You are on page 1of 2

இயற்கை பாதுகாப்பு கட்டுரை தமிழ்

குறிப்பு சட்டகம்

1. முன்னுரை

2. இயற்கைச் சூழல்

3. இயற்கையின் சிறப்பு

4. இயற்கை மாசடைதல்

5. முடிவுரை

முன்னுரை

இயற்கை என்பது இறைவனால் அளிக்கப்பட்ட அற்புதமான படைப்பாகும்.


இயற்கை மனிதனுக்கு எண்ணிப்பார்க்க முடியாத அளவு பயன்களை
தருகின்றது.

இதனை ரையில் காண்போம்.

இயற்கைச் சூழல்

இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களுமே இயற்கையைச் சார்ந்தே


வாழ்கின்றன. எனவே இயற்கையைக் காப்பது மிக அவசியமாகும்.

வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இயற்கையைப் பேண வேண்டும்.


இயற்கை மருத்துவம், இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு என
இயற்கையோடு வாழும் வாழ்க்கை ஆரோக்கியமானதாக இருக்கும்.

இயற்கையின் சிறப்பு

பூமியானது பரந்து விரிந்த நிலப் பரப்புடன் அதனைச்சூழ


சமுத்திரங்களையும் பச்சைப்பசேலென நீண்டு வளர்ந்த மரங்கள், அடர்ந்த
காடுகளையும் உயர்ந்து வளர்ந்த மலைகளையும், சலசலவென ஓடும்
நதிகளையும், அழகிய நீல வானையும் கொண்டது.

இயற்கை மாசடைதல்

இன்றைய நவீன உலகில் மனித வாழ்க்கை முறைகளால் இயற்கை


வளம் பெரிதும் மாசுபடுகிறது. தேவைகளுக்காகக் காடுகள் அழிக்கப்பட்டு
வருகின்றன. காடுகள் அழிக்கப்பட்டு குடியிருப்புக்கள்
அமைக்கப்படுகின்றன.

முடிவுரை

எனவே இறைவனின் உன்னத படைப்பான இயற்கையைப் பாதுகாத்து


எதிர்கால சந்ததியினரும் பயன் பெறும் வகையில் இயற்கையை
உயிர்ப்போடு வைத்திருப்பது எமது கடமையாகும்.

இதுவே காலத்தின் தேவைபாடுமாகும். அனைவரும் ஒன்றிணைந்து


இயற்கையைப் பாதுகாத்து வளம் பெறுவோமாக

You might also like