You are on page 1of 2

21 ம் நூற்றாண்டில் அறிவியலின் விஸ்வரூப வளர்ச்சியானது அனைத்துத்

துறைகளிலும் வியாபித்து வருவதை காணலாம். அந்தவகையில் இத்


தொழிநுட்ப வளர்ச்சியானது கல்வித்துறையிலும் முக்கிய பங்கினை
வழங்கியுள்ளது. தொழிநுட்ப சாதனங்கள் பொழுதுபோக்கிற்காக மட்டும்
அல்லாமல் இன்றைய காலகட்டங்களில் கற்றலுக்கான கருவியாகவும்
மாற்றமடைந்துள்ளது. எமது நாட்டின் கல்வித்துறையும் இத் தொழிநுட்ப
வளர்ச்சியை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தி வருகின்றது என்றே கூற
வேண்டும்.

அவற்றை சற்று ஆழமாக பார்த்தால், சமீ ப காலமாக COVID-19 அசாதாரண


சூழ்நிலையில் விடுமுறைகள் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு
பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் மிக முக்கிய ஊடகங்களாக தொலைத்
தொடர்பு சாதனங்களே உதவுகின்றன. மாணவர்களுக்கான பாடநெறிகள்
மற்றும் கற்றல் செயற்பாடுகள் என்பன வானொலி, தொலைக்காட்சிகளில்
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஏற்பாடுகளின் கீ ழ் ஒலி மற்றும்
ஒளிபரப்பப்படுகின்றன. அது மட்டுமன்றி மாணவர்களுக்கு பாடசாலை மற்றும்
வலய ரீதியாக Whatsapp, Zoom Applications, Google class மூலமாக
கற்பிக்கப்படுகின்றன. அது மாத்திரமன்றி கல்வி அமைச்சினால்
இணையவாயிலான கற்றல்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக
நு-தக்சலாவ, கல்விக்கூடம் என்பவற்றை கூறலாம். இது கல்வியில்
தொழிநுட்பத்தின் பங்கிற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.

கற்பித்தல் பணியைக் கற்பவர்களின் மையமாக மாற்றுவதில் இன்றைய


இல்லிருப்புக் கல்வி பெரிதும் வழியுறுத்துகின்றது என்றே சொல்ல
வேண்டும்.ஆசிரியர்களின் கற்பித்தலை நன்கு உணர்ந்து அவர்கள் இடும்
பணியைச் செவ்வனே செய்து முடிப்பதில் மாணவர்கள் கண்ணுங்கருத்துமாக
இருக்கிறார்கள். அவ்வகையில் செர்டாங் தமிழ்ப் பள்ளி மாணவர்கள்
தங்களின் கைவண்ணதில் உருவாக்கிய படைப்புகளை இங்கே ‘ANYFLIP
MAGAZINE” வாயிலாக பெற்றோர்களும் மற்றவர்களும் காணும் நோக்கில்
நாங்கள் பதிவேற்றம் செய்வதில் பெரிதும் அகம் மகிழ்கின்றோம்.
இணையவழிக் கல்வியானது, இருந்த இடத்தில் இருந்தவாறு கல்வி
கற்கவும் மாணவர்களின் கற்றல் திறனையும் அறிவுத் திறனையும்
வளர்த்தெடுக்கவும் உதவுகிறது. திறன்மிக்க ஆசிரியர்களால் பல தரவுகள்
திரட்டப்பட்டு வழங்கப்படும் வகுப்புகளால் மாணவர்கள் பல பயன்களைப்
பெற்று வருகிறார்கள். அவ்வகையில் செர்டாங் தமிழ்ப் பள்ளி மாணவர்கள்
தங்களின் கைவண்ணதில் உருவாக்கிய படைப்புகளை இங்கே ‘ANYFLIP
MAGAZINE” வாயிலாக பெற்றோர்களும் மற்றவர்களும் காணும் நோக்கில்
நாங்கள் பதிவேற்றம் செய்வதில் பெரிதும் அகம் மகிழ்கின்றோம்.

You might also like