You are on page 1of 6

மாசுபாடுகள்:-

மாசு என்பது சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை சுற்றுப்புறத்தில்


வெளியிடுவதாகும். பொதுவாக மனிதனின் செயல்பாடுகளால் சுற்றுப்புறத்திற்கு கேடு
விளைவிக்கப்படும் பொருட்களை வெளியிடுவதே மாசுபடுதல் என்கிறோம். மனிதனின்
நடவடிக்கைகளால் சுற்றுப்புறத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களை
வெளியிடுவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளையே மாசுபடுதல் என்று
அறியப்படுகிறது.

 இராசயன தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், அணுக்கரு உலைக்

கழிவுகள், கழிவுகள் குவிக்கப்படுதல், எரிப்பான்கள், பிவிசி தொழிற்சாலைகள், கார்

உற்பத்தித் தொழிற்சாலைகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், பெரிய வணிகரீதியாக


செயல்படும் கால்நடை பண்ணைகளிலிலிருந்து உருவாகும் கால்நடை கழிவுகள்.

 விபத்துகள் ஏற்படும் போது அணுக்கரு உலைகளும், எண்ணெய் கொப்பரைகளும் அதிக

அளவிலான மாசினை ஏற்படுத்துகின்றன.

 முக்கிய மாசுப் பொருட்களாவன, குளோரினேட்டட் ஹைட்ரோகார்பன்கள்,

உலோகங்களான லெட் (பெயிண்ட் –ல் காணப்படும் பொருள்), காட்மியம்

(பேட்டரிகளிலுள்ள காட்மியம்), குரோமியம், துத்தநாகம், ஆர்சனிக் மற்றும் பென்சீன்.

 இயற்கை பேரிடர்களின் போது மாசுபடுதல் அதிக அளவிலான பின்விளைவுகளை

ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக ஹரிக்கேன் எனப்படும் புயல் வெள்ளத்தின் போது

சாக்கடை கழிவு நீர் கலந்து தண்ணர்ீ மாசுபாடு, மூழ்கிய படகுகளில் இருந்து வெளியேறும்

பெட்ரோலியப் பொருட்கள், ஆட்டோக்கள் போன்ற வாகனங்களிலிருந்து வெளியேறும்

பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் கடற்கரையோரம் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு

நிலையங்களிலில் இருந்து வெளியேற்றப்படும் பெட்ரோலியம் சார்ந்த கழிவுப்பொருட்கள்

போன்றவைகளால் மாசுபாடு பெரும்பாலும் ஏற்படுகிறது.

மாசுபாடுகளின் வகைகள்:-

காற்று, தண்ண ீர் மாசுபாடு போன்ற மாசுபாடுகள் மற்றும் கதிரியக்கத்திறன் வாய்ந்த


பொருட்களால் ஏற்படும் மாசுபாடுகள், ஒளி மாசுபாடு, ஒலி மாசுபாடு போன்றவை
மாசுபாடுகளின் வகைகளாகும்.
ஒலி மாசுபாடு:-

சத்தம் என்பது ஒரு விரும்பத்தகாத ஒலியாகும். சத்தத்தினால் உண்டாகும் மாசுபாடு


காற்று மாசுபாட்டின் ஒரு முக்கிய அங்கமாகக் தற்பொழுது அறியப்பட்டு வருகிறது.

ஒலி எனப்படும் சத்தமானது காற்றின் மூலமாக பரவுவதால் அதன் அளவினை காற்றின்


தர அளவடுகளால்
ீ அளக்கமுடியும். சத்தத்தின் அளவுகோல் டெசிபல்களாகும். 90
டெசிபல்களுக்கும் அதிகமான ஒலி தொடர்ந்து மனிதர்கள் கேட்கும்பொழுது அது
கேட்கும் திறனை பாதிப்பதுடன், நரம்பு மண்டலத்தில் நிரந்தர பாதிப்பையும்
ஏற்படுத்தும். நகரங்களில் அதிகபட்ச ஒலி அளவு 45 டெசிபல்கள் – க்குள் இருத்தல்
வேண்டும் என உலக சுகாதார அமைப்பு நிர்ணயத்துள்ளது. இந்தியாவிலுள்ள
பெருநகரங்களில் சராசரியாக கேட்கப்படும் ஒலியின் அளவு 90 டெசிபல்களுக்கு மேல்
பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே சத்தம் அதிகமான நகரங்களில் மும்பை
மூன்றாம் இடத்திலுள்ளது. புது தில்லியும் இதற்கு பின் பட்டியலிடப்பட்டுள்ளது.

அதிகப்படியான சத்தம் மனிதர்கள் எரிச்சலடையச் செய்வது மட்டுமல்லாமல்,


இரத்தத்தமனிகளை சுருங்கச்செய்வதால், அதிகப்படியான அட்ரீனலின் ஹார்மோன்
சுரக்க தூண்டுகிறது. இதனால் இதயம் அதிக அளவு வேலை செய்யத் தூண்டப்படுகிறது.
தொடர்ந்து அதிக சத்தத்தினை கேட்டுக்கொண்டிருந்தால் இரத்தத்தில்
கொலஸ்ட்டிராலின் அளவு அதிகரித்து அதனால் நிரந்தரமாக இரத்தக்குழாய்கள் சுருங்கி,
மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது.
தண்ண ீர் மாசுபாடு:-

நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் ஏரிகள், குளங்கள், ஆறுகள், கடல்கள் போன்ற


நீர்நிலைகளில் கலக்கும் போது, அவை கரைந்துவிடும் அல்லது தண்ண ீரில் மிதக்கும்
அல்லது அடியில் தேங்கிவிடும். இதனால் தண்ண ீரின் தரம் பாதிக்கப்படுவதோடு, நீர்
நிலைகளிலுள்ள சூழலையும் பாதிக்கின்றன. இது மட்டுமன்றி மாசினை ஏற்படுத்தும்
பொருட்கள் நிலத்தினால் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீரினையும் பாதிக்கின்றன.

நீர் மாசுபாட்டினால் மனிதர்கள் பாதிக்கப்படுவதுடன், விலங்குகள் மற்றும் மீ ன்கள்,


பறவைகளும் பாதிக்கப்படுகின்றன. மாசுபாடடைந்த தண்ண ீர் குடிப்பதற்கும்,
விளையாடுவதற்கும், விவசாயத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும் பயன்படாமல்
போகிறது. மேலும் ஆறுகள் மற்றும் ஏரிகளின் அழகையும் இது பாதிக்கிறது.

காற்று மாசுபாடு:-

தீங்கு விளைவிக்கும் பொருட்கள் காற்றில் கலப்பதால் ஏற்ப்படும் மாசுபாட்டினை காற்று


மாசுபாடு என்கிறோம். காற்று மாசுபாட்டினால் மனிதர்களுக்கு உடல் நலக்
குறைபாடுகள் ஏற்படுவது மட்டுமல்லாமல், சுற்றுப்புறத்திற்கும் உடைமகளுக்கும் கேடு
ஏற்படுகிறது. இது மட்டுமன்றி காற்று மாசுபாட்டினால் பூமிக்கு நன்மை செய்யும்
ஓசோன் படலம் சேதப்படுத்தப்பட்டு காலநிலை மாறுபாடுகளையும் ஏற்படுத்துகிறது.
தொழிற்சாலைகள், வாகனங்கள், அதிகரிக்கும் மக்கள் தொகை, நகரமயமாக்கம்
போன்றவை காற்று மாசுபடுதலை ஏற்படுத்தும் முக்கியமான காரணங்களாகும். காற்று
மாசுபாடு பல்வேறு விதமான காரணிகளால் ஏற்படுகிறது. இவற்றுள் எல்லா
காரணிகளும் மனிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. பாலைவனங்களில் ஏற்படும் தூசு
நிறைந்த புயல் காற்றுகள், காட்டுத்தீயினால் ஏற்படும் புகை, புற்கள் எரிவதால் ஏற்படும்
புகை போன்றவை காற்றில் ரசாயனங்கள் மற்றும் தூசுக்கள் கலந்து காற்று மாசுபாடு
ஏற்படக் காரணமாக அமைகிறது.

இரசாயன மாசுபாடுகள்:-

இரசாயன மாசுபாடுகள் கீ ழ்க்கண்ட காரணிகளால் ஏற்படுகிறது

 மனித செயல்பாடுளால் வெளியிடப்படும் கழிவுகள்

 தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள்

 கழிவுகள் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் இருந்து ஏற்படும் கசிவுகள்

 மனித செயல்பாடுகளால் வெளியேற்றப்படும் கழிவு நீர்

 விபத்துகள், விபத்துக்களால் கடலில் கலக்கும் பொருட்கள்

 எண்ணெய் கிடங்குகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள்

 சுரங்கங்களிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணர்ீ

 விவசாயக்கழிவு நீர்

எல்லோரும் கவனத்தில் கொண்டுள்ள இரசாயன மாசுகள், நிரந்தரமாக இருக்கும்


மாசுக்களாகும். இப்பொருட்கள் கடலின் உணவுச்சங்கிலியினை ஊடுருவி,
உணவுச்சங்கிலியின் மேல் அடுக்கான கடல்வாழ் உயிரினங்களில் அதிகமாக
தேங்குகின்றன. நிரந்தரமான மாசுக்கள் – பூச்சிக்கொல்லிகள் – டிடிடி, தொழிற்சாலை
இரசாயனங்கள்- பிசிபி போன்றவை.

You might also like