You are on page 1of 2

சென்னை பள்ளி தன் மாணவர்களுக்காக தொடங்கியுள்ள வளரும் உழவர் சந்தை

ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளி, தோட்டக்கலை மற்றும் நிதி சார்ந்த கல்வியறிவை ஒரு


தனித்துவமான முயற்சிக்காக இணைத்துள்ளது

சென்னை, 25.02.2023 - ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளி துரைப்பாக்கம் கிளை, எட்டாம்


வகுப்பு மாணவர்களுக்காக நிதி அறிவு மற்றும் தோட்டக்கலை ஆகிய இரு பாடத்திட்டங்களை
ஒன்றிணைத்து, வளரும் உழவர் சந்தை செயல்பாடு என்ற புதுமை கூடிய தனித்துவமான நிகழ்ச்சியை
மிக வெற்றிகரமாக நடத்தியது. இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக வளரும் உழவர் சந்தை
நிகழ்ச்சியில் மாணவர்கள் தாங்கள் விளைவித்த பயிர்களை பள்ளியின் பாலிஹவுஸில்
கண்காட்சிப்படுத்தினர் மற்றும் தங்களது விளைச்சலை சந்தையில் கலந்து கொண்ட
பெற்றோருக்கு சந்தை முறையில் விற்றனர்.

வளரும் உழவர் சந்தை நிகழ்வானது, மாணவர்கள் தோட்டக்கலை மற்றும் நிதித்துறை


ஆகியவற்றில் தங்களின் அறிவையும் திறமையையும் வெளிப்படுத்தியதில் மிகப்பெரிய
வெற்றியைப் பெற்றது. மாணவர்கள் விற்பனை, சந்தைப்படுத்தல் முதலிய பல குழுக்களை
உருவாக்கி, சந்தையில் தற்பொழுதுள்ள விலைகள் மற்றும் ஒவ்வொரு பயிருக்குமான நிலையான
விலைகளைக் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் பயிர்களின் வாழ்க்கை சுழற்சி,
அவற்றின் அறுவடை நுட்பங்கள் குறித்தும் சந்தையில் விளக்கினர். கூடுதலாக மாணவர்கள்
இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் பற்றிய அவர்தம்
புரிதலை வெளிப்படுத்தினர்.

துரைப்பாக்கம் கிளையிலுள்ள ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் டாக்டர்


ஜெமி சுதாகர் இந்த நிகழ்ச்சி குறித்த தனது கருத்தைத் தெரிவிக்கையில், “வளரும் உழவர்
சந்தை நிகழ்வின் வெற்றியால் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். எங்களது மாணவர்களுக்கு
மிக முக்கியமான வாழ்க்கைத் திறன்களை வளர்க்க உதவும் செயல்முறை கற்றல் வாய்ப்புகளை
அளிப்பதே எமது முக்கிய நோக்கம். தோட்டக்கலை மற்றும் நிதிக் கல்வியறிவு பாடத் திட்டத்தின்
தொகுப்பு மாபெரும் வெற்றியை நிரூபித்துக் காட்டியுள்ளது, மேலும் பிற்காலத்திலும் இது போன்ற
நிகழ்வுகளை தொடர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டுமென நாங்கள் எண்ணுகிறோம். ஆர்க்கிட்ஸ் தி
இண்டர்நேஷனல் பள்ளி எப்பொழுதும் தன் மாணவர்களுக்கு முழுமையான கல்வியை அளிப்பதில்
உறுதியாகவுள்ளது. எங்கள் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் மற்றும் ஈடுபாடுள்ள கற்றல் சூழலை
வழங்குவதில் எங்கள் பள்ளியின் அர்ப்பணிப்புக்கு இந்த வளரும் உழவர் சந்தை செயல்பாடு
ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.”

பள்ளிகள் எப்படி தங்களது செயல்முறைக் கற்றலைப் பாடத்திட்டத்தில் இணைக்கலாம்


என்பதற்கு இவ்வளரும் உழவர் சந்தை செயல்பாடு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. இந்நிகழ்வு
மாணவர்களுக்கு முக்கியமான வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக்கொள்ள மற்றும் வாழ்க்கையில்
நிலையான பங்களிப்பு வழங்குவதற்கும் ஒரு அரிய வாய்ப்பை அளித்துள்ளது. மாணவர்கள்
திட்டமிடல், வழங்கல் (சப்ளை), தேவை (டிமாண்ட்), மற்றும் நிதி முதலீடு ஆகிய வணிகத்தை
நடத்துவதற்கான நிதி அம்சங்களை புரிந்துகொள்ள இத்திட்டம் உதவியுள்ளது.
இந்த நிகழ்வில் மாணவர்களின் ஆர்வமான பங்கேற்பு, இயற்கை மற்றும் சமுதாயத்தின் மீதான
உரிமையையும் பொறுப்புணர்வையும் அவர்களுக்குள் விதைத்துள்ளது. கடின உழைப்பு,
குழுப்பணி மற்றும் குழு ஒத்துழைப்பின் மதிப்பைப் பற்றிய புரிதலையும் மாணவர்கள்
பெற்றுள்ளனர். வளரும் உழவர் சந்தை செயல்பாட்டின் மூலம், மாணவர்கள் தங்களது தத்துவார்த்த
அறிவை (பிராக்டிகல்) நடைமுறை அனுபவத்திற்கு உபயோகப்படுத்த முடிந்தது. மேலும்
இந்நிகழ்வு கற்றல் முறையை மிகப்பயனுள்ளதாகவும் சுவாரசியமானதாகவும் ஆக்குகிறது.

ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளியைப் பற்றி

ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளி, இந்தியாவின் முன்னணி இன்டர்நேஷனல் K12


பள்ளிகளில் ஒன்றாகும். 2002 -இல், ஹைதராபாத் நகரில் முதல் கிளையை உருவாக்கி தனது
பயணத்தைத் தொடங்கியது.
2 தசாப்தங்களுக்கும் குறைவான காலத்தில், மும்பை, பெங்களூரு, புனே, ஹைதராபாத், குர்கான்,
சென்னை, கொல்கத்தா, நாக்பூர், நாசிக், இந்தூர் மற்றும் அவுரங்காபாத் முதலிய 25 முக்கிய
நகரங்களில் 90 கிளைகளாக வளர்ந்துள்ளது. அனைத்து OIS பள்ளிகளிலும் நவீன உள்கட்டமைப்பு,
தனிப்பட்ட கவனம் மற்றும் மிகக்கவனமாக நிர்வகிக்கப்பட்ட பாடத்திட்டம் ஆகியவை சீரான
முறையில் வழங்குகின்றன. OIS பள்ளிகள் சர்வதேச கற்பித்தல் முறைகளுடன் CBSE மற்றும்
ICSE பாடத்திட்டத்தைப் பின்பற்றுகின்றன. இது சிறப்பான கல்வியுடன் ஆளுமை
மேம்பாட்டிற்கும் அதிக முக்கியத்துவத்தை அளிக்கிறது. தற்பொழுது, இது 750000+
மாணவர்கள், 7000+ ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களைக் கொண்டு இயங்கி
வருகிறது.

You might also like