You are on page 1of 15

ஆம்பல்

ஜோ. செல்வ அந்தோணி சந்தோஷ்

முன்னேற்றம் என்பது முழுமையடையும் -பெண்கள் முன்னேறினால்! பெண் நினைத்தால் நீதியும்

கிடைக்கும் அநீதியும் ஒழியும் -ஓர் காலத்தில் சட்டங்கள் செய்வதற்கு பெண்களில் விழிப்புணர்வூட்ட

போராடிய மகாக்கவியும் விகடக்கவியும் இன்று பூரிப்படைவார்கள் ஏன் என்றால் பெண்கள் ஞானக்

கல்வியில் சிறப்புற்று ஆட்சியிலும் தொழிலிலும் இலக்கியத்திலும் அறிவியலிலும் சிறப்புற்று

விளங்குவதனால் !

நூற்றாண்டுகளாக போராடிக்கொண்டிருந்த மங்கையர்கள் சென்ற நூற்றாண்டில் தான் மலர

ஆரம்பித்தனர் -அது முடிவல்ல -மங்கை வீரர்களின் மகிழ்ச்சியை வெளிக்கொணர வைக்கும் ஆரம்ப

மலர்ச்சி -மழலையின் மங்கையாக இருந்தவள் வான் மழைக்கு மங்கையாகப் போகும் அக்காலம் எப்ப

வருமோ அப்பொழுது தான் பாரதியின் புதுமைப் பெண் மலருவாள் இல்லத்தையும் உள்ளத்தையும்

ஆட்சி செய்தவள் இதோ தன் தரணியை ஆளப் போகிறாள்!

வெற்றி என்பது அது ஆம்பல் என்னும் சொல்லின் அர்த்தங்களில் அடங்கியுள்ளது!

ஆம்பல் என்றால் தாமரை என்பார்கள் !

பெண்மையின் சிறப்பே ஆம்பலாக இருப்பதே !

ஆம்பல் என்றால் மூங்கில் என்பார்கள் !

ஓரு உயிரிக்கு முங்கிலாகவும் களரி

இல்லாமல் வளர்ப்பதில் யானை குணம் கொண்ட

இந்தப் பேரொலியே ஆம்பல் !


ஆம்பலின் மறு பெயர் தான் பெண்மை !

நீரின் சிறப்பாக இருப்பதோ மழையாம் !

அந்நீரின்றி அமையாதாம் இவ்வுலகு.

அந்நீரைக் கொண்டு உயிரியை

உருவாக்கிய பெண் எண்ணியதால் … அந்த

வானின்று எண்ணியதால் உண்டானதோ இப்பூமி !

மேல் உலகு அருள் உடையார்க்கு !

பூ உலகு பொருள் உடையாருக்கு !

ஆனால், பெண் உலகு ஆம்பல் என்னும்

பேரொலியால் அமைந்த பூ மகனுக்கே !

சூரியனையே மயக்கும் மல்லிகையே--

விவாசாய கதிர்களை மலர வைக்க --

உந்தன் மதுரம் கொண்ட மந்தகாசத்தினால்--

மதுகைக் கொள்வாயோ ?

மதிக்குச் சிந்திச் சொல்லும் தாரகையே !

அம்மதியை விழிக்கச் செய்வாயோ …

காணாத எதிரிகளை கண்டு கொள்ள வல்லமை தருவாயோ !

ஏன் என்றால் வெற்றி என்னும் ஆம்பல் வெளியே இருப்பது அல்ல -அது உனக்குள் இருப்பது!

சரித்திரம் படைக்கப்படும்- நீ உன் வரலாற்றை

தெரிந்திருக்கும் போது ; அது மேலும் விவரிக்கப்படும் பிறர் உன் சரித்திரத்தை

அறிந்திருக்கும் போது; செய்யும் தொழிலில் முதன்மை-: அதுவே சாதனையின் உண்மையான

உடைமை; இதையறிந்தவள் என்றும் இருப்பாள் முன்னால்; ;வியர்வையால் உருகுபவளே


உண்மையான மனிதப் பெண்! வலிகளை வெறுப்பவன் -வெற்றியாளன் அல்ல! வலிகளோடு

வாழ்பவன் வெற்றியாளன்! உயர்ந்தாலும் ஏசும் ; தாழ்ந்தாலும் ஏசும் , இவ்வுலகம்! அதை நீ

கண்டு

கொள்ளாதே !பின்னாளில் அவ்வுலகம் உன்னைக் கொண்டாடும்! உன்னை புரிந்து கொள்ள-

யாருமில்லை; என்ற ஏக்கம் வந்தாலே-- நீ வெற்றி பெற

தகுதியானவள்! நீ வலிகளை தாங்கினால் - வெற்றி வரும் உன் பின்னால், பின் புகழ்

பெறுவாய் இவ்வுலகின் முன்னால்! மன உறுதி, மன அமைதியால் இவ்வுலகை வென்று விட

பிறந்துள்ளாய் நீ! வழிகாட்டி ஏன் வேண்டும் உனக்கு , இவ்வுலகை வழிகாட்ட பிறந்துள்ளதே

நீதானம்மா! என்னால் முடியாது என்பது வெட்டியாக இருப்பது ;என்னால் முடியும் என்பது

சாதிப்பது; என்னால் முடிகின்றது என்பதே தற்போது சாதிக்கின்றது!

வாழ்க்கை என்னும் கையை- நீதான் பாதுகாக்க வேண்டும்; வேறு யாரும் உன் கையை

தூக்கி விடமாட்டார்கள், சீக்கிரமாய்! எனவே, கைரேகையை நம்பாதே !உன் கையை நம்பு

!உன் மூளையின் படி செயல்படு! உன் இதயத்தின்படி வாழ்! தோல்வி என்பது தாற்காலிகத்

தடையல்ல! அது உனது வருங்கால சாதனை! வெற்றி என்பது தற்காலிகாப் புத்திரல்ல! அது

தற்காலிகச் சாதனை! ஒரு தடவை வெல்வது எதுவும் சரித்திரம் ஆவதில்லை! வெற்றிப்

பெற்றுக் கொண்டே இருக்கும் போது மட்டுமே அது சரித்திரம் ஆகும்!! கடவுளை அடைவதே

உன் வாழ்க்கையின் இலக்கு- அதனால் கெட்டதை நீ விலக்கு- நல்லதை நீ பெருக்கு -உன்

தொழிலில் முதன்மையானவளாய் இருந்தால் அடைவாய் அக்கடவுளை! மனத் தூய்மை,

வெற்றியின் போதும், வெற்றிக்குப் பிறகும் சாந்தம்- இடைவிடாத பெரும் முயற்சி ,இறை

நம்பிக்கை, அன்பு இவைகள் இருப்பவள் மட்டுமே இவ்வுலகில் புகழுடம்பாக வாழ முடியும்!

மேல் உலகு- பொதுநலவாதிக்கு! கீழ் உலகு- சுயநலவாதிக்கு; ஆனால் இப்பூவுலகு

இருவருக்குமே இல்லை! அதனால் பயம் கொள்ளாதே எதற்கும்!!


வீறு கொண்ட தோழியாய்- தோல்வியை தோற்க்கடிக்க பிறந்த சக்தி நீயம்மா !ஆண்டவனை

பார்த்ததில்லை போர்க்களம் கொண்ட உன் பேறு காலத்தைக் காணும் போது வேறு

ஆண்டவன் தேவையில்லை !

பட்ட கடன் ஏராளம்- உன் படைப்பிற்கு நான் பட்ட கடன் ஏராளம் மக்களைப் படைக்கும்

மகளீரினால் மாக்களும் சாந்திக் கொள்ளும்

கொடுமையை எதிர்த்த மங்கையரோ - இன்னும் வீறு கனா பலக் கொள்வாயோ உன் கனா

யாவும் கண்குளிரக் காண்பாயோ !

எவ்வளவு தடைகள் வந்தாலும் வெற்றி பெரும் இம்மங்கைகளால் நாட்டுக்குப் பெருமை

சேர்வது மட்டுமல்லாமல் ஊர் வளம் பெற முன்னோடியாக வலம் வரவும் முடிகின்றது !

அதை வியப்பதற்கு காரணம் இல்லை; ஏன் என்றால் பெண்களே ஐந்நூற் படையாகவும் அகம்

மகிழ்ந்து புறம் சிறக்க வாழும் மேதைகளாக இருப்பதை இக்கணம் காண முடிகின்றது

இலக்கியத்தில் !

1975ல் மங்கையர் ஆண்டாக இருந்த காலம் --இல்லை இல்லை அது ஆம்பலின் ஆரம்பக்

காலம்! இம்முறை ஆம்பல் குறிஞ்சியானதாலோ கானல் நீர் போல் ஆயிற்று மங்கைக்கான

சுதந்திரம் !

வானமும் பூமியும் தன் ஆசை துறந்து தன் மண்ணின் மக்களின் ஆசைகளை

நிறைவேற்றவது போல கவிதையும் கவிஞனுக்கு ஊக்கமூட்டுகிறது !


கவிஞனின் எழுத்த்தே அவனது காதலி !அக்காதலியின் காதலன் எழுத்தின் எண்ணம்

கலந்தவன்! இசையின் தாயே சப்தங்கள்! அந்த சப்தங்கள்- ஓர் எண்ண அலைகளின்

அமைப்பே; அந்த அமைப்பு கவிதை! அக்கவிதை பிறக்கும் இடம் தாயின் கருவறை !

அக்கருப் பிளவால் பிளவுண்ட நேசம்- கூடிக் கூக்குரல் இடாமல் தன் பாசப் பிளைப்பால் ஆம்பல்

கொண்டது மங்கையரின் இதயம் ! உச்சம் தொட்டது மக்களாக இருந்தாலும் மாக்களாக

இருந்தாலும் படைப்பது தாயின் எண்ணமே ! தாய் நினைத்தால் கல்வி ஞானம் கொண்டு

சமுதாய புரட்சி செய்த வரலாறு ஏராளம்! ஹீரோஸீமாவை அழிவுக்குள்ளாக்கிய அறிவியலா

ஜப்பானை கண்டுபிடிப்புகளின் ஹீரோவாக்கியது -காரணம் எண்ணங்களின் வடிவமைப்பே;

அந்த எண்ணங்களை குணப்படுத்த தாய்-நம் பூமித் தாய் நினைத்தால் மட்டுமே முடியும் !

கண்களுக்கு இமைகள் போன்றவை தாய் இருவரும் உன் மீது அறியாமை என்னும் தூசி

படும்போதெல்லாம் இமையாய் தன் அறிவொளியாய் நின்று காக்கும் !

காயங்களை கனியாக்கி தன் சேயின் காயங்களை தனதாக்கும் தாயுள்ளம் அக்கடவுளுக்கும்

இருக்குமா? - என்பது சந்தேகமே! பூவுள்ளம் கொண்டவள்- வீறு கொண்டு செல்கையில்

அரக்கனும் அழிவான் எதிரியின் வாளால் அன்று! மாறாக பெண்ணின் சாபத்தால் !

போராடி போராடி பெற்றெடுத்த தாய் நினைத்தால் முறையான முயற்ச்சி அளித்து மண் மனிதனையும்

மாமனிதனாக்க முடிகின்றது !

தென்றல் காற்றாய் இருக்கும் அன்னை அரவணைத்தால் பறவையும் கோபுரத்தை சாய்க்கும் !

தியாகத்தின் சக்தியாய் இருந்தவள் தன் தாகம் அடக்கி தன் பாவலரின் தாகம் அடைப்பாள்

அனிமேஷன் தாயால் எளிதில் செய்ய முடியும் ஏன் என்றால் கன்னிக்கு அனிமேஷன் செய்தவள்

கணினிக்கு அனிமேஷன் செய்வதா கடினம்.

ஓர் குழந்தையை படித்தவனாக்க வேண்டும் என்பதை விட நன்கு

சிந்திப்பவனாக வளர்க்க வேண்டும் ...நம் மண்ணின் தாய்மார்கள் !


தியாகத்திற்கு உயிரூட்டச் சொன்னால்- அது

தாயாலே மட்டுமே சாத்தியம் !

ஓர் தாயின் முத்தம் சான்றோனாகவும் ,

ஓர் காதலியின் முத்தம் மணிச் சத்தாகவும் அமையும் எனில் அந்த ஆடவர் இப் பூவுலகை ஆளச்

சிறந்தவர் .

என்னை சுற்றும் பிரபஞ்சத்தை என் தாயின் மூலம் காண்கிறேன்- என் இன்பத்தில் பங்கு கொள்வதை

விட துன்பத்தில் பங்கு கொண்ட கதைகளோ ஏராளம்! என்னைப் பாதுகாக்கும் அரணாய்

திகழ்வதோடு என் உணர்ச்சிகளை புரிந்தவளாய் என் தேவைகளை அறிந்தவளாய் என் அறிவிற்கு

காரணமாய் இருக்கிறாள்.

நான் மழையில் நனைந்தால் என் குடையாக மாறி என்னைக் காக்கிறாள் -நான் நோயுற்றும் போது என்

மருத்துவராக ஆகிறாள் என் விடியலைத் தேடினேன் ஆகயாத் தேவதையாய் விடியலைத் தருகிறாள்

என் வாழ்க்கையின் சிறந்த தோழியாக இருக்கிறாள் !

ஆம்பல் கொண்ட பேரொலியாகவும் -பூ மனம் கொண்ட மனைவியாகவும் நீர் போன்று தியாகவுள்ளம்

கொண்ட தாயாகவும் இருப்பதால் தான் தாய் மொழி, தாய் நாடு எனக் கூறுகிறோம் .

ஹுமனாய்டுக்கு ப்ரோக்ராம்மிங் செய்வது போல தான் பெண்களின் மனமும் - அது புரிபர்களுக்கு

மட்டுமே புரியும் கூகிளின் கோகுலம் பெயர் கூட பெண்ணை மையமாக வைத்து மதர்போர்டு என

தான் கூறுகிறோம்.

இலுமினாட்டி உலகைக் கையாள்வதை விட மங்கையர் உலகைக் கையாண்டால் இருளும்

வெளிச்சமாகும்; சாதி மத இன வேறுபாடு இல்லாமல் நதி போல் அந்த அகிம்சை நதி கடலில்

சேருவது போல் ஆரோக்கியமான உலகம் ஒரு ஒன்றுபட்ட உலகமாக அமையும்.

தாய் சொல் கேட்டால் சமூகம் நல்ல விடியல் கொண்டு செல்லும்; மாறாக தாய் சொல்

கேளாதவர்களின் சூழலை தன் மதியாலும் கூட காப்பாற்ற முடியாது.


தலை சிறந்த ஆணின் வெற்றிக்குப் பெண் துணை நிற்பது -நம் நாட்டை வல்லரசாக்கும் என்றால்

ஆண் தவணை முறையிலாவது பெண்ணுக்குத் துணையாக நின்றால் இப்பூமி பூரிப்படையும் பெண்

முன்னேறுவதைக் கண்டு !

வெற்றி

ஜோ.செல்வ அந்தோணி சந்தோஷ்

வெற்றி என்பது வெளியே இருப்பதல்ல;


அது உனக்குள் இருப்பது !
சரித்திரம் படைக்கப்படும்- நீ
உன் வரலாற்றை தெரிந்திருக்கும்போது;

அது மேலும் விவரிக்கப்படும்- பிறர்


உன் சரித்திரத்தை அறிந்திருக்கும் போது;
செய்யும் தொழிலில் முதன்மை- அதுவே
சாதனையின் உண்மையான உடைமை !

இதையறிந்தவன் என்றும்
இருப்பான் முன்னால்-
அறியாதவன் என்றும் இருப்பான்
பின்னால் !

அறிந்தும் செயல்படுத்தாதவன்
இவ்வுலகில்….
என்றும் இருப்பான்-
வெறும் மண்ணாய்….

வியர்வையை வெறுப்பவன் மனிதனல்ல;


வியர்வையில் உருகுபவனே
மனிதன்.

வலிகளை வெறுப்பவன்
வெற்றியாளன் அல்ல….
வலிகளோடு வாழ்பவன்
வெற்றியாளன் - வலிகளை
வெல்பவனே சாதனையாளன் !

உயர்ந்தாலும் ஏச்சும்-
தாழ்ந்தாலும் ஏச்சும்-
இவ்வுலகம்: அதை
நீ கண்டு கொள்ளாதே !

பின்னாளில் அவ்வுலகம் உன்னை


கொண்டாடும் !உன்னை புரிந்துகொள்ள
யாருமில்லை என்ற ஏக்கம்
வந்தாலே நீ வெற்றி பெற
தகுதியானவன் !

நீ வலிகளை தாங்கினால்
வெற்றி வரும் உன் பின்னால்!
பின் , புகழ் பெறுவாய்
இவ்வுலகின் முன்னால் !

அப்பொழுது நீ
ஆணவத்தால் திண்டாடக்
கூடாது !
மன உறுதி, மன அமைதியால்
இவ்வுலகை வென்று விட
பிறந்துளீளாய் நீ !

வழிகாட்டி ஏன் வேண்டும்


உனக்கு ? இவ்வுலகை
வழிகாட்ட பிறந்துள்ளதே
நீதானப்பா !

என்னால் முடியாது
என்பது
வெட்டியாக இருப்பது !

என்னால் முடியும் என்பது


சாதிப்பது ! என்னால் முடிகின்றது
என்பதே தற்போது சாதிக்கின்றது!

வாழ்க்கை என்னும் கையை


நீ தான் பாதுகாக்க வேண்டும் !
வேறு யாரும் உன் கையை
தூக்கிவிட மாட்டார்கள் சீக்கிரமாய் !
எனவே,
கைரேகையை நம்பாதே !
உன் கையை நம்பு !

உன் மூளையின் படி


செயல்படு - உன்
இதயத்தின் படி வாழ் !

தோல்வி என்பது தற்காலிகத் தடையல்ல;


அது உனது வருங்கால சாதனை !

வெற்றி என்பது தற்காலிகப் புதிரல்ல ;


அது தற்காலிகச் சாதனை !

ஒரு தடவை வெல்வது எதுவும்


சரித்திரம் ஆவதில்லை - வெற்றி
பெற்றுக் கொண்டே இருக்கும்போது
மட்டுமே அது சரித்திரம் ஆகும் !

கடவுளை அடைவதே உன்


வாழ்க்கையின் இலக்கு !
அதனால்,
கெட்டதை நீ விலக்கு !
நல்லதை நீ பெருக்கு !

உன் தொழில் முதன்மையானவாய்


இருந்தால் அடைவாய் அக்கடவுளை !
மனத் தூய்மை , வெற்றியின் போதும்,
வெற்றிக்குப் பிறகும் சாந்தம்,
இடைவிடாத பெரும் முயற்சி,
இறை நம்பிக்கை, அன்பு இவைகள்
இருப்பவன் மட்டுமே இவ்வுலகில்
புகழுடம்பாக வாழ முடியும் !

மேலுலகு பொது நலவாதிக்கு !


கீழுலகு சுய நல வாலிக்கு !
ஆனால்,
இப்பூவுலகு இருவருக்குமே இல்லை !

அதனால், பயம் கொள்ளாதே எதற்கும் !

இது உண்மை இல்லை


என்று யாராவது நிரூபித்து
வாழ்ந்து வெற்றி பெற்றால்
இனி வெற்றியைப் பற்றி
கவிதையே எழுத மாட்டேன் !
இல்லை எனில்,
யாரும் என்னை
விமர்சிக்கக் கூடாது !

எது தீவு
இன்றோ மனம் சேராமல் இருக்க
சவுக்களி இன்றி சவி இன்றி சுய நலமாக நிறுவப்பட்ட படைப்பு
சுய நலத்தினால் தன் சுய பலத்தை
இழந்து சுய சார்பை நிலைநாட்ட கன்னியை மதிக்காமல் கண்ணை மிதிக்கும் கணினியை
மதிப்பதாலோ... இல்லை சவனம் வேண்டும் என்ற சலனம் இருப்பதாலோ இன்று
அனைவரும் இருந்தும் உயிரியலுக்காக சமூகவியலை இழந்து 'சமூக இடைவெளி என்று
கூறும் மனிதா!

ஆறடி நிலமே அனைவருக்கும் உரித்தான சொத்தோ !


கறை கண்டால் சறை வந்து 'சா'
எனும் காதலை … அகத்தின் காதலை தேடி அலையும் மனதை
தென்னை மரம் போன்ற ஆணை
ஆம்பல் போன்ற பெண்ணே அணைக்கும் பாலைவனச்
சோலை போன்ற
பொன்னம்மா !

தாமம் பரிமாறி சாமம் கழித்து தாமன் வந்து தாய் மாமன் வந்தும்


தாய்மை போற்றாத தாய்மொழி களைகள்
இருப்பதே தீவு !

அழிகருப்பம் செய்தே அழித்து விடலாம் ஆம்பலை எனக் காலம் காலமாக இருந்து வந்த
சமூகம்…
அழுத்தம் திருத்தமாக புரிந்து கொண்டதோ இவர்கள் அழுப்பு செய்ய பிறந்தவர்கள்
இல்லை… இவ்வண்டத்தின் இதிகாசத்தை திருத்தி … திருத்தமாக எழுத பிறந்தவர்கள்
என்று.. இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் தான்!
ஒரு மங்கையாக கடூரம் அனுபவிக்கும் யுவதிகள் மதுகை கொண்டு மந்தகாசம்
என்னும் அற்புத சக்தி பெறுவதால் என்னவோ மந்தமான பொருளாதாரம் உயருகிறது…
ஆம்… பெண்ணின் மதுகை அவள் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் அனைத்து
சமூகத்திற்கும் ஏற்றதாகிறது!

மந்தமாக இருக்கும் குருதி இவளது குருதி என்று கூக்குரல் போட்டு சிரித்தவர்களுக்கு


மந்தணம் கூறும் அளவிற்கு ஒரு மருத்துவராக, விஞ்ஞானியாக இலக்கியவாதியாக,
படைப்பாளியாக, அரசியல்வாதியாக, மேலும் தொழிலில் சாதிக்கும் வல்லுனராக இருக்கும்
'அவளை' பாதுகாக்க வேண்டுமே தவிர இச்சைக்காக கொச்சையான செயல் செய்வோர்கள்
… ஒரு முறையாவது " Men are from Mars and Women are from Venus by John Gray"
படித்தால் தான் என்னவோ ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள சமூகப்
பிணைப்பு , அதனால் சமூக சீரமைப்பின் சாத்தியக்கூறுகளை புரிந்து நல்வழியில்
செல்வார்கள்.

இவ்வாறே சென்றால் ஆணின் பிரதிகாந்தி ஆணை பிரதிகாதனம் செய்யும் நிலைக்கு


இச்சமூகம் தள்ளப்பட்டாலும் வியப்பதற்கு ஒன்றும் இல்லை.

ஆணின் கனவிற்கு துணைநிற்க தன்னை தியாகம் செய்து அடிபட்டு மெழுகாய்


இருந்தவள்… இந்நூற்றாண்டில் தன்னை மெருகேற்றி ஆணின் கனவையும் நிறைவேற்றி,
தன் கனவையும்
நிறைவேற்றும் ஒரு ஆம்பலாக வலம் வரும் 'அவள்' … அன்னப் பறவை போல்
இவ்வுலகிற்கு பிரதிபோதம் செய்வது இந்த மங்கையின் பிரதிபைக்கு ஓர் சான்று.
கைபேசி நண்பர்களைக் கொண்டு அடக்கம் இன்றி நினைத்ததை செய்யலாம் என
என்னும் சமூகம் சீரமைக்கப்பட வேண்டும் எனில்
பெண்ணின் அகம் குளிரப்பட வேண்டும்.
பரதீசி யில் கதிரவன் உதிக்க வேண்டிய அவசியம் இல்லை…
மாறாக… கிழக்கில் உதிற்பதே சரியாக உதித்தால் ஆம்பல் மலரும்… நாடும் வளரும்!

தோற்றமே ஏ(மா)ற்றமாய் !
ஜோ. செல்வ அந்தோணி சந்தோஷ்.

ஆகாரம் உருவாக்குபவரோ உறைவிடம் இன்றியிருக்க-


இணைகரம் இத்யாதி இணைகோடு
தேடியிருக்க-
ஆங்கிலம் இன்றி தவிக்கும் மூத்தோரின்
நடுவில்-
ஆன்லைனில் ஆர்டர் செய்யும் இளங்கன்றின் அத்தியாயம்-
கைக்குள்ளேயே முடியுமோ ;
அல்லது கைப்பக்குவம் காணுமோ ?
என் எண்ண அலைகள் ஏராளம்;
அவை வண்ண மைதாவில் இருப்பதே விவகாரம்;
எழுபதின் எள்குதலே இருபதைப் பற்றியே;

ஏகாலி போல இருக்க நினைக்கும் மனமோ- கோமாளி போல் ஆவதோ


மைதாவினால்; போராளி போல் ஆவதோ- கோதுமையினால்;
மெய் ஆவதும் ஆகாரத்தினாலே;
அழிவதும் ஆகாரத்தினாலே;
இக்கால உணவு வலுவானதா?..
இல்லை.. குழப்பமானதா?...
வலியன அழிவதும்;
அழகான விடம் ஆட்கொள்வதும்-
காலத்தின் கட்டாயமா … இல்லை
ஞானத்தின் மௌனமா?
சிறார்களின் தவறுகள் -எண்ணங்களால்
வருகிறதா- இல்லை அவை ஏந்தும்
வண்ண உணவுகளால் வருகிறதா?
உணவு ருசிப்பதற்கா? இல்லை
எச்சரிப்பதற்கா? உணவே மருந்து
என்பது அலைபேசி செய்திகளின்
நோக்கமா? அல்லது மருந்தே உணவு
என்பது அலைபேசி செயலிகளின்
ஏக்கமா?

ஆவியில் வேகவைத்த உணவோ


நம் ஆவியை பரிசுத்த ஆவியாக்கும்;
ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவோ
நம் பராமரிப்பை பரிதாபமாக்கும்;
சாதி, மதம் இன்றி கிடைக்கும் சாதமோ
சக்தியை கொடுப்பதற்கோ! இல்லை
சக்தியை பறிப்பதற்கோ?
இரவில் மைதா எமனையும் கொல்லும்;
என்னையும் கொல்லும்! இதை அறிந்ததோ நேற்று; அறியாமையின்
கண் விழித்ததோ இன்று; புரோட்டா-
இது வரை என் நாயகன்;
இனி மேல் என் தீயவன்!
இது எனக்கு நிகழ்ந்த சோதனையா?
இல்லை இல்லை இது எனக்கு
இகழந்த இடரை நீக்கும் சத்திய சோதனை!
இதனால் ஏட்டைக் கொண்டு
என் ஏடனை வெல்வேன்!
ஆகாரத்தில் ஏன் வேண்டும் ஏண்?
சேதாரத்தில் நான் விழாமல் இருக்க;
ஏதும் ஏது கண்டால் சுற்றம் நிலைப்பதில்லை;
யாயும் நேயும் இரண்டறக் கலந்தது போல்;
சேயும் அதன் நேசமும் ஆகாரத்தின்-
மேல் அமைந்ததே!
பச்சைக் காயின் செஞ்சம் போல் இல்லாமல்-
எவ்வித புரோட்டடாவும் கொஞ்சம் உறுதியைத்
தராதே?
எண்ணெய் வகை உணவு என்னை
என்ன செய்யும் என எண்ணும் மக்களே
இங்கு அதிகம்;
மக்கள் மாக்களை உண்டதால் மக்கள்
மாக்களாகிவிட்டனர்!!!
செங்காயின் பலனோ ஏராளம்!
அது செதுக்குவதோ நம்மை; ஆனால்- நாம் அதை சிதைப்பதையே
பொருளாய்
கொண்டுள்ளோம்;
உணவில் தோரணை காட்டாமல் தோரணியோடு இருந்தால்
தரணியை ஆளலாம்;
கேணியில் தண்ண ீர் இருந்த வரை
தரணியில் தொந்தரவு இன்றி இருந்தோம்!
சிலரின் வேட்கையாலும் பலரின்
வேடிக்கையாலும் வான் சிறப்பை இழந்தோம்!
உணவின் முக்கியத்துவம் அறிந்து
எந்த உணவை சுவைத்தால்
அந்த நாட்டின் விதைகள் கிளர்ந்தெழுமோ அந்த உணவே
உண்மையான அறுசுவை உணவு;
மற்றவை அனைத்தும் பொய்யானவை;
அகம் செழிப்புடன் இருக்க புறம் புரதச் சத்தை ஆட்கொள்ள வேண்டும்;
நம் அகக்கண்ணிற்கு அனைத்தும்
தெரியும்; அதனால் அகங்காரம்் பாவத்தை ஆகாரத்தில்
காட்ட வேண்டாம்;
ஏன் என்றால் அகம்பாவம் மிகப்பெரிய
பாவம்;
உணவின் அகராதியில் நாம் கண்ட மெய்யெழுத்து , நம் உயிர்மெய் எழுத்து
அனைத்தும் கோப்புகள் ஆகி விட்டனவோ? இல்லை சத்துக்கள் தர
உள்ளனவோ?
அதிகமாய் குருதியில் - மைதாவை அகலப்படுதினால் ; நம் புறம்-
நம் அகற்றின் அகதிகளாக
இருக்க நேரிடும்;
பூரி - உணவுகளில் வைட்டமின்
உண்டோ? மனதிற்கு அகப்படாமல்
இருந்தால் வான் சிறபபு நம்
வசப்பாமல் இருக்க இயலாது;
ஆகாரத்தில் அகலக்கால்
வைத்தாலாகாது;
அகவிலையில் ஆகாரம் -
ஏழைகளின் ஆதாரம்; அதுவே
நம் விவசாயிகளின் அவதாரம் !
ஏழைகளின் ஆதாரம்; அதுவே
நம் விவசாயிகளின் அவதாரம் !
அகவைக்கு ஏற்ற உணவு - முதுமைக்கு
உரிய மருந்து!

You might also like