You are on page 1of 4

அகம் சார்ந்த அறம் சார்நத

் அறிவு மொழி நம் தமிழ்மொழி. பல நெறிகளை அறிந்து திரமும்


தரமுன் நிறைந்த மாண்பு தவறாத தமிழனாக உருவெடுக்க நம் முன்னோர்கள் அருளிச் சென்றவையே நம்
சங்கக் கால இலக்கியங்கள். நம் பெருமைக்குரிய இலக்கிய பேராளர்கள் அவர்களின் பொழுது
போக்கிற்காகவும் மன மகிழ்விற்காகவும் மட்டும் இலக்கியங்களை இயற்றவில்லை . கலங்கிக் கிடக்கும்
பல மானுடர்களின் சிந்தை தெளிந்து பகலவன் போல் ஜொலிக்க வித்திடுகின்றது. இலக்கியங்கள்
ஒவ்வொரு மனிதனிடமும் இருக்க வேண்டிய பல கூறுகளை இயற்கை கலந்த இலக்கிய நயத்தோடு நம்
அறிவிற்கு எட்டும்படி எடுட்துரைக்கின்றன. எண்ணிலடங்கா இலக்கியங்கள் இருப்பினும் அகபுற
பாடல்களில் இருக்கும் எட்டுத்தொகையின் தொகுப்பான புறநானூறு, குறுந்தொகை, அகநானூறு
போன்ற பாடல்களிலும் பத்துப்பாட்டில் இருக்கும் முல்லைப்பாட்டினிலும் நாம் பல மாண்புகளைக் கற்று
அறநெறி பிறழாது வாழ வழிவகுக்கின்றன. அதோடு, இப்பாடல்களில் பெளிப்படுத்தப்படும் நெறிகள்
யாவும் உலகளாவிய சித்தனைக்கும் வித்திடுகின்றன.

எட்டுத்தொகையின் தொகுப்பான புறநானூறு அறம், ஆட்சி, நீதிநெறி, படை, புலமை, பொதுநலம்


போன்ற புறவாழ்வினைப் பற்றி புகளும் கருத்தோவியமாகும். இவ்வறிவுப் புதையலை இயற்றியவர்
கிடைக்கப்பபெறாவிட்டாலும் இதனுள் இருக்கும் வாழ்வியல் கருத்துகள் யாவும் உலகளாவிய
சிந்தனைக்கு ஏற்புடையதே. அவ்வகையில் ‘புறநானூற்றில் ‘சிறப்பில் சிதடு முறுப்பில் பிண்டமும் கூனுங்
குறளு மூமுஞ் செவிடும் ‘ – எனும் பாடலின் மூலம் அறநெறியினைப் பற்றி செந்தமிழ் சித்தர்கள்
வலியுறுத்தியுள்ளனர். அதாவது, இப்பிறவியில் அடைந்த செல்வத்தினை அறவழியில் பயன்படுத்தி
மறுபிறவியில் ஊமை, கூன், குருடு, செவிடு போன்ற எட்டு வகை குறைகளும் அன்றி வாழ வேண்டும்
என்பதையே புலவர் சாடுகின்றார். இதற்கு ஒப்பாக இக்காலக் கட்டத்தில் இம்மனுலக மானுடர்கள்
உலகளவில் அறம் செய்து உலக மக்களுக்கு கரம் கொடுப்பதினை நம்மால் காண முடிகின்றது.
எடுத்துக்காட்டாக, 2015- இல் நெபால் நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கம் அந்நாட்டு மக்களின் வாழ்க்கையை
ஒரு கனத்தில் புறட்டிப் போட்டது. வீட்டுக் கூரையின் கீழ் பாதுகாப்பாக வாழ்ந்த மக்கள் வீதியையே
வீடாகக் கருதி வாழும் நிகைக்குத் தள்ளப்பட்டனர். அந்த அவல நிலையை நீடிக்கவிடாமல் நெபாலில்
அண்டை நாடான இந்தியா விமானத்தின் உதவியோடு நகரும் மருத்துவமணைகளையும் அந்நாட்டு

மக்களுக்குத் தேவையான உணவுகளையும் உடனே கொண்டு சேர்த்தனர். உடலில் உள்ள காயத்திற்கு


மருந்தும் பசிக்கு உணவும் கொடுத்த இந்திய நாடு 13 இராணுவ விமானத்தின் வழியாக அவர்கள்
தங்குவதற்குத் தேவையான கூடாரம், போர்வை போன்ற அத்தியவிசயமான பொருட்களையும் கொடுத்து
உதவினர். இந்தியா மட்டுமின்றி சினா, கனடா, இஸ்ராயில் போன்ற நாடுகளும் பல வகையில் உதவினர்.
அறத்தின் உயர் நிலையை இந்நாடுகள் படம் பிடித்துக் காட்டியுள்ளனர். அன்று நமக்கு கிடைத்த
செவ்விலக்கியங்களின் கருத்துகள் இன்றும் உலகளவில் வாழ்ந்து கொண்டே இருக்கின்றன.

எட்டுத்தொகையில் நம் சிந்தைக்கு விருந்தாக அமையும் மற்றொரு படைப்பாக மிளிர்வது


அகநானூறாகும். ‘யாயே, கண்ணினுங் கடுங்கா தலளே யெந்தையு நிலனுறப் பொறாஅன் சீறடி சிவப்ப’
எனும் பாடல் குறிஞ்சி திணையில் நிகழ்ந்ததனைக் கபிலரால் கருத்தோவியமாக்கப்பட்டு உலகளாவிய
சிந்தனைக்கு வித்திட்டதாகும். இப்பாட்டினில், மகள் வீட்டை விட்டு வெளியே வந்தால், கல் பட்டு அவள்
பாதங்கள் சிவந்துவிடுமோ என்றிணைக்கும் தந்தையின் அன்பிற்கும் தலைவியின் உயிர் தோழியின்
அன்பிற்கும் மேலாக வெளிப்பட்டுள்ளது தலைவி தலைவனின் மீது கொண்டிருக்கும் அன்பு. எத்துணை
அன்பைச் சுமந்தவளானாலும் ஒழுக்க நெறியை மீறாதவளாகத் தலைவி இப்பாடலில்
சித்தரிக்கப்பட்டுள்ளாள். ஆம், “ ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்

என எழிலார்ந்த மொழியினில் ஒழுக்கத்தின் சிறப்பினை அழகாகக் கூறிச் சென்றுள்ளார் திருவள்ளுவர்.


தலைவன் தலைவியிடத்தே காணப்படுவது மட்டும் ஒழுக்கமல்ல. ஒரு உயர்ந்த நோக்கத்தையடைய நம்
சிந்தனைச் சித்திரங்களை ஒழுங்குப்படுத்தி குறிக்கோளுக்கேற்றபடி முன்னேறி செல்ல அடித்தளமாக
இருப்பதும் ஒழுக்கமே. இதற்கு எடுத்துகாட்டாக, பாராக் ஒபாமா விளங்குகிற்றார். ஒரு மனிதன்
வாழ்க்கையில் வெற்றி பெற சுய ஒழுங்க மிக அவசியமான ஒன்று என்பதனை தன் புத்தகத்தில்
அழுத்தமாகக் கூறியுள்ளார். அவரின் வெற்றி கனிகளுக்கும் அவ்வொழுக்கமே காரணமாகிறது
என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

‘சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்’ எனும் குறளுக்கு வடிவம் கொடுத்தது போல் அவரின் உயர்நத
் ஒழுங்கினால்
பல வெற்றிகளைத் தழுவியுள்ளார். எடுத்துக்காட்டாக, அந்நாட்டு மக்களின் உடல் நலத்தைக் கருதி

அதற்காக 32 மில்லியன் மக்கள் பயனடையும் வகையில் பொது சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை


அமலாக்கம் செய்துள்ளார். இத்திட்டமானது அவ்வளவு எளிதான ஒன்றல்ல என்பதனை இவருக்கும்
முன் உள்ள தலைவர்கள் முயற்சித்து தோல்வி கண்டதிலிருந்து அறிய முடிகின்றது. சிறந்த
ஒழுக்கத்திணை மாண்பாகக் கொண்ட ஒருவரால் மட்டுமே செய்யக் கூடிய காரியங்களுள் ஒன்று.
ஆகவே, இதமும் இனிமையும் சேர்நத
் வாறு கபிலரால் சொல்லப்பட்டிருக்கும் கருத்தினைச் செவ்வனே
உயிர்த்துணர்வது அவசியம்.

தொடர்ந்து, ஒவ்வொரு மனிதனின் சீரான சிந்தனையின் செறிவான வடிவமே நம்பிக்கை.


இதனை ‘ வண்டுபடத் தைந்த கொடிஇனர் இடைஇடு புச’ எனும் பாடல் தலைவி தலைவன் மீது
வைத்துள்ள நம்பிக்கையை முல்லை திணையில் நிகழ்ந்த காட்சியின் மூலம் ஓதலாந்தையார் ஒப்பிலாச்
சிந்தனைகளை விரித்து உணர்த்துகிறார். கார்காலம் தொடங்கியும் தலைவன் திரும்பாததை தோழி
தலைவியிடம் அவநம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கூறினாலும் தலைவி அதை ஏற்காதவலாய்,
தலைவன் சொன்ன சொல்லைப் பொய்யாக்கமாட்டார் என தோழியிடம் எதிர்க்கருத்து கூறுகிறாள்.
எனவே, தலைவன் தலையிடம் மட்டுமின்றி ஒவ்வொரு மாந்தரிடத்தினிடையே இருக்க வேண்டிய ஒன்று
நம்பிக்கை. அந்த நம்பிக்கையை நாம் ஜப்பான் நாட்டிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இயற்கை
சீற்றத்தை பெருமளவில் அனைத்துலக நாடுகளும் அனுபவப் பட்டிருப்பர். ஆனால், ஜப்பான் நாட்டு
மக்களுடன் இயற்கை சீற்றம் அவ்வப்போது உறவாடி சென்றது என்று சொன்னால் அதை மறுப்பார்
இங்கில்லை. 2011 – இல் நிலநடுக்கமும் சுனாமியும் அந்நாட்டின் தலையெழுத்தையே
மாற்றியமைத்துவிட்டது. அந்நாட்டு மக்களில் பலர் வீழ்ந்தது மட்டும்மல்லாமல் அந்நாட்டு பொருளாதாரமும்
சேர்ந்தே வீழந
் ்தது. இருந்தபோதிலும், ‘வீழ்நத
் ோம் என நினைத்தாயா ?’ என கூறி மீண்டும் எழுந்தது
ஜப்பான். ஜப்பான் நாட்டு மக்கள் மீண்டும் புத்துணர்ச்சிப்பெற்று எழுந்த காலத்தில் பல புதிய
திட்டங்களோடு எழுந்தனர். முடியாதது என்று இவ்வுலகத்தில் ஏதும் இல்லை, முயன்றால் கிடைக்காததும்
இல்லை எனும் வாழ்வியல் நெறியினைச் சிந்தையில் பதித்து அந்நாட்டின் பேரும் புகழும் கல்வெட்டுகளில்
பதிய நம்பிக்கையெனும் ஊண்றுகோளைக் கொண்டு எழுந்தனர். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு, மீண்டும்
புத்தாக்கம் பெறும் முயற்சியின் போது பொருத்தமான போக்குவரத்துக் கட்டண திட்டம்
அமல்படுத்தப்பட்டது. இது போல பல திட்டங்களை அறிமுகப்படுத்தி உயர்ந்து இன்று முன்னேற்றமடைந்த
நாடுகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது. ஆகவே, எத்தனை முறை வீழ்நத
் ோம் என்பதல்ல வாழ்க்கை,
எத்துணை முறை மீண்டும் எழுந்தோம் என்பதே இன்றைய வெற்றி; நாளைய சரித்திரம்.

காலச் சுழற்சியில் மண்டலங்கள் மாறிப் போனாலும், என்றும் மாறாதது நம் தமிழர்களின் வீரம்.
பகைவர் நாட்டிற்குப் போர் தொடுக்கப் போகும் முன் பகைவர் நாட்டு காவற் காட்டின் அருகே பாசறை
அமைத்து வென்றே நாடு திரும்ப வேண்டும் என்ற மரபு தமிழனுக்கே உரிய செருக்காகும். இதனை
தகையுறு தமிழ்வாணர்கள்ளாம் தரமுறத் தரப்பட்டிருக்கும் பத்துப்பாட்டின் தொகுப்பான முல்லைப்பாட்டின்
வழி எடுத்துரைக்கின்றனர். வீரம் என்பது பலத்தைச் சார்நத
் து மட்டுமல்ல. உடல் பலத்தோடு சேர்ந்த
புத்திக்கூர்மைக்கும் உரியது. எனவே, எத்திசையிலெல்லாம் வீர முழக்கம் கேட்கின்றதோ அங்கேல்லாம்
புத்திக்கூர்மையின் வெளிப்பாடு நிச்சயம் இருக்கும். எடுத்துகாட்டாக, கடந்த 2009 -ஆம் ஆண்டின்
நியுவ் டெல்லியில் ருக்‌ஷனா கெளசர் எனும் ஒரு பெண்மனியின் செயல் போற்றப்பட்டது. தன்
குடும்பத்தினருடன் வீட்டில் இருந்த போது தீவீரவாதிகள் வீட்டினுள் நுழைந்து அவர்களுக்கே உரிய
பானியில் அப்பெண்மணியின் தந்தையை மிரட்டி உண்ணுவதற்கு உணவும் ஒரு நாள் தங்குவதற்கு இடமும்
கேட்டனர். அதை மறுத்த அவளின் தந்தையைத் தாக்கிய போது ஒலிந்து கொண்டிருந்த அப்பெண்மணி
கோடாரியால் அந்த தீவிரவாதியைத் தாக்கிவிட்டு அதே தீவிரவாதியிடம் இருந்த துப்பாக்கியைப்

பிடுங்கி அதனாலேயே அவனைச் சுட்டுக் கொன்றாள். அவனைச் சுட்டதோடு மட்டுமல்லாமல் அவனுடன்


வந்திருந்த இன்னொருவனையும் சுட்டுக் காயப்படுத்தினால். இச்செயல் அப்பெண் எதற்கும் துணிந்த வீர
பெண்ணாக அவளைச் சித்தரிக்கின்றது. அதுமட்டுமின்றி ஒலிந்திருந்து செயல்பட்டதன் காரணமாக
அவள் புத்திக்கூரமையுடனும் செயல்பட்டிருக்கின்றாள் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது.
இவரின் இச்செயலுக்காக ஜனாதிபதியின் விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்டாள். ஆகவே, நமக்கு
தமிழறிஞர்கள் விட்டுச் சென்ற வீர மரபினை தேவையான இடங்களில் பயன்படுத்தி வீட்டிற்கும்
நாட்டிற்கும் நன்மை செய்தல் அவசியம். வீட்டிற்கு ஒரு கட்டபொம்மன் இல்லாவிடினும் ஊரிற்கு ஒரு
கட்டபொம்மன் இருப்பதை நம் நாட்டு முதுகெலும்பான நம் இளைஞர் படை உறுதி செய்ய வேண்டும் .
திக்திக்கும் தேன் தமிழில் என்றும் அழியா வாழ்வியல் நெறியைக் கற்று தந்த இலக்கிய பேராளர்
இப்பாடலில் கூறியிருப்பது போல வீரமும் உலகளாவிய சிந்னைக்கு வித்திடுகின்றது.

இப்பாடல் வீரத்தை உணர்த்துவதோடு சிறந்த தலைமைத்துவத்தைப் பற்றியும்


வலியுறுத்துகின்றது. தன் நாட்டிற்காகப் பகைவர் நாட்டின்கண் போர் தொடுக்க வந்த தனது சக படை

வீரர்களையும் சரியாக வழிநடத்தி பகை நாட்டை வெற்றி கொள்ள தலைவன் தவறவில்லை.


எடுத்துக்காட்டாக, மூவினம் வாழும் நம் மலேசிய திருநாட்டில் சில சலசலப்புகள் இருந்தாலும் அதை
அனைத்தையும் கிளையிலேயே கிள்ளிவிட்டு நம் நாட்டை அமைதியான சூழ்நிலையில் வழிநடத்தி வரும்
நம் நாட்டு பிரதமரும் சிறந்த தலைமைத்துவத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் . சிறந்த
தலைமைத்துவம் கொண்ட நாடு செழிப்பாக இருக்கும் என்பதற்கு நம் நாடே ஒரு சிறந்த
முன்னோடியாகும்.

படிக்கத் திகட்டாத பல்பொருள் திரவியமான காலத்தால் அழியாத இலக்கிய சிகரங்கள் நமக்கு


பல கருத்துகளை இலக்கிய நயத்தோடு வழங்குகின்றது. தமிழ்வளம் நிறைந்த இலக்கியங்கள்
எப்பொழுதுமே படிப்போரின் சிந்தையை மகிழ வைக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை. இலக்கிய சாரலில்
நனையும் ஒவ்வொரு தமிழ் தாகம் கொண்ட அறிவி சிற்பியும் மன மகிழ்வதோடு மட்டுமல்லாமல் அதனுள்
புதைந்து கிடக்கும் புதைபொருள்களை உயிர்தது
் ணர முடியும். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் 2020
நூற்றாண்டுகளில் நம் நாட்டையும் சேர்த்து பல நாடுகளில் நெறி தவறிய செயல்கள் ஆங்காங்கே நடந்து
கொண்டுதான் வருகின்றன. இதை அனைத்தையும் களைவதற்குப் பலவாறான கருத்தோவியங்களைத்
தன்னுள் அடக்கிய இலக்கிய அகபுற பாடல்கள் இன்றியமையாத ஒன்றாக அமைகின்றது. ஆகவே, அழகு
தமிழைக் கற்பதோடு சிந்தையில் சிதறி கிடக்கும் குப்பைகளையும் அகற்றி நல்வாழ்வு பெற இலக்கிய
மழையில் ஒன்றினைவோம்.

You might also like