You are on page 1of 13

பிரிவு அ

அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கவும்

1. ராஜா என்பதன் பொருள் என்ன?

A. கூட்டரசின் பெருந்தலைவர்
B. ஓர் அரசின் பெருந்தலைவர்
C. கூட்டரசின் உயரிய ஆட்சியாளர்
D. இறையாண்மைமிகு அரசின் உயரிய ஆட்சியாளர்

2. கீழ்க்கண்ட நாடுகளில் எந்தெந்த நாடுகள் அரசமைப்பு ஆட்சிமுறையை


அமல்படுத்துகின்றன ?

I டென்மார்க்
II தாய்லாந்து
III சிங்கப்பூர்
IV இந்தோனேசியா
A. I , II
B. I , IV
C. II , III
D. III ,IV

3. மக்கள் அரசருக்கு விசுவாசமாக இருக்க உறுதியளித்தனர். அதே சமயம் அரசரும்


மக்களை நீதிவழுவா நடுநிலைமையுடன் ஆட்சி செய்ய உறுதி அளித்தார்.

மேற்கண்ட கூற்றின் பொருள் யாது ?

A. மக்களுக்கும் அரசருக்கும் இடையே உள்ள விசுவாசம்


B. மக்களுக்கும் அரசருக்கும் இடையே உள்ள வாடாட் உடன்பாடு
C. மக்களுக்கும் அரசருக்கும் இடையே நிலவும் துரோகம்
D. மக்களுக்கும் அரசருக்கும் இடையிலான வாழ்க்கை முறை
4. பிரிட்டிஷ் காலனித்துவத்தின்போது சுல்தானின் பங்கைக் குறிப்பிடுக.

A. கிறிஸ்துவ சமயத் தலைவர்


B. இஸ்லாமிய சமயத் தலைவர்
C. கடற்படைத் தலைவர்
D. நிர்வாகத் தலைவர்

5. ஏன் மலாய்மொழி கல்வி மொழியாகவும் தொடர்பு மொழியாகவும்


பயன்படுத்தப்படுகிறது?

A. சுலபமாகப் புரிந்து கொள்ளலாம்


B. தேசிய மொழி
C. 5000 ஆண்டுகளுக்கும் மேலான வயதைக் கொண்ட முதன்மை
மொழி
D. தேசிய மொழிச் சட்டம் 1963/1967

6. மலாயாவில் இந்து சமய வருகைக்கான காரணம் யாது ?

A. ஈயச் சுரங்க நடவடிக்கைகள்


B. வணிக நடவடிக்கைகள்
C. விவசாய நடவடிக்கைகள்
D. மீன்பிடி நடவடிக்கைகள்

7. எது மூன்றாண்டுக்கு ஒருமுறை கப்பமாகச் சயாம் ஆட்சியாளருக்கு


அனுப்பப்பட்டது?

A. தங்கமலர்
B. ஈயம்
C. வெட்டு மரம்
D. தங்கம்

8. 1303 ஆண்டின் கல்வெட்டு எங்கு கண்டெடுக்கப்பட்டது ?

A. டூயோங் நதி
B. தெரெசாத் நதி
C. கோலத் திரங்கானு
D. பெங்காலான் கெம்பாஸ்

9. கீழ்க்காணும் பண்புகளில் எப்பண்பு சமயத்தின் வழி ஒற்றுமையை


உருவாக்காது.

A. அன்பு
B. அமைதி
C. பெருமை
D. எளிமை

10.  சரிக்கேய் பகுதியை ஆக்கிரமித்ததால் ஜேம்ஸ்


புரூக்கை எதிர்த்தார்.
 கனோவிட்டில் புரூக் அரணைத் தாக்கினார்.

மேற்கண்ட கூற்று ஓர் உள்ளூர் வீரரைக் குறிக்கிறது. அவர் யார் ?

A. டத்தோ பஹாமான்
B. ரெந்தாப்
C. மாட் சாலே
D. ஷரிப் மசாஹோர்

11. கீழ்க்கண்ட படிநிலை மலாய்மொழி பாரம்பரிய வழித்தோன்றலைக்


காட்டுகிறது.

பிலும் மலாய்மொழி

மேற்காணும் செயற்பாங்கு வரைப்படத்தை நிறைவு செய்க.

A. வகைப்பாடு
B. பிரிவு
C. குடும்பம்
D. குழு
12. அன்றைய மற்றும் தற்போதைய கல்வியில் மலாய்மொழியின் பங்கு
என்ன?

A. மலாய்மொழி தொடர்பு மொழியாக பள்ளிகளிலும் உயர்க்கல்விக்


கூடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
B. மலாய்மொழி , சமய அறிஞர்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்குப்
போதிக்கப்படுகிறது.
C. மலாய்மொழி எழுத்துப் படிவ மொழியாக பள்ளிகளிலும் உயர்க்கல்விக்
கூடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
D. மலாய்மொழி மலாய் அரசர்களின் தொடர்பு மொழியாகப்
பயன்படுத்தப்படுகிறது.

13. மலாய்மொழியில் உள்ள கப்பல் என்ற சொல் எந்த மொழியிலிருந்து


எடுக்கப்பட்டது ?

A. அரபு
B. தமிழ்
C. போர்த்துகீஸ்
D. சமஸ்கிருதம்

14. ஜப்பானின் காலனித்துவத்தின்போது சுல்தானின் பங்கு என்ன?

I இஸ்லாமிய சடங்கிற்கும் மலாய்ச் சடங்கு சம்பிரதாயத்திற்கும் தலைவர்


II சட்டத் திட்டங்களை உருவாக்குபவர்
III நிர்வாகத் தலைவர்
IV மாநிலத் தலைவர்
A. I , II
B. I .IV
C. II , III
D. III , IV
15. பின்வரும் தகவல்கள் பண்டைய கால அரசர்களின் அதிகாரத்தையும்
பண்டைய

கால அரசாங்கத்தையும் குறிக்கிறது

 ராஜா அல்லது சுல்தான் அரசாங்கத்தின் தலைவர் மற்றும்


முழுமையான அதிகாரம் கொண்டவர்.
 சட்டம், நிர்வாகம், நீதி மற்றும் பிற நாடுகளுக்கிடையே உள்ள
நல்லிணக்கம் ஆகியவற்றில் முடிவெடுக்கும் அதிகாரம் ராஜா அல்லது
சுல்தானுக்கு உரியது.

மேற்கண்ட தகவல் எந்த காலக்கட்டத்தைக் குறிக்கிறது ?

A. பிரிட்டிஷ் ஆட்சிக் காலம்


B. ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலம்
C. தொடக்கக் கால மலாய் அரசுகள்
D. சுதந்திரத்திற்குப் பிறகு முதல் இன்று வரை

16. சபா மாநிலத்தில் விளையும் இயற்கை வளத்தையும் மற்றும் இயற்கை


மூலத்தையும் குறிப்பிடுக.

A. தங்கம் , ஜவ்வரிசி , ஈயம்


B. வெட்டு மரம் , பிரம்பு , தங்கம்
C. தங்கம் , ஜவ்வரிசி , கற்பூரம்
D. வெட்டு மரம் , பிரம்பு , பறவைக் கூடு

17. ஏன் அந்நியச் சக்திகள் நம் நாட்டில் ஆட்சி புரிந்தனர் ?


A. உள்ளூர் ஆட்சியாளரின் நிர்வாகத்திற்கு உதவி செய்ய
B. நம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த
C. அரசியல் , பொருளாதார மற்றும் சமூகவியலில் தலையீடு செய்ய
D. நட்பின் அடையாளமாக விளங்க

18. ஏன் பிரிட்டிஷார் ஈயத் தொழிலையும் ரப்பர் தொழிலையும்


மேம்படுத்தினர் ?

A. புதிய பொருளாதார முறையை அறிமுகப்படுத்த


B. கூட்டரசு மலாய் மாநிலங்களை மேம்படுத்த
C. மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த
D. பிரிட்டிஷாரின் பொருளாதார முக்கியத்துவத்தை நிலைநாட்ட

19. “ எட்டு உயர்நிலை நெறிகளைக் கடைப்பிடித்தல்” எனும் கூற்றைக்


கடைப்பிடிக்கும் சமயம் யாது ?

A. பௌத்த சமயம்
B. கிறிஸ்துவ சமயம்
C. இஸ்லாமிய சமயம்
D. இந்து சமயம்

20. Lingua franca என்பதன் பொருள் என்ன?

I பொழுது போக்கு மொழி


II கல்வி மொழி
III இணைப்பு மொழி
Iv தொடர்பு மொழி

A. I , II
B. I , IV
C. II , III
D. III , IV

பிரிவு B

A. சரியான விடையைக் கொண்டு காலியான இடத்தை நிரப்புக.

இறையாண்மை அரசு துரோகம்

வாடாட் அமைப்புமுறை கூட்டரசு பிரதேசம்

1. மாட்சிமை தாங்கிய மாமன்னர் _______________ சுதந்திரத்திற்குப் பிறகு

அறிமுகப்படுத்தப்பட்டது.

2. என்பது மாநிலம் அல்லது நாட்டைச் சட்டப்படி ஆள்வதாகும்.

3. எனப்படுவது தனது அரசின் மீது அரசர் கொண்டுள்ள மிக

உயரிய அதிகார அடையாளம் ஆகும்.

4. மக்கள், அரசரின் அல்லது சுல்தானின் ஆணையைப் புறக்கணித்தல்

____________ ஆகும்.
5. அல்லது ஒப்பந்தம் , ‚ தெரி புவானாவிற்கும் டெமாங்

லெபார் டாவுனிற்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையாகும்.

(5 புள்ளிகள்)

B. கொடுக்கப்பட்டுள்ள விடைகளைக் கொண்டு வாக்கியங்களை நிறைவு


செய்க.

இந்து சமயம் பௌத்த சமயம் கிறிஸ்துவ சமயம்

இஸ்லாமிய சமயம் இயற்கை வழிபாடு

1. மறுப்பிறப்பில் நம்பிக்கை கொண்டுள்ள சமயம் ________________.

2. ______________மலாயாவுக்கு வணிகர்கள், உலாமாக்கள் மற்றும் சமயப்

போதகர்களால் கொண்டுவரப்பட்டது .

3. எட்டு உயர்நிலை நெறிகளைக் கடைப்பிடிப்பது ______________.

4. போர்த்துகீஸிய காலனித்துவ வருகைக்குப் பின்னர் தோன்றியது

_________________.

5. _______________ மலாயாவில் உள்ள சமூகத்தினரின் தொடக்கக்கால

நம்பிக்கையாகும்.
(5 புள்ளிகள்)

C.பின்வரும் குமிழ் வரைப்படத்தை நிறைவு செய்க.

மலாய்
மொழியின்
பங்கு
(5 புள்ளிகள்)

D. அந்நிய சக்திகளின் வருகைக்கான ஐந்து காரணிகளை எழுதுக.

i) _________________________________________

ii) ________________________________________

iii) ________________________________________

iv) ________________________________________

v) ________________________________________
(5 புள்ளிகள்)

E. வரைப்படத்தை நிறைவு செய்க.


மலாய்மொழியின் சொற்களஞ்சியத்தை வளப்படுத்திய
பிறமொழிகளின் ஆதிக்கம்
Perbendaharaan Kata Bahasa Melayu

(5 புள்ளிகள்)

பிரிவு C

மலேசியா ஒரு சுபிட்சமான நாடு. இந்த நாட்டில் பல்வேறு


இனங்கள் பல சமய நம்பிக்கைகளைப் பின்பற்றி வாழ்கின்றனர்.
இந்நாட்டின் சுபிட்ச நிலை மலேசியாவை கலைக் கலாச்சாரத்தில்
வளமிக்க நாடாக உருவாக்கியது.
1. மலேசியாவில் காணப்படும் பாரம்பரிய இசைக்கருவிகளைப் பட்டியலிடுக?

(2 புள்ளிகள்)

2. நீங்கள் பள்ளியில் கலைக் கலாச்சாரக் கழகத்தின் தலைவர். நமது கலைக்


கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் போற்றும் வழிகளை உங்கள் பள்ளியில்
எவ்வாறு செயல்படுத்துவீர்?

(3 புள்ளிகள்)

You might also like