You are on page 1of 7

 

Home  ஆன்மிகம்  ஆன்மிகச் செய்திகள்  சஷ்டிஅப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம்… இப்படி சாந்தி
கர்மாக்கள் செய்வது ஏன்?!

ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் உரத்த சிந்தனை லைஃப் ஸ்டைல்

சஷ்டிஅப்த பூர்த்தி, பீமரத சாந்தி,


சதாபிஷேகம்… இப்படி சாந்தி கர்மாக்கள்
செய்வது ஏன்?!
By Senkottai Sriram - May 15, 2019 3:13 PM

       

சஷ்டி அப்த பூர்த்தி, பிமரத சாந்தி, சதாபிஷேகம், விஜயரத சாந்தி என்றெல்லாம் பல்வேறு
கர்மாக்கள் மனித வாழ்வில் நம்மை கொண்டு செல்கிறது. இந்தக் கர்மாக்கள் நம்மை
அடைந்தது ஏன்? நாம் ஏன் இவற்றைச் செய்கிறோம்?

ஜன்மாந்தர க்ருதம் பாபம் வ்யாதிரூபேண பாததே |

தத் சாந்தி: ஒளஷதை: தானை: ஜபஹோம ஸுரார்சனை: ||


முற்பிறவியில் ஒருவன் செய்த பாபம், இப்பிறவியில் நோய் வடிவில் துன்புறுத்துகிறது. இது
மருந்து, தானம், ஜபம், ஹோமம், தேவதா ஆராதனம் ஆகியவற்றால் நீங்குகிறது. 

சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட சாந்திகளையும், கர்மாக்களின் செய்முறைகளையும்


ஆச்வலாயனர், ஆபஸ்தம்பர், போதாயனர், காத்யாயனர், விகனஸர் போன்ற பல
மஹரிஷிகள் சூத்ரங்களாக அருளிச் செய்தனர். மஹான்களால் அருளப்பட்ட இந்த
சாந்திகளால் துன்பங்களும், நோய்களும் நீங்கி நீண்ட ஆயுளும், உடல் நலமும்,
மனநிம்மதியும், அனைத்து வளங்களும் கிடைக்கும்.

ஒரு மனிதன் வாழ்வில் செய்து கொள்ள வேண்டிய சாந்தி கர்மங்கள் நிறைய உண்டு.
அவற்றுள் முக்கியமானவை 

* அப்தபூர்த்தி சாந்தி

* பீம சாந்தி

* உக்ரரத சாந்தி

* ஷஷ்டியப்தபூர்த்தி

* பீமரத சாந்தி

* விஜயரத சாந்தி

* சதாபிஷேகம்
* ப்ரபௌத்ர ஜனன சாந்தி

* ம்ருத்யுஞ்ஜய சாந்தி

* பூர்ணாபிஷேகம் போன்றவை ஆகும்.

இந்த சாந்திகள் அனைத்தும் நம் நன்மைக்காக மஹரிஷிகளால் கொடுக்கப்பட்டவை.

உதாரணமாக, ஒரு குழந்தைக்கு, முதல் ஆண்டு நிறைவடையும் போது துஷ்ட க்ரஹங்களால்


பெரும் ச்ரமம் ஏற்படும் . எனவே தோஷம் விலகவேண்டி முறைப்படி சாந்தி செய்யவேண்டும்.
ஆயுஷ்ய ஹோமத்துடன் கூடிய இந்த சாந்திக்குப் பெயர் அப்த பூர்த்திசாந்தி.

இதே போல ஒவ்வொரு வார்ஷீக ஜன்ம நக்ஷத்ரம் (பிறந்த நாள்) தோறும் ஆயுஷ்ய ஹோமம்,
நக்ஷத்ர ஹோமம், ம்ருத்யுஞ்ஜய ஹோமம் ஆகிய ஏதாவதொன்று செய்வது நம்
மூதாதையரின் வழக்கமாக இருக்கிறது. ஆக, குழந்தையின் முதல் பிறந்தநாளில் செய்வதே
அப்தபூர்த்தி சாந்தி.

இதே போல,

* பீம சாந்தி 55ஆவது வயது ஆரம்பத்திலும்,

* உக்ரரத சாந்தி 60ஆவது வயது ஆரம்பத்திலும்

* ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி 61ஆவது வயது ஆரம்பத்திலும்

* பீமரத சாந்தி 70ஆவது வயது ஆரம்பத்திலும்

* விஜய ரத சாந்தி 78ஆவது வயது ஆரம்பத்திலும்

* சதாபிஷேகம் 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்லநாளிலும்

* ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) பௌத்ரனுக்கு புத்ரன் பிறந்த பிறகு ஒரு


சுபதினத்திலும்

* ம்ருத்யுஞ்ஜய சாந்தி 85ஆவது முதல் 90க்குள்ளும்

* பூர்ணாபிஷேகம் 100ஆவது வயதில் சுபதினத்திலும் செய்யப்பட வேண்டும்.


– Aravind Subramanyam அரவிந்த் சுப்ரமணியன் எழுதிய ஷஷ்டி யப்தபூர்த்தி
நூலிலிருந்து.. 

புகைப்படங்கள்: தமிழச்சி தங்கபாண்டியன் தம்பதியின் சஷ்டி அப்த பூர்த்தி நிகழ்வில்


இருந்து…

       

Previous article Next article

ஓட்டல் குளியலறையில் பெண்iணை பிரதமா் மோடியின் சகோதரர் போலீஸ்


செல்லில் படம் பிடித்த இளைஞா் கைது நிலையம் முன் திடீர் தர்ணா செய்தார்….!
செய்யப்பட்டார்…!

RELATED ARTICLES

ஆரோக்கிய ஸ்நாக்ஸ்: மூங்கில் அரிசி ஹல்வா!


சமையல் புதிது Suprasanna Mahadevan - June 6, 2022 6:30 PM

ஆரோக்கிய டிபன்: மூங்கில் அரிசி இலை கொழுக்கட்டை!


சமையல் புதிது Suprasanna Mahadevan - June 6, 2022 6:06 PM

அப்பாச்சி தீர்வு: மகோதரம், உதட்டு வெண்மை,


ஆண்மைக்குறைவு, கொன்னேரியா, விரை வீக்கம்,
ஞாபகமறதி, நரம்புத்தளர்ச்சி..!
லைஃப் ஸ்டைல் Suprasanna Mahadevan - June 6, 2022 5:30 PM

வறுத்தெடுக்கும் சோதனையிலும் மாறாத பக்தி.. 63


நாயன்மார்கள்!
ஆன்மிகம் Suprasanna Mahadevan - June 6, 2022 9:37 AM

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!


ஆன்மிகம் Suprasanna Mahadevan - June 6, 2022 9:02 AM

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பனிவரகு புலாவ்!
சமையல் புதிது Suprasanna Mahadevan - June 5, 2022 6:36 PM

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பனிவரகு கொத்தமல்லி புலாவ்!


சமையல் புதிது Suprasanna Mahadevan - June 5, 2022 6:02 PM

அப்பாச்சி தீர்வு: சொத்தை நகம், தீக்காயம், அலுப்பு நீங்க,


மனக்கவலை நீங்க, வெட்டுக்காயம், மூர்ச்சை..!
நலவாழ்வு Suprasanna Mahadevan - June 5, 2022 5:34 PM

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2: சிறப்பம்சங்கள்..!


வணிகம் Suprasanna Mahadevan - June 5, 2022 4:34 PM

NO COMMENTS

LEAVE A REPLY

Comment:

Name:*

Email:*

Website:
Save my name, email, and website in this browser for the next time I comment.


POST COMMENT

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ABOUT US

© 2022 Dhinasari.com - Current affairs, Entertainment, Education, Employment portal in Tamil with
National outlook and mainly Focusing our ancient Hindu Dharma. email: [email protected] | Contact: +91
9444809108

Contact us: [email protected]

FOLLOW US






News
About Us
Contact Us
Support us
Privacy
Disclaimer
Advt Tariff
Cricket
Videos

e-paper
Sitemap

© 2022 dhinasari.com | Developed, Maintained by SSS Media, Chennai, TN, IN

You might also like