You are on page 1of 4

இனக்குழு சார்ந்த தொல்பொருள் எச்சங்கள் :

தானிய சேகரிப்பு குதிர் :


மனிதன் தனக்கு தேவையான பொருட்களை சேமித்து வைக்க எப்பொழுது நினைத்தானோ
அப்பொழுதே சேமிப்பு கிடங்கும் உருவாகின புதிய கற்கால மக்கள் தங்களின் விவசாய நிலங்களில்
விவசாயம் செய்த பொருட்களை குறிப்பிட்ட காலங்களுக்கு சேமித்து வைத்தார்கள் இந்த சேமிப்பு
கிடங்கு ஊர்களின் மையப்பகுதியில் மேடான இடத்தில் தான் பெரும்பாலும் அமைக்கப்பட்டு இருந்தன
ஏனென்றால் மழைக்காலங்களில் வரும் தண்ணீர்கள் அங்கு தேங்கி நிற்காத வகையில் அந்த இடங்கள்
உயரமான பகுதியை நோக்கி இருந்தது புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய தானியக்கிடவுகள் தானிய
வகைகளைகளின் அமைப்புகளை முந்தைய அகழாய்வுகளின் மூலம் நமக்கு அறிமுகப்படுத்தி
உள்ளார்கள் சங்கன கல்லு, தெக்கலக்கோட்டை, செங்கம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வலசை,
மயிலாடும்பாறை,தொகரபள்ளி கப்பல்வாடி, மோதூர் மற்றும் பிற பகுதிகளில் நமக்கு புதிய கற்கால
தானியக்கிடங்கு போன்ற அமைப்பு உள்ள இடங்கள் கிடைத்துள்ளன.

பச்சை மலையில் காணப்படும் தானியக் கிடங்குகள் :


பச்சை மலை மலையாளி மக்கள் இன்றளவும் தானிய குதிர்களை பயன்படுத்திக் கொண்டுதான்
வருகின்றார்கள் இவர்கள் புதிய கற்காலம் இரும்பு கற்காலத்தை சேர்ந்தவர்களாகவும் திகழ்கின்றார்கள்
ஏனென்றால் இவர்கள் இந்தளவும் புதிய தற்கால மக்கள் பயன்படுத்திய தானியக் குதிர்களை அவர்களின்
வீட்டு முன் பகுதியில் வைத்து பயன்படுத்திக்கொண்டு வருகிறார் அது மட்டுமல்லாமல் புதிய
கற்காலத்தைச் சேர்ந்த தற்கருவிகளையும் இரும்பு காலப் பொருட்களையும் அவர்கள் ஒரே முறையான
வேலைகளுக்கு பயன்படுத்துகின்றார்கள் இதன் காரணமாக இந்த மக்கள் புதிய தற்காலத்தையும் இரும்பு
காலத்தையும் சேர்ந்தவர்களாக இருந்திருக்க கூடும் என கள ஆய்வுகளின் மூலம் உணர்த்தப்படுகின்றது
இங்கு அமைந்திருக்கும் தானிய குதிர்கள் ஊரின் மையப் பகுதியில் மொத்தமாக அமைந்துள்ளது ஒரே
குடியிருப்பு பகுதியில் பத்து வீடுகள் அமைந்திருந்தால் அங்கு தானியக்கதிர்கள் ஐந்தாக இருக்கும் இதில்
ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அண்ணன் தம்பியாக பிரிந்தாலும் ஒரே குதிரைகளை தான்
பயன்படுத்தினார்கள். அந்த கதிர்கள் இரண்டு அறைகளாகவும் மூன்று அறைகளாகவும் பிரிக்கப்பட்டு
இருக்கும் இதன் காரணமாக தனக்கு தேவைப்பட்ட இடங்களை அவர்கள் தானியங்களை கொட்டி
பூர்த்தி செய்யலாம் மற்றவர்களும் மிதி உள்ள பகுதிகளை பூர்தி‌செய்யலாம்.

தானியக் குதிர் அமைப்பு முறை :


பச்சைமலை பகுதியில் எல்லா குடியிருப்பு பகுதி ஊர்களிலும் தானியக் குதிர்கள் அமைந்துள்ளது
இவைகள் பெரும்பாலும் வட்ட வடிவமாக அமைந்துள்ளது ஊர்களின் மையப் பகுதியில்
காணப்படுகின்றது இந்த தானியக்கடங்குகள் உள்பகுதியில் இரண்டு அல்லது மூன்று அறைகள் கொண்டு
காணப்படுகின்றது இந்த அமைப்பு முறையை எதற்காக பயன்படுத்தினார்கள் என்றால் அவர்கள்
விவசாய நிலங்களில் நெல் பயிரிடு செய்வார்கள் நெல் வகைகள் பல உண்டு அந்த நெல் வகைகளில்
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அறை பயன்படுத்தினார்கள் இரண்டு விதமான நெல்களும் ஒரு விதத்தில்
சேகரித்து வைத்தால் அவைகள் மீண்டும் பிரிப்பதற்கு கடினமாகிவிடும் ஆகையால் இரண்டுக்கும்
தனித்தனி அறைகள் அங்கு காணப்பட்டது அந்த தனித்தனி அறையில் தான் அவர்கள் நெருக்கலை
கொட்டினார்கள் தானியக் குதிர்களை ஒரு பகுதியில் மொத்தம் 25 மூட்டை அளவாவது நெற்பயிர்களை
கொட்ட முடியும் மிகப்பெரிய அளவானது 50 மூட்டை வரை கொட்டும் வகையில் எங்கு குதிர்கள்
அமைந்துள்ளது புதிர்களின் நீளமானது 1.50 சென்டிமீட்டர் ஆகவும் அகலமானது இரண்டு மீட்டர்
ஆகவும் அமைந்துள்ளது. இந்த குதிரை அமைப்பை அமைப்பதற்கு அவர்கள் முதலில் மேடான
பகுதியை தேர்வு செய்து தேர்வு செய்யப்பட்ட இடங்களில் கற்காலை வரிசையாக அடுக்கி அதன் மீது
குச்சிகளை வைத்து சமமான இடமாக உருவாக்குவார்கள். அதன் பிறகு மழையில் இயற்கையாக
விளைந்திருக்கும் நொச்சி என்ற ஒரு மூங்கில் வகையைச் சேர்ந்த குச்சியை வெட்டி அதனை தண்ணீரில்
15 நாட்கள் ஊற வைத்து அதன் பிறகு வீட்டிற்கு கொண்டு வந்து. நெட்டுக்குச்சிகளாக 20 மீட்டர்
பகுதியில் ஒரு குச்சி நேராக நிற்க வைப்பார்கள் அந்த நேராக இருக்கும் குச்சிகள் வட்ட வடிவாக வைத்த
பிறகு அடுத்த குச்சிகளை எடுத்து அந்த குச்சிகளின் பக்கவாட்டில் வைத்து வட்ட வடிவமாக அதனை
வளைத்து பனைமரைத்தின் மட்டையில் இருந்து வரும் நாரினை கொண்டு கட்டி வட்ட வடிவில்
அமைத்துக் கொள்வார்கள் இதன்பிறகு நடுப்பகுதியில் குச்சியை நீளமாக வைத்து அரைகள் போன்று
உருவாக்குவார்கள் இந்த வேலை முடிந்தவுடன் இவர்கள் அங்கு மூலதனமாக கிடைக்கும் செம்மண்
கலந்த களிமண்ணை எடுத்து நன்றாக தண்ணீரில் ஊற வைத்து மிதித்து அதை கலவை போன்ற
வடிவமைப்புக்கு கொண்டு வருவார்கள் அதன் பிறகு நொச்சிக்குச்சி என் மீது பூசி விடுவார்கள் அதற்கு
மேல் பகுதியில் குச்சிகளை முக்கோணமாக வைப்பார்கள் அடுக்கடுக்காக குச்சிகளை வைத்த பிறகு
அதன் மேற்பகுதியில் ( கவுட்டாம் புள்ளு) என்ற ஒரு புல்வகை இயற்கையாக அங்கு விளைகின்றது
அதை அறுத்து நன்றாக காய வைத்பின்பு அதை சிறுசிறு கட்டுகளாக கட்டி முக்கோணமாக
அடுக்கப்பட்டுள்ள கட்டைகளின் மீது அடுக்குவார்கள் ஏனென்றால் மழைக்காலங்களில் அதன் நோய்கள்
தண்ணீர் உள்ளே சென்று பயிர்களை சேதப்படுத்தாத வகையில் இது அமைகின்றது அது மட்டுமல்லாமல்
அந்த புல் வகைகளை அந்த கட்டைகளையும் குதிர்களின் வலியை ஒரு அடி அல்லது 2 அடி நீளத்திற்கு
நீட்டு வைத்திருப்பார்கள் மழை பொழிந்தாலும் அந்த தண்ணீர் குதிருக்குள் செல்லாமல் வெளியில்
தூரமாக விழுந்து செல்லும் வகையில் அமையும் குதிர்களை உள்பகுதியில் நன்றாக பூசி விட்டு அதன்
பிறகு வெளியில் வந்து பூசுவார்கள் தரைதலமும் நன்றாக பூசப்பட்டு இருக்கும் தரைத்தளத்தில் மாட்டுச்
சாணத்தைக் கொண்டு நன்றாக தரை தரத்தில் தெளித்து அதனை வளவளப்பாகவும் பூச்சிகள் வராத
வகையிலும் அமைப்பார்கள். இந்த குதிர்களை மக்கள் எந்த அளவும் பயன்படுத்துகின்றார்கள் .

உலக்கை :
புதிய கற்கால மக்கள் பலவிதமான வேளாண் பெயர்களை பயிர் செய்தார்கள் மற்றும் அவனுக்கு
தேவையான உணவுப் பொருட்களை அவரகளே தயார் செய்தார்கள் நிழல்களை உற்பத்தி செய்து
அவர்கள் அப்படியே அதை சாப்பிட்டுவிட முடியாது அதை உலக்கையால் இடித்து அதன் பிறகு சுத்தம்
செய்தால் பிறகுதான் உணவுப் பொருட்களாக உட்கொள்ள முடியும் நெல் போன்ற வகைகளில் அதன்
மேல் புறத்தில் உமிழ் என்ற ஒருவகை தோல் நீக்கி அதன் பிறகு தான் அதை உணவுப் பொருளாக
பயன்படுத்த முடியும் இந்த உலக்கையை மரத்தால் செய்யப்பட்டதை இன்றளவும் பயன்படுத்தி
வருகின்றார்கள் இந்த வருமானத்தை கருங்காலி மரணத்தை சார்ந்ததாக இருக்கும் அதை வெட்டுவதற்கு
மிகவும் கடினமான முறையில் இருக்கும் ஆகையால் இந்த உணவு பொருட்களை கொட்டுவதற்கு ஒரு
கட்டையை எடுத்து அதை வட்ட வடிவமாக சேதிக்கு கைக்கு இடம் பக்கமாக எடுத்துக் கொள்வார்கள்
அது மட்டுமல்லாமல் உழைக்கையில் நடுப்பகுதியில் கோட்டையை விட்டு அதன் பிறகு அதன் மேல்
போட்டு அல்லது தேவைப்படுகின்ற தானியங்களை போட்டு இடித்து அதன் பிறகு உணவு பொருட்கள்
இதன் நீளம் 92 செ.மி கீழ்பகுதி அகலம் 58 செ.மி நடுப்பகுதி 43 செ.மி மேல்பகுதி 86 செ.மி குழியின்
ஆழம் 22 செ.மி குழியின் அகலம் 16 செ.மி அமைகின்றது இந்த வாய்ப்பகுதி பெரிதாகவும் கில் பகுதி
குரியதாகவும் அமைகின்றது.

ஆட்டு உறல்கள் :
பச்சைமலை மலையாண்டி மக்கள்களின் வீட்டு ஓரப்பகுதிகளின் ஆற்றுகளும்
அடைக்கப்பட்டிருந்தார்கள் இந்த ஆட்டுறரல் கல்லால் அமைக்கப்பட்டிருந்தது இந்த கற்கள் குன்றுகளின்
மேலிருந்து உருண்டு வந்தடைந்த கற்களாக இருந்தது அந்த கற்களில் நடுவர் சிறிது அளவு துளையிட்டு
அதை ஆட்டுவதாக பயன்படுத்தினார்கள் இந்த ஆட்டுறல்களில் மாடுகளுக்கு தேவையான தீவனங்களை
அரைத்து வைத்த கொடுக்கப்பட்டது மக்களின் பயன்பாட்டுக்கும் நாட்டு உரல்கள் மிகவும்
பயன்பட்டதாக இருந்தது.
தேய்க்கும் கட்டை :
அரைக்கும் கட்டை அல்லது தேய்க்கும் கட்ட என்பது பச்சைமலை மலையாளி மக்களுக்கு அனைத்து
விதமான கோவில்களில் பயன்படுத்தப்பட்டன ஏனென்றால் அங்கு திருவிழா காலங்களில்
அரைப்பதற்கும் மற்றும் தேய்த்து போடுவதற்கும் அவர்கள் பயன்படுத்தப்பட்டன இவை கருங்காளி
மரங்களால் ஆனதாக அமைகின்றது. இவை வட்ட பெரும்பாலும் வட்ட வடிவாக தான் அமைந்திருந்தது
இதன் அகலம் 64 செ.மி நிளம் 7 செ.மி ஆக அமைந்துள்ளது.

பிள்ளையார் கோவிலும் புதிய கற்கால கருவிகளும் :


பச்சை மலைக்கு மேல் அமைந்துள்ள எல்லா ஊர்களிலும் வ
பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது அவைகள் அனைத்தும் ஊர்களின் நுழைவு வாய்ப்பு பகுதியில்
அமைந்துள்ளது விநாயகரை வணங்கிவிட்டு தான் ஊருக்கு செல்லும் நிலை ஏற்படுகின்றது பிள்ளையார்
கோவில் அனைத்தும் அரச மரத்தின் அடியில் தான் பெரும்பாலும் காணப்படுகின்றன ஒரு சில ஊர்களில்
தவிர மற்ற அனைத்து ஊர்களிலும் அரச மரங்களின் அடிவாரத்தில் பிள்ளையார் கோயில் உள்ளது புதிய
கற்காலத்தில் பயன்படுத்திய கற்கருவிகள் பிள்ளையார் கோவிலில் அதிகமாக கிடைக்கின்றது இந்த
கருவிகள் அளவில் சிறியதாகவும் பெரியதாகவும் காணப்படுகின்றன‌.

கற்கருவிகளை பற்றிய மக்கள் செய்திகள் :


புதிய கற்காலக் கருவிகள் இங்கு அமைந்திருக்கும் அனைத்து பிள்ளையார் கோவில்களிலும்
காணப்படுகின்றன இந்த பிள்ளையார் கோவிலில் காணப்படும் புதிய கற்கால கற்கருவிகளை மக்கள்
தங்களின் விவசாய நிலங்களில் இருந்தும் ஆற்று நீரோடைகளின் ஓரங்களில் இருந்தும் இந்த புதிய
கற்கால கற்கருவிகளை எடுத்து இங்கு கொண்டு வந்து வைத்தோம் என்று கூறினார்கள் ஏனென்றால்
வினா எழுப்பும்போது மக்கள் இந்த கற்கருவிகளை" பிள்ளையார் "கல் என்று எடுத்து வந்து இந்த
பிள்ளையார் கோவிலில் வைக்கப்படுவார்கள் இந்த கற்கருவிகள் அனைத்தும் கீழ்பகுதியில்
பெரியதாகவும் மேல் பகுதியில் கூர்மையாகவும் நடுப்பகுதியில் மேடாக காணப்படுவதால் அதை
பிள்ளையார் காலாக இருக்கலாம் என்று அவர்கள் கற்கருவிகளை எடுத்து வந்து கோவிலில்
வைக்கின்றார்கள். ஒரு சில ஊர்களில் இந்த புதிய கற்கால கருவிகளை அக்காகல் , தங்கச்சி கல், என்றும்
பெயர்கள் மாற்ற பட்டும் பேசப்படுகின்றன மற்றும் ஒரு சில ஊர்களில் பிள்ளையார் சிலைகள் ஏதும்
கிடையாது அவர்கள் முழுமையாக இந்த புதிய கற்கால கருவியைத்தான் விநாயகராக வழிபட்டுக்
கொண்டும் வருகின்றார்கள் இந்த வகை அமைப்புகளில் இவைகள் காணப்படுவதால் இந்த
கற்கருவிகளை இந்த அளவும் மக்கள் பாதுகாத்தும் பயன்படுத்தியும் வருகின்றார்கள்.

புதிய கற்கால கற்கருவிகள் மற்றும் இரும்பு கற்கால கற்கருவிகளின் வேறுபாடு :


புதிய கற்கால கற்கருவிகள் மக்கள் நிலங்களை விழுவதற்கும் மற்றும் மரங்களை வெட்டுவதற்கும்
வேட்டையாடுவதற்கும் மற்றும் ஒரு சில நேரங்களில் மனிதர்களை தாக்குவதற்கும் பயன்படுத்தினார்கள்
என்று அகழாய்வுகளின் மூலமும் கலாய்கலை மூலமும் நமக்கு தெரிய வருகின்றது இங்கு அனைத்து
பிள்ளையார் கோவில்களில் காணப்படும் கற்கருவிகள் அனைத்தும் ஒரே வகையைச் சார்ந்தது அல்ல
ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதமாக காணப்படுகின்றது அது மட்டுமல்லாமல் அளவில்
சிறியதாகவும் மிகவும் பெரியதாகவும் பல மாற்றங்களுடன் இவைகள் காணப்படுகின்றன இவர்கள்
தங்களின் காலத்துக்கு ஏற்ப சில மாறுதல்களை ஏற்படுத்தி உள்ளார்கள் என்பதை இக்கற்கருவிகளை
கொண்டு நாம் அறியும் வகையில் அமைகின்றது இரும்புக்காலம் முழுமையாக வந்தடைந்த பிறகு புதிய
கற்கால கருவிகள் அழிந்து போகவில்லை என உணர்த்தும் வகையில் அக்கர் கருவிகள் அளவில் சிறிதாக
மாறி உள்ளது மரங்களை வெட்ட பயன்பட்ட கற்கருவிகள் புதிய கற்காலத்தைச் சேர்ந்தவையாகவும்
இரும்பு கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் கிளைகளை வெட்டும் வகையிலும் மிகவும் சிறியதாக
அமைத்துள்ளார்கள் இரும்பு கால ஆயுதங்கள் மக்கள் கண்டறிந்த உடன் அந்த ஆயுதங்களை எல்லா
தேவைக்கும் பயன்படுத்தி இருப்பார்கள் என்று நாம் கூறி விட முடியாது ஏனென்றால் ஒரு ஆயுதம்
புதிதாக கண்டறிந்தால் அந்த ஆயுதங்களை மக்கள் ஒரே பயன்பாட்டுக்கு மட்டும்தான் செய்திருப்பார்கள்
காலப்போக்கில் அதன் பயன்பாடுகள் உணர்ந்து அதை தங்களது தேவைக்கு ஏற்ற அளவு முறைகளை
மாற்றுவார்கள் அதே போல தான் புதிய கற்கால கருவிகள் நமக்கு காலத்துக்கு ஏற்ப சில மாறுதல்கள்
அடைந்துள்ளது.

You might also like