You are on page 1of 3

தமிழே போற்றி

தமிழ்த்தாயே போற்றி
பாண்டியன் நெடுசெழியன் வழி நின்று அறம் வாழுவது நீதிபுகன்ற தமிழ்
மறவர் வழி வந்த நீதிபதிகளே, தன்னைத் தந்த உலகிற்கு ஒளி தரும்
மெழுகுவர்த்திப் போன்று அறிவு ஒளி தரும் ஆசிரியப் பெருமக்களே,
ஆன்றோர்களே , அறிவிற் சிறந்த பெரியோகளே உங்கள் அனவருக்கும்
அன்பு வணக்கங்கள் உரித்தாகும் .
இன்று இந்த சீர்மிகு அவையிலே நடைபெறும் பேச்சுப் போட்டியில்
நான் பேச எடுத்துக் கொண்ட தலைப்பு கல்வி என்பதாகும்.
சபையோரே,
உலகில் மாந்தரால் போற்றப்படும் செல்வமனத்திலும் என்றும் அழியாது
நிலைத்து நிற்பதும் வாழ்வுக்கு உறுதுணையாக அமைவதும் கல்வி
ஒன்றே ஆகும் . இத்தைகைய கல்வியின் பெருமையின ;
“கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை
என்ற குறளின் வழி நம் தெய்வபுலவரான வள்ளுவர் ஒருவனுக்கு அழிவு
இல்லாத சிறந்த செல்வம் கல்வியே என்று தெள்ளத் தெளிவாக
விளக்கியியுள்ளார்.
வானுக்குச் செங்கதிர் ஒன்று- புனல்
வன்மைக்கு காவிரி ஒன்று-நல்ல
மானத்தைக் காத்து வாழ எண்ணுமிந்த
வையத்துள் கொன்று திருக்குறள் .
திருக்குறளில் சொல்லப்படாத கருத்துக்களே இல்லை எனலாம்.
அவையோரே ,
கல்வி என்பது மானிட வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாததாகும் .
காட்டில் விளங்குகளைப்போல் ஒடித் திரிந்த மனிதன் குகைகளிலும் ,
மரங்களிலும் உடைகள் இன்றி வாழ்ந்த மனிதன் இன்று மாட
மாளிகைகளிலும் கோபுரங்களிலும் கூட சொகுசு வாழ்க்கை வாழும்
நிலைக்கு உயர்வதற்கு அடிப்படை காரணமாய் அமைந்தது எது? கல்வி
தானே! கல்வி மனிதனை நெரிப்படுத்தியது, சீர்மை படுத்தியது ,
இன்னும் சொல்லப்போனால் மனிதனை மனிதனாக உருவாக்கியதே
கல்வி தானே! மனிதன் உயர்வை நோக்கிச் செல்ல இன்றும் கல்வி தானே
அடித்தளம் அமைத்துத் தருகின்றது .
“ கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”
கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும் என மூத்தறிர்
டாக்டர் மு.வ. விளக்க மளிக்கிறார்.
இன்றைய உலகில் கல்வி கற்க வேண்டும் எனும் வேட்கை
அனைவரிடமும் பரவியுள்ளது.பல்வேறு துறிகளிலும் , பல்வேறு
நிலைகளிலும் இன்று பலரும் ஆழ்ந்து கல்வி கற்பது வரவேற்கத் தக்க
ஒன்று தான். ஆனாலும் , அந்தக் கல்வியைக் கற்பதில்
ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கின்றது.பணம் சம்பாதிக்க
வேண்டும் என்று ஒரு சாரார்,பதவி பெற வேண்டும் என்ற இன்னொரு
சாரார். இப்படிப் பல்வேறு நோக்கங்களுக்காக கல்வி கற்கின்ற நிலை
ஏற்பட்டதால் போட்டியும் பொறாமையும் லஞ்ச லாவண்யமும்
இவ்உலகில் பெருகிவிட்டது எனலாம்.அவரவர் நோக்கங்களை
அவரவரும் ஒரு வழியைப் பின்பற்றத் தொடங்கி விடுகின்றனர்.

இதுவே கற்ற நன்னெறியை மறந்து தமது நோக்கங்களில் வெற்றிப்பெற


வேண்டும் என்னும் வேட்கையில் தீய நெறிகளைப் பின்பற்றத்
தொடங்கி விடுகின்றனர்.இதனால் , தான் ல_சம் , சூது , வழிமாறிச்
செல்லுதல் போன்றவை உருவாக்கத் தொடங்கின.
திருடாதே பாப்பா திருடாதே .
என்று பாடுகின்றான்.ஆனால், அப்படி நடப்பதில்லையே ‘பொய்
சொல்லக் கூடாது பாப்பா ‘ என்று கல்வி கற்கின்றான். ஆனால், அடுத்த
வினாடியே பொய் வாயிலிருந்து வந்து விழுகின்றது. இவ்வாறான சிறு
சிறு நிலைகளில் தொடங்கி பிறகு மிகப்பெரிய தப்பான காரியங்களில்
ஈடுபடத் தொடங்கி விடுகின்றான்.இது உலகில் பல்வேறு
இன்னல்களுக்குக் காரணமாகி விடுகின்றது.எனவே, வள்ளுவர் சொற்படி
என்ன கற்கின்றோமோ அதன் படி நடக்கத் தொடங்கினால் உலகம் ஒரு
சொர்க்கமாய் இருக்கும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.
கல்வி உள்ளோரிடம் அன்பு ,பண்பு ,ஒழுக்கம் , கடமை,நன்றி போன்ற
அருங்குணங்கள் நின்று நிலவும் தொடங்கால் துன்பமாய் இருந்து
மடமையைக் கொன்று சிற்றறிவுடயாரைப் பேரறிவுடையவராக்கும்
பண்பு கல்வியைத் தவிர வேறு எதற்கும் கிடையாது.
சபையோரே,
அளவிடற்கரிய கல்வியின் சிறப்பை உணர்ந்து இளமை முதலே
அதனைப் பெற்றுக் கொள்ள முயல்வதே நம் அனைவரின் தலையாய
கடமையாகும் என்று கூறிக் கொன்டு விடை பெறுகிறேன்.
நன்றி வணக்கம்

You might also like