You are on page 1of 7

மரத்தின் பயன்கள்

 தொழில் வளர்ச்சியின் காரணமாக அதிகரித்த தொழிற்சாலைகளின்

பயன்பாட்டினாலும் மனித தேவையின் பொருட்டு அதிகரித்த மோட்டார்

வாகன பயன்பாட்டினாலும் மாசாக்கப்படும் இந்த சுற்றுச்சூழலை சுத்தம்

செய்பவை இந்த மரங்களே ஆகும்.

 இதற்காக ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக மரங்களே

தொழிற்படுகின்றன. மரங்களால் உருவாக்கப்படுகின்ற இந்த ஆக்சிஜன் தான்

மனிதனுடைய பிராண வாயு என்பது அனைவரும் அறிந்த விடயமே.

 மரங்கள் காற்றை தூய்மை செய்கின்றன. மிருகங்கள் பறவைகள் என

அனைத்து உயிர்களையும் வெயிலில் இருந்து காக்க நிழலையும் தருகின்றன.

 இதை உணர்த்துவதற்காகவே “நிழலின் அருமை வெயிலில் தெரியும்” என

எமது முன்னோர்கள் பொன்மொழி மூலம் அறிய தந்துள்ளனர்.

 தற்காலத்தில் நாம் உணர்கின்ற அதிகப்படியான வெப்பத்திற்கு காரணம் நாம்

மரங்களை அழித்தமையால் ஏற்பட்ட நிழலின்மையே ஆகும்.

 மரங்கள் பறவைகள், விலங்குகள் போன்றவற்றிற்கு புகலிடமாக

விளங்குகின்றன. மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. நிலத்தடி நீர்மட்டம்

குறையாமல் தடுக்கின்றன.

 இவை அனைத்திற்கும் மேலாக நீரானது ஆவியாகி மேகமாகி மழையாகப்

பெய்ய பெரிதும் துணை புரிகின்றன. பூ, காய், கனி, கீரை போன்ற உணவு

வகைகளை தருகின்றன. சிறந்த மருந்துகளை உருவாக்க மூலிகை

பொக்கிஷங்களாகவும் காணப்படுகின்றன.

 மேலும் கப்பல் கட்டுவதற்கும் மரவேலைப்பாடு நிறைந்த பெரிய பொருட்கள்

முதல் தீப்பெட்டி போன்ற சிறிய பொருட்கள் வரை பல வகையானவற்றை

தயாரிக்கவும் உதவுகின்றன
001. இயற்கையை பாதுகாப்போம்

கடவுள் மனிதனை ஒரு மகத்தான

இயற்கை நிறைந்த பூமியில் படைத்தான்...

செயற்கையை விரும்பி இயற்கையை அளிக்கிறோம்

அழிவது இயற்கை மட்டுமல்ல

நம் வாழ்க்கையும் தான்...

நெகிழியை புதைத்து மண்ணின் வளமையை குறைத்தோம்..

மரத்தை வெட்டி காற்றை கரைத்தோம்

காற்றை கூட காசுக்கு வாங்குவோம்...

நீர் இன்றி அமையாது உலகு ஆனால்

நீர் வீழ்ச்சிகளில் குப்பையை கொட்டி குட்டிசுவராக்கினோம்..

நிலத்தை அளித்தோம்!

நீரை குறைத்தோம்!

காற்றை அடைத்து

கண்ணீர் விடுகின்றோம்!

போதுமே இந்த போராட்டம்

இயற்கையை காத்து இண்பமாய் வாழ்வோம்!!

வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்போம்

நம் வாழ்வின் அழகிய இயற்கை செல்வங்களை

You might also like