You are on page 1of 3

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு”

என் பெயர் ________. நான் தேசிய வகை புக்கிட் செரம்பாங் தமிழ்ப்பள்ளியில்

பயில்கிறேன். இன்று நான் உங்கள் முன் பேச எடுத்துக் கொண்ட தலைப்பு“ 21-ஆம்

நூற்றாண்டுக் கல்வி” ஆகும்.

பாடல்

21 ஆம் நூற்றாண்டு கல்வி என்பது வகுப்பறையைத் தாண்டிய கல்வியாகும்.

கரும்பலகையையும் வெண்கட்டியையுமே ஆயுதமாகக் கொண்ட ஆசிரியர்களுக்கும்,

ஆசானின் தாலாட்டை கேட்கும் மாணவர்களுக்கும் இப்போதைய 21-ஆம் நூற்றாண்டுக்

கல்வி “குன்றின் மேலிட்ட விளக்கு போல” பிரகாசிக்க தொடங்கிவிட்டது.

இக்காலக்கட்டத்தில் இவ்வகையான 21-ஆம் நூற்றாண்டு கல்விக்கே அனைத்து நாடுகளும்

முன்னுரிமை வழங்குகின்றன என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

என் அருமை அவையினரே!

‘கைப்பேசியைப் பள்ளிக்குக் கொண்டு வரதே’!! என்ற காலம் போய் இன்று

பள்ளியே கைப்பேசியில் அடங்கிவிட்டது. 21-ஆம் நூற்றாண்டைப் பற்றி

கருத்துரைக்கையில் தொழில்நுட்பம், இணையம், விஞ்ஞான பகுத்திறிவு, சமூக அறிவுடன்

யதார்த்தம் போன்ற கருத்துக்கள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. அறிவு உலகை

மாற்றுகிறது. புதிய அறிவின் தாக்கத்தால் நம் உலகமும் மாறுகிறது.

தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியில் கற்றல் சூழலிலும் மாணவர்கள் ஏதேனும்

கருவிகளின் பயன்பாட்டை எதிர்பார்க்கத்தான் செய்கின்றனர். மாணவர்களின் அன்றாட

வாழ்வும் பள்ளியில் கற்றல் சூழலும் தொடர்பற்று வெவ்வேறு உலகங்களாய்க் காட்சி

தருகிறது. இந்த வெவ்வேறு உலகத்து நிதர்சனம் மாணவர்களை வெகுவாகப்

பாதிப்புக்குள்ளாக்குகிறது. இன்றைய கல்வி அமைப்பின் தலையாயப் பிரச்சனை

இலத்திரனியல் கற்றல் கருவிகள் இனி நாம் புலங்கும் சூழல் வந்து விட்டது. 21- ஆம்
நூற்றாண்டு என்று வலிந்து சொல்வது கூட அவசியமற்றது, இந்த மாற்றத்திற்கு

ஆசிரியர்களும் மாணவர்களும் பக்குவப்படதான் வேண்டும்.

அதன் அடிப்படையில் 21-ஆம் நூற்றாண்டின் செல்நெறிகளுக்குப் பயந்தரும்

நான்கு பிரிவுகளான, அதாவது சிந்தனை முறைகள்( புத்தாக்க சிந்தனை, விமர்சனச்

சிந்தனை, சிக்கல் கலையும் சிந்தனை),பயன்பாட்டுக் கருவிகள் (தகவல் தொடர்பு

தொழில்நுட்பம், கையடக்கக் கருவிகள்), செயல் முறைகள் (பேசும்கலை, ஒத்துழைப்பு)

மற்றும் வாழ்வியல் திறன்கள் (குடியுரிமை, வாழ்க்கை& தொழில், சமூகப் பொறுப்பு) எனவும்

எடுத்துரைக்கப்படுகிறது.

மேலும் இந்த 21-ஆம் நூற்றாண்டு கல்வியானது வாழ்நாள் கற்றல் திறன்கள் குறித்த

இத்திட்டம் மாணவர்களை உயர் சிந்தனைக்கு இட்டுச்செல்லும் என கருத்துரைக்கப்

படுகிறது. வகுப்பறைக்கு அப்பால் வெளியேயும் இத்தகைய கல்வி மாணவர்களுக்கு

பெரிதும் துணைப் புரிகிறது. 21-ஆம் நூற்றாண்டு கல்வி திட்டம் ஆசிரியர்களுக்கும்

மாணவர்களுக்கும் எளிய புரிதலையும் புதுப்பித்துள்ளது.

அதுமட்டுமன்றி புதுப்புது செயலிகளின் பதிவிறக்கத்தினாலும் இந்த 21-ஆம்

நூற்றாண்டு கல்வியானது மேலும் இலகுவாகிறது. அண்மைய ஆராச்சியில் அறியப்படுவது

யாதெனில் 46% ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் வேலைகளை தகவல்தொழில்

நுட்பத்தினைக் கொண்டு கையாளுவதாகவும் 96% மாணவர்களோ பள்ளிப்பாடங்களை

இமைப்பொழுதில் முடித்துவிடுகின்றனர் எனவும் அறியப்படுகிறது.

சபையோர்களே,

21-ஆம் நூற்றாண்டு கல்வி சமசீர் கொண்ட மாணவர்களை உருவாக்குவதால்,

மாணவர்களின் சிந்தனைத் திறனைத் தூண்டும் கற்றல் கற்பித்தலின் வழி அவர்களின்

உடல், உள்ளம், அறிவாற்றல் மற்றும் ஆன்மீகம் ஆகிய கூறுகளை அனைவரும்


செம்மைப்படுத்து சிறப்பாகும். விரைவான தொழில்நுட்ப மாற்றங்களைக் கண்டு வரும்

இவ்வுலகில், எதனையும் உயர்ந்தச் சிந்தனைப் படிநிலையில் சிந்திக்கும் ஆற்றல்மிக்க

ஒருவனே சாதிக்கின்றான்.

இறுதியாக, 21 ஆம் நூற்றாண்டு கல்வியின் தனிச்சிறப்புகப் பற்றி இவ்வளவு நேரம்


பொறுமையுடன் கேட்ட அவையினருக்கு நன்றி கூறி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்.

You might also like