க்கும்

அதிகபட்சமாக ₹1800-க்கும் விலை போகும் வாய் ப்புள்ளது.

இவை மரங்களின் சுற்றளவைப் பொறுத்து வேறுபடுகிறது.

• தற்போதைய நிலவரப்படி, 2 முதல் 3 அடி வரை சுற்றளவு

உடைய மரம் ஒரு டன் ₹12000-க்கும் 4 முதல் 6 அடி வரை

சுற்றளவு உடைய மரம் ஒரு டன் ₹30000-க்கும்

விற்பனையாகும் வாய் ப்புள்ளது.

• வளரும் சூழ்நிலையைப் பொருத்து ஒரு மரம் குறைந்தபட்சம்

12000 ரூபாய் முதல் 20000 ரூபாய் வரை விற்பனையாகும்

வாய் ப்புள்ளது.

இவ
் வாறு ஒவ
் வொரு மரத்தின் தன் மைகளையும் அறிந்து,

புரிந்து கொண்டு மரச் சாகுபடியைத் தொடங்குங்கள் ! செல்வச்

செழிப்பை மேம்படுத்துங்கள் !

18. ஈட்டி (தோதகத்தி) ! 🌳


• இது 20-25 வயதில் நன்கு முதிர்ச்சி அடைந்து அறுவடை

செய் வதற்கு ஏற்றது.


• 20 வயதான ஒரு மரம் , சராசரியாக 120 சென்டி மீட்டர்

சுற்றளவும் 10 மீட்டர் உயரமும் கொண்டிருக்கும் . இது, சுமார் 20

முதல் 38 கன அடி வரை மகசூல் தரவல்லது.

• 30-60 வயதுடைய மரங்கள் நல்ல தரமான தடி மரங்களைக்

கொடுக்கும் .

• தற்போதைய நிலவரப்படி ஒரு கன அடி மரம் ₹1800 முதல்

₹2500 வரை விற்பனை செய் யப்படுகிறது.

• நன்கு பராமரிக்கப்பட்ட 20 வயதான ஒரு மரத்தின் மூலம்

சுமார் ₹40,000 முதல் ₹50,000 வரை விலை பெறுவதற்கு

வாய் ப்பு உள்ளது.

🌳• ஒரு டன் மரம் ₹80000 முதல் ₹100000 வரை விலை


போகிறது. 🌳

இப்படி விலை உயர்ந்த மரங்களை உங்கள் விவசாயத்தில்

ஒரு பகுதியாக நீ ங்கள் நடவு செய் வதன் மூலம் உங்களின்

பொருளாதார நிலையை நீ ங்களே உயர்த்த முடியும் .

19. மலை வேம்பு!


• மரத்தின் வளர்ச்சியைப் பொருத்து ஐந்தாம் அல்லது ஆறாம்

ஆண்டு முதல் அறுவடை செய் யலாம் .

• நன்கு வளர்ந்த மரங்களை ஒட்டுப்பலகை நிறுவனத்திற்கு

விற்பனை செய் யலாம் .

• நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் ஒரு மரத்திலிருந்து

குறைந்தபட்சம் 500 முதல் 750 கிலோ ஒட்டு பலகைக்கு

தேவையான மரம் கிடைக்க வாய் ப்புள்ளது.

• இவை ஒரு டன் ரூபாய் 7000 முதல் ரூபாய் 8500 வரை விலை

போகும் வாய் ப்புள்ளது.

• வளர்ச்சி குறைவாக உள்ள மரங்களைக் காகித

தொழிற்சாலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூபாய் 3500 முதல்

ரூபாய் 4500 என் ற அளவில் விற்பனை செய்து பயன் பெறும்

வாய் ப்புள்ளது.

• மீதமுள்ள விறகுகளை எரிபொருளாகப் விற்பனை

செய் யலாம் . இவை டன் ஒன்றுக்கு ரூபாய் 2000 முதல் ரூபாய்

2500 வரை விலை போகும் வாய் ப்புள்ளது.

இப்படி மரங்களைப் பற்றிய அடிப்படை தகவல்களைத்

தெரிந்து கொண் டால் , மர சாகுபடியில் நிச்சயம் வெற்றியே.


இதனை தெரிந்து கொண் ட பல விவசாயிகள் இன்று வெற்றி

விவசாயிகளாக திகழ்கிறார்கள் .

🌳👨‍🌾 அவர்களுள் சில விவசாயிகள் மலைவேம்பு

சாகுபடியில் தாங்கள் எதிர்கொண் ட அனுபவங்களையும்

வெற்றிகளையும் சவால்களையும் கீ ழே உள்ள வீடியோ

பதிவில் விளக்குகிறார்கள் .

இதனை தெரிந்து கொண்டு மென் மேலும் பல விவசாயிகள்

மலைவேம்பு மரங்களை நடவு செய்து பயன் பெற

வாழ்த்துகிறோம் .

You might also like