You are on page 1of 3

பாடம் – 1.

இறைவாழ்த்து, மொழிவாழ்த்து

அறிமுகம்
மாணவ நண்பரே!
நாம் தமிழ்மொழியில் வாழ்த்து என்னும் சொல்லுக்கு "மகிழ்ச்சி
தெரிவித்துப் பாராட்டு", "போற்று", தன்மைகளைக்கூறு' எனப் பல
பொருள்கள் உண்டு. இப்பாடப் பகுதியில் வாழ்த்து என்பது போற்று
என்ற பொருளில் இடம் பெறுகிறது.
தமிழ் இலக்கியத்தில் வாழ்த்துக்கள் ஆறு வகைப்படும். அவை,
1. இறை அல்லது கடவுள் வாழ்த்து
2. ஆ வாழ்த்து
3. அந்தண வாழ்த்து
4. அரச வாழ்த்து
5. நாட்டு வாழ்த்து
6. மொழி வாழ்த்து
என்பனவாகும். இவற்றை ஆறு வகையான வாழ்த்துக்கள் என்ற
பொருளில் "அறுமுறை வாழ்த்து" என்பர். இவற்றில் இறை வாழ்த்து
என்பது இறைவனைப் போற்றிப் பாடுவது. ஆ வாழ்த்து என்பது
பசுவைப் போற்றி பாடுவது. அந்தண வாழ்த்து என்பது அறநெறி
தவறாதவர்களைப் போற்றிப் பாடுவது.
அரச வாழ்த்து என்பது மன்னனைப் போற்றிப் பாடுவது. நாட்டு வாழ்த்து
என்பது நாட்டைப் போற்றிப் பாடுவது. மொழி வாழ்த்து என்பது
மொழியை வாழ்த்திப் பாடுவது.
ஆறுவகை வாழ்த்துக்களில் இறை வாழ்த்துப் படலாகத்
தாயுமானவரின் பாடலும் மொழி வாழ்த்துப் படலாகச் சுப்ரமணிய
பாரதியாரின் பாடலும் இப்பாடப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
கற்றல் செயல்பாடுகள்
பாடல்களைப் படிப்பதற்கும் உரைநடையைப் படிப்பதற்கும்
வேறுபாடு உண்டு. உரைநடையை அப்படியே படித்து விடலாம்.
ஆனால் பாடல்களைப் படிக்கும்போது ஒலிநயம் கெடாமல் படிக்க
வேண்டும். அவ்வகையில் நமக்குப் பாடமாக வந்துள்ள இறைவாழ்த்துப்
பாடல் மூன்று வகையாக இங்கே தரப்படுகிறது.
1. இசையுடன் பாடுதல்
2. சந்தத்துடன் பாடுதல்
3. படம் பிரித்துப் படித்தல்
என்பவை அந்த மூன்று வகை ஆகும்.
நூல் அறிமுகம்
இந்த இறைவாழ்த்துப் பாடல், தாயுமானவ சுவாமிகளின் திருப்பாடல்
திரட்டு என்னும் நூலில் பராபரக்கண்ணி என்னும் பகுதியில் உள்ளது.
இரண்டிரண்டு அடிகளாக வரும் பாடலைக் கன்னி என்று கூறுவர்.
ஒவ்வொரு கண்ணியும் பராபரமே என்று முடிவாதல் இது,
பராபரக்கண்ணி என்று கூறப்படுகிறது. இந்நூலில் 392 பராபரக்
கண்ணிகள் உள்ளன. அவற்றுள் இரண்டு கண்ணிகள் இங்கு, பாடப்
பகுதியாக வைக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் அறிமுகம்
இந்த, இறைவாழ்த்துப் பாடலின் ஆசிரியர் தாயுமானவ சுவாமிகள்.
இவர், 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இன்றைய நாகப்பட்டினம்
மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு என்ற ஊரில் பிறந்தவர்.
திருமறைக்காட்டை வேதாரண்யம் என்றும் கூறுவர். பெற்றோர்
கேடிலியப்பர், கஜவல்லி அம்மையார். இவர், அக்காலத்தில் ஆட்சி
புரிந்த, திருச்சி மன்னர் விஜயரகுநாத சொக்கலிங்க நாயக்கரின்
அரசாங்கக் கணக்கராகச் சில காலம் பணிபுரிந்திருக்கிறார். திருமணம்
செய்து கொண்ட போதிலும் துறவு மனப்பான்மையே இவரிடம்
மிகுந்திருந்தது. துறவு என்பது பற்று அற்ற தன்மையைக் குறிக்கும்.
குடுப்பப் பற்றை நீக்கி வாழ்வதே துறவு வாழ்க்கை ஆகும்.
தாயுமானவர் இளமையிலேயே மௌன குரு என்ற துறவியைக்
குருவாகக் கொண்டு துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். இவர், தமிழ்
நாட்டில் உள்ள பல கோயில்களுக்கும் சென்று திருப்பாடல்கள் பல
பாடியுள்ளார்.

சந்தத்துடன் படித்தல்

செய்யுளைச் சந்தி பிரித்துப் படிக்கக் கேட்டால் (பொருள் புரியுமாறு


செய்யுளைப் பிரித்தல்)

You might also like