You are on page 1of 4

இயற்கையில் இனிக்கும் எலுமிச்சை... இரண்டரை ஏக்கர்… ஆண்டுக்கு ரூ.

7,80,000
லாபம்

அறுவடையான எலுமிச்சையுடன் சண்முகவேலு தம்பதி


தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீரம
் ட்டம் குறைந்துபோனதால், விவசாயத்துக்குப்
போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. அதனால், பெரும்பாலான விவசாயிகள், வறட்சியைத்
தாங்கி வளரும் பயிர்களைத் தேடிப் பயிர் செய்ய ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் பலருக்கும்
கைகொடுத்து வரும் பயிராக இருக்கிறது, எலுமிச்சை. வறட்சியைத்தாங்கி வளர்வதோடு, நிரந்தர
வருமானம் கொடுக்கும் பயிராகவும் இருப்பதால் பல விவசாயிகளின் விருப்பத்தேர்வாக இருக்கிறது இந்தப்
பயிர். அந்த வகையில் இயற்கை முறையில் எலுமிச்சைச் சாகுபடி செய்து நல்ல வருமானம் எடுத்து
வருகிறார், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்நத் சண்முகவேலு.

இடுபொருள்
இடுபொருள்
கடையம் எனும் ஊரில் இருக்கிறது, சண்முகவேலுவின் எலுமிச்சைத் தோட்டம். இருபுறமும் மூலிகைகள்,
பூச்செடிகள் அணிவகுத்துள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். வீடடு
் க்குப் பின்புறம் இருக்கிறது
எலுமிச்சைத் தோட்டம். ்
ஒரு ந ண ் ப கல் வே ளையி ல்அறு வடைசெ ய் தஎ லு மி ச் சையைத் ்
தரம்பிரித்துக் கொண்டிருந்த அவரைச் சந்தித்தோம். எலுமிச்சைச்சாறு கொடுத்து உபசரித்த சண்முகவேலு,
மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார்.

செழித்து நிற்கும் எலுமிச்சைத் தோட்டம்...


செழித்து நிற்கும் எலுமிச்சைத் தோட்டம்...
“எனக்குச் சொந்த ஊர் ஆலங்குளம். விக்கிரமசிங்கபுரத்துல உள்ள மதுரா கோட்ஸ் மில்லில் அப்பா வேலை
பார்த்ததனால், இந்த ஊருக்கு வந்துவிட்டோம். நானும் காலேஜ் முடிச்சுட்டு அதே மில்லில் வேலைக்குச்
சேர்ந்துட்டேன். எங்களுக்கு விவசாயம் பூர்வீகத்தொழில்னாலும், நான் வேலைக்குப் போயிட்டதால
விவசாயம் செய்ய முடியலை. இந்தத் தோட்டத்தை என் நண்பர்கிட்ட இருந்துதான் வாங்கினேன். நான்
வாங்குகிறதுக்கு முன்ன, லீவு நாள்களில் நானும் நண்பரும் இங்கே வருவோம். தென்னை,
மாமரங்கள் இருந்துச்சு. அவர் நெல் சாகுபடியும் செய்துட்டு இருந்தார். பசுமையான சூழலில் நல்ல காற்றைச்
சுவாசித்து வாழணும்னு நான் ஆசைப்பட்டேன். அவர் இந்த இடத்தை விற்பனை செய்யப்போறேன்னு
சொன்னதும் நானே வாங்கிட்டேன். தோட்டத்திலேயே வீடு கட்டி குடியிருக்கணும், விவசாயமும்
செய்யணும்னு முடிவு செய்தேன்.

அறுவடையான எலுமிச்சையுடன் சண்முகவேலு தம்பதி


அறுவடையான எலுமிச்சையுடன் சண்முகவேலு தம்பதி
1996-ம் வருஷம் விருப்ப ஓய்வு வாங்கிட்டு விவசாயத்தை ஆரம்பித்தேன். இந்தப் பகுதியில் விவசாயிகள்
பரவலா நெல் சாகுபடி செய்வாங்க. எனக்கும் அதில் அனுபவம் உண்டு. அதனால், முதல் முறையா நெல்
விதைச்சேன். தொழுவுரம் போட்டுச் சாகுபடி செய்தாலும், ரசாயன பூச்சிக்கொல்லிகளையும்
பயன்படுத்தினேன். அடுத்து நிலையான வருமானம் கிடைக்கிற மாதிரி ஏதாவது பயிர் பண்ணலாம்னு முடிவு
செய்து எலுமிச்சைச் சாகுபடியை ஆரம்பித்தேன். அரை ஏக்கர் நிலத்தில் நாட்டு எலுமிச்சையை நடவு
செய்தேன். ஆரம்பத்தில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளைத்தான் பயன்படுத்தினேன். என் மூத்த
பையன் அசோக், இயற்கை விவசாயத்தில் ஆர்வமா இருப்பார். அவர்தான் என்னை இயற்கைக்கு
மாறச்சொல்லி ‘பசுமை விகடன்’ புத்தகத்தை அறிமுகப்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து படித்து இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு முறைகள், மண்ணை வளப்படுத்தும்
முறைகள் அனைத்தையும் தெரிந்துகொண்டேன். அதுக்கப்புறம் இரண்டரை ஏக்கர் நிலத்தில் இயற்கை
முறையில் எலுமிச்சைச் சாகுபடியை ஆரம்பித்தேன். இப்போ 10 வருஷமா முழு இயற்கை முறையில்
எலுமிச்சையில் நல்ல மகசூல் எடுத்துட்டு இருக்கேன்” என்று கூறிய சண்முகவேலு தோட்டத்துக்குள்
அழைத்துச் சென்று காட்டியபடியே பேச ஆரம்பித்தார்.

இயற்கையில் இனிக்கும் எலுமிச்சை... இரண்டரை ஏக்கர்… ஆண்டுக்கு ரூ. 7,80,000


லாபம்!
“இது மொத்தம் 5 ஏக்கர் நிலம். இதில் இரண்டரை ஏக்கரில் எலுமிச்சைக் காய்ப்பில் இருக்கு. மீதமுள்ள
நிலத்தில் வீடு, மூலிகைச்செடிகள், பூச்செடிகள் எல்லாம் இருக்கு. மொத்தம் 300 எலுமிச்சை மரங்கள்
நட்டிருக்கேன். அதில் 250 மரங்கள் நல்ல காய்ப்பில் இருக்கு. சந்தையில் தேவை அதிகமாகி, நல்ல
விலை கிடைச்சா மொத்தப் பழத்தையும் பறிச்சி விற்பனைக்கு அனுப்பிடுவேன். மழைக்காலங்கள்ல
தோட்டத்தில் தண்ணீர் தேங்கும். அந்தச் சமயத்தில் கீழேவிழுகிற பழங்கள் சேதமாகிவிடும். அதனால,
மழைக்காலம் துவங்குறதுக்கு முன்னாடியே மொத்தமா, காய், பழங்கள் எல்லாத்தையும் பறிச்சிடுவேன்.

மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை எலுமிச்சைக்கு நல்ல விலை கிடைக்கும். ஒரு வருஷத்துக்கு 32,500
கிலோவுக்குக் குறையாமல் எலுமிச்சை கிடைக்குது.
அதேமாதிரி ஆடிக்காத்து துவங்குறதுக்கு முன்னாடியும் மொத்தமா பறிச்சிடுவேன். மற்றகாலங்களில்,
அதாவது சந்தையில் விலை குறைவாகக் கிடைக்கும் காலங்களில் கீழே விழுகிற காய், பழங்களை மட்டும்
சேகரிச்சு விற்பனைக்கு அனுப்புவேன். பொதுவா, மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை எலுமிச்சைக்கு
நல்ல விலை கிடைக்கும். மழைக்காலத்தில் விலை இருக்காது. விரத காலங்கள், கோயில் திருவிழாக்கள்,
முகூர்த்த தினங்களில் நல்ல விலை கிடைக்கும்.

முறையாகப் பராமரிச்சு, தேவைக்கேற்ப இடுபொருள்களைக் கொடுத்திட்டு வந்தால் எலுமிச்சையில் 15


வருஷம்வரை தொடர் மகசூல் எடுக்கலாம். நான் கடையத்தில் இருக்கிற ஒரு கமிஷன் கடையில்தான்
விற்பனை செய்கிறேன். வாரத்துக்கு இரண்டு நாள்கள் மட்டும் சென்னையில் உள்ள ஓர் இயற்கை
அங்காடிக்கு அனுப்புகிறேன். இயற்கை முறையில் விளைந்த எலுமிச்சைங்கிறதால, தனி
விலையெல்லாம் இல்லை. எனக்கு ரசாயனம் கலக்காத எலுமிச்சையை உற்பத்தி செய்கிறோம்ங்கிற
திருப்தி மட்டும்தான்” என்ற சண்முகவேலு நிறைவாக மகசூல் மற்றும் வருமானம்குறித்துச் சொல்ல
ஆரம்பித்தார்.

“இரண்டரை ஏக்கரில் எலுமிச்சை மூலமா ஒரு வருஷத்துக்கு 32,500 கிலோவுக்குக் குறையாமல் எலுமிச்சை
கிடைக்கிது. பழங்களைத் தரம் பிரிச்சுத்தான் மார்க்கெட்டுக்கு அனுப்புவேன். முதல் தரப் பழங்களுக்கு நல்ல
விலை கிடைக்கும். மற்ற பழங்களுக்கு விலை குறைவாத்தான் கிடைக்கும். ஒரு கிலோ எலுமிச்சைக்கு 20
ரூபாய்க்குக் குறையாமல் விலை கிடைக்கும். சீசன் சமயங்கள்ல நல்ல விலை கிடைக்கும். சில சமயங்களில்
ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேலகூட விற்பனையாகும்.

‘‘மழைக்காலத்தில் விலை இருக்காது என்பதால் மழைக்காலம் துவங்குறதுக்கு முன்னாடியே மொத்தமா,


காய், பழங்கள் எல்லாத்தையும் பறிச்சிடுவேன்.’’
நான் அதிகபட்சமா கிலோ 130 ரூபாய்னு விற்பனை செய்திருக்கேன். போன வருஷம், 32,500 கிலோ
எலுமிச்சையை விற்பனை செய்ததில், 11,37,500 ரூபாய் வருமானம் கிடைச்சது. சராசரியா
ஒரு கிலோவுக்கு 35 ரூபாய் விலை கிடைச்சிருக்கு. இதில் தொழுவுரம், களை எடுப்பு, இடுபொருள்கள்,
வேலையாள் கூலி, பராமரிப்புனு எல்லாச் செலவும் சேர்த்து 3,50,000 ரூபாய் செலவானது. அதுபோக,
7,87,500 ரூபாய் லாபமாகக் கிடைத்தது” என்று சொல்லி விடைகொடுத்தார், சண்முகவேலு.
தொடர்புக்கு சண்முகவேலு, செல்போன்: 94862 04359.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஒரு ஏக்கர் நிலத்தில் எலுமிச்சைச் சாகுபடி செய்வது குறித்துச் சண்முகவேலு கூறிய தகவல்கள் பாடமாக
இங்கே…

இயற்கையில் இனிக்கும் எலுமிச்சை... இரண்டரை ஏக்கர்… ஆண்டுக்கு ரூ. 7,80,000


லாபம்!
எலுமிச்சையை நடவு செய்ய ஆனி, ஆடி மாதங்கள் ஏற்றவை. எலுமிச்சை, களிமண் தவிர மற்ற
அனைத்து வகை மண்ணிலும் வளரக்கூடியது என்றாலும், செம்மண்ணில் சிறப்பாக வளரும். தேர்வு செய்த
நிலத்தில் 10 நாள்கள் இடைவெளியில் 2 முறை உழவு செய்ய வேண்டும். பிறகு 18 அடி இடைவெளியில்
3 அடி விட்டம், 3 அடி ஆழம் என்ற அளவில் குழிகள் எடுக்க வேண்டும். இடைவெளி அதிகம் இருந்தால்
மரங்கள் படர்ந்து வளரும். காய்ப்பு அதிகமாகும். காய் பறிக்கச் சென்று வருவதும் எளிதாக
இருக்கும்.

வேம்பு, கொழிஞ்சி, நொச்சி, எருக்கு, பூவரசு, ஆமணக்கு என அந்தந்தப் பகுதியில் எளிதாகக்


கிடைக்கும் ஏதாவது 5 இலை வகைகளில் தலா 2 கிலோ, 1 கூடை தொழுவுரம், 500 கிராம் கடலைப்
பிண்ணாக்கு, 250 கிராம் வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து, ஒவ்வொரு குழியிலும் நிரப்ப
வேண்டும். 15 நாள்கள் கழித்து… ஓர் ஆண்டு வயதுடைய கன்றுகளை ஒவ்வொரு குழியின்
மையப்பகுதியிலும் குழிக்கு ஒன்றாக நடவு செய்ய வேண்டும். செடிகளின் தூரைச்சுற்றி மண்ணை நன்கு
மிதித்துவிட வேண்டும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தொடர்ந்து தண்ணீரப் ் பாய்சச
் ினால்
போதுமானது. எலுமிச்சைக்கு, அளவுக்கதிகமாகத் தண்ணீர் விடக் கூடாது. சொட்டுநீர்ப் பாசன
முறை சிறந்தது.

நடவு செய்த 3-ம் மாதம் முதல் 12-ம் மாதம் வரை ஒவ்வொரு பாசனத்தின்போதும் 200 லிட்டர்
ஜீவாமிர்தத்தைப் பாசன நீருடன் கலந்து விட வேண்டும். நடவு செய்த 12-ம் மாதத்துக்குமேல்
10 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பஞ்சகவ்யாவையும் ஜீவாமிர்தத்தையும் கொடுத்துவர
வேண்டும். ஜீவாமிர்தம் எனில் வடிகட்டிய 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் அப்படியே
கலந்துவிடலாம்.

பஞ்சகவ்யா எனில், 3 லிட்டர் பஞ்சகவ்யாவை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து அந்தக் கரைசலைப்
பாசன நீரில் கலந்து விட வேண்டும்.

தொடர்ந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை 1 கூடை தொழுவுரம், 500 கிராம் கடலைப் பிண்ணாக்கு, 250
கிராம் வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து ஒவ்வொரு கன்றுக்கு அருகிலும் (2 அடி தூரத்தில்)
சிறு பள்ளம் பறித்து இட வேண்டும். கன்றில் முளைக்கும் பக்கக்கிளைகளைக் கவாத்துச் செய்ய வேண்டும்.
அதேபோல், காய்ந்த கிளைகளையும் அவ்வப்போது கவாத்து செய்துவிட வேண்டும். எலுமிச்சைக்
கன்றுகளைச் சுற்றிக் களைகள் மண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

15 நாள்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யாவையும் (10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி


பஞ்சகவ்யா), மூலிகைப் பூச்சிவிரட்டியையும் (10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி மூலிகைப்
பூச்சிவிரட்டி) சுழற்சி முறையில் தெளித்துவர வேண்டும். மழைக்காலத்தில் இலைகளை இலைவெட்டுப்
புழுக்கள் தாக்க வாய்ப்புண்டு. மாதம் ஒருமுறை மூலிகைப் பூச்சிவிரட்டித் தெளித்து வந்தாலும்,
மழைக்காலம் துவங்கியதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லிட்டர் தண்ணீருக்கு
300 மில்லி மூலிகைப் பூச்சிவிரட்டியைக் கலந்து தெளித்துவந்தால்தான் நல்ல பலன் கிடைக்கும்.

நடவு செய்த 5-ம் மாதத்தில் பூக்கத்தொடங்கும். அந்தப் பூக்களை உதிர்த்துவிட வேண்டும். நடவு செய்து
இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பூக்கும் பூக்களைக் காய்க்க அனுமதிக்கலாம். படிப்படியாக மகசூல்
அதிகரித்து 5-ம் ஆண்டுக்கு மேல் நல்ல மகசூல் கிடைக்கும். அறுவடை செய்யும்போது கிளைகளைக்
குச்சியால் தட்டியோ, மரத்தை உலுக்கியோ பழங்களை உதிர்க்கக் கூடாது. இதனால், மரத்துக்கும்,
கிளைகளுக்கும் பாதிப்பு உண்டாகும். பூ மற்றும் பிஞ்சுகளும் உதிர்ந்து விடும். நீளமான குச்சி ஒன்றை எடுத்து
அதன் முனையில் கொக்கியைப் பொருத்தி அதன் மூலம் பழங்களைப் பறிக்க வேண்டும். பழத்தை மரத்தில்
முழுவதும் பழுக்கவிடக் கூடாது. பச்சை நிறம் இளம் மஞ்சள் நிறத்துக்கு மாறும் சமயத்தில் பறித்துவிட
வேண்டும்.

You might also like