You are on page 1of 1

அமுதான தமிழே நீ வாழி

என் ஆவியிலே கலந்து நாவினிலே தவழுகின்ற

அமுதான தமிழே நீ வாழி

தாய் தரும் பாலிலும் நீ இருந்தாய்

அவள் தாலாட்டுப் பாடலிலும் தேன் கலந்தாய்

ஆயிரம் மொழிகளிலும் நீ சிறந்தாய்- நான் அயர்நத


் ாலும் துயர்ந்தாலும் துணை இருந்தாய்.

தாய்பப் ாலோடு முத்தமிழையும் தேனாய் உணவாய் உயிராய் அமுதூட்டிய அன்னைக்கு என் முதல்
வணக்கம்.உயிரையும் மெயையும் அகரத்தோடு அரிச்சுவடி ஆரமித்த தமிழ் ஆசனுக்கு என் முத்தமிழ்
வணக்கம். மூச்சு மறந்தாலும் பேச்சு மறந்தாலும் முத்தமிழை மற வாது நீருற்றி சீராட்டி பாராட்டி வேரூண்ற
வைத்திருக்கும் தண்டமிழ் காவலர்களுக்கு என் தண்மையான தனி வணக்கம்.

உங்கள் அனைவருக்கும் எனது தமிழ்த் தாயின் பாதம் தொட்டு வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு
ஒழுக்கம் எனும் எனதுரையை சின்னவள் தொடங்குகிறேன்

சபையோர்களே,

3- நூற்றாண்டில் பிறந்த வள்ளுவர் பெருமான், மானிட வாழ்ககை


் க்கு ஒரு சிறந்த வழிக்காட்டியாக விட்டுச்
சென்றுள்ள கருவூலம் திருக்குறள். ஒவ்வொரு குறலிலும் ஏழு சொற்கள் புகுத்தி இருந்தாலும் அதன்
ஆழ்ந்த கருத்தை ஏழு பிறவிக்கும் துணையாக கொண்டு செல்லும் அளவிற்கு அருளிச் சென்றுள்ளார்.

எனவே தான் ஔவையார் அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள் என்கிறார்.

அவையோர்களே,

தெய்வப்புலவர், திருக்குறளில் 14-வது அதிகாரத்தில் ஒழுக்கம் உடைமை என்ற தலைப்பில் பத்து குறளை
அருளியுள்ளார். அதில்,

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.” என்ற குறளை சற்று ஆராய்ந்து பார்பப
் ோம்
வாரீர்.

விழுப்பம் என்பதற்குக் குணம், நலன், புகழ், பெருமை, உயர்வு என்ற பல பொருள் உண்டு. இவ்வுலகில்
இழந்தால் பெற முடியாதவை இரண்டு. ஒன்று உயிர் மற்றொன்று ஒழுக்கம் என்று கூறினால் அதனை
யாரலும் மறுக்க முடியாது. ஆதாலால், ஒழுக்கத்திற்கு உவமை கூற எண்ணிய வள்ளுவர் போனால் திரும்ப
வராத உயிரைத் தேடிப் பிடித்து வந்து ஒழுக்கத்திற்கு உவமையாகக் கூறியுள்ளார்.

உயிரினும் சிறந்த பொருள் வேறு எதுவும் இல்லை” என்ற பலருடைய கருத்தை வள்ளுவர் தனது குறளின்
மூலம் மறுத்துள்ளார். உண்மையில் உயிரைவிட மேலான ஒன்று உள்ளது. அஃது ஒழுக்கம் மட்டுமே என்று
அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். இதனைத் தான் ‘உயிரினும் என்ற ஒற்றைச் சொல் தெரிவிக்கிறது

You might also like