You are on page 1of 36

சுங்கை பெசி தமிழ்ப்பள்ளி

வாசிப்புக்
கையேடு

ஆக்கம் :
தமிழ்மொழி பாடக் குழு)
சுங்கை பெசி தமிழ்ப்பள்ளி
முள்ளம் பன்றியும் ஓநாய்யும்

தன் முன்னாள் வந்து நின்ற ஓநாயை


கோபமாக பார்த்து தன் முட்களைச் சிலிர்த்து
நின்றது முள்ளம் பன்றி. ஓநாய் உடனே
பதற்றத்துடன், பயப்படாதே முள்ளம் பன்றி,
உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கேன்
என்றது.

என்னது? நான் அழகா? ஆமாம். நீ செம


அழகு. ஆனா உன் உடம்புல இருக்கிற
முல்லுதான் உன் அழகை கெடுக்குது, என்றது
ஓநாய்

ஆனா, அதுதானே என்னைப் பாதுகாக்குது


என்றது முள்ளம்பன்றி, உண்மைதான். ஆனா,
அதை எடுத்துட்டினா, நீ இன்னும்
அழகாயிடுவே, யாருக்கும் உன்னை
கொல்லனும்னு மனசே வராது.

ஓநாயின் பசப்பு வார்த்தையில் மயங்கிய


முள்ளம்பன்றி, தன் முட்களை எல்லாம்
மழித்துவிட்டு ஓநாய் முன் வந்து நின்றது.
இப்போ நான் இன்னும் ஆழகாயிருக்கேனா?
என்று கேட்டது. அழகாய் மட்டும் இல்லை,
அடிச்சு சாப்பிடுவதற்கு வசதியாகவும் இருக்கு,
என்றபடி முள்ளம்பன்றி மேலே பாய்ந்தது
ஓநாய்.

நீதி: "வீண் புகழ்ச்சிக்கு மயங்காதே".

இலவச சந்தோஷம் உயிரை


வாங்கிவிடும்.

தேனீக்கள் மலருக்கு மலர் சென்று தேன்


சேகரிப்பதை சில ஈக்கள் பார்த்தன. எதற்கு
இத்தனை கஷ்டம்.

ஒரு வீட்டில் அலமாரியில் தேன் பாட்டில்


வைத்து இருந்தார்கள். அது சரியும் நிலையில்
இருந்ததை. ஈக்கள் பார்த்து விட்டன.
காத்திருந்து, அது சரிந்ததும் மாற்றி மாற்றிக்
குடிக்கலாம் என்று நினைத்தது.
அவைகள் எதிர்பார்த்தபடியே தேன் பாட்டில்
சரிந்து தரையெல்லாம் தேன் ஈக்கள்
உற்சாகத்துடன் மொய்த்துத் தேனைத் தத்தம்
சின்ன நாக்குகளால் பருகின, திருப்தியாகத்
தேன் குடித்ததும் பறந்து போக முயற்சித்த போது
இறக்கையெல்லாம் தேன் ஒட்டிக்கொண்டு நகர
முடியாமல் தேனிலேயே மாட்டி
இறந்துவிட்டன.

நீதி : இலவச சந்தோஷம் உயிரை


வாங்கிவிடும்.

பயம் பாதி கொல்லும்!


ஒரு காட்டில் முனிவர் தவம் இருந்தான்,

அப்போது அந்த வழியக் ஒரு நோய்

போய்க்கொண்டிருந்தது அதன் பெயர் காலரா...!

முனிவர் நோயை கூப்பிட்டு எங்கே போகிறாய்

என கேட்டார். பக்கத்து ஊரில் திருவிழா நான்

அங்கு சென்று எல்லாருக்கும் காலராவைப்

பரப்பி விட்டு காலராவினால்

கொல்லபோகிறேன் என்றது.

இது பாவம் இல்லையா என முனிவர் கேட்க,

அப்புறம் ஏன் என்னை இறைவன்

படிக்கவேண்டும் என நோய் கேட்டது.

சரி என்று கூறிவிட்டு வெறும் 100 பேரை மட்டும்

கொல், அதற்க்கு மேல் உயிர்பலி ஏற்பட்டால்

ஏன் சாபத்திற்கு ஆள்வாய் என முனிவர் கூறி

அனுப்பினார். ஆனால் காலராவினால் உயிர்

பலி 2000 ஆக உயர்ந்துவிட்டது.

முனிவருக்கு கோபம், நோயை அழைத்து ஏன்


இப்படி செய்தாய் ஏன் கேட்டார்! நான்

கொன்றது 100 பேர் தான் மற்றவர்கள்

அனைவரும் பயத்தினால் இறந்தவர்கள்!! நான்

என்ன செய்யமுடியும் முனிவரே!...!

பயம் பாதி கொல்லும்!

கோப்பையை காலி செய்!

கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் புகழ் பெற்ற ஜென்


துறவி ஒருவரை சந்திக்கச் சென்றார்.
பேராசிரியர் ஜென் தத்துவங்களைப் பேசிக்
கொண்டிருந்தார், தான் ஜென் பற்றி மேலும் கற்க
விரும்புவதாக்க் கூறினார்.

தேனீர்க் கோப்பையை எடுத்துக் கொண்டு வந்த


ஜென் துறவி, கோப்பையின் நுனி வரை தேனீரை
ஊற்றினார். கோப்பை நிரம்பி வழிந்தது.

கோபத்துடன் பேராசிரியர் “ கோப்பை நிரம்பி


விட்டது. மேலும் ஊற்ற முடியாது.
நிறுத்துங்கள்” என்று கத்தினார். துறவி
கூறினார்: “நீங்களும் இந்த கோப்பை
போலத்தான்.

உங்கள் கோப்பையைக் காலி செய்யாவிடின்,


நான் எவ்வாறு ஜென் பற்றி கற்றுக் கொடுப்பது?”

நீதி :கற்றுக் கொள்ளக் கற்காமலிரு (Unlearn to


learn)

வியாபார தந்திரம்

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும்

முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக்

கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!'


என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும்

பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல்

சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன்

ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து

ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல


விற்பனை!

மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும்,

'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார்.

பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார்.

அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று

கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன்,

ஏகத்துக்கு விற்பனை செய்தான்!

மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை

ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக்

கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர்,

"அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம்

இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு

பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு

விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம்

குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக்

குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள்


தாத்தா!" என்று தனது ஆலோசனைகளை அள்ளி
விட்டார்.

முதியவர் சிரித்தபடி, "போய்யா... அவன் என்

மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து

ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம

சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பழம்

பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா,

'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து

சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க

சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான

வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான்

என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.

கூடா நட்பு

சங்கமித்திரன் என்ற அரசன் ஒரு நாட்டை ஆண்டு


வந்தான். அவனுக்கு குரங்குகள் என்றால் மிகவும்
பிரியம். ஆகையால் தன் அறைக்குள்ளேயே ஒரு
குரங்கை வளர்த்து வந்தான். தன் படுக்கையறைக்குள்
வருமளவுக்குச் சுதந்திரம் அளித்து வைத்திருந்தான்
சங்கமித்திரன்.
ஒரு நாள் அரசவையில் அதன் அட்டகாசம்
தாங்காது அமைச்சர்களும் மற்றவர்களும் குரங்கின்
நட்பை விட்டுவிடுமாறு கூறினார்கள். அவர்களது
அறிவுரையை ஏற்கவும் மறுத்தான் சங்கமித்திரன்.

ஒரு நாள் இரவில் தான் தூங்கப் போகும் போது


குரங்கை தனக்கு விசிறி விடுமாறு சொல்லிவிட்டு
ஆழ்ந்து தூங்கிப் போனான் அரசன். அப்போது ஒரு ஈ
ஒன்று அவன் கழுத்தில் வந்து அமர்ந்தது. விசிறியால்
மீண்டும் மீண்டும் விசிறியும் ஈ பறக்காமல்
அமர்ந்திருந்தது. இதனால் கோபம் கொண்ட குரங்கு,
"உன்னைக் கொன்று விடுகிறேன் பார்" என்று சொல்லி
அரசனின் வாளால் அரசனின் கழுத்தில் அமர்ந்திருந்த
ஈயை வெட்ட வாளை ஓங்கி வீசியது. அரசனின்
கழுத்து துண்டானது.

கூடா நட்பு கேடாய் முடியும்.

குறள் 792:
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.

மீண்டும் மீண்டும் ஆராயாமல் கொள்கிற நட்பு,


கடைசியில் ஒருவர் சாவுக்குக் காரணமாகிற
அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.
ஒருவனை எதிர்கொள்ள உருவம்
தடையல்ல..!

உருவத்தில் சிறியவனாக இருப்பதால் யாரையும் ஏளனம்


செய்யக்கூடாது. அவன் வேறு ஒரு வகையில் வல்லவனாக
இருப்பான் என்பதை உண்ர்த்தும் நீதிக்கதை

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது தனது

பலத்தாலும், தோற்றத்தாலும், கர்ஜனையாலும் காட்டில்

வசித்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.

பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திற்கு

அருகே செல்வதில்லை. சிங்கத்தைக் கண்டால் பயந்து


ஓடிவிடுகின்றன.

ஆனால் 'ஈ" ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து

அமர்ந்தது. அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை

செய்தபடியே..'உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன்,

நகங்களால் கீறுவேன், நசுக்கிப் பொசிக்கிப் போடுவேன்


என்றது.

அதற்கு 'ஈ' ஏய் ! நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப்

பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட

வேண்டிய அவசியமில்லை. நீ சொன்னபடி உன்னையே நீ


பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் விறாண்டிக்

கொள்ளவும் செய்வேன்" என்றது.

இதைக் கேட்ட சிங்கம் கோபத்துடன் முடியுமாயின் அதைச்

செய் என் சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் முதுகில்

அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது..அதை

விரட்ட சிங்கம்.தன் பற்களால் கடிக்க முயன்ற போது..ஈ பறந்து

விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.

ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன்

கால் நகங்களால் முயல..ஈ பறக்க...சிங்கம் தன் நகங்களால்

தன் முகத்தையே கீறிக் கொண்டது. இவ்வாறு பலதடவை

சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது.

சிங்கத்தினால் ஈயை பிடிக்கவோ நசுக்கவோ முடியவில்லை.

அதன் பின்புதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில்

வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை பாடாய் படுத்தி

பாடம் புகட்டிவிட்டதே!. .

உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது

தந்திர நரியை வென்ற புத்திசாலி கழுதை

ஒரு நாள் ஒரு காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று

மேய்ந்து கொண்டிருந்தது. கழுதையை கவனித்த ஓநாய்


ஒன்று அதை அடித்துத் தின்னும் நோக்கத்துடன் அதன் மீது

பாய்ந்தது. தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்தது கழுதை.

ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால்

ஏதாவது ஒரு தந்திரம் செய்து தான் சமாளிக்க வேண்டும் என

கழுதை தீர்மானித்தது. ஓநாயின் பாய்ச்சலின் போது சற்று

விலகிக் கொண்டு, ""ஓநாயாரே, உம்முடைய வலிமையின்

முன்னால் நான் எம்மாத்திரம்... நான் இன்று உமக்கு

இரையாகப் போவது உறுதி. இதை யாராலும் தடுக்க.

முடியாது நானும் உமக்கு இரையாகத் தயாராக இருக்கிறேன்.

அதற்கு முன்னால் நான் சொல்லக் கூடிய விஷயத்தைத்

தயவு செய்து கேட்க வேண்டும்,'' என வேண்டிக் கொண்டது.

"நீ என்ன சொல்ல விரும்பினாய். சொல்வதை சீக்கிரம் சொல்".

என உறுமியது ஓநாய். "ஓநாயாரே என் காலில் பெரிய முள்

ஒன்று குத்தி விட்டது. முள்ளை எடுக்க நான் எவ்வளவோ

முயற்சி செய்தும் முடியவில்லை. காலில் முள் உள்ள

நிலையில் நீ என்னை அடித்துச் சாப்பிட்டால் அந்த முள் உன்

தொண்டையில் மாட்டிக் கொள்ளும். அது உமக்குக்

கடுமையான வேதனையைத் தருவதுடன் உன்

உயிரையும் வாங்கி விடும். அதற்கு தயவு கூர்ந்து முதலில்

என் காலில் இருக்கும் முள்ளை எடுத்துவிடு. அதற்குப் பிறகு நீ

என்னை அடித்துத் தின்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும்

இல்லை,'' என கழுதை கூறிற்று.


ஏமாந்த ஓநாய் ஒத்துக் கொண்டது. கழுதை தனது

பின்னங் கால்களைத் திருப்பிக் காண்பித்து. ஓநாய்

கழுதையின் பின்னங்கால்களில் முள் இருக்கிறதா என தேடும்

வேலையில், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கழுதை

பின்னங் கால்களால் ஓநாயைப் பலமாக உதைத்தது.

கழுதையின் உதை தாங்காமல் ஓநாய் துடிதுடித்து

சரிந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு

கழுதை வேகமாக ஓடி தப்பித்துக் கொண்டது.

வழிபோக்கணும் வைரகல்லும் |

ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவனுக்கு


வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது. அது வைரம் என்றறியாமல், விலை

போகுமா என்ற சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான். அவன்

கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன், இருபது ரூபாய்க்கு

தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான்.


ஆனால் வழிபோக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற
எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான். ஐந்து ரூபாய் அதிகம் கொடுக்க விரும்பாத

அந்த வியாபாரியும் 20 ரூபாய்க்கு பேரம் பேசினான். இதைக் கவனித்த மற்றொரு

வியாபாரி 25 ரூபாய் கொடுத்து அந்த வைரைத்தை வாங்கிக்கொண்டு சென்றான்.

ஆத்திரமடைந்த வியாபாரி, அந்த வழிப்போக்கனை பார்த்து, “அட


முட்டாளே! அதன் மதிப்பு பல ஆயிரம் பெறும்... அறிவில்லாமல்

விற்றுவிட்டாயே!” என்று திட்டினான்.

அதற்கு அவன், “அந்தக் கல்லுக்கு என்னுடைய மதிப்பு அவ்வளவுதான்..


ஆனால் அது வைரம், அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான்

மிகப்பெரிய முட்டாள்” என்றான். சிலர் இப்படித்தான் உண்மையான மதிப்பு

தெரிந்தும், கிடைத்ததை விட்டுவிட்டுத் தவிக்கிறார்கள்..

அறிவுத்திறனும், உடல் பலமும்


ஒரு முதலாளி, தனக்குச் சொந்தமான பரந்த இடம்
முழுதிலும் தென்னங்கன்றுகளை நட வேண்டும் என்று முடிவு
செய்தார். மரக் கன்றுகள் நடுவதற்குப் பள்ளம் வெட்ட
வேண்டிய வேலையை ரங்கன் என்பவனிடம் ஒப்படைத்தார்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, நன்றாக


உழைத்து நிறையச் சம்பாதித்துவிட வேண்டும் என்று
நினைத்தான் ரங்கன். ஏனென்றால், அவன் தன் மகளின்
திருமணத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் காசு சேர்த்து
வருகிறான். இன்னும் போதுமான அளவு பணம் சேரவில்லை.

ரங்கன், முதல் நாளில் இருபது மரக் கன்றுகளை


நடுவதற்குப் பள்ளம் தோண்டினான். அவன் உழைப்பைக்
கண்டு முதலாளி அவனை மிகவும் பாராட்டினார். பிறகு,
ஒவ்வொரு நாளும் அவன் தோண்டுகிற பள்ளத்தின்
எண்ணிக்கை குறைந்து வரத் தொடங்கியது. நாற்பதாம் நாளில்
அவன், காலையிலிருந்து மாலை வரை எவ்வளவோ
முயன்றும் இரண்டு பள்ளங்கள்தான் தோண்ட முடிந்தது.
ரங்கன் மிகவும் ஏமாற்றமடைந்தான்.

"முதல் நாளின்போது இருபது பள்ளங்கள் தோண்டியவன்


நாற்பதாம் நாளில் இரண்டு பள்ளம் தோண்டுகிறானே,
இவனுக்கு என்ன ஆயிற்று?" என்று முதலாளியும்
குழம்பினார். அவர் ரங்கனின் மண்வெட்டியை வாங்கிப்
பரிசோதித்துப் பார்த்தார். மண்வெட்டியின் முனை கூர்
மழுங்கியிருந்தது. அவர் ரங்கனிடம் கேட்டார்.

"நீ உன் பணி ஆயுதத்தைக் கூர்தீட்டி நன்றாக வைத்துக்


கொண்டால் என்ன?'' ரங்கன் சொன்னான்: "இதற்கெல்லாம்
எனக்குக் கொஞ்சம்கூட நேரமே இல்லை அய்யா! நான், நாள்
முழுதும் சிறிதும் ஓய்வெடுக்காமல் உழைத்துக்
கொண்டிருக்கிறேன். நிறைய வேலை செய்து நிறையப் பணம்
சம்பாதிக்க வேண்டுமே!''

முதலாளி சொன்னார்: "ரங்கா, இந்த மண்வெட்டியைப்


போலத்தான் நாமும். நம் அறிவுத்திறனும், உடல் பலமும்
மழுங்கிவிட்டால் நம்மால் எதுவுமே செய்யமுடியாது. நமக்கு
எவ்வளவோ கடமைகள் இருக்கலாம். நிறைய உழைக்க
வேண்டி வரலாம். ஆயினும் நம் உடலையும், மனதையும்,
அறிவையும் எப்போதும் பேணிக் கூர்மையாக
வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மால்
நிறையச் சாதிக்க முடியும். நம் இலக்கை விரைவில் அடைய
முடியும்!

உயிரே மூலதனம்

குளிர்பதன வசதியுள்ள வாகனத்தில் சிவா தன் தந்தையை


உட்கார வைத்து நகர்வலம் வந்து கொண்டு இருக்கும்
வேளையில், “அப்பா உங்கள் வாழ்க்கையில் சொத்துசுகம்,
சேமிப்பு ஏதுமே இல்லாமல் எழுபது வயதைக் கடந்து
விட்டீர்களே’ என்றான்.

வண்டி ஒரு கல்யாணப் பந்தலருகே போகும்போது


நிறுத்தச் சொன்னார் தந்தை “தம்பி பந்தலில் உள்ள வாழை
மரத்தைப் பார்த்தாயா” இதன் சரித்திரம், என்ன, தெரியுமா?
இது தன்னுடைய வாழ்நாளில் இலை, பூ, காய், கனி, பட்டை
ஆகிய எல்லாவற்றையும் தானமாக கொடுத்து விடுகிறது.
இந்த வாழை மரத்தின் சேமிப்பு கன்றுகள் மட்டும்தான் இந்த
வாழ்க்கைத் தத்துவம் மணமக்களுக்கும் புரிய
வேண்டுமென்பதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள்
மணப்பந்தலில் வாழை மரம் கட்டுவதை பழக்கமாக
வைத்தார்கள்.

தந்தை கொடுத்த உயிர்தான் மனிதனுக்கு மூலதனம்.


அதைக் கொண்டு முன்னேறுவதுதான் தனக்கும் தன்னுடைய
தந்தைக்கும் பெருமை இயற்கை விதியின்படி வாழும்
மரங்களுக்கு துன்பமோ துயரமோ கிடையாது புரிந்துகொள்’
என்றார் தந்தை.

மரங்கொத்திப் பறவை

சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒருமகானைச்


சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.
அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை
உணர்த்த ஒரு கதையைக் கூறினார்.
ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக்
டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின்
மேல் தாவித் தாவி ஏறியது. அதைப் பார்த்த ஒரு மனிதன்,
""மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக்
கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்று
கேட்டான்.

அதற்கு அந்தப் பறவை, ""மனிதனே நான் என் உணவைத்


தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்...'' என்றது. அவன் பார்த்துக்
கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி,
மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை
எடுத்து உண்ண ஆரம்பித்தது.

தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த


மனிதனைப் பார்த்து, "மனிதனே, நீயும் தேடு... மரத்திலும்,
மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும்
ஏதாவது கிடைக்கும்'' என்றது. கதையைச் சொல்லி முடித்த
மகான், ""நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும்
ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான்
கிட்டும்'' என்றார்.
புத்திசாலி கிளி

ஆப்பிரிக்கக் கிளி ஒன்றை கூண்டினுள் வைத்து ஒருவர்

வளர்த்து வந்தார். ஒரு முறை அவர் ஆப்பிரிக்கா செல்லும்

போது கிளி சொல்லிற்றாம், ''என் ஜோடிக் கிளி

அங்கிருக்கும்.அதனிடம் நான் இங்கு கூண்டில் இருப்பதாகச்


சொல்லுங்கள்.''

அவரும் தன வேலை முடிந்த பின் சிரமப்பட்டு காட்டில்

தனியாக இருந்த அந்தக் கிளியைக் கண்டு விபரம் சொல்ல,

அது உடனே கண்ணீர் உகுத்துக் கீழே சுருண்டு விழுந்து

விட்டது. 'அடடா, இந்தக் கிளி இறந்ததற்கு நாம்

காரணமாகிவிட்டோமே,' என்று வருத்தப்பட்டு ஊருக்கு வந்து

கூண்டுக் கிளியிடம் விபரம் சொல்ல, அக்கிளியும் கண்ணீர்

உகுத்து கூண்டினுள்ளேயே விழுந்து விட்டது.

நம்மால் இந்தக் கிளியும் அநியாயமாய் இறந்து விட்டதே

என்ற வருத்தத்துடன் கூண்டைத் திறந்தார். உடனே அந்தக்

கிளி ஜிவ்வென்று பறந்து போய் பக்கத்திலிருந்த

மரக்கிளையில் அமர்ந்தது. உடனே அவர், ''உன் ஜோடிக் கிளி

இறந்தது தெரிந்தும் நீ என்னிடம் நடித்துத் தப்பி விட்டாயே!


''என்றார்.
அதற்கு அக்கிளியும், 'என் ஜோடிக் கிளியும் இறக்க

வில்லை. கூண்டில் அடைபட்ட நான் தப்பிக்கும் வழியை

உங்களிடமே அது சொல்லி அனுப்பியிருக்கிறது.' என்று கூறி

விட்டுத் தன ஜோடிக் கிளியைத் தேடி பறந்து விட்டது.

ஜோடிகளை பிரிப்பது பாவம்மல்லவா...! | பறவைகளை

கூண்டுக்குள் அடைக்காதீர்கள் | சுதந்திரம் நமக்குமட்டுமல்ல


அவைகளுக்கும்தான்...!

காகமும் நாய்க்குட்டியும்

ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து

வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது.

ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது.

இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.

என்ன காக்கையாரே! ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக

இருக்கிறீர்? என்று கேட்டது. அதற்கு காகம், மனிதர்கள்


மற்றப் பறவைகளை அன்புடன் வளர்க்கின்றார்கள்.

அவைகளின் செயல்களைப் பாராட்டுகின்றார்கள் ஆனால்

என்னை வெறுத்து. கல்லால் எறிந்து துரத்துகிறார்களே ஏன்?

என்று கேட்டது காகம்.

இதற்குக் காரணம் உங்கள் தீய குணங்கள்தான். இதை

நீங்கள் இல்லாது செய்தால் உங்களையும் அன்பாக

நடத்துவார்கள், என்றது நாய்க் குட்டி. எங்களிடம்

அப்படியென்ன தீய குணங்கள் உள்ளன? கடைமை, சுத்தம்,

இப்படிப் பல நல்ல குணங்களில் நாங்கள்தான் சிறந்தவர்கள்!

என்று சொன்னது காகம். உண்மைதான்! என்றது நாய்க் குட்டி

பகிர்ந்துண்ணும் பண்பைக் கற்றுத்தந்ததும் நாங்கள்தான்!

என்று பெருமையோடு சொன்னது காகம்.

ஆமாம் அதுவும் உண்மைதான்! என்று மறுபடியும்

சொன்னது நாய்க்குட்டி. இப்படி நல்ல குணங்கள் எம்மிடம்

இருந்தும், மற்றப் பறவைகளுக்கு உள்ள மதிப்பு எங்களுக்கு

இல்லையே ஏன்?

குயில் கூவும்போது அதன் இனிமையை இரசிக்கிறார்கள்.

மயிலாடும் போது அதை இரசித்துப் பாராட்டுகிறார்கள்.

கிளியை வீட்டில் வளர்த்து பேசக் கற்றுக்

கொடுக்கிறார்கள்.அனால் எவ்வளவோ நல்ல குணங்கள்

இருந்தும் எம்மினத்தைக் கண்டாலே துரத்துகிறார்களே ஏன்?

என்று மீண்டும் கேட்டது காகம்.


ஏன் என்று நான் சொல்லுகிறேன். உங்களிடம் எவ்வளவு

நல்ல குணங்கள் இருந்தாலும். உங்களிடம் இருக்கும் சில தீய

குணங்களால் தான் மனிதர்கள் உங்களை வெறுக்கிறார்கள்,

என்று கூறியது நாய்க்குட்டி. அப்படி என்ன தீய குணங்கள்?

என்று கேட்டது காகம். திருடுதல், ஏமாற்றுதல், என்று

சொன்னது நாய்க்குட்டி. காகம் தலை குனிந்தது.

நீதி: ஒருவரிடம் எவ்வளவு நல்ல பண்புகள் இருந்தாலும்.

அவரின் ஒரு சிறு தீயசெயல் அவரை, அவரின் அத்தனை

நல்ல பண்புகளில் இருந்தும் மறைத்து அந்தத் தீயசெயலே


முன்னிற்கும்.

சிறுவனின் தன்னம்பிக்கை

ஒருவரின் விலை உயர்ந்த மகிழுந்தை ஒரு சிறுவன்

வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை

அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச

தூரம் ஓட்டினார்.

உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது, என்ன

விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது

என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர்.


அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன்

சொல்ல, நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத்தெரியும்,

உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும்

என நினைக்கிறாய் அல்லவா? என்றார்.

சிறுவன் சொன்னான். ‘இல்லை, நான் அந்த உங்களின்

சகோதரனைப்போல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்’


என்றான்.

You might also like