You are on page 1of 10

Ý⸡ó¾¢

சூரியகாந்தி மத்திய அமெரிக்க நாடுகளைச் சொந்த இடமாகக் கொண்டது. இது

குறைந்தது கி.மு 2600 ஆண்டுகள் அளவில் முதன் முதலில் மெக்சிகோவில்
பயிரிடப்பட்டது. சூரிய உதயத்தின்போது, பெரும்பாலான சூரியகாந்திகளின்
முகங்கள் கிழக்கை நோக்கித் திரும்புகின்றன. எனவே இதற்குச் சூரிய காந்தி என்று
பெயர் வந்தது.

நேரங்களின் நகர்ச்சியைத் தொடர்ந்து, அவையும் கிழக்கிலிருந்து மேற்கு

நோக்கிச் சூரியனைப் பின் தொடர்ந்து வரும் வேளையில் இரவில் அவை மீண்டும்
கிழக்குத் திசைக்குத் திரும்புகின்றன. இந்த நகர்வானது மொட்டிற்குச் சிறிது கீழாக
உள்ள தண்டின் வளையத்தக்க பகுதியில் ஏற்படுத்தப்படும். மொட்டு நிலை
முடியும்போது, தண்டானது விறைப்படைந்து, பூக்கும் நிலையை அடையும்.சூரிய
காந்தி மஞ்சள் நிறத்தில் பூக்கிறது.மலர்கள் பெரிதாக இருக்கும்.இதன் விதையில்
இருந்து எடுக்கப் படும் எண்ணெய் சமையலுக்கு பயன்படுகிறது.எனவே இதனை
பெருமளவில் பயிரிடுகிறார்கள்.

மேலும் இது ஆலிவ் எண்ணெயை விட மலிவாக இருப்பதால் வெண்ணெய்

மற்றும் பயோடீசல் தயாரிப்புக்கும் பயன்படும். ஆலிவ் எண்ணெயை விட அதிகமான
அளவில் ஆரோக்கியம் நிரம்பிய பலனைச் சூரியகாந்தி எண்ணெய் தருகிறது.
எண்ணெய் எடுப்பதற்காக விதைகளைப் பதப்படுத்தியப் பின்னர் எஞ்சுகின்ற
கட்டியைக் கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.
கேள்விகள்

1. சூரியகாந்தி எந்த நாடுகளைச் சொந்த இடமாகக் கொண்டது?

____________________________________________________________________________
___________________________________________________________________________

2. சூரியகாந்தி எந்த ஆண்டில் முதன் முதலில் பயிரிப்பட்டது?

____________________________________________________________________________
____________________________________________________________________________

3. சூரியகாந்தியின் விதை எதற்குப் பயன்படுத்தப்படுகிறது?

____________________________________________________________________________
___________________________________________________________________________

4. சூரியகாந்தி எந்த நிறத்தில் பூக்கிறது?

____________________________________________________________________________
____________________________________________________________________________

5. சூரியகாந்தி பூவிலிருந்து எவ்வகையானப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன?

____________________________________________________________________________
____________________________________________________________________________
அல்லி

அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும்
மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம், பொய்கை, நீர்ச்சுனைகளிலும், மெதுவாக
ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள்
உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க காலத்து இலக்கியங்களில்
ஆம்பல் மலரைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில்
குவியும் (இதழ்கள் மூடும்).எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி
இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற
அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.

இந்த பூக்களில் அபூர்வமான மருத்துவக் குணங்களும் நிறைந்து

காணப்படுகின்றன.அல்லி நீரிழிவை நீக்கும். புண்களை ஆற்றும்.வெப்பச் சூட்டால்
ஏற்படும் கண் நோய் நீங்கும்.கோடைக் காலத்தில் உஷ்ணத்தினால் குழந்தைகளுக்குக்
கட்டிகள் உண்டாகும்.இதற்கு அல்லி இலையும் அவுரி இலையும் சம அளவில் எடுத்து
அரிசி கழுவிய நீரில் கலந்து பூசினால் கட்டி உடைந்து குணமாகும்.

அல்லி இதழ்களை மட்டும் சேகரித்து அதனுடன் 200 மில்லி நீர் விட்டு

காய்ச்சி பாதியாக வற்றியதும் குடித்து வர நீரிழிவு நோய்
கட்டுப்படும்.கண்சிவப்பு,எரிச்சல்,நீர் வடிதல் இவற்றுக்கு அல்லி இதழ்களை அரைத்து
கண்களின் மீது வைத்து கட்டிவர நல்ல குணம் கிடைக்கும்.
கேள்விகள்

1. அல்லியின் மறுப்பெயர் என்ன?

____________________________________________________________________________
___________________________________________________________________________

2. அல்லி இனத்தில் மொத்தம் எத்தனை வகை உண்டு?

____________________________________________________________________________
____________________________________________________________________________

3. நீல நிற அல்லியை எங்கு காணலாம்?

____________________________________________________________________________
___________________________________________________________________________

4. அல்லி மலரும் காலத்தைக் கூறுக?

____________________________________________________________________________
____________________________________________________________________________

5. அல்லியின் மருத்துவ குணங்கள் யாது?

____________________________________________________________________________
____________________________________________________________________________
செண்பகம்

செண்பகம் என்பது என்றும் பசுமையான பெரியத் தாவரமாகும். இது

தெற்காசியா, தென்கிழக்காசியா, சீனாவின் சில பகுதிகளில் காணப்படும். இம்மலர்
ஆண்டுத்தோறும் பூக்கும்.இது மிகுந்த நறுமணம் கொண்ட மஞ்சள் அல்லது
வெண்ணிறப் பூக்களில் இருக்கும்.

செண்பகப் பூக்கள் தென்கிழக்காசியாவிறல் பல்வேறு தேவைகளுக்குப்

பயன்படுத்தப்படுகிறது. இவை முதன்மையாக வீடுகளில் அல்லது ஆலயங்களில்
வழிபாடு செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. சிறுமிகளும் பெண்களும்
இப்பூக்களை அழகுக்காகவும் இயற்கையான நறுமணத்துக்காகவும் தலையில் சூடிக்
கொள்வர். அறைகளில் இயற்கையான நறுமணம் திகழ்வதற்காக நீர் மேலிடப்பட்டு
வைக்கப்படுகிறது. மேலும் மணமாலைகளுக்கும் இதன் பூக்கள்
பயன்படுத்தப்படுகின்றன.

உடல் பலமாகவும் புத்துணர்வுடனும் இருந்தால் மனிதன் ஆரோக்கியமாக

வாழ முடியும். உடல் வலுவடைய செண்பகப் பூ மிகச்சிறந்த மருந்தாகும். செண்பகப்
பூவை வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலையில்
சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.அதிக சூட்டினாலும், இரவு நேரங்களில் அதிக
நேரம் கண் விழிப்பதாலும் நரம்புத் தளர்ச்சி உண்டாகும். இவர்கள் செண்பகப் பூவை
கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் நரம்புத் தளர்வு
நீங்கும்.
கேள்விகள்

1. செண்பகப்பூ எந்தப் பகுதியில் காணப்படுகிறது?

____________________________________________________________________________
___________________________________________________________________________

2. செண்பகப்பூ எந்த நிறத்தில் காணப்படும்?

____________________________________________________________________________
____________________________________________________________________________

3. செண்பகப்பூவின் பயன்பாட்டினைக் கூறுக?

____________________________________________________________________________
___________________________________________________________________________

4. செண்பகம் மலரும் காலத்தைக் கூறுக?

____________________________________________________________________________
____________________________________________________________________________

5. செண்பகப்பூவின் மருத்துவ குணங்கள் யாது?

____________________________________________________________________________
____________________________________________________________________________

You might also like