You are on page 1of 9

திருச்சிற்றம்பலம்

மெளனம்
பிரணவம்
3 முறை மனதில் கூறவும்.

• \

ஓம் ஓம்

ஓம்
விநாயகர் வணக்கம்
குரு வணக்கம்
திருப்புகழ்

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!


ஈசருடன் ஞானமொழி பேசும் முகம்
ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம்
ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம்
ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம்
ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள
வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
திருப்புகழ் விளக்கம்
◆ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று
=ஆணவ மலம் நீங்கப்பெற சூரபத்மனை
நாத தத்துவமான சேவலைக் கொடியிலும்
விந்து தத்துவமாக ஆண்மயிலை
வாகனமாகவும் மாற்றிய முருகா.

◆ஈசருடன் ஞான மொழி பேசு முகம் ஒன்று


=பிரணவம் மந்திரம் அகரம் உகரம்,மகரம்
என ஓம்கார பொருளை ஈசனுடன் பேசி
மகிழ்ந்த முருகா.
திருப்புகழ் விளக்கம்
◆கூறுமடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று
=தம் வினைகளைத் தீர்க்க முனைப்பாய்
இருப்போருக்கு அவர்தம் வினை கழிய அருள்
செய்யும் முருகா.

◆குன்று உருவாய் வேல் வாங்கி நின்ற முகம்


ஒன்று.
=பெருமலையினை ஒத்த அரக்கன் தாரகனை
வேல் விட்டு வீழ்த்தி தேவர்களைக் காத்தது
போல எங்களையும் தினம் தினம் காக்கும்
வேலே...முருகா.
திருப்புகழ் விளக்கம்
◆மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே,
=மாறுபட்ட குணங்களைக் கொண்டு
சிவநிந்தனை செய்யும் சூரர்கள் உன்னிடம்
அழிந்தது போல இறை நிந்தனை செய்பவரை
அழித்து எம்மைக் காக்கும் முருகா.

◆வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே,


=என்னுள் சிவன் நினைவு வரும் இச்சையை
த்தூண்டும் இச்சா சக்தி வள்ளித்தாயாரை
மணந்த முருகா.
திருப்புகழ் விளக்கம்
◆ஆறு முகம் ஆன பொருள் நீ, அருளல்
வேண்டும்,
=ஈசானம்,தர்புருஷம்,அகோரம்,வாமதேவம்,ச
த்யோஜாதம், அதோ என நான்கு திசைகள்
மற் றும் மேல்,கீழ் என ஆறு முகங்கள்
கொண்டு எங்களை எத்திசையிலும் வாழ
வைத்துக் கொண்டு இருக்கும் வள்ளலே
முருகா

◆ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே


=பிரமனுக்கும்,திருமாலுக்கும் காட்டாத
ஜோதி வடிவாய் நின்ற திருவாண்ணாமலயில்
இருக்கும் முருகா. எங்களை உய்விக்க வந்த
கலியுக வரதனே போற்றி.
ஓம் சரவண பவ... ஷண்முகா சரணம்...

You might also like