You are on page 1of 3

குருவாசகத் திருப்புகழ்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் இராஜகம்பீரம்


கிராமத்தில் தவநெறிக்கோட்டம் என்னும் ஞானத்தோட்டத்தில் குடி
கொண்டிருக்கும் குருகுல மஹான் ஸ்ரீலஸ்ரீ மஹ்தூம் பாவா பகுருத்தீன் பாகவி புஹாரி அவர்களின்
வழித்தோன்றல் குருதேவர் ஸ்ரீலஸ்ரீ மஹ்தூமி பாவா அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய திருமொழிகளின்
தொகுப்பு.

தொகுத்தளித்தவர்: திரு. கிருஷ்ணமூர்தத ் ி அவர்கள், பட்டுக்கோட்டை.


-----------------------------------------------------------------

இறந்து மடிந்து மருண்டு மயங்கி இருக்கும் இதயங்களை உயிர்பப் ிக்கவே நாம் அருவாய் இருந்து உருவானோம்
என்று உரைக்கும் ஞானகுரு மஹ்தூமி அவர்கள் புகழ் என்றென்றும் நீடூழி வாழ்க! வாழ்க!!

ஞானம் பெறுவதன் நோக்கம் மானிட.உண்மையை அறிவதேயாகும் என மானிட உண்மையை


உணர்த்தும் ஞானகுரு மஹ்தூமி அவர்கள் புகழ் என்றென்றும் வாழ்க! வாழ்க!! நீடூழி!!!

ஒருவரால் மற்றவர்க்கு எந்தளவு ஞானத்தைப் பரப்ப முடியுமோ, அந்த அளவுக்கு பரப்புவதும் அதற்காக
முயற்சிப்பதும்தான், ஏகன் இறைவனுக்கு நாம் செய்யும் தியாகம் என்றுரைத்த ஞானகுரு மஹ்தூமி அவர்கள் புகழ்
வாழ்க!.வாழ்க!! நீடூழி!!!

இறைவனைப் பற்றிய ஆராய்ச்சி இல்லாததால்தான் இன்று மக்கள் மத்தியில் நல்ல குணங்கள் இல்லாமல்
போய்விட்டன என்று உண்மையை உணர்தத ் ிய காலத்தின் உத்தம குருநாதர் மஹ்தூமி அவர்கள் புகழ் வாழ்க!
வாழ்க!!

முழுமையான ஞான விளக்கத்தைத் தருவதற்காகவே ஞானிகளும் சித்தர்களும் இவ்வுலகிற்கு வந்தார்கள் என


சித்தர்களின் பாடல்களுக்கு பொருள் உரைக்கும் பேரின்ப குருநாதர் மஹ்தூமி அவர்களின் புகழ் வாழ்க!.வாழ்க!!
நீடூழி!!!

ஒருநாளைக்கு ஒருமணி நேரமாவது இறையைப்பற்றி தியானம் செய்யுங்கள் என்ற சிந்தனையைத் தூண்டிய நமது
குருநாதர் மஹ்தூமி அவர்கள் புகழ் ஓங்குக! ஓங்குக!! நீடூழி!!!

எதைச் செய்து எதைசெய்வித்து எதை விலக்கி வாழ கற்றுக்கொள்ள வேண்டும் அவைகளே நாம்
போற்றத்தக்கவை எனக்கூறிய கோமான் குருநாதர் மஹ்தூமி அவர்கள் புகழ் வாழ்க! வாழ்க!! நீடூழி!!!

பாவம் என்பது மனிதன் தன்னைத்தான் அறியாதிருப்பதே ஆகும் என பாவத்திற்கு புது விளக்கம் கூறிய பூமான்
குருநாதர் மஹ்தூமி அவர்கள் புகழ் வாழ்க! வாழ்க!! நீடூழி!!!

உலகம் உய்வு பெற எல்லாச் சமயங்களும் வேறுபாடற, எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலவ அனைத்தும் ஒன்றே
எனும் ஞானத்தை அடைய ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் என்று ஞானப்பாதைக்கு அழைக்கும் “ஞானிகள்
திலகம்” குருநாதர் மஹ்தூமி அவர்கள் புகழ் வாழ்க! வாழ்க!! நீடூழி!!!

கள்ளங்கபடமற்ற வெள்ளை உள்ளம் இறைவன் தங்க தகுதியான இல்லம் என உள்ளத்தின் உண்மையை உரைக்கும்
உத்தம குருநாதர் மஹ்தூமி அவர்கள் புகழ் வாழ்க! வாழ்க!! நீடூழி!!!

இறையை அறிந்தவனே பூரண மனிதன். மேலும் மேலும் அறிந்து அதனை விட்டு அகலாதிருப்பவனே சம்பூர்ண
மனிதன் என அரிய மொழி உரைத்த மகத்தான குருநாதர் மஹ்தூமி அவர்கள் புகழ் வாழ்க! வாழ்க!! நீடூழி!!!

எந்த நேரத்திலும் இறையை நினையுங்கள்! அதன் அடியார்களையும் மஹான்களையும் நினைவில் வையுங்கள்!!


நீஙக
் ள் அறியாத நேரத்தில் நன்மை உருவாகும் என மகான்களின் மகத்துவம்கூறும் குருநாதர் மஹ்தூமி அவர்கள்
புகழ் வாழ்க! வாழ்க!! நீடூழி!!!

1
நமக்கு கவலையும் வேண்டாம்; மகிழ்ச்சியும் வேண்டாம்; இறைவனே நமக்கு வேண்டும் எனபேரறிவு போதிக்கும்
பேரின்ப குருநாதர் மஹ்தூமி அவர்கள் புகழ் வாழ்க! வாழ்க!! நீடூழி!!!

இறையின் இருப்பிடம் அருள் கொண்ட உள்ளம்; சாத்தானின் இருப்பிடம் இருள் கொண்ட உள்ளம்; என உள்ளத்தின்
உண்மையை உரைக்கும் ஞான குருநாதர் மஹ்தூமி அவர்கள் புகழ் வாழ்க! வாழ்க!! நீடூழி!!!

தனக்குள்ளே தானே வெளியாகிக் கொண்டிருப்பதையே இறைவனின் நாட்டம் என்கிறோம் என இறை


நாட்டத்திற்குப் புதுமை விளக்கம் தந்த பூலோக புதுயுக குருநாதர் மஹ்தூமி அவர்கள் புகழ் வாழ்க! வாழ்க!!
நீடூழி!!!

B.A, B.Sc, M.Sc. என எத்தனையோ படித்தவர்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் இறையைப் பற்றி அறியாமல்
இருந்தால், அந்த படிப்புகளால் எந்தப் பயனும் இல்லை என உண்மை ஞானகல்வி புகட்டும் உயர்ஞானி
குருநாதர் மஹ்தூமி அவர்கள் புகழ் வாழ்க! வாழ்க!! நீடூழி!!!

தாய் தந்தையர் வயதாகும் போது கோபம் வருவது இயற்கை. நாம் அதற்கு ஏற்றார் போல் நடந்துகொள்ள
வேண்டும்; என பெற்றோரின் மாண்பை உணர்தத் ிய சரணாலய நாயகர் குருநாதர் மஹ்தூமி அவர்கள் புகழ் வாழ்க!
வாழ்க!! நீடூழி!!!

கவலையும் சந்தோசமும் அற்றவர்களாய் – நிம்மதியாய் வாழ்தல் ஞானம்பெற்ற ஞானிகளுக்கு உத்தமம் ஆகும்; என


ஞானியின் தன்மையை உணர்த்திக் காட்டும் குருநாதர் மஹ்தூமி புகழ் வாழ்க! வாழ்க!! நீடூழி!!!

மனிதன் மனிதனாக வாழ முடியாமல், ஆசைகளுக்கு அடிமைப் படும்போது மனிதன் கடுந்தொல்லை அடைகிறான்
- ஆசையை அழிக்கச்சொன்ன குருநாதர் தவநெறிக்கோட்ட அரசர் மஹ்தூமி புகழ் வாழ்க! வாழ்க!! நீடூழி!!!

மனிதனை இறை சோதிக்கிறது என்கிறோம்; அது சோதனையல்ல - அது நோய் தீர்க்கும் மருந்து;
என சோதனையின் சுகத்தை உணர்த்தும் உத்தம குருநாதர் மஹ்தூமி புகழ் வாழ்க! வாழ்க!! நீடூழி!!!

நாம் முயற்சிக்க வேண்டியது நமது கடமை; அது அப்படியே நடக்க வேண்டும் எனக் கருதுவது நமது மடமை;
நடப்பதும், நடக்காதிருப்பதும் - இறையின் உரிமை - என வாழ்ககை ் யின் தத்துவத்தை
வழங்கிய சரணாலய வள்ளல் குருநாதர் மஹ்தூமி அவர்கள் புகழ் வாழ்க! வாழ்க!! நீடூழி!!!

எந்தக் காரியத்திலும் முயற்சி உடையவர்கள் - இகழ்ச்சி அடைய மாட்டார்கள்; மனிதனை வெற்றியின் சிகரத்தில்
ஏற்றுவது அயராத முயற்சியே ஆகும் - என மனித முயற்சியின் மேன்மை உரைத்த சரணாலய உயர்மகான் குருநாதர்
மஹ்தூமி அவர்கள் புகழ் வாழ்க! வாழ்க!! நீடூழி!!!

எப்பேர்பப் ட்ட பெரும் கஷ்டத்திலும், துன்பத்திலும் - மனம் எனும் உயிர்நாடி சந்தோஷமாக


இருக்கவேண்டும்; தைரியமாக இருக்கவேண்டும்; எந்தவொரு கஷ்டநிலையிலும் சாதிக்கும் திறமை இருக்க
வேண்டும் - என மனோசக்தியின் மகத்துவம் கூறும் சரணாலய மகான் குருநாதர் மஹ்தூமி அவர்கள் புகழ் வாழ்க!
வாழ்க!! நீடூழி!!!

எவர் மற்றவரைக் கெடுக்க முயல்வாரோ, அவர் தன்னில் தானே கெட்டுப்போவார்; தன்வினையே தன்னைச்சுடும் -
என எச்சரிக்கை செய்யும் ஏந்தலர் எங்கள் குருநாதர் மஹ்தூமி அவர்கள் புகழ் வாழ்க! வாழ்க!! நீடூழி!!!

எந்தப் பொருளையும் இறை விரும்பியவர்களுக்கே அருளும்; அதே நேரத்தில் நமது முயற்சியும்


திருப்திகரமானதாகவும், பொருத்தமானதாகவும் அமைந்திருத்தல் வேண்டும் - என முயற்சியின்
அருளையும் பயனையும் கூறிய நமது குருநாதர் மஹ்தூமி புகழ் வாழ்க! வாழ்க!! நீடூழி!!!

நாம் எப்படி மற்றவர்களுடன் நடந்துகொள்கிறோமோ, அப்படியேதான் மற்றவர்களும் நம்மிடம் நடந்துகொள்வார்கள்


– என மனிதனை மனிதனாக வாழச்சொல்லும் சரணாலய மகான் குருநாதர் மஹ்தூமி அவர்கள் புகழ் வாழ்க!
வாழ்க!! நீடூழி!!!

2
3

You might also like