You are on page 1of 5

தர்ம சாஸ்திரம் தமிழ் part-1

In this book this type of Clarifications Sastra More Then 220 Subjects
கூடாது கூடாது கூடாது
(தொகுப்பு வெளியீடு =வைதிகஸ்ரீ )
செய்ய வேண்டிய தர்மத்தைச் செய்ய முயற்சிக்க வேண்டும். அதற்கு
முன்பாக செய்யக்கூடாதவை களான செயல்களைத் தவிர்க்க முயல
வேண்டும், வேத சாஸ்த்ர புராணங்களிலும், நமது கலாசாரம்,பண்பாடு
இவைகளிலும் நம்பிக்கையுடைய ஆன்மீ க மக்களுக்காக ஆபஸ்தம்பர்,
கௌதமர், ஆச்வலாயனர் போன்ற மஹரிஷிகளால் எழுதப்பட்ட தர்ம
சாஸ்திர புஸ்தகங்களிலும்,மற்றும் ஆசார(ஒழுக்க)முள்ளவர்களின்
நடத்தையையும், நன்கு ஆராய்ந்து தர்மங்களை ஒன்று திரட்டி தனி
புஸ்தகமாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
தர்ம சாஸ்திரம் தமிழ் புஸ்தகத்தில் நாம் செய்யக்கூடாத சிற்சில தவறுகள்
சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. உதாஹரணமாக
ஸ்னானம் செய்வதற்கு (குளிப்பதற்க்கு) முன்பாக நெற்றியில் சந்தனத்தை
இட்டுக் கொள்ளக் கூடாது. 259
ஈரமான (உலராத) உடையை உடுத்திக் கொண்டு பூஜை, அர்ச்சனை,
போன்ற தெய்வ வழிபாட்டைச்செய்யக்கூடாது.4
விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது விளக்கின் எண்ணையிலுள்ள
தூசியை கை விரலால் எடுக்கக்கூடாது. (இது தரித்ரத்தைத் தரும்) 232
மணியடிக்கும் ஓசையில்லாமல் எந்த பூஜையையும் செய்யக் கூடாது.
தலைப்பு (நுணி) இல்லாத உடைகளையும் , கரைகள் இல்லாத
உடையையும் , மற்றும் நெருப்பு பட்ட துணிகளையும் உடுத்திக்
கொள்ளக்கூடாது.82.
ஆண்கள் தெய்வங்களை வழிபடும் பொழுது தையல் உள்ள (தைத்த)
சட்டையை அணியக்கூடாது.94.
எந்த இடத்திலும் எப்பொழுதும் வடக்கு திசையில் தலையை வைத்து
தெற்குதிசையில் கால்களை நீட்டி படுத்துக் கொள்ளக்கூடாது.27
பூசணிக்காயை (கூமாண்டத்தை)பெண்கள் உடைக்கக் கூடாது. (ஆண்கள்
தான் உடைக்கவேணும்)7
செடி நடுவது , மரங்கள் நடுவது, வபனம் (ஷேவ்) செய்து கொள்வது,
வயலில் விதை தெளிப்பது, ஆகியவற்றை இரவு நேரத்தில்
செய்யக்கூடாது.57. *யாக வேதியில் ஹோம குண்டத்தில் பரப்பப்பட்ட
ஹோமங்களில் உபயோகித்த தர்பங்களை மறுபடியும் உபயோகிக்கக்
கூடாது.128. * ஒரே தமிழ் மாதத்தில் இரண்டு அமாவாஸை வந்தால் அந்த
மாதத்தில் சுப(மங்கள) காரியங்களை நடத்தக்கூடாது (இது அதிக மாஸம்
எனப்படும்)10
இதைப்போல் ஸுமார் 220 விஷயங்கள் பல்வேறு தலைப்புகளின் கீ ழ்
அடங்கியுள்ளன. அதாவது ,ஆலயத்தில்..
தெய்வ வழிபாட்டில்..
பூஜை கள் செய்யும் போது..
ஸ்னானம்
குளியல்
உடை
உணவு முறைகள்
படுக்கும் போது..
ஆண்களுக்காக...
மாதர்களுக்காக..
குறிப்பிட்ட நேரத்தில்..
தனி நபர் கட்டுப்பாடு.
..நமஸ்காரம்..
சுபகார்யங்கள் /மங்கள நிகழ்ச்சிகள் ,
பித்ரு பூஜனம்...
மற்றவை..
என ஸுமார் 15 தலைப்புகளின் கீ ழ் 220 விஷயங்கள் அழகான கார்டூன்
படங்களுடன் கையடக்கமாகத்தொகுக்கப்பட்டுள்ளன,
நம் வட்டுக்கு
ீ வட்டு
ீ நிகழ்ச்சிகளுக்கு வரும் உறவினர்கள் மற்றும்
நன்பர்களுக்கு அன்பளிப்பளிக்கவோ பரிசளிக்கவோ மிகச்சிறந்த புஸ்தகம்
விலை ரூ 25.00 மட்டும்
Copies of this Books are available only with vaithikasri, # New No 488, (old No 175)
T.T.K.Road, Alwarpet, Chennai-600 018. Tamil Nadu, Ph: 044 24361210.
vaithikasri@yahoo.com This Books e would be delivered to your doorstep within 5
business days. You can order it now using our Secure On-Line Form CLICK HERE TO
ORDER NOW.
Posted by Rajagopala ganapatigal at 5:51 AM
தர்ம சாஸ்திரம் தமிழ் part-2 கூடாது கூடாது
கூடாது

In this book this type of Clarifications Sastra More Then 220 Subjects

ந ஹி கஸ்சித் க்ஷணமபி ஜாது திஷ்ட 2 த்யகர்ம க்ருத் இவ்வுலகில் பிறந்த


அனைவரும் ஒவ்வொரு க்ஷணமும் ஏதாவது ஒன்றை செய்து
கொண்டேதானிருப்பார்கள், ஒருவரும் ஒரு க்ஷணகாலம் கூட எந்தஒரு
செயலையும் செய்யாமல் ஸும்மா இருப்பதில்லை என்கிறது சாஸ்திரம்.
செய்யும் செயலை நம் மனதிற்கு தோன்றியவாறு செய்யக்கூடாது,
எந்தச்செயல் நமக்கு நன்மையைத் தரும்? எது தீமையைத்தரும்? என்று
செய்ய வேண்டிய செய்யக்கூடாத செயல்களை தீர்மானிகும் விஷயத்தில்
மனித புத்தியை விட,பகவானின் மூச்சுக்காற்றாக விளங்கும் வேத
சாஸ்திரங்கள் மூலம் தீர்மானிப்பது சிறந்தது,
இதையேதான் தஸ்மாத் ஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய
வ்யவஸ்திதௌ அர்ஜுனா!
செய்யவேண்டியவைகளைசெய்யக்கூடாதவைகளை தேர்ந்தெடுப்பதில்
சாஸ்திரம்தான் ப்ரமாணம் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர் பகவத்கீ தையில் .
நாம் அன்றாடம் செய்யும் குளித்தல், ஆடை உடுத்திக் கொள்ளுதல்,
சாப்பிடுதல், தூங்குதல், (பூஜை ஜபம் பாராயணம் ஹோமம் என)
ஆன்மீ கத்தில் ஈடுபடுதல், நமது கடமைகளைச் செய்தல், என எந்த ஒரு
செயலையும் செய்யாதே என சாஸ்திரங்கள் நம்மை தடுக்கவில்லை,
மாறாக இவற்றை நெறிப்படுத்தி, வரைமுறைபடுத்தி, சில
கட்டுப்பாடுகளுடன் இவைகளை மேலும் சிறப்பாகச்செய்ய வேண்டும்
என்கிறது சாஸ்திரம். ஆகவே சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளவைகளை
நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும், குறிப்பாக
நாம் செய்யும் சின்னஞ்சிறிய தவறுகளை தவிர்க்க முயலவேண்டும்,
அதற்காகவே ஆங்காங்கே சிலர் செய்து வரும் சிறிய தவறுகளை நேரில்
பார்த்து, சாஸ்திரங்களில் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட
செயல்களை மட்டும் சேகரித்து, தர்மமான தர்மசாஸ்திரம் என்னும்
புஸ்தகமாக தொகுத்துள்ளோம், தவறுகளை தவறு என்று
சுட்டிக்காட்டுவதே இந்த புஸ்தகத்தின் நோக்கம்,
இந்த புஸ்தகத்தை படித்து பார்த்து தவறுகளை கூடியவரை தவிர்த்து,
செய்யும் செயலை ஸரியாகச்செய்து முழுமையான பலனை அடைந்து
ஸுகமாய் வாழ ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும்.
தர்ம சாஸ்திரம் தமிழ் -2 புஸ்தகத்தில் நாம் செய்யக்கூடாத சிற்சில
தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. உதாஹரணமாக
தெய்வ ஸன்னிதியில் ஏற்றப்படும் தீபத்தை (திருவிளக்கை) தரையில்
வைக்கக் கூடாது (தட்டு அல்லது இலைகளின் மீ து வைக்கலாம்)
தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யும் போது அபிஷேகம் செய்த
பாலையும், அபிஷேகம் செய்த சந்தன ஜலத்தையும் (ஒரே பாத்திரத்தில்)
ஒன்றாக சேர்க்கக் கூடாது. (தனித்தனியாக பிடித்து வைக்க வேண்டும்).
இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைபட்ட தேங்காயை
தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது (இரண்டாக உடைக்கப்பட்ட
தேங்காய் மூடிகளைத் தான் நிவேதனம் செய்ய வேண்டும்). 4
தெய்வத்திற்கு விளக்கேற்றும்போது ஒரு எண்ணையை மற்ற எண்ணை
அல்லது நெய்யுடன் கலந்து விளக்கேற்றக் கூடாது. (நல்லெண்ணை, நெய்
முதலியவற்றால் தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும்)
5 ஸ்வாமி அபிஷேகத்திற்காக கிணறு, மற்றும், குழாயிலிருந்து எடுத்து
வரும் ஜலத்தை இடது கையால் எடுத்து வரக்கூடாது.(வலது கையால்
எடுத்துவரலாம்).
6 ஒரு தெய்வத்தின் படத்துக்கோ விக்ரஹத்துக்கோ போடப்பட்ட
மாலையை மற்ற தெய்வத்தின் படத்துக்கோ விக்ரஹத்துக்கோ
போடக்கூடாது.
7 சூடு செய்த(காய்ச்சிய) பாலால் தெய்வங்களுக்கு அபிஷேகம்
செய்யக்கூடாது.
8 புழுங்கல் அரிசியால் ஸமைக்கப்பட்டவைகளை தெய்வங்களுக்கு
நிவேதனம் செய்யக்கூடாது.
9 நிவேதனம் செய்யும் போதுவெத்தலையுடன் சேர்த்து வைக்கப்படும்
பாக்கை பாக்கெட்டுடன் வைத்து நிவேதனம் செய்யக்கூடாது (பாக்கு
பாக்கெட்டைப் பிரித்து வெத்தலையுடன் வைத்து நிவேதனம் செய்ய
வேண்டும்)
10 எக்காரணத்தைக் கொண்டும் ஆலயங்களிலோ பூஜையறைகளிலோ
தெற்கு திசை நோக்கி தீபம் ஏற்றி வைக்கக்கூடாது,
11 பிளாஸ்டிக்காலான பூக்களை தெய்வ விக்ரஹங்களின் மீ து சாத்தக்
கூடாது.(படங்களின் மீ து போடலாம்).
12 பூஜை அறையில் அலங்காரமாக அமைக்கப்படும் எலக்ட்ரிக் (ஸீரியல்)
விளக்குகளை தெய்வ விக்ரஹம் அல்லது படத்தின் மீ து பட்டுக்
கொண்டிருக்குமாறு அமைக்கக் கூடாது.
13 திருமணமானவர்கள் பஞ்சகச்சம் மற்றும் மடிசார் கட்டிக் கொள்ளாமல்
எந்த ஒரு பூஜையையும் தானும் செய்யக்கூடாது, மற்றவருக்குச் செய்து
வைக்கவும் கூடாது.
14 ப்ளாஸ்டிக் ஆஸனத்தின் மீ து அமர்ந்து கொண்டு எந்த ஒரு
மந்திரத்தையும் ஜபம் செய்வதோ ஹோமம் செய்வதோ கூடாது.
15 நாம் வஸிக்கும் கட்டடத்தில் (அபார்ட் மெண்டில்) ஏதாவது ஒரு
பகுதியில் இறந்தவர் உடல் இருக்கும் போது, தன் வட்டில்
ீ பூஜை,
பாராயணம், ஜபம், ஹோமம், முதலிய எந்த ஒரு தெய்வ காரியங்களையும்
செய்யக்கூடாது. (அந்த உடல் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு செய்யலாம்).
16 வேப்பெண்ணையாலும் வேப்பெண்ணை கலந்த எண்ணையாலும்
ஆலயங்களிலோ வட்டிலோ
ீ ஸ்வாமிக்கு தீபம் ஏற்றக்கூடாது.
தெய்வ வழிபாடு 6 பூஜை 13 ஹோமம்19 ஆலயங்களில் 24 குறிப்பிட்ட
நேரத்தில்33 தனி நபர் கட்டுப்பாடு38 குளியல் உடை 47 உணவு முறைகள்
52 படுக்கும் போது 62 ஆண்களுக்காக 63 பெண்களுக்காக 72 நமஸ்காரம்
76 ப்ரயாணம் 80 மங்கள நிகழ்ச்சிகள் 83 பித்ரு பூஜநம் 89 மற்றவை பொது 99
என ஸுமார் 15 தலைப்புகளின் கீ ழ் 220 விஷயங்கள் அழகான கார்டூன்
படங்களுடன் கையடக்கமாகத்தொகுக்கப்பட்டுள்ளன,
நம் வட்டுக்கு
ீ வட்டு
ீ நிகழ்ச்சிகளுக்கு வரும் உறவினர்கள் மற்றும்
நன்பர்களுக்கு அன்பளிப்பளிக்கவோ பரிசளிக்கவோ மிகச்சிறந்த புஸ்தகம்
விலை ரூ 25.00 மட்டும்
Copies of this Books are available only with vaithikasri, # New No 488, (old No 175)
T.T.K.Road, Alwarpet, Chennai-600 018. Tamil Nadu, Ph: 044 24361210.
vaithikasri@yahoo.com This Books e would be delivered to your doorstep within 5
business days. You can order it now using our Secure On-Line Form CLICK HERE TO
ORDER NOW.
Posted by Rajagopala ganapatigal at 5:52 AM

You might also like