You are on page 1of 15

வணான

ீ வரங்கள்

ஒரு நாள் ஒரு விற்குவெட்டி ஒரு மரத்தை வெட்ட கோடரியை ஓங்கினான்.


அப்பொழுது, ”நிறுத்து! என் மரத்தை வெட்டாதே!” என்று ஒரு குரல் கேட்டது. பயந்து
போன விறகுவெட்டி, ”நீ யார்? எங்கிருந்து பேசுகிறாய்?” என்று கேட்டான்.

”நான் இந்த மரத்தில் வாழும் ஒரு தேவதை. இந்த மரத்தை


விட்டுவிடு. அதற்குப் பதிலாக நீ விரும்பும் மூன்று வரங்களைக்
கேள் தருகிறேன்,” என்று தேவதை பதில் அளித்தது. விற்குவெட்டி
மகிழ்ச்சியுடன் வட்டிற்கு
ீ ஓடினான். மூன்று வரங்கள் பற்றி
மனைவிக்குச் சொன்னான்.

விறகு வெட்டியும் அவன் மனைவியும் சாப்பிட அமர்ந்தனர்.


”என் வட்டில்
ீ சுவையான சாப்பாடு எதுவுமில்லை. என் வடு
ீ நிறைய
இனிப்புப் பண்டங்கள் வேண்டும்,” என்றான் விற்குவெட்டி. என்ன
ஆச்சாரியம்! கூரை வழியாக வகை வகையான இனிப்புப்
பண்டங்கள் கொட்டின. இது விற்குவெட்டியின் முதல் வரம்.
இனிப்புப் பண்டங்களைக் கண்ட விறகு வெட்டியின் மனைவி, ”ஓர்
இனிப்புப் பண்டம் விறகுவெட்டியின் மூக்கில் ஒட்டிக் கொள்ளட்டும்”
என்றாள். அவள் எண்ணப்படியே ஓர் இனிப்புப் பண்டம் அவனது
மூக்கில் ஒட்டிக் கொண்டது. இது தேவதை அளித்த இரண்டாவது
வரம்.

பயமும் கோபமும் அடைந்த விறகுவெட்டி ”இந்த இனிப்புப்


பண்டம் மூக்கிலிருந்து கீ ழே விழட்டும்” என்றான். இனிப்புப் பண்டம்
மூக்கிலிருந்து விழுந்தது. மூன்று வரங்களும் முடிந்தன. தேவதை
தமக்களித்த அரிய வாய்ப்பை நன் முறையில் பயன்படுத்தித்
கொள்ளாததை எண்ணி இருவரும் வருந்தினர்.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்


விறகு வெட்டியின் மகள்

ஒரு காட்டில் விற்கு வெட்டி ஒருவன் வசித்து வந்தான்.


அவனோடு அவனது மகளும் வசித்து வந்தாள். விறகு வெட்டியின்
மகள், தினமும் அருகில் உள்ள ஓடைக்குச் செல்வாள். குடம்
நிறைய நீர் கொண்டு வருவாள்.

ஒரு நாள் நீர் கொண்டு வரும் வழியில் ஒரு சிங்கதைக்


கண்டாள். பயத்தைக் காட்டிக் கொள்ளாமல் தைரியமாக இருந்தாள்.
அவளது அழகைப் பார்த்து சிங்கம் ஆசைப்பட்டது. தன்னைத்
திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டியது.

நீர்க்குடத்தை வட்டில்
ீ வைத்துவிட்டு வருவதாக அப்பெண்
கூறினாள். சிங்கம் அவள் பின்னால் வடுவரை
ீ சென்றது. வட்டிற்கு

வெளியே காத்திருந்தது.

சிங்கம் தன்னுடைய நகங்களையும், பற்களையும் அகற்றி


விட்டால், திருமணம் செய்து கொள்வதாக அப்பெண் கூறினாள்.
சிங்கமும் ஒப்புக் கொண்டது. விறகு வெட்டியின் மகள் சிங்கத்தின்
எல்லா நகங்களையும் பற்களையும் அகற்றினாள்.

நகங்களையும், பற்களையும் இழந்த சிங்கத்தைக் கண்டு,


அப்பெண் பயப்படவில்லை. கம்பை எடுத்து சிங்கத்தை அடித்து
விரட்டினாள்.
புத்திமான் பலவான்

நம்பிக்கை எங்கே

வைகாசி என்ற ஊரில் அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.


இவர் நாராயணனை வழிபட்டு வந்தார். எப்பொழுதும் நாராயணா!
நாராயணா! என்று ஐபித்துக் கொண்டே இருப்பார்.

ஒருநாள் அந்தணன் பட்டணத்திற்குச் சென்று பொருட்களை


வாங்கிக்கொண்டு காட்டின்வழியே வடு
ீ திரும்பினார். வழியில்
இரண்டு திருடர்கள் அந்தணரை மடக்கி அவரிடமிருந்த
பொருட்களையும், பணத்தையும் கொள்ளையடிக்க முற்பட்டனர்.
அந்தணர் உடனே, நாராயணா, என்னைக் காப்பாற்று! எனக் கதறினார்.
வைகுண்டத்தில் இருக்கும் நாராயணனுக்கு இது கேட்டது.
அவர் உடனே எழுந்து அந்தணருக்கு உதவச் சென்றார். சிறிது தூரம்
சென்ற பிறகு, மீ ண்டும் வந்து அவர் இருக்கையில் அமர்ந்தார்.
அங்கிருந்த நாரதர், ”ஏன் சுவாமி, என்ன நடந்தது?” என்று
வினவினார்.

அதற்குப் பதிலளித்தார் நாராயணன், ”அந்தணர் ஒருவரை


திருடர்களிடமிருந்து காப்பாற்றச் சென்றேன், அந்தணர் நான்
வரமாட்டேன் என நினைத்து, அவரே திருடர்களைச் சமாளித்து
விட்டார். அங்கு எனக்கு என்ன வேலை இருக்கிறது,” என்றார்.

நம்பிக்கை என்பது ஆழமாக இருக்கவேண்டும்

காக்கையும் ஓநாயும்

அடர்ந்த காட்டின் நடுவே உயர்ந்த ஓர் அத்திமரம் இருந்தது.


இதில் நிறைய அத்திப்பழங்கள் காய்த்திருந்தன. அந்த
அத்திமரத்திற்குத் தற்செயலாக ஒரு காகம் பறந்து வந்தது. அது
அத்திப்பழங்களை உண்டு மகிழ்ச்சி ஆரவாரத்தால் குரலெழுப்பியது.

பசியினால் வாடிய ஓநாய் ஒன்று அந்த மரத்தின் அருகே


வந்தது. காக்கையின் குரலைக் கேட்டு மரத்தை நிமிர்ந்து பார்த்தது.
காக்கையிடமிருந்து பழத்தைப் பெற அதை வெகுவாகப் புகழ்ந்து
பேசியது. என் அன்பார்ந்த காக்கையே! உன் குரல் குயிலை விட
இனிமையானது. உனது நிறம் மிகவும் அழகானது. நீ
உட்கார்ந்திடுக்கும் இடமோ அத்திம்கரம் எனும் உயர்ந்த சிம்மாசனம்.
இவ்வளவு சிறப்பைக் கொண்ட பறவை ஏதும் உண்டா? என்றது.

இதைக்கேட்ட காக்கை பூரித்துப் போனது. தொடர்ந்து காக்கை,


”ஓநாய் அண்ணா! நீர் என் விருந்தினராக வந்திருக்கிறீர்.
அத்திப்பழங்களைப் பறித்துப் போடுகிறேன். அதைச் சாப்பிடுங்கள்,”
என்றது. ஓநாயும் வயிறாரச் சாப்பிட்டு விட்டு காக்கைக்கு நன்றி
கூறிச் சென்றது.

வேறும் புகழ்ச்சிக்கு மயங்காதே


நண்டும் நாரையும்

ஒரு காட்டில் ஓர் ஆலமரம் இருந்தது. நாரைகள் அதில் கூடு


கட்டிக் கொண்டு வசித்து வந்தன. அந்த மரத்தின் பொந்தில் இருந்த
கருநாகம் ஒன்று அவை இடுகின்ற முட்டைகளை எல்லாம் தின்று
வந்தது.

என்ன செய்வதென்று தெரியாத நாரைகள் தம் நண்பனான


நண்டிடம் சென்று யோசனை கேட்டன.

நண்டு கருநாகத்தைக் கொல்ல ஓர் அருமையான


யோசானையைக் கூறியது.

”கீ ரிப்பிள்ளை இருக்கும் வலையில் இருந்து அந்தக் கருநாகம்


இருக்கும் பொந்து வரைவழி நெடுக மீ ன்களைப் போட்டுக் கொண்டே
போ, கீ ரிப்பிள்ளை மீ ன்களைத் தின்று கொன்டே போய் அந்தப்
பாம்பைக் கொன்று விடும். பிற்கு உனக்கு நிம்மதி,” என்று கூறியது
நண்டு.

நண்டு சொன்னபடியே நாரையும் செய்தது.

கீ ரிப்பிள்ளை ஒவ்வொரு மீ னாகத் தின்று கொண்டே பாம்பின்


பொந்திற்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்த பாம்போடு சண்டையிட்டு
பாம்பைக் கொன்றது.
திருட்டுப் பிழைப்பு என்றும் ஆபத்தானது.

நரியும் செம்மறி ஆட்டுக் குட்டியும்

ஒரு குட்டியானவர் ஏராளமான செம்மறி ஆடுகள் வளர்த்து


வந்தார். அவற்றை அவரதி மகன் மேய்த்து வந்தான்.

ஒரு நாள், ஒரு நாள், ஒரு செம்மறி ஆட்டுக்குட்டி வழி தவறி


எங்கோ சென்று விட்டது. அது ஒரு நரியிடம் மாட்டிக் கொண்டது.

ஆட்டுக்குட்டியை எப்படியாவது தின்று விட வேண்டுமென நரி


நினைத்தது. ஆட்டுக்குட்டியை வம்புக்கிழுத்த்து. செம்மறி
ஆட்டுக்குட்டி எவ்வளவோ கொஞ்சிப் பார்த்தது. ஆனால், நரி
விடுவதாக இல்லை.

”நீ என்னை ஏளனம் செய்தாய். உன் அப்பாவும் என்னை


ஏளனம் செய்தார்,” எனக் கூறி வம்புக்கிழுத்தது. ”அதற்காக
உன்னைத் தின்னப் போகிறேன்” என்று கூறியது.

தன்னைக் காப்பாற்ற யாருமே இல்லை என்ற நிலையில்,


ஆட்டுக்குட்டி ஆண்டவனை வேண்டிக் கொண்டது.
சிறியது நேரத்தில் அவ்வழியாக சில மனிதர்கள் வந்தார்கள்.
நரியைக் கொன்று ஆட்டுக்குட்டியைக் காப்பாற்றினர்.

அகதிக்கு ஆண்டவனே துணை

முயற்சி திருவினையாக்கும்

கஜினி என்று ஓர் அரசன் இருந்தான். பக்கத்து நாடுகளைப் பிடிக்க நினைத்தான்.

இந்தியா மீது படையெடுத்தான். முதலில் தொல்வியடைந்தான். மறுமுறை


படையெடுத்தான். மீண்டும் தோல்விதான். மீண்டும் படையெடுத்துத் தோற்றான். பலமுறை
தோற்ற அவன் பதினெட்டாவது முரை வெற்றி பெற்றான்.

தொல்வி அடைந்தாலும் அவன் சோர்ந்து விடவில்லை. ஊக்கத்தைக் கைவிடவில்லை.


தொடர்ந்து முயற்சி செய்தான். இறுதியில் வென்றான்.

பள்ளி மாணவர்களும் முயற்சியைக் கைவிடலாகாது. பல முறை முயற்சி செய்ய


வேண்டும். வெற்றி உறுதி என்று நினைக்க வேண்டும்.

ஊக்கமது கைவிடேல்
ஒற்றுமையே பலம்

ஓர் ஊரில் ஒரு பெரியவர் இருந்தார். அவருக்கு மூன்று ஆன்மக்கள் இருந்தனர்.


அவர்கள் எப்பொழுதும் தங்களுக்குள் சண்டையிட்டு வந்தனர்.

ஒரு நாள் அவர் தம் மூன்று பிள்ளைகளையும் அழைத்தார். காட்டிற்குச் சென்று


சுள்ளிகளை எடுத்து வரச் சொன்னார். அவர் கொண்டு வந்த சுள்ளிகளைத் தனித் தனியே
எடுத்து உடைக்கச் சொன்னார். அவர்கள் சுலபமாக சுள்ளிகளை உடைத்தனர்.

பிறகு, அவர் எல்லாச் சுள்ளிகளையும் ஒன்றாகச் சேர்த்துக் கட்டினார். அதனை எடுத்து


உடைக்குமாறு கூறினார். அவர்களால் அதனை உடைக்க முடியவில்லை.

உடனே பெரியவர், ”நீஙக ் ள் மூவரும் தனித்தனியே இருந்தால் பிறர் உங்களை எளிதில்


வென்று விடுவர். மூவரும் ஒற்றுமையாக இருந்தால் பிறரால் உங்களை வெல்ல முடியாது,”
என்றார். அன்றிலிருந்து அவர்கள் மூவரும் ஒற்றுமையுடன் இருந்தனர்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

குரங்கும் தூக்கணாங்குருவியும்

ஒரு காட்டில் தூக்கணங்குருவியும் குரங்கும் வாழ்ந்து வந்தன.


ஒரு நாள் பெரும் மழை பெய்த்து. தூக்கணங்குருவி தான் கட்டிய கூட்டில் நுழைந்துக்
கொண்து. குரங்கோ குளிரில் வாடியது.

இதனைத் தூக்கணங்குருவி கண்டது. ”நீயும் என்னைப் போல் ஒரு கூடு


கட்டிக்கொண்டிருந்தால் மழையில் நனையாமல் இருக்கலாமே” என்று அறிவுரை கூறியது.
அதனைக் கேட்ட குரங்கு கடும் கோபம் கொண்டது. ஆத்தித்துடன் குருவியின் கூட்டை பிய்த்து
வீசுயது. ஆகவே தீயவர்களுக்கு அறிவுரை கூறக் கூடாது.

மூர்க்கருக்குப் புத்தி சொல்லாதே


மூன்று பன்றிகள்

காட்டில் பன்றி ஒன்று தன் மூன்று குட்டிகளுடன் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அது தன்
குட்டிகளை அழைத்து, ”இனிமேல் நீங்கள் தனியே சென்று சுயமாக வாழக் கற்றுக்
கொள்ளுங்கள்” என்று கூறியது.

மூன்று குட்டிகளும் தங்களுக்கென வீடுகளைக் கட்டிக் கொள்ள பொருட்களைச்


செகரிக்கச் சென்றன. முதலாம் பன்றி நாணலைக் கொண்டு வீடு கட்டியது. இராண்டாம் பன்றி
குச்சிகளைக் கொண்டு வீடடை ் க் கட்டிக் கொண்டது. மூன்றாம் பன்றி கற்களைக் கொண்டு
வீட்டைக் கட்டிக் கொண்டது.

அப்பக்கமாக வந்த ஓநாய் ஒன்று , நாணல் வீட்டில் இருந்த பன்றியைக் கொன்று


தின்றது. பின்னர் குச்சி வீட்டில் இருந்த பன்றியையும் கொன்று தின்றது. அதன் பின்னர்
மூன்றாம் பன்றி இருந்த கல் வீட்டைத் தகர்க்க முயன்றது. அதனால் முடியவில்லை. அது உடனே
கூரை மீது ஏறி உள்ளே நுழைய முயன்றது. உடனே பன்றி கீழே நெருப்பு மூட்டியது. எரியும்
நெருப்பில் ஓநாய் விழுந்து இறந்தது.

எந்தக் காரியத்தையும் திட்டமிட்டு செய்.

நாரியும் கொக்கும்

கொக்கு ஒன்று ஆற்று ஓரத்தில் ஒன்றை காலில் நின்று கொண்டிருந்தது. அப்பக்கமாக


நரி ஒன்று வந்தது. நரியும் கொக்கும் ஒன்றை ஒன்று அறிமுகப் படுத்திக் கொண்டன. அவை
இரண்டும் நண்பர்கள் ஆயின. நரி கொக்கைத் தனது வீட்டிற்கு விருந்துண்ண அழைத்தது.

மறுநாள் கொக்கும் நரியின் வீட்டிற்குச் சென்றது. சிறுது நேரம் உரையாடிய பின்னர், நரி
இரண்டு தட்டுகளில் பாயாசத்தைக் கொண்டு வந்தது. நரி நாக்கினால் நக்கி நக்கி,
பாயாசத்தைச் சுவைத்து உண்டது. கொக்கின் அலகு நீளமானது. அதனால் தட்டிலிருந்த
பாயாசத்தை அருந்த முடியவில்லை. நரி சுவைத்து உண்பதை ஏக்கத்தோடு பார்த்தபடி நின்று
கொண்டிருந்தது. உடனே, பேரசை கொண்ட நரி ‘என்ன கொக்கே உமக்குப் பாயாசம்
பிடிக்காதா?’ என்று கேட்டுக் கொண்டே, அதனையும் தானே குடிக்கலாயிற்று. விருந்தின்
முடிவில் கொக்கும் ‘நரியாரே! நாளை நானும் உமக்கு ஒரு விருந்து தர எண்ணுகிறேன்.
மறவாமல் என் வீட்டிற்கு வந்துவிடு’ என்று கூறிச் சென்றது.
அடுந்த நாள் நரியும் தவறாமல் விருந்துண்ண வந்தது. நிரிக்குப் புத்திப்புகட்ட
எண்ணிய கொக்கு, இரு நீண்ட கண்ணாடிக் கூஜாக்களில் பாயாசம் படைத்தது. கொக்கு
பாயாசத்தைச் சுவைத்து மகிழ்ந்தது. நரி பாயாசத்தைப் பருக முடியாமல் தவித்தது. கொக்கு
நரியின் தவற்றைச் சுட்டிக்காட்டியது. நரி தனது செய்கைக்காக மனம் வருந்தியது.

ஏமாற்றாதே ஏமாறாதே

உதைபட்ட நரி

நரி ஒன்று இரை தேடி கிராமத்தின் பக்கம் சென்றது. அங்கு நிறைய கோழிகள்
அடைக்கப்பட்ட கூண்டின் பக்கம் சென்றது. அதற்கு நாவில் எச்சில் ஊறியது.

நரி அங்கிருந்த கோழிகளைக் கொன்று தின்றது. வயிறு புடைத்த நரி வெளியே வர


முடியாமல் கூண்டிலேயே இருந்தது. மறுநாள் கிராம மக்கள் கூண்டினுள் நரியைக் கண்டனர்.
கோபமுற்ற கிராம மக்கள் நரியை நையப் புடைத்தனர்.

வாயெல்லாம் இரத்தம் ஒழுக, நரி காட்டை நோக்கி ஓடியாது. வழியில் நரிக் கூட்டம்
ஒன்றைச் சந்தித்தது. நரிகள், ”ஏன் இப்படி ஓடி வருகிறாய்?” என வினவின. வலி பொறுக்காத
நரியும், ”அங்கே பெரிய விருந்து ஒன்று நடைபெறுகிறது. என்னால் சாப்பிட முடியவில்லை,
அதனால் ஓடி வந்து விட்டேன்” என்றது.
இதைக் கேட்ட மற்ற நரிகள் உடனே கிராமத்தின் பக்கம் ஓடின. இதைக் கண்ட கிராம
மக்கள், இந்த நரிகளும்தான் சேர்ந்து கோழிகளைத் தின்றிருக்கக்கூடும் என நினைத்தனர்.
எல்லா நரிகளையும் நன்கு அடித்து விரட்டினர். நரிகள் வலி பொறுக்காமல் ஊளையிட்டுக்
கொண்டே காட்டிற்குள் ஓடின.

ஆராய்ந்து செயல்படு

காணாமல் போன புதையல்

ஒரு கஞ்சன் அவன் தேடிய பணத்தையெல்லாம் பொற்காசுகளாக மாற்றி அதைத் தன்


தோட்டத்தில் பள்ளம் தோண்டிப் புதைத்து வைத்தான். தினமும் அதை வந்து தோண்டிப் பார்த்து
காப்பாற்றி வந்தான். அவனுடைய பக்கத்து வீட்டுக்காரன் வறுமையால் வாடிக்
கொண்டிருந்தவன். தோட்டத்தில் பொன் புதைத்திருப்பதை அறிந்தான். அவன் ஒரு நாள் இரவு
பொன்னைத் தோண்டி எடுத்துக் கொண்டு சென்றான். மறுநாள் காலை வழக்கம் போல கஞ்சன்
புதைத்த பொன்னைக்காண வந்தான். அப்போது யாரோ பள்ளத்தைத் தோண்டிப் பொன்னை
எடுத்துச் சென்றதை அறிந்தான். உடனே அவன் புலம்பி அழத்தொடங்கினான்.

அச்சமயம் அவன் நண்பர்களில் ஒருவன், ”நண்பா! வருத்தப் படாதே, நீ சம்பாதித்த


பொருளை அனுபவிக்கவில்லை. அதைப் பொற்காசுகளாகச் செய்து புதைத்து வைத்திருந்தாய்,
அதனால் உனக்கு ஒரு பலனும் ஏற்படவில்லை. இப்போது நீ அதற்காக அழுவது நல்லதல்ல.
பொன்கட்டி புதைத்த இடத்தில் ஒரு கல்லை வைத்துக்குழியை மூடு. அதுவே உன் பொன்கட்டி
என்று நினைத்துக் கொள். உனக்கு உன் பொன்கட்டி இருந்தது போலவே கல்லும் இருக்கும்”
என்றான்.

பயன்படாத பொருள் இருப்பதும் இல்லாதிருப்பதும் ஒன்றுதான்.

You might also like