You are on page 1of 2

தமிழா!

உன் பெருமையை மீட்டெடு

அமுதான தமிழே நீ வாழி ! என் ஆவியிலே கலந்து நாவினிலே தவழும் அமுதான தமிழே நீ

வாழி! அவையினருக்கு வணக்கம். இன்று எனக்கு கிடைத்தத் தலைப்பானது “தமிழா உன்

பெருமையை மீட்டெடு” என்பதாகும். தமிழர் இனம் என்பது தமிழ் மொழியைப் போன்றே

தொன்மையையும் மேன்மையையும் தாங்கியது ஆகும்.

புனல்சூழ்ந்து வடிந்து போன


நிலத்திலே புதிய நாளை
மனிதப் பைங்கூழ் முளைத்தே
வகுத்தது மனித வாழ்வை
இனிய நற்றமிழே நீதான் எழுப்பினை

எனும் பாடல் வரியில் நில உலகு தோன்றிய காலத்திலேயே தமிழ் இனம்

தோன்றிவிட்டதையும் மனித வாழ்வை உருவாக்கியதே தமிழ்மொழி என்றும் தமிழினத்

தொன்மைச் சிறப்பு வெளிப்படுத்துகிறது. அத்தகைய மரபினைத் தாங்கி வளர்ந்த நம்

தமிழர்கள் பெருமை சொல்லி மாளாது அல்லவா? நம் தமிழர்கள் கால்பதிக்காத உயரம்

உண்டா? இந்து நாகரீகம் தொடங்கி இமயம் வரை நம் தமிழர் புகழ் பரவாத இடம் இல்லை.

உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள்

முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும்

காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில்

நுட்பத்தை வியந்து பார்க்கையில் நம் மரபணு சாதிக்கப் பிறந்தவரின் வம்சாவழி என்பதை

மார்தட்டிச் சொல்லத் தோன்றுகிறது. அந்தப் பெருமையை மீட்டெடுக்க இத் தலைமுறையினர்


அரும்பாடுபட வேண்டியுள்ளது.

இன்றைய காலச் சூழலோடு இயைந்து பார்க்கையில் நம் தமிழரின் சாதனைகள்

பெருமைப்படும் அளவுக்குக் கல்வி, தொழில், விளையாட்டு, அறிவியல், அரசியல், கலை,

தலைமைத்துவம் என்று பரந்து விரிந்த நிலையில் உள்ளது. உதாரணமாக, மலேசியாவின்

தலை சிறந்த பூப்பந்து வீராங்கனை கிஷோனா செல்வதுரை இன்று ஸ்பெயின் அனைத்துலக

சாம்பியன்ஷிப் பூப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார்.


மேலும், அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்

என்கிற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பியானோ திறனை வெளிக்காட்டிய லிடியன்

நாதஸ்வரம் எனும் இளைஞன் மின்னல் விரலுக்குச் சொந்தக்காரன் எனும் புகழை தாங்கி

அந்த நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றில் வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார்.

தொடர்ந்து, டத்தோ மகேந்திரன் மற்றும் மோகனதாஸ் அவர்கள் எவரஸ்ட் மலை உச்சியை

அடைந்த முதல் தமிழர்களாகவும் இன்றளவும் வரலாற்றுப் பக்கங்களில் இடம்

பிடித்துள்ளனர். தமிழர்களின் சாதனையை வரையறுக்க வயது என்பது ஒரு தடையல்ல

என்பதற்கொப்ப நம் நாட்டின் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் உயரிய சாதனைகளும் தமிழ்

இனத்தின் மணிமகுடமாக அமைகிறது. அனைத்துலக அரங்கில் நடைபெற்றுவரும் புத்தாக்கப்

போட்டிகளில் நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்குபெற்று உலக மேடையில் பல

பதக்கங்களை வாங்கிக் குவித்தனர். இன்னும் எத்தனையோ தமிழர்களின் சாதனைகள்

பட்டியலில் உண்டு. அத்தனையும் சொல்ல அவை செவி கொடுத்தாலும் நேரத் துளிகள்

இடம்கொடுக்க மறுக்கிறது. ஆக, தமிழர்களின் பெருமையை மீட்டெடுக்க நான் அரும்பாடு

படுவோம் எனும் முழக்கத்தோடு எனது பேச்சினை நான் நிறைவு செய்கின்றேன், நன்றி.

You might also like