You are on page 1of 4

திருக்குறள் கதை 2016

திருமதி.வே.விக்னேஸ்வரி

இரை தேடிய சிறுத்தை

பெருமதிப்பிற்குறிய அவைத் தலைவர் அவர்களே, பாண்டிய மன்னனின்

மரபில் உதித்த நீதிமான்களே, தன் கரத்தினுள் அடக்கிய மணிக்காப்பாளரே,

அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் ஆசிரிய பெருந்தகைகளே, மற்றும்

அன்பிற்கினிய மாணவ மணிகளே உங்கள் அனைவருக்கும் தமிழ்த்தாயின்

பாதம் தொட்டு என் வணக்கத்தைச் சமர்ப்பிக்கின்றேன்.வணக்கம். இன்று நான்

உங்கள் முன் பேச எடுத்து கொண்ட கதையின் தலைப்பு “இரை தேடிய

சிறுத்தை”

முன்னொரு காலத்தில், காட்டின் அடர்ந்த பகுதியில் சிறுத்தை ஒன்று

வாழ்ந்து வந்தது. ஒரு நாள் காலையில் அது பசியோடு எழுந்தது. இரையைத்

தேடி தனது வட்டிற்கு


ீ அருகே சுற்றும் முற்றும் அலைந்தது. எதுவும்

கிடைக்காத நிலையில் அது காட்டினுள்ளே சற்றுத் தூரம் சென்றது.

வெகு நேரமாகியும் சிறுத்தையின் கண்களுக்கு எதுவும் தென்படவில்லை.

“என்னடா இன்று நம்கண்ணில் ஒரு இரைக்கூட காணவில்லையே!” அது

சோர்ந்துப்போன வேளையில் ஒரு முயலைக் கண்டது. அந்த முயல் ஒரு

மரத்தின் கீ ழே சுகமாக இளைப்பாறிக் கொண்டிருந்தது. சிறுத்தையின் பசிக்கு

அந்தச் சிறிய முயல், யானைக்கு அவல்பொறி கிடைத்த கதைதான்.

ஆனாலும் பசிக்கிறதே! என்ன செய்வது ? சிறுத்தை மெல்ல அடி மேல் அடி

வைத்து முயலின் அருகே சென்றது.


திருக்குறள் கதை 2016
திருமதி.வே.விக்னேஸ்வரி

சிறுத்தை அருகே வருவதை அறியாத முயல் தன்னை மறந்து உறங்கிக்

கொண்டிருந்தது. சிறுத்தைக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. “ இந்த

முயலுக்குக் கொஞ்சம் கூட பயமே இல்லையே! இந்தக் காட்டில் என்னைப்

போலக் கொடிய மிருகங்கள் எத்தனையோ உள்ளன. இப்படியொரு ஆபத்தான

சூழ்நிலையில் இதற்கு எப்படி உறக்கம் வருகிறது?” எனச் சிறுத்தை

யோசித்தது.

அப்போது திடீரென்று விழித்துக் கொண்ட முயல் சிறுத்தையைப் பார்த்து

விட்டது. இருந்தாலும் அது பயப்படவில்லை. எப்படித் தப்பிக்கலாம் என்று

யோசித்தப்படி, உறங்குவது போல் பாசாங்கு செய்தது.

இதற்கிடையே, சிறிது தூரத்தில் இருந்த புதரில் மான் ஒன்று புல்லை

மேய்ந்து கொண்டிருந்தது.” லா லல்லலலல”, அதனால் சிறுத்தையின்

கவனம் முயலிடம் இருந்து திரும்பி மானிடம் சென்றது. “முயலை விட

மான் பெரியதாக இருக்கிறதே” இதை விட்டு விடக்கூடாது “ என்று கூறிக்

கொண்டே சிறுத்தையின் வாயில் நீர் ஊற ஆரம்பித்தது.

ஆனால், எதிர்பாராவிதமாக சிறுத்தையைக் கண்ட மாத்திரத்தில் மான்

துள்ளிக் குதித்து ஓடத் தொடங்கியது. சிறுத்தையும் விடாமல் துரத்தியது.

இரண்டும் காடு, மேடுகளையெல்லாம் கடந்து வெகு தூரம் ஓடின. “இந்தச்

சிறுத்தையின் வாயின் விழாமல் தப்பிக்க வேண்டுமே,” என்று நினைத்தவாறு

மான் ஓடியது.

உயிருக்குப் பயந்து நீண்ட தூரம் ஓடியதால் மானுக்கு மேலும் கீ ழும் மூச்சி

வாங்கியது. “ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” அது சற்று நேரம் நின்றது. “இந்த

சிறுத்தையிடமிருந்து எப்படித் தப்பிக்கலாம்” என்று யோசித்தது. அருகில் ஒரு


திருக்குறள் கதை 2016
திருமதி.வே.விக்னேஸ்வரி

பெரிய புதர் தென்படவே, மான் அதனுள் சென்று நன்றாக மறைந்து

கொண்டது. “ இறைவா! என்னைக் காப்பாற்று,” என்று வேண்டியபடியே

மூச்சையடக்கி நின்றது.

மானின் புத்திசாலித்தனத்திற்கும், வேகத்திற்கும் ஈடு கொடுக்க முடியாத

சிறுத்தை, மானைத் தவற விட்டது. பசியும் களைப்பும் அதை வாட்டவே,

சோர்ந்து போய் ஓரிடத்தில் அமர்ந்தது. “ இன்றைய பொழுது எனக்கு நல்ல

பொழுதாகவே இல்லை.கிடைத்த மானைக் கூட என்னால் பிடிக்க

முடியவில்லையே!” என்று தன்னையே நொந்து கொண்டது.

பிறகு தாகம் எடுக்கவே, சிறுத்தை தண்ண ீர் அருந்துவதற்காக ஆற்றைத்

தேடிச் சென்றது. செல்லும் வழியில் அதற்கு முன்னர் தவற விட்ட முயலின்

நினைவு வந்தது. “பேசாமல் அந்த முயலையாவது தின்றிருக்கலாம். பேராசை

கொண்டதனால் கிடைத்ததையும் கோட்டை விட்டு விட்டேன்,” என்று

வருந்தியது. மறுகணம் அதற்கு வேறோர் எண்ணம் உதித்தது.

அந்த எண்ணம் தோன்றியதும் சிறுத்தை விட்டு விடுமா? தன் நான்கு கால்

பாய்ச்சலில் காற்றென விரைந்தது. காலையில் முயலைப் பார்த்த இடத்தை

அடைந்தபோது, அதற்குப் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. ஆம்! முயல்

இளப்பாறிய தூங்கு மஞ்சம் மட்டுமே காற்றில் ஆடிக் கொண்டிருக்க

அதிலிருந்த முயலைக் காணவில்லை.

“ஐயோ! எங்கே இந்த முயல்?, என்று கூறியவாறே சிறுத்தையினால்

ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்படியே, செய்வதறியாது

திகைத்து நின்றது. பிறகு, சோர்வுடன் புல்வெளியில் சுருண்டு


திருக்குறள் கதை 2016
திருமதி.வே.விக்னேஸ்வரி

படுத்தது.அதனால் எதையுமே சிந்தித்துப் பார்க்க இயல வில்லை. தன்

விதியை நொந்தவாறு, அமைதியுடன் படுத்துக் கிடந்தது.

அதே வேளையில், சிறுத்தையிடம் இருந்து தப்பிய முயல் வேறோர்

இடத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்தது. “ தக்க சமயத்தில் மான் மட்டும்

அங்கு வராதிருந்தால் என்னுடைய நிலைமை என்ன?” நினைக்கும்போதே

அதன் உடல் நடுங்கிற்று.

ஆனால், சிறுத்தை இன்னமும் அசையாது அங்கேயே படுத்துக் கிடந்தது.

“பெரிய இரைக்கு ஆசைப்பட்டு, கைக்கு அருகில் இருந்த முயலைத் தவற

விட்டது எவ்வளவு பெரிய முட்டாள் தனம். இப்போது முயலும் இல்லை!

மானும் இல்லை! இன்னொருமுறை இப்படிப் பேராசைப்பட்டு தீர

யோசிக்காமல் அவசரமாக முடிவு செய்து கிடைத்ததைத் தவற விடக்கூடாது,”

எனச் சிறுத்தை தனக்குத் தானே சொல்லிக்கொண்டது.

ஆம், நண்பர்களே, இதையே தான் திருவள்ளுவரும்,

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

அதாவது, நன்கு ஆராய்ந்து ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்;

தொடங்குவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம் என்பதை நாம்

கருத்தில் கொள்ள வேண்டும்.

நன்றி, வணக்கம்.

You might also like