You are on page 1of 5

படைப்பாளர் : கவிதா காஞ்சி

29 ஏப்ரல் 2020
புத்தகப் பகிர்வு
நூலின் பெயர் : வெற்றி நிச்சயம்
பகிர்பவர் : கவிதா காஞ்சி
வகை : தன்னம்பிக்கை - (சுயமுன்னேற்ற நூல்)
எழுத்தாளர் : சொல்வேந்தர் சுகி.சிவம்
பக்கங்கள் : 204
முதல் பதிப்பு : 2007
விலை : 50 ரூபாய் @ RM 15
வெளியீடு : கவிதா பப்ளிகேஷன்
கிடைக்கும் இடம் : ஜெயபக்தி

என் பார்வையில் :

வாடிக் கிடக்கும் செடிகளுக்கு நீர் போல்; வறண்டு கிடக்கும் பூமிக்கு மழை போல்; இருண்ட இடத்தில்
வெளிச்சம் போல்; என் வாழ்ககை ் யில் துவண்டு கிடந்த பல வேளைகளில் , இந்நூல் துணையாய்
நின்றுள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து வாழ்ககை ் யை வாழ்வதற்கு
உந்துதல் தேவைப்படுகின்றது. அந்தவகையில் துவண்ட பல மனிதர்களின் வாழ்ககை ் யில்
வெளிச்சத்தைக் காட்டியுள்ள நூல்தான் “வெற்றி நிச்சயம்”. இந்நூலிலுள்ள ஒவ்வொரு பக்கங்களையும்
புரட்டும் பொழுது மாறியது பக்கங்கள் மட்டுமல்ல; என் மனமும்தான்.
51 கட்டுரைகள் கொண்ட இந்நூலின் வழி பல முன்னேற்ற மனிதர்களின் வாழ்ககை ் வரலாற்றை
நம்மோடு பகிர்ந்துள்ளார் நூலாசிரியர் திரு.சுகி.சிவம். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சிற்பிக்குள் முத்து.
ஆசிரியர் என்பவர் தேங்கிக் கிடக்கும் குட்டைகளாக இல்லாமல், தெறித்தோடும் நீரோடைகளாக
இருப்பதற்கு “ வெற்றி நிச்சயம்” எனும் இந்நூல் ஓர் வாய்ப்பாக அமையும் என்பது வெள்ளிடைமலை.
ஆசிரியர்களும் தங்கள் வாழ்வில் எப்படியெல்லாம் வெற்றி பெறலாம், தன்முனைப்போடு இருக்கலாம்,
அதே சமயம், மாணவர்களுக்கு எப்படி சிறந்த எடித்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்நூல்
வழிக்காட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனத்தில் நிலைத்து நின்றவர் ஒரு சிலரே.
அதேபோல் வாழ்ந்து பல சாதனைகளைப் புரிந்தவர்கள் பற்றிய கதைகள் இந்நூலில் அதிகம் இருப்பதால்,
ஆசிரியர்கள் இந்தப் புத்தகத்தை வெறும் கதையாகப் படிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் பற்றிய எண்ண
ஓட்டங்களை மாணவர்களின் மனதில் விதைப்பதால், நாளை நம் பள்ளியிலும் நிச்சயம் ஒரு அப்துல்
கலாமோ அல்லது அப்ரஹம் லிங்கனோ தோன்றுவார்கள் என்பது என் அவா.
அன்புக்கினிய ஆசிரியர்களே, இந்த நூலை வாங்குவது செலவல்ல.சிறந்த மூலதனம்.
தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் விடா முயற்சியும் உங்கள் வாழ்ககை
் யில் வெற்றி வழங்க வாழ்தது் கள்.
வெற்றி நிச்சயம்!

உற்சாகத்துடன்,
கவிதா காஞ்சி
நூலாசியரைப் பற்றி :

சொல்வேந்தர் சுகி.சிவம்

சொல்வேந்தர், சொல்லின் செல்வர், செந்தமிழ் தென்றல், முத்தமிழ் பேரறிஞர், கலைமாமணி


என்ற திரு.சுகி சிவம் என்னும் சுப்பிரமணியம் சதாசிவம் திருச்சியைச் சேர்ந்த இந்து சமயச்
சொற்பொழிவாளர், பட்டி மன்ற பேச்சாளர், எழுத்தாளர், பொருளாதாரமும் சட்டமும் படித்தவர்,
அறகட்டளையின் நிறுவனர் ஆவார்.
பிரபல எழுத்தாளராளாக அறியப்படும் இவர் தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியில்
சொற்பொழிவுத் தொடரை நிகழ்த்தி வருகிறார். இன்றைய தமிழ்ப் பேச்சாளர்களில் புதிய
சிந்தனையைப் புகுத்தி மனதில் பட்டதை அஞ்சாமல் வெளியிடும் சிறந்த பேச்சாளர் திரு
சுகி.சிவம் என்றால் மிகையாகாது. சிங்கப்பூரில் நடந்த “சவாலை சமாளி” என்ற நிகழ்ச்சியின்
மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் 30 க்கும் மேற்பட்ட நூல்களையும் 31 க்கும்
மேற்பட்ட காணொளிகளையும் வெளியிட்டுள்ளார்.
ஒரே பொருள் கொடுத்து காலையில் 16 வயதினருக்கும், மாலையில் 61
வயதினருக்கும் பேசச் சொல்லுங்கள். இரு பிரிவினரையும் கட்டிப் போட்டு உட்கார வைக்கும்
சொல்லாற்றலும் இருக்கும். பொருளழகும் இருக்கும். இவரின் “வெற்றி நிச்சயம்” என்ற
இந்நூல் ஒரு புத்தகமல்ல; வெற்றியாளர்களின் வேதம்.

என்னைக் கவர்ந்த பக்கங்கள் :

பக்கம் 17 :
இராமேஸ்வரத்தில் வீடு வீடாகப் பேப்பர் போட்டுக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன் . பிறகு பேப்பர்
பேப்பராக அவன் படத்தைப் போட்டுப் பெருமைப்படுத்தியது. அந்த உலகப் புகழ் பெற்ற சிறுவன்
யார் தெரியுமா ? பாரத நாட்டின் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம்.

பக்கம் 18 :

வறுமை குறித்து எப்போதும் வெட்கப்படாதீர்கள். ஆபிரஹம் லிங்கனின் தந்தை ஒரு செருப்புத்


தைக்கும் தொழிலாளி. ஆனால் தமது உழைப்பாலும் முயற்சியாலும் அமெரிக்க
ஜனாதிபதியானார் லிங்கன்.

பக்கம் 55 :

இந்தியர்களின் கறுப்பு நிறத்தைக் கேலி செய்து ஒரு வெள்ளைக்காரர் பேசியபோது டாக்டர்


ராதாகிருஷ்ணன் சொன்ன பதில் என்ன தெரியுமா? “கடவுள் கேக் செய்தார். அவசர
அவசரமாக வெந்து விட்டதா, வெந்துவிட்டதா என்று திறந்து திறந்து எடுத்த கேக்குகள்
வெள்ளை வெள்ளையாக வந்தன. ஆனால் அவை அரைவேக்காடுகள். கொஞ்சம் முறுகிய
பிறகு எடுத்த கேக்குகள் கொஞ்சம் கறுப்பாக இருந்தன. நாங்கள் கடவுள் படைப்பில் கறுப்புக்
கேக்குகள். ஆனால் பக்குவமாக இருக்கிறோம். வெள்ளைக் கேக்குகள்தான்
அரைவேக்காடுகள்” என்றார். தாழ்வு மனப்பான்மையைத் தள்ளி வைத்துவிட்டால் வெற்றி
நிச்சயம்.

பக்கம் 63 :

நோபல் பரிசு பெற்ற உலகப் புகழ் பெற்ற வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூர் ஐம்பது முதல் அறுபது
பேர் கொண்ட பெரும் கூட்டுக் குடும்பத்தில் பிறந்தவர். அவர்கள் பிறந்தநாளைக்
கொண்டாடுகிற முறையே புதுமையானது. ஒவ்வொரு பிள்ளை பெயரிலும் ஒரு நோட்டுப்
புத்தகம் இருக்கும். அதில் அந்தக் குடும்பத்துப் பெரியவர்கள் பிள்ளைகளைப் பற்றித் தங்கள்
பாராட்டை, கருத்தை எழுதுவது வழக்கம். ரவீந்திரநாத் பிறந்தநாள் அன்று அவன் பாட்டி
எழுதிய வரிகள் என்ன தெரியுமா? “ரவியைப் பற்றி சொல்ல உருப்படியாக எதுவும் இல்லை.
அவன் எதிர்காலத்தை நினைத்தால் கவலையாக இருக்கிறது. பெரிய ஆளாக அவன் வருவான்
என்று தோன்றவில்லை. மற்ற பிள்ளைகள் மாதிரி அவன் புத்திசாலியாக இல்லையே என்று
வருத்தமாக இருக்கிறது” என்று எழுதியிருந்தார். மற்ற பிள்ளைகள் என்ன ஆனார்கள் என்பதே
இன்று தெரியவில்லை. உருப்பட மாட்டான் என்று பாட்டி பதிவு செய்தவர்தான் உலகின் புகழ்பெற்ற
உருப்படியானார். இரண்டு நாடுகளுக்குத் தேசிய கீதம் தந்த ஒரே கவிஞர் என்ற தனிப்புகழ்
அவருக்கு மட்டுமே உண்டு.

பக்கம் 140 :

“லேடிஸ் அண்ட் ஜென்டில்மென்” என்று அமெரிக்காவில் அத்தனை பேரும் அரைத்தமாவையே


அரைத்தபோது “ பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ”் என்று வித்தியாசமாக விளித்ததால்தான்
விவேகானந்தர் கவனிக்கப்பட்டார். மதிக்கப்பட்டார். எங்கும் எப்போதும் தனித் தன்மையுடன்
வித்தியாசமாக இருங்கள். நீங்கள் கவனிக்கப்படுவீர்கள்.

பக்கம் 165 :

ஹெலன் கெல்லர் என்ற பெண்மணி கண்ணில்லாதவர்.கண்ணில்லாத போதும் கல்வி கற்பது


எப்படி என்று அவர் ஆசிரியர் ஆனி சல்லிவன் கற்றுக் கொடுத்தார். ஆனால் ஆசிரியர் கற்றுக்
கொடுக்காத ஆற்றலை ஹெலன் சுயமாகப் பெற்றார். அதுதான் அவரை உலகின் ஆச்சரியப்
பொருளாக்கியது.

You might also like