You are on page 1of 3

மலர்கள்

அனைவருக்கும் வணக்கம்.. நான் ரீத்திக்கா ஷிவானி பெந்தோங்

தமிழ்ப்பள்ளியின் இரண்டாம் ஆண்டு மாணவி.இன்று நான் மலர்கள் எனும்

தலைப்பில் பேச வந்துள்ளேன்.

மலர்கள் என்பது செடி, மரம், கொடி ஆகிய தாவர வகையின் ஓர்

உறுப்பாகும். மலரை பூ என்றும் நறுவீ என்றும் அழைப்பார்கள். தாவரங்களின்

இனப்பெருக்க உறுப்பு மலர்கள் ஆகும். மலர்கள் ஒவ்வொரு தாவரத்திலும்

பல்வேறு வண்ணங்களில் காணப்படும். மலருக்கு ஏழுவகை பருவங்கள் உண்டு.

அவை அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, மற்றும் செம்மல் ஆகும்.

மலர்கள் பலவகையாகும். இவற்றில் ஒரு சில மலர்களில் தேன் இருக்கும்.

அந்தத் தேனைக் குடிக்க வண்டுகள் வரும். சில மலர்கள் நறுமணம் மிகுந்தவை.

சில மலர்கள் இரவிலும் சில மலர்கள் பகல் பொழுதிலும் மலரும். இரவில் மலரும்

மலர்கள் பெரும்பாலும் வெண்மை நிறம் உடையனவாகவும் மணம்

மிகுந்தவையாகவும் இருக்கும். ஏனெனில் இரவில் வண்டுகளுக்கு தன்

இருப்பிடத்தைக் காட்டவே அவை அவ்வாறு உள்ளன.

மலர்களின் மணம், அழகு ஆகியவற்றுக்காக பன்னெடுங்காலமாக

மனிதர்களால் விரும்பி வளர்க்கப்பட்டு வருகின்றன . மனிதர்கள் மலர்களை

தங்கள் சுற்றுச்சூழலை அழகுப்படுத்தவும், அதோடு மட்டுமல்லாமல் உணவு

ஆதாராமாகவும் பயன்படுத்துகின்றனர்.

மலர்கள் என்றாலே மங்கையர் சூடுவதும், மணம் தருவதும் மட்டுமல்ல.

அதில் பல்வேறு குணங்கள், தன்மைகள் பொதிந்துள்ளன என்று சங்க

இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. மலர்கள் மனித வாழ்க்கையில் எல்லா

நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. சுப நிகழ்வு முதல் துக்க நிகழ்வு வரை


முதல் இடம் பெறுவது மலர்கள். திருமணம், திருவிழா, மஞ்சள் நீராட்டு விழா,

வளைகாப்பு, கடவுள் வழிபாடு முதலியவற்றில் பூக்கள் பங்கு பெறுகின்றன.

. சித்த மருத்துவம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. சித்தர்கள்

முப்பத்து எட்டாயிரம் கோடி மலர்களைக் கண்டு பிடித்தனர். ஒவ்வொரு பூவின்

பின்னும் ஒரு மகான் அல்லது சரித்திரம் உள்ளது. அப்பூக்களால் சித்தர்களின்

சித்தியான மருத்துவப் பயன்களும் மிகுந்துள்ளது.. உடல் ஆரோக்கியத்திற்கு

வெண்தாமரைக் குடி நீர் மிகவும் ஏற்றது என சித்தர்கள் கூறுள்ளனர். அல்லிப்பூ

சர்பத் நீரிழிவை குணமாக்கும் எனவும் கூறப்படுகிறது. இது போன்று பல மலர்கள்

மருத்துவத்திலும் உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி ஏராளமான

மருத்துவ மகத்துவம் கொண்டவை பூக்களாகும்.

நம் முன்னோர்கள் குறிஞ்சிப்பூ பூப்பதைக் கொண்டு வயதையும் ஆவராம்பூ

பூப்பதை கொண்டு தைபிறந்த காலத்தையும் பூக்கள் மலர்வதைக் கொண்டு

நேரத்தையும் அறிந்துள்ளனர்.செங்கமலம், எனும் நீர் தாவரப்பூ மலர்ந்தால்

அதிகாலை, சூரிய தாமரை மலர்ந்தால் காலை, வேங்கை மலர்ந்தால் நண்பகல்,

மல்லிகை, முல்லை மலர்ந்தால் மாலை நேரம், என்பதை அறிந்து கொண்டனர்.

அதுமட்டுமா?

வேங்கைப்பூ, குறிஞ்சிப்பூ, அடங்கிய மலை சூழ்ந்த இடம் குறிஞ்சி எனவும்

குரோம்பூ, மராம்பூ எனும் பூக்கள் உள்ள இடம் பாலை எனவும் குல்லை, முல்லை

ஆகிய பூக்கள் உள்ள பகுதி முல்லை எனவும் பூக்களை கொண்டே நிலத்தை பல

வகையாகப் பிரித்துள்ளனர்.
மலர்களின் வகைகளும் அவற்றின் பயன்களும் எண்ணற்றவை.

மருந்தாகவும் விருந்தாகவும் ஆன்மிக ரீதியாகவும் அளவு கடந்த பயன் தருகின்ற

இவ்வாறான மலர்ச் செடிகளை நாமும் வீட்டைச் சுற்றி வளர்ப்போம்; மலர்ச்

செடிகளைஅழியாமல் காப்போம்.

நன்றி.

You might also like