You are on page 1of 2

§ÀîÍô§À¡ðÊ

¾¨ÄôÒ : நலம்

இப்பேச்சுப் போட்டியில் நான் பேச எடுத்துக் கொண்ட தலைப்பு ‘நலம்’.


‘நலம்’ ஆம்! நலம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் நம் மனம், மகிழ்ச்சிப் பூரிப்பில் நிம்மதி
பெருமூச்சு விடுகிறது. நாம் எழுதும் ஒவ்வொரு மடலிலும் நலம்; நலமறிய அவா என்று தான்
தொடங்குகிறோம்.
நலத்தை நாம் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று உடல் நலம்; மற்றொன்று
மனநலம்.
‘உடல் நலம்’ என்பது, நாம் எந்தவித நோய்க்கும் ஆட்படாமல், ஆரோக்கியமாக வாழ்வதே
ஆகும்.
‘மன நலம்’ என்பது மனத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதே ஆகும். அதாவது
நம் மனத்தைப் பொறாமை, காழ்ப்புணர்ச்சி போன்ற அழுக்காறுகள் இல்லாமல் மிகத்
தூய்மையாக வைத்திருப்பதே மனநலம் எனப்படுகிறது.
முழுமையான நிலையை அடைய ஒரு மனிதனுக்கு உடல் நலமும் முக்கியம்; மன நலமும்
முக்கியம். இவை இரன்டும் ஒரு மனிதனுக்குச் சரிவர அமைந்து விட்டால், அவன் உலகையே
ஆள முடியும்.
ஆம்! நோயுற்ற ஒரு மனிதனால் எதையும் கவனமாகக் கருத்தூன்றிச் செய்ய இயலாது.
மாறாக அவன், கவனம் முழுதும் மருந்து மாத்திரைகள் உட்கொள்வதில்தான் இருக்கும். எந்தச்
செயலையும் உடனுக்குடன் சரிவர அவனால் செய்ய இயலாது. அவனது சிந்தனா சக்தியும்
சிறப்பாக இயங்காது. அவன் ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் அவனால் வெற்றியடைய
இயலாது; மாறாக அவன் தோல்வியைத் தான் தழுவ இயலும்.
நோயுற்ற ஒரு மனிதன் தன் குடும்பத்தையும் சிறப்பாகப் பராமரிக்க இயலாது. தன்
குடும்பத்தையும் துன்பக் கடலில் மூழ்கச் செய்வான்.
மேலும் அவனால் குடும்ப பொருளாதாரத்தையும் சரிவர கவனிக்க இயலாது.
இச்சூழ்நிலையில் நோயாளி மனிதனின் குடும்பமே பொருளாதாரப் பிரச்சனையில் தத்தளிக்கக்
கூடும்.
தன்னையும் கவனிக்க முடியாமல், தன் குடும்பத்தையும் கவ்னிக்க முடியாமல்
துன்பப்படும் ஒரு மனிதனால் சமுதாயத்தை முன்னேற்ற இயலுமா? நாட்டை முன்னேற்றமடையச்
செய்ய இயலுமா? சொல்லுங்கள் நீதிபதிகளே ! முடியவே முடியாது ! ஆகவே இத்தகைய
சூழ்நிலைகளைத் தவிர்க்க சிறந்த வழி நம் உடல் நலத்தைப் பேணுவதே ஆகும் !
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஒப்ப நாம் உடல் நலத்தைப்
பேணுவது சாலச்சிறந்தது !
அடுத்து முக்கியமாகக் கருதப்படுவது ‘மனநலம்’. உலகமே நம்மை எதிர்தத
் ாலும்
தன்னம்பிக்கை கொண்டு வெல்வது நம் உறுதி மிக்க மனமே!
‘மனம் உண்டானால் மார்க்கம் உண்டு’ என்ற பழமொழி, வானமே நமது தலையில் இடிந்து
வீழ்ந்தாலும், நாம் நம் முயற்சியை, விடாமுயற்சியை, தன்னம்பிக்கையை என்றுமே கை
விடக்கூடாது.
கறுப்பின மக்களின் அடிமைத்தனத்தை வேரறுத்த அமெரிக்க அதிபர், ஆபிரகாம்
லிங்கன், 13 முறை பல தேர்தல்களில் தோற்றுப் போனாராம். 14 வது முறை அமெரிக்க அதிபர்
தேர்தலில் வெற்றிப் பெற்றாராம். அவர், முதல் தோல்வியிலோ அல்லது இரண்டாவது
தோல்வியிலோ மனம் துவண்டிருந்தால் இன்று ஆபிரகாம் லிங்கன் போல் புகழ் மிக்க அமெரிக்க
அதிபர் ஒருவரை இவ்வுலகம் சந்தித்திருக்குமா? அவரின் இமலாய வெற்றிக்குக் காரணம்
அவருடைய ஆரோக்கியமான மன நலமே!
அடுத்து இஸ்லாமிய மன்னன் கஜினி முகம்மதுவை எடுத்துக் கொள்வோம்.
அவனுடைய நாட்டை எதிரி மன்னன் போரிட்டு வென்று, அவனை விரட்டி அடித்தான். மனம்
தளராத கஜினியும் மீண்டும் மீண்டும் போரிட்டான். ஆனால், அவனுக்குக் கிடைத்தது தோல்வி
தான் !
மனமுடைந்த கஜினி முகம்மது, ஒரு குகையில் இளைப்பாறிக் கொண்டிருக்கும்
பொழுது, சிலந்தி ஒன்று வலை பின்னுவதைக் கண்டான். சிலந்தி பின்னும் வலை, பல முறை
காற்றால் களைந்தது. ஆனால், பின் வாங்காத அந்தச் சிலந்தி, மீண்டும்,மீண்டும் வலை
பின்னும் முயற்சியில் ஈடுபட்டது. இறுதியில் வெற்றியும் அடைந்தது. இதைக் கண்ட கஜினி
முகம்மது, உற்சாகத்துடன் துள்ளி எழுந்தான். முழு முயற்சியுடன் படைகளைத் திரட்டிப்
போரிட்டு, வெற்றிப் பெற்று தன் நாட்டை மீடடெ
் டுத்தான். பார்தத
் ீர்களா? நீதிபதிகளே! மன
நலம் எந்த அளவிற்கு ஒரு மனிதனின் வெற்றிக்கு வழி வகுக்கின்றது என்று ?
ஆம்! நீதிபதிகளே! உடல் நலமும், மன நலமும் மனிதனின் மாபெரும் வெற்றிக்கு வழி
வகுக்கும் இரு கருவிகள் என்றால் அது கிஞ்சிற்றும் மிகையாகாது.

இத்துடன் என் உரையை முடிக்கிறேன்.

நன்றி ! வணக்கம் !

You might also like