You are on page 1of 2

அன்னை தெரசா

அகிலம் போற்றும் அன்னையே! ஆதரவற்றோரின் ஆதரவே!

அமைதியின் சின்னமே! அகதிகளின் அடைக்கலமே!

முதியோர்களின் பாதுகாவலரே! அல்பெனியாவின் ரோஜாவே!

மங்கையர்களின் திலகமே! மனவளர்ச்சி குன்றியவர்களின் ஆறுதலே!

சிறை கைதிகளுக்கு ஆலோசனை வழங்கியவரே!

ஏழையின் சிரிப்பில் இன்பம் கண்டீர்! ஆசிரியர் பணியோடு இறைபணியும்

ஆற்றினீர்!

அன்பின் அவதாரமாய்! அருளின் ஊற்றாய்! அன்னைகளின் அன்னையாய் ஜொலித்தீர் !

தொழுநோயாளர்க்கு மருத்துவமனையும்! ஆதரவற்றோருக்கு உணவகமும்!

முதியோர்க்கு கருணை இல்லமும்! இறந்தோர்க்கு சடங்குகளும் பல புரிந்தீர்!

இறை பணி...ஆசிரியர் பணி...பள்ளி முதல்வர் பணி...செவிலியர் பணி...மக்கள் பணி புரிந்த

தாயே!

உம் விருதுகள் பலவாகும்.

சமுக சேவைக்கு பத்மஸ்ரீ விருது! அமைதிக்கானா நோபல் பரிசு!

இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா பெற்ற அன்னையே!

‘புனிதர்’ பட்டம் பெற்று சரித்திரத்தில் அழியாது புகழ் பெற்றீர்!


உம் புகழ் மண்ணுலகம் உள்ளவரை போற்றி புகழும்!

வாழ்க அன்னையே! வளர்க உம் புகழ்!

நன்றி

You might also like