You are on page 1of 10

PROJECT PROPOSAL

திட்ட
முன்மொழிவு

Integradeted Farming
ஒருங்கிணைந்த பண்ணையம்

Project Proposal – Integrated Farming | திட்ட முன்மொழிவு – 1


ஒருங்கிணைந்த பண்ணையம்
SELF INTRODUCTION | சுய அறிமுகம்
1. Project Name | திட்டத்தின் பெயர்:

2. Proposed Work | முன்மொழியப்பட்ட பணி:


 குறைந்த மூலதனத்தில் நிறைந்த இலாபம் மற்றும் சுலபமான தொழில்.

3. Project Cost | திட்ட செலவு:


4. Source of Fund| நிதி ஆதாரம்:
Area | பரப்பளவு:
Investment | முதலீடு:
Initial Investment | ஆரம்பகட்ட முதலீடு:

5. Period | காலம்: 2020-2021 2021-2022 or

6. Implementing Agency | செயல்படுத்தும் நிறுவனம்:

7. Name & Address of Applicant | விண்ணப்பதாரர் பெயர் & முகவரி:


பெயர்:
முகவரி:
தொலைபேசி:
இமெயில்:
பிறப்பு திகதி dd/mm/yyyy: 

தேசிய/வாகன அடையாள அட்டை இல:


ஆண்/ பெண்/வேறு:
Project Proposal – Integrated Farming | திட்ட முன்மொழிவு – 2
ஒருங்கிணைந்த பண்ணையம்
INTRODUCTION | அறிமுகம்

ஒருங்கிணைந்த பண்ணையம்:
“இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்”

இயற்கையையும் காலத்தையம் கணித்து பருவத்தே பயிர் செய் என்றார்கள் எங்கள்


முன்னோர். அதைப்போல் நாமும் காலத்தை தக்கபடி பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக
வாழவேண்டும். விவசாயத்துக்கும் வேளாண் தொழிலுக்கும் இயற்கையோடு இயைந்து
பயணிப்பதும் பருவத்தோடு பயிர் செய்து தானும் தான் சார்ந்த சமூகத்தையும் பாதுகாத்து
கொள்வது அவசியமாகின்றது.

வேளாண் துறைக்குள் நுழையும் ஒருவர் உள் நாட்டு வெளிநாடுகளில் ஏற்றுமதி வாய்ப்பு


அதிகமிருக்கும் தென்னை, பனை, இறப்பர், கித்துள் மற்றும் கமுகு போன்ற பயிர்களை
நட்டு அது வளர்ந்து காய்த்து பலன் தர எடுத்து கொள்ளும் கால இடைவெளிகளில்
அன்றாட உணவு மற்றும் இதர தேவைகளுக்கான செலவுகளை எப்படி நிறைவு செய்ய
முடியும்?

ஒருங்கிணைந்த பண்ணையம்:
கால்நடைகள் வளர்த்தல், ஊடுபயிர்செய்கைகள மூலம்
வருடம் முழுதும் தற்சார்பு பொருளாதாரத்தில் வெற்றி
பெறலாம். பண்ணையின் உற்பத்தித் திறனை
மேம்படுத்தி நீடித்த, நிலையான வளத்தைப் பெறும்
வகையில், தட்பவெப்ப மண்டலங்களுக்கு ஏற்ற
வகையில், ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள்
விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதும்,
அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதும்
ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் முக்கிய
நோக்கங்களாகும்.

Project Proposal – Integrated Farming | திட்ட முன்மொழிவு – 3


ஒருங்கிணைந்த பண்ணையம்
உலகில் மாறி வரும காலநிலைகளை வருடம் தோறும் பயன்தர கூடியதுமான வேளாண்
சார் கூட்டுப்பண்ணை முயற்சிகள் மூலம் கால் நடைகள் வளர்ப்பு மற்றும் ஊடுபயிர்கள்
உற்பத்தியிலும் குறைந்த இடத்தில் பல விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து அதில்
அதிக வருமானம் பெற வழி வகை செய்யும் முறையாகும்.
ஊடுபயிர் சாகுபடி முறையானது.

அப்பயிர்களுக்குத் தேவையான கால நிலைகள், நீர்ப்பாசன வசதி மற்றும் மண்ணின்


தன்மையைப் பொறுத்து செய்யப்படுகிறது. தென்னை மரங்களின் மேல்கட்டு அமைப்பின்
பருமன், தென்னை மரங்களின் வயது மற்றும் தென்னை மரங்களுக்கிடையேயுள்ள
இடைவெளி ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். வியாபாரத் தேவைக்கேற்ப
ஊடுபயிர்களை தேர்வு செய்ய வேண்டும். 7.6 மீட்டர் இடைவெளியில் தென்னங்கன்றுகள்
நடப்பட்டுள்ள தோப்புகளே ஊடுபயிர் செய்வதற்கு ஏற்றதாகும்.

ஒருங்கிணைந்தபண்ணையம் என்பது குறுகிய காலப்பயிர், மத்தியக்காலப்பயிர், மற்றும்


நீண்டகால வருமானம் தரும் பயிர்களைக்கொண்டிருக்கும். அதோடு அந்தப்பயிர்களை
ஊடுபயிராகக்கொண்டு ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் போன்ற வருமான
வாய்ப்புகளைக் கொண்டுள்ளவற்றையும் செய்யலாம். இந்த நிலத்தில் மூலம் கிடைக்கும்
கழிவுகளை ஒருங்கிணைத்து ஒன்றுக்கொன்று பயன்படுத்துவது சிறந்த உர
மேலாண்மையாகும்.

தென்னங்காணிகளுக்கு இடையில் மாட்டுத் தொழுவங்களை அமைத்து அன்றாட பால்


மற்றும் தயிர், நெய் போன்ற உணவு பொருட்களை உற்பத்தி செய்து கொண்டாலே
நாட்டின் பால் மாவுக்கான இறக்குமதி தேவை குறையும். தேவைக்கு மேலதிகமானதை
உள்ளூர் மக்களுக்கு சந்தைப்படுத்துவதன் மூலம் வேளாண் தொழில் முனைவோர் சார்ந்த
குடும்பம் பொருளாதாரத்தில் யாரையும் சார்ந்து வாழும் சூழ் நிலை உருவாகாது
தன்னிறைவு பெறும்.

ஒருங்கிணைந்த பண்ணையம் - எவ்வாறு, என்ன செய்யலாம்?

தென்னை- கால்நடை வளர்ப்பு:


தென்னையில் ஊடே தீவனப்பயிர்களை வளர்த்து அதைக்கொண்டு ஆடு, மாடு, கோழி
வளர்த்தால் அதன் பால், முட்டை, இறைச்சி என தொடர்ந்த வருமானம் தரும்.
அதுமட்டுமல்லாமல் கால்நடைகளின் குட்டிகள் மூலம் வருமானம் கிடைக்கும்.
ஒரு ஹெக்டரில் பயிரிடப்படும் தீவனப் பயிர்களானது மூன்று பால் மாடுகளுக்குத்
தேவையான தீவனப்பயிரை தருகிறது. இந்த மாடுகளில் இருந்து கிடைக்கும் எருவினை
மண்ணில் இடுவதால் மண்ணின் வளம் அதிகரிக்கிறது. இவ்வகையான கலப்புப் பயிர்
சாகுபடி முறை அதிக இலாபம் மற்றும் மகசூல் பெறுவதற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.
தென்னந்தோட்டத்தில் கறவை மாடுகள், ஆடுகள், நாட்டுக் கோழிகள், வாத்துகள் வளர்ப்பு,
வீட்டுத் தோட்டம், பழச்செடிகள், தீவனப்பயிர்கள், சாண எரிவாயுக் கலன், பண்ணைக்

Project Proposal – Integrated Farming | திட்ட முன்மொழிவு – 4


ஒருங்கிணைந்த பண்ணையம்
குட்டைகள், தேனீ வளர்ப்பு, வேளாண் காடுகள், வான்கோழி, காடை, முயல் வளர்ப்பு,
தீவனங்கள் போன்றவை வளர்க்க்கலாம்.

ஒரு ஏக்கருக்கு 64 தென்னை நாற்றுகளை நடலாம். அதனுள் கால்நடைகளுக்குத்


தேவையான பயிர்களை பயிர் செய்து கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடலாம்.
கால்நடைகளில் இருந்து கிடைக்கும் சாணம் நிலத்திற்கு மேலும் சக்தியை கொடுக்கும்.
“ஆட்டுப்புழுக்கை அவ்வருடம், கோழிப்புழுக்கை மறுவருடம் என்பது பழமொழி”
ஆட்டுப்புழுக்கை உடனே நன்றாக மக்கி நிலத்திற்கு வளமளிக்கும், ஆனால் கோழி எரு
நிலத்திற்கு உரமளிக்க சில காலம் ஆகும். எனவே இந்நிலங்களில் ஆடுகளையும்,
கோழிகளையும் ஒருங்கிணைத்து பண்ணை அமைக்கலாம். தென்னையில் கால்நடை
உணவுகளான கம்பு, சோளம் போன்றவற்றை விளைத்து அதன் தட்டைகளை
கால்நடைகளுக்கு உணவாக்கூட விற்கலாம்.

தென்னை-மீன் வளர்ப்பு:
தென்னந்தோப்பில் பரண் அமைத்து ஆடு, கோழிகளை வளர்த்து அதன் கழிவுகளை
அதன் கீழே மீன் குளத்தில் விழும்படி செய்யும்போது அதன் கழிவுகள் மீன்களுக்கு
உணவாக அமையும்.

ஒவ்வொரு பயிருக்கும் தேவையான அளவு, தனித்தனியாக உரமளிப்பதன் மூலம் அதிக


அறுவடையை பெற முடியும். 7 வயதுக்கு குறைவான வயதுடைய தென்னந்தோப்பு
மண்ணின் தன்மை மற்றும் தட்பவெப்ப நிலைக்கேற்ப ஓராண்டுத் தாவரங்களை தென்னை
மரங்களின் மேல் கட்டு அமைப்பின் பரவலுக்கு ஏற்ப நிலக்கடலை, எள், சூரியகாந்தி,
மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள், வெண்டை, சர்க்கரைவள்ளி கிழங்கு, சிறு கிழங்கு,
சேனைகிழங்கு, இஞ்சி மற்றும் அன்னாசி மற்றும் வாழை ஈராண்டுத் தாவரங்கள்
பூவன் மற்றும் மொந்தன் வாழை இரகங்கள் பல்லாண்டுத் தாவரங்கள் கொக்கோ, மிளகு,
ஆகியவற்றை ஊடுபயிராக பயிரிடலாம். 7-20 வயதுடைய தென்னைகளைக் கொண்ட
தென்னந்தோப்பு பசுந்தாள் உரப்பயிர்கள் மற்றும் தீவனம் பயிர்கள் (நேப்பியர் மற்றும்
கினியா புல் இரகங்கள் ஏற்றவை. தீவனப் பயிர்கள் முறையே நேப்பியர் வீரிய இரகங்கள்,
கினியா புல் இதனுடன் பருப்பு வகை தீவனப் பயிர்களான ஸ்டைலோசான்தஸ் ஆகியவை
அதிக இலாபத்தை தருகின்றன.

20 வயதுக்கு அதிகமான வயதுடைய மரங்களைக் கொண்ட தென்னந்தோப்பு சூரிய ஓளி


புகுதலைப் பொறுத்து ஊடுபயிர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இளம் பருவத்தில் மற்றும்
காய்ப்பதற்கு முன் பயிரிட ஏற்ற ஊடுபயிர்கள் முறையே மானாவாரி நெல், சிறு கோதுமை,
உருளைக்கிழங்கு பிற கிழங்கு வகை பயிர்களாகும்.

கிழங்கு வகைப் பயிர்கள் உற்பத்தி திறன் குறைந்து நீண்டகாலமாக உள்ள


தென்னந்தோப்புகளில் பெரும்பாலும் கிழங்கு வகைப் பயிர்களே பயிரிடப்படுகின்றன.
கிழங்கு வகைப் பயிர்கள் முறையேசேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, கருணை கிழங்கு,
சர்க்கரை வள்ளிக்கிழங்கு, இஞ்சி மற்றும் மஞ்சள் ஆகியவை பயிரிடப்படுகிறது.
Project Proposal – Integrated Farming | திட்ட முன்மொழிவு – 5
ஒருங்கிணைந்த பண்ணையம்
இவற்றுள் சேனைக்கிழங்கு மிகவும் ஏற்ற அதிக மகசூல் தரும் ஊடுபயிராகும். இதைத்
தொடர்ந்து இஞ்சி, மரவள்ளிக் கிழங்கு, மஞ்சள், அவரை மற்றும் தீவனப்பயிர்கள் (கம்பு
நேப்பியர் வீரிய இரகங்கள், ஸ்டைலோசாந்தஸ் கிேரசிலிஸ்) சூரிய காந்தி மற்றம் ராகி
ஆகியவை மானாவாரியாக மானாவாரிப்பகுதியில் ஊடுபயிராக பயிரிடப்படுகிறது.

இளம் தென்னம்பிள்ளைகளைக் கொண்ட தோப்புகளில் தானியங்கள் மற்றும் மரவள்ளி


ஆகியவை சுமார் 3-4 வருடங்களுக்கு ஊடுபயிராக பயரிடப்படுகிறது. 8 - 25 வயதுடைய
தென்னை மரங்களுள்ள தோப்புகள் ஊடுபயிர் மற்றும் கலப்புப் பயிர் சாகுபடிக்கு
ஏற்றதல்ல. மஞ்சள் மற்றும் இஞ்சி ஆகியவை நிழலைத் தாங்கி வளரும் சல்லி வேர்
கொண்ட பயிர்களாகும். இவை 15-25 வயதுள்ள தென்னை மரங்களைக் கொண்ட
தோப்புகளில் ஊடுபயிராக பயிரிடப்படுகிறது. இவ்வாறு செய்வதால் சிறந்த நீர்ப்பாசனம்,
மண்ணின் ஊட்டச்சத்துகள், அதிக இலாபம் ஆகியவை கிடைக்கிறது.

பழப்பயிர்கள்: வாழை, அன்னாசி, பப்பாளி (ஒரு குன்றுக்கு மூன்று பக்கக் கன்றுகள்


மட்டும் பராமரிக்கப்படுகிறது). தென்னைந்தோப்பில் சில மலர்களைப் பயிரிட்டு
ஆங்காங்கே தேனிப்பெட்டிகளை வைப்பதன் மூலம் தேனை சேகரித்தும் வருமானம்
ஈட்டலாம்.

ஒருங்கிணைந்த பண்ணையத்தின் பயன்கள்:


பண்ணை உற்பத்தி வருவாய் கூடும். பண்ணைக் கழிவுகளைச் சிறந்த முறையில் மறு
சுழற்சி செய்வதால், உற்பத்தித் திறனும் மண்வளமும் கூடும். உற்பத்திச் செலவு குறையும்.
முட்டை, பால், மீன், காய்கறி உற்பத்தியால் நிலையான தொடர் வருமானம் கிடைக்கும்.
தீவனப் பயிர் அறுவடை யால் கால்நடைகளுக்குச் சத்தான தீவனம் கிடைக்கும். சிறு குறு
விவசாயக் குடும்பங்களுக்குத் தொடர் வேலைவாய்ப்புக் கிடைக்கும்''.

ஒருங்கிணைந்த பண்ணையத்தின் தேவைகள்:


விவசாயிகளுக்கு வேளாண் துறை மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறையின்
ஆலோசனை பயிற்சி தேவைப்படும் திட்டங்கள்.
எருக்குழி: எருக்குழி மற்றும் மாட்டுக் கொட்டகையை அமைப்பது ஒருங்கிணைந்த
பண்ணையத் திட்டத்தின் முக்கிய இலக்காகும்.
மண்புழு உரத் தொட்டிகள்: பயிர்க் கழிவுகளை மட்கச் செய்து மண்புழு உரமாக
மாற்றுவதற்குத் தேவையான தொட்டிகளை அமைத்தல்.

கள் மற்றும் தீவனப்புல் கரணைகள்:


காடுகளை விவசாய நிலங்களாக பண்படுத்தும் அனைவருக்கும் பொதுவான தேவைகள்.

பண்ணைக் குட்டைகள்:
பண்ணைக் குட்டைக்கு ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் முக்கியப் பங்குண்டு.
இதில் சேமிக்கப்படும் மழைநீர், விவசாயம் மற்றும் கால்நடைகளின் குடிநீருக்கும், மீன்

Project Proposal – Integrated Farming | திட்ட முன்மொழிவு – 6


ஒருங்கிணைந்த பண்ணையம்
வளர்ப்புக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இத்தகைய பண்ணைக் குட்டைகளை
அமைக்க பண்ணைக் குட்டையை வெட்டுவதற்கான தொழில் நுட்பம் வேளாண்மைப்
பொறியியல் துறை மூலமும் மீன்களை வளர்ப்பதற்கான தொழில் நுட்ப ஆலோசனை
மீன்வளத்துறை ஆலோசனை பயிற்சி மூலமும் செயல்படுத்த வேண்டும்.

AGRICULTURAL - GOALS & EXPECTATIONS |


நிதி வேளாண்துறையில் இலக்குகள் &
எதிர்பார்ப்புகள்
வேளாண் துறையில் இலக்குகளும் எதிர்பார்ப்புகளும்:

1. உங்களுக்கு தேவையான பொருட்களின் பட்டியல்:

Project Proposal – Integrated Farming | திட்ட முன்மொழிவு – 7


ஒருங்கிணைந்த பண்ணையம்
1.

2.

3.

4.

5.

2. தற்போதைய திட்டமிடலுக்கு தேவையான நிலங்களின் அளவு:

உங்கள் திட்டத்துக்கான நிலம் எங்கே இருக்க வேண்டும்?

3. மின்சாரத்தின் தேவை:

4. சூரிய ஒளியில் மின்சாரம்:

5. நீர்ப்பாசனம்:

6. உபகரணங்கள்:

இலக்கு:
ஒருவர் தன் வாழ்வாதார தேவைக்கு தானும் தன குடும்பமும், சமூகமும் தற்சார்பு
பொருளாதார வாழ்க்கையில் நிறைவு பெறுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும்
அபிவிருத்தி அடைகின்றது. வாழ்வாதார தேவைகளுக்கான இறக்குமதி குறைகின்றது.
அதன் மூலம் அந்நிய செலாவணி சேமிக்கப்படுகின்றது.

இலங்கை போன்ற நிலம், நீர் வளம் கொண்ட நாட்டில் வாழும் நாங்கள் எங்கள்
வளங்களை பயன் படுத்தி முன்னேற முடியும்.

PLANS – TRUST & UNDERSTANDING |


திட்டங்களும் – நம்பிக்கையும், புரிந்துணர்வும்

Project Proposal – Integrated Farming | திட்ட முன்மொழிவு – 8


ஒருங்கிணைந்த பண்ணையம்
திட்டங்களும் - நம்பிக்கையும் புரிந்துணர்வும்:

1. உங்கள் திட்டங்கள் மற்றும் நோக்கங்கள் என்ன?

2. நீங்கள் என்ன செய்ய முன்மொழிகிறீர்கள்?

3. அதை தேர்ந்து எடுக்க காரணம் என்ன? அதன் தேவை அல்லது அவசியம்


என்ன? அதன் முக்கியத்துவம் என்ன?

4. உங்களை குறித்த நம்பிக்கை என்ன?

5. நீங்கள் செய்யும் (திட்டமிடும்) அனைத்து பணிகளையும் விவரிக்க வேண்டும்.

6. நீங்கள் விவசாயத் தொழிலில் இருக்கிறீர்களா?

1. அல்லது அதில் இறங்க திட்டமிட்டுள்ளீர்களா?

2. நீங்கள் எங்கே வசிக்கின்றீர்கள்?

3. எத்தனை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறீர்கள்?

4. நீங்கள் எப்போது விவசாயத்தைத் தொடங்கினீர்கள்?

Project Proposal – Integrated Farming | திட்ட முன்மொழிவு – 9


ஒருங்கிணைந்த பண்ணையம்
5. நீங்கள் தற்போது எவ்வாறு செயல்படுகிறீர்கள்?

7. குறுகிய கால (நடப்பு ஆண்டு):

ஆரம்ப வருமானத்துக்கு என்ன திட்டம் வைத்து உள்ளீர்கள்?

1. நடுத்தர கால (அடுத்த 1 - 2 ஆண்டுகள்):

9. நீண்டகால திட்டங்கள் என்ன?

Project Proposal – Integrated Farming | திட்ட முன்மொழிவு – 10


ஒருங்கிணைந்த பண்ணையம்

You might also like