You are on page 1of 86

SRI RAMAKRISHNA ENGINEERING COLLEGE

[Educational Service: SNR Sons Charitable Trust]


[Autonomous Institution, Accredited by NAAC with ‘A’ Grade]
[Approved by AICTE and Permanently Affiliated to Anna University, Chennai]
[ISO 9001:2015 Certified and all eligible programmes Accredited by NBA]
Vattamalaipalayam, N.G.G.O. Colony Post, Coimbatore – 641 022.

20HS212-பண்டைத் தமிழரும் தொழில்நுட்பமும்

Course Instructor:
Dr.M.Ezhilarasi,AP/EEE No. of
Credits: 1
Nov 25, 2023 DEPT OF EEE, SREC 1
பண்டைத் தமிழரும் தொழில்நுட்பமும்
• மனித இனம் தோன்றிய ஆதி காலம் முதல் காடு,
மேடுகளிலும் நீர் நிலைகளிலும் உணவு தேடி
அலைந்தனர். அதன் பயனாய் காய்களையும்,
கனிகளையும், கிழங்குகளையும், மீன்
உள்ளிட்டவற்றையும் உணவாகப் பெற்று உண்டு,
உயிர் வாழ்ந்தனர். காலப்போக்கில்
பாதுகாப்புக்காகக் குழுமம் குழுமமாக வாழ
முற்பட்டனர். உணவின் தேவையை உணர்ந்து
வேளாண்மையில் ஈடுபடத்தொடங்கினர்.

2
Nov 25, 2023 DEPT OF EEE, SREC
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பட்டறிவின் மூலம் வேளாண்மையை
முறைப்படுத்திப் பல பயனையும் தெரிந்துவைத்திருந்தமையைச் சங்க
இலக்கியப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.
ஐந்து வகை நிலப்பிரிவுகள் பற்றித் தொல்காப்பியம்
குறிப்பிடுகின்றது. முதற்பொருள், கருப்பொருள்,
உரிப்பொருள் வகுத்து வாழ்வாங்கு வாழ்ந்த நம்
மக்களின் அறிவுச் செழுமையைத் தொல்காப்பியம் பல
இடங்களில் பதிவுசெய்துள்ளது.

Nov 25, 2023 3 DEPT OF EEE, SREC


• குறிஞ்சி-மலை மலைசார்ந்த பகுதி;
• முல்லை - மேய்ச்சல் காடுகள் நிறைந்த பகுதி;
• மருதம்- வேளாண் நிலங்கள்;
• நெய்தல்- கடல் சார்ந்த பகுதி;
• பாலை- வறண்ட நிலப்பகுதி
• தமிழகத்தில் பாலை என்ற தனிநிலப் பகுதி இல்லை.
‘முல்லையும் குறிஞ்சியும் திரிந்த பகுதியே’ பாலை நிலமாகும்.
எனவே தமிழர்கள் நிலத்தை ’நானிலம்’ (நான்கு + நிலம்)
என்று அழைக்கும் மரபும் உண்டு.
கொலைச்சிந்து
• அந்த அந்த நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்கள் கள, நிலச்
சூழலுக்கு ஏற்பத் தங்கள் அறிவாலும் அனுபவத்தாலும்
எப்படி மேம்பட்டார்கள் என்பதனைச் சங்க காலப் பாடல்கள்
உறுதிப்படுத்துகின்றன. விளைநிலங்களின் தன்மை
நிலைமைக்கேற்பப் பெயரிட்டு அவற்றை வன்புலம்,
மென்புலம், புன்புலம், களர்நிலம் எனப் பெயரிட்டுப்
பாகுபடுத்தியுள்ளனர்
• “வன்புலக் காட்டுநாட் டதுவே” (நற், - 59)
“வன்புல நாடன் வயமான் பிட்டன்“ (புறம், 172-8) என்னும்
பாடலடிகளால் அறியலாம்.

மருத நிலத்தில் நீர்வளமும் நிலவளமும் இயல்பாகக்


காணப்படுவதால் பயிர் விளைச்சலுக்கு ஏற்ப சிறப்பாக
உள்ளதால் இவற்றை மென்புலம் என்றழைத்தனர்.

“மென்புலவைப்பின் நன்நாட்டுப் பொருந“ (புறம், 42-15)


என்பது புறநானூறு.

நீர்ப்பாசன வசதிகள் இன்றிச் செயற்கை நீர்ப்பாசன


வசதிகளைப் பெறும் காரணத்தால் இந்நிலத்தைப் புன்புலம்
என்றழைத்தனர்.
• ”புன்புலம் வித்தும் வன்கை வினைஞர்…”(பதி, 58-15)

களர்-உவர் நிலங்களில் பயிர்கள் சிறப்பாக வளராதென


அறிந்து உப்பளம் அமைத்து உப்பை உருவாக்கினார்கள்.
இப்படியாக நிலவளத்திற்கேற்ப உரிய பயிர்களை
வளர்த்தார்கள்.
ஏர்க்கலப்பை
விவசாயக் கருவிகள்
தாள்கத்தி
இயற்கைச்சூழல் பருவ கால மாற்றங்களுக்கு ஏற்ப, நிலத்தை உழுது பண்படுத்தியும்,
அதற்கேற்ப விதைகளை, தானியங்களைத் தேர்வு செய்தும் இடத்திற்கேற்ப
நீர்ப்பாசனம் செய்தும், பயிரை விளைவித்துச் சமூகத்திற்கு உணவளித்தார்கள்.

பல காலத்தின் பட்டறிவினால் பெற்ற நுண்ணறிவும் தொழில்நுட்பமும் தமிழரின்


வேளாண் செய்கை முறையில் உள்ள தெளிவான நுட்பத்தின் வழியாக அறிந்து
கொள்ளலாம்.
மலைப்பகுதிகளில் பெய்யும் மழை நீரை மறித்து மேட்டில்
அணைகட்டி, குளங்கள் அமைத்தும், எரிகள், குட்டைகள்,
அமைத்தும் வாய்க்கால் வழிப்பாசனம் செய்து
வருகின்றார்கள்.

கிணற்றில் இருந்தும் துலா வழியாக நெம்புகோல் தொழில்


நுட்பத்தைப் பாவித்து நீர்வழிப் பாசனமாகச் செய்து
வருவதன் மூலம் தமிழர்களது அறிவாற்றல்
வெளிப்படுகின்றது. தமிழர்களின் அறிவாற்றலை இக்
கட்டுரைக்குள் அடக்கிவிடமுடியாது.

11/25/23 CEE 10
கல்லணை வடிவம்
ஐராவரேசுவரர் ஆலயம்
உலகப் பாரம்பரிய சின்னம்

1987-ல், பெருவுடையார் கோயில், யுனெஸ்கோ அமைப்பால்


உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
பின்னர், 2004-ல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலும்
மற்றும் ஐராவதேஸ்வரர் கோயிலும் உலகப்பாரம்பரியச்
சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.
தமிழ் நாடு தொல்லியல் துறை இக்கோயிலின் அமைப்புக்களை
ஆராய்ந்து இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப்
படியெடுத்து சோழ மன்னர்களைப் பற்றிய பல தகவல்களை
பதிப்பித்துள்ளது.

11/25/23 CEE 13
கோயிலின் சிறப்புகள்

• சோழ மன்னர்களில் 2ம் ராஜராஜனால் கட்டப்பட்ட அழகிய


கலைக்கூடம் இக்கோயில். இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான
கல்வெட்டுக்கள் உள்ளன.

• வல்லுனர்களால், "சிற்பிகளின் கனவு" என்று கருதப்படும் இந்த


தலம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய
சிற்பங்களால் நிறைந்துள்ளது. வழக்கமான சைவத்தலங்களின்
அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டுள்ளது. இறைவிக்கென்று
தனியே ஒரு கோயில் வலதுபுறம் அமைந்துள்ளது.

11/25/23 CEE 14
கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக்
கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன்
அங்கிருந்து தனது தலைநகரைத் தாராசுரத்திற்கு மாற்றி, அங்கு
கட்டிய கோயிலே ஐராவதேசுவரர் கோயிலாகும். முதலில்
இக்கோயிலின் இறைவனுக்கு ராஜராஜேஸ்வரமுடையார்
என்ற பெயர் வழங்கப்பட்டுப் பின்னர் ஐராவதேஸ்வரர் என
பெயர் கொண்டது.
• தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான்
அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்தக் கோயிலில்
மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது
கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில்
இராஜராஜசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும்
பள்ளிப்படை அமையப்பெற்றது என்ற செய்தி காணப்பட்டது.

11/25/23 CEE 15
A beautiful musical steps in Airavatesvara Temple

11/25/23 CEE 16
கல்லணை
• முதலாம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் கட்டப்பட்ட
கல்லணை தமிழர்களின் நீர்ப்பாசன அறிவுக்குச் சான்றாக
இன்றும் உள்ளதனைக் காண்கின்றோம். இந்த அணைமூலம்
பல இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. ஓடிவரும்
ஆற்றின் குறுக்கே அறிவியல் வளர்ந்திராத காலத்தில் எப்படி
இப்படியொரு பாரிய அணையைக் கரிகால் சோழன்
கட்டினான் என ஆங்கிலேயர் பார்த்து வியந்தனர்.
• ஓடும் ஆற்றில் குறுக்கே ஒரு பெருங்கல்லைப் போட்டால்
அது புதையுண்டு போகும். அதற்கும் மேலே மேலே பெரிய
பாறாங்கல்லை வரிசையாகப் போடப் போட அது
பெருங்கல்லணையாக உருவாகியது என்பதனை ஆய்வு
செய்து கண்டறிந்த ஆங்கிலப் பொறியியலாளர் ஆதர்
காட்டன் அவர்கள் அந்த பொறிமுறையை வியந்து உலகறியச்
செய்தார்.
• இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னதாக
கருங்கற்களையும் களிமண்ணையும் கொண்டு கட்டப்பெற்ற
இக் கல்லணை பல இலட்சம் ஏக்கர் விளை நிலங்களுக்கு
இன்றுவரை சிறப்பாக நீர்ப்பாசனத்திற்கு உதவிவருகின்றது.
இவ்வணை பெரும் கற்களால் மட்டும் கட்டப்பெற்றதனால்
அதன் காரணப் பெயராக இன்றும் இது “கல்லணை” என்றே
அழைக்கப்படுகின்றது. இக் கல்லணை தஞ்சாவூர்
மாவட்டத்திலுள்ள பூதலூர் வட்டத்தில் உள்ள தோகூர் -
கோவிலடி கிராமத்தில் அமைந்துள்ளது.
• கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ்ச் சோழப்
பேரரசர் முதலாம் இராசராச சோழன் தஞ்சாவூர் பெரிய
கோவிலைக் கட்டுவித்தார். 1003-1004 ஆம் ஆண்டுகளில்
தொடங்கபெற்று 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
இதற்காகப் பாவிக்கப்பட்ட கிறனைட் கற்களை எங்கிருந்து
கொண்டுவந்தார்கள்? ஐம்பது கிலோமீட்டர் சுற்றுவட்டரத்தில்
எந்தவித மலைகளும் இல்லாத புவியியல் சூழலில் இத்தனை
ஆயிரம் ஆயிரம் பெரும் கிறனைட் கற்களை, இயந்திர வாகன
வசதிகள் இல்லாத காலத்தில் எப்படிக் கொண்டுவந்து
சேர்த்திருப்பார்கள்? எவ்வளவு காலம், வேலையாட்கள்,
திட்டமிடல், நேர்த்தியான கல்வெட்டுகள், அதற்கான
கருவிகள், பொறிமுறைகள், இவையெல்லாம் எப்படிக்
கைகூடியது.
• இக்கோவிலின் கட்டுமானத்தில் எதுவித மரங்களோ சுடுசெங்கற்களோ,
பூராங்கற்களோ எதுவுமே இல்லாது முழு உயர்தர கிறனைட்
கற்களாலேயே அமைக்கப்பட்டுள்ளது வியப்பளிக்கின்றது. இக்
கோயிலின் உயரம் 216 அடியாகும். சிவலிங்கத்தின் உயரம் 12 ; அடி.
பீடத்தின் உயரம் 18 அடி; சிவனுக்கும் நந்திக்கும் இடைப்பட்ட தூரம் 247
அடி ஆகும். இவை அனைத்தும் உயிர் எழுத்து 12, மெய் எழுத்து 18, உயிர்
மெய்யெழுத்து 216, தமிழ் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 என்ற
கணக்கில் அமைந்து இருப்பது , இராஜராஜ சோழனின் தமிழ்ப்பற்றை
மேலும் எடுத்தியம்புகிறது.
• இந்த மாபெரும் கோயில் ஏழு ஆண்டுகளில்
கட்டிமுடிக்கப்பெற்றுள்ளது. இக்கோயிலின் தலைமைச் சிற்பி,
குஞ்சர மல்லன் இராஜராஜப் பெருந்தச்சன் எனக் கோவிலின்
கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளான்.
தொழில் நுட்பம்
• இதன் பொருள் என்ன தெரியுமா? பர்மாவில் தேக்கு மரத்தை
வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அவை போய்ச் சேரும்
இடம் தனுஷ்கோடியாகும். அது தமிழன் கண்டறிந்த தொழில்
நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தைப் பயன்படுத்தித்
தமிழன் செய்த சாதனைகள் ஏராளம். கடல் ஆமைகள் கடலில்
இருக்கும் நீரோட்டத்தைப் பயன்படுத்தி 150 கி.மீ வரை
மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன.
• நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தைப்
பயன்படுத்தி செலுத்தத் தொடங்கியதனால் 20,000 க்கும்
மேற்பட்ட கடல் தீவுகளைக் கண்டறிந்தான் என்று
ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்த வகையில் புதிய பல
இடங்களையும் துறைமுகங்களையும் கண்டறிந்துள்ளான்
குறள் 496
• “கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்,
நாவாயும் ஓடா நிலத்து” - குறள் 496
• சோழநாட்டில் காவிரி கடலோடு கலக்குமிடத்தில்
காவிரிப்பூம்பட்டினம் என்ற துறைமுகம் அக்காலத்தில் புகழ்
பெற்று விளங்கியது. இங்கு இறக்குமதி செய்யப்பட்ட
பண்டங்கள் பற்றிப் பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்
கண்ணனார் கூறுவதாவது:
பட்டினப்பாலை- 185-193

• “நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்


காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்”.
(பட்டினப்பாலை- 185-193)
கடலில் வந்த விரைந்து செல்லக் கூடிய குதிரைகளும்,
வண்டிகளில் வந்த கரிய மிளகு மூட்டைகளும் இமயமலை
போன்ற மலைகளில் விளைந்த மணிகளும், பொன்கட்டிகளும்,
தென்கடலிலே குளித்த முழுமுத்துக்களும் கீழ்க் கடலிலே
உண்டான செம்பவளங்களும் கங்கையிலும் காவிரி ஆற்றிலும்
உண்டான செல்வங்களும் இலங்கையிலிருந்து வந்த உணவுப்
பொருட்களும் பர்மா என்று முன்னர் அழைக்கப்பட்ட
மியன்மாரிலிருந்து வந்த பொருட்களும் அரிய பொருட்களும்
பெரிய பொருட்களும் ஒருங்கே குவிதலாலே நிலம்
நெளியும்படியான பல வளங்களும் கலந்து விளங்கிய அகன்ற
தெருக்கள் பூம்புகாரில் இருந்தன என்பது இதன் பொருள்
மணிமேகலை,
• சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் இருக்கின்றன.
பாண்டியன் என்றால் சீன அகராதியில் பொருளே இல்லை.
சீனாவில் இருக்கும் கலைகள் அனைத்துக்கும் முன்னோடி
தமிழன்தான். பிற்காலச் சோழர்களான இராஜராஜ சோழனும்,
இராசேந்திர சோழனும் பெரிய கப்பற்படையைக் கொண்டு
பல நாடுகளை வென்றனர்.
• “கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய்” (மணிமேகலை, 25 :
24)
வெண்ணிக்குயத்தியார்
• கப்பலின் அடிப்பகுதியை தண்ணீரால் பாதிப்படையாத
வேம்பு, இலுப்பை, புன்னை, நாவல் போன்ற மரங்களைப்
பயன்படுத்தினர் என்றும். இதனால் கப்பல்கள் நீண்ட காலம்
பாவித்தது என்றும் ஆங்கிலக் கடற் பயணியான வால்கர்
கூறியுள்ளார் என அறியமுடிகிறது. காற்றின் திசையை அறிந்து
கப்பலைச் செலுத்தும் முறையைத் தமிழர் நன்கு
அறிந்திருந்தனர் எனும் உண்மையை,
• “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!” (புறம் 66)

என்று வெண்ணிக்குயத்தியார் குறிப்பிடுகின்றார்.


அகழாய்வு

அண்மையில் மதுரையை அடுத்துள்ள கீழடி என்னும் ஊரில்


கிடைத்துள்ள அகழாய்வுப் பொருள்கள் தமிழர்களின்
தொழில்நுட்ப அறிவை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
பொருந்தல், கொடுமணல், ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு
உள்ளிட்ட ஊர்களில் கிடைத்துள்ள அகழாய்வுப் பொருட்களும்
தமிழர்களின் தொழில்நுட்ப அறிவைக்காட்டுகின்றன.
கீழடி
தமிழர்களின் மருத்துவ அறிவியல்
• சித்தர்கள் என்போர் பண்டைய தமிழகத்தின்
அறிவியலாளர்கள் ஆவர். அவர்கள் ஆன்மீகவாதிகளோ
சாமியார்களோ அல்லர். அவர்கள் விஞ்ஞானிகள் (Scientists).
அவர்கள் வானியல், மருத்துவம், வேதியியல் ஆகிய
துறைகளில் ஆராய்ச்சி செய்தனர்.
96 உடல்தத்துவங்களாகப் பிரித்து மனித உடற்கூறியலை
(Human Anatomy) ஆராய்ந்தனர்.
நோயியல் (Pathology) துறையில் மிக ஆழமான
ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.
• மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் 4448 என்று
வரையறுத்தனர். இது நோயியல் துறையில் அவர்களின்
ஆழமான ஆராய்ச்சி அறிவைக் காட்டுகிறது. மூச்சுறுப்புகளில்
ஏற்படும் நோய்களை கப நோய்கள் எனவும், செரிமான
உறுப்புகளில் ஏற்படும் நோய்களைப் பித்த நோய்கள் எனவும்,
மற்றவற்றை வாத நோய்கள் எனவும் வகைப்படுத்தினர்.
மருந்தியல் (Pharmacology)
• மருந்தியல் (Pharmacology) பற்றி விரிவான ஆய்வு
செய்தனர். அதன் பயனாக கண்டுபிடித்த மருந்துகளை 32
வகை உள்மருந்துகள், 32 வகை வெளிமருந்துகள் என
வகைப்படுத்தினர். மருந்தியல் துறையில் ஏராளமான
நூல்களைப் படைத்துள்ளனர்.
நரம்பியலை ஆராய்ந்து வர்ம மருத்துவத்தைக்
கண்டுபிடித்தனர். இந்த வர்ம மருத்துவம் சித்தர்கள்
கண்டுபிடித்த நரம்பியல் மருத்துவம் (Neurological medicine)
ஆகும்.
வேதியியல் - வாதம்

• வேதியியல் துறையை வாதம் என்ற பெயரில் ஆராய்ந்தனர்.


போகர் வேதியியல் துறையில் ஆழமான விரிவான
ஆய்வுகளைச் செய்தவர். செயற்கையாக
வேதிப்பொருள்களாகிய தாதுக்களைத் தயாரிக்கும்
முறைகளைக் கண்டுபிடித்தனர். அதற்கு வைப்புமுறை என்று
பெயரிட்டனர். சித்தர்கள் எழுதிய வாதநூல்கள் அனைத்தும்
வேதியியல் துறையில் அவர்களின் ஆழமான ஆராய்ச்சியை
வெளிப்படுத்துபவை ஆகும்.
போகர்
• விண்பொறியியல் துறையில் போகர் ஆராய்ந்திருக்கிறார்.
அதன் பயனாக பஞ்சபூதத்தால் செய்த ஆகாயப்புரவி என்ற
விமானத்தைக் கண்டுபிடித்து சீனாவுக்குப் பயணம்
செய்திருக்கிறார். ஆகாயப்புரவி என்ற விமானம் பற்றிய
குறிப்புகளை போகர் ஏழாயிரம் என்ற நூலில் காணமுடிகிறது.
பழந்தமிழர்களின் தொழில் மேன்மை
• பண்டையத்தமிழ் மக்கள் வணிகத்திலும், தொழில் நுட்பத்திலும் சிறந்து
விளங்கினர் என்பதை அண்மைக்காலத் தொல்லியல், கல்வெட்டியல், நாணய
இயல் சான்றுகள் உணர்த்துகின்றன. இதனைச் சங்க இலக்கியங்கள் முழுமையாக
வெளிப்படுத்தவில்லை” என்கிறார் முனைவர் கா.இராசன் அவர்கள்(தொல்லியல்
நோக்கில் சங்ககாலம், பக்: 79).
• தமிழர்கள் இரோம் நாட்டிற்கும், தாய்லாந்திற்கும் சென்று தங்கி வணிகம்
புரிந்ததையோ, அவர்களின் பரவலான கல்வியறிவையோ சங்க இலக்கியம்
குறிப்பிட வில்லை என்கிறார்
• அவர்(பக்: 80) சங்க காலத்தில் “எஃகும், வார்ப்பு இரும்பும் மேலை நாடுகளுக்கு
மிகுதியாக ஏற்றுமதி செய்யப்பட்டு அந்நியச் செலவாணி ஈட்டப்பட்டுள்ளது.
இரும்புத் தொழிநுட்பத்தில் திறமை மிக்கவர்களாகத் தமிழக மக்கள் திகழ்ந்துள்ளது
போல் ஆடை நெய்வதிலும், சங்கு அறுப்பதிலும் நீர்ப்பாசனத்திலும் தமது
தொழிநுட்பத்திறனைக் கொண்டிருந்தனரென்பதை எண்ணற்றத் தொல்லியல்
சான்றுகள் மெய்ப்பிக்கின்றன” என்கிறார் முனைவர் கா.இராசன் அவர்கள்.
இலட்சத் தீவு, கள்ளக் கிணறு, திருப்பூர் ஆகியவற்றில் கிடைத்த
இரோமக் குடியரசு நாணயங்கள் மூலம் அகத்தஸ் ஆட்சிக்கு
முன்பே இரோமுடன் தமிழகம் வாணிகம் புரிந்துள்ளது.
இந்தியாவில் கிடைக்கும் இரோம நாணயங்களில் 90%
க்குமேல் பண்டைய சேரர் கொங்குப் பகுதிகளில்தான்
கிடைத்துள்ளது.
தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நேரடியாக இரோம்
நாடு சென்று வணிகத்தில் ஈடுபட்டனர் (பக்.85). தென்
கிழக்கு ஆசிய நாடுகளோடு வணிகம் புரிந்த தமிழர்கள் 10
டிகிரி நீரோட்டம் (10 degree channel) என்ற கடல்
நீரோட்டத்தைப் பயன்படுத்தி நேராக மலேசியா,
தாய்லாந்து, இந்தோனேசியா, பாலி, வியட்னாம் போன்ற
நாடுகளுக்கு வணிகப் பயணம் மேற்கொண்டனர்.
ஓதம்(TIDE) என்று அழைக்கப்படும் கடல் நீர் மட்டத்தில்
ஏற்படும் உயர்வு தாழ்வுகள் முக்கியமானவைகளாகும். ஓதம்
ஏற்படும்பொழுது கடல் நீர் ஒரு மைல் அளவிற்கு
முன்னோக்கியும், பின்னோக்கியும் நகரும். இதை முன்
ஓதம்(HIGH TIDE), பின் ஓதம்(LOW TIDE) என அழைப்பர்.
Continued…
• “முசிறி – அலெக்சாண்டிரியா ஒப்பந்தம்” என்பது முசிறியில்
வாழ்ந்த தமிழ் வணிகன் ஒருவனுக்கும், எகிப்து நாட்டின்
நைல் நதிக்கரையில் இருந்த அலெக்சாண்ட்ரியா நகரில்
வாழ்ந்த கிரேக்க வணிகன் ஒருவனுக்கும் கி.பி.150 வாக்கில்
ஏற்படுத்தப்பட்ட வணிக ஒப்பந்தமாகும்(எகிப்து நாடு அன்று
இரோமப் பேரரசின் கீழ் இருந்தது). அந்த வணிக
ஒப்பந்தப்படி, ஒரு தமிழ் வணிகன் ஒரு கப்பலில் ஒரு தடவை
கொண்டு சென்ற வணிகப் பொருட்களின் பண மதிப்பீடு
என்பது 2,94,84,000 கிராம் வெள்ளியின் எடைக்கு ஈடானது
எனவும் வெள்ளி ஒரு கிராம் ரூ.10 எனக் கணக்கிட்டால் அதன்
மதிப்பு சுமார் ரூ.30 கோடி ஆகிறது எனவும் கூறுகிறார்
முனைவர் இராசன்
Continued…
 பிளினி தமது இயற்கை வரலாறு என்ற நூலில் இரும்புப்
பொருட்கள் இரோம் நாட்டிற்குச் சேர நாட்டிலிருந்து வந்தன
எனச் சொல்லியுள்ளார் எனவும், இரும்பு, எஃகு, கொல்லன்,
கருமைக்கொல்லன், உலை, உலைக்கூடம், துருத்தி,
விசைவாங்கி, மிதியுலை, குடம், குறடு, குறுக்கு போன்ற
இரும்புத் தொழில்நுட்பம் சார்ந்த சொற்கள் சங்க
இலக்கியத்தில் வந்திருப்பது, இத்தொழில் சிறப்புற்று
இருந்ததைத் தெளிவு படுத்துகின்றது என்கிறார் இராசன்
அவர்கள்(பக்.128). இரும்பை உருக்க 1100 டிகிரி
சென்டிகிரேடு வெப்பமும், எஃகாக மாற்ற 1300 டிகிரி
சென்டிகிரேடு வெப்பமும் தேவை.
• இதனைக் கொடுமணலில் கிடைத்த உலைக்கலங்கள்
அடைந்தன என்பதை இலண்டன் பல்கலைக்கழக
உலோகவியல் பகுப்பாய்வும், இந்தியத் தொழில்நுட்பக் கழக
பகுப்பாய்வும் உறுதி செய்துள்ளது எனவும், வார்ப்பு இரும்பு
செய்ய தனி நிபுணத்துவம் தேவை எனவும், அதனைச் செய்ய
1300 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் இரும்பை உருக்கி
நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டும் எனவும், தகடூர்
பகுதியில் குண்டூர் என்ற இடத்தில் கிடைத்த
உலைக்கலங்களின் மீது நடத்திய உலோகவியல் ஆய்வு
இதனை உறுதி செய்துள்ளது என்கிறார் அவர்(பக்130).
எனவே, எஃகு இரும்பும், வார்ப்பு இரும்பும் அன்றே
தமிழகத்தில் மிக அதிக அளவு செய்யப்பட்டு மேற்குலக
நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன
அரணிக் கட்டை
• அரணிக் கட்டை எனப்படும் தீக்கடைகோலில் கடைந்து
நெருப்பு உண்டாக்கப் படும். இது இன்ற ளவும்
ஹோமங்களின் போது பயன் படுத்தப் படும். கடந்த 1990
களில் எம் பள்ளி மாணவர்களுட் காஞ்சி புரம் சுற்றுலா சென்ற
போது காஞ்சி மடம் சென்றோம். அந்நாளில் ஏதோ வேள்வி
ஒன்று துவங்க இருந்த்து.
• அப்போது தீக்கடைக் கோலில் நெருப்பு உண்டாக்கப்
படுவதைப் பார்த்துள்ளோம்.
• இப்போதும் கூட புட்டபர்த்தியில் சாய்பாபா கோயிலில்
வேள்வியின் போது பயன் படுத்தப் படுகிறது.
• அண்மையில் திருக்கடையூர் கோயில் கும்பாபிஷேகத்தின்
போது பயன்படுத்த்தப் பட்டது.
அரணிக் கட்டை
கொற்கை

கொற்கை என்பது பாண்டிய முடிக்குரிய இளவரசனின்


இருப்பிடமாகும். பாண்டியர்களின் முதல்தலைநகரம்
கொற்கை ஆகும். கொற்கை பாண்டியர்களின் முத்து
நகரம்,பாண்டிய நாட்டு வணிகத்
துறைமுகமாகவும்,பாண்டியர்களின் கப்பற்படைத்
தளமாகவும் இருந்தது.
Continued…
• கொற்கை – பாண்டிநாட்டுத் துறைமுகம்.
• புகார் என்னும் காவிரிப்பூம் பட்டினம் – சோழநாட்டுத்
துறைமுகம் பட்டினப்பாலை
• எயிற்பட்டினம் – ஓய்மானாட்டுத் துறைமுகம்
சிறுபாணாற்றுப்படை
• நீர்ப்பெயற்று – தொண்டைநாட்டுத் துறைமுகம்
பெரும்பாணாற்றுப்படை
• கீழடியில் கிடைத்த பானை ஓடுகளின் உட்புறத்தை
வேதியியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்திப் பார்த்தபோது
அதன் கருப்பு வண்ணப்பூச்சில் கார்பன் நானோ குழாய்கள்
இருக்கின்றன என்பதே அந்தக் கட்டுரை தரும் வியப்பூட்டும்
செய்தி.
• கட்டுரையாசிரியர்களான விஐடி பேராசிரியர் சந்திரசேகர்,
ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையில்
பணிபுரியும் மோகன், இவரது குழுவினர் கீழடியில் கிடைத்த
பானை ஓடுகளின் உட்புறச் சுவரில் பூசப்பட்டிருக்கும் கருப்பு
வண்ணம் பளபளப்புத்தன்மை குறையாமலும் சிதையாமலும்
இருந்ததற்குக் காரணம் கார்பன் நானோ குழாய்களே
என்கின்றனர்.
நானோ தொழில்நுட்பம்

மிக மிகச் சிறிய அளவில் (நானோ மீட்டர் அளவில்)


பொருட்களை உருவாக்குவதே நானோ தொழில்நுட்பம். ஒரு
மீட்டரை நூறு கோடி பாகமாக பிரித்தால், அதில் ஒரு பாகமே
ஒரு நானோ மீட்டர். இந்த நானோ தொழில்நுட்பத்தின் மூலம்
உருவாக்கப்படும் கருவிகள் கணினி, வானியல், மருத்துவம்
உள்ளிட்ட பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
நானோ தொழில்நுட்பம் இயற்கையிலேயே இருக்கிறது.
தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாததற்குக் காரணம் நானோ
அளவில் இருக்கும் முட்கள் போன்ற அமைப்பு. மருத்துவத்
துறையிலும், கணினித் துறையிலும் நானோ தொழில்நுட்பப்
பயன்பாட்டின் சாத்தியங்கள் கணக்கில் அடங்காதவை.
கிராபீன் மூலக்கூறு என்பது அறுங்கோண வடிவில் வலுவான
சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்ட கார்பன் அணுக்களால்
ஆன ஒற்றை அடுக்கு அமைப்பாகும். இந்த கிராபீன்
படலத்தைப் பாயைச் சுருட்டுவதுபோல் சுருட்டினால்
கிடைப்பதுதான் கார்பன் நானோ குழாய்கள். ஒற்றைச் சுவர்
கொண்டதாகவும், பல்சுவர் கொண்டதாகவும் இரண்டு
விதமான கார்பன் நானோ குழாய்கள் இருக்கின்றன.
கீழடியில் நானோ
• கீழடியில் எடுக்கப்பட்ட பானை ஓடுகளில் ஒற்றைச் சுவர் நானோ குழாய்கள், பல்சுவர்
நானோ குழாய்கள் என இரண்டுமே கண்டறியப்பட்டிருக்கின்றன. ஒற்றைச் சுவர் கார்பன்
நானோ குழாய்களின் விட்டம் 0.6 நானோ மீட்டர்.
• இதில் சிறப்பு என்னவென்றால், 0.4 நானோ மீட்டர்தான் இயற்பியல் விதிகளின்படி
சாத்தியம். அதற்கும் மிகச் சிறியது சாத்தியமில்லை. கீழடியில் கண்டறியப்பட்டது
கிட்டத்தட்ட அந்த எல்லைக்கு அருகில் இருக்கிறது.
• அதேபோல், பல்சுவர் நானோ குழாய்களின் உள் விட்டம் 3 நானோ மீட்டர்.

25/11/23 CEE 51
தமிழர்களின் பட்டறிவு
• தற்போது கார்பன் நானோ குழாய்கள் உருவாக்க மூன்று
அல்லது நான்கு வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
• அதில் ஒன்று கார்பன் சார்ந்த ஏதேனும் ஒரு சேர்மத்தை
எடுத்து குறிப்பிட்ட சில வழிமுறைகளைப் பின்பற்றி மிக
உயர் வெப்ப நிலையில், அதாவது 1,200 செல்சியஸ்
அளவுக்கு வெப்பப்படுத்தினால் கார்பன் நானோ குழாய்கள்
உருவாகும்.
• மற்ற முறைகள் அனைத்துக்கும் நவீன வேதியியல்
தொழில்நுட்ப முறைகள் தேவை. எனவே, மிக உயர் வெப்ப
நிலையில் சூடாக்குவதன் மூலம்தான் அந்தக் காலத்து மக்கள்
இதைச் சாத்தியப்படுத்தியிருக்க முடியும்.
Continued…
• அந்தக் காலத்தில் தாவரம், மரம், செடி கொடிகளிருந்து
வண்ணம் தயாரித்திருப்பார்கள். தாவரப் பொருட்களில்
கார்பன் சார்ந்த சேர்மங்கள் நிறைய இருக்கின்றன.
• இப்படி வண்ணம் பூசப்பட்ட பானைகள் உயர் வெப்ப
நிலையில் சுடப்படும்போது கார்பன் நானோ குழாய்கள்
உருவாகியிருக்க வேண்டும். குறிப்பிட்ட உயர் வெப்ப
நிலையில் பானை சுடப்பட்டால் அதில் பூசப்படும்
வண்ணப்பூச்சு சிதையாமல் இருக்கும் என்ற பட்டறிவு 2,400
ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்களுக்கு இருந்திருக்கிறது
என்பது உண்மையில் வியப்புக்குரிய விஷயம்தான்!
சங்ககாலத்தில் நெசவுத் தொழில்
• சங்க காலத்திலேயே மதுரையில் நுண்ணிய பருத்தி நூல்,
எலி மயிர் மற்றும் பட்டு நூலினாலும் ஆடைகள்
நெய்யப்பட்டன எனச் சிலப்பதிகாரப் பாடலின் கீழ்கண்ட
வரிகள் மூலம் அறியலாம்.
• "நூலினும்,மயிரினும்,நுழைநூற் பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூல் அடுக்கத்து
நறும்படி செறிந்த அறுவை வீதியும்"”
(சிலப்பதிகாரம் -205,207)
• "கூவிளம் இதழி தும்பை
கொண்டார்ச்சனை செய்தபேர்க்கு
தேவநாடாளவைக்கும் திருகுகைவேல்
செங்குந்தம் துணை" (செங்குந்தர் சதகம்)

25/11/23 CEE 54
• கொங்கு நாட்டில் பெரும்பாலான குலத்தாரிடம்
இன்றளவிலும் பெண்ணிற்கு சீதனாமாக நூல்
நூற்கும் தக்களியும், பஞ்சும் கொடுப்பது வழக்கம்.
அதேபோல் கணவனை இழந்த
கைம்பெண்களுக்கும் பிழைப்பிற்கு ஆதாரமாக
தக்களியைக் கொடுக்கும் வழக்கம் உள்ளதாக
புலவர் இராசு அவர்கள் குறிப்பிடுகிறார்.

25/11/23 CEE 55
கோடாலி கருப்பூர் புடவை

The Kodali Karuppur evolved under the patronage of the Maratha


ruler of Tanjore – Serfoji Raja Bhonsle Chhatrapati II – and was
made exclusively for the queens of the Tanjore state up to the
19th century.
Produced in the village of Kodali Karuppur near Kumbakonam in
Thanjavur district by weavers whose ancestors had migrated
from Saurashtra to Madurai, Salem and Kancheepuram, the
weave was also gifted as khillat or ‘clothes of honor’, was a part of
a bride’s trousseau and used in certain temple rituals.

CEE
.

25/11/23 CEE 57
ஏலேல சிங்கன்
• “ஏலேலசிங்கனின் பொருள் ஏழுகடல் போனாலும் திரும்பும்” – என்று
தமிழில் ஒரு பழமொழி உண்டு. இந்தப் பழமொழிக்குப் பின்னால்
சுவையான ஒரு கதை உண்டு.
• தமிழ் வேதமாகிய திருக்குறளை நமக்குத் தந்த திருவள்ளுவரின் புரவலர்
ஏலேல சிங்கன். அவர் பெரும் கடல் வணிகர். ஏராளமான செல்வத்தைக்
குவித்தவர். ஆயினும் அந்தச் செல்வத்தை அறவழிகளில் செலவிட்டார்.
திருவள்ளுவரையும் ஆதரித்தார். இவரைப் பற்றி செவிவழியாக வந்த
பல செய்திகளைச் சுருக்கமாக தமிழ் என்சைக்ளோபீடியா ‘அபிதான
சிந்தாமணி’ தருகிறது.

CEE
திருவள்ளுவர் நெசவுத் தொழில் செய்து வந்தார். இவரிடம் நூல்
வாங்கப்போவது வழக்கம். ஒருநாள் ஏலேலசிங்கன் வீட்டுக்குப்
போனார். அவர் சிவபூஜையில் இருப்பதாச் சொல்லி
வள்ளுவரை வீட்டு வாசலிலேயே தடுத்து நிறுத்திவிட்டனர்.
வள்ளுவர் உடனே புன்சிரிப்புடன், அவர் குப்பத்தில் பூஜை
செய்கிறாரா அல்லது வீட்டு அறையில் பூஜை செய்கிறாரா?
என்று கேட்டார். இதைக் கேட்ட ஏலேலசிங்கன் அவரிடம் ஓடி
வந்து வெட்கத்துடன் நின்றார். அதாவது த்ரிகால முனிவரான
வள்ளுவருக்கு ஏலேலசிங்கன் மனம் அலைபாய்வதும்,
அலைகடலில் வரும் கப்பல் பற்றி எண்ணிக் கொண்டிருப்பதும்
தெரிந்துவிட்டது. உடல் பூஜை அறையில் இருந்தாலும் உள்ளம்
கப்பல் வணிகத்தில் உலா வந்தது. அன்று முதல் வள்ளுவரை
அவர் ஆன்மீக குருவாக ஏற்றார்.

CEE
’ஏலேல ஐலசார்
ஒரு முறை ஏலேலசிங்கனின் பொருட்களை ஏற்றி வந்த கப்பல்
தரை தட்டியது. வள்ளுவரிடம் ஓடோடி வந்து வழி ஏதும்
உண்டா என்று கேட்டு விழி பிதுங்க நின்றார். அறவழியில்
சேர்த்த பொருள் ‘போ’ என்றாலும் போகாது என்பது
வள்ளுவருக்குத் தெரியும். ஆகவே ஏலேலசிங்கன் பெயரைச்
சொல்லி கப்பலை கயிறு கட்டி இழுக்கச் சொன்னார். கப்பல் கரை
சேர்ந்தது. அதிலிருந்துதான் கடலில் செல்லுவோர்
பாதுகாப்பாகச் சென்று திரும்ப ‘’ஏலேல ஐலசார்’’ என்று
கோஷம் இடும் வழக்கம் வந்ததோ என்று எண்ண வேண்டி
இருக்கிறது!!

CEE
திரும்பி வந்த தங்கம்
ஏலேல சிங்கனிடம் ஏராளமான பொருட் செல்வம் குவியவே
அதைத் தங்க கட்டிகளாக மாற்றி வைத்திருந்தார். அற வழிகளில்
செலவிட்டது போக எஞ்சியதைக் கடலில் கொண்டு போட்டு
விட்டார். சில காலம் கழித்து மீனவர்கள் பலர் அவர் வீட்டை
நோக்கி ஓடி வந்தனர். அவர்கள் பிடித்த சுறாமீனின் வயிற்றில்
தங்கக் கட்டிகள் இருந்ததாகவும் அதில் ஏலேல சிங்கனின்
பெயர் பொறிக்கப் பட்டிருப்பதால் திருப்பிக் கொடுக்க ஓடிவந்த
தாகவும் சொன்னார்கள். வள்ளுவர் வாய்மொழிப்படி வாழ்க்கை
நடத்தினால் செல்வத்தை ‘’போ, போ’’ என்று விரட்டினாலும்
போகாது!!
இதை ஒட்டித்தான் வள்ளுவனும் பாடினான்:

CEE
அழக்கொண்ட எல்லாம் அழப் போம், இழப்பினும்
பிற்பயக்கும் நற்பாலவை (குறள் 659)

பிறர் கண்ணீர் சிந்துமாறு அழ, அழ பொருட்களைச் சேர்த்தால் அவர்களுடைய


பொருட்கள் எல்லாம் அவர்களை அழ, அழ வைத்துவிட்டு ஓடிப் போகும். ஆனால்
தூய்மையான வழியில் வந்த பொருட்களை, ஒருவர் இழந்தாலும், பின்னர்
நல்லபடியாகவே முடியும் (குறள் 659)

இலங்கையில் ஏலேரா என்றொரு தமிழ் மன்னன் நீதியும் நேர்மையுமிக்க சீர் மிகு


ஆட்சி நடாத்தினான். அவனை மனுநீதிச் சோழன் என்பாரும், ஏலேலா (காண்க:
கல்கியின் பொன்னியின் செல்வன்) என்பாரும் உளர். ஆயினும் ஒரே பெயரில் பலர்
இருந்ததால் இந்திய சரித்திரத்தில் இன்று வரை குழப்பம் நீடித்து வருவதை நாம்
அறிவோம்.
வள்ளுவர் இறந்த பின்னர் அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்தது ஏலேலன் என்றும்
அவருக்கு மயிலையில் கோயில் எழுப்பித்தவன் ஏலேலன் என்றும் செவிவழிச்
செய்திகள் கூறும்.

25/11/23 CEE 62
சரஸ்வதி மகால் நூலகம்

25/11/23 CEE 63
சரஸ்வதி மகால் நூலகம்

சரபோஜி (1798-1832). இம்மன்னரின் சேவையை


நினைவுகூறும் விதமாக இந்நூலகத்திற்கு சரபோஜி சரஸ்வதி
மகால் நினைவு நூலகம் என பெயா் சூட்டப்பட்டது. இந்த
நூலகத்தில் அரியவகை ஓலைச்சுவடிகள் காணப்படுகின்றன.
இங்கு, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும்
இந்தியாவை சார்ந்த பிறமொழி காகித குறிப்புகளும் உள்ளன.

CEE
யாழ் நூலகம்

• கிழக்கு ஆசியாவிலேயே புகழ்பெற்று விளங்கிய


யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட
கசப்பான சம்பவம் நடைபெற்று 40 ஆண்டுகள் நிறைவு
பெற்றுள்ளன.
• தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்டது
யாழ்பொது நூலகம். சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான
நூல்கள், ஓலைச்சுவடிகள், பழந்தமிழர் நூல்கள் என
நிறைந்து கிடந்த தமிழர் அறிவுச் சுரங்கம்தான்
யாழ்ப்பாணம் பொது நூலகம். இந்த நூலகமானது
1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேட்தி நள்ளிரவுக்குப்
பின்னர் சிங்களப் படையினரால் திட்டமிட்டு
எரிக்கப்பட்டது.

CEE
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை
இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். ஒரு இனத்தை
அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் வராலாற்றை சுவடு
இழக்க செய்ய வேண்டும் என்ற சதித் திட்டத்தின் கீழ் சிங்களக்
காவல் துறையினரால் எரிக்கப்பட்டதில்
பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்து
போயின.

CEE
Meenakshi Temple

• The Meenakshi Sundareswarar Temple is located in the heart of


Madurai city, Tamil Nadu in India covering an area of around 45
acres. The greatest architectural marvel of India is dedicated to
Lord Shiva in the form of Sundareswarar and his wife the
Goddess Parvati in the form of Meenakshi.
• Also called Meenakshi Amman Temple was built by Pandya
King Kulasekara and reconstructed later by Ruler Thirumalai
Nayak, the temple has patronized literature, art, music and
dance ever since its inception. It is a significant symbol for the
Tamil people attracting six thousand visitors a day and gets an
annual revenue of rupees sixty million. Recently nominated in
the list for the new Seven Wonders of the World and the temple
was selected one of the Seven Wonders of India.

CEE
• East Tower (Nine Storeys) - 1011 sudhai figures.
• South Tower (Nine Storeys) - 1511 sudhai figures.
• West Tower (Nine Storeys) - 1124 sudhai figures.
• North Tower (Nine Storeys) - It has lesser figures than other
outer towers.
• The Thousand Pillar Mandapam
• Actually the number of pillars counts 985 beautifully
decorated columns and there are the wonder of the palace.
Each pillar is sculptured and is a monument of the Dravidan
sculpture. There is a Temple Art Museum in this 1000 pillars
hall where you can see icons, photographs, drawings exhibiting
the 1200 years old history.

CEE
செட்டிநாட்டு வீடுகள்
• செட்டிநாட்டு வீடுகள் என்பவை தமிழ்நாட்டில்,
சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடியைச் சுற்றியுள்ள
மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் சில பகுதிகளி உள்ள
செட்டிநாடு பகுதியில் உள்ள பாரம்பரியமான வீடுகள் ஆகும்.
[1]

• 18ஆம் நூற்றாண்டு, 19ஆம் நூற்றாண்டு மற்றும் 20ஆம்


நூற்றாண்டு தொடக்கம் வரை கட்டப்பெற்ற இந்த
செட்டிநாட்டு வீடுகளின் கட்டிடக் கலை உலகப்
புகழ்பெற்றவை. ஆயிரம் சன்னல்கள் வைத்த வீடுகளும்
இங்கு உண்டு. நகரத்தார் தங்கள் வீட்டு விழாக்களை
வீட்டிலேயே நடத்துவதை வழக்கமாகக் கொண்டவர்கள்.
இந்த வீடுகளின் நடுவே பெரிய வானவெளி முற்ற அமைப்பு உள்ளது.
வீட்டுக்குள் காற்றையும் வெளிச்சத்தையும் இந்த வானவெளி கொண்டு
வருகிறது. வீட்டின் முன்வாசலும் பின்வாசலும் வீட்டில் உள்ள மற்ற அறைகளும்
இந்த வானவெளியில் வந்து சேர்வதாக இருக்கும். பின்வாசலில் இருந்து
பார்த்தால் முன்வாசலில் யார் இருக்கிறார்கள் என்பதைக் காண முடியும்
வகையில். இரு வாசல்களும் நேர்க் கோட்டில் உள்ளன. வீடு முழுதும் பல
தூண்கள் உள்ளன இந்தத் தூண்கள் பர்மா தேக்கைக் கொண்டு அமைக்கப்பட்டு
உள்ளன.[3] இந்த நீளமான தேக்குமரங்களை நாட்டுக்கோட்டை செட்டியார்கள்
பர்மாவில் இருந்தகாலத்தில் சங்கிலியால் கப்பல்களில் கட்டி கடலில்
மிதக்கவிட்டு நாகப்பட்டிணம் துறைமுகம் வழியாக கொண்டு வந்த‍தாக
கூறுகின்றனர்.
• வீட்டின் முன்பகுதி, அபரிமிதமான வேலைப்பாடுகளுடன்,
பிரமாண்டமாக நிமிர்ந்து நிற்கின்றது. மேல் உத்திரத்திலும்,
தூண்களில் மேலும், ஆங்காங்கு ஈச்சங் கீற்றுகளைச் சொருகி
வைத்து இருந்தார்கள். ‘ஏன்?’ என்று கேட்டேன்.
• ‘பெரிய வீடாக இருப்பதால், அடிக்கடி ஒட்டடை நீக்கிப்
பராமரிக்க முடியாது. எனவே, வெளவால்கள் எளிதாக வந்து
குடியேறி விடும். அவை தாறுமாறாகப் பறக்கும். அப்போது,
இந்த ஈச்சங் கீற்றுகளில் பட்டால், அவற்றின் இறக்கைகள்
கிழிந்து விடும். அதற்குப் பயந்து, வெளவால்கள் வராது.
அதற்காகத்தான் இந்த ஏற்பாடு’ என்றார்.
இந்தோ சாரசெனிக் கட்டடக்கலை
• இந்தோ சாரசெனிக் கட்டடக்கலை (Indo-Saracenic இது Indo-
Gothic, Mughal-Gothic, Neo-Mughal, Hindoo style என்றும்
அழைக்கப்படுகிறது) என்பது 19 ஆம் நூற்றாண்டின்
பிற்பகுதியில், பிரித்தானிய பேரரசில் குறிப்பாக
பிரித்தானிய இந்தியாவிலும், சுதேச சமஸ்தானங்களில் பொது
மற்றும் அரசு கட்டிடங்களைக் கட்ட பிரித்தானிய
கட்டிடக்கலைஞர்களால் பயன்படுத்தப்பட ஒரு கட்டிடக்கலை
பாணியாகும்.
• 1892 ஆம் ஆண்டு பிரித்தானிய கட்டிடக்கலைஞர் ஹென்றி
இர்வின் வழிகாட்டுதலின் கீழ் ஜே. வெ. ப்ரஸெஸ்டிங்கினால்
வடிவமைக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற கட்டடம்
இந்தோ-சாராசெனிக் கட்டிடக்கலைக்கு ஒரு முதன்மையான
எடுத்துக்காட்டு ஆகும்
• மும்பையில் உள்ள விக்டோரியா தொடருந்து நிலையம்
1878-88 (தற்போது சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்)
• எர்பெர்ட்டு பேக்கரால் வடிவமைக்கப்பட்ட தில்லி தலைமைச்
செயலக கட்டிட வடக்குத் தொகுதி.
• இது இந்திய-இஸ்லாமியக் கட்டிடக்கலை,
குறிப்பாக முகலாயக் கட்டிடக்கலை, பிரித்தானிய இந்திய
பாரம்பரிய பாணி, சிலசமயம் கொஞ்சம், இந்துக் கோயில்
கட்டிடக்கலை ஆகியவற்றின் அலங்கார கூறுகளைக் கொண்டு
உருவானது.
• சாரசென் என்பது மத்திய கிழக்கிலும் வடக்கு
ஆப்பிரிக்காவிலும் உள்ள அரபு மொழி பேசும் முசுலிம்
மக்களைக் குறிக்க இடைக்காலத்தில் ஐரோப்பாவில்
பயன்படுத்தப்பட்ட ஒரு சொற்பதமாகும்.
நடுகல்
• அண்மையில் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி தமிழர்
பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை
நிரூபித்து உள்ளது. அதே போல பழங்காலத் தமிழர் பண்பாடு
மூத்தோர் வழிபாடு, நடுகல் வழிபாடு சார்ந்த பண்பாடாகும்.
பிற்காலத்தில் மதங்கள் தோன்றியிருக்கின்றன. தமிழ் மொழி
ஒரு சமயச்சார்பற்ற மொழி என கால்டுவெல் எனும்
மொழியியல் அறிஞர் குறிப்பிட்டு உள்ளதை நாம்
எண்ணிப்பார்க்க வேண்டும்.
• அதே போன்று கோப்பெருஞ்சோழன் இறந்தபின்
அவனுடைய நண்பரான பொத்தியார் அவனை நினைத்து
வருந்திப்பாடுவதாக புறநானூற்றுப் பாடல் 221 இன் மூலம்
அறிந்து கொள்கின்றோம்.
நினையாக் கூற்றம் இன் உயிர் உய்த்தன்று
பைதல் ஒக்கல் தழீஇ அதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே (புறநானூறு 221)
நம்முடைய புரவலன் இறந்ததால் இந்த பெரிய உலகம்
வருந்துகின்றது. குறையில்லா நல்ல புகழையுடையவன்
நடுகல்லாகி விட்டானே என வருந்துகின்றார்.
Mamallapuram Places to visit in Mahabalipuram Tamil
Nadu
• Mahabalipuram is an important place of classical Monuments
in India, the monolithic and cave temples. It is also known as
Mamallapuram.
• கடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள இது கலைச்
செல்வமும் நிறைந்தது. இந்த நினைவுச்சின்னங்கள் தமிழ்
நாட்டில் உள்ள பழங்கால கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை
ஆய்வுக்கு மட்டும் வாய்ப்பளிக்கின்றன. பல்வேறு
தெய்வங்களின் கல்லில் செழுமையான உருவப்படங்கள்,
வான அழகிகள் மற்றும் காவியக் கதைகள்
மூச்சடைக்கக்கூடிய உண்மையானவை.
• கடற்கரைக் கோயில், குகைக் கோயில்கள், உலகின் மிகப்
பெரியது மாமல்லபுரம் இந்தியாவின் பெருமை.
Arjuna Penance

• அர்ஜுனன் தவம் என்பது மாமலபுரம் நகரின் சிறப்பு.


வானளாவிய கங்கையை பூமிக்குக் கொண்டு வருவது
உண்மையில் பகீரதன் தவம் என்பது சிலரின் கருத்து.
பாறையில் இயற்கையான பிளவு புத்திசாலித்தனமாக கங்கை
நதியில் செதுக்கப்பட்டுள்ளது, கரையோரத்தில் பக்தர்கள்
வழிபடும் நாக கடவுள்கள் தங்கள் பிரார்த்தனையில்
உறைந்திருக்கும் சிற்பத்தில் ஒரு சிறந்த கவிதை, எந்த
பார்வையாளர்களும் தவறவிடக் கூடாது. இது ஒரு சிக்கலான
அற்புதமான படைப்பு, திறமையுடன் செதுக்கப்பட்ட வேலை,
மிகப்பெரியது. உலகில் உள்ள அடிப்படை நிவாரண
சிற்பங்கள்.
• மகாபாரதத்தின் இதிகாச நாயகனான அர்ஜுனன்,
சிவபெருமானிடம் இருந்து தெய்வீக ஆயுதங்களைப்
பெறுவதற்காக தவம் செய்யும் முனிவராக இங்கு
சித்தரிக்கப்படுகிறார். அனைத்து சிற்பங்களும் ஒரு பெரிய
பாறையால் செய்யப்பட்டவை. புனிதமான கங்கை நதியாக
பூமிக்கு இறங்குவதாகக் கருதப்படும் மிகப்பெரிய பாறையின்
மையத்தில் இயற்கையாகவே பிளவு உள்ளது.
Vel pari
Panar, Viraliyar
Kollikattu vithai
Devangu
Periyar
Bharathanatiyam, Sathiratum,- Muthu kannammal
T M Krishna – Sebastin & Sons –book
நன்றிஉடன்

மா.எழிலரசி
25/11/23 MC&RP 86

You might also like