You are on page 1of 25

உயர் தொழில்நுட்ப காய்கறி சாகுபடி

பசுமைக் குடில்களில் காய்கறிப்பயிர்கள் சாகுபடி


1. தக்காளி
உலகளவில் பாதுகாக்கப்பட்ட சூழலில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் தக்காளி
முக்கியமானதாகும். தக்காளி பச்சையாகவும் சமைத்தும் உண்ணப்படுவதுடன், பதப்படுத்தப்பட்ட மற்றும்
் ப்பட்ட நிலையிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும்
உலர்தத 2.42
இலட்சம் டன் தக்காளியானது 21,086 ஹெக்டர் பரப்பளவிலிருந்து அறுவடை செய்யப்படுகிறது.
விளைச்சலை மேலும் பல மடங்கு உயர்த்தவும், ஆண்டு உழுவதும் உற்பத்தி செய்யவும், தக்காளியினை
பாலிதீன் குடிலில் வீரிய ஒட்டூ இரகம் மற்றும் திருந்திய சாகுபடி முறைகளைப் பயன்படுத்தி பயிர் செய்ய
வேண்டும். இத்தகைய சாகுபடி முறையின் மூலம் உற்பத்தி மற்றும் தரம் உயர்த்தபடுவதுடன், குறைந்த
அளவு பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்கள் பயனப்படுத்தப்படுதினால் சுற்றுப்புறச்
சூழ்நிலை மாசுபடாமலும் பாதுக்காக்கப்படுகிறது.

சாகுபடி நுட்பங்கள்
பருவம்
தக்காளி பகல் வெப்பம் 28 டிகிரி செ.கி. நிலவும் சூழ்நிலையில் நன்கு வளர்ந்து பலன் தரும்.
வெப்பநிலை 35 டிகிரி செ.கி.க்கு கூடுதலாகவோ, இரவு வெப்பநிலை 15 டிகிரி செ.கி.க்கு
குறைவாகவோ இருக்குமானால் காய்ப்பிடிப்பு மிகவும் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும். குடிலுக்குள்
ஈரப்பதம் 90 சதத்திற்கு குறைவாக இருத்தல் அவசியம்.

நாற்றங்கால்
வீரிய ஒட்டு இரக தக்காளி நாற்றுகளை 98 அறைகளைக் கொண்ட பிளாஸ்டிக் தட்டுகளில்
வளர்த்து நடவு செய்ய வேண்டும். முதலில் பிளாஸ்டிக் 0.3 சதவீதம் காப்பர்
தட்டுகளை
ஆக்ஸிகுளோரைடு கரைசலில் நனைத்து நோய்க் கிருமிகளை அழிக்க வேண்டும். பின்பு, குப்பிகளில்1:1
என்ற விகிதத்தில் மணல்+மக்கிய தென்னை நார்க்கழிவு கலக்கப்பட்ட வளர்ச்சி ஊட்டத்தினை நிரப்ப
வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்ற அளவில் வரை நேர்தத ் ி செய்ய
வேண்டும். இவ்வாறு விதை நேர்தத ் ி செய்த விதைகளை குப்பிக்கு ஒரு விதை வீதம் ஊன்ற வேண்டும்.
பின்பு பிளாஸ்டிக் தட்டுகளின் மீது வைக்கோள் கொண்டு மூடிவிட வேண்டும். பூவாளி கொண்டு ஒரு
நாளைக்கு இருமுறை வீதம் விதை முளைக்கும் வரை தண்ணீர் தெளிக்க வேண்டும்.
வளர்ச்சி உடகம் தயாரித்தல்:
செம்மண்+மணல்+மக்கிய தென்னை நார்க்கழிவு 2:1:1 என்ற விகிதத்தில் கலந்து
தயாரிக்கப்பட்ட வளர்ச்சி ஊடகம் தக்காளி சாகுபடிக்கு மிகக் சிறந்ததாகும். இந்த வளர்ச்சி
ஊடகத்தினை பயன்படுத்தி, 1 மீட்டர் அகலம், 3.5 மீட்டர் நீளம் மற்றும் 15 செ.மீ. உயரம் கொண்ட
மேட்டுப்பாத்திகளை 50 செ.மீ. இடைவெளியில் பாலிதீன் குடிலுக்குள் அமைக்க வேண்டும். நோய்க்
கிருமிகளை அழிப்பதற்காக வளர்ச்சி ஊடகத்தினை பார்மலின் 4 சதம் கரைசலில் தெளித்து பின்பு
கருப்பு நிறப் பாலித்தீன்தாள் கொண்டு காற்று புகாதவாறு மூடிவிட வேண்டும்.

நிலப்போர்வை
நிலப்போர்வை அமைக்க 200 காஜ் தடிமனுள்ள கருப்பு பாலிதீன் தாளினைப் பயன்படுத்த
வேண்டும். நிலப்போர்வையில், நாற்று நடுவதற்காக பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் 5 செ.மீ. விட்டம்
அளவுள்ள துளையினை இடவேண்டும். பின்னர் பாலிதீன் தாளினைக் கொண்டு மேட்டுப்பாத்தியை மூட
வேண்டும்.

நாற்றுநடவு:
நாற்று நடுவதற்கு, 25 நாட்கள் வயதான, ஒரே அளவு வளர்ச்சியுள்ள நாற்றுகளைத் தேர்வு
செய்ய வேண்டும். மேட்டுப் பாத்தியின் இருபுறங்களிலும் 20 செ.மீ இடைவெளிவிட்டு, இரண்டு
வரிசையில் 60x45 செ.மீ. இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

நீரப் ்பாசனம்:
ஒரு மேட்டுபாத்திக்கு இரண்டு வரிசை சொட்டு நீர்க்குழாய்களை அமைக்க வேண்டும். 30
செ.மீ. இடைவெளியில் ஒரு மணி நேரத்திற்கு 2 லிட்டர் தண்ணீர் வெளியேறும்படியான துளைகளுடன்
கூடிய குழாய்களை பயன்படுத்தி தினமும் நீரப் ்பாசனம் செய்ய வேண்டும்.

உரநீர்ப்பாசனம்:
பயிரின் வளர்ச்சி நிலை மற்றும் கால நிலைக்கு ஏற்றாவாறு செடிக்கு அளிக்கப்படும் நீரின்
அளவும் மாறுபடும். செடிகளுக்கு தினமும் சொட்டு நீர் பாசன முறையில் ஒரு மணி நேரம் தண்ணீர்
பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர் உரப்பாசனத்திற்கு அமோனியம் நைட்ரேட், பொட்டாசியம் நைட்ரேட் மற்றும்
பாஸ்பாரிக் அமிலம் போன்றவைகளை தழை, மணி மற்றும் சாம்பல்சத்து மூலங்களாக எடுத்துக்
கொள்ளலாம். கால்சியம் பற்றாக்குறையினால் ஏற்படும் காய் அடிப்பகுதி அழுகல் நோயை
குணப்படுத்தலாம். செடிகளில் ஏற்படும் நுண்ணுட்ட பற்றாக்குறையை குணப்படுத்த மக்னீசியம் சல்பேட்,
துத்தநாக சல்பேட் போன்றவற்றை நீர் மூலம் செடிகளுக்கு அளிக்கலாம். நுண்ணுயிர் உரங்களை
செடிகளுக்கு தெளிப்பதன் மூலம் பூச்சிகளை மலரச் செய்து அதன் மூலம் அதிக மகசூல் பெறமுடியும்.

பொதுவான சொட்டுநீர் உரப்பாசன முறை பின்வருமாறு (ஒரு ஹெக்டர்)


நீர்வழி உர
வ. கால நீரவ
் ழி உரத்தின்
அளவு பெயர்
பயிரின் வளர்ச்சி பருவம்
எண் இடைவெளி நாட்கள்
(கிலோ/ஹெக்டர்)
செடிகள் நடவு செய்த 19:19:19 65.78
1 நாளிலிருந்து வேர்பிடித்தல் 10 13-0-45 27.77
வரை யூரியா 8.44
12-61-0 4.92
2 தழை வளர்ச்சிப் பருவம் 30 13-0-45 28.89
யூரியா 46.12
3 பூ பூக்கும் காலம் 30 19:19:19 12.50
13-0-45 18.05
யூரியா
29.39
12-61-0 20.49
4 காய் அருவடை காலம் 80 13-0-45 111.11
யூரியா 50.14
75 சதம் மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் மூலம் அடியுரமிட பரிந்துரை = 1165 கி/ஹெக்டேர்.

கவாத்து செய்தல்:
நாற்று நட்டு இருபது முதல் முப்பது நாட்கலில் துவங்கி, ஒரு செடிக்கு இரு கிளைகள்
இருக்குமாறு வார இடைவெளியில் செடி ஒன்றுக்கு 2-3 கிளைகள் உடையதாக கவாத்து செய்ய
வேண்டும். செடியின் அடிபகுதியில் வரும் சிறு கிளைகளையும் நீக்குதல் வேண்டும்.

நடவு செய்த நான்காவது வாரத்திலிருந்து செடிகளை மெல்லிய பிளாஸ்டிக் கயிற்றினால் கட்ட


வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக விதைகளை எடை மற்றும் அதிக காற்றினால் செடிகள்
உடைவது தடுக்கப்படும்.

அறுவடை:
நாற்று நட்டு 70-80 நாட்கள் கழித்து அறுவடை செய்ய வ்ணேடும். பழங்கள், பச்சை
நிறத்திலிருந்து லேசான சிவப்பு நிறத்திற்கு மாறும்போது, வாரத்திற்கு ஒரு முறை வீதம் 180 நாட்கள்
வரை அறுவடை செய்யலாம்.

மகசூல்:
ஹெக்டருக்கு 170 முதல் 180 டன் வரை (ஒரு செடிக்கு 5 முதல் 5.5 கிலோ வரை)

குடைமிளகாய்:
பாதுகாக்கப்பட்ட சூழலில் வளர்க்கப்படும் முக்கியமான காய்கறி குடைமிளகாய் ஆகும். இதில்
நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் முக்கியமாக வைட்டமின் ‘ஏ’, ‘சி’ மற்றும் தாது
உப்புகள் நிறைந்துள்ளது ஓர் சிறப்பாகும். இந்தியாவில் தற்பொழுது குடைமிளகாயின் பயன்பாடும்
தேவையும் அதிகரித்து வருகிறது. சாதாரண முறை சாகுபடியில் குறைந்த அளவு மகசூலே (20-40
டன்/ஹெக்டர்) கிடைக்கிறது. ஆனால் பாலிதீன் குடில் சாகுபடி மூலம் தரமும், ககசூலும் (100
டன்/ஹெக்டர்) பலமடங்கு அதிகரிக்கிறது. ஆதலால், எதிர்வரும், காலங்களில் பாலிதீன் குடிலில்
குடைமிளகாயினை சாகுபடி செய்வது விவசாயிகளுக்கு மிகவும் இலாபகரமனதாக அமையும்.

காலநிலை:
குடைமிளகாய் ஒரு குளிர்காலப் பயிர். செடியின் வளர்ச்சி மற்றும் மகசூலுக்கு பகல் வெப்பம் 30
டிகிரி செ.கி.க்கு குறைவாக இருத்தல் வேண்டும். பகல் வெப்பநிலை 35 டிகிரி செ.கி.க்கு அதிகமாக
இருந்தால் காய்ப்பிடிப்பு மிகவும் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும். குறைந்த அளாவும் இரவு வெப்ப
நிலை 20 டிகிரி செ.கி. பூப்பதற்கும், காய்பிடிப்பதற்கும் உகந்ததாக இருக்கும். கோடை காலத்தில்
பாலிதீன் குடிலுக்குள் வெப்பத்தை குறைக்க நிழல் அவசியமானது. குடிலுக்குள் 50-60 சதம் ஈரப்பதம்
இருத்தல் வேண்டும்.

நாற்றங்கால்:
நாற்றங்கால் அமைப்பதற்கு 98 அறைகள் கொண்ட பிளாஸ்டிக் தட்டுகளை காப்பர் ஆக்ஸி
குளோரைடு 0.3 சதவீத கரைசலில் நனைக்க வேண்டும். பின்னர், வளர் ஊடகத்தினை (மணல்+மக்கிய
தென்னை நார்க்கழிவு 1:1 என்ற விகிதத்தில்) குப்பிகளில் நிரப்பி, ஒரு குப்பிக்கு ஒரு விதை வீதம்
விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை ஊன்ற வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற
் ி செய்ய வேண்டும்.
அளவில் டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்தத

வளர்ச்சி ஊடகம் தயாரித்தல்:


மணல் + தொழு உரம் + மக்கிய தென்னை நார்க் கழிவை 2:1:1 என்ற விகிதத்தில் கலந்து
வளர்ச்சி ஊடகமாகப் பயன்படுத்த வேண்டும். இந்த வளர்ச்சி ஊடகத்தினை கொண்டு 1 மீ. அகலமும்,
3.5 மீ. நீளமும், 15 செ.மீ. உயரமும் கொண்ட மேட்டுப்பாத்தியினை, பாலிதீன் குடிலுக்குள் அமைக்க
வேண்டும். வளர் ஊடகத்தினை பார்மலின் 4 சதக் கரைசலில் நனைத்து, பின் கருப்பு நிறப் பாலிதீன் தாள்
கொண்டு காற்றுப்புகாதவாறு மூடிவிட வேண்டும்.

நிலப்போர்வை:
நிலப்போர்வை அமைப்பதற்கு 200 காஜ் தடிமன் கொண்ட கருப்பு பாலிதீன் தாள்களைப்
பயன்படுத்த வேண்டும். நாற்று நடுவதற்காக, பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் 5 செ.மீ.விட்டம்
அளவுள்ள துளைகளை இட வேண்டும்.

நாற்றுநடுதல்:
10 நாட்களுக்குப் பிறகு 40-45 நாட்கள் வயதுடைய,
மேட்டுப் பாத்திகளில் நனைத்து நன்கு
வளர்ச்சியடைந்த நாற்றுகளை, 60x30 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

நீரப் ்பாசனம்:
நடவு செய்த 10 நாட்களிலிருந்து தினசரி சொட்டு நீரப் ்பாசனம் செய்ய வேண்டும். ஒரு
நாளைக்கு செடிகளுக்கு ஒரு சதுர மீட்டருக்கு 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் கிடைக்க வேண்டும்.

உரநிர்வாகம்:
சொட்டுநீர் உரப்பாசனம் என்பது பாசன நீரோடு உரங்களையும் சீராக கலந்து பயிர்கலுக்கு
அளிப்பதாகும். உரம் மட்டுமின்றி இம்முறையில் நுண்ணுட்டச் சத்து பூச்சி, பூஞ்சாண மருந்துகள் மற்றும்
களைக்கொல்லி மருந்துகளையும் செலுத்த முடியும், சொட்டுநீர் உரப்பாசனம் முறையில் அதிக விளைச்சல்
கிடப்பதோடு தரமான விளைப்பொருளும் கிடைகிறது. இம்முறையில் களைகளின் பெருக்கம்
கட்டுப்படுத்துவதோடு மிகக் குறைந்த அளவே வேலை ஆட்கள் தேவைப்படுகின்றனர்.
பயிரின் வளர்ச்சி நிலை மற்றும் காலநிலைக்கு ஏற்றவாறு செடிக்கு அளிக்கப்படும் நீரின் அளவும்
மாறுபடும், செடிகளுக்கு தினமும் சொட்டுநீர் பாசன முறையில் ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச
வேண்டும். சொட்டு நீர் உரப்பாசனத்திற்கு அமோனியம் நைட்ரேட், பொட்டாசியம் நைட்ரேட் மற்றும்
பாஸ்பாரிக் அமிலம் போன்றவைகளை தழை, மணி மற்றும் சாம்பல்சத்து மூலங்களாக எடுத்துக்
கொள்ளலாம். கால்சியம் பற்றாக்குறையினால் ஏற்படும் காய் அடிப்பகுதி அழுகல் நோயை
குணப்படுத்தலாம். செடிகளில் ஏற்படும் நுண்ணுட்ட பற்றாக் குறையை குணப்படுத்த மக்னீசியம் சல்பேட்
மற்றும் துத்தநாகம் சல்பேட் போன்றவற்றை சொட்டு நீர் மூலம் செடிகளுக்கு அளிக்கலாம். நுண்ணுயிர்
உரங்களை செடிகளுக்கு தெளிப்பதன் மூலம் பூக்களை மலரச் செய்து அதன் மூலம் அதக மகசூல் பெற
முடியும்.

மகசூல் பெற முடியும்:

பொதுவான சொட்டுநீர் உரப்பாசன முறை பின்வருமாறு (ஒரு ஹெக்டர்)

பரிந்துரைக்கப்படும் அளவு : 250:150:150 கிலோ/ ஹெக்டேர்


100 சதநீரவ
் ழி பரிந்துரை : 250:37.50:150 கிலோ / ஹெக்டேர்
75 சதம் மணிச்சந்தை சூப்பர் பாஸ்பேட் மூலம் அடியுரமிட பரிந்துரை 703.12 கி/ஹெக்டர்
வ. கால நீர்வழி உரத்தின் நீர்வழி உர அளவு பெயர்
பயிரின் வளர்ச்சி பருவம்
எண் இடைவெளி நாட்கள் (கிலோ/ஹெக்டர்)
செடிகள் நடவு செய்த 19:19:19 39.47
1 நாளிலிருந்து வேர்பிடித்தல் 10 13-0-45 16.66
வரை யூரியா 33.28
12-61-0 24.60
2 தழை வளர்ச்சிப் பருவம் 30 13-0-45 133.3
யூரியா 173.00
19:19:19 39.47
3 பூ பூக்கும் காலம் 30 13-0-45 83.31
யூரியா 22.97
12-61-0 12.30
4 காய் அருவடை காலம் 80 13-0-45 6.68
யூரியா 6.51

கவாத்து செய்தல்:
செடிகளில் நான்கு பெரும் கிளைகள் மட்டும் வைத்துக் கொண்டு மற்ற கிளைகளை கவாத்து
செய்தல் வேண்டும். நடவு செய்த 15 முதல் 20 நாட்களிலிருந்து வாரம் ஒரு முறை கவாத்து செய்ய
வேண்டும். ஒவ்வொரு கனுக்களிலிருந்து கிளைகள் தோன்றி இரண்டாக பிரிந்து ஒரு சக்தியுள்ள மற்றும்
சக்தியற்ற கிளைகள் உருவாகிறது. சக்தியுள்ள கிளைகளை வைத்துக் கொண்டு சக்தியில்லாத
கிளைகளை கவாத்து செய்தல் அவசியம்.
செடியின் வளர்ச்சியை முறைபடுத்துதல்:
நடவு செய்து ஆறாவது வாரத்திற்கு பின் செடிகளை பிளாஸ்டிக் கயிறு கொண்டு கட்ட
வேண்டும். இருபது நாட்கள் இடைவெளியில் செடியின் வளர்ச்சிகேற்ப கிளைகளை சணல் கொண்டு
பிளாஸ்டிக் கயிறுடன் இணைத்துக் கட்ட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் செடிகள் உடைவது
தடுக்கப்படுகிறது.

உருவமைப்பு மற்றும் கவாத்து செய்தல்:


செடியில் முதலில் தண்டுப்பகுதி உருவாகி பிறகு 9-13 இலைகள் தோன்றி பிறகு செடியின்
நுனியில் பூக்கள் உருவாகி அதன் பின்னர் முக்கிய தண்டுப் பகுதியில் இருந்து கிளைகள் உருவாகும்.
முதல் கிளையின் நுனியில் உள்ள பூக்களை பூக்கள் தோன்றிய உடன் நீக்க வேண்டும். நுனி மற்றும் பக்கக்
கிளைகளில் இரண்டு இலை மற்றும் ஒரு பூ இருக்குமாறு செய்துவிட்டு மீதி பகுதிகளில் நுனிகளை
கிள்ளிவிட வேண்டும். ஒவ்வொரு பக்க கிளைகளில் நுனிகளை கிள்ளிவிட வேண்டும் (நுனி கிள்ளுதல்).
ஒவ்வொரு பக்க கிளைகளிலும் தோன்றும் ஒரு பூ மற்றும் இரண்டு இலைகளை தவிர மற்றவைகளை
களைத்துவிட வேண்டும். பக்க கிளைகளில் மூன்று இலைகள் கூட இருக்குமாறு செய்யலாம். இவ்வாறு
செய்வதன் மூலம் ஓளிச்சேர்க்கை நன்கு நடைபெறுவதோடு மட்டுமல்லாமல் அதிக இலைப்பரப்புடன்
காய்களை மூடி பாதுக்காகவும் பயன்படுகிறது. உருவமைப்பு மற்றும் கவாத்து செய்தல் மூன்று
வாரங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். (செடியின் வளர்ச்சி அதிக அளவில் இருக்கும் சமயத்தில்)
செடியானது 9-10 மாதங்களில் 8-9 அடி உயரம் வரை வளரும் இயல்புடையது. 9 அடிக்கு உயரமாக உள்ள
செடிகளின் நுனிகளை களைத்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தண்டுப் பகுதி
உடையாமலும் மற்றும் பழங்களின் தரத்தையும் அதிகரிக்க முடியும்.

ஆறுவடை:
நடவு செய்தல் 60 நாட்களிலிருந்து 180 நாட்கள் வரை, வார இடைவெளிகளில்
குடைமிளகாயினை அறுவடை செய்ய வேண்டும். முதிர்நத
் , கரும் பச்சை நிறத்திலுள்ள , 150-200
கிராம் எடையுள்ள காய்களை அறுவடை செய்ய வேண்டும். அறுவடையின்போது காய்களை
மேற்புறமாகத் தூக்கி சிறுகாம்புடன் பறிக்க வேண்டும்.

மகசூல்:
நடவு செய்த ஆறு மாத காலத்தில் ஒரு ஹெக்டருக்கு 100 டன் மகசூல் கிடைக்கும்.
சராசரியாக ஒரு காயின் எடை 160 முதல் 180 கிராம் வரை இருக்கும்.

3.வெள்ளரி:
காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா உலகளவில் இரண்டாம் இடத்தை அடைந்திருந்தாலும்,
பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நம்மால் உற்பத்தி செய்ய முடியவில்லை. உலக சுகாதாரர்
நிறுவனத்தின் இந்திய மருத்துவக் கழகத்தின் பரிந்துரையாக ஒரு நாளைக்கு ஒருவர் 300 கிராம்
காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் 210 கிராம் காய்கறிகளை மட்டுமே
உணவாக உண்கிறோம். காய்கறி சாகுபடியில் அதிகமாக தக்காளி, வெண்டை, கத்தரி, மிளகாய்
போன்றவைகளையே பெரும்பாலான உழவர்கள் சாகுபடி செய்கின்றனர். இவ்வாறு பெரும்பான்மையான்
உழவர்கள் இவ்வகை காய்கறிகளை பயிறிடுவதால் ஒரு சில காலங்களில் உற்பத்தி அதிகமாகி
விலைவீழ்ச்சி ஏர்படுகிறது. இவ்வாறு ஒரே வகை காய்கறிகளை ஒரு குறிப்பிட்ட காலத்தில் பயிரிடாமல்
பலவகை காய்கறிகளை வருடம் முழுவதும் பயிரிட்டால் சீரான வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு வருடம் முழுவதும் பயிர் செய்வது என்பதும் திறந்த வெளியில் இயலாத ஒன்றாகும்.
ஏனென்றால் பயிற்களுக்கு தேவையான சீதோஷன நிலை வருடம் முழுவதும் ஒரே மாதிரியாக
கிடைப்பதில்லை.

பயிருக்கு தேவையான தட்பவெப்ப நிலைகளை பாலிதீன் குடில்களில் உருவாக்கிக் கொள்ளலாம்.


இத்தகைய பாலிதீன் பயிர் சாகுபடி செய்வதினால் திறந்த வெளியில் உற்பத்தி செய்ய முடியாத
காலங்களில் அதிக மகசூல் பெற்றும் விளையும் பொருட்களுக்கு எதிக விலையும் கிடைக்க
வாய்ப்புள்ளது.
இத்தகைய பாலிதீன் குடில்களில் பயிர் செய்வதற்கு தக்காளி மற்றும் மிளகாய் போலவே
வெள்ளரியும் ஒரு சிறந்த பயிராகும்.
இவற்றை சாதாரணமாக காய்கறியாக சமைக்க பயன்படுத்தாமல் இளம்பிஞ்சுப் பருவத்தில்
பறித்து பச்சை காய்கறிகளாகவோ, பச்சடி போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கவோ, பழுத்தபின்
நாட்டுச் சக்கரையுடன் சேர்த்தோ பல பழக்கலவை செய்யவோ பயன்படுத்துகிறார்கள். மேலும்
வெள்ளரியை பெரும்பாலான உணவு விடுதிகளில் சால்ட் (உண்கால்) என்று சொல்லக்கூடிய பச்சைக்
காய்கறி உணவிற்காகவும் பயன்படுத்துகிறார்கள்.

பருவம் மற்றும் காலநிலை:


வெள்ளரியை கோடை காலங்கள் தவிர்த்து மற்ற சூழ்நிலைகளில் திறந்த வெளியில் வருடம்
முழுவதும் பயிர் செய்ய, நல்ல வெளிச்சம் உள்ள மிதமான தட்ப வெப்பநிலை வெள்ளரி சாகுபடிக்கு
அவசியம். பகல் நேர வெப்பநிலை 25 டிகிரி செ.கி. இதற்கு உகந்தது மேலும் வெப்பநிலை 33
டிகிரி செ.கி.விட அதிகமாகும் போது காயில் கசப்புச் தன்மையும் ஆண் பூக்கள் எண்ணிக்கை
அதிகமாகி மகசூல் திறனும் குறைகிறது. மேற்கூறியவாறு பாலித்தீன் கூடாரங்களில் வெள்ளரிக்கு
தேவையான தட்பவெப்பநிலை உருவாகி வருடம் முழுவதும் பயிர் செய்யலாம்.

நிலத்தை பண்படுத்துதல்:
நல்ல வடிகால் வசதியுடன் கூடிய வண்டல் கலந்த மண் இதற்கு உகந்தது. மண்ணின் கார
அமிலத்தன்மை 6.5 லிருந்து 7.5 க்குள் இருக்க வேண்டும். பாலித்தீன் குடிலில் வளர்ப்பதற்கு முதலில்
நிலத்தை நன்கு பவர் டிரில்லர் கொண்டு உழ வேண்டும். பின்பு நன்கு மட்கிய தொழுஉரம் ஹெக்டருக்கு 25
டன்கள் என்ற அளவில் இட்டு மேலும் ஒரு முறை உழ வேண்டும்.
மேலும் அடியுரமாக ஹெக்டருக்கு 350 கிலோ கிராம சூப்பர் பாஸ்பேட் என்ற உரத்தை இட்டு
நிலத்தை பண்படுத்திக் கொள்ள வேண்டும். இத்துடன் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியா
என்ற நுண்ணுயிர் உரங்களை ஹெக்டருக்கு 2 கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழு உரம் மற்றும் 100
கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றுடன் கலந்து இட வேண்டும். பிறகு 4 அடி அகலத்தில் 1 அடி
இடைவெளி விட்டு மேட்டுப் பாத்திகள் சொட்டு நீர் பாசனத்திற்கு தகுந்தவாறு அமைக்க வேண்டும்.
சொட்டு நீர் பக்கக் குழாயை மோட்டுப் பாத்திக்குள் நடுவில் நீளவாக்கில் நீட்டிவிட வேண்டும். சொட்டு நீர்
பாசனத்தின் பக்கக் குழாய்கள் 5 அடி இடைவெளியிலும் பக்கக் குழாயில் நீர் சொட்டும் பகுதிகள் 60
செ.மீ இடைவெளியிலும் அமைக்கப் பெற்றிருக்க வேண்டும்.

விதைப்பு:
சாதாரண இரக வெள்ளரி சாகுபடி செய்ய ஒரு ஹெக்டருக்கு 2 கிலோ என்ற அளவிற்கு
விதைகள் தேவைப்படும். இதுவே வீரிய ஒட்டு இரகமானால் ஒரு ஹெக்டருக்கு 500 கிராம் அளவே
தேவைப்படும் விதைகளை விதைக்கும் முன்பு ஒரு கிலோ விதைக்கு 5000 இராம் அசோஸ்பைரில்லம்
என்ற நுண்ணுயிர் உரத்தை கலந்து நிழலில் உலர வைத்து பின்பு விதைக்க வேண்டும். விதைப்பதற்கு
முன்பு மேட்டு பாத்திகளை 8-12 மணி நேரத்திற்கு சொட்டு நீர் பாசத்தின் மூலம் நீர் விட வேண்டும்.
பின்னர் விதைகளை 60 செ.மீ இடைவெளியில் பாத்தியின் மையப் பகுதியில் விதை ஒரு குழிக்கு
ஒன்றாக ஊன்ற வேண்டும். மேலும் 2 சதவீத விதைகளை வளர் ஊடகம் நிரப்பட்ட பைக்கு ஒன்றாக
பாலிதீன் பைகளில் பாடுவாசிக்காக அன்றே விதை ஊன்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

நீரப் ்பாசனமும் உரமிடலும் :


விதைகளை விதைத்த பின் தினமும் மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு சொட்டு நீர் கொடுக்க
வேண்டும். ஒரு சொட்டுவானில் இருந்து ஒரு நாளைக்கு 4 லிட்டர் தண்ணீர் ஒரு மணி நேரத்திற்கு
வருமாறு அழுத்தத்தை சரிசெய்து கொள்ள வேண்டும். பாலிதின் குடில்களின் மேட்டுப் பாத்திகளில் உயர்
விளைச்சல் இரகங்களை பயிரிடுவதால் தேவையான உரங்களை சமச்சீராக இடவேண்டும். பயிரின்
வளர்ச்சிக் காலம் முழுவதும் நீரவ
் ழியாக இதற்கு 150 கிலோ தழைச்சத்து, 75 கிலோ மணிச்சத்து
மற்றும் 75 கிலோ சாம்பல் சத்து அவசியமாகும். இதில் 56 கிலோ மணிச்சத்தை அடியுரமாக
கொடுத்துள்ளோம். மீதமுள்ள உரங்களை ஆரம்ப காலக்கட்டங்கள் (10 நாட்கள்), தழைக்கும்
பருவம் (20 நாட்கள்), பூக்கும் பருவம் (20 நாட்கள்) மற்றும் காய்க்கும் பருவம் (40 நாட்கள்) ஆகிய
பருவங்களில் பிரித்து சொட்டு நீர் பாசனத்துடன் கொடுக்க வேண்டும்.
இதற்கு 19:19:19, 13:0:45, 12:61:0 மற்றும் யூரியா ஆகிய நீரில் கரையும் உரங்களை
பயன்படுத்தலாம்.

் ி:
பின்செய்நேர்தத
விதைகள் விதைத்தப்பின் 5-7 நாட்களில் முளைக்கத் தொடங்கும். விதைத்த 30 நாட்களில்
முதல்களையை எடுத்து பாத்திகளை நன்கு கொத்திவிட வேண்டும். களையின் அளவைப் பொறுத்து,
இரண்டு அல்லது மூன்று முறை பதினைந்து நாட்கள் இடைவெளியில் களை எடுக்க வேண்டும்.
அறுவடை:
விதைத்த 45 நாட்கள் கழித்து வெள்ளரி முதல் அறுவடைக்கு வரும். சிறிய பிஞ்சு காய்களை
பூத்த 8 முதல் 10 நாட்கள் கழித்து அறுவடை செய்ய வேண்டும். 5-7 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை
செய்யலாம். இவ்வாறு 8-10 அறுவடைகள் வெள்ளரியில் செய்யலாம். மொத்த மகசூலாக ஒரு
ஹெக்டருக்கு 8-10 டன்கள் கிடைக்கும்.

காய்கறிபயிர்களை தாக்கும் நோய்களும் அதன் மேலாண்மையும்


பெரும்பாலான நோய் காரணிகள், மண், மண்ணில் எஞ்சிய தாவர பகுதிகளிலும் மற்றும் மட்கிய
பெருட்களிலும், பயிர் இல்லாத காலத்தில் தங்கி பின் பயிர்களுக்கு சேதத்தை விளைவிக்கின்றன .
இவை, பயிர் இல்லாத காலத்தில் பூசண இழைகளாகவோ அல்லது வித்துக்களாகவோ மண்ணில்
வாழ்கின்றன. நோயை உண்டாக்கும் அளவிற்கு இனவிருத்தி அடைந்த பிறகு, பல இடங்களுக்கு பரவி
நோயை உண்டாக்குகின்றன. பயிர் நோய்களானது, விதை, காற்று, மண், மழை நீர், பாசன நீர், பூச்சி,
மனிதன் மற்றும் கால்நடை மூலமாக பல்வேறு பயிர்களுக்கு பரவி சேதத்தை உண்டாக்குகின்றன. தகுந்த
வெப்ப நிலையும், காற்றில் ஈரப்பதமும் இருக்கும் போது, நோய் காரணிகள் வேகமாக பரவுகின்றன.
காய்கறி பயிர்களை தாக்கும் நோய்காரணிகளின் அறிகுறி மற்றும் மேலாண்மை முறைகளை சுருக்கமாக
இப்பகுதியில் காண்போம்.

நாற்றழுகல் நோய்:
தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றங்காலில் இந்நோய் பரவலாக காணப்படுகின்றது . நோயின்
தாக்குதல் முதலில் விதை முளைக்கும் நிலையில் தோன்றி பின்னர் வித்திலை, தண்டின் அடிப்பகுதி
மற்றும் முதன்மை வேர்களுக்கும் பரவுகின்றது. நோயின் தாக்கம் முதலில் திட்டு, திட்டாக தோன்றி,
பின்னர் தக்கப்பட்ட இரண்டு முதல் நான்கு நாட்களுக்குள் நாற்றங்கால் முழுவதிலும் பரவி
அழித்துவிடும்.

மிளகாய் பின்கருகல் மற்றும் பழம் அழுகல் நோய்:


இந்த நோய் பொதுவாக வளர்ந்த செடிகளிலும் மற்றும் பழுத்த பழங்களிலும் காணப்படும்.
நுனிக்கருகல் அறிகுறி இளம் கிளைகளில் முதலில் தோன்றும், கிளைகள் நுனியிலிருந்து பின்னோக்கி
கருக ஆரம்பிக்கும். செடியின் ஒரு சில கிளைகள் அல்லது செடியின் மேற்பாகம் முழுவதும் கருகிக்
காணப்படும். கருகிய பாகங்கள் வைக்கோல் நிறத்தில் தோற்றமளிக்கும். இப்பகுதியில் குண்டூசியின்
தலையைப் போன்று அதிக அளவில் பூசண வித்துக்கள் காணப்படும். நோயின் தீவிரத்தைப் பொருத்து
செடியில் சில கிளைகள் அல்லது செடி முழுவதுமே சுருகி மடிந்துவிடும். பழம் அழுகல் நோய் பழுத்த
பழங்களில் தோன்றும். முதலில் கரிய நிறப் புள்ளிகள் பழத்தின் மேற்பகுடியில் காணப்படும். பின்பு
இப்புள்ளிகள் விரிவடைந்து நீள்வட்டப் புள்ளிகளாக, உட்குவிந்து, சாம்பல் நிறத்துடன், புள்ளிகளைச் சுற்றி
மெல்லிய கருமை நிற வளையத்தைக் கொண்டும் காணப்படும். புள்ளியின் சாம்பல் நிறப் பகுதியில்
நுண்ணிய கருமை நிற புள்ளிகளாக ஒப்பூசணத்தின் வித்துக்கள் காணப்படும். சில சமயங்களில் பழம்
முழுவதும் வைக்கோல் நிறமாக மாறிக் காணப்படும். நோய் தாக்கிய பழங்கள் செடியிலிருந்து
உதிர்ந்துவிடும்.
தொடர்ச்சியான இடைவெளியில் மழையும் அதனுடன் ஈரப்பதமும் இருந்தால் நோய் தாக்கம்
தீவிரமடையும்.

பியுசேரியம் வாடல் நோய்:


இந்த நோயானது ஃபயூசேரியம் ஆக்ஸிஸோபரம் என்னும் நோய் காரணியால் தோன்றுகிறது.
நோய் தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் அடிப்பக்கத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறிக் காணப்படும்.
அதன் பின், நோயானது பக்க கிளைகளுக்கு பரவத் துவங்கும். நோய் தீவிரமாகும் போது செடியில்
காணப்படும் அனைத்து கிளைகளும் காய்ந்து, செடி இறந்துவிடும்.

முன்கருகல் நோய்:
இந்த நோய் தக்காளியின் இலைகளை தாக்கி, இலைப்புள்ளி மற்றும் இலை கருகல் நோயை
உண்டுபண்ணுகிறது. வளர்நத
் செடிகளின் முதிர்நத
் இலைகளில் வளையங்களை ஒன்றினுள் ஒன்று
அடுகியது போன்ற புள்ளிகள் ஒழுங்கற்ற வடிவில் அடர் பழுப்பு நிறத்தில் காணப்பகும். பின்னர்,
இப்புளிகள் ஒன்றிணைந்து பெரிய வடுக்களாக மாறி செடி முழுவதையும் அழித்துவிடும்.

செப்டோரியா இலைப்புள்ளி நோய்:


இந்த நோய் செப்டோரியா லைக்கோமெக்சிஸி என்ற பூசணத்தால் ஏற்படுகிறது . நாற்றங்கால்
முதல் அறுவடை வரை பயிரின் எந்தப் பருவத்திலும் தாக்கி சேதத்தை ஏற்படுத்தும் . இந்த நோயின்
அறிகுறியாக இலைகளில் சிறிய வட்ட வடிவிலான கரும்பழுப்பு நிற ஓரத்துடன் கூடிய சாம்பல் நிற மையப்
பகுதியைக் கொண்ட பல புள்ளிகள் தோன்றும். நோயின் தீவிரம் அதிகமாகும் போது பல புள்ளிகள்
ஒன்று சேர்ந்து பின்பு இலை சுருகி உதிர்த்துவிடும். இந்த நோய் மழை பெய்யும் பருவத்தில் அதிகம்
தோன்றும்.

கொடிவகைச் செடிகள் அடிச்சாமபல் நோய்:


இந்த நோய் சூடோபெரனோஸ்போரா கியுபென்சிஸ் என்ற பூசணத்தால் ஏற்படுகிறது.
இலைகளின் மேற்பரப்பில் மஞ்சள் நிறத்தில் ஒழுங்கற்ற கோண வடிவப் புள்ளிகள் காணப்படும்.
இப்புள்ளிகள் பெரும்பாலும் நரம்புகளுக்கு இடைப்பட்டே காணப்படும். இலைகளின் அடிப்பகுதியில்
வெண்மை நிற பூசண வளர்ச்சி காணப்படும். நோயின் தீவிரம் அதிகமாகும் போது இலைகள் முழுவதும்
நோய் பரவி உதிர்ந்துவிடும். பொதுவாக காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது இந்த நோய்
அதிகம் காணப்படும்.

காய் அழுகல் நோய்:


இந்த நோய் பித்தியம் அபானிடெர்மேட்டம் மற்றும் பித்தியம் டிபேரியேனம் போன்ற பூசணங்களால்
ஏற்படுகிறது. பூசணி, பீர்க்கு, புடல், பாகல், வெள்ளரி போன்ற பல வகைப் பயிர்களின் காய்களை இந்த
நோய் தாக்குகின்றது. மேலும் ஃபியுசேரியம், ரைசோக்டோனியா, பைப்டோப்தோரா போன்ற
பூசணங்களும் காய் அழுகல் நோயைத் தோற்றுவிக்கின்றன.
இந்த நோயின் அறிகுறியாக காய்களின் மேல் கரும்பச்சை நிற நீர்க்கசிவுடன் கூடிய
மெண்மையான அழுகலும், அழுகிய இடத்தில் பஞ்சு போன்ற வெண்மையான பூசண வளர்ச்சியும்
காணப்படும். பூசண வளர்ச்சி காணப்படும் பகுதிகளிலும் சுற்றியுள்ள விளின்புகளும் கரும்பச்சை
நிறமாக நீர்க் கசிவுடன் மாறி அந்தப் பகுதிகளிலும் பூசண வளர்ச்சி காணப்பகும். இவ்வாறு தாக்கப்பட்ட
பகுதி விரிவடைந்துக் கொண்டே செல்லும். பூசணம் தாக்கிய பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசும். இந்த
நோய் மழை பெய்யும் போதும் அதற்குப் பின்னரும் மண்ணைத் தொடுக் கொண்டிருக்கும் காய்கள்
மற்றும் மண்ணிற்கு அருகில் இருக்கும் காய்களையும் அதிகம் தாக்குகின்றது.

வெங்காயத்தில் அடித்தண்டு அழுகல் நோய்:


இந்த நோயானது ஃபயூசேரியம் அக்ஸிஸோபரம் மற்றும் எர்வீனியா என்னும் நோய் காரணியால்

தோன்றுகிறது. நோய் தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் அடிப்பாகத்தில் இருந்து மஞ்சள் நிறமாக

மாறிக் காணப்படும். நோய் தாக்கப்பட்ட வெங்காய கிழங்கில் நீர்க்கசிவுடன் கூடிய மென்மையான

அழுகலும், அழுகிய இடத்தில் பஞ்சு போன்ற வெண்மையான பூசண வளர்ச்சியும் காணப்படும்.

் அழுகலும், அழுகிய இடத்தில் துர்நாற்றமும்


எர்வீனியா நோய் தாக்கப்பட்ட வெங்காய கிழங்கில் நீர்தத

வீசும்.

காய்கறியில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை:


 நோயைத் தாங்கி வளரக் கூடிய எதிர்ப்பு சக்தி கொண்ட இரகங்களை பயிரிடுவது நல்லது.
 நோய் தாக்காத விதைகளை தேர்வு செய்ய வேண்டும்.
 நோயினால் தாக்கப்பட்ட செடிகளை வேருடன் பிடுங்கி எரித்துவிட வேண்டும்.
 பயிற்சுழற்சி செய்வதோடு தோட்டத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
 இரண்டு வரிசை சோளம் அல்லது மக்காச்சோளம் பயிரிட்டால் நச்சுயிரி நோய் தாக்குதலைக்
குறைக்கலாம்.
 நாற்று அழுகல் நோயை கட்டுப்படுத்த உயரமான நாற்றங்கால் பகுக்கைகளை அமைக்க
வேண்டும். நீரப் ்பாசன செம்மையாகவும், விதை நடவு செய்யும் போது மிகவும் நெருக்கம்
இல்லாமல், இடைவெளி விட்டு நடவு செய்யவும். ஒரு கிலோ விதைக்கு 4 கி டிரைகோடெர்மா
விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். (அ) 3 கி கார்பன்டாசிம் பயன்படுத்தி
விதை நேர்த்தி செய்ய வேண்டும். நாற்றங்காலில் நீர் தேங்கக் கூடாது. காப்பர்
ஆக்ஸிகுளோரைடு 2.5 கி/லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து மருந்தை பாத்திகளில் ஊற்ற
வேண்டும்.
 வாடல் நோயை கட்டுப்படுத்த விதைகளாய் விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு, ஒரு
கிலோ விதைக்கு ட்ரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது கேப்டான் அல்லது தரம் 2 கிராம்
கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். சூடோமோனஸ் ப்ளோரசன்ஸ் மூலம்
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்தத
் ி செய்து 24 மணி நேரம்
கழித்து விதைக்க வேண்டும். நாற்றங்காலில் ஒரு சதுர மீடட
் ருக்கு 20 கிராம் சூடோமோனஸ்
ப்ளோரசன்ஸ் இட வேண்டும். நாற்றுகளை நடவின்போது 0.5 சத சுடோமோனஸ் கரைசலில் 30
நிமிடம் நாற்றுகளின் வேர்களை நனைத்து நட வேண்டும். நாற்று நட்ட 30 ம் நாள் ஒரு
ஹெக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனஸ் ப்ளோரசன்ஸை 50 கிலோ மட்கிய தொழு உரத்துடன்
கலந்து இட வேண்டும்.
 காய்கறியில் இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த மேன்கோசெப் என்ற பூசணக் கொல்லியினை
2 கிராம் என்ற அளவில் கலந்து 15 நட்கள் இடைவெளியில் இரண்டு
ஒரு லிட்டர் தண்ணீருக்கு
முறை தெளிக்க வேண்டும்.

 காய்கறியில் சாம்பல் நோயை கட்டுப்படுத்த நனையும் கந்தகத்தூள் 2 கிராம் ஒரு லிட்டர்


நீரில் கலந்து தெளிக்க வேண்டும். கொடிவகைக் காய்கறிகளுக்கு தாமிரம் மற்றும் கந்தகத்
தூள்களைக் தெளிக்கக் கூடாது.
 அடிசாம்பல் நோயை கட்டுபடுத்த மாங்கோசெப் 2 கிராம் அல்லது 2 கிராம் ரிடோமில் எம்இசட்72
ஒரு லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
 மிளகாயில் நுனிக்கருகல் மற்றும் பழ அழுகல் நோயை கட்டுப்படுத்த 1 கிலோ மேங்கோசெப்
என்ற பூசணக் கொல்லியினை 500 லிட்டர் நீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் மூன்று
முறை தெளிக்க வேண்டும்.
 காய்கறியில் நச்சுயிரி நோய் பரப்பும் பூச்சிகளை கட்டுப்படுத்த 2 மில்லி வேம்பு எண்ணெயை ஒரு
லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது மஞ்சள் ஒட்டு பொறியை
ஹெக்டேருக்கு 15 அமைக்க வேண்டும் அல்லது மெத்தில் டெமட்டான் அல்லது டைமீதட
் ோயேட்
என்ற மருந்தை ஒரு ஹெக்டேருக்கு 500 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
காய் அழுகல் நோய் பித்தியம் காரணியை கட்டுப்படுத்த நிலத்தில் தண்ணீர் தேங்காதவாறு
நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். காய்கள் மண்ணில் படாதவாறு பார்த்துக் கொள்ள
வேண்டும். காய்களில் காயங்கள் ஏற்படாதவாறு பராமரிக்க வேண்டும். நோய் தாக்கிய காய்களை
அவ்வப்போது வயலில் இருந்து அகற்றி அழித்துவிட வேண்டும். காய்களை நல்ல காற்றோட்டமுள்ள,
ஈரப்பதம் இல்லாத இடத்தில் சேமிக்க வேண்டும்.

மாடித் தோட்டம்
காய்கறிகள் நம் உணவில் இன்றியமையாத ஒன்றாகும். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு
காய்கறிகள் ஒரு முக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவாக இருக்கிறது. சரிவிகித உணவின்
அடிப்படையில் வயது வந்தோருக்கு 85 கிராம் பழங்களையும், 300 கிராம் காய்கறிகளையும், நமது
உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது உணவு வல்லுநர்களின் கூற்று. ஆனால், நாம்
120 கிராம் காய்கறிகளை தான் எடுத்துக் கொள்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு
பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன. காய்கறிகள் பயிரிடுவதற்கான உரம் மற்றும் பூச்சிக்கொல்லி
மருந்துகளின் விலை உயர்ந்து வருவது மற்றும் இடைதரகர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றால்
காய்கறிகளின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நடுத்தர வர்க்க மக்களால் காய்கறிகளை
உணவில் சேர்த்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு நமக்கு தேவையான காய்கறிகளை நாமே பயிரிட்டு கொள்ள வீட்டு
தோட்டம் அமைத்து காய்கறிகளின் உற்பத்தியை பெருக்குவது அவசியமாகிறது. நகர்புறங்களில் வாழும்
மக்களுக்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தால் வீட்டின் பின்புறம் தோட்டம் அமைப்பது முடியாத
காரியமாகும்.
எனவே இதற்கு மாற்றாக மாடித்தோட்டம் அமைத்து காய், கனி, மருந்து வகை செடிகள்,
பூச்செடிகள் மற்றும் அலங்காரத்தாவரங்கள் ஆகியவற்றை வளர்த்து பயன் பெறலாம்.

மாடித் தோட்டத்தின் பயன்கள்:


 நமக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் நாம் உற்பத்தி செய்து பயன்படுத்தலாம்.
 மிகக் குறைந்த செலவில் காய்கறிகளை பயிரிடலாம்.
 மன உளைச்சல், மனச் சோர்வு போன்றவற்றால் அவதிபடுபவர்கள் மாடியில் காய்கறியினை
பயிரிடும் போது புத்துணர்ச்சி கிடைக்கிறது.
 மாசுபடுதலை பெருமளவிற்கு கட்டுப்படுத்துகிறது.
 காற்றில் பிராண வாயுவின் அளவை அதிகரிக்கிறது.
 வீட்டினுள் வெப்ப நிலையின் அளவு 6 டிகிரி முதல் 8 டிகிரி செல்ஷியஸ் வரை குறைகிறது.
 நமக்கு பிடித்த தேவையான காய்கறிகளை தேர்வு செய்து நாமே பயிரிடலாம்.

செடிகள் வளர்ப்பதற்கான பாலிதீன் பைகளை தயார் செய்தல்:


 தென்னை நார்கழிவு கட்டியுடன் கூடிய பாலிதீன் பைகளை எடுட்துக் கொள்ள வேண்டும்.
 கத்தரிக்கோல் கொண்டு சீலிடப்பட்ட பகுதியை கத்தரித்து பிரிக்க வேண்டும்.
 தேவையான தண்ணீரை தென்னை நார் கழிவு கட்டிகளுடன் சேர்க்க வேண்டும்.
 ஐந்து முதல் பத்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.
 தற்போது தென்னை நார்க்கழிவு நான்கு முதல் ஐந்து பங்காக அதிகரிக்கும்.
 அதிகப்படியான நீர்வெளியேறி செடிகள் அழுகாமல் இருக்க பையின் பக்கவாட்டில் நான்கு
துறைகளை இட வேண்டும்.
 நுண்ணுயிர் (அசோஸ்பை ரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா) மற்றும் நுண்ணுயிர் பூஞ்சான
கொல்லிகளை (சூடோமோனாஸ் மற்றும் டிரைகோ டெர்மா விரிடி) 1 கிலோ தொழு உரத்துடன்
கலந்து அதனை பின் தென்னை நான் கழிவுடன் நன்கு கலக்க வேண்டும்.
 செடிகள் வளர்ப்பதற்கான பைகளில் தென்னை நார் கழிவு உரத்தினை நிரப்பும் போது பையின்
உயரத்தில் ஒரு அங்குலத்திற்கு கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும்.
 தென்னை நார் கழிவுகள் நன்கு மக்குவதற்கு நிரப்பிய பைகளை 7 முதல் 8 நாட்கள் அப்படியே
வைக்க வேண்டும். தற்பொழுது தென்னை நார் கழிவு கருப்பு நிறமாக மாறிவிடும்.
 இப்பொழுது தான் பைகள் விதைகள் விதைப்பதற்கு ஏற்றதாக இருக்கும்.

வளர்க்கும் காலம்:
காய்கறி செடிகளை எல்லா காலங்களிலும் பயிர் செய்யலாம். ஆனால், ஏபரல் மற்றும் மே
மாதங்களில் வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இந்த இரண்டு மாதங்களை தவிர்ப்பது
நல்லது.

விதைப்பு முறை – நேரடி விதைப்பு முறை:


நேரடி விதைப்பு விதைகளான வெண்டை, கொத்தவரை, செடி அவரை மற்றும் முள்ளங்கி
விதைகளை நேரடியாக விதைக்க வேண்டும். விதையின் அளவைவிட இரண்டரை மடங்கு ஆழத்தில்
விதைகளை விதைத்து பிறகு மூடிவிட வேண்டும்.
கீரை வகைகளின் விதைகள் அளவில் மிகச்சிறியதாக இருப்பதால், ஒரு தேக்கரண்டி
விதையுடன் இரண்டு பங்கு மணல் அல்லது நுண்ணுயிர் உரத்தை கலந்து தெளிக்க வேண்டும்.
இப்பொழுது செய்தித்தாளால் மூடிவிட வேண்டும். பின் பூவாளி கொண்டு நீர் ஊற்ற வேண்டும்.
விதைகள் நன்கு முளைத்தப்பிறகு தாளை எடுத்துவிட வேண்டும்.

விதைப்பு முறை – நாற்றுவிட்டு நடவு செய்யும் முறை:


நாற்றுவிட்டு நடவு செய்து பயிரிடும் காய்கறிகளான தக்காளி, கத்தரி மற்றும் மிளகாய்
ஆகியவற்றை குழித்தட்டில் ஒரு குழிக்கு ஒருவிதை வீதம் விதைக்க வேண்டும். நாற்றின் வயது 30-35
நாட்கள் வந்த பிறகூ செடிகளை வளர்ப்பதற்கான பையில் நட வேண்டும். அதுவரை பையில் கீரை
விதைகளை விதைத்து பயன்பெறலாம்.
நீர் ஊற்றுதல்:
பொதுவாக தினம் ஒரு முறையும் கோடைகாலத்தில் இரண்டு முறையும் செடிகளுக்கு நீர் ஊற்ற
வேண்டும்.

உரமிடுதல்:
கொள்கலன்களில் வளர்க்கும் செடிகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை இயற்கை உரமிட்டால் அதன்
வேரகள் நன்றாக வளரும். இயற்கை முறையில் உள்ள உரங்கள் தவிர நீரில் எளிதில் கரையக் கூடிய
செயற்கை செயற்கை உரங்களை ஒரு தேக்கரண்டி வீதம் இளம் பருவத்திலும். இரண்டு தேக்கரண்டி
வீதம் பூக்கள் பூக்கும் தருணத்திலும், பழங்கள் பெருக்கம் அடையும் நேரத்திலும் தேங்காய்நார் கழிவு
கலவை மீது போட வேண்டும். இதனால், செடிகள் நன்கு செழிப்பாக இருக்கும்.

பூச்சிகளை கட்டுப்படுத்துதல்:
சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, மாவுப்பூச்சி, தத்துப்பூச்சி, இலைப்பேன் ஆகியவை
செடிகளின் ஆரம்ப வளர்ச்சியை அதிகமாக பாதிக்கிறது. இதனை கட்டுப்படுத்த பூண்டு, இஞ்சி
மற்றும் பஞ்சை மிளகாய் கரைசல் கொண்டு செடிகளின் மீது வாரத்திற்கு ஒருமுறை தெளித்து
கட்டுப்படுத்தலாம்.

பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் கரைசல் தயாரிக்கும் முறை:


18 கிராம் பூண்டை எடுத்து தோல் நீக்கிய பிறகு நன்கு பசைபோல் அரைத்துக் கொள்ள
வேண்டும். இதைப் போன்று மிளகாய் 9 கிராம் மற்றும் இஞ்சி 9 கிராம் ஆகியவற்றை அரைத்து இவை
மூன்றையும் ஒரு லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும். இந்த கரைசலை இரண்டு தேக்கரண்டி
காதிசோப் கரைசலுடன் சேர்த்து நன்கு கலக்கிய பிறகு வடிகட்டியபின் செடிகளின் மேல் தெளிக்க
வேண்டும்.
காய் மற்றும் தண்டு துளைப்பான் ஆகிய பூச்சிகளின் தாக்குதலினால் பழங்கள் உண்பதற்கான
தன்மையை இழந்து விடுகின்றது. இதனை தவிர்க்க வேப்ப எண்ணெய் 4 மில்லியுடன் 1 லிட்டர்
தண்ணீர் மற்றும் காதிசோப் கரைசல் சேர்த்து செடிகள் மீது தெளிக்க வேண்டும்.
100 கிராம் சாணத்துடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து கலக்கி கோணிப்பை கொண்டு
வடிகட்டிய பிறகு இக்கரைசலுடன் 500 மி.லி. தண்ணீர் சேர்தது ் மீண்டும் வடிகட்ட வேண்டும்.
இவ்வாறாக கிடக்கப்பெறும் தெளிவான கரைசலை செடிகளுக்கு தெளிக்கவும்.

நோய்கள்:
பூஞ்சாண நோய்களான வேர் அழுகல், செடி கருகுதல் மற்றும் வைரஸ் நோய்களின் தாக்கம்
மழைக்காலங்களில் சற்று அதிகமாக இருக்கும்.
இதனை தவிர்க்க டிரைகோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் போன்ற நுண்ணுயிர்
கொல்லிகளை பயிர் செய்வதற்கான கலவையை தயார் செய்யும் போதே சேர்த்து கலக்க வேண்டும்.
ஒரு பைக்கு 100 கிராம் வேப்பம் புண்ணாக்கு மற்றும் 10% மாட்டு கோமியத்தை செடிகளின்
மீது தெளித்தல் போன்றவை இயற்கை முறையில் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறையாகும்.
வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட செடிகளின் இலைகளில் மஞ்சள் நிற திட்டுக்கள் காணப்படும்.
அவற்றை உடனடியாக வேருடன் நீக்க வேண்டும்.

அருவடை செய்தல்:
நான் உண்பதற்கு ஏற்றவாறு உள்ள நிலையை அடையும் போது காய்கறிகளை அறுவடை செய்ய
வேண்டும். உதாரணமாக தக்காளியை நன்கு பழுத்த நிலையிலும், கிழக்கு வகைகளை நன்கு முதிர்ச்சி
அடைந்தபிறகும், கீரைகளை இளம் தளிராக இருக்கும் போதும், செடி அவரை/
வெண்டை/கொத்தவரை/கத்தரி போன்றவற்றை இளம்பிஞ்சுகளாக இருக்கும் போதும் பறிக்க வேண்டும்.
அப்போது தான் காய்கறியின் சத்துக்களும், மணமும் மாறாமல் பசுமையாக இருக்கும்.
ஆடிப்பட்ட காய்கறிகளில் உற்பத்தியைப் பெருக்க
உயிர் தொழில்நுட்ப உத்திகள்
சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா காய்கறிகளை அதிக பரப்பளவில் சாகுபடி செய்கின்றது.

உலக உற்பத்தி அளவில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது.

2013-14 கணக்கீட்டின்படி இந்தியா 9.2 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் 162.18 மில்லியன்


மெட்ரிக் டன் காய்கறிகளை உற்பத்தி செய்கிறது.

உற்பத்திதிறன் 16.2 மெட்ரிக் டன்/ஹெக்டேர் ஆகும். இருந்த போதிலும் இந்திய மருந்து

் ி கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட, ஒரு தனி மனிதனுக்கு தேவையான காய்கறி அளவான 300


ஆராய்சச

கி/நாள் கிடைப்பது இல்லை. பதிலாக 175 கி மட்டுமே கிடக்கின்றது.

ஏனெனில் இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை 120 கோடி. மேலும் இந்தியாவின்

பெருளாதாரத்தில் காய்கறிகள் பெரும்பங்கு வகிக்கிறது. காய்கறி உற்பத்தி வேலை வாய்ப்பை

அதிகப்படுத்துகிறது. அதிக நாட்கள் வயதுடைய பயிர் சாகுபடியில் ஊடுபயிராக காய்கறிகளை பயிரிட்டு

வருமானத்தை பெருக்கலாம்.

மேலும் வேளாண் பொருட்கள் பதனிடும் தொழிற்சாலைகளில் காய்கறிகள் (எ.கா) தக்காளி,

வெங்காயம், மிளகாய், முருங்கை, மரவள்ளி மற்றும் உருளைகிழங்கு போன்றவை மிகுதியாக

பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காய்கறி பயிரினை நாம் உயிர் தொழில்நுட்ப உத்திகளை

பயன்படுத்தி அதன் உற்பத்தி திறனையும், நல்ல தரம் வாய்நத


் காய்கறியை உற்பத்தி செய்வதின் மூலம்

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் இந்திய மக்களின் உடல் நலத்தையும் பேணிக்காக்க முடியும்.

மேற்கண்ட அனைத்து பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு காய்கறி உற்பத்தியை


அதிகப்படுத்த பல்வேறு உயர் விஞ்ஞான தொழில் நுட்பங்களை தமிழ்நாடு வேளாண்மைப்

பல்கலைக்கழகத்திலுள்ள, தோட்டகலைத்துறை பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு

தொழில்நுட்பங்களை நிலைப்படுட்தி உள்ளது. அவற்றினை இங்கு காண்போம்.

உயிர் தொழில் நுட்ப உத்திரகள்


 வீரிய ஒட்டு இரகங்களை பயன்படுத்துதல்.
 சொட்டுநீர் உரப்பாசனம்.
 துல்லியப்பண்ணைத் திட்டம்.
 விதை நேர்த்தி.
 ஒருங்கிணைந்த உர மேலாண்மை.
 ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் பாதுகாப்பு.
 நுண்ணுயிர் உரம் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள்.
 களை கட்டுப்பாடு.

தக்காளி (உகந்த இரகங்கள்)


 கோ-1, கோ-2, கோ-3, பையூ-1, பி.கே.எம்-1

வீரிய இரகம்
 கோடிஎச்-1, கோடிஎச்-2, கோடிஎச்-3, சிவம், லட்சுமி, அர்கா ரக்சக்.

் விதைகளை, விதை நேர்த்தி செய்து நாற்றங்கால் அமைத்து, நாற்றுகளை


நல்லதரம் வாய்நத

உருவாக்கி பின்பு நிலத்தில் தகுந்த இடைவெளி கொண்டு நடவு செய்ய வேண்டும். நட்ட 7 ம் நாள்

கார்போஃப்யூரன் என்ற குருணை மருந்து இட வேண்டும். எக்டேருக்கு 7 கிலோ என்ற அளவில் இட்டு சாறு

உறிஞ்சும் பூச்சிகளாய் கட்டுப்படுத்த வேண்டும்.

வளர்ச்சி மிகுந்த இரகங்களை வீரிய ஒட்டு இரகங்களை பயிர் செய்யும் போது அதற்கு
ஆதாரமாக மூங்கில் குச்சியினை செடி அருகே நட்டு செடியினை சணல் அல்லது வாழை நார் கொண்டு

கட்ட வேண்டும். இதனால் செடிகள் கீழே சாயாமலும், பழங்கள் மண்ணில் பட்டு அழுகாமலும் பார்த்துக்

கொள்ள முடியும்.

மேலும், வீரிய ஒட்டு இரகங்களை பயிர் செய்யும் பொழுது 2-3 உறுதியான அடிக்கிளைகளை

மட்டும் அனுமதித்து ஏனைய பக்கக் கிளைகளை நீக்கிவிட வேண்டும். இதனால் அதிக பூக்களும்,

பெரிய காய்களும் உருவாகிறது.

இலை சுருட்டு நச்சுயிரி தக்காளியை தாக்கும் முதன்மை நோயாகும். இந்த நச்சுயிரி வெள்ளை

ஈக்கள் மூலமாக பரவுகிறது. வெயில் காலங்களில் மிகவும் அதிகமாக இருக்கும். இதனைக்


கட்டுப்படுத்த எக்டருக்குமெத்தில் டெமட்டான் அல்லது மோனோ குரோட்போராஸ் அல்லது டைமீததே
் யேட்

1-2 மி.லி/ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.


புள்ளி வாடல் நோயினை பரப்ப இலைப்பேன் காரணியாக செயல்படுகிறது. இந்த நோயினால்

தாக்கப்பட்ட செடிகளை களைவதுடன், இப்பேன்களை கட்டுப்படுத்த எக்டேருக்கு 7 கிலோ ப்யூரடான்

குருணையை இட வேண்டும்.

மண்ணில் கால்சியம் சத்து குறைப்பாட்டால் பழங்களின் அடிப்புறம் அழுகி பழங்கள் வீணாகிறது

மற்றும் போரான் சத்து குறைப்பாட்டால் பழங்கள் வெடித்து அழுகிவிடுகின்றன.


இதனால் பெரிய மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதனைப் போக்க ஒரு லிட்டர் நீருக்கு கால்சியம்

குளோரைடு 2 கிராம் என்ற அளவில் கரைத்து தெளிக்க வேண்டும். போரான் குறைப்பாட்டை, போராக்ஸ்

20-30 கிலோ/ஹெக்டேர் என்ற அளவில் இட்டு குறைப்பாட்டை போக்க வேண்டும்.

அறுவடை:

பழங்கள் சற்றே நிறம் மாறும்போது (பச்சையிலிருந்து லேசான சிகப்பு நிறத்திற்கு) அறுவடை

செய்து உள்ளூர் சந்தை மற்றும் குறுகிய தொலைவில் உள்ள சந்தைகளுக்கு அனுப்ப முடியும். நீண்ட

தொலைவில் உள்ள சந்தைகளுக்கு நன்கு முற்றிய பச்சை நிறக் காய்களை அறுவடை செய்ய வேண்டும்.

கத்தரி: (உயர் விளைச்சல் இரகங்கள்)

 கோ-1, எம்.டி.யூ-1, பி.கே.எம்-1, பி.எல்.ஆர்-1, கே.கே.எம்-1, கோ.பி.எச்-1 மற்றும்

கோ.பி.எச்-2.

வளர்ச்சி ஊக்கிகள்:

கத்தரியில் ட்ரையேகாண்டனால் 2 பி.பி.எம். மற்றும் சோடியம் போரேட் அல்லது போராக்ஸ் 35


மில்லி கிராம் இவற்றை ஒரு லிட்டர் நீருடன் கலந்து நாற்று நட்ட 15 நாட்கள் கழித்து ஒரு முறையும், பிறகு

பூக்கள் தோன்றும் பருவத்திலும் தெளிப்பதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு தண்டு மற்றும் காய்ட்துளைப்பான்:

நடவு செய்த 15-20 நாட்களில் கத்தரிச் செடிகளின் நுனித் தண்டுகள் இலைகளுடன் காய்ந்து

தலை தொங்கி காணப்படும். அவைகளைக் கிள்ளி உள்ளே பார்தத


் ால் வெள்ளை நிற புழு காணப்படும்.

இவ்வகைப் புழுக்கள், காய்கள் பிஞ்சாக இருந்து வளர்ந்து வரும் சமயத்தில் காய்களை சாப்பிட்டு

சேதப்படுத்தும்.

இதனைக் கட்டுப்படுத்த கார்பரில் 50 சதத் தூளை ஒரு லிட்டருக்கு 2-4 கிராம் என்ற அளவில்
கலந்து தெளிக்க வேண்டும். காய்களைத் தாக்கும் பருவத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை

குயினில்பாஸ் 25 இசி 2 மில்லி மற்றும் 2 மில்லி வேப்பெண்ணெயினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து

தெளிக்க வேண்டும் அல்லது வேப்பங்கொட்டைச் சாறு 50 மில்லியை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க

வேண்டும்.

அறுவடை:
நடவு செய்த 55-60 நாட்களில் முதல் அறுவடை ஆரம்பிக்கும், காய்கள் பிஞ்சாக விதைகள்

முற்றுவதற்கு முன்பு அறுவடை செய்ய வேண்டும். காய்களை சுமார் 4 முதல் 5 நாட்கள் இடைவெளியில்

அறுவடைக்கு வரும். சுமார் 5-7 நாட்கள் இடைவெளியில் மறுபடியும் அறுவடை செய்யலாம்.

மிளகாய்: (இரகங்கள்)
 கோ-1, கோ-2, கோ-3, கோ-4, கோ-5, எம்.டி.யூ-1, கோ-1 மற்றும் கே-2.
 கோ-2 மற்றும் கோ-3 பச்சைமிளகாய் மற்றும் வற்றல்.
 கோ-5 காய்கறி மிளகாய்.
 பி.எல்.ஆர்.-1 பச்சைமிளகாய்.
 கே-1 மற்றும் கே-2 காய்ந்த வற்றல்.
 எம்.டி.யூ-1 காய்ந்த வற்றல்.
 பி.எம்.கே-1 மானாவாரி சாகுபடி.
 கடற்கரையோர வடகிழக்கு மாவட்டங்களுக்கு பயிரிட ஏற்ற வகை: பி.எல்.ஆர்-1
இதைத்தவிர, சாத்தூர் சம்பா இராமநாதபுரம் குண்டு, நம்பியூர் குண்டு ஆகிய நாட்டு வகைகளும் அந்தந்த
பகுதிகளில் பயிர் செய்யப்படுகின்றன.

பயிர் ஊக்கிகள் தெளித்தல்:

பூக்கள், பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கவும், பூக்கள் உற்பத்தியை அதிகரிக்கவும் நட்ட 60


அல்லது விதைத்த 100 வது நாளில் ஒரு முறையும் வளர்ச்சி ஊக்கி (நாப்தலின் அசிட்டிக் அமிலம்) 10
மில்லி கிராம் ஒரு லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து கைத் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

இலைப்பேன்:
இவைகள் துளிர் இலைகளின் சாறை உறிஞ்சுவதால் இலைகள் மேல் நோக்கிச் சுருண்டு பழுப்பு

நிறமாகிப் பின் உதிர்ந்து விடும், பூ மொட்டுகளும் உதிர்ந்து விடும். இவற்றைக் கட்டுப்படுத்த

டைமித்தோயேட் 30 இசி 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி

ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க

வேண்டும்.

நுனிக்கருகல் மற்றும் பழ அழுகல் நோய்:

நுனிக்கருகலும், பழ அழுகலும் ஒரே பூசணத்தால் ஏற்படுகிறது. நுனிக்கருகல் பாதித்த

செடிகளின் இலைகள் மேலிருந்து கீழாகக் காய்ந்திருக்கும், பழ அழுகல் நோய் தாக்கிய பழங்களில்


செம்பழுப்பு நிறத்தில் வட்ட வடிவப் புள்ளிகள் காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த மேங்கோசெப்

1 கிலோ அல்லது தாமிர ஆக்சி குளோரைடு 1.25 கிலோ இவற்றை 500 லிட்டர் நீரில் கலந்து 15
நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.

அறுவடை:

பச்சை மிளகாயை நட்ட 75 நாட்களிலும் அல்லது விதைத்த 105 நாட்களிலும், பழுத்த

பழங்களை ஒரு மாதத்திற்கு பின்னும் அறுவடை செய்யலாம்.

ஒட்டு கத்தரி சாகுபடி தொழில்நுட்பங்கள்

ஒட்டுக் கத்தரியின் பயன்கள்:

 நீண்ட ஆணிவேர் கொண்டதால் வறட்சியைத் தாங்கக்கூடியது.

 மாறுபட்ட தட்பவெப்ப சூழ்நிலைகளைத் தாங்கி வளரக்கூடியது.

 மண்ணின் அதிக அமிலத்தன்மை, அதிக உவர்ப்புத் தன்மையைத் தாங்கி வளர்கின்றது.

 மண்வழி தோன்றக் கூடிய வாடல் நோய், நூற்புழுத்தாக்குதலைத் தாங்கி வளர்கின்றது.

 அதிக அளவில் விளைசலைத் தரவல்லவை.

ஒட்டு கட்டுதல்:

வேர்க்குச்சியும், இளந்தளிர் குச்சிகளும் நான்கு இலைகள் விட்ட நிலையில், வேர்ச்செடியின்

மேல் பகுதியை 10 செ.மீ உயரத்தில் கூர்மையான சுத்தமான கத்தியக் கொண்டு நீக்கிவிட்டு

நீளவாக்கில் ஒரு சிறு பிளவு ஏற்படுத்த வேண்டும். பின்னர் அதே பருமனுள்ள இளந்தளிர் குச்சியின்
வேரை நீக்கி விட்டு தண்டின் இலைகளை இரு நுனியிலைகள் மட்டும் விட்டு இதர இலைகளை
நீக்கிவிட்டு ‘ஏ’ வடிவத்தில் இரு புறமும் சீவி வேர்க்குச்சியின் பிளவுபட்ட பகுதியில் நுழைத்து பிளாஸ்டிக்

இணைப்பான் கொண்டு இணைக்கலாம் அல்லது ஒரு செ.மீ அகலமான சிறு பாலிதீன் தாளைக்

கொண்டு இருக்கமாக சுற்றி கட்டிவிடலாம். பின்னர் ஒட்டுக்கட்டிய செடிகளை ஒரு சிறு பாலிதீன்

உறையக் கொண்டு நுனியை மூடி நிழல் வலைக்கூடத்தினுள் சுமார் 70-80 சதவிகிதம் ஈரப்பதம்
இருக்குமாறு எட்டு நாள்கள் வைக்க வேண்டும். பிறகு உறையை எடுத்து விட்டு 10-15 நாள்கள் நிழல்

வலைக்குடிலில் வைக்க வேண்டும். ஒட்டு இணைந்த பிறகு 10 நாள்கள் வெளி சூழலில் வைத்து ஒட்டு

செடிகளை நடவு வயலில் நடலாம்.

ஒட்டு நுட்பங்கள் நிலம் தயாரிப்பு, அடி உரமிடுதல்:


நடவு செய்யப்படும் நிலத்தை 4-5 முறை நன்றாக உழ வேண்டும். கடைசி உழவின்போது
எக்டருக்கு 25 டன் மக்கிய தொழு உரமிட்டு நன்கு கலக்க வேண்டும். ஒட்டு கத்தரி செடிக்கு 200
கிலோ தழைச்சத்து, 200 கிலோ மணிச்சத்து,
100 கிலோ சாம்பல் சத்து தேவைப்படுகின்றது. இதில்
50 சதவிகித தழைச்சத்தான 100 கிலோவையும், மணிச்சத்து, சாம்பல் சத்து முழுவதையும் அடி
உரமாக இட வேண்டும் மேலும் நடவு வயலில் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிரியை
எக்டருக்கு 2 கிலோ என்ற அளவில், 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும்.
சூடோமோனாஸ் புளூரசன்ஸ் அல்லது டிரைகோடாமா விரிடி உயிர்க் கொல்லியை ஹெக்டருக்கு 2.5
கிலோ என்ற அளவில், 100 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.

நடவு :
தயார் செய்த நடவு வயலில் ஒரு மீட்டர் இடைவெளியில் ஒரு கன அடி அளவுள்ள சிறு குழிகளை
எடுக்க வேண்டும். நன்கு ஒட்டு பிடித்த ஒட்டுக்கத்திரிகளை இக்குழிகளில் வரிசையாக இட வேண்டும்.
ஒட்டுச் செடிகளை ஜூன்-ஜூலை, டிசம்பர்-ஜனவரி மாதங்களில் நடலாம்.

நீரப் ்பாசனம்:
ஒட்டுச் செடியை நடவு செய்த உடனே தண்ணீர் பாச்ச வேண்டும். அதன் பின்னர் 7-10
நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

களை நிர்வாகம்:
களாய்கள் முளைக்கும் முன் அவற்றை கட்டுப்படுத்த புளுகுளோரலின் என்னும் களை
கொல்லியினை ஒரு எக்டருக்கு ஒரு லிட்டர் மருந்தை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரே சீராக
தெளிக்க வேண்டும். களைக் கொல்லியைத் தெளிக்கும் போது மண் ஈரமாக இருக்க வேண்டும். பிறகு
ஒட்டு கத்தரி செடி நட்டவுடன் மெதுவாக வளரும் களைகளை அவ்வப்போது எடுக்க வேண்டும்.

மேல் உரமிடல்:
நட்ட ஒரு மாதம் கழித்து மீதமுள்ள தழைச்சத்தான 100 கிலோவை இட்டு மண்ணை
அணைக்க வேண்டும்.
தாங்கு குச்சி:
தோட்டத்தில் நட்ட பிறகு தாங்கு குச்சியைக் கொண்டு முட்டு கொடுக்க வேண்டும். இதனால்
செடிகள் நேராகவும் காற்றில் சாயாமலும் இருக்கும்.

போத்து செடி எடுத்தல்:


ஒட்டுக்கட்டிய தளிர் செடியில் ஒட்டுப்பகுதியின் கீழே உள்ள சுண்டைக்காய் செடியிலிருந்து
போத்துகள் முளைத்து வரும். அவற்றை ஒவ்வொரு பத்து நாட்கள் இடைவெளியில் நீக்க வேண்டும்.

அறுவடை:
நடவு செய்த 35-40 நாட்களில் முதல் அறுவடை ஆரம்பிக்கும். காய்கள் பிஞ்சாக விதைகள்
முற்றுவதற்கு முன்பு அறுவடை செய்ய வேண்டும். கத்தரி காய்களை சுமார் 3-4 நாட்கள்
இடைவெளியில் அறுவடை செய்யலாம். ஒரு செடிக்கு சுமார் 10 கிலோ வரை ஆறு மாதங்கள்
கிடைக்கும்.

மறுதாம்பு முறை:
ஒட்டுச் செடியை ஆறு அல்லது எட்டு மாதங்கள் கழித்து மறுதம்பு செய்ய வேண்டும்.
ஒட்டுச்செடியின் அனைத்து கிளைகளையும் தரையிலிருந்து 15-20 செ.மீ உயரத்தில் வெட்டி,
வெட்டுப்பகுதியை காப்பர் ஆக்ஸிகுளோரைடு பசையக் கொண்டு தடவி விட வேண்டும். பிறகு செடிக்கு
மண்ணை அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும். இதிலிருந்து பல புதிய தளிர்கள் துளிர்விட ஆரம்பிக்கும்.
இவற்றிலிருந்து வளமான 6-8 கிளைகளை மட்டும் வளரச் செய்து மற்றவைகளை நீக்கி விட வேண்டும்.
பிறகு பூக்கள் பிடித்து காய்கள் வர ஆரம்பிக்கும். இதன் மூலம் ஒட்டுச் செடியை மேலும் நான்கு
மாதங்கள் வரை வளர்தது ் அதிகை விளைச்சலைப் பெறலாம். இந்த மறுதாம்பு முறைக்கு முதலில்
கொடுத்த உர அளவை இங்கேயும் 3 நாட்கள் இடைவெளியில் கொடுக்க வேண்டும். இவ்வாறு
தேவைப்பட்டால் மற்றமொரு மறுதாம்பும் விட்டு கத்தரி செடியை வளர்க்கலாம்.

விளைச்சல்:
ஒட்டுகட்டும் முறைகளின் மூலம் உருவாக்கப்பட்ட கத்தரி செடியில் ஒரு செடிக்கு சராசரியாக
12-15 கிலோ வரையிலும் ஹெக்டேருக்கு அதிக அளவாக 125 டன்கள் வரை விளைச்சலாக 15
மாதங்களில் பெறலாம்.
இந்த ஒட்டுச் செடி நூற்புழு, வேரின் மூலமாக பரவும் வாடல் நோக்கு எதிர்ப்புத்திறன் உள்ளது.

சீர்மிகு சிறிய வெங்காயம் சாகுபடி


வெங்காயம், ஒரு வெப்ப மண்டலப் பயிர். அதிக குளிர் மற்றும் அதிக வெப்பம் இல்லாத மிதமான
தட்பவெட்ப நிலை சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. வெங்காய இலைகள் உருவாகி வளரும் பருவத்தில் 13-
24 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், வெங்காயம் பருமன் அடையும் சமயத்தில் 16-20 டிகிரி
செல்சியஸ் வெப்பமும் இருந்தால் அதிக விளைச்சல் கிடைக்கும். வைகாசிப் பட்ட வெங்காயத்தில் நல்ல
இலாபம் கிடைப்பதோடு மிதமான வெப்பம் மற்றும் மிதமான குளிர் போன்ற சாதகமான சூழல் நிலவுவதால்
விளைச்சல் அதிகரிக்கிறது. மேலும், வைகாசிப் பட்ட வெங்காயத்தை சேமித்து வைத்து புரட்டாசி மற்றும்
ஐப்பசி மாதத்தில் முக்கிய பண்டிகையான தீபாவளி மற்றும் சரஸ்வதி பூஜை போன்ற விழாக்களின் போது
விற்றால் உழவர்களுக்கு நல்ல விலை கிடைக்கும். மேலும், தமிழ்நாட்டில் வெங்காயம் புரட்டாசி,
கார்த்திகை மற்றும் தை-மாசிப் பட்டங்களிலும் பயிரிடப்படுகிறது. குளிர்ச்சியான காலநிலை தை-மாசிப்
பட்டத்தில் நிலவுவதால் இப்பருவம் வெங்காய விதை உற்பத்தி செய்ய ஏற்றது.

நிலம் தயாரிப்பு:
நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண், இருபொறை மண் போன்றவை வெங்காய சாகுபடிக்கு
ஏற்றவை. கார அமிலத்தன்மை 6.5-7.0 க்குள் இருத்தல் நல்லது. நிலத்தை இரண்டு அல்லது மூன்று
முறை நன்கு உழுதல் வேண்டும். கடைசி உழவின் போது ஹெக்டேருக்கு 25 டன் மக்கிய தொழு உரம்
இட்டு நிலத்தை சமபடுத்த வேண்டும். பின்னர் 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.
சொட்டு நீர்ப் பாசன முறையில் நடவு செய்ய ஒரு மீட்டர் அகல மேட்டுப் பாத்திகள் அமைத்து 15x10
செ.மீ இடைவெளியில் நட வேண்டும்.

உரமிடுதல்:
மேட்டுப் பாத்திகளில் நடும் பொழுது அடியுரமாக ஹெக்டேருக்கு 30 கிலோ தழைச்சத்து, 60
கிலோ மணிச் சத்து மற்றும் 30 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய இயசாயன உரங்களை நிலம்
தயாரிக்கும் போது இட வேண்டும். பின் நட்ட அல்லது விதைத்த 30 நாட்கள் கழித்து 30 கிலோ
தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டும். சொட்டு நீர் பாசனத்தில் நடும்பொழுது 45 கிலோ மணிச்
சத்தை தரக்குடிய 297 இலோ சூப்பர் பாஸ்பேட்டை அடியுரமாக இட்டு பின்பு 60 கிலோ தழைச்சத்து, 15
கிலோ மணிச்சத்து மற்றும் 30 கிலோ சாம்பல் சத்து தரவல்ல நீரில் கரையும் உரங்களை நட்டதிலிருந்து
வாரம் இருமுறை அளிக்க வேண்டும்.

இரகங்கள்:
காய் மூலம் நடவு செய்ய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட
கோ-4 இரகமும், விதை மூலம் சாகுபடி செய்ய கோ. ஆன்.5 இரகமும் சிறந்தது. ஹெக்டேருக்கு 1000
கிலோ வெங்காயம் (கோ-4) அல்லது விதை மூலம் நாற்று விட்டு நடவு செய்ய 2.5 கிலோ (கோ.ஆன்.5)
வெங்காய விதை தேவைப்படும்

நாற்றங்கால் தயாரிப்பு:
விதை மூலம் நடவு செய்ய ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதையை ஒரு மீடட
் ர் அகலமுள்ள
மேட்டுப் பாத்திகளில் விதைக்க வேன்டும். விதைப்பதற்கு முன் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம்
சூடோமோனாஸ் அல்லது 4 கிராம் டிரியக்கோ டெர்மா விரிடி போன்ற எதிர் உயிர் நுண்ணுயிர்
கலவைகளைக் கலந்து விதை நேர்த்தி செய்து 24 மணி நேரம் கழித்து விதைக்கலாம். இதனால் விதை
மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
நன்கு மக்கிய தொழு உரத்தை மேட்டுப்பாத்திகளில் கலந்து நாற்றங்கால் தயார் செய்ய
வேண்டும். பிறகு பாத்திகளின் குறுக்கே 10-12 செ.மீ இடைவெளியில் கோடுகள் இட்டு கோடுளில்
விதைகளைப் பரவலாகத் தூவி மெல்லிய மணல் கொண்டு விதைகளை மூடிவிட வேன்டும். பின்னர்
வைக்கோல் கொண்டு மேட்டுப் பாத்திகளை மூடி விட்டு பூவாளியின் மூலம் தினமும் காலை, மாலை
இருமுறையும் நீர் தெளிக்க வேண்டும். விதை விதைத்த 7-8 நாட்களில் முளைக்கத் தொடங்கி விடும்.
அதன் பின்னர் வைக்கோலை நீக்கி விடலாம். விதை மூலம் பயிர் செய்ய சித்திரை மாதத்தில் விதை
விதைத்து வைகாசி மாதத்தில் சுமார் 40-45 வயதுடைய நாற்றுகளை நடவு வயலில் நடலாம். இதற்கு
அடுத்து தை மாதத்திலும் நாற்று விட்டு நடவு செய்யலாம்.

விதைப்பு/நடவு:
40-45 நாள் வயதுடைய நாற்றுகளை நடவு வயலில் பார்களின் இராண்டு பக்கமும் சரிவில் 10
செ.மீ இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். சொட்டு நீர்ப் பாசன முறையில் நடவு ஸ்யெய ஒரு
மீட்டர் அகல மேட்டுப்பாத்திகளில் 15x10 செ.மீ என்ற இடைவெளியில் நடவு செய்ய வேன்டும். காய்
வெங்காயம் மூலம் பயிர் செய்யும் போது வெங்காயத்தை பார்களின் சரிவில் இருபுறமும் அல்லது சொட்டு
நீரப் ் பாசன முறையில் நடவு செய்ய மேட்டுப்பாத்திகளில் 15x10 செ.மீ என்ற இடைவெளியில் ஊன்ற
வேண்டும்.

களை நிர்வாகம்:
வெங்காயத்தில் களை நிர்வாகம் மிக முக்கியமானது இல்லையெனில் விளைச்சல்
பாதிக்கப்படும். நட்ட (அ) விதைத்த 48 மணி நேரத்திற்குள் ஆக்ஸிஃபுளோர் ஃபென் (கோல்) ஒரு
லிட்டருக்கு 1.5-2 மி.லி. அல்லது பெண்டிமெத்திலின்
4 மி.லி என்ற அளவில் நீரில் கலந்து கைத்
தெளிப்பான் கொண்டு தெளிப்பதன் மூலம் நடவு செய்த 30 நாட்கள் வரை களைகள் முளைக்காதவாறு
கட்டுப்படுத்த இயலும். பின்னர், 30 நாட்களுக்குப் பிறகு ஒரு கைகளை எடுப்பதன் மூலம் சிறந்த
முறையில் களை நிர்வாகம் செய்து விளைச்சலை அதிகரிக்கலாம்.

நீர் நிர்வாகம்:
நாற்றுகளை நட்ட அல்லது காய் ஊன்றிய மூன்றாவது நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
5 நாட்களுக்கு ஒரு முறை மண்ணின் தன்மியக்கேற்ப நீர் பாய்ச்ச வேண்டும். வெங்காயம் பருமன்
பின்பு
அடையும் சமயத்தில் அதாவது நட்ட (அ) விதைத்த 40 நாட்களிலிருந்து மண்ணின் ஈரப்பதம்
குறைத்தால் வெங்காயம் பருமனடைவது பெருமளவில் பாதிக்கப்படும்.

அறுவடை மற்றும் விளைச்சல்:


வெங்காயம் அறுவடைக்கு ஒரு மாதம் முன்பு சைக்கோசல் என்ற வளர்ச்சித் தடுப்பாணை 200
பிபிஎம் என்ற அளவில் கார்பன்டசிம் 1000 பிபிஎம் மருந்துடன் கலந்து தெளிக்க வேண்டும். இதனால்
வெங்காயத்தை சேமிக்கும் போது ஏற்படும் முளைத்தல் மற்றும் அழுகலை கட்டுப்படுத்த நீண்ட நாள்
சேமித்து நல்ல விலை கிடைக்கும் தருணங்களில் விற்பனை செய்யலாம். வெங்காயத் தாள்கள் சுமார்
60-75 சதம் காயத் தொடங்கியவுடன் அறுவடை செய்ய வேண்டும். அறுவடைக்கு ஒரு வாரம் முன்பு நீர்
பாய்ச்சுவதை நிறுத்திவிட வேண்டும். நட்ட 70-75 நாட்களில் வெங்காயம் அறுவடைக்கு வரும்.
தாள்களுடன் சேர்த்து வெங்காயத்தை பிடுங்கி பின்னர் மேல் தாள்களை நீக்கி வெங்காயத்தைக் காய
வைக்க வேண்டும். பின்பு நல்ல காற்றோட்டமான குடிசைகளில் அல்லது பாரம்பரிய பட்டறை முறை மூலம்
வெங்காயத்தை சேமிக்கலாம். வெங்காயத்தின் விளைச்சல் இரகங்களைப் பொறுத்து வேறுபடினும்
சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 14-16 டன் வரை கடைக்கும்.

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு மேலாண்மை முறைகள்:


 நோய் பாதிப்பு இல்லாத தரமான வெங்காயத்தை தேர்வு செய்து நடவுக்குப் பயன்படுத்த
வேண்டும்.
 வயலைச் சுற்றி தடுப்புப் பயிராக இரண்டு வரிசை மக்காச்சோளம் பயிரிட வேண்டும்.
 ் ியாக 10 கிராம் சூடோமோனாஸ் புளுரோஸன்ஸ் பாக்டீரிய கலவையை ஒரு கிலோ
விதை நேர்தத
விதை வெங்காயத்துடன் கலந்து நடவு செய்தல் வேண்டும்.
 நடுவதற்கு முன் வயலில் ஒரு ஏக்கருக்கு 500 கிராம் சூடோமோனாஸ் புளுரோஸன்ஸ் +100
கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை நன்கு கலந்து மண்ணில் இட வேண்டும்.
 நட்ட 30 ஆம் நாள் ஒரு லிட்டர் தண்ணீருக்கு சூடோமோனாஸ் புளுரோஸன்ஸ் 10 கிராம் மற்றும்
பிவேரியா பேசியானா நன்மை செய்யும் பூசணம் 10 கிராம் வீதம் கலந்து ஒட்டும் திரவம் சேர்த்து
பயிரின் மேல் தெளிக்க வேண்டும்.
 வேம்பு சார்நத
் பூச்சிக் கொல்லியான அசாடிராக்டின் ஒரு சதவிகிதம் மருந்தை ஒரு லிட்டர் நீரில்
2 மி.லி வீதம் கலந்து நட்ட 40 ம் நாள் தெளிக்க வேண்டும்.
 வயலில் மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளை ஏக்கருக்கு 5 வீதம் வைத்து இலைப்பேன்கள் மற்றும்
இலைத் துளைப்பான்களை கவர்ந்திழுத்து அழிக்கலாம்.
 வயலில் ஒரு ஏக்கருக்கு 5 வீதம் இங்ககவர்ச்சிப் பொறிகளை வைத்து இலை
வெட்டுப்புழுக்களை கவர்நத ் ிழுக்கலாம்.
 இலைப்பேன்கள், இலைத்துளைப்பான் மற்றும் வெட்டுப்புழுக்களின் தாக்குதல்
இருக்கும்பட்சத்தில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு புரோஃஜபனபாஸ் 2 மி.லி (அ) டைமெத்தோயேட்
2 மி.லி தெளித்து கட்டுப்படுத்தலாம்.
 ஊதா இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 1 மி.லி
டைபெங்கொனசோல் (அ) 2 கிராம் மேங்கோசெப் மருந்தை நட்ட 30 வது நாளில் இருந்து 15
நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.
மேற்கூரிய பயிர் மேலாண்மை மற்றும் பயிர்ப் பாதுகாப்பு முறைகாலின் மூலம் தக்க பருவங்களில்
வெங்காயத்தை பயிரிட்டு இலாபம் பெறலாம் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.

You might also like