You are on page 1of 5

காடுகள்ல இருக்கிற மரங்கள்லாம் செழிப்பா இருக்குறதுக்குக் காரணம், அங்கே நிலவுற

சூழல்தான். அதே மாதிரி நம்ம நிலத்துலயும் பயிர் வளர்றதுக்கான சரியான சூழலை


ஏற்படுத்திட்டா போதும். எந்தப் பராமரிப்பும் இல்லாமலேயே விளைச்சல் எடுத்துட
முடியும்” என்று சொல்லும்  ஞானப்பிரகாசம், தன்னுடைய வயலில் இதை நிரூபித்தும்
காட்டியுள்ளார். 

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள நரசிங்க நத்தம் கிராமத்தைச்


சேர்ந்தவர் முன்னோடி விவசாயி ஞானப்பிரகாசம். இவர், எந்தப் பராமரிப்பும் இல்லாமல்,
தன்னுடைய 1 ஏக்கர் 30 சென்ட் பரப்பில் பலவிதப் பயிர்களைச் சாகுபடிசெய்து நிறைவான
வருமானம் ஈட்டிவருகிறார். 

ஒரு காலைப்பொழுதில் ஞானப் பிரகாசத்தைச் சந்தித்தோம். “தமிழர்கள் விவசாயத்துல


தலை சிறந்தவங்க. நான் கடைப்பிடிக்கிறது எல்லாமே நம்ம முன்னோர் கடைப்பிடிச்ச
தொழில்நுட்பங்கள்தான். அதனால இதைத் ‘தமிழர் வேளாண்மை’னுதான் சொல்றேன்.
நாங்க பூர்வக
ீ விவசாயக் குடும்பம்தான். நான் காலேஜ் முடிச்சுட்டு விவசாயத்துக்கு
வந்துட்டேன். பாரம்பர்யத் தமிழ் மருத்துவமும் செஞ்சுட்டுருக்கேன். பசுமைப்புரட்சி
அறிமுகப்படுத்தப்பட்ட காலங்கள்ல நாங்களும் ரசாயன உரங்களைப் பயன்படுத்த
ஆரம்பிச்சோம். ஆனா, நாலஞ்சு வருஷங்கள்லயே ரசாயன உரங்களோட பாதிப்புகளை
உணர்ந்து, நம்ம பாரம்பர்ய விவசாயமுறையைக் கடைப்பிடிக்க ஆரம்பிச்சுட்டோம்” என்ற
ஞானப்பிரகாசம் நம்மைத் தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார்.

“இது களிமண் பூமி. நாப்பது வருஷமா இலைதழைகளையும் மாட்டு எருவையும் மட்டுமே


பயன்படுத்துனதால, இந்தளவுக்குச் செழிப்பா இருக்கு. என்னோட நிலத்துக்குள்ள பெய்ற
மழைநீர், வெளியே  போகாது. முழுக்க முழுக்க நிலத்துக்குள்ளதான் இறங்கும். அதனால,
எப்பவும் நிலம் ஈரப்பதமாவே இருக்கும். இதனால, நத்தைகளும் மண்புழுக்களும்
எக்கச்சக்கமா பெருகியிருக்கு. இறந்துபோன நத்தைகளின் கூடுகள் நல்ல உரமா
மாறியிருக்கு. மண் வளமா இருக்கிறதால, இப்போ எந்தப்பயிரைச் சாகுபடி செஞ்சாலும்
நல்ல விளைச்சல் கிடைக்குது. மண் வளத்துக்கான கட்டமைப்பை உருவாக்கி
வெச்சுருக்குறதால, எல்லா இயற்கை வளமும் தானாகவே என்னோட நிலத்துக்குக்
கிடைச்சுடுது. 
‘வரப்புயர நீருயரும். நீருயர நெல்லுயரும்’ங்கிற அடிப்படையில மூணடி உயரமும், அஞ்சு
அடியில இருந்து பத்தடி அகலமும் இருக்குற மாதிரி வரப்பு அமைச்சுருக்கோம். மொத்தம்
இருக்குற 1 ஏக்கர் 30 சென்ட் நிலத்துல, 30 சென்ட் வரப்புதான் இருக்கு. வரப்போட
மேல்பகுதியை 45 டிகிரி அளவுல சரிவா அமைச்சுருக்குறதால, வரப்புல விழுற மழை நீர்
நிலத்துக்குள்ள வந்துடும். இந்த 30 சென்ட் வரப்புல 35 தென்னை மரங்கள், 100 வாழை
மரங்கள், 20 முருங்கை மரங்கள், 20 வேப்ப மரங்கள், 15 நுணா மரங்கள், 10 ஒதியன்
மரங்கள், 4 புளிய மரங்கள், 6 நார்த்தை மரங்கள், 2 கொய்யா மரங்கள், 2 எலுமிச்சை
மரங்கள், 2 இலந்தை மரங்கள், 2 மா மரங்கள், 2 பலா மரங்கள் இருக்கு. இதுபோக, நெல்லி,
நாவல், கொடுக்காப்புளி மரங்கள்ல ஒவ்வொண்ணும் கொஞ்சம் காய்கறிப்பயிர்களும்
இருக்கு. மீ தி ஒரு ஏக்கர் நிலத்துல நெல் சாகுபடி செய்றோம்.

மூணு, நாலு வருஷத்துக்கு ஒருமுறை வரப்புல மட்டும் 15 டன் அளவுக்கு மாட்டு


எருவைப் போட்டுவிடுவோம். வரப்புல இருக்குற தாவரங்களோட இலைகள் எல்லாம்
விழுந்து மட்குறதால எப்பவும் மண் வளமா இருக்கு. மழை இல்லாத சமயங்கள்ல
போர்வெல் தண்ண ீரைப் பயன் படுத்திக்குவோம். ஓர் அடி இடைவெளியில குத்துக்கு
மூணு நாத்துனு நடவுசெய்வோம். நடவுசெய்றதோட சரி, எந்தப் பராமரிப்பும் கிடையாது.
தண்ண ீர் பாய்ச்சுறது மட்டும்தான் வேலை. வரப்புல இருக்குற சத்துகளே நெல்லுக்குப்
போதுமானதா இருக்கு. அடுத்து அறுவடை மட்டும்தான் வேலை. 

சம்பாப் பட்டத்துல சாகுபடி செய்றப்போ அறுவடைக்குப் பத்து நாள் முன்னாடியே உளுந்து


விதையைத் தூவிவிடுவோம். அதுவும் எந்தப் பராமரிப்பும் இல்லாமலேயே விளைஞ்சு
வந்துடும். சம்பாப் பட்டத்துல ஒட்டடையான் ரகத்தையும் குறுவைப் பட்டத்துல பூங்கார்,
அறுபதாம் குறுவை ரகங்களையும் சாகுபடி செய்றோம். சில சமயங்கள்ல வரிய

ரகங்களையும் சாகுபடி செஞ்சு பார்த்திருக்கேன். அதுவும் பராமரிப்பு இல்லாமலேயே
நல்லா விளையுது” என்ற ஞானப்பிரகாசம் தன்னுடைய நிலத்தில் கிடைக்கும் வருமானம்
குறித்துச் சொன்னார். 

“ரெண்டு போகம் நெல் சாகுபடி மூலமா, வருஷத்துக்கு 3,000 கிலோவுக்குக் குறையாம


நெல் மகசூலாகுது. அதை அரிசியா அரைக்கிறப்போ 1,500 கிலோ அளவுக்குமேல அரிசி
கிடைக்கும். ஒரு கிலோ அரிசியை 65 ரூபாய்னு விற்பனை செய்றேன். அதுமூலமா,
வருஷத்துக்கு 97,500 ரூபாய் வருமானம் கிடைச்சுடும். அதுல எல்லாச் செலவும்போக,
75,000 ரூபாய் வரை லாபமா நிக்கும். இதுபோக, மாட்டுக்கான வைக்கோல், தவிடு எல்லாம்
கிடைச்சுடுது.

சம்பாப் பட்டம் முடியுறப்போ போடுற உளுந்துல 450 கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு
கிலோ உளுந்து 70 ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா 31,500 ரூபாய் கிடைக்கும். இதுல
செலவுபோக, 30 ஆயிரம் ரூபாய் லாபமாக நிக்கும். 

வரப்புல இருக்குற தென்னை மரங்கள்ல இருந்து கிடைக்கிற தேங்காய்கள்ல வட்டுத்



தேவைக்குப்போக மீ தி இருக்குற காய்களைக் கொப்பரையா மாத்தி எண்ணெய்
ஆட்டுறோம். அதுல, வருஷத்துக்கு 150 லிட்டர் எண்ணெய் கிடைக்குது. அதை ஒரு லிட்டர்
300 ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா 45,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. 

வாழை மரங்கள்ல கிடைக்கிற பழங்களைப் பெரும்பாலும் வட்டுத்தேவைக்கே



வெச்சுக்குவோம். அதிகமா கிடைக்கிறப்போ நண்பர்கள், உறவினர்களுக்குக்
கொடுத்துடுவோம். மரத்துலேயே பழுக்க விட்டுத்தான் அறுவடை செய்வோம். அதனால,
பழம் நல்ல ருசியா இருக்கும். மீ தி இருக்குற மரங்கள்ல இருந்து வருஷத்துக்கு 30,000
ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைச்சுடும்” என்ற ஞானப்பிரகாசம் நிறைவாக, 

“எப்படிப் பார்த்தாலும் இந்த 1 ஏக்கர் 30 சென்ட் நிலத்துல இருந்து, வருஷத்துக்கு 2 லட்ச


ரூபாய்க்குமேல லாபம் கிடைச்சுடும். பெரும்பாலான விளைபொருள்களை
வட்டுத்தேவைக்கு
ீ எடுத்து வெச்சுக்குறதால, சரியான விற்பனை விலை சொல்ல
முடியலை. எந்தப்பராமரிப்பும் இல்லாம இந்தளவுக்கு லாபம் கிடைக்கிறது பெரிய
விஷயம்தானே” என்று சொல்லியபடி மகிழ்ச்சியுடன் விடை கொடுத்தார். 

தொடர்புக்கு,
ஞானப்பிரகாசம்,
செல்போன்: 93605 51353

You might also like