You are on page 1of 9

நாள் : திகதி:

வாசிப்பு என் சுவாசிப்பு

பெயர் : .......................
வகுப்பு : 2 ஔவை
அன்பு உள்ளங்கள்

அன்பரசன், தன் தங்கை அன்பரசியுடன்


பள்ளிக்கூடன் சென்றான். அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு
நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதையில் ஒரு
பூனைக் குட்டியைக் கண்டார்கள். அது பசியால் வாடி
இருந்தது. அன்பரசி தன் புத்தகப் பையைத் திறந்தாள்.
புட்டியில் இருந்த சுவை பானத்தை எடுத்தாள். அதைப்
பூனைக்கு ஊட்டினாள். பூனையின் பசி தீர்ந்தது. அதை
ஒரு மரத்தடியில் விட்டனர். பிறகு அவர்கள் பள்ளி
நோக்கிச் சென்றனர். அன்பரசனும் அவனுடைய
தங்கையும் நல்ல உள்ளம் படைத்தவர்கள்.

அடைவு

நாள் : திகதி:

கடமை மறந்த எருது


படை வீரன் ஒருவன் குதிரை ஒன்றையும், எருது ஒன்றையும்
வளர்த்து வந்தான். போக்குவரத்திற்கு குதிரையும்,

பொதி சுமக்க எருதினையும் பயன்படுத்தி வந்தான்.

துரதிஷ்டவசமாக அவன் நாட்டிற்கும், அண்டை நாட்டிற்கும்


போர் மூண்டது. குதிரை, “எருது நண்பா! நான் நமது எஜமானனைச் சுமந்து
செல்ல போகிறேன்” என எருதுவிடம் கூற, எருதோ, “ஐயோ பாவம் நீ!
என்னைப் பார் எஜமான் ஊரில் இல்லாத போது நிம்மதியாகப் பொழுதைக்
களிப்பேன்”, எனக் கூறி எக்காளமாகச் சிரித்தது.

ஆனால் சந்தர்ப்பம் மாறிவிட்டது. போர் கைவிடப்பட்டது.


இப்பொழுதோ எருது அதிகமாக வேலை செய்ய வேண்டியதாயிற்று.

கடமை மறத்தல் அதிக உழைப்பு

நாள் : திகதி:

நாள் : திகதி:
பாலைவனத்தின் கதை

கடவுள் உலகைப் படைத்தபோது அதில் பாலைவனம்


இல்லை.

பூமியெங்கும் விளை நிலங்களும், அழகிய

தோட்டங்களுமே இருந்தன. மனிதனைப் படைத்தவுடன் கடவுள்,

“மனிதா, நீ செய்யும் ஒவ்வொரு பாவத்திற்கும் ஒரு பொட்டு மண்


விண்ணில் இருந்து விழும்”, என்று கூறிச் சென்றார்.

மனிதனும், “ஒரு பொட்டு மண் தானே! என்ன செய்யும்!”


என்று எண்ணி எண்ணியே பாவங்கள் செய்யலானான். அதன்
விளைவு ………… பாலைவனம்.

எதை விதைக்கிறோமோ அதையே அறுக்கிறோம்

நாள் : திகதி:

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
ஒருநாள் ஆட்டுக்குட்டி ஒன்று நதிக்கரையில் மேய்ந்து

கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த ஓநாய் அந்த

ஆட்டுக்குட்டியைச் சாப்பிடும் நோக்கத்துடன், “ ஆட்டுக்குட்டியே! நீ

ஆற்றை அசுத்தப் படுத்துகிறாய்,” என்றது. குட்டியோ, ”நான் எங்கே

அசுத்தப் படுத்துகிறேன். நீரோட்டத்தின் போக்கில்தானே நீர்

குடிக்கிறேன்,” என்றது.

ஓநாய் திரும்ப, “நீதானே கடந்த வருடம் என் தம்பியைக்

கேலி செய்தாய்?” என்றது. அதற்கு குட்டி, “நான் போன வருடம்

பிறக்கவே இல்லையே,” என்று கூறவும் ஓநாய், “உன்னைத்

தின்பதற்கு இனி எந்த காரணமும் தேவையில்லை,” என்று கூறியபடி

ஆட்டுக்குட்டியை நோக்கிப் பாய, ஆட்டுக்குட்டி ஓட்டம் பிடித்தது.

முன் யோசனை எப்பொழுதும் உதவும்

அடைவு

நாள் : திகதி:

எறும்பும் வெட்டுக்கிளியும்
அது வசந்த காலத்தின் செழுமைக் காலம். தானியங்களும்
உணவுப் பொருள்களும் நிறைந்து கிடந்தன. எறும்புகள் அவசர
அவசரமாக உணவுத் துகள்களையும், தானிய விதைகளையும்
இழுத்துக் கொண்டு தங்கள் புற்றுக்குள் செல்வதும், வருவதுமாய்
இருந்தன.

அதைக் கண்ட வெட்டுக்கிளி ஒன்று கேலியாய் பாடி


நகைத்தது. “அட முட்டாள்களே, இப்பொழுதே ஏன்
கஷ்டப்படுகிறீர்கள்,” என்றபடி தவ்வியது.

காலம் ஓடியது. மழைக்காலம் வந்து சென்றது.


குளிர்காலமும் வந்தது. எங்கும் ஒரே பனி. வெட்டுக்கிளிக்கு எங்கும்
உணவே கிடைக்கவில்லை. கடும் பசியுடன் அது எறும்புப் புற்றின்
கதவைத் தட்டியது. வெளியே வந்த எறும்பு, “ஏ சோம்பேறியே!
வசந்த காலத்தில் சேமிக்க மறந்த உனக்கு உதவுவது பெரும் தவறு.
போ! போய் விடு!” என்று கூறிவிட்டு கதவை மூடிக் கொண்டது.
சோம்பேறி வெட்டுக்கிளி உணவு கிடைக்காமல் அலைந்தது.

நாளைய தேவைக்கு இன்றே சேமிக்க வேண்டும்


அடைவு

நாள் : திகதி:

தாத்தாவைத் திணறச் செய்தான்


பெரியவர் ஒருவர் தன் பேரனுடன் கொஞ்சிப் பேசிக்
கொண்டிருந்தார். அவனுக்கு வயது ஆறு.

“தாத்தா! என்னிடம் உங்களுக்குப் பிரியம் உண்டு

அல்லவா?” என்று கேட்டான் பேரன். “ஆம். உன்னிடம் எனக்கு


உள்ள பிரியத்துக்கு அளவே இல்லை” என்றார் தாத்தா.

“தாத்தா! அப்படியானால் கடவுளிடமும் பிரியம்


வைத்திருக்கிறீர்கள் அல்லவா?” என்று கேட்டான் பேரன். “ஆம்.
கடவுளிடமும் எனக்கு அளவற்ற பிரியம் உண்டு” என்றார்.

பேரன் உடனே “தாத்தா! எது எப்படி முடியும்? உங்களுக்கு


மனம் ஒன்று தானே இருக்கிறது?” என்றான். தாத்தா திணறிப்
போனார். “உலகப் பற்றுள்ள மனதில் கடவுள் பற்று எப்படி இருக்க
முடியும்? என்று நினைக்கலானார்.

நாள் : திகதி:

கடல் எவ்வளவு பெரியது ?


கடலில் வசித்து வந்த தவளை ஒருநாள் கரைக்கு வந்தது.
அருகில் இருந்த கிணற்றில் வசித்த தவளையும் வெளியே வந்த்து.
இரண்டு தவளைகளும் சந்தித்துக் கொண்டன. ஒன்றை ஒன்று
அறிமுகம் செய்து கொண்டது.

அப்போது, “கடல் எவ்வளவு பெரியது?” என்று கேட்டது


கிணற்றுத் தவளை.ஏனென்றால் அதற்குக் கடலைப் பற்றித்
தெரியாது. “கடல் மிகப் பெரியது!” என்றது கடல் தவளை. “
இவ்வளவு பெரிது என்று ஒரு அளவு சொல்லு” என்று கேட்டது
கிணற்றுத் தவளை.

“அதாவது கடலுக்கு அளவே கிடையாது. எங்கே


தொடங்குகிறது, எங்கே முடிகிறது என்றே அளவே கிடையாது”,
என்றது கடல் தவளை. “ எதற்குமே ஒரு அளவு உண்டு
என்பார்களே. அப்படி ஒரு அளவைக் கூறு!” என்று வற்புறுத்தியது
கிணற்றுத் தவளை.

“என்னால் அப்படிக் கூறவே முடியாது, பார்த்தால்தான்


புரிந்து கொள்ள முடியும்,” என்று கூறியது கடல் தவளை. கடல்
தவளைக் கூறியதைக் கேட்டுப் பொறுமையை இழந்த கிணற்றுத்
தவளை “ இந்தக் கிணற்று அளவாவது இருக்குமா நீ வசிக்கும்
கடல்?” என்று கேட்டது கிணற்றுத் தவளை.
கிணற்றுத் தவளை பலமாகச் சிரித்துக் கொண்டே, என்ன
சொல்லியும் உனக்குப் புரியவில்லையே! கடுகு எங்கே? மலை
எங்கே? என்பது புரியாத உனக்கு எப்படி புரிய வைக்க முடியும்?”
என்று சலித்துக் கொண்டது கடல் தவளை.

உடனே கிணற்றுத் தவளைக்குக் கோபம் அதிகரித்து, “நீ


ஒரு பொய்யன்! கிணற்றை விட கடல் பெரியதாகவே இருக்க
முடியாது” என்று கூறிவிட்டுச் சென்றது.

‘உலக நடப்புத் தெரியாதவனை கிணற்றுத் தவளை’ என்று கூறுவது


வழக்கம்.

You might also like