You are on page 1of 13

திருக்குறள் முழுமையிலுமே மெய்ப்பொருள் உண்டு

September 2, 2017 · by  supremeconcepts · in #தமிழ் #ஆன்மீ கம் #tamil #spirituality #upanishad

#throwsomelight,  ஆத்திகம்,  உண்டு,  ஐயம் நீங்குதல்,  கடவுள் வாழ்த்து,  திருக்குறள்,  தைத்திரிய

உபநிடதம்,  புல்லறிவாண்மை,  பேய்,  மெய்கண்டார்,  மெய்ப்பொருள்,  மெய்யுணர்தல், Thirukkural, Uncatego

rized ·  6 Comments 

திருக்குறள்,தைத்திரீயஉபநிடதம்–ஒப்பீடு என்ற என் முந்தைய


வலைப்பதிவின் பின்னூட்டில்,திரு.அஷ்ரஃப், முக்கிய
வினாவை/ஐயமொன்றை எழுப்பியிருந்தார்.நன்றி திரு.அஷ்ரஃப் 
திருவள்ளுவரையும், திருக்குறளையும் பற்றிய பல செய்திகளை
உள்ளடக்கியுள்ள அகன்ற வலைதளம் இவருடையது.( http://kural-of-
valluvar.blogspot.in/ ) திரு.அஷ்ரஃப் திருவள்ளுவரையும், திருக்குறளையும்
பற்றி ஆழ்ந்து சிந்திக்கவில்லை என்பதற்கு அவர்தம்
வலைதளத்திலுள்ள பல கூற்றுக்களுள் “He talks about worship, but nothing
about the way of worship-திருவள்ளுவர் கடவுள் வழிபாட்டைப் பற்றிப்
பேசுகிறார்,ஆனால் வழிபடும் முறைகளைப் பற்றி எதுவும்
பேசவில்லை“. எனப்பொருள்படும் ஒற்றைக்கூற்றே
சான்று.திருவள்ளுவர் கடவுள் வழிபாட்டைப் பேசும் முறை பற்றிய
என்  வலைப்பதிவு- https://thiruvalluvarkadavulvazhthu.wordpress.com/

திரு.அஷ்ரஃபின் வினா,திருக்குறள் மெய்யுணர்தல் மற்றும் புல்லறிவாண்மை


அதிகாரக் குறள்களை மேற்கோள் காட்டி விளக்கத் தூண்டியது. ஆதலின்,
அவ்வினாவிற்கான என் பதிலுரை நீண்டமையால்,“திருக்குறள் முழுமையிலுமே
மெய்ப்பொருள் உண்டு“,என்ற தலைப்புடன் இவ்வலைப்பதிவைத் துவங்குகிறேன்.

திரு.அஷ்ரஃப் அவர்களின் பின்னூட்டு அவர் தட்டச்சு செய்த வண்ணமே


தமிழும்,ஆங்கிலமும் கலந்து,இதோ கீ ழே:

“பின்னூட்டின் துவக்கம்:

//குறளில் உள்ள “உண்டு “என்ற சொல் பரமனெனும் மெய்ப்பொருள்


அல்லாது வேறு எதைக் குறிக்க முடியும்? //
என்று ஒரு கேள்வி கேட்டுள்ள ீர்கள்….. இந்த குறள் ஒரு வேளை
கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வந்திருந்தால், நீங்கள் சொல்லுவது
133% சரிதான். ஆனால் இது வரும் அதிகாரம் ‘புல்லறிவாண்மை’. All
the 10 couplets in the chapter are generic and it can refer any knowledge. Since
Valluvar has devoted few chapters for spiritual knowledge or enquiries elsewhere in
Arathuppaal and it comes just after chapter பேதமை, I do not think this word
உண்டு has anything to do with மெய்ப்பொருள்.

One more point. There is not evidence in Kural to show that மெய்ப்பொருள் is
creator God.

ஆங்கிலத்திலுள்ள பின்னூட்டின் மொழிபெயர்ப்பு :

 ‘புல்லறிவாண்மை’ அதிகாரத்தின் 10 குறள்களுமே


பொதுப்படையானவை, அவை,ஆன்மீ கம்என்றல்ல,எந்த
அறிவுத்துறையையும் சுட்டலாம்.ஆன்மீ க அறிவு அல்லது தேடல்கள்
குறித்து அறத்துப்பாலின் மற்ற சில அதிகாரங்களில் வள்ளுவர்
தெளிவுபடுத்தியமையாலும்,இந்த குறள் உள்ள (எண் )
புல்லறிவாண்மை அதிகாரம் ,பேதைமை அதிகாரத்திற்கு அடுத்து
வந்துள்ளமையாலும் இக்குறளிலுள்ள உண்டு என்ற சொல்,
மெய்ப்பொருளைக் குறிக்காது என்பது என் ( திரு.அஷ்ரஃப்) கருத்து.

மற்றுமோர் ஐயப்பாடு : திருக்குறள் முழுவதிலும், மெய்ப்பொருள்


என்பது படைத்த ஆண்டவன் என உணர்த்தும் சான்று ஏதுமில்லை.

பின்னூட்டின் முடிவு.”

என் விரிவான பதிலுரை:

குறள்களைப் பற்றிய என்னுடைய மொத்தக் கருத்தாக்கமும் பரிமேலழகரின்


விளக்கத்தை ஒட்டியும்,குரு.ஸ்வாமி ஓம்காரானந்தா அவர்களிள் குறளும்,
கீ தையும் சொற்பொழிவுகளை ஒட்டியும் மற்றும் இதுவரை மறைமுடிவு நூல்களை
செவிமடுத்ததன் அடிப்படையிலும் தான் அமைத்துள்ளேன்.

அதன்படி வள்ளுவனார் மெய்ப்பொருளைத் தான் ‘உண்டு‘ என்ற சொல்லில்


பொருளாக்கியுள்ளார் என உறுதியாகக் கூறமுடியும்.இது 133%  என்றவாறு சதவதம்

பற்றியது அல்ல,வெறும் உறுதியுமல்ல, ”மறைவாக்குறுதி” ஆகும், சதம்,வதம்

இரண்டனுக்கும் அப்பாற்பட்டதால்.

உலகத்தார் உண்டென்பார் என்ற குறள் ( குறள் எண் 850 ) கடவுள்வாழ்த்து


அதிகாரத்தில் இடம் பெறாமல் புல்லறிவாண்மை அதிகாரத்தில் வந்துள்ளது. ஆகவே
மெய்ப்பொருளை, ‘உண்டு‘ என்ற சொல்லுக்குப் பொருளாகச் சொல்லியிருக்கமாட்டார்
வள்ளுவர் என்பது முதல்ஐயம். இந்த ஐயத்தை நீக்க மூன்று படிகளில் முயலலாம்.

முதற்படியாக, குறள் எண் 850 ,புல்லறிவாண்மை அதிகாரத்தில் இடம் பெறுவது


எங்ஙனம் பொருந்தும் என ஆராய்வது தேவை.அவ்வாறு ஆராயவே தான்
இக்குறளிலுள்ள ஆழ்ந்த மறைமொழிக் கூற்று புலனாகும்.

புல்லறிவாண்மை குறள்களின் கருத்துக்களை எண்வாரியாக எடுத்தாய்வோம்.

841. இல்லாமையில் கொடிய இல்லாமை நல்லறிவு இல்லாமை

842. புல்லறிவுடையவர் நல்வினை ஆற்றியறியாதவர்

843. அறிவிலார் தனக்கும் மிக்க தீயன செய்து கொள்வர்

844. புல்லறிவுடையோரின் இலக்கணம் தன்னைத்தானே அறிவுடையவன்

என்ற செருக்கு கொள்வதாகும்

845. புல்லறிவுடையோரின் மற்றுமோர் இலக்கணம் தான் கல்லாததையும்

கற்றது போல் காட்டிக்கொள்வதாகும்

846. புல்லறிவுடையவர் தன் குற்றத்தை நீக்காதிருப்பர்

847. புல்லறிவினன் மறையறிவுரை பெற்றும்,ஏற்காது தனக்கு வருத்தத்தை

ஏற்படுத்திக் கொள்வான்

848. புல்லறிவினன் அறிவுடையார் சொல்லையும் கேட்கிலன், சொந்த

அறிவும் இல்லாதவன்

849. புல்லறிவினனுக்கு நல்லது புகட்ட முயலும் அறிவுள்ளவன்,தான்

அறிவற்றவற்றவனாகக் கருதப்படுவதோடன்றியும், புல்லறிவினன்

அறிவுள்ளவனாகக் காட்டப்பட்டு விடுவான்.


850. உயர்ந்தவர் பலரும் உண்டு என்பதை இல்லை என்பான் புல்லறிவினன்.

இதை நோக்குங்கால்,இந்த அதிகாரம் generic  அதாவது பொதுவானது என


எண்ணுவதற்கில்லை.வள்ளுவர் அவர்தம் காலத்து மறைமுடிவு தத்துவ ஆய்வுகளின்
போது,மறை ஆசானின் சொற்களை புறந்தள்ளி,தான் பிடித்த முயலுக்கு மூன்று
கால்களே என்பது போல,விதண்டாவாதம் எனச் சொல்லப்படும் வறட்டாக தர்க்கம் (
ஏரணம்) புரிவோரை அடையாளங்கண்டு சாடியிருப்பதாக,மேற்கண்ட குறள்களின்
கருத்துகளிலிருந்து ஊகித்தறியலாம்.

முதல் ஐயத்தை நீக்கும் இரண்டாவது படியாக,குறள் எண் 850 கடவுள் வாழ்த்துக்


குறளாய் அமையாமல், புல்லறிவாண்மைக் குறளாய் அமைந்தது தகுமா என
ஆராய்வோம்.கடவுளின் இலக்கணங்களாக,முதற் குறளில் ஆதிபகவன் எனத்
துவங்கி,பத்தாமதில் இறைவன் என நிறைவு செய்து,கடவுளை வாழ்த்திப் பாடும் ஒரே
நோக்கில் மட்டும் திருவள்ளுவர், கடவுள் வாழ்த்துக் குறள்களை வடிவமைத்துள்ளார்.

ஆனால் குறள் எண் 850 ல் உள்ள “உண்டு“ என்ற சொல்லோ, கடவுள் உண்டு என
மட்டும் அறிவுறுத்தி நிற்காமல்,கடவுளை உணர வழிவகை செய்யும் கருத்துக்களான
மறுபிறப்பு, இருவினைப் பயன் ஆகியனவும் உண்டு என மெய்யுணர்ந்தோர் இயம்பும்
மெய்ப்பொருள் தத்துவத்தை பொதுவில் அறிவுறுத்துகிறது.ஆதலின் இக்குறள் கடவுள்
வாழ்த்து அதிகாரத்தில் இடம் பெறாததால் தவறேதுமன்று.

குறள் எண் 850,மெய்யுணர்தல் அதிகாரத்திலும் இடம் பெறாததற்கும் கூட


மேற்சொன்ன அதே காரணமே பொருந்தும்.

இறுதிப்படியாக இக்குறள் எண் 850 ல்,புல்லறிவினனான இல்லென்பான் அடையும்


பேய் என்னும் இழிநிலையைச் சுட்டியே,உண்டு என்பது மெய்ப்பொருளையே சுட்டும்
எனக் கொளவியலும்.

மெய்யுணர்தல் அதிகாரத்தின் துவக்கத்திலேயே,பொருளல்லவற்றைப் பொருளென்று


உணர்தலை மயக்கமென எடுத்துரைத்ததால்,இல்லென்பானே அத்தகைய
முழுமயக்கநிலையில் இருக்க உத்தேசிப்பவனாகிறான்.எனவே உண்டு என்பது
மெய்ப்பொருளைக் குறிப்பால் உணர்த்துகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஏனெனில்,மெய்யுணர்ந்தோர் உண்டெனக் கூறும் இவ்வுலகைப் படைத்துக் காத்து


அழிக்கும் கடவுளையும்,மறுபிறப்பின் விளைவுகளான சுவர்க்கம்,நரகம்
இவற்றினையும்,மறுபிறப்புக்குக் காரணங்களான இருவினைப்பயன் யாவற்றையும்
இல்லையென மறுப்பவனுக்கு புகலிடம் எனவொன்று என்பதேது?
இரண்டாவதுஐயம் எந்தவொரு குறளிலும், ”மெய்ப்பொருள்” படைத்த ஆண்டவன்
(creator god ) என்பதாகப் பொருள் சொல்லப்படவில்லையே என்பது.

”மெய்ப்பொருள்” என்பதற்கு பொருள் சொல்லப்படவில்லை என்ற அளவில் மட்டும்


இதற்கு நான் உடன்படுகிறேன். ஏனெனில் மெய்ப்பொருள் இன்னது என பொருள்
சொல்லி அறிவதன்று. உணர்தல் பற்றியதாகையால் , எல்லா மறைமுடிவு
நூலிலும்,மெய்ப்பொருள் குறிபபாக மட்டுமே உணர்த்தப்பட்டுள்ளது.

அதையே தான் வள்ளுவனாரும் கடைப்பிடித்துள்ளார்,முக்கியமாக மெய்யுணர்தல்


அதிகாரத்தில்.மெய்யுணர்தலில் வரும் 10 குறள்களின் கருத்துச் செறிவை
நோக்குவோம்.

351.மெய்ப்பொருள் இல்லாதவற்றை மெய்ப்பொருள் என உணர்தல் மருளென்னும்

மயக்கத்தால் நிகழ்வதால்,மீ ண்டும் மீ ண்டும் பிறக்க நேரிடுகிறது.

(மெய்ப்பொருள் இன்னது என பொருள் சொல்லப்படவில்லை)

352. அத்தகைய மயக்கம் நீங்கப்பெறும் மெய்யுணர்ந்தோர் வடுபேற்றை


எய்துவர்.(மெய்யுணர்ந்தோரின் தன்மையும்,அவர் அடையும் பயனும்

கூறப்பட்டதேயன்றி,மெய்ப்பொருள் இன்னது என சொல்லப்படவில்லை)

353. மெய்யுணர்ந்தோர் ஐயம் நீங்கப் பெற்று,வையத்தைக் காட்டிலும்,

வானுலகம் தெளிவு என்பர் (இதிலும் மெய்யுணர்ந்தோரின் தன்மையும், அவர்

அடையும் பயனும் மட்டுமே கூறப்பட்டது )

354. மெய்யுணர்வு இல்லாதாருக்கு ஐம்புலன்களால் உண்டாகும் பயன்

ஏதுமன்று.(இக்குறள் மூலம் ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டது மெய்யுணர்தல்

என எதிர்மறைக் குறிப்பால் உணர்த்துகிறார். )

355. யாதொரு பொருள் யாதோர் இயல்பிற்றாய்த் தோன்றினும்,

யாவற்றுக்கும் மெய்யாகவுள்ள மெய்ப்பொருளை உணர்தல் அறிவு. (

மெய்யுணர்தலின் இலக்கணம் சொல்லப்பட்டது )


356. மெய்ப்பொருள் கண்ட ஆசானை அணுகி,கற்ற மெய்யுணர்ந்தோர்

மீ ண்டும் பிறப்பதில்லை. ( மெய்யுணர்தலை எய்தும் மூன்று படிகளுள்

முதலாவதும்,அதன் பயனும் சொல்லப்பட்டது )

357. மெய்ப்பொருள் கண்ட ஆசானை அணுகி,கற்று, மறு ஆய்வு செய்து

மெய்யுணர்ந்தோர் மீ ண்டும் பிறப்பதில்லை. ( மெய்யுணர்தலை எய்தும்

இரண்டாவது படியும்,பயனும் சொல்லப்பட்டது )

358. மெய்ப்பொருள் கண்ட ஆசானை அணுகி,கற்று, மறு ஆய்வு

செய்து,அறிவுச்செறிவுப் பயிற்சி மேற்கொண்டு மெய்யுணர்ந்தோர் மீ ண்டும்

பிறப்பதில்லை. ( மெய்யுணர்தலை எய்தும் முறையின் இறுதிப்படியும்,பயனும்

சொல்லப்பட்டது )

359. மற்றவெல்லாப் பொருட்களுக்கும் சார்பாகவுள்ள மெய்ப்பொருளை  

உணர்ந்து, விருப்பு,வெறுப்பு நீக்கினால்,முன்னுள்ள இருவினைப் பயன்கள்

எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது. ( மற்றவெல்லாப் பொருட்களுக்கும்

சார்பாகவுள்ளது மெய்ப்பொருள் என்ற குறிப்பு இலக்கணம் கூறப்பட்டுள்ளது )

360. காமம்,வெகுளி,மயக்கம் இவை மூன்றினையும் பெயருக்குக் கூட

இல்லாமல் செய்வோருக்கு,அந்த மூன்றினால் வரும் வினைப்பயன்கள்

உளவாகா. ( மெய்யுணர்தலை எய்தும் முறையும்,பயனும் சொல்லப்பட்டது )

இவ்வாறாக,மெய்ப்பொருளை,மற்றவெல்லாப் பொருட்களுக்கும் சார்பாகவுள்ளது


எனவும்,படைத்த இறைவனை முதற்குறளில் ஆதிபகவன் எனவும்,தனித்தனி
அதிகாரங்களினூடே மிகவும் பொருந்தியே கூறி, வள்ளுவன் தன்னை, அறிவுடைய
சான்றோரில் தலையாயவர் என நம் யாவர்க்கும் உறுதிப்படுத்தியுள்ளார் அன்றோ!

சொற்பொருளை உணர்த்தும் தெளிவில், மெய்ப்பொருள் என்ற சொல்லே எத்துனை


அழகு! தன்னுள் எக்கணமும்,யாவற்றிற்கும் அடிப்படையாய் உணரப்படுவதால்,
மெய்யுணர்தல் என்பது இருமை நிலை கடந்த உணர்வு.

மேலும் விளக்கவேண்டின்,கடவுள் வாழ்த்து என்பது பகவன்,பத்தன் என இருமை


நிலைப்பட்டது.ஆகவே தான் கடவுள் வாழ்த்துக் குறள்கள் அடி/தாள்
சேர்தல்/தொழுதல், புகழ் புரிதல், ஒழுக்கநெறி நிற்றல், வணங்குதல் ஆகிய
செய்கைகள் உள்ளடங்கியதாகக் கூறப்பட்டது.

மெய்யுணர்தல் என்பதோ இருமை கடந்து, மெய்ப்பொருள் கண்ட நிலை அல்லது


மெய்ப்பொருள் உணர்ந்த நிலையைக் குறிக்கும்.மெய்ப்பொருளின் தன்மை,
மெய்யுணர்ந்தோரிடம் மட்டுமே புலனாகும். மருள் எனும் மாயையை நீக்கப்
புலனாவது,புலன்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட மெய்யான இப் பரம்பொருளே.

மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு,இருள்நீங்கி இன்பம் பயக்கும் என்றுரைத்த


முறையே,மாசறு காட்சியவர்களுள் ஒருவராகவன்றோ வள்ளுவனார்  ஒளிர்கிறார்!!

”கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி”


எனவுரைத்ததனால், வள்ளுவனாரும் மெய்ப்பொருள் கண்டார் ஆவார் அன்றோ!

அத்தகைய மெய்ப்பொருள் கண்ட வள்ளுவனாரின் திருக்குறள் முழுமையிலுமே


மெய்ப்பொருள் உண்டு எனச் சிறப்பாக எடுத்துரைப்போம்.

நன்றி!!

Share this:

 Email

 Facebook3

 Twitter

 Print

 Google

6 comments

1.
kgiree · November 21, 2017 - 4:19 am · Reply→

அற்புதமான ஆராய்ச்சி விளக்கம்.

ஸ்வாமி ௐகாரானந்த மேற் ோகள் முழுச் சான்று.

என் கருத்தில்:

உண்டு என உணர்வால் நம்பியவர்க்கு உரைகல்

தே வை யிலை.

உணர்வைபெறாதவர் உரை படித்தும்

உய்வதிலை.

2.

Ashraf N.V. · January 8, 2018 - 2:32 pm · Reply→

என்னுடைய முதல் கேள்விக்கான விளக்கம்…. வெகு நீளமான ஒரு விளக்கம்.

நீளமானெதென்றாலே கேட்ட கேள்விக்கு நேரடியான பதில் இல்லை என்பதற்கு

அடையாளம்.

//எடுத்துரைத்ததால்,இல்லென்பானே அத்தகைய முழுமயக்கநிலையில் இருக்க

உத்தேசிப்பவனாகிறான்.எனவே உண்டு என்பது மெய்ப்பொருளைக் குறிப்பால்

உணர்த்துகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.//

ஐயா அதெப்படி? அறத்துப்பாலின் மெய்யுணர்தல் அதிகாரத்தில் வரும் ஒரு குறளை

எடுத்து, பொருட்பாலில் வரும் புல்லறிவாண்மை அதிகாரத்தில் வரும் ஒரு

குறளுக்குப் பொருந்துவது எப்படி?

மன்னிக்கனும். விளக்கம் நம்பக்கத்தக்கதாக இல்லை.


1.

supremeconcepts · January 11, 2018 - 7:47 am · Reply→

நன்றி திரு.அஷ்ரப்

//நீளமானெதென்றாலே கேட்ட கேள்விக்கு நேரடியான பதில் இல்லை என்பதற்கு

அடையாளம்.//

உங்களின் கேள்வியை, என்னுடைய ஐயம் போலவே உணர்ந்து,என்னவெல்லாம் இது

தொடர்பாக வேறு ஐயங்கள் எழக்கூடும் என நிறைய சிந்தித்து,பதில்

வடிவமைத்து,நீளமாகத்தான் பதில் பதிவிட்டேன், ஆனால் முடிவில் ஆத்ம

திருப்தியே,கூடுமானவரை உங்களின் ஐயம் களைய முயன்றேன்,என் பதிவில்

பொதிந்திருக்கும் பதிலை அறிதல் உங்களின் முயற்சியைச் சார்ந்தது.

நீங்களும்,விரைவில் ஒரு நாள் பதில் கிடைக்கப் பெறுவர்கள்


ீ என

நம்புகிறேன்,அங்ஙனம் கிட்டியவுடன்,வள்ளுவரின் சீடர்களான நமக்கு,வாலறிவனின்

நற்றாள் தொழுதலே,கற்றதனால் ஆய பயன் என சொல்லவும் வேண்டுமோ!

//அறத்துப்பாலின் மெய்யுணர்தல் அதிகாரத்தில் வரும் ஒரு குறளை எடுத்து,

பொருட்பாலில் வரும் புல்லறிவாண்மை அதிகாரத்தில் வரும் ஒரு குறளுக்குப்

பொருந்துவது எப்படி?//

மனிதனின் வாழ்வுக்கு அடிப்படை குறிக்கோள்களாக தர்மம்,அர்த்தம், காமம்,மோக்ஷம்

என ஸனாதன இந்து தர்ம நெறியின் அறிவுரைகளையே, திருவள்ளுவரும் அறம்,

பொருள், இன்பம் என மூன்று பால்களாகப் பிரித்து உலகப் பொதுமறையான

திருக்குறளை வழங்கியுள்ளார்.
மோக்ஷம் அல்லது வடு
ீ பேறு,அறத்துப்பாலிலேயை உள்ளடக்கம் என்பதையும்

அறிவோம்.

அறம்.பொருள்,இன்பம்-இம்மூன்றும் வெவ்வேறானதா, ஒன்றடனுடன் மற்றொன்று

தொடர்பு அற்றதா எனின், இவையாவும் மனிதர்களின் மேம்பாட்டுக்காகவே,ஆதலால்

தொடர்பு நிச்சயமாக உண்டு.இவை ஏதோ,வேதியியல் மாணவர் கணக்கியல் பாடம்

குறித்து,எவ்வித தொடர்பும் கொண்டிராது இருத்தல்போல் (chemistry and

accountancy),தொடர்பற்றவை என்பதில்லை.

ஆனால், அறம்,பொருள்,இன்பம் இவற்றனின் தொடர்பு ஒழுங்கு படுத்தப்பட்டதாகும்.

அவ்வாறு இன்றியமையாமையின் அடிப்படையில், வரிசையாக, முதலில்

அறத்துப்பாலும்,பின்னரே பொருளும்,இன்பமும் என உள்ளன.

வள்ளுவரே,இதனைத் தெளிவாக்கியுள்ள பாங்கினைக் காணலாம்.

அறன் வலியுறுத்தல் அதிகாரத்தின் 9 ம் குறள் மிகமிகத் தெளிவு.

“அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த ‘புகழும் இல”

‘அறத்தான்’- அறத்தைப் பேணி,அறத்தை மூலதனமாகக் கொண்டு,

‘வருவதே’- ஈட்டப்படுவதே/அடையப்படுவதே/பெறப்படுவதே

‘இன்பம்’- இன்பம். அடையும் இலக்கை-இம்மை,மறுமை,வடு


ீ பேறு இவற்றைக்

குறிக்கும்.

‘மற்றெல்லாம்’- அறத்தினைப் புறந்தள்ளிப் பெறப்படும் பிற யாதுமே

‘புறத்த’- மதிப்பு அற்றவை,ஒதுக்க வேண்டியவை

‘புகழும் இல’- சான்றோர்களின் நல்லாசிகளும் அவற்றினுக்குக் கிட்டாது.


ஆகவே பொருட்பாலில் வரும் புல்லறிவாண்மை அதிகாரத்தின் ‘ உலகத்தார்

உண்டென்பார்…‘ குறளுக்கு,அறத்துப்பாலின் மெய்யுணர்தல் அதிகாரத்தின் குறள்களைப்

பொருந்த உரைப்பது, வள்ளுவரே உகப்பதாகும் என்பது என் கருத்து.

இதற்கு நேர்மாறாக, அறத்துப்பாலின் எக்குறளுக்கும், பொருட்பாலின் குறள்களைக்

கொண்டு நேரடியாக விளக்குவது பொருந்தாது எனவும் தெளியலாம்.

3.

Ashraf N.V. · January 8, 2018 - 2:39 pm · Reply→

இனி என்னுடைய இரண்டாவது கேள்விக்கான உங்களுடைய விளக்கத்துக்கு

வருகிறேன்……

மெய்யுணர்தல் அதிகாரத்தில் வரும் எல்லாக் குறட்பாக்களுக்கும் விளக்கம்

தந்துவிட்டு, இறுதியில்…….

//இவ்வாறாக,மெய்ப்பொருளை, மற்றவெல்லாப் பொருட்களுக்கும் சார்பாகவுள்ளது

எனவும்,படைத்த இறைவனை முதற்குறளில் ஆதிபகவன் எனவும்,தனித்தனி

அதிகாரங்களினூடே மிகவும் பொருந்தியே கூறி, வள்ளுவன் தன்னை, அறிவுடைய

சான்றோரில் தலையாயவர் என நம் யாவர்க்கும் உறுதிப்படுத்தியுள்ளார் அன்றோ!//

…… என்று ஒரு முடிவைத் தந்தால் எப்படி ஐயா? எங்கிருந்து வந்தது இந்த “படைத்த

இறைவனை” என்று? அதுவும் முதற்குறலில் வரும் ஆதிபகவந்தான் படைத்த

இறைவன் என்று?

So, I would say that your ‘explanation’ has NOT proved that the meypporul of chapter 36 is creator God. I

would say that the God of Chapter one is NOT a creator God.
Thanks for your reply anyway.

4.

Ashraf N.V. · January 8, 2018 - 3:00 pm · Reply→

On your first comment on my

//திரு.அஷ்ரஃப் திருவள்ளுவரையும், திருக்குறளையும் பற்றி ஆழ்ந்து சிந்திக்கவில்லை

என்பதற்கு அவர்தம் வலைதளத்திலுள்ள பல கூற்றுக்களுள் “He talks about worship, but

nothing about the way of worship-திருவள்ளுவர் கடவுள் வழிபாட்டைப் பற்றிப்

பேசுகிறார்,ஆனால் வழிபடும் முறைகளைப் பற்றி எதுவும் பேசவில்லை“.

எனப்பொருள்படும் ஒற்றைக்கூற்றே சான்று//

I went through the table by clicking on the link you provided. My statement is made in the context of

religious scriptures that invariably, often repeatedly, mention how deities have to be worshiped. In that

sense, Thirukkural does not.

Now let me put across my view of what kind of worship Thirukkural mention……. (let me reiterate, the

god in Chapter one is not a creator God)…….

5.

Ashraf N.V. · January 8, 2018 - 3:05 pm · Reply→

The following paragraphs I have copy pasted below is from my forthcoming article on the nature of reality

and realization in Tirukkural. So, in Thirukkural, only the type of worship is mentioned and not the way

(protocol of worship), as you would find in scriptures like Tirumandiram, Tevaram or on meditation in

texts like Yoga sutra.


There are three or four modes of venerating or worshiping a supreme being or God: inner contemplation,

verbal praising or chanting, bowing down in veneration and ritualistic practices. The rough English words

for all these modes are Meditation (dhyāna), Exaltation or Recitation (vyākhyāna), Prayer (namaskāra)

and Ritual (yājna), though these are often not mutually exclusive. We find references to the all these

practices in Tirukkuṟaḷ, either as a passing mention or as a practice to be cultivated (introspection,

praising, worshiping & ritual: ஒர்த்தல், புகழ்புரிதல், தொழுதல்/வணங்குதல், பூசனை).

Barring Kuṟaḷ 5 that refers to worship by praising the Lord, the emphasis in Chapter one is on the physical

mode of worship (head bowing down, touching the feet). Strikingly, all the meager references to inner

contemplation and austerities in Tirukkuṟaḷ appear outside Chapter 1, the prominent one being Kuṟaḷ 357

(ōrttuuḷḷam uḷḷatu uṇ ariṉ ) appearing in Chapter 36 on ‘Truth realization’ (meyyuṇ artal)

You might also like