You are on page 1of 1

ஆறுகளை நேசிப்போம்

ஆறு இறைவனால் வழங்கப்பட்ட பெரிய செல்வமாகும். விவசாயம்


மற்றும் தொழிற்சாலைகளும் நீரைப் பயன்படுத்தும் நிலையில் உள்ளன.
மனிதனின் முக்கிய உணவான மீ ன் மற்றும் இறால் போன்றவை
ஆறுகளிலிருந்து கிடைக்கின்றன. ஆனால், மனிதனின், தவறான
நடவடிக்கைகளினால் ஆறுகள் தூய்மைக் கேட்டை அடைந்துள்ளன. இது
நமக்கு பெரிய நஷ்டம் அல்லவா !

மனிதர்களின் பொறுப்பற்ற செயல்கள் நிறைய உள்ளன. குப்பைகளை


ஆறுகளில் கொட்டுகிறார்கள். இறந்த மிருகங்களைக் கூட ஆறுகளில்
வசுகிறார்கள்.
ீ இவை அனைத்தும் நதியின் தூய்மையைப் பாதிக்கின்றன. ரப்பர்
மற்றும் செம்பனைத் தொழிற்சாலைகளின் கழிவு நீரை ஆற்றில் கலந்து
விடுகிறார்கள். இது மிகவும் மோசமான மற்றும் பொறுப்பற்ற செயலாகும்.

காடுகளைப் பெரிய அளவில் அழிப்பதும் பெரிய தவறாகும். இதன்


விளைவாக மண் அரிப்பு மற்றும் மண் சரிவு ஏற்படுகின்றன. ஆற்றில்
வசிக்கும் மீ ன், இறால் மற்றும் ஆமை போன்ற உயிரினங்கள் இறந்து
விடுகின்றன.

அசுத்தமான நீர் மனிதன் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. மேலும், இந்த


அசுத்த நீர் விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாமல் போகிறது.

ஆகவே, ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.


குப்பைக்களை மறு பதன ீடு அல்லது புதைத்து விட வேண்டும். ஆறுகள்
குப்பைத் தொட்டிகள் அல்ல என்பதை உணர வேண்டும்.

ரப்பர் மற்றும் செம்பனைத் தொழிற்சாலைகள் கழிவு நீரை சுத்திகரித்தப்


பின்னரே நீரை ஆற்றில் கலக்க வேண்டும். இவை யாவும் அரசாங்கத்தின்
கடுமையான நடவடிக்கைகளால் மட்டுமே தீர்க்க முடியும் என்பது உறுதி.

You might also like