You are on page 1of 10

JYOMMALAYA

Founder:JOTHIDA YOGA MANI MANTRA AUSHATHALAYA, GAN Plaza,Municipal


Colony,M.C.Road,
Thanjavur-5
Mob:9600 853 667
Website:https://jyommalaya.com

நவகிரக வழிபாடு Navagraha Pooja


August 01, 2014

சூரியன் (ஞாயிறு)

சூரியனுக்குரிய நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில்


வணங்க வேண்டும்.
சூரியனுக்கு அதிபதி சிவன் என்பதால் சிவன் கோவில்களில்
அர்ச்சனை செய்து வழிபடுவதோடு
நவக்கிரக சந்நிதியை வலம்வந்து சூரிய
பகவானை நோக்கி
பதிகங்கள்

காசினி இருளை நீக்கும் கதிரொளி ஆகியெங்கும்

பூசனை உலகோர் போற்றப் புசிப்போடு சுகத்தை நல்கும்

வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த

தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி !


சீலமாய் வாழச் சீரருள்
புரியும்

ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி

சூரியா போற்றி, சுதந்திரா போற்றி

வீரியா போற்றி, வினைகள் களைவாய்!


ஸ்லோகம்

ஜபாகுஸும ஸங்காசம்

காஷ்ய பேயம் மஹத்துதிம்!

தமோரிம் ஸர்வபாபக்னம்

ப்ரனதொஷ்மின் திவாகரம்!!
சூரிய காயத்ரி

சூரி த்ரி
அஸ்வத் வஜாய வித்மஹே! பத்மஹஸ்தாய தீமஹி!

தந்நோ சூர்ய ப்ரசோதயாத்!!


என்று ஸ்தோத்திரம் சொல்லி
வணங்க வேண்டும். இவ்வாறு வணங்குவதால்
உடற்பிணி கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்கும்.
ஜாதகத்தில் கிரக
தோசமுள்ளவர்களும் மற்றும் சூரிய திசை நடப்பவர்களும் ஞாயிறு விரதமிருத்தல்
வேண்டும்.

ஸ்தலம்: சூரியனார் கோவில்

நிறம்: சிவப்பு

தானியம்: கோதுமை

வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர்

மலர்: செந்தாமரை

உலோகம்: தாமிரம்

நாள்: ஞாயிறு

ராசிகற்கள்: மாணிக்கம்

பலன்கள்: காரிய சித்தி.


சந்திரன் (திங்கள்)
சந்திர தோசம் உள்ளவர்கள்
சிவன் கோவில்களில் நவக்கிரகங்களை வணங்கி
சந்திர பகவான் முன் நின்று
பதிகங்கள்

அலைகடல் அதனில் நின்றும் அன்று வந்துதித்த போது

கலைவளர் திங்களாகிக் கடவுளென் றெவரும் ஏத்தும்

சிலைமுதல் உமையாள் பங்கன் செஞ்சடைப் பிறையாய்மேரு


மலைவல மாகவந்த மதியமே போற்றி போற்றி !
எங்கள் குறைகள் எல்லாம்
தீர்க்கும்

திங்களே போற்றி, திருவருள் தருவாய்

சந்திரா போற்றி, சத்குரு போற்றி

சங்கடந் தீர்ப்பாய் சதுர போற்றி!


ஸ்லோகம்

ததிசங்க துஷாராபம்

க்ஷீரொர்தார்னவ ஸம்பவம்!

நமாமி ஸசிநம் ஸோமம்

சம்போர் மகுடபூஷணம்!!
சந்திர காயத்ரி
நிசாகராய வித்மஹே! கலாநாதாய தீமஹி!!

தந்நோ ஸ்சந்த்ர ப்ரசோதயாத்!!


என்று தோத்திரம் சொல்லி
வணங்குபவர்கள் ஆயுள் விருத்தியும் சகல செல்வ
போகங்களும் பெறுவார்கள்
ஸ்தலம்: திங்களூர்

நிறம்: வெள்ளை

தானியம்: அரிசி

வாகனம்: வெள்ளை குதிரை

மலர்: வெள்ளரளி

உலோகம்: ஈயம்

நாள்: திங்கள்

ராசிகற்கள்: முத்து

பலன்கள்: தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்.


செவ்வாய் (அங்காரகன்)

செவ்வாய் தோசமுள்ளவர்கள் செவ்வாய் திசை நடப்பவர்கள் காலையில்


தோ மு ர் தி ந ர்
அம்மனையும் மாலையில் முருகனையும்
வழிபடுவதோடு நவக்கிரகத்தை
வலம்வந்து செவ்வாய் கிரகத்தின் முன்னின்று
பதிகங்கள்

வசனநல் தைர்யத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை

புசபல பராக்ர மங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை

நிசமுடன் அவரவர்க்கு நீள்நிலம் தனில் அளிக்கும்

குசன் நிலமகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி !


சிறப்புறு மணியே செவ்வாய்த்
தேவே

குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ

மங்கள செவ்வாய் மலரடி போற்றி

அங்காரகனே அவதிகள் நீக்கு!


ஸ்லோகம்

தரனி ஹர்ப்ப ஸம்பூதம்

வித்யுத் காஞ்சன ஸந்நிபம்!

குமாரம் சக்தி ஹஸ்தஞ்ச

மங்களம் ப்ரனமாம்யகம்!!
அங்காரக (செவ்வாய்) காய்த்ரீ

அங்காரகாய வித்மஹே! பூமி பாலாய தீமஹி!1

தந்நோ குஜ ப்ரசோதயாத்!!


என்று தோத்திரம் சொல்லி
வணங்கினால் மேற்கூறியபடி தோசநிவாரணம்
ஏற்படுவதோடு அம்மனின் அருள் கிடைக்கும், இரத்த
சம்பந்தமான நோய்களும்
நீங்கும் . வெற்றி கிட்டும்.
ஸ்தலம்: வைதீஸ்வரன் கோவில்

நிறம்: சிவப்பு

தானியம்: துவரை

வாகனம்: ஆட்டுக்கடா

மலர்: செண்பகம்

உலோகம்: செம்பு

நாள்: செவ்வாய்

ராசிகற்கள்: பவழம்

பலன்கள்: பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம்


புதன்

புதனை வழிபடுவதால் கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகும். புதன்


கிழமையன்று நாராயணனை
வழிபட்டு பின்னர் நவக்கிரகங்களை வணங்கி புத
பகவான் முன்
பதிகங்கள்

மதனநூல் முதல்நான்கு மறைபுகல் கல்வி ஞானம்

விதமுடன் அவரவர்க்கு விஞ்சைகள் அருள்வோன் திங்கள்

சுதன்பசு பாக்கியம் சுகம்வபல கொடுக்க வல்லான்

புதன் கவி புலவன் சீர்மமால் பொன்னடி போற்றி போற்றி !


இதமுற வாழ இன்னல்கள் நீக்கு

புத பகவானே பொன்னடி போற்றி

பதந்தந் தாள்வாய் பண்ணொலியானே

உதவியே யருளும் உத்தமா போற்றி!


ஸ்லோகம்

ப்ரியங்கு களிகா ஷ்யாமம்

ரூபேனா ப்ரதிமம் புதம்!

ஸௌமியம் ஸௌமிய குனோபேதம்

தம்புதம் ப்ரனமாம்யகம்!!
த புத ர
புதன் காயத்ரீ

புதகிரஹாய வித்மஹே! இந்து புத்ராய தீமஹி!!


தந்நோ ஸௌமிய ப்ரசோதயாத்!!
என்று ஸ்தோத்திரம் பாடி
வணங்குவதால் சகல சிறப்புக்களும் பொருந்தி வரும்.
ஸ்தலம்: திருவென்காடு

நிறம்: பச்சை

தானியம்: பச்சைபயிர்

வாகனம்: குதிரை

மலர்: வெண்காந்தல்

உலோகம்: பித்தளை

நாள்: புதன்

ராசிகற்கள்: மகரந்தம்

பலன்கள்: சகல சாஸ்திரம் மற்றும் ஞானம்


குரு (வியாழன்)

குரு தோசமுள்ளவர்கள் மட்டுமன்றி ஏழ்மையில் இருப்பவர்கள், திருமணம்


ஆகாதவர்கள், குடும்பத்தைப்
பிரிந்தவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள்
அனைவரும் வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்
நவக்கிரகங்களை வலம்வந்து
வியாழ பகவானை நோக்கி
பதிகங்கள்

மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி

நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக் கதிபனாகி

நிறைதனம் சிவிகை மண்ணில் நீடு போகத்தை நல்கும்

இறையவன் குரு வியாழன் இருமலர்ப்பாதம் போற்றி !


குணமிகு வியாழக் குருபகவானே

மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்

பிருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா

க்ரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வாய்!


ஸ்லோகம்

தேவாநாஞ்ச ரிஷி நாஞ்ச

குரும் காஞ்சந ஸன்நிபம்!

புத்தி பூதம்திரிலோகாநாம்

தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!!


குரு (வியாழன்) காயத்ரி

ஸுராச்சார்யாய வித்மஹே! சுரஸ்ரேஷ்டாய தீமஹி!!

தந்நோ குரு ப்ரசோதயாத்!!


என்னும் ஸ்தோத்திரம் பாடி
வணங்க வேண்டும். இவ்வாறு விரதத்தை
மேற்கொள்ளுவதன் பலனாக

நல்வாழ்க்கை, நன்மக்கட்பேறு கிடைக்கும்.


ஸ்தலம்: ஆலங்குடி

நிறம்: மஞ்சள்

தானியம்: கொண்டை கடலை

வாகனம்: அன்னம்

மலர்: வெண்முல்லை

உலோகம்: பொன்

நாள்: வியாழன்

ராசிகற்கள்: புஷ்பராகம்

பலன்கள்: சகல சம்பந்துக்கள், மற்றும் வித்தைகள் தேர்ச்சி


சுக்கிரன் (வெள்ளி)

அம்பாளையும் முருகனையும் வணங்கி விரதம் அனுஷ்டிக்கப்படவேண்டும்.


அ யு முரு யு ரத அனுஷ்டி டு
நவக்கிரக சந்நிதியை
வலம்வந்து சுக்கிர பகவானை வணங்கி
பதிகங்கள்

மூர்க்கவான் சூரன் வாணன் முதலினோர் குருவாய் வையம்

காக்கவான் மழை பெய்விக்கும் கவிமகன் கனகம் ஈவோன்

தீர்கவா னவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பம்

பார்க்கவன் சுக்கிரன் தன் பாத பங்கயங்கள் போற்றி !

சுக்கிரமூர்த்தி சுபமிக
யீவாய்

வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்

வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே

அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே!


ஸ்லோகம்

ஹிமகுந்த மிருனாலாபம்

தைத்யாணாம் பரமம் குரும்!

ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம்

பார்க்கவம் ப்ரணமாம்யகம்!!
சுக்கிர (வெள்ளி) காயத்ரி

ராஜதாபாய வித்மஹே! ப்ருகு சுதாய தீமஹி!!

தந்நோ சுக்ர ப்ரசோதயாத்!!


என்ற ஸ்தோத்திரத்தைப்
பாடி வணங்குவதால் புகழ், செல்வங்கள் பெருகுவதோடு
பாவக்கிரகங்களின் பார்வையினால் பலமிழந்திருக்கக்கூடிய
சுக்கிர பகவான்
தொல்லைகள் நீங்கப் பெற்று நற்பலன்களை அளிப்பார்.
ஸ்தலம்: கஞ்சனூர்

நிறம்: வெள்ளை

தானியம்: மொச்சை

வாகனம்: கருடன்

மலர்: வெண்தாமரை

உலோகம்: வெள்ளி

நாள்: வெள்ளி

ராசிகற்கள்: வைரம்

பலன்கள்: விவாகம் மற்றும் பிராப்தம். செளபாக்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்


சனீஸ்வரன் (சனி)

அஷ்டமத்தில் சனி இருப்பவர்களும் ஏழாண்டுச் சனி இருப்பவர்களும் வழிபட்டால்


தொல்லைகள்
குறைவதோடு நன்மையும் உண்டாகும். பெருமாளை வணங்கி
நவக்கிரக சந்;நிதியிலே நவக்கிரகங்களை
வலம்வந்து சனீஸ்வரனுக்கு எள்ளை
துணியிலே கட்டி நல்லெண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றி
பதிகங்கள்

முனிவர்கள் தேவ ரேமும் மூர்த்திகள் முதலி னார்கள்

மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ

கனிவுள தெய்வம் நீயே கதிர்சேய காகம் ஏறுஞ்

சனியனே உனைத்துதிப்பேன் தமியேனுக் கருள் செய்வாயே !


சங்கடந் தீர்க்கும் சனி
பகவானே

மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்

சச்சரவின்றிச் சாகா நெறியில்

இச்சகம் வாழ இன்னருள் தா தா.!


ஸ்லோகம்

நீலாஞ்சன ஸமாபாஸம்

ரவி புத்ரம் யமாக்ரஜம்!

சாயா மார்த்தான்ட ஸம்பூதம்

ர்த்தா பூத
தம் நமாமி சனீஸ்வரம்!!
சனி காயத்ரி

சனீஸ்வராய வித்மஹே! சாயா புத்ராயா தீமஹி!!

தந்நோமந்த ப்ரசோதயாத்!!
என்று ஸ்தோத்திரம் சொல்லி
வணங்குவதால் சகல துன்பங்களும் நீங்கப்பெற்று
நீண்ட ஆயுளும் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில்
வருகின்ற சனிக்கிழமை மிகவும்
விஷேஷம்.
ஸ்தலம்: திருநள்ளாறு

நிறம்: கருப்பு

தானியம்: எள்

வாகனம்: காகம்

மலர்: கருங்குவளை

உலோகம்: இரும்பு

நாள்: சனி

ராசிகற்கள்: நீலம்

பலன்கள்: வியாதிகள், பயம், மற்றும் தீராத கடன்கள் நீங்கும்


இராகுபகவான் (ராகு)
இராகு தோசமுள்ளவர்கள்
சனிக்கிழமைகளில் காளி கோவிலுக்குச் சென்று
வேப்பெண்ணெய் விளக்கேற்றி நவக்கிரக சந்நிதியில்
இராகு பகவானை வேண்டி
பதிகங்கள்

வாகுசேர் நெடுமான் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப்

போகும் அக்காலை உன்றன் புணர்ப்பினால் சிரமே அற்றுப்

பாகுசேர் மொழியன் பங்கன் பரன் கையில் மீண்டும் பெற்ற

ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே !


அரவெனும் ராகு அய்யனே
போற்றி

கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி

ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி

ராகுக்கனியே ரம்யா போற்றி!


ஸ்லோகம்

அர்த்தகாயம் மகாவீர்யம்

சந்த்ராதித்ய விமர்த்தனம்!

ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்

தம்ராஹும் ப்ரனமாம்யகம்!!
ராகு காயத்ரி

ஸூக தந்தாய வித்மஹே! உக்ரரூபாய தீமஹி!!

தந்நோ ராகு ப்ரசோதயாத்!!


என்ற ஸ்தோத்திரம் பாடி
வணங்குவதால் சகல நோய்களும் நீங்கி ஆரோக்கியம்
உண்டாகும்.
ஸ்தலம்: திருநாகேஸ்வரம்

நிறம்: கரு நீலம்

தானியம்: உளுந்து

வாகனம்: ஆடு

மலர்: மந்தாரை

உலோகம்: தாமிரம் மற்றும் கருங்கல்

நாள்: ஞாயிறு

ராசிகற்கள்: கோமேதகம்

பலன்கள்: எந்த காரியத்திலும் ஜெயம் அடைதல்.


கேதுபகவான் (கேது)
செவ்வாய்க் கிழமைகளில்
விநாயரை வணங்கி பின்னர் நவக்கிரக சந்நிதியை
ழ நா ரை ர் ந ர ந்நி தி
வழிபட்டு கேது பகவானை வணங்கி
பதிகங்கள்

பொன்னையின் னுரத்திற் கொண்டோன் புலவர்தம் பொருட்டால் ஆழி

தன்னையே கடைந்து முன்னம் தண் அமுது அளிக்கல் உற்ற

பிள்ளை நின் கரவால் உண்ட பெட்பினிற் சிரம் பெற்றுயர்ந்தாய்

என்னையாள் கேதுவே இவ்விருநிலம் போற்றத் தானே !

கேதுத் தேவே கீர்த்தித்


திருவே

பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்

வாதம், வம்பு வழக்கு களின்றி

கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி.!


ஸ்லோகம்

பலாஷ புஷ்ப ஸங்காஸம்

தாரகா கிரஹ மஸ்தகம்!

ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்

தம்கேதும் ப்ரணமாம்யகம்!!
கேது காயத்ரி

சித்ர வர்ணாய வித்மஹே! ஸர்ப்பரூபாய தீமஹி!!

தந்நோ கேது ப்ரசோதயாத்!!


என்று தோத்திரம் சொல்லி
வணங்கிவர செல்வம், ஞானம், வெற்றி, புகழ்
அனைத்தும் வந்து சேரும்.

ஸ்தலம்: கீழ்பெரும் பள்ளம்

நிறம்: பல நிறம்

தானியம்: கொள்ளு

வாகனம்: சிங்கம்

மலர்: செவ்வள்ளி

ராசிகற்கள்: வைடூரியம்

பலன்கள்: வறுமை, வியாதிகள் நீங்கும்.


Popular posts from this blog

தீர்க்க சுமங்கலி:
August 25, 2014

           சுமங்கலியாக இருப்பவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல


மதிப்பும் மரியாதையும் உண்டு. நம் நாட்டு பெண்கள் குளித்து
மஞ்சள் பூசி, நெற்றி திலகமிட்டு நடப்பதே மிகவும் அழகுதான்.

READ MORE

பெண்களின் ஜாதகமும் தோஷங்களும்:


ஜா த மு தோ ஷ ளு
August 25, 2014

         திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பதால் ஜாதக ரீதியாக


எல்லாப் பொருத்தங்களையும் நன்றாக ஆராய்ந்து பின்பே திருமணம்
செய்கிறார்கள். ஒருவர் பிறக்கும்போது அவரின் ஜாதக ரீதியாக கிரகங்கள்

READ MORE

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின்


வாழ்க்கை ரகசியம்:
August 25, 2014

        இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்ரெண்டாவது இடத்தை


பெறுவது திருவோண நட்சத்திரமாகும். திரு என்ற அடைமொழியுடன் விளங்கும்.
இதன் நட்சத்திராதிபதி சந்திர பகவானாவார். இது மகர ராசிக்குரிய

READ MORE


Powered by Blogger

Theme images by Michael Elkan

P.K.JASVINTHAN

Thanjavur, Tamilnadu, India


Herbal Health,Mfg of Natural Herbal
Products,Thanjavur-
603007,Mobile:9600853667

VISIT PROFILE

JYOMMALAYA "The Divine sh…

Report Abuse

You might also like