You are on page 1of 3

நான் ஒரு விஞ்ஞானியானால்

இப்புவியில் எல்லோருக்கும் ஒரு ஆசை உண்டு. அதே போல்

எனக்கும் ஓர் ஆசை உண்டு. எதிர்காலத்தில் நானும் ஒரு

விஞ்ஞானியானால் மக்களின் நல்வாழ்வுக்கு வழிவகுப்பேன். இந்த

உலகத்தில் பழைய விஞ்ஞானிகள் இல்லை என்றாலும் அவர்களின்

பெயர் இன்னும் நிலைத்து இருக்கிறது.

இன்றைய மாணவர்கள் நாளைய விஞ்ஞானிகள் என்பதை

உணர வேண்டும். முதலில் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு

புது துணைக்கோளைக் கண்டுபிடிப்பேன். இன்று மக்கள் உல்லாசமாக

அனுபவித்து பார்த்துக் கொண்டிருக்கும் “ ஆஸ்ட்ரோ’ நிகழ்ச்சிகள்

‘மியாசட்’ எனும் துணைக் கோள்களின் வழியாக தினமும் புத்தம்

புதிய நிகழ்ச்சிகளையும் நேரடி ஒளிபரப்புகளையும் கண்டு

மகிழ்கிவார்கள். சுருங்கக் கூறினால், இன்று அனுபவிக்கும் அனைத்தும்

தொழில்நுட்ப சாதனங்களும் ஒரு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பே!

நான் கண்டுபிடிக்கும் துணைக்கோளால் ஒளி கதிர்களை ஒன்று திரட்டி

இன்று விடைகானத நோய்களுக்கு மருந்தாக்குவேன்.

புற்று நோய்க்கு மருந்தில்லை என்கிறார்கள். ஆனால் ஒளி

கதிர்களின் மூலம் நோய் கண்டவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.

அது முழு பயன் அழிக்காமல் இறப்பவர்களே அதிகம். நான்


கண்டுபிடிக்கும் இந்த துணைக்கோளைக் கொண்டு ஒளிக்கதிர்களான

அல்பா, பேத்தா, காமா எனும் ஒளிக்கதிர்களை ஒன்று திரட்டி

இந்நோயிக்கு புது விதமான முறையில் மருந்தும் செய்ய முயல்வேன்.

இக்கருவியினால் மருத்துவத் துறையின் ஏற்பட்டுள்ள

பிரச்சைனைகளைத் தீர்த்து மக்களை நோயிலிருந்து காப்பாற்றி

ஆரோக்கியமாக வாழ வகை செய்வேன். ஆரோக்கியமான மக்களே

நாட்டு முன்னேற்றத்திற்கு அடிப்படையானவர்கள். மேலும் மருத்துவர்

துறையில் தோன்றும் பற்பல நோய்களுக்கு நான் என்

துணைக்கோளை ஆதாரமாகக் கொண்டு மருந்துகளைக்

கண்டுப்பிடிப்பேன்.

தற்போது உலகில் ஆங்காங்கே இயற்கைப் பேரிடர்கள்

நிகழ்கின்றன. பூமி மாதாவின் சீற்றமாக கருதப்படும் வெள்ளம்,

நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு மக்களின் உயிர்களைப்

பழியாக்குகின்றது. இது போன்ற துயரங்களைத் துடைத்தொழிக்க

உதவுவேன். இயற்கைப் பேரிடர்களிலிருந்து மக்கள் தங்களைக்

காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொரு வட்டிலும்


ீ முன்னெச்சரிக்கைக்

கருவியைப் பொருத்தி அதன் பயன்பாட்டையும் எடுத்துரைப்பேன்.


கடவுளின் ஆசியும் அருளும் இருந்தால், எதிர்காலத்தில் நான்

ஒரு விஞ்ஞானியாவேன். எனது அனைத்து எண்ணங்களையும்

செவ்வெனே செயலாக்குவேன், புதிய கண்டுபிடிப்புகளை

உருவாக்கினாலும், நான் இயற்கையைப் பாதுகாப்பேன்.

ஆக்கம்,
டர்ஷன் சரவணன்
லோபாக் தமிழ் பள்ளி

You might also like