You are on page 1of 50

பசிவந்தால் பத்தும் பறந்து போம் என்பார்கள் என்ன அந்தப்பத்து ?

*
அந்தப்பத்து என்பது எவை ? என்பதற்கு பல்வேறு யூகங்கள் இன்றுவரை
இருக்கின்றன .ஆனால் திருமூலரோ அறிவே பத்து என்கிறார்.
அவருக்கு முன் இருந்த தொல்காப்பியர் முதல் அனைவரும் 2000
ஆண்டுகளாக அறிவு ஆறுதான் என்று கூறிக்கொண்டிருந்தபோது,

ஓரறிவதுவே உற்றறிவு அதுவே


இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடுசெவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே
(தொல்காப்பியம் மரபியல்)

இதற்குச் சான்றாகத் தொல்காப்பியம் கூறும் ஆறு அறிவுகளை இந்தப்


பாடல் விவரித்தபோதும் ....
பிறகு உதித்த திருமூலர் முதல் முதலாக அறிவு பத்து என்கிறார். என்ன
அறிவு அந்த பத்து அறிவு என அறிய
அவரின் அந்த அற்புத பாடலைப் பார்ப்போமா....

"உற்றறிவு ஐந்தும், உணர்ந்தறிவு ஆறு ஏழும்


சுற்றறிவு எட்டும் கலந்தறிவு ஒன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்றறியாது அழிகின்ற வாறே." திருமந்திரம் -741

ஐம்புலன்களில் ஐம்பொறிகள் பொருந்தி அறிந்து கொள்வது முதல் ஐந்து


வகை அறிவு ஆகும்.
இந்த அறிவை அவற்றினின்றும் வேறாக இருந்து மனத்தால் அறிந்து
கொள்வது ஆறாவது அறிவு ஆகும்.
பொருட்களின் நன்மை, தீமைகளை ஆராயும் அறிவு ஏழாவது அறிவு
ஆகும்.
கல்வியால் பெறுவது எட்டாவது அறிவு.
அனுபவத்தால் பெறுவது ஒன்பதாவது அறிவு.
இந்த ஒன்பது அறிவுக்கும் காரணம் ஆனவர் பரம்பொருள் என்று அறிந்து
கொள்வது பதிஞானம் என்னும் பத்தாவது அறிவு ஆகும்.
இத்தனை அறிவினையும் அறிந்து கொண்டு, அதற்கேற்ப நடக்காமல்
இருப்பதனாலேயே மக்கள் அழிகின்றனர்.இவ்வாறு திருமூலர் விவரிக்கிறார்

வணை
ீ என்று சொன்னதுமே எல்லோருக்கும் சரஸ்வதியின் நினைவுதான்
வரும்.
ஆனால், 32 வகையான வணைகளை
ீ 31 தெய்வங்கள் இசைப்பதாக
புராணங்கள் சொல்கின்றன. இதோ தெய்வங்களும் அவர்களுக்குரிய
வணையின்
ீ பெயர்களும்:
1. பிரம்மதேவனின் வணை
ீ - அண்டம்.
2. விஷ்ணு - பிண்டகம்.
3. ருத்திரர் - சராசுரம்.
4. கௌரி - ருத்ரிகை.
5. காளி - காந்தாரி.
6. லட்சுமி - சாரங்கி.
7. சரஸ்வதி - கச்சபி எனும் களாவதி.
8. இந்திரன் - சித்திரம்
9. குபேரன் - அதிசித்திரம்
10. வருணன் - கின்னரி.
11. வாயு - திக்குச்சிகை.யாழ்.
12. அக்கினி - கோழாவளி.
13. நமன் - அஸ்த கூர்மம்.
14. நிருதி - வராளி யாழ்.
15. ஆதிசேடன் - விபஞ்சகம்.
16. சந்திரன் - சரவணை

17. சூரியன் - நாவதம்.

18. வியாழன் - வல்லகி யாழ்
19. சுக்கிரன் - வாதினி.
20. நாரதர் - மகதி யாழ் ( பிருகதி )
21. தும்புரு களாவதி ( மகதி ).
22. விசுவாவசு - பிரகரதி.
23. புதன் - வித்யாவதி.
24. ரம்பை - ஏக வணை.

25. திலோத்தமை - நாராயணி.
26. மேனகை - வணி.
27. ஊர்வசி - லகுவாக்ஷி
28. ஜயந்தன் - சதுகம்.
29. ஆஹா, ஊஹூ தேவர்கள் - நிர்மதி
30. சித்திரசேனன் - தர்மவதி ( கச்சளா ).
31. அனுமன் - அனுமதம்.
32. வது வகை வணையை
ீ வாசிப்பவன், ராவணன் அவனது வணையின்

பெயர் - ராவணாசுரம்.

ஐஸ்வர்யங்களை வரவழைக்கும் மூலிகை தூபம்


தூபம் என்பது இறைவழிப்பாட்டின் போது இறைவனை போற்றி செய்து
இறைவனை சாந்தப்படுத்துவதர்காக காண்பிக்கப்படும் நறுமணப் புகையே
ஆகும்.பெரும்பாலும் சாம்பிராணி புகைபோடுதல் என்றால் அனைவருக்கும்
நன்கு தெரியும்.மரத்துண்டில் நெருப்பூட்டி சாம்பிராணியை அதனிலிட்டு
அதன் புகை காற்றில் கலந்து வருகையில் அதை சுவாசிக்கும் நமது
தேகத்தில் எத்தனையோ வித மாற்றங்கள் நிகழும்.தினமும் தூபமிட்டு
தங்கள் குடும்பத்தை சிறப்பாக வழிநடத்துங்கள்!
சந்தனத்தில் தூபமிட தெய்வ கடாட்சம் உண்டாம்.
சாம்பிராணியில் தூபமிட கண் திருஷ்டி பொறாமை நீங்கி முன்னேற்றம்
உண்டாகும்.
ஜவ்வாது தூபமிட திடீர் அதிர்ஷ்டம் கிட்டும்.
அகிலி தூபமிட குழந்தை பாக்கியம் உண்டாகும்.
துகிலி தூபமிட குழந்தைகளுக்கு நற்ஆயுள் அழகு ஆரோக்கியத்தினை
உண்டாகும்.
தசாங்கம் தூபமிட தரித்தர்யம் நீங்கி அஷ்ட ஐஸ்வர்யம் கிட்டும்.
துளசி தூபமிட காரியத்தடை திருமணத்தடை நீங்கி விரைவில் நடந்தேறும்.
தூதுவளை தூபமிட எந்நாளும் வட்டில்
ீ தெய்வங்கள் அருள் புரியும்.
வலம்புரிக்காய் தூபமிட பன்னிரண்டு வகையான பூத கணங்களும் நீங்கும்.
வெள்ளைகுங்கிலியம் தூபமிட துஷ்ட அவிகள் இருந்தவிடம் தெரியாது
நீங்கிவிடும்.
வெண்கடுகு தூபமிட பகைமை எதிர்ப்புகள் விலகும்.
நாய்கடுகு தூபமிட துரோகிககள் நம்மை கண்டு ஓடுவர்.
கோஷ்டம் தூபமிட நவக்கிரக கோளாறுகள்நீங்கும்.
மருதாணிவிதை தூபமிட சூனிய கோளாறுகளை நீக்கும்.
கரிசலாங்கன்னி தூபமிட மகான்கள்அருள்கிட்டும்.
வேப்பம்பட்டை தூபமிட ஏவலும் பீடையு நீங்கும்.
நன்னாரிவேர் தூபமிட இராஜவசியம் உண்டாக்கும்.
வெட்டிவேர் தூபமிட சகல காரியங்களும் சித்தியாகும் .
வேப்பஇலைதூள் தூபமிட சகலவித நோய் நிவாரணமாகும்.
மருதாணிஇலைதூள் தூபமிட இலட்சுமி கடாட்சம் உண்டாகும்.
அருகம்புல்தூள் தூபமிட சகல தோஷமும் நிவாரணமாகும்.
மேலே குறிப்பிட்டுருக்கும் அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து
கடைகளில் கிடைக்கும்.
தினமும் வடு,
ீ கடை, தொழிற்சாலை, பாடசாலை, அலுவலகம் போன்ற
இடங்களில் இறைவனை நினைத்து தூபமிட்டாலே அவ்விடத்தில்
அமைதியும் நற்சூழலும் அமைந்து அங்கு நடக்கும் நடைபெறும் செயல்கள்
யாவும் சிறப்பாக அமையப்பெறும்.

அஷ்டத்ரவ்யம் என்றால் என்ன? அதனால் உண்டாகும் பலன் என்ன?


அதனை எவ்வாறு தயாரிப்பது?
கணபதி ஹோமம் செய்யும்போது அதில் கொடுக்கப்படும் ஆஹுதிகளில்
ஒன்றுதான் இந்த அஷ்டத்ரவ்யம். அக்னியின் மூலமாக விநாயகப்
பெருமானுக்கு நாம் கொடுக்கும் அவிர்பாகம் என்று வைத்துக் கொள்ளலாம்.
கணபதி ஹோமத்திற்கு மிகவும் விசேஷமானது இந்த அஷ்டத்ரவ்யம்
என்கிறார்கள், சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள்.
மோதகம், அவல், பொரி, சத்துமாவு, கரும்புத்துண்டு, தேங்காய்பத்தை,
எள்ளு, வாழைப்பழம் ஆகியவையே இந்த எட்டு திரவியங்கள். இவற்றை
எவ்வாறு ஹோமம் செய்ய வேண்டும்? “மோதகா: அகண்டிதா: க்ராஸமிதா:
ப்ருதுக லாஜ ஸக்தவோ முஷ்டிபரிமிதா: இக்ஷுகண்டா: பர்வமிதா:
நாரிகேலம் அஷ்டதா கண்டிதம் திலா: சுலுகமாத்ரா: கதலீபலம் அல்பம்
சேத் அகண்டிதம் ப்ருது சேத்யதா ருசி கண்டிதம் அமாஷாம் ப்ருதக்
ப்ருதகா- ஹூதய: என்ற விதி, அஷ்டத்ரவ்யத்தினைக் கொண்டு எவ்வாறு
ஹோமம் செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறது. அதாவது மோதகம்
முழுவதாகவும் விழுங்கக் கூடிய அளவிலும், அவல், பொரி, சத்துமாவு
ஆகியவை ஒவ்வொன்றும் கைப்பிடி அளவிலும், கரும்புத்துண்டு கனு
அளவிலும், தேங்காய் எட்டுத்துண்டுகளாகவும், எள்ளு சுருக்கிய உள்ளங்கை
அளவிலும், வாழைப்பழம் சிறியதாக இருந்தால் முழுவதாகவும், பெரியதாக
இருந்தால் துண்டாகவும் எடுத்துக்கொண்டு இந்த திரவியங்களை தேன்,
பால், நெய் ஆகியவற்றுடன் கலந்து தனித்தனியாக ஹோமம் செய்ய
வேண்டும் என்று இந்த சாஸ்திர விதி தெளிவாக விளக்குகிறது. ஹோமம்
செய்த மிச்சத்தை ஒன்றாகக் கலந்து கணபதியின் பிரசாதமாக
ஸ்வகரிப்பதால்
ீ நம் உடல் ஆரோக்யம் பெறும்.
குருப்யோ நம‌:
ஸ்ரீ சர்யாநந்தர் "விழிக்கே அருளுண்டு"
ஸ்ரீ சர்யாநந்தர் "விழிக்கே அருளுண்டு" என்ற கட்டுரையின் சில பகுதிகளை
வானத்தில் முழுமதி காட்டுவதற்கு அம்பிகை தனது தாடங்கத்தை ஏன்
எறிந்தாள்? சாக்த தந்திரங்களின்படி சூரிய சந்திரர்களே அம்பிகையின்
குழைகள் : அவர்களே அவளது இரண்டு கண்கள்; அவர்களே அவளது இரு
ஸ்தனங்கள். இவ்வுண்மை,''தாடங்கயுகள ீபூத தபனோடுப மண்டலா" என
வரும் லலிதா ஸஹஸ்ரநாமாவினாலும், "சூரிய சந்த்ரௌ ஸ்தனௌ
தேவ்யா தாவேவ நயனே ஸ்ம்ருதெள!உபௌ தாடங்க யுகளம் இத்யேஷா
வைதிகீ ச்ருதி :” என்னும் தந்திர வாசகத்தாலும் வலியுறுத்தப்படுகிறது.
கதிரவன் வலது காதணி, மதியவன் இடது காதணி; ஆதலின் அம்பிகை
தனது இடது தாடங்கத்தைக் கழற்றி எறிந்தாள்!
இதைத் தத்துவ ரீதியாகவும் ஆராய்த்து பார்க்கலாம். சூரியன்
பிராணனையும்,சந்திரன் மனத்தையும் குறிக்கும் என்பது சாத்திர வழக்கு.
மாற்றமில்லாத சூரியனை மாற்றமற்ற பிராணனுடனும், தேய்ந்து வளரும்
மாற்றம் கொண்ட சந்திரனை மாறும் தன்மையுடைய மனத்துடனும் நமது
ஆன்றோர் இணைத்தார்கள் என்றறிக.
இதைப் பொருத்திப் பார்த்தால் தேவி தனது திருவுளக் குறிப்பினால் "இன்று
பௌர்ணமி திதியாகட்டும்" என்று எண்ணினாள் என்பதே பொருள் படுகிறது.
அபிராமி அந்தாதியில் 100 பாடல்கள் பாடபெற்றன. ஆனால் 79 பாடல்வரை
தேவி காத்திருந்ததேன்? தனது அன்பனது உள்ளத்தில் ஏற்பட்ட
வருத்தத்தை உடனே தீர்க்கலாகாதா? அஃதன்று; அப்பாடலின்
முழுவுருவத்தையும் கவனித்தால் உண்மை விளங்கும்.
"விழிக்கே அருளுண்ட பிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டெமக்கு அவ்வழி கிடக்கப் பழிக்கே சுழன்று
வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோ
டென்ன கூட்டினியே" என்பது பாடல்.
இதுவரை, தமது நிலையைத் தூற்றிக் கொண்டிருந்த கர்ம படர்களாகிய
பண்டிதர்களைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தார் பட்டர்.
“அவர்கள் எப்படிப் போனால் எனக்கென்ன; நான் சொல்வது வேதம் விதித்த
வழியே; அதைப் பின்பற்றி நடக்க அபிராமியின் விழியருளுண்டு'' என்ற
எண்ணம் வரவில்லை. ஆயின் அம்பிகையின் அருளாலேயே பட்டருக்குத்
தம்மைத் தூற்றிக் கொடிய நரகில் வழ்ந்து
ீ கொண்டிருந்த கயவர்களுடன்
தமக்கு எந்தத் தொடர்புமில்லை என்ற எண்ணம் பிறந்தது. அவர்களைப்
பற்றிச் சிந்தனை எள்ளளவும் அவர் உள்ளத்தில் இல்லை. தேவியே துணை
என்று மு‌ழுசரணாகதியாக (Total Surrender)அன்னயின் திருவடிகளைப்
பற்றினார். பிறகே வானில் முழுமதி பிறந்தது.
இப்பாடலேயன்றி 'அபிராமி அந்தாதி' யின் பல பாடல்கள் இனிய அரிய
பொருள்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. அவற்றுள்
சிலவற்றைப் பார்ப்போம்.
உதிக்கின்ற செங்கதிர் - பாடல் எண்:1
இதுவே முதற் பாடல். இந்தப் பாடல் தேவியின் செந்நிறத்தைப் பற்றிய
உவமைகள் நிரம்பியது. செந்நிறம் விமர்ச சக்தியைக் குறிக்கும்.
எல்லாவற்றையும் ஆன்மாவாகக் கண்டுணர்தலே விமர்சக நோக்கு ஆகும்.
இதனைச் சிறப்பாகக் கூறுவது நூல் வழக்கு.
"லௌஹித்யம் ஏதஸ்ய ஸர்வஸ்ய விமர்ச:''என்று பாவனோபநிடதம்
கூறும். மேலும் இந்தப் பாடல் 'உதிக்கின்ற' என்ற சொல்லால் துவங்குவது
காண்க. இலக்கண மரபுப்படி எந்த நூலையும் மங்கலச் சொல்லாலேயே
தொடங்க வேண்டும். சீர் , மணி, பிரதி, யானை, திரு,நிலம், திங்கள்
முதலியன அத்தகைய மங்கலச் சொற்களில் சில. அவற்றில் 'உதிக்கின்ற'
என்ற சொல் யாண்டும் காணப்பெறவில்லை. எல்லாவற்றையும்
விமர்சரூபமாக பாவித்து அந்த ஆனந்தாதிசய நிலையில் அமுதமுண்டு
கொண்டிருந்த பட்டருக்கு \எல்லாம் மங்கலமாகவே இருந்ததால் தனியாக
மங்கலச் சொல் என்று கொண்டு நூல் தொடங்கவில்லை என்றே
கொள்ளவேண்டும்.
இதனால் மற்றோருண்மையும் வெளிப்படுகிறது. இந்நூலுக்குக் காப்புச்
செய்யுளாகத் "தாரமர் கொன்றையும்”எனத்தொடங்கும் விநாயகர் துதி
காணப்படுகின்றது. ஆனால் அது பட்டர் வாக்கல்ல என்பதை அறுதியிட்டுக்
கூறலாம். தேவியைத் தவிர மற்றொன்றையும் காணாதவர், மங்கலச்
சொல் வழக்கின்றி நூலை ஆரம்பித்தவர், காப்புச் செய்யுள் பாடினார்
என்பது பொருந்தாத ஒன்று. அவ்வாறு அவர் இலக்கிய வழக்காறாகக்
காப்புச் செய்யுள் பாடினார் என்றே கொண்டால், அவர் அழகிய மங்கலச்
சொல்லால் நூல் ஆரம்பிக்காதது என்னை? இத்தகைய காரணங்களால்
காப்புச்செய்யுள் அவரது வாக்கல்ல என்பதும்,
அந்தாதி பாடும் போது பட்டர் இருந்த ஆனந்த நிலையையும் தெள்ளிதின்
புலனாகும்
கருத்தன எந்தைதன் கண்ணன பாடல் எண்9
இந்தப் பாடலை முதல் இரண்டடிகளில் அம்பிகையின் திருத்தன
பாரங்களின் சிறப்புக் கூறப்படுகின்றது. இதில் வரும்'கருத்தன எந்தைதன்
கண்ணன' என்பதற்கு எந்தையாகிய சிவபிரானது கருத்திலும் கண்ணிலும்
இருப்பன என்றே உரைக் கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று சீர்களில்
ஒரு சிறந்த சாக்க தத்துவம் மறைந்துள்ளது அறியத்தக்கது. சாக்த மத
தந்திரங்களிலும்.சம்பரதாயத்திலும் ஸ்தனங்களைப் பிரபஞ்சமாகக்
குறிப்பிடுவர். அதையொட்டி இங்கே ஆராய்வோம். இங்கே கொங்கை
என்பது உலகைக் குறிக்கும், அந்த உலகம் சிவபிரானது கருத்திலும்
கண்ணிலும் உள்ளது. நிருபாதிக நிர்விசேஷ பரப்ரம்மம் பிரபஞ்ச
ஸ்ருஷ்டிக்கு முன்னர் நிச்சலமாயிருந்தது,
ப்ராணிகளின் கர்மபரிபாக வசத்தால் ஸ்ருஷ்டி செய்ய வேண்டும் என்ற
இச்சை பிறந்தது. அப்பொழுது, சிருஷ்டிக்கப்படும் பிரபஞ்சத்தின் நிலை
கருத்தளவிலேயே இருந்தது. இதுவே 'கருத்தன' என்ற சொல்லின்
ஆற்றலாய் பெறப்படும் பொருளேயாகும்.
பிறகு சிவமானது முன்பு செய்தது போலவே இந்த ஜகத்தை ஸ்ருஷ்டி
செய்தது. அந்த ப்ரபஞ்சத்தைத் தனக்கு வேறாக பார்த்த சிவத்தின்
நிலையே 'கண்ணன' என்ற சொல்லால் விளக்கப்படுகிறது.
ஸ்ருஷ்டி செய்வதற்குமுன் இருந்த சிவம், ஜகத்தைத் தனக்கு
அபின்னமாகப் பார்க்கும் பொழுது சதாசிவ தத்துவமாகவும், அதையே
இதந்தாஞானத்தாற் காணும் பொழுது ஈச்வர தத்துவமாகவும் ஆகிறது.
சதாசிவனின் மனோவ்ருத்திக்குச் சுத்த வித்யை என்றும், ஈச்வரனின்
அந்தக்கரண விருத்திக்கு மாயை என்றும் சாக்தாகமங்களில் பெயர்
வழங்கும். இத்தகைய சுத்த வித்யா விருத்தியுடைய சதாசிவன்
'கருத்தன' என்ற சொல்லினாலும் மாயாவிருத்தியுடைய ஈச்வரன்
'கண்ணன' என்ற சொல்லினாலும் குறிக்கப்படுகின்றனர்; இத்துணைத்
தத்துவச் சிறப்பு வாய்ந்தது இப்பாடல் என்று நாம் அறியும் பொழுது
உவகையில் திளைக்கின்றோம்
"கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்; பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே." (பாடல் எண் 12)
இந்தப் பாடலின் 'நண்ணியதுன்னை நயந்தோரவையத்து' என்று
வருகின்றது, அதற்கு உரையாசிரியர்கள் 'உன்னை வழிபடும் அடியார்களது
கூட்டமே யான் நெருங்கிச் சென்றது' என்று விளக்கம் தருகின்றனர்.
ஆயின் ''நயந்தோர் வையத்து' என்ற சொற்றொடரை 'நயந்து ஓர
வையத்து' என்று பிரிக்கலாம். அதற்கு நயந்து-உன்னிடம் அன்பு செலுத்தி,
ஓர-ஆராய்ந்து அறிய, உன்னை நண்ணியது - உன்னை அணுகியது என்று
பொருள் கூறி,'வையத்து- இந்த உலகில்' நான் முன் செய்த
'புண்ணியம் ஏதென்னம்மே புவி ஏழையும் பூத்தவளே' என்று முடிக்கலாம்

"வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்;


சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே;
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே" (பாடல் எண் 14)
இந்த பாட்டில் மூன்றாவது அடியில் வரும் 'பாரில்' என்ற சொல்லுக்கு,
'இந்த உலகில்' என்றே பொருள் கூறுகின்றனர். ஆனால் அந்த சொல் சாக்த
மதத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றை குறிப்பாகப் புலப்படுத்
துவது அறியத் தக்கது. 'பாரில்' என்பதற்கு இந்தப்பாராக (உலகமாக) என்றே
பொருள் கொள்ள வேண்டும். 'கல்லிலே சாமியை காண்கிறான்' என்ற
இடத்தில் 'கல்லில்' என்ற சொல் "கல்லாக" என்று எவ்வாறு பொருள்
தருகிறதோ அவ்வாறே 'பாரில்' என்றசொல்லும் 'பாராக' என்ற பொருள்
பயக்கும்.உலகில் நம்மால் கற்பிக்கப்படும் நல்லன, தீயன, அழகியன,
அழகற்றன,சிறியன, பெரியன, இன்னோரன்ன வேறுபாடுகள் கொண்ட
அனைத்துப் பொருள் களும் அன்னை பராசக்தியே என்பதுவே
சாக்த மதத்தின் உயரிய கொள்கை.உண்மையான சாக்தனுக்கு எந்தப்
பொருளும் தள்ளத்தக்கதோ, வெறுக்கத் தக்கதோ இல்லை.
அனைத்தும் அவனுக்கு சக்தியின் ஸ்புரக்தா ரூபமே ஆகும். இக்கருத்தைப்
பாரதியாரும், 'பாரதி அறுபத்தாறு' என்னும் செஞ்சொற் பனுவலில் மிக
அழகாக விளக்குகிறார்.
"வல்ல பெருங்கடவுளிலா அணுவொன்றில்லை மஹாசக்தியில்லாத
வஸ்து இல்லை அல்லலில்லை அல்லலில்லை அல்லவில்லை
அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ கேளப்பா சீடனே! கழுதை
ஒன்றைக் கீ ழான பன்றியினைத் தேனைக் கண்டு தாளைப்பார்த்
திருகரமுஞ் சிரமேற் கூப்பிச் சங்கர சங்கரவென்று பணிதல் வேண்டும்
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம் மீ ளத்தான்
இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன் விண்மட்டும் கடவுளன்று
மண்ணுமஃதே"
என்று கூறிக்கொண்டே போய் முடிவாக முத்தாய்ப்பு வைத்தாற்போல
"வெயிலளிக்கும் இரவிமதி விண்மீ ன் மேகம் மேலுயமிங்குப் பல பலவாம்
தோற்றம் கொண்டேஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்
எழுதுகோல் தெய்வயமிந்த எழுத்தும் தெய்வம்"
என்று முடிக்கிறார்.
இத்தகைய உயரிய செந்நெறியில் வழி வழிவந்த அபிராமிபட்டர்க்குப்
நானெல்லாம் பராசக்தியாகப் பரிமளத்ததில் வியப்பேதும் மில்லை.
கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்து, ஒளிரும்
ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே! வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே! அளியேன்
அறிவளவிற்கு அளவானது அதிசயமே. (பாடல் எண் 16)
இந்தப் பாடல் மிகவும் அழகிய ஒன்று. 'கிளியே' என்ற சொல்லில் ஒரு
பேருண்மையே அடங்கி உள்ளது. இந்தச் சொல்லிற்குப் பொதுவாகக் கிளி
போன்று அழகியவளே என்ற முறையில் உரை கூறப்படுகிறது. ஆனால்
தந்திர மந்திர சாத்திரங்களில் "சுகம்" என்ற சொல் விரவிக் காணப்படும்.
"கிளி" என்ற சொல்லுக்கு நேரான வட சொல் "சுகம்" என்பதாகும்.
'சுகம்' என்ற சொல் எதைக் குறிக்கிறது என்பதைக் கவனிப்போம்.
சொற்களைக் கொண்டு எண்ணிக்கையைக் குறிக்கும் முறைக்கு
"கடபயாதி ஸங்க்யை" என்பது பெயர். பதினைந்து என்ற எண் சாக்தத்தில்
மிகவும் முக்கியமானதொன்று. அது 'ஸ்ரீ வித்யா' என்று கௌணமாக
வழங்கப்படும்.
15 எழுத்துள்ள பஞ்சதசாக்ஷரியைக் குறிக்கும். அந்த மந்திரம் தேவி
மந்திரங்களில் தலைசிறந்ததாகும். அம் மந்த்ர ரூபமாக இருப்பவள் தேவி
என்பதைக் குறிக்கவே கிளியே என்று விளிக்கின்றார் பட்டர். தேவி தனது
திருக்கரத்தில் கிளியை வைத்து இருப்பதின் தத்துவமும் இதுவே என்று
உணர்க.
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்,
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும் பிச்சிமொய்த்த
கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத் தன்னந்தனி
இருப்பார்க்கிது போலும் தவமில்லையே." (பாடல் எண் 53)
இந்தப் பாடல் குரு சிஷ்ய பரம்பரையலேயே மறைவாக அறிவிக்கப்படும்
காமக்கலாத்யானத்தைக் கூறுகின்றது. இந்தத்
தியானம் ஸ்தூலம், ஸுக்ஷ்மம், பரம் என மூவகைத்து. இந்தச் செய்யுள்
ஸ்தூல காமகலா த்யானத்தைக் கூறுவதாகும். இந்தத்
தியானத்தில், முகத்தை ஒரு பிந்துவாகவும்,
கொங்கைகளை இரண்டு பிந்துக்களாகவும்,
குஹ்யத்தை ஒரு பிந்துவாகவும் தியானிக்க வேண்டும்.
'சின்னஞ் சிறிய மருங்கு' என்பது விட்ட இலக்கணையாக குஹ்யத்தையும்,
"பென்னம்பெரிய முலை" என்பது இரு பிந்து ஸ்வருபத்தையும், "கன்னம்
கரிய குழலும் கண் மூன்றும்'' என்ற சொற்றொடர் ஒரு பிந்து
ஸ்வரூபமாகிய முகத்தையும் குறிப்பன.
ஆதி சங்கரர் ஸௌந்தர்ய லஹரியில் "முகம் பிந்தும் க்ருத்வா சயுகமதஸ்
தஸ்ய தததோ ஹரார் தம் த்யாயேத்யோ ஹர மஹிஷிதே மன்மத கலாம்
ஸஸ்த்ய :க்ஷோபம் நயதி வனிதா! இத்யதிலக த்ரிலோகீ மப்யாசு ப்ரமயதி
ரவந்து
ீ ஸ்தன யுகாம்" என்றும், பவான புஜங்கத்தில், "மஹாமந்த்ர ராஜாந்த
பீஜம் பராக்யம் ஸ்வதோ ந்யஸ்த்த பிந்து ஸ்வயம்ந்யஸ்த்த ஹார்தம்
பவத்வக்த்ர வக்ஷோஜ குஹ்யாமி தானம் ஸ்வரூபம் ஸக்ருத பாவயேத்ஸ
த்வமேவ" என்றும் இத்தகைய தியானத்தையே சிறப்பாகக் கூறியுள்ளார்.
மேலும் முகம் ஜீவனையும், கொங்கை பிரபஞ்சத்தையும், குஹ்யம்
ஈஸ்வரனையும் குறிப்பன. இவற்றின் மறைபொருள் விளக்கங்களைக்
குரு முகமாக அறிந்துய்யவும்.
ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்
போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல் சாதித்த புண்ணியர்
எண்ணிலர் போற்றுவர் தையலையே. (பாடல் எண் 97) -
இந்தப் பாடல் அம்பிகையை வழிபட்ட சிறந்த பன்னிரண்டு உபாசகர்களைப்
பற்றிக் கூறுகிறது. ஸ்ரீவித்யா பஞ்சதசீ மந்த்ரமானது 12 வகையாக
அமைந்துள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வோர் உபாசகரால் சாதனை
செய்யப்பட்டது. தந்த்ரங்களின்படி அவர்கள் பின் வரும் ஸ்லோகத்தால்
கூறப்படுகின்றனர்.
"மனு: சந்த்ர: குபேர: ச லோ பாமுத்ராச மன்மத :அகஸ்திரக்னி : சூர்ய:ச
இந்த்ரஸ்கந்த: சிவஸ்ததா க்ரோத பட்டாரகோ தேவ்யா : த்வாதசாமீ
உபாஸகா:" இதில் மனு, சந்திரன், குபேரன், லோபாமுத்ரை, மன்மதன்,
அகஸ்தியர், அக்னி, சூரியன், இந்திரன், ஸ்கந்தன், சிவன், துர்வாசர் எனப்
பன்னிருவர் கூறப்படுகின்றனர். ஆனால் நமது பாடலில் மனு,
லோபாமுத்ரை, துர்வாசர் இவர்கட்குப் பதிலாக பிரமன், முராரி, கணபதி
என்ற மூவர் வழங்கப்படுகின்றனர். இந்தப் பாடலை நுட்பமாக
ஆராய்ந்தால் ஒரு பேருண்மை புலப்படுகின்றது. பாடலின்
மூன்றாவதடியில் கடைசியில் 'காமன் முதல்' என்ற சொல் உள்ளது
கவனிக்கத் தக்கது. இதற்கு உரை எழுதும் பொழுது 'காமன் முதல் சாதித்த'
என்று பிரித்துக் காட்டி ''ஆதித்தன் முதலிய காமன் வரை உள்ள
பன்னிருவர் முதன் முதலாகச் சாதனை புரிந்து கண்டறிந்த பொருள்
கூறப்படுகின்றது. ஆனால் அவ்வாறு பிரித்து இடர்ப்படவேண்டியதில்லை.
ஆதித்தன் முதல் காமன் வரை என்றுஆள்வதே முறை. ஆனால் 'காமன்
வரை' என்பதற்குப் பதிலாக 'காமன் முதல்' என்று ஆளப்பட்டுள்ளது.
ஆதலால் 'முதல்' என்ற சொல்லில் மறைந்துள்ள உண்மையை நாம் அறிய
வேண்டும்.
பஞ்சதசாக்ஷரியின் பல உருவங்களில் முக்கியமாகக் கூறப்படுவன
இரண்டு:- அவை காதிவித்யை, ஹாதி வித்யை என்பன. 'க' என்ற எழுத்தை
ஆதியாக உடைய மந்தரம் 'காதிவித்யை' என்றும் 'ஹ' என்ற எழுத்தை
முதலாக உடையது 'ஹாதி வித்யை' என்றும் அறிக.
காதி வித்யையை உபாசித்துப் பயன் கண்டவன் காமனாகிய மன்மதன்;
ஹாதி வித்யையை உபாசித்து உலகிற்களித்தவர் அகத்தியரது
மனைவியாகிய லோபாமுத்ரை. இவ்விரண்டு காதி, ஹாதி வித்யைகளில்
சிறந்தது காதி வித்யையே என்பதை எடுத்துக்காட்டக் காதி வித்யையின்
மந்தரத்ரஷ்டாவாகிய காமனை இறுதியில் வைத்தார்.
காதி வித்யையின் சிறப்பை உணர்த்தவே, அபிராமி பட்டர் ஹாதி
வித்யையைப் பரப்பிய லோபா முத்ரையைப் பாடலில் குறிப்பிடவில்லை
என்றறிக,
உயரிய பொருளை முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும்
குறிப்பிடலாம். அந்த முறையில் காமனைக் கடைசியில் வைத்தார்.
மேலும் 'காமன் முதல்' என்ற சொல் முழுமையும் காதி வித்யையைக்
குறிக்கும். எப்படி என்று பார்ப்போம். தந்த்ர நிகண்டுகளில் 'காமன்' என்ற
சொல் 'க' என்ற எழுத்தைக் குறிக்கும்.
முதல்-ஆதி: அதாவது 'க' என்ற எழுத்தை முதலாக (ஆதியாக) உடைய
வித்யை என்ற பொருளைக் 'காமன் முதல்' என்ற தொடர் பயப்பதை
அறிந்து இன்புறுக. இந்தக் காரணங்களால் அபிராம்பட்டர் காதி வித்யா
பரம்பரையில் வந்தவர். என்பது தெள்ளிதின் புலனாகும்.
மேலும், நம்மனோர்க்கும் அந்தச் சிறப்பை உணர்த்தவும், அதை
நாமும் அறிந்து பின்பற்றவும் அதைக் கடைசியில் வைத்ததாகவும்
கொள்க. குழந்தையிடம் 'அப்பா வேண்டுமா! அம்மாவேண்டுமா!'
என்று கேட்டால் 'அம்மா வேண்டும்' என்று சொல்லும். அதே கேள்வியை
'அம்மா வேண்டுமா! அப்பா வேண்டுமா என்று திருப்பிக் கேட்டால் 'அப்பா
வேண்டும்' என்று சொல்லும். குழந்தைக்கு கடைசியில் உள்ள பொருள்
தான் நினைவில் நிற்கும். ஆகவே, அதைக் கேட்கிறது. அதனால்
குழந்தை எது வேண்டும் என்று சொல்ல வேண்டும் என நாம்
விரும்புகிறோமோ அதைக் கடைசியில் வைக்க வேண்டும்.
இந்தரீதியில் தான் அபிராமிபட்டரும் குழந்தைகளாகிய நமக்குச் சொல்லும்
பொழுது காதி வித்யைக்கு ரிஷியாகிய காமனைக் கடைசியில் வைத்து,
சிறந்த காதி வித்யையைப் பெற்று நாமும் உய்ய வேண்டும் என்று
அருளுகின்றார்.
அபிராமி அந்தாதி என்னும் இவ்வருட்பனுவலாகிய ஆழ்கடலில் முழுகி
முத்தெடுக்கும் திறன் நமக்கில்லை. ஆயினும் ஆங்காங்குத் தாமே
வெளிப்பட்டுச் சுடர்விடும் சில நன்மணிகளையே இதுவரை தந்துள்ளோம்.
தமிழுலகம் அறிந்துய்க.
ஸ்ரீ சர்யாநந்தர் "விழிக்கே அருளுண்டு" என்ற கட்டுரை நிறைவுற்றது.

மீ னாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்:


1168 – 75 -> சுவாமி கோபுரம்
1216 – 38 -> ராஜ கோபுரம்
1627 – 28 -> அம்மன் சந்நிதி கோபுரம்
1315 – 47 -> மேற்கு ராஜா கோபுரம்
1372 -> சுவாமி சந்நிதி கோபுரம்
1374 -> சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம்
1452 -> ஆறு கால் மண்டபம்
1526 -> 100 கால் மண்டபம்
1559 -> சௌத் ராஜா கோபுரம்-> முக்குரிணி விநாயகர் கோபுரம்
1560 -> சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்
1562 -> தேரடி மண்டபம்
1563 -> பழைய ஊஞ்சல் மண்டபம்-> வன்னியடி நட்ராஜர் மண்டபம்
1564 – 72 -> வடக்கு ராஜா கோபுரம்
1564-72 -> வெள்ளி அம்பல மண்டபம்-> கொலு மண்டபம்
1569 -> சித்ர கோபுரம்-> ஆயிராங்கால் மண்டபம்-> 63 நாயன்மார்கள்
மண்டபம்
1570 -> அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்
1611 -> வரீ வசந்தராயர் மண்டபம்
1613 -> இருட்டு மண்டபம்
1623 -> கிளிக்கூட்டு மண்டபம்-> புது ஊஞ்சல் மண்டபம்
1623 – 59 -> ராயர் கோபுரம்-> அஷ்டஷக்தி மண்டபம்
1626 -45 -> புது மண்டபம்
1635 -> நகரா மண்டபம்
1645 -> முக்குருணி விநாயகர்
1659 -> பேச்சியக்காள் மண்டபம்
1708 -> மீ னாக்ஷி நாயக்கர் மண்டபம்
1975 -> சேர்வைக்காரர் மண்டபம்
மீ னாக்ஷி அம்மன் கோவில் கட்டியவர்களும், ஆட்சி புரிந்தவர்களும்:
குலசேகர பாண்டியன் -> 1168 – 75.
மாறவர்மன் சுந்தரபாண்டியன் -> 1216 – 38.
பாராக்ரம பாண்டியன் -> 1315 – 47.
விஸ்வநாத நாயக்கர் -> 1529 – 64.
கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1564 – 72.
வரப்ப
ீ நாயக்கர் -> 1572 – 94.
கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1595 – 1601.
முத்துகிருஷ்ணப்பா நாயக்கர் -> 1601 – 09.
முத்து நாயக்கர் -> 1609 – 23.
திருமலை நாயக்கர் -> 1623 – 1659.
ரௌதிரபதி அம்மாள் மற்றும்
தோளிமம்மை -> 1623 – 59. (Wives of ThirumalaiNaicker )
முத்து வரப்ப
ீ நாயக்கர் -> 1659
சொக்கநாத நாயக்கர் -> 1659 – 82.
முத்து வரப்ப
ீ நாயக்கர் -> 1682 – 89.
விஜயரங்க சோகநாத நாயக்கர் -> 1706 – 32.
மீ னாட்சி அரசி -> 1732 – 36
மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள். அவை:
1) மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்',
2) சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்',
3) இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்',
4) தெற்கு மாசி வதி
ீ தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்',
5) தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை
மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்
அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை,
சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீ னாட்சி
கையில் பிடித்துள்ளாள் .
அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம்
மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.
திருவாரூரில் பிறந்தால் புண்ணியம்,
காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம்,
காசியில் இறந்தால் புண்ணியம்,
சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம்,
திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் .
மதுரையில் பிறந்தாலும் -மதுரையில் வாழ்ந்தாலும் -மதுரையில்
இறந்தாலும் -மதுரையில் வழிபட்டாலும் -மதுரையை நினைத்தாலும்
புண்ணியம்.
சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான்,
வாடா மலை,காயா பாறை, பாடா குயில்
இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக்
குறிக்கும் எல்கை ஊர்கள்.👇👇👇
சீறா நாகம் - நாகமலை
கறவா பசு - பசுமலை
பிளிறா யானை - யானைமலை
முட்டா காளை - திருப்பாலை
ஓடா மான் - சிலைமான்
வாடா மலை - அழகர்மலை
காயா பாறை - வாடிப்பட்டி
பாடா குயில் - குயில்குடி
இவன்: நம்ம தூங்காநகரம் மதுரை
குத்துவிளக்கின் அருமையான விளக்கம்
1. அன்பு (love)
2. நிதானம் (Moderation),
3. சமயோசிதம் (tact)
4. மன உறுதி (Determination),
5. சகிப்புத்தன்மை (Tolerance)
இவ் ஐந்து குணங்களும் குத்துவிளக்கேற்றும் பெண்களுக்கு கிடைக்கும்.
இவ்வைந்து குணங்களும் சேர்ந்து பிரகாசிக்க வேண்டும் என்பது தத்துவம்.
அடிப்பாகம் மலர்ந்த தாமரைப் பூப்போல அகன்று வட்டமாக இருப்பதால்
தாமரை மலரின் மேல் வற்றிருக்கும்
ீ பிரம்மதேவியைக் குறிக்கிறது.
தண்டுப்பாகம். இது தூணைப்போன்று உயரமாக இருப்பதால் ஓங்கி
வளர்ந்து பூமியை ஓரடியாலும் ஆகாயத்தை ஓரடியாலும் அளந்த
நெடுமாலாகிய மஹாவிஷ்ணுவைக் குறிக்கின்றது.
அகல் விளக்கு. தண்டுக்கு மேலே அகல் போல் நெய் அல்லது எண்ணெய்
ஊற்றப்பட்டுள்ள பாகம், சிவனார் கங்கையைச் சடையுள்
வைத்திருப்பதுபோல் இருப்பதால் இப்பாகம் உருத்திரனைக் குறிக்கின்றது.
திரியிடும் கண். திரி எரிவதற்குரிய 5 முகங்களும்
மஹேஸ்வரனை(பஞ்சமுகன்) குறிக்கின்றது.(ஈசானம், வாமதேவம்
சத்யோசதம், தத்புருஷம், அகோரம் என்பதாகும்.)
மேல்தண்டு. அகலின் மேல் கும்ப கலசம் போல் உள்ள உச்சிபாகம்
இருப்பதால் ரூபா ரூபத்திருமேனி உடைய சதாசிவனாய் பாவிக்கதக்கது.
எண்ணெய். அகல் பாகம் முழுவதும் பரவியுள்ள நெய்யானது
உருவமின்றி எங்கும் பரவி நிற்கும் நாத தத்துவத்தைக் குறிக்கின்றது.
திரி .இந்து தத்துவத்தை அல்லது வெண்மை நிற ஒளியை விளக்குகிறது.
(பிந்து)
சுடர். தீப்பிழம்பு இலக்குமிதேவியின் சொரூபமாகக் கருதப்படுகிறது
(திருமகள்)
ஒளி. பிரகாசமாய் இருப்பதால் இது ஞானமயமான சரஸ்வதி தேவியின்
சொரூபத்தை குறிக்கின்றது.
சூடு- எரிக்கும் சக்தியானது அழிக்கும் சக்தியாகிய ருத்திராணியின்
சொரூபமாகக் கருதப்படுகிறது.
கற்களின் தரம் அறிவது எப்படி??
முத்து நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.
மரகதம் கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை
தும்மும்.
பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.
வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.
பவளம் :- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே
இறங்கும்.
கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.
புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ
வாசனை வரும்.
வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.
நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.
அகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப் பட்டுள்ள விவரங்கள்.
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்.?
ஆகம விதிகளின் படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும்

வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி, யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ


உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை

செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில், நம்

உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வத்தை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம்.

ஆகவே தான், பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள்.

பெரும்பாலும் தெய்வ சிலைளை உலோகங்களில் செய்யாமல், கருங்கல்லால்

சிலை செய்கிறார்கள். அதற்கு முக்கியமான கரணம் உண்டு.

உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது.

எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மைஉடையது கருங்கல்.

இதில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள்

அடங்கியுள்ளது. இது வேறு எந்த உலோகத்திலும் வெளிபடுவது இல்லை.

நீர்:கல்லில் நீர் உள்ளது. எனவே தன் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து

மாறாமலிருக்கிறது.கல்லில் நீருற்று இருப்பதை காணலாம்.

நிலம்:பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் உள்ளது. எனவே கல்லில்

செடி கொடிகள் வளர்கின்றன.

நெருப்பு:கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு. கற்களை உரசினால் தீப்பொறி

பறக்கிறதே சான்று.

காற்று :கல்லில் காற்று உண்டு. எனவே தான் கல்லில் தேரை கூட உயிர்

வாழ்கிறது.

ஆகாயம்: ஆகாயத்தைப் போல், வெளியிலிருக்கும் சப்தத்தை தனக்கே ஒடுக்கி

பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு. எனவே தான் கருங்கல்லில் கட்டப்பட்ட

கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது.


திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் நாம் பேசுவது அப்படியே எதிரொலிப்பதை

நாம் ஆனந்தமாக கேட்டு மகிழலாம்.

இக்காரணங்களினால், இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம் பூதங்களின்)

வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம்.

அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது, ஒரு

கோவிலின் பஞ்சபூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன.

அக்கோவிலில் நாம் வணங்கும்போது, நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி,

அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் உண்டாகின்றன! வாராஹி


நவராத்திரி என்கிற ஆஷாட நவராத்திரி பிரமாணம்
நம்முடைய முன்னோர்கள் இரண்டு விதமான நாட்காட்டிகள் இயற்கையாக

வடிவமைத்து கொடுத்துள்ளார்கள். அவை இரண்டும்

1. சூரியமான முறை - சூரியனின் நகர்வினை வைத்து, வருடத்தினை கணிக்கும்


முறை. அதாவது, பன்னிரண்டு ராசிகள், பன்னிரண்டு மாதங்கள். ஒவ்வொரு

மாதமும் சூரியன் ஒவ்வொரு ராசியில் இருப்பார், அவை முறையே

சித்திரை - மேஷம்

வைகாசி - ரிஷபம்

ஆனி - மிதுனம்

ஆடி - கடகம்

ஆவணி - சிம்மம்

புரட்டாசி - கன்னி

ஐப்பசி - துலாம்

கார்த்திகை - விருச்சிகம்

மார்கழி - தனுசு

தை - மகரம்

மாசி - கும்பம்

பங்குனி - மீ னம்

இவ்வாறு தமிழ் வருடம், சூரியமான அடிப்படையில் அமைந்துள்ளது.

2. சாந்திரமான முறை - சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு


உருவாக்கப்பட்டது. அதாவது சந்திரன் சுற்றி வரும்போது உருவாகும்

பக்ஷத்தினால் மாதங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.


ஒரு சாந்த்ரமான மாதத்தில் பௌர்ணமி தினத்தில் சந்திரன் எந்த நக்ஷத்திரத்தில்

இருக்குமோ, அந்த நக்ஷத்திரத்தின் பெயர் மாதத்தின் பெயராக வரும். அதாவது


ஒரு மாதத்தில் சந்திரன் பலமாக இருக்கக்கூடிய பௌர்ணமி உருவாகும்

நக்ஷத்திரமே மாதத்தின் பெயர்.

சைத்ரம் - சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி


வைஷாகம் - விசாக நட்சத்திரத்தில் பௌர்ணமி

ஜ்யேஷ்டம் - கேட்டை நட்சத்திரத்தில் பௌர்ணமி

ஆஷாடம் - ஆஷாட நட்சத்திரத்தில் பௌர்ணமி

ஸ்ரவணம் - திருவோண நட்சத்திரத்தில் பௌர்ணமி

பாத்ரபதம் - பாத்ரபத நட்சத்திரத்தில் பௌர்ணமி

ஆஸ்வனம்
ீ - அஸ்வினி நட்சத்திரத்தில் பௌர்ணமி
கார்த்திகம் - கார்த்திகை நட்சத்திரத்தில் பௌர்ணமி

மார்க்கஸீர்ஷம் - மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பௌர்ணமி

புஷ்யம் - பூச நட்சத்திரத்தில் பௌர்ணமி

பால்குனம் - பால்குனி நட்சத்திரத்தில் பௌர்ணமி

சைத்ரம்/வைஷாகம் - மேஷம்

வைஷாகம் /ஜ்யேஷ்டம் - ரிஷபம்


ஜ்யேஷ்டம்/ஆஷாடம் - மிதுனம்

ஆஷாடம் /ஸ்ரவணம் - கடகம்

ஸ்ரவணம் /பாத்ரபதம் - சிம்மம்

பாத்ரபதம் /ஆஷ்வனம்
ீ ( ஆஸ்வஜம்
ீ ) - கன்னி

ஆஷ்வனம்
ீ /கார்த்திகம் - துலாம்
கார்த்திகம்/ மார்க்கஸீர்ஷம் - விருச்சிகம்

மார்க்கஸீர்ஷம் /புஷ்யம் - தனுசு

புஷ்யம்/மாகம் - மகரம்

மாகம் /பால்குனம் - கும்பம்

பால்குனம் /சைத்ரம் - மீ னம்

சாந்த்ரமான பஞ்சாங்கம் மிகவும் துல்லியமாக இருக்கும். இப்போது சாந்திரமான

பஞ்சாங்கம் வழக்கிழந்து போயுள்ளது என்பது வருந்தத்தக்க விஷயம். அதனால்

சந்திரமான பஞ்சாங்கம் கணிப்பவர்களும் மிகவும் குறைவு.

இரண்டு பஞ்சாங்கத்தில் சில நேர குறைபாடுகள் உண்டு, அவை அனைத்துமே

சூரிய சந்திர இயக்கங்களின் மாறுபாட்டுக்கு தகுந்தது.


சூர்யமானமும் சந்திரமானமும்

இரண்டையும் ஈடு செய்ய முடியும், என்பது ஆச்சரியப்பட வைக்கும் விஷயம்.


ஒரு சில சமயம் சூரியமான பௌர்ணமி நக்ஷத்திரம் சில நேரம் மட்டுமே

நீடிக்கும், அதேபோல்தான் சாந்த்ரமான பௌர்ணமி. இயற்கையின் சூரிய சந்திர

இயக்கங்களின் சமன்பாடு சூரியமான,சந்திரமான நட்சத்திரம் சமன்செய்யப்படும்.

இவற்றில் சில அரிய தந்த்ர பைரவ, தேவி ராத்திரிகளும் அடக்கம்.

சித்திரை -சைத்ரம்/வைஷாகம் - மேஷம்


வைகாசி -வைஷாகம்/ஜ்யேஷ்டம் - ரிஷபம்

ஆனி -ஜ்யேஷ்டம்/ஆஷாடம் - மிதுனம்

ஆடி - ஆஷாடம் /ஸ்ரவணம் - கடகம்

ஆவணி -ஸ்ரவணம் /பாத்ரபதம் - சிம்மம்

புரட்டாசி - பாத்ரபதம்/ஆஷ்வனம்
ீ ( ஆஸ்வஜம்
ீ ) - கன்னி
ஐப்பசி -ஆஷ்வனம்
ீ /கார்த்திகம் - துலாம்
கார்த்திகை -கார்த்திகம்/மார்க்கஸீர்ஷம் -விருச்சிகம்

மார்கழி -மார்க்கஸீர்ஷம்/புஷ்யம் - தனுசு

தை -புஷ்யம்/மாகம் -மகரம்

மாசி - மாகம்/பால்குனம் - கும்பம்

பங்குனி - பால்குனம்/சைத்ரம் -மீ னம்

மேலே சொல்லப்பட்ட சமன்பாடுகள், 15 முதல் 18 நாட்கள் மாறுபடும், இந்த

சமன்பாடுகள் error என்ற இயக்க பாகைக்கு உட்பட்டு மாறும்.இவற்றை விட்டு

விட்டு நாம் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் கனக்கு சரியாகும்.

சரி பிரச்சினைக்கு வருவோம்!

ஆஷாடம் என்பது நான்காவது மாதம் என்று சாந்த்ரமானத்தில் பொருள், அதற்கு

சமமாக சூரியமானம் மிதுன மாதமான, ஆனியே ஆகும். இந்த சமன்பாடு 15

நாட்கள் சூரியமானத்தில் இடைவேளை வரும். அவ்வாறு பார்க்கும் போது

சந்த்ரமானத்தின் ஆஷாடம், சூரியமானத்தோடு இணை செய்யும்போது,

மூன்றாவது மாதமான ஆனியோடு வரும்.

அதாவது ஆஷாட மாதம் , மிதுன ராசியில் சூரியன் சந்திரன் இணைந்த

அமாவாசை முதல் துவங்கும். அதே சந்திரன் ,மிதுனத்தில் இருக்கும் சூரியனுக்கு


ஏழாமிடத்தில் பலம் கொண்டு பௌர்ணமியாக இருக்கும் போது ஆஷாட

நக்ஷத்திரம் உண்டாகும்.

இதுவே வாராஹியின் புரஸ்சரன பூஜை காலம்.

சுவாமிக்கு சூரியமானமும், அம்பிகைக்கு சந்த்ரமானமும் ப்ரமாணமாக சாஸ்திரம்,

ஆகமம், தந்த்ரம் கூறுகிறது. அதனை குரு மூலம் அறிக.

கிரீஷ்ம ருது காலம் முழுவதும் வாராஹி பூஜைக்கு உகந்தது, அவளின் மந்திரம்

வர்யமாக
ீ பலன் கொடுக்கும் தந்திர இரவுகள் அடங்கியுள்ளது, முற்பாதி

ஆனியிலும் பிற்பாதி ஆடியிலும் இருக்கும். இரண்டுக்கும் இருவேறு பலன்கள்

உண்டு. அதனை குரு மூலம் அறிக.குருவிற்கு மேல் சொன்ன அனைத்தும்

தெரியும். அதன்படி சித்த, தந்திர வழிபாடு பரம்பரைக்கு ஏற்ப செய்யவும்.


அதற்காக ஆஷாடமும் ஆடியும் ஒன்று என்று கூறுவது மிகவும் தவறு.அடுத்தவர்

ஒன்று சொன்னால் ஆராய வேண்டும், அப்படி இல்லாவிடில் சான்றோரிடம்

கேட்டு தெளிய வேண்டும்.

அதை விடுத்து, தவறு அதனால் அழிவு வரும் என்று பயமுறுத்தி பணிய

வைக்கும் முயற்சி, அபத்தம். அம்பிகையை பூஜிப்பதால் நல்லதுதான் வரும்,

அவள் தேச கால பாவங்களுக்கு அப்பாற்பட்டவள், தான்தோன்றித்தனமாக தனக்கு

தோன்றியதை செய்து, அதே தவறை பலருக்கு புகட்டுவதுதான், அழிவுக்கு இட்டுச்

செல்லும்.
கீ ழே ஆஷாடம் நீங்களே பார்க்கும் முறையும், ஸ்ரவணத்திற்கும் உள்ள

வித்தியாசம் கண்டுகொள்ளலாம்
.
சப்தரிஷிகளே சரணம்!!
சப்தரிஷிகள்தான் இந்த கலியுகத்தின் படைப்பாளிகள் அனைத்து ஜீவராசிகளும்

மனித இனமும்,பல சித்தர்களும் தோன்ற காரணமான முனிவர்கள்.

மனித இனத்தின் விதையே இவர்கள்தான்...நமது வேதம் என்ன கூறுகிறது

என்றால், ஏழு ரிஷிகளின் மூலமாகத்தான் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும்

மக்களனைவரும் வந்துள்ளோம் என்றால் அது மிகையாகாது.

காச்யப முனிவர் - தேவர் குலம் மற்றும் அசுரர் குலம் இரண்டுமே கச்யபரிடம்

இருந்து தோன்றின. அவரில் இருந்து தோன்றியதே மனித குலம்!

அத்ரி முனிவர் - இவரிடமிருந்து தோன்றியவன் சந்திரன். தத்தாத்ரேயரும், அத்ரி

தம்பதியிடம் இருந்து உருப்பெற்றார். மருத்துவத்தில் சிறந்த ஆத்ரேயரும்

அத்ரியிடம் இருந்து தோன்றியவரே! அத்ரி-அனசூயை தம்பதிபோல் தாம்பத்தியம்

சிறக்க வாழ வேண்டும் என்று புதுமணத் தம்பதியை வாழ்த்துகிறது ரிக்வேதம்.

பரத்வாஜ முனிவர் - இந்த மகரிஷி தமது மூன்று முழு ஆயுளையும் வேதம்

பயிலுவதற்குப் பயன்படுத்தியவர். இவரும் மருத்துவ ஆய்வில் சிறந்தவர்

என்கிறது வேதம். இன்றைக்கும் பரத்வாஜ கோத்திரத்தில் உள்ளவர்களின்

எண்ணிக்கை அதிகம்.

விஸ்வாமித்திர முனிவர் - இந்தப் பெயருக்கு, உலகத்துக்கு உற்ற நண்பன் என்று

அர்த்தம். இந்திரனுடன் மோதி, புது உலகைப் படைக்க முயன்றவர் இவர்.

விஸ்வாமித்திர சிருஷ்டி எனச் சிலவற்றைக் குறிப்பிடுவர். சிங்கமும் புலியும்

இறைவனின் படைப்புகள். அந்த இனத்துடன் தொடர்பு கொண்ட நாயும் பூனையும்

விஸ்வாமித்திர சிருஷ்டிகள்! நாம் பயன்படுத்தும் தர்ப்பைப் புல்லிலும்


விஸ்வாமித்திரம் எனும் பிரிவு உண்டு

கவுதம முனிவர் - அகல்யையின் கணவர். இவர் இயற்றிய தர்ம சூத்திரம்

இன்றளவும் பேசப்படுகிறது. அறம் காக்க அனைவருக்கும் அறைகூவல் விடுத்து

போதித்தவர்.

ஜமதக்னி முனிவர் - துஷ்டர்களை அடக்க அவதாரம் ஏற்ற ஸ்ரீமந் நாராயணனுக்கு

(ஸ்ரீபரசுராமருக்கு) தகப்பனாக இருந்து அறம் காத்தவர்.

வசிஷ்ட முனிவர் - அருந்ததியின் கணவர் இவர். இருவரும் ஆதர்ச தம்பதி.

இவரிடம் பாராட்டு பெறுவது கடினம். மிகச் சிறந்ததையே இவர் பாராட்டுவார்.

எனவேதான், வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி என்னும் சொல்வழக்கு உருவானது.


பெண்மைக்கு உயர்வளித்துப் போற்றுபவர்கள் இவர்கள். இவர்களை பெண்ணினம்

வழிபடும் நாளே ரிஷி பஞ்சமி! ஆவணி மாத வளர்பிறை 5-ம் நாளில் இவர்களை

வழிபட, மறுபிறவியே இல்லாத பேரின்ப நிலையில் இணைவார்கள் என்கிறது

புராணம்.

அன்பர்களே, சப்தரிஷிகளை கிழமைக்கு ஒருவராக வணங்க வாரத்தில் முதல்

நாளானது ஞாயிறு. ஞாயிறு அன்று நீங்கள் எழும்பொழுது சப்த ரிஷிகளில்

ஒருவரான "வசிஷ்டமுனியை" நீங்கள் நினைக்க வேண்டும். "வசிஷ்டர்" என்பவர்

ஞாயிற்றுகிழமையின் அதிபதியாவார். அவருடைய மந்திரத்தை உச்சரிக்கும்

பொழுது ஞாயிறானது மிகவும் இனிமையாக இருக்கும். அந்த மந்திரமானது "ஓம்

ஸ்ரீ வசிஷ்ட மகரிஷியே போற்றி போற்றி" என்று ஒன்பது முறை உச்சாடனம்

செய்தால் ஞாயிறு தினம் மிகவும் நன்மையான தினமாக இருக்கும்.

அடுத்து வருவது திங்கள். இந்த திங்கள் தினத்திற்கு, சப்தரிஷிகளில் ஒருவரான

"பரத்வாஜர்" உரியவராவர். "பரத்வாஜர் ரிஷியை" திங்களன்று படுக்கையை விட்டு


எழும்பொழுது "ஓம் ஸ்ரீ பரத்வாஜ மகரிஷியே போற்றி போற்றி" என்று ஒன்பது

முறை உச்சாடனம் செய்து வணங்கவேண்டும். அதன்பின் அந்ததிங்கள்

அற்புதமான நாளாக மாறும்.

செவ்வாயன்று செவ்வாய்க்கிழமைக்கு அதிபதியான "காசிப மகரிஷியை" போற்ற

வேண்டும். "ஓம் ஸ்ரீ காசிப மகரிஷியே போற்றி போற்றி" என்று ஒன்பது முறை

உச்சாடனம் செய்து வர அன்று ஏற்படும் தடைகள் அகலும் ஆனந்தம் பெருகும்.

அடுத்தது, புதன்கிழமையாகும். இந்த புதன்கிழமைக்கு அதிபதியானவர் "கௌதம

மகரிஷியாவார்". இவரை நாம் எழும்பொழுது "ஓம் ஸ்ரீ கௌதம மகரிஷியே

போற்றி போற்றி" என்று அவரை நினைக்க வேண்டும். அதுபோல, வியாழனன்று

"அத்தரி மகரிஷியை" "ஓம் ஸ்ரீ அத்தரி மகரிஷியே போற்றி போற்றி" என்றும்,


வெள்ளியன்று "விஸ்வாமித்திரரை", "ஓம் ஸ்ரீ விஸ்வாமித்திர மகரிஷியே போற்றி

போற்றி" என்றும், சனியன்று "ஜமத்கனி மகரிஷியை" "ஓம் ஸ்ரீ ஜமத்கனி

மகரிஷியே போற்றி போற்றி" என்றும் சொல்லிவர அற்புதமான ஒரு நிலைக்குச்

சென்றால், அதில் எள்ளளவும் ஐயமில்லை. இது பலரும் அறியாத

வழிபாடாகும்.சப்தரிஷிகளை வழிபட்டு பயன்பெறுங்கள்.....


உமையவள் தம் மென்மையான திருக்கரங்களால் வருடச் சிவந்த எம்பெருமான்

திருவடிகள் (இப்பாடலில் தில்லையில் திருநடம் புரிந்த மற்றும் யமனை உதைத்த

நிகழ்வு பாடியது குறிப்பிடத்தக்கது)


திருவாரூர் தேவாசிரிய மண்டபத்தில் குழுமி இருக்கும் அடியார்களைப் போற்றி

பணியும் நாள் எந்நாளோ, என்ற ஏக்கத்துடன் திருக்கோயிலுக்கு உள்ளே சென்ற


சுந்தரருக்கு, இறைவன் காட்சி அளிக்கின்றார். அந்த சமயத்தில், சிவபிரானின்

திருவடிகளை நினைத்து சுந்தரர் வணங்கும் பெரியபுராணப் பாடல்.


தடுத்தாட்கொண்ட புராணம்
ஞாலம் உய்ய நடமன்றுள் ஆடின கால னாருயிர் மாளக் கறுத்தன

மாலை தாழ்குழல் மாமலை யாள்செங்கை சீல மாக வருடச் சிவந்தன .(338)

பொழிப்புரை: உலகுயிர்கள் உய்யுமாறு ஐந்தொழில் பெருங்கூத்தைத்

திருஅம்பலத்தில் ஆடின. இயமனின் உயிர்செலச் சினந்தன. மாலை அணிந்த


கூந்தலையுடைய இமயப் பெருமலையின் தலைவியான உமையம்மையார் தம்

சிவந்த கைகள் மனம் குளிர வருடச் சிவந்தன.


திருச்சிற்றம்பலம்

About deha
न्यायमते पथि
ृ व्या दे हं योनिजम ् अयोनिजञ्च । योनिजं जरायुजमण्डजञ्च । अयोनिजं स्वेदजो- द्भिदादिकम ्
। नारकिणां शरीरमप्ययोनिजम ् । जलीयं दे हमयोनिजं वरुणलोके प्रसिद्धम ् । तैजसं दे हमयोनिजं सर्य्य
ू लोके
प्रसिद्धम ् । वायो- र्देहमयोनिजं तदे व पिशाचादीनाम ् ।
About Pradosham

_பிரதோஷங்கள்ம
20 வகை:

1. தினசரி பிரதோஷம்
2. பட்சப் பிரதோஷம்
3. மாசப் பிரதோஷம்
4. நட்சத்திரப் பிரதோஷம்
5. பூரண பிரதோஷம்
6. திவ்யப் பிரதோஷம்
7. தீபப் பிரதோஷம்
8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
9. மகா பிரதோஷம்
10. உத்தம மகா பிரதோஷம்
11. ஏகாட்சர பிரதோஷம்
12. அர்த்தநாரி பிரதோஷம்
13. திரிகரண பிரதோஷம்
14. பிரம்மப் பிரதோஷம்
15. அட்சரப் பிரதோஷம்
16. கந்தப் பிரதோஷம்
17. சட்ஜ பிரபா பிரதோஷம்
18. அஷ்ட திக் பிரதோஷம்
19. நவக்கிரகப் பிரதோஷம்
20. துத்தப் பிரதோஷம்

1.தினசரி பிரதோஷம்

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி

முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம்

செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள்


முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது

நமது சாஸ்திரம்.

2. பட்சப் பிரதோஷம்

அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது

திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின்

மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட

லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.

3. மாசப் பிரதோஷம்

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது

திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின்

மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான

லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம்

பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை

பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம்
திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள

பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு

லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ

வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

6. திவ்யப் பிரதோஷம்

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது

திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்”

ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால்

பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

7. தீபப் பிரதோஷம்
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய

ீ அமையும்.
ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வடு

8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்

வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்”

ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில்

வானில் தெளிவாகத் தெரியும்.

இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து,


சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும்

சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம்

பார்க்காது அருள் புரிவான்.

9. மகா பிரதோஷம்

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி

ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற

பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன்

வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.


குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”.

திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீ லி” சிவ ஆலயம்,


குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ

ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி

காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும்

மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்”

எனப்படும்.

*10. உத்தம பிரதோஷம்: சிவபெருமான் விஷம் அருந்திய தினம்


சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும்

சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில்

வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம்

உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீ ர்த்தியும் பெற்ற

தினமாகும்.

11. ஏகாட்சர பிரதோஷம்

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர

பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ

மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின்,

விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல

விதமான நன்மைகள் ஏற்படும்.

12. அர்த்தநாரி பிரதோஷம்

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி

பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால்,

தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

13. திரிகரண பிரதோஷம்

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம்.


இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும்

கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை

வழிபாடு செய்வது மிகவும் நல்லது.


14. பிரம்மப் பிரதோஷம்

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம்.


இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம்

நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

15. அட்சரப் பிரதோஷம்

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம்.

தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன்,

பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார்.

தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ

விமோசனம் பெற்றனர்.

16. கந்தப் பிரதோஷம்

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும்

பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன்

வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம்

இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

17. சட்ஜ பிரபா பிரதோஷம்

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’.

தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக்

கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு


வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள்

அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால்

முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

18. அஷ்ட திக் பிரதோஷம்


ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக்

கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ்,

கீ ர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

19. நவக்கிரகப் பிரதோஷம்

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம்.

இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால்

சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம்

அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப்

பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

तत्रयद्दन्तैरवखण्डविखण्ड्य भक्ष्यते अपूपादि तद्भक्ष्यं,यत्तु केवलं जिह्वया विलोड्य


निगीर्य्यते पायसादितद्भोज्यम ्। यज्जिह्वायां निःक्षिप्य, रसास्वादे ननिगोर्य्यते
द्रवीभत
ू ं गड
ु ादि तल्लेह्यम ्। यत्तद
ु ं ष्ट्राभिर्नि-ष्पीड्य रसं निगीर्य्यावशिष्टं त्यज्यते
इक्षुदण्डादि तच्च-ू ष्यमिति
Four Navaratri kind of Vratas observed in Ganapatya
tradition.
1. Siddhi Saptaratri= From Vaisakha sukla navami to
Vaisakha Purnima, Siddhi Saptaratri is observed. On
Vaisakhi Purnima, at dusk, Siddhi Jayanti ia celebrated.
2. Buddhi Navaratri= Sarad Navaratri is Buddhi Navaratri.
Aswin Sukla Navami is observed as Buddhi Jayanti.
3.Vinayaki Navaratri= From jyestha sukla pratipada to
Navami Vanchakalpa-latika is worshipped
4. Pusti Navaratri= From Asada Sukla Pratipada to
Navami or from Margasirsha Sukla pratipada to Navami
is celebrated from Pusti.
These all are Smartik Ganapatya Navaratris.
Tantrik Navaratris are same as Shaktas.
1. Asada navaratri is celebrated for Pusti/Siddhalakshmi
2. Aswin Navaratri is celebrated for Mahasiddhi or Mohini
or Yogini
3. Magha Navaratri is celebrated for Sanjivani and
Vinayaki
4. Chaitra Navaratri is celebrated for Neela Saraswati.
Apart from this, Margasirsha Sukla Chaturthi to Ekadasi
is celebrated for Mayuri, she is like Yogamaya of
Ganapati

Prithvi pushpe vakratundam – Vakra tunda in Muladhara


Ambu dweepey Lambodharam- Lambodara in svadhistana
Vanhipeetey Ballabham – vallabhesha in manipuraka
Hrdaye Sankataharam – sankata hara in anahata
Aakaashey Heramba Vaasam – heramba in vishuddhi
Aajnaa Gathah Haridhrabham – haridra ganesa in agyna
SarvoparisthithUcchishtam – ucchista in sahasrara
Svanandeshoparoparah- svanandesa in dvadasanta
सिद्ध तिथियां, रात्रियाँ और पर्व
ू एवं सिद्धिप्रद मानी गई है , जिनका
कुछ तिथियां अपने आप में ही महत्वपर्ण

ु के सन्यासी, साधु या ज्योतिषी को होगा । नीचे मैं


ज्ञान शायद ही इक्के दक्
इन्ही महत्वपूर्ण तिथियों को स्पष्ट कर रहा हूँ, जिसका प्रयोग करने से साधना
में स्वतः सिद्धि प्राप्त होती हैं ।

दस महाविद्या जयन्ति तिथियां

१- काली भाद्रपद कृष्ण अष्टमी


२- तारा चैत्र शुक्ल नवमी
३- ललिता माघ शक्
ु ल पर्णि
ू मा
४- भुवनेश्वरी भाद्रपद शुक्ल द्वादशी
५- भैरवी मार्गशीर्ष शक्
ु ल पर्णि
ू मा
६- छिन्नमस्ता वैशाख शक्
ु ल चतर्द
ु शी
७- ध म
ू ावती ज्येष्ठ शक्
ु ल अष्टमी
८- बगलामुखी वैशाख शुक्ल चतुर्थी
९- मातंगी वैशाख शक्
ु ल चतुर्द शी
१०- कमला कार्तिक कृष्ण अमावस्या

दस सिद्धविद्या जयन्ति तिथियां

१- कुब्जिका वैशाख कृष्ण त्रयोदशी की मध्य रात्रि को


२- चण्डिका वैशाख शक्
ु ल पर्णि
ू मा
३- मात्रा मार्गशीर्ष कृष्ण चतुर्द शी
४- सिद्धलक्ष्मी वैशाख शुक्ल चतुर्द शी
५- सरस्वती माघ शक्
ु ल पंचमी
६- अन्नपर्णा
ू मार्गशीर्ष कृष्ण चतुर्द शी
७- गायत्री श्रावण शक्
ु ल पर्णि
ू मा
८- पार्वती आषाढ़ शक्
ु ल नवमी
९- अपराजिता आश्विन शुक्ल नवमी
१०- विन्ध्यवासिनी भाद्रपद कृष्ण अष्टमी

दशावतार जयन्ति तिथियां

१- मत्स्यावतार कार्तिक शुक्ल नवमी


२- राम चैत्र शक्
ु ल नवमी
३- कृष्ण भाद्रपद कृष्ण अष्टमी
४- वामन भाद्रपद शुक्ल द्वादशी
५- नसि
ृ हं वैशाख शुक्ल चतुर्द शी
६- परशरु ाम वैशाख शक्
ु ल तत
ृ ीया
७- वाराह आश्विन शुक्ल चतुर्द शी
८- कल्कि श्रावण शक्
ु ल षष्ठी
९- बुद्ध भाद्रपद पर्णि
ू मा
१०- बलभद्र मार्गशीर्ष शक्
ु ल पर्णि
ू मा

युगारम्भ तिथियां

१- सतयग
ु वैशाख शक्
ु ल तत
ृ ीया
२- त्रेतायुग कार्तिक शुक्ल नवमी
३- द्वापरयग
ु भाद्रपद कृष्ण त्रयोदशी
४- कलियग
ु माघ कृष्ण अमावस्या

प्रत्येक महीने के गरु


ु पर्व
१- चैत्र शक्
ु ल तत
ृ ीया
२- वैशाख शक्
ु ल तत
ृ ीया
३- ज्येष्ठ शुक्ल दसमी
४- आषाढ़ शक्
ु ल पंचमी
५- श्रावण कृष्ण पंचमी
६- भाद्रपद शुक्ल त्रयोदशी
७- आश्विन कृष्ण त्रयोदशी
८- कार्तिक शक्
ु ल नवमी
९- मार्गशीर्ष शुक्ल तत
ृ ीया
१०- पोष शक्
ु ल नवमी
११- माघ शक्
ु ल चतर्थी

१२- फाल्गुन शुक्ल नवमी

चार नवरात्र

१- चैत्र शक्
ु ल प्रतिपदा से नवमी
२- आषाढ़ शुक्ल प्रतिपदा से नवमी (गुप्त)
३- आश्विन शुक्ल प्रतिपदा से नवमी
४- माघ शक्
ु ल प्रतिपदा से नवमी (गप्त
ु )

विशिष्ट रात्रि पर्व

१- वीर रात्रि चतर्द


ु शी को रविवार
२- महारात्रि आश्विन शुक्ल अष्टमी
३- कालरात्रि कार्तिक कृष्ण चतर्द
ु शी को अर्द्ध रात्रि में अमावस्या का योग होने
पर
४- मोह रात्रि भाद्रपद कृष्ण अष्टमी
५- क्रोध रात्रि चैत्र शुक्ल नवमी
६- घोर रात्रि मार्गशीर्ष कृष्ण अष्टमी (महाकाल वीर जयन्ति)
७- अचला रात्रि फाल्गन
ु कृष्ण अष्टमी को मंगल या शक्र
ु वार हो
८- तारा रात्रि ज्येष्ठ शुक्ल दसमी
९- शिवरात्रि फाल्गुन कृष्ण त्रयोदशी
१०- मत
ृ संजीवनी रात्रि अमावस्या को शक्र
ु वार हो और मध्यान्ह में सर्य
ू ग्रहण
हो
११- सिद्धि रात्रि चैत्र मास की अष्टमी को रविवार और संक्रांति हो (काली और
तारा के लिए विशेष सिद्धिप्रद)
१२- दारुण रात्रि वैशाख शक्
ु ल तत
ृ ीया को मंगलवार हो
१३- संद
ु री रात्रि किसी भी मास की पर्णि
ू मा को महानक्षत्र हो
१४- दे वी रात्रि किसी भी मास के कृष्ण पक्ष की अष्टमी को मंगलवार हो
१५- गणेश रात्रि माघ चतर्थी
ु को मकर संक्रांति हो
१६- सिद्धि रात्रि किसी भी माह की कृष्ण पक्ष की नवमी को मल
ू नक्षत्र हो
१७- बाण रात्रि किसी भी मास की कृष्ण पक्ष चतर्थी
ु को मंगलवार हो
१८-कृष्ण रात्रि किसी भी अमावस्या को मंगलवार हो
१९- धर्म रात्रि पौष या माघ अमावस्या को सूर्य श्रवण नक्षत्र पर हो
२०- दिव्य रात्रि अमावस्या को मंगल या शक्र
ु वार और सर्य
ू क्रूर नक्षत्रो पर हो
२१- विष्णु रात्रि भाद्रपद मास की अष्टमी को बध
ु वार हो
२२- काम संजीवनी रात्रि माघ शुक्ल पंचमी (बसन्त पंचमी) को शक्र
ु वार हो
२३- रिद्धि सिद्धि योग रात्रि चैत्र मास की तत
ृ ीया को रे वती नक्षत्र हो
२४- पर्वराज रात्रि पौष मास की तत
ृ ीया को शुक्रवार तथा रे वती नक्षत्र हो ।
चार महारात्रि

१. मोहरात्रि (जन्माष्टमी) ।
२. कालरात्रि (नरक चतुर्द शी) ।
३. दारुण रात्रि (होली) ।
४. अहोरात्रि (महाशिवरात्रि) ।
கணியன்_பூங்குன்றனார்
சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை அடுத்த மகிபாலன்பட்டி

சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன்

பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் இது.

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்”. இதன் முதல் வரி மட்டுமே பிரபலம்.


பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது.

முழு பாடலும் அதன் பொருளும்.

"யாதும் ஊரே; யாவரும் கேளிர்,


தீதும் நன்றும் பிறர்தர வாரா,

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன,

சாதலும் புதுவது அன்றே,

வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே,


முனிவின் இன்னாது என்றலும் இலமே
மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்
ஆதலின் மாட்சியின்

பெயோரை வியத்தலும் இலமே,

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.


பொருள்

யாதும் ஊரே யாவரும் கேளிர் - எல்லா ஊரும் எனது ஊர்.

எல்லா மக்களும் எனக்கு உறவினர் என்று நினைத்து,

அன்பே வாழ்வின் அடிப்படை, ஆதாரம் என்று

வாழ்ந்தால், இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது, சுகமானது.


"தீதும் நன்றும் பிறர் தர வாரா" 'தீமையும் நன்மையும் அடுத்தவரால்
வருவதில்லை' எனும் உண்மையை உணர்ந்தால்
சக மனிதர்களிடம் விருப்பு வெறுப்பு இல்லா ஒரு சம நிலை சார்ந்த

வாழ்வு கிட்டும்.

"நோதலும் தனிதலும் அவற்றோ ரன்ன" துன்பமும் ஆறுதலும் கூட


மற்றவர் தருவதில்லை.மனம் பக்குவப்பட்டால், அமைதி அங்கேயே

கிட்டும்.

"சாதல் புதுமை யில்லை" பிறந்த நாள் ஒன்று உண்டெனில்,


இறக்கும் நாளும் ஒன்று உண்டு. இறப்பு புதியதல்ல. அது

இயற்கையானது. எல்லோருக்கும் பொதுவானது. இந்த உண்மையை

உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால் எதற்கும் அஞ்சாமல்

வாழ்க்கையை வாழும் வரை ரசிக்கலாம்.

"வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே


முனிவின் இன்னாது என்றலும் இலமே" இந்த வாழ்க்கையில் எது,

எவர்க்கு, எப்போது, என்ன ஆகும் என்று எவர்க்கும் தெரியாது.

இந்த வாழ்க்கை மிகவும் நிலை அற்றது. அதனால், இன்பம் வந்தால்

மிக்க மகிழ்வதும் வேண்டாம். துன்பம் வந்தால் வாழ்க்கையை

வெறுக்கவும் வேண்டாம். வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய்

வாழ்வோம்.

"மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாதுகல்பொருது இரங்கும்வ


மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப்

படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்"

இந்த வானம் நெருப்பாய்,மின்னலையும் தருகிறது.நாம் வாழ

மழையையும் தருகிறது. இயற்கை வழியில் அது அது அதன் பணியை

செய்கிறது. ஆற்று வெள்ளத்தில், கற்களோடு, அடித்து முட்டி செல்லும்

படகு போல,வாழ்க்கையும், சங்கடங்களில் அவரவர் ஊழ்படி அதன்

வழியில் அடிபட்டு போய்கொண்டுஇருக்கும். இது இயல்பு என

மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்.

"ஆதலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"


இந்த தெளிவு பெற்றால், பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பாத்து

மிகவும் வியர்ந்து பாராட்டவும் வேண்டாம்.சிறிய நிலையில் உள்ள

சிறியவர்களைப் பார்த்து ஏளனம் செய்து இகழ்வதும் வேண்டாம்.

அவரவர் வாழ்வு அவரவர்க்கு அவற்றில் அவரவர்கள்பெரியவர்கள்.

திருமறைக்காட்டில் கதவம் திறக்கப் பாடிய பதிகம்

திருமறைக்காட்டில் கதவம் திறக்கப் பாடினார் நாயனார் பதிகம் ஒன்று

பதிகத்தின் முதற் பாடலில் கோரிக்கை வைத்தார். என்ன கோரிக்கை?


கண்ணினால் உமைக்காணக் கதவினைத் திண்ணமாகத் திறந்தருள்

செய்ம்மினே - என்பது அந்தக் கோரிக்கை


இப்படித் தொடங்கிப் பத்துப் பாடல்கள் பதிக முடிவில் திரும்பவும் அதே

கோரிக்கையை, எழுத்துப் பிசகாமல் வைக்கிறார் திருநாவுக்கரசர்.


கண்ணினால் உமைக்காணக் கதவினைத் திண்ணமாகத் திறந்தருள்

செய்ம்மினே -திருஞான சம்பந்தர் கேட்டுக் கொள்ள, மக்கள்

பெருந்திரளாய்ப் பார்த்திருக்கப் பத்துப் பாடல்கள் பாடியும், மறைகள்

பூசித்து மூடிய கதவு திறக்கவேயில்லை. பதிக நடைமுறைக்கு மாறாக

இன்னுமொரு பாடல் சொற்கோவிடமிருந்து. இரக்கமொன்றிலீர்

எம்பெருமானிரே என இறைஞ்சுகின்றார்.
சரக்கவிக் கதவந் திறப்பிம்மினே விரைவாகக் கதவைத் திறந்திடுங்கள்

என்றார். இப்போது கதவுகள் திறந்தன.

இந்நிகழ்ச்சி பற்றி மக்கள், ஆன்மிக உரையாளர்கள், இலக்கியவாதிகள்

இன்ன பிறர் வினாக்கள் சில எழுப்பி விடை காண முற்படுவர்.

கதவு திறக்கப் பதினொரு பாடல்கள் பாடினார் நாவரசர். இரக்கமில்லையா


என நாவரசர் விடுத்த சொல்லைச் செவிமடுத்துப் வேதாரணியர்

கதவுகளைத் திறந்தார்.

நாவரசர் பாடியது ஞானப்பிள்ளை வேண்டுகோளை ஏற்று திரும்பக் கதவை


அடைக்கத் திறக்க திருஞான சம்பந்தரைப் பாடுமாறு வேண்டினார்

திருநாவுக்கரசர். திருஞானசம்பந்தர் ஒரு பாடல் பாடிய அளவிலேயே

கதவுகள் மூடின.
திருநாவுக்கரசர் பல பாடல்கள் பாடிப் பின் நிகழ்ந்தது, திருஞானசம்பந்தர்
ஒரு பாடல் பாடி முடிக்கவும் நிறைவேறியது ஒரேநாளில் நடைபெற்ற

நிகழ்ச்சி. எண்ணம் ஈடேறியதில், மக்கள் வழிபாட்டிற்கு வாயில்வழிப்

போக்குவரத்து முன்பு போலானது கண்டு மக்களும், இரு நாயன்மார்களும்

மகிழ்ந்தனர். இருப்பினும் சில வினாக்கள்...?

நாவரசருக்குக் காலம் பிடித்தது கதவைத் திறக்க... அதன் காரணம் என்?


சாமானிய மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் சில

சொற்பொழிவாளர்கள் இரு கருத்துகள் வைப்பதைக் கேட்டிருக்கிறேன்.

1. திருநாவுக்கரசர் சொற்களில் சொக்கிப் போன பெருமான், அவர் இன்னும்


பாட வேண்டிக் காலந் தாழ்த்தினார் வேதாரணியர்.

2. வெகுநாட்களாகத் தாழிட்டு அடைத்திருந்த கதவு. அதனால்


திறப்பதற்குக் கால அவகாசம் தேவைப்பட்டது.

முதற்கூற்றை ஏற்றால் திருஞானசம்பந்தரைச் சிறுமைப்படுத்துவதாக அஃது

அமையும். காழிப்பிள்ளையின் பாடல்களைக் கேட்பதில் பெருமானுக்கு

விருப்பமில்லை என்றாகிவிடும். எனவே முதற்கூற்று பொருந்தாக் கூற்று.

இரண்டாவது கூற்றை ஏற்றால், அது வேதாரணியரைச் சிறுமைப்

படுத்துவதாகும். இராவணனைக் கால்பெருவிரலால் அடர்த்து அருள்

செய்தவர்க்குக் கதவு திறக்கக் காலந் தாழ்க்குமோ?

ஆனால் திருநாவுக்கரசருக்கு இந்தச் சமுசயம் இருந்தது உண்மை. அவர்

துயிலிலும், இக்கருத்து அவரை மோதி வாட்டியது என்பதை அவர் பதிக

வாயிலாகவே உணர முடிகிறது. அவ்வாறாயின் பெருமான் இரு

நாயன்மார்களையும் ஒக்க நோக்கவில்லையா?


கடலில் கட்டுண்டு கிடந்தவரை மீ ட்ட பெருமான் இப்படிக் கவலைக்

கடலில் தத்தளிக்க விடுவாரா?

திருநாவுக்கரசர் எது குறித்துக் கவலையுற்றார்?


திருமறைக்காட்டில் "திருமுன் கதவம் திருக்காப்பு நீங்கப் பாடும்" என

அப்பரிடம் சொன்னவர் ஆழித்தோணிபுரத்து அரசர் (12/27/267). அதனாலே

"பண்ணின் நேர் மொழியாள்" (5/10) என்று எடுத்து


பாட - பயன் துய்ப்பான் தெண்ண ீர் அணிந்தார் திருக்காப்பு நீக்க தாழ்க்க -
திருக்கடைக்காப்பில் எண்ணர்ீ இரக்கம் ஒன்றிலீர் என்று பாடி

இறைஞ்சுதலும் " (12/27/268) - காப்பு நீங்கியது என்கின்றார் சேக்கிழார்

அடிகள்.
பண்ணின் பயனைத் துய்க்கும் நிலையில் இறைவன் காப்பை நீக்க
மறந்தான் என்பதல்ல பதிகம் என்றால் பத்து பாடல் என்பதனால்

அதுவரை காத்திருந்தான் எனலாம். இந்தக் காத்திருப்பு கதவை பற்றிய


நினைப்பில் பதிகம் பாடிய அப்பருக்கு காலம் தாழ்த்துவதாய் தோன்ற

"இரக்கம் ஒன்றிலீர்" எனப் பாடவைத்தது. அத்துடன் பதிகமும் முடிய கதவு


திறந்தது.
இம்மாதிரியான சொல் திருஞான சம்பந்தர் வாக்கில் வரவேண்டாம் என்ற

உணர்வால் கதவு உடன் அடைக்கப்படினும் இறைவன் "பதிகப்பிரியன்"


என்பதனால் பாடுவதை நிறுத்தாமல் பதிகத்தை முழுவதுமாகப் பாடி

முடித்தார். "பதிகப்பிரியன்" பதிகம் முடியும் வரை காத்திருந்தது.அப்பருக்கு

மட்டுமா? கழறிற்றிவார் என்னும் சேரமான் பெருமாளுக்கும் இதே நிலை.

தில்லையில் சுந்தரர் பாடிக் கொண்டிருந்ததை கேட்டு திருஅஞ்சைக்


களத்தில் பூசித்துக் கொண்டிருந்த சேரமான் பெருமாளுக்கு நாளும்
சிலம்போசை தந்தவர் காலம் தாமதிக்க அதற்குக் காரணம் வினவிய

ஞான்று சொல்லப்பட்ட காரணம் "மன்றினிடை நம் கூத்தாடல் வந்து


வணங்கி வன்தொண்டன் ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி உரை சேர்

பதிகம் பாடுதலால் நின்று கேட்டு வரத் தாழ்த்தோம் (12/ 43/6) என்பதாம்.

எனவே இறைவன் அடியார்களை ஒக்க நோக்கவில்லை என்பது அல்ல -


அவர் அவர்க்கு உள்ளபடி ஈசன் அருளாலே அவரவரைக் கொண்டு
இயற்றுவான் ஆனால் அவரவரை நல்லார் பொல்லார் என்று நாடுவது

என்? எல்லாம் சிவன் செயல் என்று எண்ணு" ( தருமை ஆதீன குருஞான

சம்பந்தரின் . சிவபோக சாரம் - 73) என்பதே சித்தாந்த சைவம்.

வாசியுள்ள காசைப் பெருமான் ஞானசம்பந்தருக்கு வழங்கினாரா?


அதற்கு திருஞான சம்பந்தர் முறையிட்டு நிவாரணமடைந்தாரா?

இதெல்லாம் கர்ண பரம்பரைக் கதைகளா?


நாம் தலைவர்களாக ஏற்றுக் கொண்டவர்களைப் பெருமைப்

படுத்துவதற்காகச் சொல்லப்பட்ட செய்திகளா?

நம்ப முடியவில்லையே!
இந்நாளில் அதேப்போல் நிகழாததால் நாம் பலபட உள்ளம் பேதலிப்பது

இயல்பு. இதேப்போல, திருமறைக்காட்டில் திருநாவுக்கரசர் தான் பலபாடல்

பாடியே திறந்த கதவு, திருஞான சம்பந்தரின் ஒரு பாடல் முடிவில்

தாழிட்டுக் கொண்டது பற்றி சமுசயம் இருந்தது.

இது திருஞான சம்பந்தர் காரணமாக எழுந்த சமுசயம் அன்று.

தனக்குப் பத்தியின் உரைப்புக் குறைவாக உள்ளதா என்ற ஐயப்பாடு.


இவ்வாறான நினைப்பில் தூங்கிப் போனவர் மனத்தில் பெருமான்

நிழலாடினார். அவர், திருநாவுக்கரசரைத் திருவாய்மூருக்கு வாவெனப்

பணித்தார். இறைவனார் முன் செல்ல, நாவரசர் பின் செல்ல, அவர்


சென்ற செய்தி கேட்டுத் திருஞான சம்பந்தரும் அங்குச்

சென்றார்.அத்தலத்து இறைவனைப் பாடிப் பரவும் திருநாவுக்கரசர்,

திருவழிமிழலைச்
ீ சம்பவத்தை நினைவு கூர்கிறார்.
பாடிப் பெற்ற பரிசில் பழங்காசு

வாடி வாட்டந் தவிர்ப்பார் அவரைப்போல்

தேடிக்கொண்டு திருவாய்மூர்க்கே எனா

ஓடிப் போந்திங்கு ஒளித்தவாறு என்கொலோ

திருஞான சம்பந்தர் வாசி தீ ரவே காசு நல்குவர்ீ எனப் பாட அவர்


வாட்டத்தைப் போக்கும் விதமாகத் திருவழிமிழலையிலே
ீ கொடையளித்த

பெருமான், திருவாய்மூரிலே அவருக்குத் தன்னைக் காட்டாமல், பெருமான்

ஒளியலாமா என்கிறார். திருநாவுக்கரசர் பதிவைப் படித்த பின்னர் ஐயம்

முற்றாக விலகுமல்லவா !
இமையப்பாவை திருமுலைப்பால் தேசம் உய்ய உண்டவர் தாம்

திருமகனார் ஆதலினால் காசு வாசியுடன் பெற்றார் - கைத்தொண்டு ஆகும்


அடிமையினால் வாசி இல்லாக் காசு பெற்று வந்தார் வாகீ சர் (12/27/260)

என்கின்றார் சேக்கிழார் அடிகள்.

இதிலே "வாசி'" என்ற சொல்லுக்கு குற்றம் என உரை கண்டு அந்த "வாசி


தீர" - குறை தீர பதிகம் (1/92) பாடினார் என்கின்றனர் உரையாசிரியர்
பலர். கேட்டது யாரிடம்? மாசின் மிழலையீரிடம். (1/92/1).மாசு என்றால்

குற்றம். அப்படிக் குற்றம் இல்லாதவன் எப்படி குற்றம் உடைய காசைத்

தருவான்? எனவே "வாசி' என்ற சொல்லுக்கு குற்றம் எனும் உரை

ஏற்புடையதாகத் தெரியவில்லை. வேறு ஏதாவது பொருள் இருத்தலே

அமைவுடைத்து. இவ்வகையில் சிந்திக்கத் தூண்டியது மேற்குறித்த

சேக்கிழார் அடிகளின் பெரிய புராண பாடலே ஆகும் (12/27/260) .


திருமகனார்க்கு குற்றத்தோடு உடைய காசும் கைத்தொண்டு செய்வார்க்கு

குற்றம் இல்லாக் காசும் எனக் கொடுக்க வாய்ப்பு உண்டா எனில், இல்லை

என்றே சொல்லத் தோற்றுகின்றது.

இந்நிலையில் "வாசி" என்ற சொல்லுக்கு தமிழ் அகராதியில் பொருள்

தேடினால் "வேற்றுமை" என்று ஒரு பொருள் இருக்கின்றது.

காசில் என்ன வேற்றுமை. கொடுக்கப்பட்ட காசு தங்கத் காசு ஆகையினால்

சம்பந்தர் திருமகனார் ஆதலினால் அது "சொக்கத் தங்கம்" ஆகவும்.

கைத்தொண்டு செய்தார்க்கு "ஆபரணத்தங்கம்" ஆகவும் எறக் கொள்ளலாம்

அன்றோ?
ஆபரணத்தங்கத்தை உரசிப்பார்க்க அவசியம் இல்லை ஆனதினால் ஆவண

வதயில்
ீ (12/34/570) உடன் மாற்றப் பட்டது. விரைவில் பொருள் வாங்கி

சமைக்க முடிந்தது அப்பர் திருமடத்தில். மாறாக சொக்கத்தங்கத்தை

உரசிப் பார்க்க நேரம் .ஆனதால் சற்றுக் கால தாமதம் ஆனது சம்பந்தர்

திருமடத்தில்.

இந்த கால தாமத்தை தவிர்க்கவே சம்பந்தர் பாடினார்- கறை கொள்

காசினை முறைமை நல்குமே.(1/92/2) - கறை என்பதற்கு உயர்ந்த என்று

ஒரு பொருள் உண்டு - "கறைக் கண்டன்" - தேவர்கள் அமுது உண்ண

நஞ்சுண்டு உயர்வு காட்டிய "திருநீலகண்டன்" - பெயக்கண்டும் நஞ்சுண்டு

அமைந்த நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் (திருக்குறள் - 580).

"ஆட்கொள்ளும் வித்தகர்"
திருவாசகத்தின்கண் வரும் சிறந்த அழகிய இனிய பற்பல தொடர்களில்,

'ஆட்கொள்ளும் வித்தகர்' என்பது ஓர் அரும்பெறற் பெரும்பொருட்டொடர்.


திருவெம்பாவையில் 15 ஆம் செய்யுளில், "ஆர் ஒருவர் இவ்வண்ணம்

ஆட்கொள்ளும் வித்தகர்" எனவரும் வரியில், இவ்வினிய நல்ல தொடர்,

செவ்விதிற் பயின்றிருத்தல் காணலாம். ஆட்கொள்ளும் வித்தகர்,

சிவபெருமான். ஆட்கொள்ளப்பட்ட வித்தகர் மணிவாசகர்.

ஆட்கொள்பவரைத் தலைவர் அல்லது எசமானர் என்றும்,


ஆட்கொள்ளப்படுபவரை அடியவர் அல்லது பணியாளர் என்றும் குறிப்பது

வழக்கம்.

இங்கு மணிவாசகர் இறைவனை "ஆட்கொண்ட வித்தகர்" என்னாமல்,

"ஆட்கொள்ளும் வித்தகர்" எனத் திருவாய் மொழிந்தருளிய அருமைப்பாடு,


பெரிதும் போற்றுதற்குரியது. தம் ஒருவரை ஆட்கொண்டது மட்டுமேயன்றி,

எல்லா உயிர்களையும், எல்லா காலத்தும், எல்லா இடத்தும் ஆட்கொண்டு

அருள்புரியும் இயல்பினன் சிவபெருமான் என்பதனை, மணிவாசகர்

இவ்வாற்றாற் புலப்படுத்தியருளினார். இதன்கண், உலகில் பிறரை

ஆட்கொள்ளும் தலைவர்களுக்கும், தம்மை ஆட்கொண்டருளிய

தலைவருக்கும் இடையேயுள்ள, வேறுபாடுகளைக் குறிப்பிற் புலப்பட

விளக்கியருள்கின்றார் மணிவாசகர். நினைத்தொறும் நினைத்தொறும்


அரிய பல உண்மைகளை உணர்த்திக் கொண்டு நிற்கும் இத்தொடரின்

பொருள் நுட்பங்களை, இங்கு நாம் ஒரு சிறிது சுருக்கமாக சிந்தித்து

இன்புறுவோமாக!!

(1) உலகத்தில் ஆட்கொள்ளுபவர் அனைவரும், தாம் ஆட்கொள்ளும்


அடிமைகளால் தமக்கு விளையும் பலதிற நலங்களையும் வசதிகளையும்

எண்ணியே, அடிமைகளை அமர்த்திக் கொள்வர். இதுதான் உலகியல்

தலைவர்களின் இயல்பு. ஆனால் குறைவிலா நிறைவினன் ஆக விளங்கும்

இறைவனாகிய அருளியல் தலைவனோ, அடியவர்களால் தனக்கு ஏதேனும்

வசதியும் நலமும் விளையும் என்று எதிர்பார்க்கின்றிலன். தன்னை

அடைந்தவர்களுக்கு தான் இன்பம் தருதலை விரும்பியே, அவன்

அடியவர்களை ஆட்கொள்கிறான். 'தன்னடைந்தார்க்கு இன்பங்கள்

தருவானை', 'சங்கரனார் தம்மைப்போலத் தம் அடியவர்கட்கும் இன்பம்


அளிப்பவர்' என்பது திருஞானசம்பந்தர் தேவாரம். "இன்பமே என்னுடைய

அன்பே" என்பர் மணிவாசகர்.

2. எசமானர்களின் மூட்டை முடிச்சுக்கள் ஆகிய பாரங்களைத் தூக்கி


சுமந்து கொண்டு உடன்செல்லுதல், உலகத்து வேலைக்காரர்களுக்குரிய

இயல்பு. ஆனால் இறைவனோ "வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே!

நீங்கள் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுடைய பாரத்தைச் சுமந்து

கொண்டு உங்களுக்கு ஆறுதல் அளிக்கின்றேன்" என்று, தன்


அடியவர்களின் பாரங்கள் பலவற்றையும் தானே வலிந்து வந்து ஈர்த்து

ஏற்றுச் சுமந்து கொள்கின்றான். 'தமக்கு அன்புப்பட்டவர் பாரமும் பூண்பர்,

ஆரூர் அரநெறியாரே' என்பர் திருநாவுக்கரசர். சைவ சித்தாந்த சந்தான

ஆசிரியர்களுள் ஒருவராகிய உமாபதி சிவமும், "இறைவனுக்கு எடுத்துச்

சுமப்பான்"(Porter) என்னும் ஒரு பெயரைப் புதிது படைத்துத் தமது

திருவருட்பயன் என்னும் நூலில் வழங்கியிருத்தல் காணலாம். "செம்மலர்

நோன்தாள்", "மதனுடை நோன்தாள்" என்னும் ஆன்றோர்

அருந்தொடர்களும் இவ்வுண்மையினை வலியுறுத்தும்.

Special meru in Tumkur


Hebbur (Tumkur) Sri Sarada kamakshi temple has a unique sricakra
mahameru seated on kurma peetha – eight elephants are carved in standing
posture , a serpent and eight sakti are carved between elephants. Above
these are two platforms and this are 7 lotus levels with 35 25 22 18 12 8
and 5 petals. Then are the triangles 14 10 10 8 and 1 and central bindu.
Ashvakranta rathakranta vishnukranta tantra
According to the tradition found in Tantric texts themselves Tantras are
innumerable. The Saundaryalahari refers to 64 Tantras. The Tantraloka of
Abhinavagupta states that there are three groups of ten, eighteen and sixty-
four Shaiva tantas. In the Mahasiddhasaratantra, India and its adjoining
regions are divided into three krantas or divisions namely
Vishnukranta (extended from Vindhya hills up to Chittagong and included all
places in North-Eastern region)
Rathakranta (comprised of the entire area in the North-Western region which
lay between the Vindhyas and Mahachina or Tibet)
Ashvakranta (extended from the Vindhyas the southern oceans); each of
these krantas is said to has 64 tantras.
A few tantric texts speak of nine or six amnayas or regions- eastern,
western, northern, southern, upper and lower- each containing its distinctive
texts, cults and rituals. From geographical point of view tantra are divided
into four classes, viz. Kerala, Kashmira, Gauda and Vilasa
These are the etymologies offered by Bhatta Bhaskara:

१। रोदयति सर्वमन्तकाले इति रुद्रः।


1| rodayati sarvamantakāle iti rudraḥ|

२। रुतौ नामान्ते द्रवति द्रावयति वा रुद्रः।


2| rutau nāmānte dravati drāvayati vā rudraḥ|

३। रुत्या वेदरूपया धर्मादीनवलोकयति प्रापयति इति वा रुद्रः।


रुत्या वाग्रूपया बाष्पं प्रापयतीति केचित ्।
रुत्या प्रणवरूपया स्वात्मानं प्रापयतीतीतरे ।
3| rutyā vedarūpayā dharmādīinavalokayati prāpayati iti vā rudraḥ|
rutyāa vāgrūpayā bāṣpaṁ prāpayatīti kecit|
rutyāa praṇavarūpayā svātmānaṁ prāpayatītītare|

४ रुदो रौतीति सत्ये रोरूयमाणो द्रवति प्रवशति म्र्त्यानित्त्यन्ये।


4 rudo rautīti satye rorūyamāṇo dravati pravaśati mrtyāanittyanye|

५। रुक् तेजः अस्यास्तीति रुद्रः।


5| ruk tejaḥ asyāstīti rudraḥ|
६। रोधिका बन्धिका मोहिका वा शक्तिस्तद्वान ् तस्या द्रावयिता वा रुद्रः।
6| rodhikāa bandhikāa mohikāa vā śaktistadvāan tasyāa drāvayitāa vā rudraḥ|

६। रुदं संसारदःु खम ् द्रावयतीति रुद्रः।


अशुभद्रावको रुद्रो यज्जहार पुनर्भवम ्।
तस्माच्छिवस्ततो रुद्रशब्दे नात्राभिधीयते॥
6| rudaṁ saṁsāraduḥkham drāvayatīti rudraḥ|
aśubhadrāvako rudro yajjahāra punarbhavam|
tasmāacchivastato rudraśabdenāatrābhidhīyate||

७। रुतिम ् शब्दम ् राती ददातीति रुद्रः।


रुतिम ् शब्दं वेदात्मानं ब्रह्मणे ददाति कल्पादौ इति रुद्रः।
7| rutim śabdam rātī dadātīti rudraḥ|
rutim śabdaṁ vedāatmānaṁ brahmaṇe dadāti kalpādau iti rudraḥ|

ஐந்து பவித்திரமான வஸ்துக்கள்!

1. எச்சில்
2. சிவ நிர்மால்யம்
3. வாந்தி
4. சவத்தின் மேல் விரிக்கும் போர்வை
5. காக்கையின் மலத்தினாலே விளைந்த ஒன்று

மகாபாரதத்தில் வேதவியாசர் ஐந்து பவித்திரமான வஸ்துக்களை

சொல்லியிருக்கிறார்!

உச்சிஷ்டம் சிவ நிர்மால்யம் வமனம் ஸவகர்படம் காகவிஷ்டாதே

பஞ்சைதே பவித்ராதி மனோஹரா!

அதாவது ஐந்து பவித்திரமான வஸ்துக்கள்!

1. எச்சில்
2. சிவ நிர்மால்யம்
3. வாந்தி
4. சவத்தின் மேல் விரிக்கும் போர்வை
5. காக்கையின் மலத்தினாலே விளைந்த ஒன்று
இந்த ஸ்லோகத்திற்கு இப்படி ஒரு பொருளா? அபவித்திரமான

பொருட்கள். நிஷித்தமான இந்த பொருட்களை வேதவியாசர் எப்படி

பவித்திரமான பொருட்கள் என்று சொல்லியிருப்பார்? சொல்லப்பட்ட இந்த

ஐந்து வஸ்துக்களும் வைஷ்ணவர்கள் ஒதுக்கி வைத்துள்ளவை.

சமஸ்கிருதத்தில் அப்படியே மொழி பெயர்த்தால், இவை விரோதத்திற்கு

உண்டான பொருட்கள். நாம் சொல்வதற்கும் இதன் அர்த்தத்தையும்

பார்த்தால் துளிக்கூட சம்பந்தம் இல்லை.!

வேதவியாசர் சாக்ஷாத் மகாவிஷ்ணுவின் அவதாரம்,

வ்யாஸாய விஷ்ணு ரூபாய வியாச ரூபாய விஷ்ணவே!

18 புராணங்களையும் உப புராணங்களையும் பாகவதம் முதலியன


வைகளையும் ரசனை செய்து, பாமரர்களுக்கும் ஸ்திரிகளுக்கும் கொண்டு

போய் சேர்க்க, ஐந்தாவது வேதமாக மகாபாரதத்தை ரசனை செய்கிறார்!

வேதங்களில் இருக்கும் சப்தங்களுக்கு குறைந்தபட்சம் மூன்று அர்த்தங்கள்

உள்ளன. மகாபாரதத்தில் உள்ள ஸ்லோகத்திற்கு குறைந்தபட்சம் பத்து

அர்த்தங்கள் உண்டு. அந்த மகாபாரதத்தில் அங்கம் வகிக்கின்ற விஷ்ணு


சகஸ்ரநாமத்தில் ஒவ்வொரு நாமத்திற்கும் குறைந்தபட்சம் நூறு அர்த்தம்

உண்டு. ஆனந்த தீர்த்த பகவத் பாதாச்சாரியார் விஸ்வ என்ற நாமத்திற்கு

100 அர்த்தங்களை காண்பித்து இருக்கிறார் என்பதை அவருடைய

சரித்திரத்தில் காண்கிறோம். தான் எழுதும் வேகத்திற்கு ஏற்றார் போல

சொல்ல வேண்டும் என்ற விக்னேஸ்வரரின் வேண்டுதல் படி,


வேதவியாசர் சொல்லச்சொல்ல விக்னேஸ்வரர் தன் கொம்பை உடைத்து

மகாபாரதத்தை அவருடைய வேகத்திற்கு எழுதினார். அப்போது


வேதவியாசர் ஒரு நிர்பந்தம் வைக்கிறார் அதாவது அர்த்தம் புரிந்து

கொண்டு எழுத வேண்டும் என்பதே. ஆனால் விக்னேஸ்வரனுக்கு சில

இடங்களில் அர்த்தங்கள் புரியவில்லை. ஏனென்றால் அது சில

இடங்களில் குஹ்ய பாஷைகளில் சொல்லப் சொல்லப்பட்டிருந்தது.


அதாவது மறைமுகமாக சிலவற்றை வைத்து சொல்லப்பட்டது தான் இந்த
ஸ்லோகம். அப்போது விக்னேஸ்வரர் பிரார்த்தித்ததன் பேரில்

வேதவியாசர் அவருக்கு அந்த அர்த்தத்தை தெளிவுபடுத்துகிறார்.!

ஐந்து பவித்ரமான வஸ்துக்களை பார்க்கலாம்!

முதலாவதாக எச்சில். எச்சில் வஸ்துவான ஒன்று ஸ்ரீமந்நாராயணனுக்கும்


மகாலட்சுமிக்கும் தேவதைகளுக்கும் முக்யபிராணருக்கும் அபிஷேகம் ஆக

பயன்படுகிறது. அது பசுவினுடைய பால் அதாவது க்ஷீரம் அபிஷேகத்திற்கு

எப்படி இருக்க வேண்டும் என்பது சம்பிரதாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது அது பசுவினுடைய பால் ஆக இருக்க வேண்டும், அதுவும்

உயிருடன் உள்ள கன்றுடன் கூடிய பசு ஆக இருக்க வேண்டும், (கோபூஜை

கூட கன்றுடன் கூடிய பசுவுக்கு செய்வதே சிரேஷ்டம்) மேலும் கன்று

பால் குடித்தவுடன் தான் பாலைக் கறக்க வேண்டும். அதாவது கன்று

குடித்தவுடன், பசுவின் மடியை அலம்பாமல் அதாவது அந்த எச்சிலை

(உச்சிஷ்டத்தை) துடைக்காமல் அப்படியே பால் கறக்க வேண்டும் என்று


சாஸ்திரம் சொல்கிறது. அந்த எச்சிலை அலம்பாமல் கறக்கும் பாலைத்
தான் ஸ்ரீமன் நாராயணன் மகாலட்சுமி தேவதைகள் எல்லோரும்

ஸ்வகாரம்
ீ செய்கிறார்கள். அந்தக் கன்று எச்சில் செய்த பால்தான்

தேவதைகளுக்கு அபிஷேகத்திற்கு பவித்திரமான வஸ்துவாக உள்ளது.


அதையே தான் வேதவியாசர் உச்சிஷ்டம் என்று எச்சிலை பவித்திரமான

வஸ்துவாக சொல்லியுள்ளார்!

இரண்டாவது சிவ நிர்மால்யம். பொதுவாக வைஷ்ணவர்கள் சிவ

நிர்மால்யத்தை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் அனைவருமே


பவித்திரமாக தலையில் தெளித்துக் கொள்ளும் ஒரு சிவ நிர்மால்யம்

உள்ளது. அது என்னவென்றால், சகலலோக பாவங்களையும்

தீர்க்கக்கூடிய கங்காஜலம். எந்த ஒரு ஜீவோத்தமரான பிரம்மதேவர் தன்


கமண்டலத்தில் இருந்து ஸர்வோத்தமனான விஷ்ணுவின் பாதங்களுக்கு

அபிஷேகம் செய்தாரோ அந்த தீர்த்தம் . அதை சிவன் தன்

சிரமேற்கொண்டு தரிக்கிறார். அவருடைய சிரஸிலிருந்து வரும் அந்த

கங்கா ஜலத்தை அனைத்து வைஷ்ணவர்களும் எடுத்துக் கொள்கிறார்கள்.

அந்த தீர்த்தத்தை பவித்ரமான வஸ்துவாக ஸ்வகாரம்


ீ செய்கிறார்கள்!
மூன்றாவதாக பவித்திரமான வஸ்துவாக சொல்லப்பட்டது வாந்தி அது

எப்படி பவித்திரம் ஆகும்?. தேவதைகள் அபிஷேகத்திற்கு,


ஆயுர்வேதங்களில் ஔஷதமாக சொல்லப்பட்டிருக்கும் மது அதாவது

தேன். தேன ீக்கள் மகரந்த மலர்களில் உள்ள தேனை தன் வாயினால்


உறிஞ்சி எடுத்துக்கொண்டு வந்து தன்னுடைய கூட்டிற்கு வந்து வாயில்

உள்ளதை கக்கி வாந்தி எடுத்து சேகரிக்கிறது. அப்படி தேன ீக்கள் வாந்தி


எடுத்த தேன் தான் தேவதைகளின் அபிஷேகத்திற்கு பவித்திரமான

வஸ்துவாக உள்ளது!

நான்காவதாக சொல்லப்படும் பவித்ரமான வஸ்து ஸவகர்படம். அதாவது

சவத்தின் மேல் போர்த்திருக்கும் போர்வை. அது எப்படி சவத்தை

தொட்டாலே தீட்டு அது எப்படி மடி ஆகும்? எப்பேர்ப்பட்ட


பாந்தவ்யமானவர் இறந்தாலும் ஒரே நாள் மூன்று நாள் பத்து நாள் என்று

சூதகம் உண்டு. அது என்னவென்று பார்த்தால் பட்டு வஸ்திரம் என்கிறார்

வேதவியாசர். அதாவது பட்டுப்பூச்சிகள் கூடுகளில் உள்ள போதே அதை


எடுத்துக் கொண்டு வந்து கொதிக்கும் தண்ண ீரில் போட்டு அதிலிருந்து

எடுக்கப்படும் நூலை வைத்து தயாரிக்கப்படுவது பட்டு வஸ்திரம். அதாவது


சவதத்தின் மேலிருந்து எடுத்த போர்வை ஆன இது மடி என்பது மட்டு

மல்ல மகாவிஷ்ணுவுக்கும் பிடித்த பீதாம்பரம். மேலும் மான் தோல் -

கிருஷ்ணாஞ்சனமும் கூட சவத்தின் மேல் போர்த்திய போர்வை. ஜப தப


அனுஷ்டானங்கள் மேற்கொள்பவர்களுக்கு மான் தோல் ஆஸனம் மிகச்

சிறந்தது. இதுவே நான்காவதாக சொல்லப்பட்ட ஸவகர்படம் என்னும்

பவித்திரமான வஸ்து!

ஐந்தாவதாக பவித்திரமான வஸ்து என்று சொல்லப்பட்டது காகவிஷ்டா.

அதாவது காக்கையின் மலத்திலிருந்து எடுக்கப்படும் ஒரு வஸ்து.

அதாவது காக்கையின் மலத்தினால் வளர்ந்த, கோவில் கோபுரங்களில்

மேலே உள்ள அஸ்வத்த செடி. அதாவது காக்கை யானது பழங்களை


தின்று அந்த விதைகளை மலமாக கழிக்கும்போது மண்ணிலோ
கோபுரங்களிலும் அது விழும் போது அவை அஸ்வத்த செடியாக

வளர்கிறது. அதாவது அரச மரமாக வளர்கிறது . அரச மரமானது

பகவானின் விபூதிகளில் முக்கியமானது. பகவான் கிருஷ்ணர் கீ தையில்


சொல்கிறார் மரங்களிலே அஸ்வத்த மரம் தன்னுடைய விபூதிகளில்

முக்கியமானது என்று. ஏனென்றால் அந்த அஸ்வத்த மரத்திலே

மும்மூர்த்திகளின் சொரூபம் உள்ளது என்று பிரார்த்தனை செய்கிறோம்.

அதுவே மும்மூர்த்திகளின் சன்னிதானமான விருக்ஷராஜா. ஸ்ரீமுஷ்ணத்தில்

வராக ரூபி பரமாத்மா அந்த அஸ்வத்த மர ரூபத்திலே இருக்கிறார். அந்த

அஸ்வத்த மரமே காகத்தின் மலத்தில் இருந்து உருவானது, பவித்ரமானது

என்று வேதவியாசர் கூறுகிறார். காக்கையினுடைய மலத்திலிருந்து


வளர்ந்ததானாலும் அஸ்வத்த விருட்சம் பவித்ரம் ஆனது என்று

சொல்கிறார்!

இவை ஐந்தையும் வேதவியாசர் பவித்ரமான வஸ்துக்கள் என்று

சொல்கிறார். இவைகளை மேலோட்டமாகப் பார்த்தால் நமக்கு அர்த்தம்

புரியாது. குஹ்ய பாஷையில் (ரகசியமாக) வேதவியாசர் சொல்லியுள்ளார்.

மேலோட்டமாகப் பார்த்தால் விருத்தமாக, எதிர்மறையாகத் தோன்றுகிறது.


ஆனால் உள்நோக்கி அறிந்து பார்த்தால் விசேஷமான அர்த்தத்தைக்

கொடுத்திருக்கிறார் மகாவிஷ்ணுவின் அவதாரமான வேதவியாசர்!

இப்பேர்ப்பட்ட விஷயங்கள் நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்

குருவின் அனுகிரகத்தால், முக்யபிராணரின் ஆசியாலும், வேத

வியாசரின் அனுகிரஹத்தினால் மட்டுமே சாத்தியம். அதற்கு நாம்

அனைவரும் பாத்திரராகுவோமாக!

You might also like