You are on page 1of 1

சிறுவர் இலக்கியம்

அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்


பச்சை பசெலென்ற புல்வெளிக்கு இடையே சேரனின் வீடு. வீட்டின் முன்
அவன் அன்போடு வளர்த்து வரும் புலி. அவனின் அப்பா சேந்தனார் ஒரு நாள்
வேளாண்மைக்குச் சென்ற போது புலிக்குட்டி ஒன்று மரத்திற்கு கீழ் காயமுற்று
வலியில் துடித்துக் கொண்டிருந்தது. அதைக் காப்பாற்றிய சேந்தனார் வீட்டின் முன்
புறத்தில் அதற்கு மருந்து பூசி, கயிற்றில் கட்டி வைத்தார். சேந்தனாரின் மனைவி
சுந்தரி வீட்டைப் பிளப்பது போல் கதறி, அவரைக் கரித்துக் கொட்டினார்.
அன்று முதல் சேந்தனாரின் வீட்டைப் பார்த்த ஊர் மக்கள் அனைவரும்
அவரைத் தூற்றி பேசுவதை நிறுத்தி விட்டனர். அவரின் வீட்டிற்கு கலவானிகள்
வருவதும் இல்லை. இதனால், சேந்தனாரும் அப்புலியை உணவுக் கொடுத்து
வளர்க்க தொடங்கிவிட்டார். சேரன் அதன் தோற்றதைக் கண்டு பூனை என பெயர்
சூட்டி, நாள் முழுவதும் அதுனுடன் விளையாடத் தொடங்கினான்.
பூனையும் தினமும் புல் உண்டு, சோம்பல் முறித்து வாசலில் புரண்டு படுத்துக்
கொண்டே இருந்தது. தன்னைப் பார்த்து மனிதர்கள் பயம் கொள்ளும் போதெல்லாம்,
ஒன்றும் புரியாத நிலையில் விழித்தது. எவ்வளவுதான் புல் உண்ணாலும், பசி தீராத
நிலையில், உடலில் சத்து இல்லாமல் பூனைப் போலவே உறங்கிக் கொண்டே
பொழுதைக் களித்தது.
ஒரு நாள், சேரனின் நண்பன் மாறன் பூனையின் உண்மை நிலையைப் புரிந்து
கொண்டு அதன் தலையில் தட்டி விளையடினான். வலியில் அழத புலி, சுருங்கி,
பதுங்கி அச்சத்தில் முடங்கிப் போனது. சேந்தனாரின் அண்டை அயலார் பூனையின்
மீதுக் கொண்ட பயம் குறைந்து போனது. கல்லும் கட்டையும் அதை நோக்கி
எறியப்பட்டது. இதைப் பார்த்துக் கொண்டே இருந்த சேரன், பொறுத்துக் கொள்ள
இயலாமல், பூனையின் கயிற்றை கழற்றினான். பூனையோ, முடங்கிய நிலையில்,
அதே இடத்தில் சற்றும் நகராமல் இருந்தது.
அடுத்த நாள் விடிந்தது, சேந்தனார் குடும்பத்துடன் வெளிநாடு சென்றார்.
அவசரத்தில், யாரும் பூனைக்கு உணவு கொடுக்கவில்லை. ஓர் இரு நாள் பொருத்த
பூனை, பசிதாங்க முடியாமல், மெல்ல நகர இயன்றபோதுதான், அது கயிற்றில்
கட்டப்படவில்லை என்பதை உணர்ந்தது. தனக்கு முன்னே காணப்பட்டக் காட்டிற்கு
ஓடிச் சென்றது. அங்கே தன்னைப் போன்ற பிற புலிகள் ஆடையும், மானையும்
வேட்டையாடி உண்பதைக் கண்டு திகைத்துப் போனது பூனை. கர்ஜித்து, காட்டை
ஆளும் தனது இனத்தைக் கண்டு தன் தன்மையை உணர்ந்தது. பூனையாகவே
வாழ்ந்து கொண்டு இருந்த அப்புலி அன்றுதான் “ அச்சம் இல்லாதவன் அம்பலம்
ஏறுவான்” என்று உணர்ந்தது .

You might also like