You are on page 1of 9

திரைகடல் ஓடியும்

திரவியம் தேடு

மதிவதனி
10 ஆம் வகுப்பு , " உ " பிரிவு
செட்டிநாடு வித்யாஷ்ரம்
"திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்னும் ஔவை
மொழியும்,

"யாதும் ஊரே யாவரும் கேளிர்“


- கனியன் பூங்குன்றன்

என்னும் வரிகள், தமிழர்களின்


உலகளாவிய சிந்தனைக்கும், பன்னாட்டு
வணிக தொடர்புக்கும் சான்றுகளாகும்.

பண்டைய காலம் தொட்டு, நாட்டின்


பொருளாதாரத்தில் அடிப்படை தொழில்களாக
உழவுத் தொழிலையும் வணிகத்
தொழிலையும் கூறலாம்.

நாடு செழிப்புடன் இருக்க வேண்டுமானால்


இவ்விரண்டு தொழில்களும் செழிப்புற்று
இருக்க வெண்டும். இவ்வாறு செழிப்ப்புற்று
இருந்த காரணத்தினால் தான் சங்ககாலம்
‘பொற்காலம்’ என்று அழைக்கப்படுகிரது.

மூலம்: அனந்த விகடன், ஓவியர் : மணியன் செல்வம்


தமிழர்கள் இயற்கையை வணங்கினார்கள்
என்பதை சங்க இலக்கியங்கள் கூறுவதை போல,
அது தமிழர்கள் கடலுடன் கொண்டிருந்த
வாழ்வியல் தொடர்பினை விளக்குகிறது.

“ நளியிரு முந்நீர் நாவாய் ஓடி


வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
கழியியல் யானை கரிகால் வளவ”
- “ வெண்ணி குயத்தியார் “

என்ற கரிகாலனை போற்றிப்படும் பாடலில்


அவன் முனோர்கள் காற்றின் வழி அறிந்து
கடல் வணிகம் புரிந்தனர் என கீ.மு. 3 ஆம்
நூறாண்டுக்கு முந்திய காலத்தில் கூறி உள்ளார்.
கடலை குறிப்பதற்கு ஆழி, ஆர்கலி,
முன்னீர் போன்ற சொற்களும்,
ஓடம், மிதவை, கப்பல், நாவாய்
என்று படகை குறிப்பதற்கு என்று
பல சொற்கள் சங்க
இலக்கியங்களில்
காணப்படுகின்றன.

ஹிப்பாலஸ் அவர்கள்
பருவக்காற்றை கடல் பயணத்திற்கு
பயண்படுத்தும் முறையை
கண்டுப்பிடிப்பதற்கு பல
நூற்றாண்டுகளுக்கு முன்பே,
திராவிடியர்களும், அரேபியர்களும்
பருவக்காற்றை பயண்படுத்தி கடல்
பயணம் செய்துகொண்டிருந்தனர்
என்பதை வரலாற்று ஆய்வாளர்
ஸ்வாப் கூறுகிறார்.

ரோமானிய நில குறியீட்டு வரைபடம் – கண்ணகி கோவில் ( கொடுங்கலூ ர்லூ ர்


( சேரர்களின் முசுரி துறைமுகம் அருகில் ) கடல் அன்னை ஐசிஸ் உருவம்
பொறிக்கப்பட்ட கல் தூண உள்ளது)
சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள்
அயல்நாட்டினரோடு கொண்டிருந்த தொடர்பை
பட்டினப்பாலை என்னும் பத்துப்பாட்டு
இலக்கியம் மிகத் தெளிவாக
எடுத்துக்காட்டுகின்றது

பல் ஆயமொடு பதிபழகி


வேறு வேறு உயர்ந்த முதுவாய்
ஒக்கல்
சாறு அயர் மூதூர் சென்று
தொக்காங்கு
மொழி பல பெருகிய பழிதீர்
தேயத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினிது
உறையும்
முட்டாச் சிறப்பின் பட்டினம்
- பட்டினப்பாலை

தமிழர்கள் பொதுவாக கடலோடிகளாக விளங்கியிருந்தனர். தமிழகத்தில் பல துறை


முகங்கள் வழியாக மேலை நாட்டிலிருந்து வணிகர்கள் வந்துள்ளனர்.
மதுரையை ஆண்ட பாண்டியர்கள் தங்களை கடலோடிகளாகவே கருதினர்.
அவர்களது மீன் சின்னம் அதனை புலப்படுத்தும்.பொதுவாக மேலைநாட்டு
வணிகர்களை யவனர் என்றும் மிலேச்சர் என்றும் இலக்கியங்கள் குறிக்கின்ற
இதனை முல்லைப்பாட்டில் காணலாம். யானர் என்ற சொல்லில இருந்து பிறந்நது
யவனர். ‘யவனர்’ என்றால் புதியவர் என்ற பொருள். இரண்டாயிரத்து ஐநூறு
ஆண்டுகளுக்கு முன்பாகவே உலகை கடல் வழியாக சுற்றி வந்தவர்கள் தமிழர்கள்.

வணிகர்கள் நடு நிலையொடு வாழும் நெஞ்சத்தை உடையவர்கள். தம்முடைய


பொருளையும், பிறருடைய பொருளையும், ஒரு தன்மையாகவே கருதுவார்கள் .
சங்ககாலப் புலவர்கள் சிலர் வணிகத்தைத் தொழிலாக கொண்டிருந்தனர் என்பதை
அவர்களின் பெயர்களை கொண்டு அறியமுடிகிறது.
கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
என்ற பெயரின் மூலம் தானிய
வகைகளின் வாணிபத்தையும், மதுரை
பண்ட வணிகன் இளநத்தனார் என்ற
பெயரிலிருந்து பலசரக்கு
வாணிபத்தையும்,
மதுரைப்பெருங்கொல்லனார்,
உரையூர்இளம்பொன வாணிகன்
சாத்தங்கொற்றனார், என்ற
பெயர்களிலிருந்து அவர்கள் செய்த
வாணிபத்தை அறியமுடிகிறது.
கடல் கடந்து தமிழர்கள்
தமிழர்கள் கடலொடியது,
வணிகம் செய்து, பல
நாடுகளில் சென்று அங்கு
குடியேறியது எனக் கானலாம்.
இன்றைக்கும் மொரிசியஸ்,
ரியூனியன் தீவுகள்,
மடகாஸ்கர், தென்னாப்ரிக்கா,
மலெசியா, சிங்கப்பூர்,
பர்மாவில் பண்டைய
காலத்திலேயே குடியேறிய
தமிழர்கள் பெரும்
எண்ணிக்கையில் நல்ல
செல்வந்தர்களாகவும்,
அரசியல்
தொடர்புள்ளவர்களாகவும்
திகழ்கின்றன.

“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது முதுமொழி.


“திரை கடல் ஓடியும் திரவியம் கொடு” என்பது புதுமொழி.

ஆம் நம் தமிழ் மக்கள் தங்களுக்காகவும், தங்கள் குடும்பத்தினருக்காகவும் மட்டும்


திரவியம் தேடவில்லை. தம் தாய்நாட்டிற்கான அன்னியச் செலவாணியையும்,
மதிப்பையும் பெற்றுத்தருகிறார்கள்.
நன்றி……

You might also like