You are on page 1of 8

கதை கேளீர் , கதை கேளீர் குழந்தை என் கதை கேளீர்.

நீதியுடன்
கதை கூற வந்துள்ளேன் செவி தாரீர். அவையினருக்கு என் அன்பு
வணக்கம். பணக்காரானுக்குத் தூக்கம் வருமா என்றொரு நீதி தரும்
கதையுடன் இன்று உங்கள் முன் வந்துள்ளேன். வாருங்கள் கதைக்குள்
செல்வோம்.

பல தொழில்களை நடத்திக் கொண்டிருந்தார் ஒரு செல்வந்தர்.

ஒரு நாள் நள்ளிரவு. அனைவரும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

சகல உயிரினங்களும் கூட தூக்கத்தில் மூழ்கிக் கிடந்தன. ஊரே அமைதியாகக்

காணப்படுகிறது.

ஆனால், செல்வந்தருக்கோ தூக்கம் வரவில்லை. மாடியில் உலாவிக்

கொண்டிருந்தார். சிறிது தொலைவில், திண்ணையில் ஒருவன் கையைத்

தலைக்கு வைத்துக் கொண்டு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான்.

அதைப்பார்த்த செல்வந்தர் நம்மால் அப்படி தூங்க முடியவில்லையே என

எண்ணி ஏங்கினார்.

காவலாளியை அனுப்பி, திண்ணையில் தூங்கிக் கொண்டு இருப்பவனை

எழுப்பி அழைத்து வரச் சொன்னார் செல்வந்தார்.

காவலாளி சென்று அவனை எழுப்பினான். “இந்த நேரத்தில் ஏன் என்னை

எழுப்பித் தொல்லைப் படுத்துகிறாய்?” என்று கேட்டான்.


“அருகில் உள்ள மாளிகையின் முதலாளி, உன்னை அழைத்து வரச்

சொன்னார்.” என்றான் காவலாளி.

“என் தூக்கம் கெட்டு விடும். காலையில் வருகிறேன்.” என்றான் அவன்.

“உன்னை கூட்டிக் கொண்டு போகவில்லையானால், என் வேலை

போய்விடும்” என்று கெஞ்சி அவனை கூட்டிக் கொண்டு சென்றான்

காவலாளி.

வந்தவனைப் பார்த்து, “வெறுமனே தரையில் ஆழ்ந்து தூங்குகிறாயே, அது

எப்படி? நானோ பஞ்சணை, பட்டு மெத்தை, மின் விசிறி, இவற்றோடு

படுத்தும் எனக்குத் தூக்கம் வரவில்லையே, அதைத் தெரிந்து கொள்ளவே

உன்னைக் கூட்டி வரச் சொன்னேன்” என்றார் செல்வந்தார்.

“ஐயா, நீங்கள் பணக்கார வர்க்கம். மேலும், மேலும் பணத்தைச் சம்பாதிப்பது

எப்படி என்ற சிந்தனையிலேயே மூழ்கிக் கிடக்கிறீர்கள். தவிர வாழ்க்கையில்

உங்களுக்கு எல்லாம் மனநிறைவு என்பதே கிடையாது. நாங்களோ

உழைப்பாளி வர்க்கம். நாங்கள் குறிப்பிட்ட நேரம் வரை உழைக்கிறோம்.

கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, வயிற்றுப் பசியைத் தீர்த்துக்

கொள்கிறோம், நாளைய வேலையை நாளை பார்ப்போம் என்று எண்ணி,

இரவில் அமைதியாகத் தூங்குகிறோம். போதும் என்ற மனநிறைவோடு,


மகிழ்ச்சியோடு தூங்கி எழுந்திருக்கிறோம். எதற்காகவும்

கவலைப்படுவதில்லை” என்று கூறிவிட்டு, உடனே அவன் புறப்பட்டான்.

செல்வந்தர் அவன் கூறியதைக் கேட்டு பிரமித்துப் போனார்.

‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பதை அந்த கணம்

உணர்ந்தார் செல்வந்தர்.

கதை கேளீர் , கதை கேளீர் குழந்தை என் கதை கேளீர். நீதியுடன்


கதை கூற வந்துள்ளேன் செவி தாரீர். அவையினருக்கு என் அன்பு
வணக்கம். எல்லாம் நன்மைக்கே என்றொரு நீதி தரும் கதையுடன்
இன்று உங்கள் முன் வந்துள்ளேன். வாருங்கள் கதைக்குள் செல்வோம்.
ஒரு அரசன் நாட்டை ஆண்டு வந்தான். அந்நாட்டு மந்திரி எது

நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே! என்று சொல்வதை வழக்கமாகக்

கொண்டிருந்தான். ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபொழுது அரசன்

ஒரு மாம்பழத்தை கத்தியால் வெட்டினான். தவறுதலாக கத்தி அவரது சுண்டு

விரலை வெட்டியது. வலி தாங்க முடியாமல் அரசன் துடித்தான்.

வழக்கம் போல் மந்திரி, எல்லாம் நன்மைக்கே! என்றான். இதைக்

கேட்டுக் கோபமடைந்த அரசன், நான் விரல் வெட்டுப்பட்டுத் துடிக்கிறேன்.

எல்லாம் நன்மைக்கே என்று சொல்கிறாய்.

காவலர்களே மந்திரியை சிறையில் கொண்டு போய் அடையுங்கள் என்று

உத்தரவிட்டான். காவலர்களும் மந்திரியை சிறையில் அடைத்தனர்.

அப்பொழுதும் மந்திரி, எல்லாம் நன்மைக்கே! என்றார். நாட்கள் பல கடந்தன.

வேட்டையாடுவதில் ஆர்வமுடைய அரசன் தனியாகக் காட்டிற்குச்

சென்றான். அங்கே மலைவாசிகள் தெய்வங்களுக்கு பலி கொடுப்பதற்காக

ஒருவனைத் தேடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் அரசன் சிக்கிக்

கொண்டான். அங்கு வந்த கோவில் பூசாரி அரசனை முழுமையாகச்

சோதித்தான். பின்பு, எந்தக் குறையுமில்லாதவனை மட்டுமே பலியிட முடியும்

அதனால் இவனை விட்டுவிடும்படி உத்தரவிட்டான்.


அரசன்! அரண்மனைக்கு வந்ததும் உடனடியாக மந்திரியை விடுவிக்க

உத்தரவிட்டான். நடந்ததை எல்லாம் மந்திரியிடம் சொன்ன அரசன், சுண்டு

விரல் வெட்டுப்பட்டதால் உயிர் பிழைத்தேன். அன்று எல்லாம் நன்மைக்கே

என்று நீர் சொல்லியதன் உண்மையை அறிந்தேன் என்றான்.

அரசே என்னைச் நீங்கள் ‘சிறையில் அடைத்ததும் நன்மைக்கே.

எப்பொழுதும் உங்கள் கூடவே இருக்கும் என்னைச் சிறையிலடைக்காமல்

இருந்திருந்தால் உங்களுடன் காட்டிற்கு வந்திருப்பேன். அந்த

மலைவாசிகள் எந்தக் குறையும் இல்லாததால் என்னை அவர்கள்

பலியிட்டு இருப்பார்கள். நீங்கள் என்னைச் சிறையில் அடைத்ததால் நான்

உயிர் பிழைத்தேன் என்றார் மந்திரி.


கதை கேளீர் , கதை கேளீர் குழந்தை என் கதை கேளீர். நீதியுடன்
கதை கூற பொதி சுமக்கும் கழுதை என்றொரு நீதி தரும் கதையுடன்
இன்று உங்கள் முன் வந்துள்ளேன். வாருங்கள் கதைக்குள் செல்வோம்.

ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று

தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது.

உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி

கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய

யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.

காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை

விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும்

மூடப்பட வேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால்

அதை காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன்

அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான்.


அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று

அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி

கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை

நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன்

அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை

அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம்

அடங்கிவிட்டது.

ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே

விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை

வியப்பிலாழ்த்தியது. ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது,

கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த

மண்ணின் மீதே நின்று வந்தது.

இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும்

மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது,

உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று

வந்தது.

கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும்

வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது.


விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி

தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.

வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்மை படுகுழியில்

தள்ளிக் குப்பைகளையும், மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி கட்ட

பார்க்கும். ஆனால் நாம் தான் இந்த கழுதை போல தன்னம்பிக்கையும்

விடாமுயற்சியும் கொண்டு, அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும்.

நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக

பிடித்து படிக்கற்க்களாக்கிக் கொள்ளவேண்டும், எத்தனை பெரிய குழியில்

நீங்கள் விழுந்தாலும்.. “இத்தோடு நம் கதை முடிந்தது” என்று கருதாமல்

விடாமுயற்சி என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம்.

“நீங்கள் எதுக்குள்ளே விழுந்தா என்ன, உங்க மேல எது விழுந்தா என்ன?

எல்லாத்தையும் உதறிட்டு, நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

You might also like