You are on page 1of 8

நேர்மை உயர்வு தரும்

மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு


பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர், பணத்தாசைப்
பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி
கொடுக்கமாட்டார்.

ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை


சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன்
தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வட்டுக்கு
ீ வரும்
போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.

வட்டுக்கு
ீ வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து
கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர்
முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன
செய்வது என்று தெரியாமல் விழித்தார்.
அப்போ அவரது மனைவியார் ‘உங்க பணப்பையை கண்டுபிடித்து
கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று
சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க’
என்றார்.

ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த


நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊரு
மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம்
என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை
கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த


ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர்
பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும்
கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை
அடுத்தவர்களுக்கு உதவுபவர்.

அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால்


விவசாயம் சரியாக செய்ய முடியவில்லை வேறு தொழில்
செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால்
பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து சம்பாதித்து
பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில்
காட்டுப் பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக்
கொண்டார்.

அப்படி காட்டு வழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு


கீ ழே கடந்தது. அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை
தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்ற
தண்ண ீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர்
அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்துவிட்டு
வந்தார்.
அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ
மாட்டியதை கண்டார், அது ஒரு பை அதில் நிறைய பணமும்
இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன்
பணப்பையை விட்டுவிட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர்
மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை
கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.

அப்போது ஊருக்குள் சென்ற போது அங்கு இருந்த கடையில்


விசாரித்தபோது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி அவர் தான்
தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம்
கொடுப்பார் என்றார்.

உடனே பூபாலனும் சோமன் வட்டை


ீ தேடி பிடித்து சென்று
பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார். சோமனுக்கு சந்தோசம்
தாங்கமுடியவில்லை. உடனே அந்தப் பணப்பையை வாங்கிக்
கொண்டார், அதேநேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத்
தொடங்கியது. பணப்பை கிடைத்துவிட்டது, பணமும்சரியாக
இருந்தது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும்.
சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று
யோசித்தார் சோமன்.

கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து ‘நீ என்னை


ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம்
ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை. மரியாதையாக
கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்’ என்று கத்தினான்.

பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது


போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம்
தான் எடுக்கவில்லையே இவரிடம் சன்மானம் வாங்குவதைவிட
பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.

சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். பூபாலன்


பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன
கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு
கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும்
அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல
நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த
பிரச்சினையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு
கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.

சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும்


மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான்
பணப்பையையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த
கதையையும, பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும்
சொன்னார்கள்.

ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை


ராமனுக்கு தெரியும். அப்போ தண்டோரா போடும் போது
வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான்.

ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துகொண்ட


மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க
நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் ‘சோமன் தொலைத்த
பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே
சொல்லியிருக்கிறார். இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில்
பணம் மட்டுமே உள்ளது.
ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த
பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார்
கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம
ஊரு வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு
அம்மன்கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, மீ தியை எடுத்தவரே
வைத்துக்கொள்ளலாம்.
ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு
வைத்துக்கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம்
கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம்
கொடுப்பார், சபை கலையலாம்.’
மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று
போனது போல் ஆகிவிட்டது.

பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவதம்


ீ அம்மன் கோயிலுக்கு
கொடுத்துவிட்டு, மீ தியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று
தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.
புத்திசாலி ஆட்டுக்குட்டி

அந்த அடர்ந்த காட்டில் நரி, ஓநாய், சிங்கம் ,கரடி என ஏராளமான மிருகங்கள்


வாழ்ந்து வந்தன. எல்லா மிருகங்களும் நன்கு கொழுத்த உடலோடு நடமாடிக்
கொண்டிருந்தன. அதற்கு காரணமும் உண்டு. அந்தக் காட்டை ஓட்டியுள்ள சிறு
கிராமத்தில் முத்துசாமி என்ற ஏழை வாழ்ந்து வந்தான்.

அவனது ஆட்டுக்குட்டிகள் துள்ளி விளையாடி மேய்ந்து கொண்டே வழி தவறி


காட்டுக்குள் வந்து விடும். அவ்வளவுதான் உடனே அதை காலிசெய்து விடும் இந்த
மிருகங்கள். முத்துசாமி தனது தந்தை தனக்காக சொந்தமாகக் கொடுத்த நாற்பது
ஆடுகளையும் ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருந்தான்.

இப்போது மொத்தம் பனிரெண்டு ஆடுகளே மிஞ்சியிருந்தது. இதனால் முத்துசாமி


மிகுந்த வேதனை அடைந்தான். சாப்பிடக் கூட மனமில்லாமல் துவண்டு போய்
ஆடுகளை அடைத்து வைத்திருந்த பட்டியின் அருகில் படுத்துவிட்டான்.
‘கண்ணுங்களா! நீங்களாவது என்னை விட்டு போயிடாம பத்திரமாக இருங்கப்பா.
என் கண்ணைத் தப்பி வெளியே போயிடாதீங்க. அவ்வளவுதான் அந்த கொடிய
மிருகங்கள் உங்க எலும்பைக் கூட விட்டுவைக்காதுங்க. அதனால பாதுகாப்பா
இங்கேயே இருங்கப்பா. என்னை மேலும் மேலும் வேதனைப்பட வைக்காதீங்க’ –
என்றபடியே தரையில் படுத்து சற்று நேரத்தில் தூங்கியும் விட்டான்.

அவன் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த ஆடுகள் முத்துசாமியின் நிலையைக்


கண்டு மனம் வருந்தின. தங்களை வளர்த்து ஆளாக்கியவன் துன்பத்தை
அவைகளால் தாங்கமுடியவில்லை. அவனுக்கு தங்களால் எந்த உதவியும் செய்ய
முடியவில்லையே என வேதனைப் பட்டன.

அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த ஆடு ஒன்று தன் அம்மாவிடம் “அம்மா!


எத்தனைநாள் தான் நாம் ஓடியாடி விளையாட முடியாமல் நம் விருப்பத்திற்கு
புற்களை மேயாமல் இப்படி பட்டிக்குள்ளேயே அடைந்து கிடப்பது. இதற்கு ஒரு
முடிவு கட்டவேண்டாமா” –என்றது. தாய் ஆடு தனது பிள்ளையை பரிவோடு
நக்கியது. “மகனே! உன் கவலை எனக்கு புரிகிறது. ஆனால் இது தானே நமக்கு
பாதுகாப்பு வளையம். இதைத் தாண்டிப் போன நம் உறவினர்களின் நிலை
என்னவாயிற்று  என்பதுதான் உனக்குத் தெரியுமே. தெரிந்தும் நீ வெளியே செல்ல
ஆசைப்படலாமா. பாவம் நம் ஏஜமானர் நம்மில் பாதிக்குமேல் இழந்து தவிக்கிறார்.
அவருக்கு நாம் எந்த கஷ்டத்தையும் கொடுக்கக்கூடாது. நமக்குத் தேவையான
உணவுதான் கிடைக்கிறதே. சாப்பிட்டு விட்டு படுத்துக் கொள்வோம்” –என்றது தாய்
ஆடு.
மறுப்பாக தலை அசைத்தது குட்டி ஆடு. “அம்மா உங்களைப் போல் என்னால்
இருக்க முடியாது. இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும். அப்போதுதான் 
நாம் சுதந்திரமாக நடமாடமுடியும். நம் எஜமானரும் இப்படி நமக்காக காவல்
இருக்காமல் அவரது வேலையைப் பார்க்க முடியும். அதனால் நான் ஒரு
முடிவுக்கு வந்திருக்கிறேன்” –என தனது திட்டத்தைக் கூறியது.

அதைக் கேட்ட மற்ற ஆடுகளுக்கு சந்தோஷம் தாளவில்லை. “டேய் கண்ணா! நீ


மட்டும் இதை வெற்றிகரமா செய்து முடித்து விட்டால் நமக்கொல்லாம் இந்த
சிறையிலிருந்து விடுதலை. நமது இஷ்டத்திற்கு மேய்ந்து விட்டு இரவில் வடு

திரும்பினால் போதும். நீ இதை சரியாகச் செய்து விடுவாயல்லவா” –என்றது வயது
முதிர்ந்த ஆடு.

தாய் ஆடு பதறியது. “மகனே! வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு. எனக்கு ஒரே
மகன் நீ. உன்னை ஒருபோதும் நான் இழக்கமாட்டேன். காட்டுக்குள் போய் விட்டு
திரும்பியவர் எவருமில்லை. நான் உன்னை அனுப்ப மாட்டேன்” –என்று கண்ண ீர்
சிந்தியது. “அம்மா அழாதே! நான் புத்திசாலி என்று நீதானே அடிக்கடி சொல்வாய்.
இப்போது நீயே தடை போடலாமா. நம் இனத்தை எப்படி அழித்தன அந்த
மிருகங்கள். அவற்றை நம்மால் அழிக்க முடியவிட்டாலும் விரட்டியடிக்கலாமே.
அம்மா தைரியமாக இரு. நான் வெற்றியோடு திரும்புவேன். என்று கூறிவிட்டு
காட்டை நோக்கிச் சென்றது.

காட்டிற்குள் நாலைந்து நரிகள் குறுக்கும் நெடுக்குமாய் பசியோடு உலாவிக்


கொண்டிருந்தது. பசி உயிரை எடுக்கிறது. ஒரு ஆடு கூட இரண்டு நாளாக
கண்ணில் படவில்லையே. பட்டிக்காரன் உஷாராகி விட்டானா என தங்களுக்குள்
புலம்பிக் கொண்டிருந்தன. அப்போது சற்று கரகரப்பான வித்தியாசமான குரலில்
காட்டுக் கொடிகளுக்கிடையே சிக்கித் தவித்துக் கொண்டிருந்த அந்த கொழுத்த
ஆட்டுக்குட்டி அதன் கண்ணில் பட்டது. “ஆஹா! இரண்டு நாளாய் காய்ந்து
கிடந்ததற்கு இன்று நல்ல விருந்து வாருங்கள் போகலாம்” –என்றவாறு
ஆட்டுக்குட்டியை நெருங்கியது.

ஆட்டுக்குட்டி அனைத்தையும் பார்த்துக் கொண்டு ஒற்றைக் கண்ணை


மூடிக்கொண்டு ஏதோ தவம் செய்வது போல் நின்று கொண்டிருந்தது. அருகில்
நரிகள் வருவதைக் கண்டதும், “வாருங்கள், வாருங்கள். எம் பொருமான் உங்களை
அனுப்பி வைப்பதாக இப்போதுதான் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
அதற்குள் வந்துவிட்டீர்களா? ம் சீக்கிரம் வந்து எனக்கு இரையாகுங்கள். எனக்கு
பயங்கர பசி” –என்று உறுமலான குரலில் அதட்டியது.

நரிகளுக்கு பயங்கர அதிர்ச்சி. ஓரடி பின் வாங்கின. “என்னடா. இது? நம்மையே


சாப்பிடப் போகிறதாம் இந்த ஆட்டுக்குட்டி. அதுவும் கடவுளே அனுப்பிவைத்தார்
என்கிறது. இதன் குரல் கூட ஆடு குரல் போலில்லையே. நரிகள் தயங்கி நின்றன.
“என்ன தயக்கம்! சீக்கிரம் வாருங்கள். உங்களை சாப்பிட்டு விட்டு இக்காட்டிலுள்ள
அனைத்து மிருகங்களையும் சாப்பிடவேண்டும். இது எம் பெருமானின் கட்டளை.
முதலில் உங்கள் தலைவரான சிங்கத்தைத் தான் சாப்பிடலாம் என்றிருந்தேன்.
அதற்குள் நீங்கள் வந்துவிட்டீர்கள். அதனாலென்ன முதலில் சிறிய விருந்து. பிறகு
பெரிய விருந்து...ஹாஹா” –வென பயங்கரமாக சிரித்தது.

நரிகள் பிடரியில் கால்பட விழுந்தடித்துக் கொண்டு ஒடின “ஐயோ! நம்மை அழிக்க


ஏதோ எமன் வந்துவிட்டான். ஓடுங்கள் ஓடுங்கள் எல்லோரும் ஓடுங்கள்”.
என்றவாறு ஒடியது. எதிரே வந்த சிங்கம் கர்ஜித்தது. “என்ன உளறுகிறாய். நம்மை
அழிக்க யாருக்கு துணிவுண்டு” –என்றது. நரிகள் தாங்கள் பார்த்ததை கூறியது.

சிங்கம் கெக்கலித்தது. “உங்களுக்கு பைத்தியமா பிடித்தருக்கிறது. ஒரு அற்ப


ஆட்டுக்குட்டி நம்மை அழிப்பதா. வாருங்கள் என்னுடன். அதை ஒரு கை பார்த்து
விடுகிறேன்.” –என்றவாறு புறப்பட்டது. அதற்குள் நரிகளின் கூக்குரல் கேட்டு
அனைத்து மிருகங்களும் கூடிவிட்டன.

அனைவரும் படையாக புறப்பட்டு ஆட்டுக்குட்டியைத் தேடி புறப்பட்டன. தூரத்தில்


இதைப்பார்த்த ஆட்டுக்குட்டிக்கு உள்ளுக்குள் பதறினாலும் சற்று தெம்பாகவே
நின்றது.  மனதிற்குள் உறுதியைக் கூட்டிக்கொண்டு, கொஞ்சம் பதறினாலும்
எல்லாமே வண்
ீ என்ற நினைப்புடன் நிமிர்ந்து நின்றது. அதற்குள் மிருகக்கூட்டம்
தன்னை நெருங்கிவிடவும். பரவாயில்லையே. எம்பெருமான் சொன்னார். நீ எங்கும்
போகாதே. அனைவரும் உனக்கு விருந்தாக அவர்களே உன்னைத் தேடிவருவார்கள்
என்று சொன்னார். அதே போல் வந்துவிட்டீர்களே. ம் முதலில் ராஜா நீர் வாரும்.
உம்மைத் தின்னத்தான் எனக்கு பெருத்த ஆவல். அற்புறம் அனைவரும்
வரிசையாக நில்லுங்கள். ஒருவரையும் விட்டு விடமாட்டேன். உங்கள்
அனைவரையும் அழித்து விட்டு இந்தக் காட்டில் காவல் தெய்வமாக என்னை
இருக்கவே எம்பெருமான் உத்தரவிட்டார். “ம். ம்.. ராஜா வா. எனக்கு பசிக்கிறது.” –
கூக்குரலெடுத்து அலறியது.

அவ்வளவுதான் அனைத்து விலங்குகளும் திசைக் கொண்றாக அலறிப் புடைத்து


பறந்தோடின. ஆட்டுக்குட்டி ஒரு வெற்றிச் சிரிப்போடு காடு முழுவதும் சுற்றியது.
எந்த ஒரு விலங்குகளும் இல்லையென்றதும் நிம்மதி பெருமூச்சு விட்டது.
ம்ஹூம். எவ்வளவு மாமிசங்கள் தின்று உடல் கொழுத்து என்ன பலன். ஒரு
ஆட்டுக்குட்டிக்கு இருக்கும் மூளைகூட இந்த மிருகங்களுக்கு இல்லையே.
என்றவாறு உற்சாகமாக தனது பட்டிக்குச் சென்று அனைவரிடமும் நடந்ததைக்
கூறியது.

அனைத்து ஆடுகளும் அதைக் கொஞ்சி மகிழ்ந்தன. அன்றிலிருந்து அவர்கள் 


அனைவரும் தங்கள் விருப்பம் போல் காடு முழுவதும் சுற்றி மேய்ந்து
சந்தோஷமாக வாழ்ந்தன.

கதையின் நீதி: புத்திகூர்மையும் மனதிடமும் இருந்தால் யாரையும்


வழ்த்திவிடலாம்.

You might also like