You are on page 1of 8

கற்பூரவள்ளி

கற்பூரவள்ளி அறிவியல் பெயர் பிளெக்ட்ரான்டஸ் அம்போயினிகஸ்  கற்பூரவள்ளி (Coleus aromaticus)


என்பது ஒரு மருத்துவ மூலிகைச்  செடியாகும். வாசனை மிக்கதான இதன் இலைகள் தடிப்பாகவும்,
மெதுமெதுப்பாகவும், விளிம்பு, கூர்மையற்ற பற்கள் போல் காட்சி தரும். கசப்புச்  சுவையும்
காரத்தன்மையும் வாசனையும் கொண்ட இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இத்தாவரம்
முழுவதும் மெல்லிய ரோம வளரிகள் உண்டு. மலர்களின் நிறம் ஊதா. இது வீடுகளில் பரவலாக
வளர்க்கப்படுகிறது. குழந்தைகளுக்கு சளியை வெளியேற்றப் பயன்படுகிறது. இது குளிர் காய்ச்சல்,
இருமல், மார்பு நெரிசல் மற்றும் அஜீரணம் குணப்படுத்த பாரம்பரிய மருத்துவத்தில் ஒன்றாகும்.
புதினா
புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப்
பொருமல், செரியாமை முதலிய கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும்
உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது .புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய
இருக்கின்றன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது.
புதினா உடற்சூட்டைத் தணிக்க உதவும். புதினா உடலுக்கு வெப்பம் தருவதால் மூல நோய்கள்
உள்ளவர்கள் இக்கீரையை தவிர்த்தல்  நல்லது. தொண்டைப்புண் உள்ளவர்கள் புதினாக் கீரையை
அரைத்து தொண்டையின் வெளிப்பகுதியில் பற்றுப்போட்டால் தொண்டைப் புண் ஆறிவிடும்.
கருமஞ்சள்
சித்த மருத்துவத்தில் கருப்பாக உள்ள மூலிகைகளின் ஒன்று கருமஞ்சள்.
ஒரு அரிய மூலிகைதான், குர்குமா எருஜினோசா எனும் கருமஞ்சள். அடர்ந்த காடுகள் மற்றும் மலைகளில்
அரிதாகக் காணப்படும். கருமஞ்சள் செடி, இரண்டு மீட்டர்வரை வளரும். இலைகளின் அடுக்குகளில்
வசீகரமாகக் காணப்படும் சிவந்த மலர்களால், இச்செடிகள், சில இடங்களில் அழகுக்காக
வளர்க்கப்படுகின்றன. கருமஞ்சள் ஒரு சிறப்பான ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படும். காய்ச்சல்,
மூட்டு வலி, சருமக் கோளாறு, சுவாசக் கோளாறு, வாந்தி, வயிற்றுப் பிடிப்பு, இருமல் போன்ற பல
பொதுவான பிரச்சனைகளில் இருந்து விடுபட கருமஞ்சள் உதவும்
வல்லாரை
வல்லாரை (Centella asiatica) (Asiatic pennywort, Indian pennywort) ஒரு மருத்துவ
மூலிகைப்பயன்பாடுடைய கீரை  வகைத் தாவரமாகும். ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்கு
உரியதாகும். இது  நீர்  நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். இதன்  இலைப்பகுதியில்
உணவாகப்  பயன்படுவதால் இத்தாவரம், கீரையினங்களுள் அடங்கும். வல்லாரை கீரையில்
இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் அதிகமாக உள்ளன.
ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரியான அளவில் இந்த கீரை கொண்டுள்ளது. வல்லாரை
கீரையானது இரத்தத்தை சுத்திகரிக்கிறது, ஞாபகசக்தியை அதிகரிக்கிறது. வல்லாரை கீரை உடலில் ஏற்பட்ட
புண்களை ஆற்றும்
பச்ச மஞ்சள்
பச்சை மஞ்சளில் குர்குமின் உள்ளது, இது வயிற்றுப் பிரச்சினைகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது
மற்றும் காயங்களை குணப்படுத்துவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமின்று, தேசிய
சுகாதார நிறுவனங்களின் கூற்றுப்படி, நீங்கள் பச்சை மஞ்சளை உட்கொண்டால், வீக்கம் மற்றும் அல்சர்
போன்ற பிரச்சனைகள் இருக்காது. மஞ்சளில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும்
தன்மை அதிகம் இருப்பதால் சளி, இருமல் தீரும். தசை மற்றும் எலும்புகளில் ஏற்படும் வலியைக் குறைத்து
வளைவுத் தன்மையை அதிகரிக்கும். முதுகுத்தண்டு மற்றும் மூட்டுகளை உறுதிப்படுத்தும். புற்றுநோய்
செல்களை தடுக்கும். கீமோதெரப்பியால் உண்டாகும் பக்க விளைவுகளையும் குறைக்கும்.
கற்றாழை
கற்றாழை பூக்கும்  இனத்தனை சேர்ந்த ஒரு பேரினமாகும். தமிழில் இந்தத்
தாவரம் கற்றாழை, கத்தாளை, குமரி, கன்னி. என அழைக்கப்படுகிறது. இது
ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும்.
நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். மடல், வேர்
ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை. அழகு சாதனப் பொருட்கள்
தயாரிப்பிலும் சித்த மருத்துவத்தில் கருப்பை தொடர்பான பல்வேறு
நோய்களுக்கும் கற்றாழை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது. கற்றாழை
லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. கற்றாழை வறட்சியான
பகுதிகளில் வளர்ப்பதற்கு ஏற்ற ஒரு மருந்துச் செடி ஆகும். உள்நாட்டிலும்
வெளிநாடுகளிலும் பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள்
தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகின்றது. கற்றாழை
இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” எனப்படும் “கூழ்” சருமத்தின்
ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கப் பயன்படுகிறது..
வெற்றிலை
வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். இது  மலேசியாவில் தோன்றியதாகும்.  வயிற்றுக்  கோளாறு
நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. வெற்றிலைப் பயிருக்கு விதை
என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள்.வெற்றிலை
பயிராகும் நிலப்பகுதிக்கு வெற்றிலை கொடிக்கால் என்கிறார்கள். மிதமான தட்பவெப்பம், மண் வளம்,
தண்ணீர் வசதி உள்ள பகுதிகளில் வெற்றிலை பயிராகும். கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும்
வெற்றிலைகள் ஆண் வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை வெற்றிலைகள் பெண் வெற்றிலைகள் என்றும்
வகைப்படுத்தப்படுகின்றன. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர
வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.
துளசி
துளசி (Ocimum tenuiflorum) மூலிகை செடியாகும். ஏறத்தாழ 50 சென்டி மீட்டர் வரை வளரக் கூடிய
இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக
பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக்
காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து வணங்கும் வழக்கமும் உண்டு. துளசிச் சாறு சளித்
தொல்லை, ஆஸ்துமா ஆகியவைகளைக் குணப்படுத்தும். துளசி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
இருதயம் போன்ற உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி உதவுகிறது. துளசி இலைக்கு மன இறுக்கம்,
நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை
உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.

You might also like