You are on page 1of 8

நீ திக் கதைகள் – முயலும் சிங்கமும்

சிங்கம் ஒரு காட்டு மிருகம். அதை மிருகங்களின் இராசா என்றும் கூறுவர்.

அது மான், மரை, முயல் போன்ற சாதுவான மிருகங்களை வேட்டையாடி


அவற்றின் மாமிசத்தை விரும்பி உண்ணும்.ஒவ்வொருநாளும் பல மிருகங்களை
வேட்டையாடி தின்று வந்தது.

இதனை கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் வாழ்ந்து வந்தன.

சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொருநாளும் கொல்வதால் தாம் வெகு


சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி
ஆலோசனை செய்தது. அவை சிங்கத்திற்கு இரையாக தினம் ஒரு மிருகமாக
போவதற்கு தீர்மானித்தன.

எல்லா மிருகங்களும் சிங்கத்தின் குகைக்குச் சென்று தாம் எல்லோரும் சேர்ந்து


ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகவும். அதனால் சிங்கராசா இரை தேடி அலையத்
தேவையில்லை. நாமே தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக
வருகின்றோம் என தெரிவித்தன.

அத்துடன் நீங்கள் பல மிருகங்களை ஒரு நாளில் கொன்றால் நாங்கள்


எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோ. பின்பு உங்களுக்கு உணவுகிடையாமல்
நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவர்கள்
ீ என்றன, இதனை கேட்ட சிங்கராசாவுக்கு
மகிழ்ச்சி பொங்கியது.

அன்றிலிருந்து ஒவ்வொரு மிருகம் சிங்கத்திற்கு இரையாகச் சென்றது. முயலின்


முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாகச் சென்றது.

அதனால் சிங்கம் மிகுந்த கோபத்துடன் இருந்தது.சிங்கம் முயலைப் பார்த்து நீ


ஏன் தாமதமாகினாய் என கர்ஜித்தது.

அதனைக் கேட்ட முயலார் நடுக்கத்துடன் “சுவாமி” நான் வரும் வழியில்


வேறொரு பெரிய சிங்கம் என்னை பிடிக்க நினைத்தது. நான் பதுங்கி
இருந்துவிட்டு இப்பதான் வாறேன் என்றது.

என்னைவிட பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று இறுமாப்புடன்


கேட்டது.

அதற்கு “ஆம் சுவாமி” வாருங்கள் காட்டுகின்றேன் என்று சிங்கத்தை அழைத்துச்


சென்று ஒரு கிணற்றைக் காட்டி இதற்குள்தான் அந்த பெரிய சிங்கம் இருந்தது
என்று கூறியது.

அதனை நம்பிய சிங்கம் கிணற்றை எட்டிப் பார்த்தது. அப்போது சிங்கத்தின் நிழல்


(பிம்பம்) வேறொரு சிங்கம் கிணற்றினுள் இருப்பது போல் தெரிந்தது. சிங்கம்
அதைப் பார்த்து கர்ஜித்தது.
பிம்பமும் கர்ச்சித்தது. சிங்கத்திற்க்கு ஆத்திரம் பொங்கியது.
இதோபார் உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என கூறிக்கொண்டு கிணற்றினுள்
பாய்ந்தது.
சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி மாண்டது.

முயலின் சமயோசித முயற்சியால் மற்ற மிருகங்களும் காப்பாற்றப்பட்டன.


நீ திக் கதைகள் – நரியின் தந்திரம் பாட்டி வடை

ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டு விற்று வந்தாள்.

பாட்டி வடைகளைச் சுட்டு ஒரு தட்டில் எல்லோருக்கும் தெரியும்படி பரப்பி


வைத்திருந்தார். இதனை ஒரு காகம் கண்டது. காகத்திற்கும் வடை மேல் ஆசை
வந்தது.

பாட்டி வடை சுடும் கவனத்தில் இருந்தபோது அந்தக் காகம் சந்தற்பத்தை பயன்


படுத்தி ஒரு வடையை தூக்கிச் சென்று ஒரு மரத்தின் மீ து அமர்ந்தது.

இதனை நரி கண்டது. நரி எப்படியும் அந்த வடையை தந்திரமாக காகத்திடம்


இருந்து பெற்றுக் கொள்ள நினைத்தது.

நரி உடனே அந்த மரத்தடிக்குச் சென்று காகத்தைப் பார்த்து, நீ மிகவும் அழகாக


இருக்கிறாய்.

உனது குரலும் மிகவும் இனிமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். உனது


இனிமையான குரலில் ஒரு பாட்டு கேட்க ஆசைப்படுகிறேன் என்று சொன்னது.

மிகவும் அழகான பறவை என்று தன்னை நரி கூறியதால் காகமும் நரியை


சந்தோசப் படுத்த எண்ணியது. உடனே காகம் தன் வாயில் வடை இருப்பதை
மறந்து தனது இனிமையான குரலில் :”கா” “கா” “கா” என்று கத்தியது.

அப்போது காகத்தின் வாயில் இருந்த வடை கீ ழே விழுந்து விட்டது. அதனைக்


கண்ட நரி தன் தந்திரத்தில் காகம் ஏமாந்து விட்டது என நினைத்துக் கொண்டு
வடையை கவ்வி எடுத்துக் கொண்டு பற்றை மறைவில் இருந்து உண்டது.

மற்றவர்களின் தந்திர வார்தையை நம்பி காகம் ஏமந்தது.


நீ திக் கதைகள் – யுக்தியால் தாகம் தீர்த்த காகம்

ஒரு கோடை காலம், பகல் நேரம். கொழுத்தும் வெயில் மக்களையும்,


பறவைகளையும் வருத்தியது. தாகம் எல்லோருக்கும் ஏற்பட்டது.

பறவைகள் தங்கள் தாகத்தைத் தீர்க்க தண்ண ீர் இன்றி அங்கும் இங்கும்


அலைந்து திரிந்தன.

அவற்றில் ஒரு புத்திசாலி காகமும் இருந்தது. அது தண்ண ீருக்காக அலையும்


போது. ஒரு வட்டின்
ீ வெளியே வாய் குறுகிய குடுவை பாத்திரம் ஒன்றைக்
கண்டது.

அங்கே சென்று பார்த்தபோது அப்பாதிரத்தில் கொஞ்சத் தண்ணிர் இருந்ததைக்


கண்டு மகிழ்வுற்றது.

உடனே குடுவையின் விளிம்பில் அமர்ந்து, தன் அலகால் தண்ண ீரைக் குடிக்கப்


பார்த்தது. ஆனால் அதன் அலகிற்கு தண்ண ீர் மட்டத்தை எட்ட முடியவில்லை.
அதனால் பாத்திரத்தில் இருந்த நீரை காகத்தால் குடிக்க முடியவில்லை

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என காகம் மனம் வருந்தியது.


இதைவிட்டால் வேறு இடத்தில் தண்ண ீர் கிடக்கவும் மாட்டாது என எண்ணி
அதனை எப்படியாவது குடிக்க வேண்டுமென சுற்றுமுற்றும் பார்த்து யோசனை
செய்தது.

பக்கத்தில் சிறு சிறு கூழாங்கற்கள் கொட்டிக் கிடந்தன.உடனே அதற்கு ஒரு


யுக்தித் தோன்றியது. ஒவ்வொரு கூழாங்கற்களாக எடுத்து. அதை அந்தக்
குடுவையில் போட்டது.

கூழாங்கற்கள் விழ,விழ..தண்ணரின்
ீ நீர் மட்டம் உயரத் தொடங்கியது. ஒரு
கட்டத்தில் குடுவையின் வாயருகே தண்ண ீர் வந்து விட்டது.

உடன், அந்தக் காகம் தண்ணரில்


ீ தன் அலகை வைத்து. தாகம் தீர தண்ண ீர்
அருந்தி மகிழ்ந்தது.

எந்தப் பிரச்னையாயினும் அதற்கு ஒரு தீர்வு உண்டு. நமது புத்தியை


பயன்படுத்தி,யோசித்து..தீர்வு கண்டால் பிரச்னை தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படும்.
நீ திக் கதைகள் – பொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு

தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும்


பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர்
ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.

“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக்


கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள்
கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால்


வாட வேண்டாம். ஆளுக்கொரு ரொட்டிக் கிடைக்குமாறு செய்கிறேன். என்
வட்டிற்கு
ீ வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில்


உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு
ரொட்டிக் கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது.
நாளையிலிருந்து ரொட்டிகளைக் கூடையில் சரியான எண்ணிக்கையில்
வைத்துக் கொண்டு வட்டிற்கு
ீ வெளியே இரு…” என்றார்

மறுநாள், வேலைக்காரன் ரொட்டிக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே


காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை
அவர்கள் முன் வைத்தான் அவன்.

பெரிய ரொட்டியை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால்,


ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச்
சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து
மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார்


செல்வந்தர். எஞ்சியிருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்
அந்த சிறுமி. தன் வட்டிற்கு
ீ வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த
ரொட்டியைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீ ழே
விழுந்தது.

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வட்டிற்கு


ீ வந்தாள்
சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது.

பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று


கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே
உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு.
மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வட்டிற்குச்
ீ செல் என்றார் செல்வர்.
துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் பெரியோர்களின்


பரிசில்களைப்பெறல்லாம்
நீ திக் கதைகள் – பேராசை பெரும் நஷ்டம்

கந்தசாமி என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து
வந்தான். வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாது போகவே,
தங்களிடம் இருந்த பொருட்களை விற்று சாப்பிட வேண்டி ஏற்பட்டது. நாட்கள்
செல்லச்செல்ல…அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.

இந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி …’இறைவா எங்களை ஏன் இப்படி


படைத்தாய்…இது இப்படியே நீடித்தால்….வறுமை தாங்காது…நாங்கள் இறப்பதை
தவிர வேறு வழியில்லை’ என வேண்டினான்.

அவன் மீ து இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின்


குறைகளைத்தீர்க்க….அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம்
ஒரு பொன் முட்டை இடும் என்றும்…அதை விற்று அன்றடம் குடும்பத்திற்கு
தேவையானவற்றை வாங்கி வாழ்நாளைக் சந்தோஷமாக கழிக்கலாம் என்றும்
கூறி மறைந்தார்.

வாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட …அவர்கள் அதனை விற்று


வாழ்கையை இனிதாகக் கழிந்தனர்.

ஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று ‘தினம் தினம் இந்த
வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம்
எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி,

இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால்


அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம்
சொன்னாள். இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனப் தோன்றியது.

உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும்


எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக்
கிழித்தான். “ஆ” என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒருமுட்டையுமே
இருக்கவில்லை. அதன் வயிறில் மற்றைய வாத்துகள்போல் வெறும் குடலே
இருந்தது கண்டு ஏங்கினர்.

தினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை


அவர்களை மீ ண்டும் சூழ்ந்துகொண்டது.

தங்கள் பேராசையே பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி


ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி இறந்தனர்.

ஆசை அளவுக்கு மிஞ்சினா; அது பேராசை. பேராசை பெரு நஷ்டத்தையும்


கஷ்டத்தையும் தரும்.

You might also like