You are on page 1of 17

12/14/23, 9:27 PM Pasumai Vikatan - 25 December 2023 - ஆண் டுக்கு ரூ.

க்கு ரூ.22 லட்சம் லாபம் ; தென் னை, ஜாதிக்காய் , பாக்கு; விருது பெ…

Vikatan Agriculture Organic Farming

Published: 09 Dec 2023 9 PM Updated: 09 Dec 2023 9 PM

ஆண்டுக்கு ரூ.22 லட்சம் லாபம்; தென்னை, ஜாதிக்காய், பாக்கு; விருது பெற்ற


விவசாயியின் இயற்கை விவசாயம்!
FOLLOW US ON

குருபிரசாத் News

தி.விஜய்

News பிரீமியம் ஸ்டோரி

Help
பண்ணையில் ரகுநாதன்

Share

https://www.vikatan.com/agriculture/organic-farming/22-lakhs-profit-per-annum-coconut-nutmeg-betel-nut-award-winning-organic-farmer?pfrom=rela… 1/25
12/14/23, 9:27 PM Pasumai Vikatan - 25 December 2023 - ஆண் டுக்கு ரூ.22 லட்சம் லாபம் ; தென் னை, ஜாதிக்காய் , பாக்கு; விருது பெ…
மகசூல்

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் வசித்துவருபவர் ரகுநாதன். 20 ஏக்கரில் இயற்கை


விவசாயம் செய்து வரும் இவருக்கு, சிறந்த தென்னை விவசாயி என்ற விருது வழங்கி
கௌரவித்துள்ளது கேரளா மாநில அரசு. இவரின் பூர்வீகம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலைப்பொழுதில் இவரைச் சந்திக்கச் சென்றோம். பாலக்காடு மாவட்டம்,


கொழிஞ்சாம்பாறை அருகே உள்ள வண்ணாமடை கிராமத்தில் அமைந்துள்ளது, ரகுநாதனின் வீடு.
இங்கு, தமிழர்கள் அதிகம் வசிப்பதால், ஊர் முழுவதும் தமிழ் மணம் வீசுகிறது.

பண்ணையில் ரகுநாதன்

சிரித்த முகத்துடன் நம்மை வரவேற்ற ரகுநாதன், “திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தான்


எங்களுடைய பூர்வீகம். 80 ஆண்டு களுக்கு முன்பு காங்கேயம் பகுதியில் கடுமையான வறட்சி
ஏற்பட்டதால், என்னுடைய முன்னோர்கள், இங்க வந்து குடியேறியுள்ளார்கள். இங்கு தண்ணீர்
வளம் நன்றாக இருக்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த பல குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன’’ எனப்
பேசிக்கொண்டே தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். ஏராளமான தென்னை மரங்கள்
செழிப்பாகக் காட்சி அளித்தன. ஜாதிக்காய், பாக்கு, வாழை, கொய்யா, பப்பாளி, பலா,
மங்குஸ்தான், ரம்புட்டான், முள் சீத்தா ஆகியவை ஊடுபயிர்களாகச் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

‘‘20 ஏக்கர் நிலம் இருக்கு, எனக்கு விவசாயத்தில் ஆர்வம் அதிகம். அதனால்தான், இளங்கலை

https://www.vikatan.com/agriculture/organic-farming/22-lakhs-profit-per-annum-coconut-nutmeg-betel-nut-award-winning-organic-farmer?pfrom=rela… 2/25
12/14/23, 9:27 PM Pasumai Vikatan - 25 December 2023 - ஆண் டுக்கு ரூ.22 லட்சம் லாபம் ; தென் னை, ஜாதிக்காய் , பாக்கு; விருது பெ…

தாவரவியல் பட்டப் படிப்பு முடித்ததுமே விவசாயத்தில் இறங்கிவிட்டேன். அப்போதெல்லாம் அரசு


வேலை எளிதாகக் கிடைக்கும். ஆனால், அதை நான் விரும்ப வில்லை’’ எனத் தன்னைப் பற்றிய
தகவல் களைப் பகிர்ந்துகொண்ட ரகுநாதன், விவசாய அனுபவங்களை விவரித்தார்.

பறவை பார்வையில் பண்ணை

‘‘25 ஆண்டுகளுக்கு முன்பு ரசாயன இடுபொருள்கள் பயன்படுத்திதான் விவசாயம் செய்து


வந்தேன். அவற்றின் விலை உயர்ந்துகொண்டே இருந்ததால், உற்பத்திச் செலவு அதிகரித்தது.
அதனால் உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கவில்லை. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய
தாத்தா, எந்த ஒரு ரசாயன உரமும் போடாமலே நல்ல விளைச்சல் எடுத்தது ஞாபகத்துக்கு
வந்ததால் மாட்டு எரு, ஆட்டு எரு, இலைதழைகள் மட்டும் பயன்படுத்தி சுமார் 10 ஆண்டுகள்
விவசாயம் செய்து வந்தேன். என்னிடம் அப்போது 7 சீமை மாடுகள் இருந்தன.

அதன் பிறகு, இயற்கை விவசாயத்தை முறையாகக் கற்றுக்கொள்ள நம்மாழ்வார் மற்றும் சுபாஷ்


பாலேக்கரின் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டேன். ‘ஒரு நாட்டு மாடு இருந்தாலே 30 ஏக்கர்
நிலத்துக்குத் தேவையான இயற்கை இடுபொருள்கள் தயாரித்துவிடலாம்’ எனச் சுபாஷ் பாலேக்கர்
சொன்ன வார்த்தைகள் உத்வேகம் அளித்தன. ஒரு நாட்டு மாடு வாங்கி வளர்க்கத் தொடங்கினேன்.

https://www.vikatan.com/agriculture/organic-farming/22-lakhs-profit-per-annum-coconut-nutmeg-betel-nut-award-winning-organic-farmer?pfrom=rela… 3/25
12/14/23, 9:27 PM Pasumai Vikatan - 25 December 2023 - ஆண் டுக்கு ரூ.22 லட்சம் லாபம் ; தென் னை, ஜாதிக்காய் , பாக்கு; விருது பெ…

சாணக் கரைசல்

ஆரம்பத்தில் என்னுடைய பண்ணையில் நிலக்கடலை, சோளம், கொள்ளு, சாமை, ராகி, பருத்தி


உள்ளிட்ட பயிர்களைத்தான் அதிகமாகச் சாகுபடி செய்தேன். அப்போது குறைந்த
எண்ணிக்கையில்தான் தென்னை மரங்கள் இருந்தன. நாளடைவில் விவசாய வேலைக்கு ஆள்கள்
பற்றாக்குறை ஏற்பட்ட தால் 20 ஏக்கரிலும் தென்னை நடவு செய்தேன். தலா 25 - 30 அடி
இடைவெளியில் 1,300 தென்னை மரங்கள் உள்ளன. இதில் ஊடுபயிர்களாக, 7 ஆண்டுகளுக்கு
முன்பு... 1,000 ஜாதிக்காய் மரங்களும், 3,000 பாக்கு மரங்களும் உள்ளன. 2 ஆண்டுகளாக
ஜாதிக்காய் மற்றும் பாக்கு மரங்களிலிருந்து மகசூல் கிடைக்கத் தொடங்கியுள்ளது’’ என்று
சொன்னவர், மகசூல் மற்றும் வருமானம் குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

https://www.vikatan.com/agriculture/organic-farming/22-lakhs-profit-per-annum-coconut-nutmeg-betel-nut-award-winning-organic-farmer?pfrom=rela… 4/25
12/14/23, 9:27 PM Pasumai Vikatan - 25 December 2023 - ஆண் டுக்கு ரூ.22 லட்சம் லாபம் ; தென் னை, ஜாதிக்காய் , பாக்கு; விருது பெ…

மாட்டுச் சிறுநீர் சேமிப்பு தொட்டி

ஜாதிக்காய்...

ஜாதிக்காய் மரங்களிலிருந்து இந்த ஆண்டு சுமார் 400 கிலோ காய்கள் மகசூல் கிடைத்தது. ஒரு
கிலோ 450 ரூபாய் என விற்பனை செய்தது மூலம், 1,80,000 ரூபாய் வருமானம் கிடைத்தது.
ஜாதிக்காய் மரங்களின் பூக்களுக்கும் நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது. 1 கிலோவுக்குச்
சராசரியாக 2,000 ரூபாய் விலை கிடைக்கிறது. 100 கிலோ ஜாதிக்காய் பூக்கள் விற்பனை செய்தது
மூலம், 2,00,000 ரூபாய் வருமானம் கிடைத்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இம்மரங்களிலிருந்து
இன்னும் பல மடங்கு வருமானம் கிடைக்கும்.

பாக்கு...

இந்தத் தோட்டத்தில் 3,000 பாக்கு மரங்கள் உள்ளன. தற்போது 300 மரங்கள் காய்ப்புக்கு
வந்துள்ளன. இந்த ஆண்டு ஒரு மரத்துக்குச் சராசரியாக 8 கிலோ வீதம் மொத்தம் 2,400 கிலோ
காய்கள் மகசூல் கிடைத்தது. ஒரு கிலோ 42 ரூபாய் என விற்பனை செய்தது மூலம், 1,00,800 ரூபாய்
வருமானம் கிடைத்தது.

https://www.vikatan.com/agriculture/organic-farming/22-lakhs-profit-per-annum-coconut-nutmeg-betel-nut-award-winning-organic-farmer?pfrom=rela… 5/25
12/14/23, 9:27 PM Pasumai Vikatan - 25 December 2023 - ஆண் டுக்கு ரூ.22 லட்சம் லாபம் ; தென் னை, ஜாதிக்காய் , பாக்கு; விருது பெ…

பசுந்தீவனம்

தென்னை

20 ஏக்கரில் 1,300 தென்னை மரங்கள் உள்ளன. இதில் 100 மரங்களைக் கள் கட்டு வதற்குக்
குத்தகைக்கு விட்டுள்ளேன். ஒரு மரத்துக்கு மாதம் 430 ரூபாய் வீதம் குத்தகை தொகை
கிடைக்கிறது. 100 மரங்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 5,16,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
களையெடுப்பு, நீர்ப் பாசனம், இடுபொருள் மேலாண்மை ஆகியவற்றை நான் செய்து தர
வேண்டும். மரத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால், குத்தகைதாரர், ஒரு தென்னை மரத்துக்கு 20,000
ரூபாய் வீதம் எனக்கு இழப்பீடு கொடுப்பார். கள் இறக்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் கேரளா
அரசு சட்டபூர்வ அனுமதி அளிப்பதால், இங்குள்ள தென்னை விவசாயிகள் கணிசமான வருமானம்
பார்க் கிறார்கள். என்னுடைய தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களில் கடந்த 20 ஆண்டுகளாகக்
கள் இறக்குவதற்குக் குத்தகைக்கு விட்டு வருகிறேன். 10 ஆண்டுகளுக்கும் முன்பு 300 மரங்கள்
குத்தைக்கு விட்டேன். முன்பு கேரளாவில் கள்ளுக்கு விற்பனை வாய்ப்பு அதிகமாக இருந்தது.
இங்கும் மதுபான ஆலைகளில் தயார் செய்யப்படும் மதுவின் விற்பனை அதிகரித்ததால்,
கள்ளுக்கான வரவேற்பு சற்றுக் குறைந்துள்ளது. இதனால் கள் இறக்குவதற்கு 100 மரங்களை
மட்டுமே குத்தகைக்கு விட முடிகிறது.

https://www.vikatan.com/agriculture/organic-farming/22-lakhs-profit-per-annum-coconut-nutmeg-betel-nut-award-winning-organic-farmer?pfrom=rela… 6/25
12/14/23, 9:27 PM Pasumai Vikatan - 25 December 2023 - ஆண் டுக்கு ரூ.22 லட்சம் லாபம் ; தென் னை, ஜாதிக்காய் , பாக்கு; விருது பெ…

பண்ணையில்

1,200 தென்னை மரங்களிலிருந்து காய்கள் அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறேன். ஒரு
மரத்துக்கு ஆண்டுக்குச் சராசரியாக 150 காய்கள் மகசூல் கிடைக்கிறது. இந்த ஆண்டு ஒரு காய்க்கு
8-12 ரூபாய் விலை கிடைத்தது. 1,200 மரங்களிலிருந்து கிடைத்த 1,80,000 காய்கள் விற்பனை
செய்தது மூலமாக, ஒரு காய்க்குச் சராசரியாக 10 ரூபாய் வீதம் மொத்தம் 18,00,000 ரூபாய்
வருமானம் கிடைத்தது.

மொத்த வருமானம்

20 ஏக்கரில் உள்ள தென்னை, ஜாதிக்காய், பாக்கு மரங்கள் மூலம் இந்த ஆண்டு மொத்தம் 27,96,800
ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதில் எல்லாச் செலவுகளும் போக, 22 லட்சம் ரூபாய்
லாபமாகக் கிடைத்துள்ளது.

https://www.vikatan.com/agriculture/organic-farming/22-lakhs-profit-per-annum-coconut-nutmeg-betel-nut-award-winning-organic-farmer?pfrom=rela… 7/25
12/14/23, 9:27 PM Pasumai Vikatan - 25 December 2023 - ஆண் டுக்கு ரூ.22 லட்சம் லாபம் ; தென் னை, ஜாதிக்காய் , பாக்கு; விருது பெ…

பண்ணை

பராமரிப்பு

மண்ணை வளப்படுத்த... மாட்டு எரு ஆட்டு எரு, கோழி எரு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து
ஒவ்வோர் ஆண்டும் மழைக் காலத்தில், ஒரு தென்னை மரத்துக்குத் தலா 50 கிலோ வீதமும்,
ஜாதிக்காய் மரத்துக்கு 15 கிலோ வீதமும், பாக்கு மரத்துக்கு 5 கிலோ வீதமும் போடுவேன். 3
மாதங்களுக்கு ஒருமுறை பாசனநீரில் தேவைக்கேற்ப... ஜீவாமிர்தம், மீன் அமிலம் ஆகியவற்றைக்
கலந்து விடுவேன். இங்கிருந்து 300 மீட்டர் தொலைவில் வேறொரு நபருக்குச் சொந்த மான
மாட்டுப்பண்ணை உள்ளது. அதைத் தினமும் சுத்தப்படுத்தும்போது வெளியேறக் கூடிய சாணம்,
சிறுநீர் கலந்த கழிவுநீரை அப்புறப்படுத்துவதில் அவருக்குச் சில சிக்கல்கள் நிலவின. அதனால்
நிலத்தில் குழாய் பதித்து, அந்த மாட்டுப் பண்ணை யிலிருந்து என்னுடைய தோட்டத்துக்குக்
கழிவுநீரைக் கொண்டு வருகிறேன். அதை வடிகட்டி, கிணற்றில் விடுவேன். அதன் பிறகு,
கிணற்றுத் தண்ணீரைச் சொட்டு நீர்ப் பாசனம் மூலம் பாய்ச்சுவதால், என் தோட்டத் தில் உள்ள
பயிர்கள் அனைத்தும் செழிப்பாக விளைகின்றன. தென்னை மட்டைகளைத் துண்டு துண்டாக
வெட்டிப் போட்டு, அதன் மீது மண்ணைப் போட்டு மூடி மூடாக்கு அமைப்பேன். இதனால் போரான்
சத்து மண்ணுக்குக் கிடைக்கிறது. ஈரப்பதமும் தக்க வைக்கப்படுகிறது.

https://www.vikatan.com/agriculture/organic-farming/22-lakhs-profit-per-annum-coconut-nutmeg-betel-nut-award-winning-organic-farmer?pfrom=rela… 8/25
12/14/23, 9:27 PM Pasumai Vikatan - 25 December 2023 - ஆண் டுக்கு ரூ.22 லட்சம் லாபம் ; தென் னை, ஜாதிக்காய் , பாக்கு; விருது பெ…

பாக்கு+தென்னை

இங்கு தண்ணீர் பிரச்னை இல்லை. இந்தத் தோட்டத்தில் ஒரு கிணறும், இரண்டு ஆழ்துளைக்
கிணறுகளும் உள்ளன. 250-300 அடி ஆழத்திலேயே நிலத்தடி நீர் சிறப்பாக இருக்கிறது.
மழைநீரைத் தோட்டத்துக்குள் சேகரிக்க... 50 சென்ட் பரப்பளவில் ஓர் பண்ணைக் குட்டை
வெட்டியுள்ளோம். 5 காங்கேயம் மாடுகள் உள்ளன. இந்த மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்குத்
தென்னை சாகுபடிக்கு மட்டும் கேரளா அரசாங்கமே சொட்டு நீர்ப் பாசனம் அமைத்துக்
கொடுக்கிறது. நானும் பயன் அடைந்துள்ளேன். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த
வேண்டும் என்ற நோக்கத்தில் இதைச் செய்து கொடுக்கிறார்கள். இலவச மின்சாரமும்
கொடுக்கிறார்கள்.

நேரடியாக ஆய்வு செய்த அமைச்சர்...

கேரளா அரசு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விருது வழங்கி வருகிறது. நீண்ட காலமாக
இயற்கை விவசாயம் செய்து வரும் மாநிலத்தின் சிறந்த தென்னை விவசாயி என்ற பிரிவில்
விருது வழங்கி கௌரவித்தனர். முதல்கட்டமாக எங்கள் ஊராட்சி அளவில் ஆய்வு செய்து
என்னைத் தேர்ந்தெடுத்தனர். இயற்கை விவசாயத்தில் நான் கையாளும் தொழில்நுட்பங்களை
உன்னிப்பாகக் கவனித் தார்கள். அடுத்தகட்டமாகப் பாலக்காடு மாவட்ட அளவிலான அதிகாரிகள்
ஆய்வு செய்தனர். இதன்படி மாநிலம் முழுவதும் சுமார் 9 விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து,
இறுதியாக என்னைத் தேர்வு செய்தனர். திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில், வேளாண்துறை

https://www.vikatan.com/agriculture/organic-farming/22-lakhs-profit-per-annum-coconut-nutmeg-betel-nut-award-winning-organic-farmer?pfrom=rela… 9/25
12/14/23, 9:27 PM Pasumai Vikatan - 25 December 2023 - ஆண் டுக்கு ரூ.22 லட்சம் லாபம் ; தென் னை, ஜாதிக்காய் , பாக்கு; விருது பெ…

அமைச்சர் பிரசாத் இந்த விருதை வழங்கினார். ரூ.2 லட்சம் ஊக்கத் தொகை மற்றும் விருது
கொடுத்தனர்.

மாட்டுடன்

விருது கொடுத்த சில நாள்கள் கழித்து அமைச்சர் என் தோட்டத்துக்கு நேரடியாக வந்து ஆய்வு
செய்தார். இந்த ஊரின் பொது இடங்களில் புங்கன், பூவரசு, வாகை உள்ளிட்ட சுமார் 250 மரங்களை
நட்டு வளர்த்துள்ளேன். அதுவும் எனக்கு நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளது.

ரசாயன உரம் போட்டால்தான் அதிக விளைச்சல் கிடைக்கும் எனப் பெரும்பாலான விவசாயிகள்


நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறானது. இயற்கை விவசாயம் செய்து வரும் எனக்கு,
எல்லாவிதமான பயிர்களிலுமே அதிக விளைச்சல் கிடைக் கிறது. இன்னும் பல விவசாயிகள்
இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார்கள். இயற்கை விவசாயத்தில் பூச்சி, நோய்த் தாக்குதலுக்கான
வாய்ப்புகள் குறைவு. உற்பத்திச் செலவும் குறைகிறது.

https://www.vikatan.com/agriculture/organic-farming/22-lakhs-profit-per-annum-coconut-nutmeg-betel-nut-award-winning-organic-farmer?pfrom=rel… 10/25
12/14/23, 9:27 PM Pasumai Vikatan - 25 December 2023 - ஆண் டுக்கு ரூ.22 லட்சம் லாபம் ; தென் னை, ஜாதிக்காய் , பாக்கு; விருது பெ…

கேரள அரசு வழங்கிய விருதுடன்

இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் அருமையையும் உணர்ந்து என் மகன் ஐ.டி வேலையை


விட்டுவிட்டு விவசாயத்துக்கு வந்துவிட்டார். என் மருமகள், பேரன் அனைவரும் இயற்கை
விவசாயத்தில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்.
அனைத்து விவசாயி களும் இயற்கை விவசாயத்தை நோக்கி வர வேண்டும்” என்று
அழைப்புவிடுத்தார்.

தொடர்புக்கு, ரகுநாதன்,

செல்போன்: 98469 44310.

https://www.vikatan.com/agriculture/organic-farming/22-lakhs-profit-per-annum-coconut-nutmeg-betel-nut-award-winning-organic-farmer?pfrom=rel… 11/25
12/14/23, 9:27 PM Pasumai Vikatan - 25 December 2023 - ஆண் டுக்கு ரூ.22 லட்சம் லாபம் ; தென் னை, ஜாதிக்காய் , பாக்கு; விருது பெ…

உலரவைக்கப்பட்ட ஜாதிக்காய்

https://www.vikatan.com/agriculture/organic-farming/22-lakhs-profit-per-annum-coconut-nutmeg-betel-nut-award-winning-organic-farmer?pfrom=rel… 12/25
12/14/23, 9:27 PM Pasumai Vikatan - 25 December 2023 - ஆண் டுக்கு ரூ.22 லட்சம் லாபம் ; தென் னை, ஜாதிக்காய் , பாக்கு; விருது பெ…

ஜாதிக்காயிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஜாதிபத்ரி

https://www.vikatan.com/agriculture/organic-farming/22-lakhs-profit-per-annum-coconut-nutmeg-betel-nut-award-winning-organic-farmer?pfrom=rel… 13/25
12/14/23, 9:27 PM Pasumai Vikatan - 25 December 2023 - ஆண் டுக்கு ரூ.22 லட்சம் லாபம் ; தென் னை, ஜாதிக்காய் , பாக்கு; விருது பெ…

மரத்தில் ஜாதிக்காய்

நாட்டு ஜாதிக்காய்தான் எனக்கு ஏற்றது!

‘‘ஜாதிக்காய் சாகுபடியில் எனக்குப் போதிய அனுபவம் இல்லாததால், ஆரம்பத்தில் 1,000 காட்டு ரக


ஜாதிக்காய் பயிர் செய்தேன். ஓர் ஆண்டுக்கு மேல் ஆனது. ஆனால், போதிய வளர்ச்சி இல்லை.
எங்கள் ஊர் மண்ணுக்கும், சீதோஷ்ண நிலைக்கும் நாட்டு ரக ஜாதிக்காய்தான் நன்றாக விளையும்
என இதில் அனுபவம் பெற்ற விவசாயிகள் சொன்னார்கள். அதனால் காட்டு ஜாதிக்காய்
செடிகளை அகற்றிவிட்டு, நாட்டு ஜாதிக்காய் செடிகளை நட்டேன். சிறப்பாக விளைகிறது. 25 பெண்
மரங்களுக்கு, ஒரு ஆண் மரம் என்ற அடிப்படையில் இதைப் பயிர் செய்ய வேண்டும்.
அப்போதுதான் காய்க்கும். சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு காய்க்கத் தொடங்கும். 5-ம்
ஆண்டிலிருந்து ஜாதிக்காய் விற்பனை மூலம் வருமானம் பார்க்கத் தொடங்கலாம்’’ என்கிறார்
ரகுநாதன்.

2109 Premium Premium


இதழ்கள் அரசியல் சினிமா ஆன்மிகம் பணம் ஆரோக்கியம் பசுமை விளையாட்டு ச

பசுமை விகடன் மகசூல்


மிஸ்டர் கழுகு
TRENDING
ஆசிரியர் பக்கம்
மிஸ்டர் மியாவ்
நாட்டு நடப்பு
வேட்டை நாய்கள் - 112
கேள்வி-பதில்
ஆளவந்தான்
அறிவிப்பு
Article 370
தொட
பிக் பாஸ் சீசன்

https://www.vikatan.com/agriculture/organic-farming/22-lakhs-profit-per-annum-coconut-nutmeg-betel-nut-award-winning-organic-farmer?pfrom=rel… 14/25
12/14/23, 9:27 PM Pasumai Vikatan - 25 December 2023 - ஆண் டுக்கு ரூ.22 லட்சம் லாபம் ; தென் னை, ஜாதிக்காய் , பாக்கு; விருது பெ…
Vikatan Special Offer! Diwali Malar 2023 Free! Buy Now x

குளம்

மங்குஸ்தான், ரம்புட்டான்,
முள் சீத்தா

‘‘இதே தோட்டத்தில் வீட்டுத்தேவைக்காக மங்குஸ்தான், ரம்புட்டான், முள்சீத்தா, கொய்யா, பப்பாளி,


பலா ஆகியவற்றைக் குறைந்த எண்ணிக்கையில் பயிர் செய்துள்ளோம். 600 கதளி ரக வாழையும்
சாகுபடி செய்துள்ளோம்’’ என்கிறார் ரகுநாதன்.

https://www.vikatan.com/agriculture/organic-farming/22-lakhs-profit-per-annum-coconut-nutmeg-betel-nut-award-winning-organic-farmer?pfrom=rel… 15/25
12/14/23, 9:27 PM Pasumai Vikatan - 25 December 2023 - ஆண் டுக்கு ரூ.22 லட்சம் லாபம் ; தென் னை, ஜாதிக்காய் , பாக்கு; விருது பெ…

https://www.vikatan.com/agriculture/organic-farming/22-lakhs-profit-per-annum-coconut-nutmeg-betel-nut-award-winning-organic-farmer?pfrom=rel… 16/25
12/14/23, 9:27 PM Pasumai Vikatan - 25 December 2023 - ஆண் டுக்கு ரூ.22 லட்சம் லாபம் ; தென் னை, ஜாதிக்காய் , பாக்கு; விருது பெ…

பாக்கு மரம்

பாக்கு மரத்துக்கு
இயற்கை விரட்டி!

‘‘கடந்த ஆண்டு, பாக்கு மரங்களில் குருத்தில் பூச்சித்தாக்குதல் தென்பட்டது. வெள்ளைப் பூண்டை


அரைத்து அதனுடன் வேப்ப எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து தெளித்தேன். உடனடியாகச்
சரியாகிவிட்டது. மிக்ஸியில் அரைக்கப்பட்ட 500 கிராம் வெள்ளைப்பூண்டுடன், 25 மி.லி, வேப்ப
எண்ணெய், 500 மி.லி தண்ணீர் கலந்து கரைசல் தயார் செய்ய வேண்டும். இதை 10 லிட்டர்
தண்ணீரில் கலந்து, தெளிப்பான் மூலம், தெளிக்க வேண்டும். குருத்துப்பூச்சி தாக்குதல்
தென்படக்கூடிய மரங்களில் மட்டும் தெளித்தால் போதுமானது’’ என்கிறார் ரகுநாதன்.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு விகடன் வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள் 👉 Click here

View Comments (1)

organic farming organic fertilizer farmer kerala nuts Coconut Cultivation

கவர் ஸ்டோரி
ஆண்டுக்கு ரூ.22 லட்சம் லாபம்; தென்னை, ஜாதிக்காய், பாக்கு; விருது பெற்ற
விவசாயியின் இயற்கை விவசாயம்!

குருபிரசாத்

மகசூல்

https://www.vikatan.com/agriculture/organic-farming/22-lakhs-profit-per-annum-coconut-nutmeg-betel-nut-award-winning-organic-farmer?pfrom=rel… 17/25

You might also like