You are on page 1of 44

ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

ஞான பாஸ்கரம்

A free publication by Kanchi Periva Forum Page 1


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

ஸ்ரீ சூர்ய நாராயணப் பபருமான் குறித்து ஸ்ரீ மஹா


பபரியவா அருளிய அமுதவாக்கில் இருந்து
பதாகுக்கப்பட்டது

மூலம்: தெய்வத்ெின் குரல் | நன்றி: வானெி பெிப்பகம்

ஸ்ரீ மஹா பபரியவாளின் 125-வது ஜயந்தி தின


ரவபவத்ரத (29-05-2018) முன்னிட்டு Kanchi Periva Forum
மூலம் இலவசமாக பவளியிடப்படுகிறது.

மமலும் விவரங்களுக்கு: info@periva.org

இரணய தள முகவரி: www.periva.org|www.anusham.org|

மற்றும் www.periva.proboards.com
A free publication by Kanchi Periva Forum Page 2
ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

பபாருளடக்கம்

ஸவிதா ............................................................................................ 4

நவக்ரஹங்களில் ஸூர்யன் .................................................. 5

ஸூர்ய மண்டலம் – முன்மனார்களின் அறிவியல் .... 6

மசாலார் சிஸ்டத்தின் தர்மம்................................................. 9

ஆத்ம ப்ரதக்ஷிணமும், பதய்வ ப்ரதக்ஷிணமும் .......... 12

அம்பாளின் சிரஸில் ஸூர்யன் .......................................... 15

பாநுமசகரன் ................................................................................. 17

ஸூர்ய ப்ரகாசத்தால் ஏற்பட்ட வானவில்.................... 22

சந்த்ர-ஸூர்ய பமௌள ீச்வரி .................................................. 24

ஸூர்ய அவதாரமான ஸ்ரீ சங்கரர் ..................................... 25

ஞான பாஸ்கரன் ....................................................................... 27

ஸூர்ய சந்திரரரக் பகாண்டு பாலூட்டும் தாய் ........ 28

ஸூர்யனிடமிருந்மத ஜீவ சக்தி ......................................... 30

புராதன நூல்களில் நவனக்


ீ கண்டுபிடிப்புக்கள் ........... 32

ஸூர்யமன குரு......................................................................... 36

ஸூரியன் சுற்றுகிறதா ? பூமி சுற்றுகிறதா? ................. 37

Universe - ப்ரம்மாண்டம் ............................................................. 39

ஆமராக்யம் பாஸ்கராத் இச்மசத் ....................................... 42

A free publication by Kanchi Periva Forum Page 3


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

ஸவிதா

ஸூர்யனுக்கு எத்தரனமயா மபர் இருக்கிறது.


‘ஆதித்ய(ன்)-ஸவிதா-ஸூர்ய(ன்)-கக(ன்)-பூஷா’
இப்படிபயல்லாம் பல மபர்கள் (’ஆதித்ய ஹ்ருதய’த்தில்)
பசால்லியிருக்கிறது.

பாஸ்கரன், பானு, மார்த்தாண்டன், திவாகரன், தினகரன்,


தினமணி, ரவி என்பறல்லாமும் பல மபர் இருக்கிறது.
அவற்றில் ஸவிதா என்பதுதான் காயத்ரீ
மந்த்ரத்திமலமய வருகிற மபர்.

அந்த மந்திரத்தில் பரமாத்மாவின் ஞான


ஜ்மயாதிஸ்ரஸ ஸூர்ய மண்டலத்திற்குள் இருக்கும்
மதஜஸ்ஸாக பாவித்து, ப்ரார்த்தித்து, அது நம் அறிவுச்
சுடரரயும் பகாழுந்து விட்படரியும்படி தூண்டிவிட
மவண்டும் என்று பசால்லும்மபாது ஸவிதாவாகமவ மபர்
பகாடுத்துச் பசால்லியிருக்கிறது. அந்தப் மபரின்
விமசஷம் அது அழிரவச் பசால்லாமல் பரடப்ரபச்
பசால்வது.

ஸவிொ என்றால் உற்பத்ெி தெய்கிறவன்,


உண்டாக்குகிறவன்.

‘ப்ரஸவம்’ என்ற வார்த்ரதயில் வரும் ‘ஸவ’த்தின்


அடியாகப் பிறந்த வார்த்ரத ஸவிதா.

ஸூர்யன் இருட்ரடயும், மசற்ரறயும் சகதிரயயும்,


பூச்சிகரளயும் அழிப்பது மட்டுமில்ரல.

A free publication by Kanchi Periva Forum Page 4


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

அவனாமலமய மரழ, தாவர வளர்ச்சி, நம் ஆமராக்ய


வளர்ச்சி, ஆத்யாத்மிகமாக நம்முரடய புத்தி வளர்ச்சி
எல்லாம் உண்டாகின்றன.

அப்படிமய ஸுப்ரஹ்மண்யரான ஞான ஸூர்யன்


அஞ்ஞான இருட்ரட அழிப்பது மட்டுமில்ரல;
அஞ்ஞானம் மபானபின் எல்லாம் சூன்யமாகி
விடுவதில்ரல; அஞ்ஞானம் அழிந்த இடத்தில்
பூர்ணாநுபவமான ஞான ப்ரகாசத்ரத அவர்
உண்டாக்குகிறார்.

திருமுருகாற்றுப்பரடயும் ஸூர்மயாதயத்ரத உவரம


பசால்லித்தான் ஆரம்பிக்கிறது.

நவக்ரஹங்களில் ஸூர்யன்

நவக்ரஹங்களில் ஸூர்யன் தவிர எவர் பபயருமம


ரவப்பது பதன்னாட்டில் ஸ்ம்ப்ரதாயமில்ரல.
சிஷ்டாசாரம் அப்படியில்ரல.

மதய்ரவக் காட்டும் பாலசந்த்ரன் மபமரா, பூர்ணசந்த்ரன்


என்மறகூடப் மபமரா ரவக்கும் வழக்கமில்ரல.

அங்காரகன், புதன் என்று பபயர் ரவத்துக்


பகாள்வதுண்டா? ‘ப்ருஹஸ்பதி’ என்று பரிஹாஸத்துச்
பசால்வதுதான்.

சுக்ரன் என்றும் பபயர் ரவப்பதில்ரல. சனி? [பபரிதாகச்


சிரித்து] திட்டுவதற்குத்தான் அந்த சப்தம்!

A free publication by Kanchi Periva Forum Page 5


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

ராஹு, மகதுவும் அசுப க்ரஹங்களாதலால் அப்படியும்


மபர் ரவப்பதில்ரல.

நவக்ரஹங்களில் ஸூர்யன் ஒருவர் தபயர்ொன்


வவப்பது ஸம்பிரொயம்.

அதுவும் ஸூர்ய நாராயணன் என்று மஹாவிஷ்ணு


பபயர் மசர்த்துத்தான் ரவப்பார்கள்.

ஸூர்யனின் மநர்ப் மபராக பாஸ்கரன் என்பது மட்டுமம


தக்ஷிணத்தில் இருக்கிறது. வடக்மக ரவி, திவாகர்,
ப்ரபாகர், ஆதித்யா, மார்த்தாண்ட் ஆகிய மபர்கள்
ரவத்துக் பகாள்கிறார்கள். இப்மபாபதல்லாம்
தக்ஷிணத்திலும் வடக்கத்தி மபர்கள் நிரறய
வந்துவிட்டது. அது இருக்கட்டும்,

நான் பசால்ல வந்தது, ஸூர்யன் தவிர மற்ற


க்ரஹங்களின் மபர் ரவப்பதில்ரல. பஞ்சாயதன
மூர்த்திகளிமலமய இருப்பவர் ஸூர்யமூர்த்தி.

ஆசார்யாள் ஸ்தாபித்த ஷண்மதங்களில் ஒன்று


[ஸூர்யரன முழு முதற் பதய்வமாகக் பகாண்ட]
பஸளரம்.

ஸூர்ய மண்டலம் – முன்மனார்களின் அறிவியல்

ஸ்வாமிரய ப்ரதக்ஷிண முரறயில் நாம் ஏன் சுற்றணும்


என்பதற்கு இன்பனாரு காரணம் உண்டு. நாம்

A free publication by Kanchi Periva Forum Page 6


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

இத்தரனமபரும் வஸிக்கும் இந்த மலாகம், பூமகாளம்


என்பமத ஸதாவும் சுற்றிக் பகாண்டுதாமன இருக்கிறது?

இரண்டு தினுஸான சுற்றரல அது பண்ணிக் பகாண்மட


இருக்கிறது. தன்ரனத்தாமன சுற்றிக் பகாள்கிறது; அது
ஒன்று. இரண்டாவது, இப்படித் தன்ரனத்தாமன
சுற்றியபடிமய ஸூர்யரனயும் சுற்றுகிறது.

பூமி மாத்ரமில்ரல. க்ரஹங்கள் எல்லாமுந்தான்.


‘அஸ்ட்ராலஜி’ என்கிற நம்முரடய ஜ்மயாதிஷ
சாஸ்திரப்படி பூமிரயச் மசர்க்காமல் ஆனால் ஸூர்ய
சந்திரர்கரளச் மசர்த்து நவக்ரஹம் என்று ஒன்பது.

‘அஸ்டரானமி’ என்கிற வான சாஸ்த்ரப்படி பூமிரயயும்


க்ரஹமாகச் மசர்த்து ஒன்பது. ‘ப்ளாபனட்’ என்பது.
ஸூர்ய, சந்திரர்கரள அங்மக மசர்ப்பதில்ரல. பசவ்வாய்,
புதன், வியாழன், பவள்ளி, சனி அங்மகயும் உண்டு. அரவ
இரண்டுக்கும் பபாது. ராஹு, மகது அங்மக இல்ரல.

அங்மக பிற்காலத்தில் கண்டுபிடித்த யுமரனஸ்,


பநப்ட்யூன், ப்ளுட்மடா நம் ஒன்பதில் இல்ரல.

பூமியும் மற்ற க்ரஹங்களும் தன்ரனத் தாமன சுற்றிக்


பகாள்வரத rotation என்றும், இப்படிச் சுற்றிக் பகாண்மட
ஸூர்யரன அதுகள் ஒவ்பவான்றும் ‘அயனம்’, ‘orbit’
என்கிற ஒவ்பவாரு பாரதயில் சுற்றுவரத ‘revolution’
என்றும் பசால்வது.

பூமி கிழக்குப் பார்க்கத் தன்ரனத்தாமன சுற்றிக்


பகாள்கிறது. அப்படிச் பசான்னதிலிருந்து மமற்கிலிருந்து
A free publication by Kanchi Periva Forum Page 7
ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

கிழக்காகச் சுற்றுகிறது என்மற ஆகிறது என்பரதப்


புரிந்து பகாள்ள மவண்டும்.

மயாஜித்துப் பார்த்தால், [சிரித்து] அபிநயம் பண்ணிப்


பார்த்துக் பகாண்டீர்களானால் புரியும். “The earth spins on its
own axis from West to East” என்று சின்ன க்ளாஸில் படித்த
விஷயம். அதனால்தான் இராப்-பகல் வித்யாஸம்; அந்த
ராப்-பகல்களிலும் மதசத்திற்குத் மதசம் மநர வித்யாஸம்
என்பறல்லாம் படித்திருக்கிமறாம்.

இன்னும், இப்படி பூமி மமற்கு-கிழக்காகச்


சுற்றுகிறதால்தான் அதிமல இருந்து பகாண்டு பவளிமய
பார்க்கிற நமக்கு ஆகாசத்தில் ஸூர்ய-சந்த்ராதிகள்
கிழக்கிலிருந்து மமற்காகப் மபாவதாகத் மதான்றுகிறது;

மவகமாக ஓடுகிற ஒரு வண்டிக்குள்ளிருந்து பகாண்டு


பார்த்தால் பவளியில் உள்ளரவ எதிர்த்திரசயில்
ஓடுகிற மாதிரித் மதான்றுவரதப் மபாலத்தான் இது
என்றும் அந்தப் பாடத்தில் படித்திருக்கிமறாம். [சிரித்து]
அமநகமாக மறந்தும் மபாயிருக்கிமறாம்!

இப்படி பூமி முதலானரவ மமற்கிலிருந்து கிழக்காகச்


சுற்றிக் பகாண்டிருப்பது அப்ரதக்ஷிணமாகத்தான்!

அதாவது ப்ரதக்ஷிண க்ரமத்திற்கு மநர் எதிர்த்


திரசயில்தான். நாம் அந்த மாதிரிப் பண்ணமவ கூடாது
என்று சாஸ்திரங்களில் இருக்கிறது.

ப்ரதக்ஷிணத்ரத clockwise என்றும் அப்ரதக்ஷிணத்ரத anti-


clockwise என்றும் பசால்கிறார்கள். கடிகார முள்
A free publication by Kanchi Periva Forum Page 8
ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

எப்மபாதும் வலது பக்கமாகமவ நகர்வது -– அதாவது,


வலம் வருவது — clockwise, இடது பக்கமாக நகர்வது
அதற்கு anti. பூமி முதலான மகாளங்கள் இப்படி இடது
பக்கமாகத்தான் சுற்றிக்பகாள்வது.

‘சுற்றிக்பகாள்வது’, ‘சுற்றுவது’ இரண்டுமம இப்படி


அப்ரதக்ஷிணமாகத்தான். நின்ற இடத்திமல அப்படிமய
சுழல்வதுதான் ‘சுற்றிக் பகாள்வது’ – rotation.
பவளியிலுள்ள மவமற ஒன்ரறச் சுற்றுவரதத்தான்
‘சுற்றுவது’ என்மற பசால்வது – revolution என்று
பசான்னது.

ஸூர்யரன க்ரஹங்கள் சுற்றுவதும் அப்ரதக்ஷிணந்தான்,


‘ஆன்டி-க்ளாக்ரவஸ்!’.

சலனம் என்பது சக்தியின், அம்பாளின் கார்யம். மஹா


பபரிய க்ரஹாதிகளும் மஹா மவகத்தில் ஸதாவும்
சலித்துக் பகாண்டிருப்பது அவளுரடய விமசஷமான
சக்தி விலாஸத்தில்தான். அவளுரடயது இடது
பக்கம்தாமன? அதற்மகற்பமவ இந்த சராசர
மகாளங்களின் சலனமும் இடமாக இருக்கிறது.

மசாலார் சிஸ்டத்தின் தர்மம்

மகாளங்கபளல்லாம் சுற்றுவதாகவும், அவற்றில் நமக்குத்


பதரியும் ப்ரபஞ்சத்திலுள்ள க்ரஹங்கபளல்லாம்
தங்களுக்கு மத்யமாக ஸூர்யரன ரவத்துக் பகாண்டு
அவரனச் சுற்றி வரும்படியாகவும் ஈச்வரன் நியமித்து
அப்படிமய மகாடாநுமகாடி காலமாக நடந்து வருகிறது.

A free publication by Kanchi Periva Forum Page 9


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

அந்த ‘மஸாலார் ஸிஸ்ட’த்திமலமய இருக்கிற நமக்கும்


அந்த தர்மம் உண்டுதாமன? அதனால் தான் ஆத்ம
ஜ்மயாதியான ஈச்வரரன மத்யமாக ரவத்து நாமும்
ப்ரதக்ஷிணம் பசய்யமவண்டுபமன்று நம்முரடய
பபரியவர்கள் ரவத்திருக்கிறார்கள்.

ஆனால் சுற்றிக் பகாண்மடயிருப்பதிலிருந்து விடுபட்ட


நிரலயாகிற சாந்தமம நமக்கு லக்ஷ்யம் என்று நாம்
முடிவாக ரவத்துக் பகாள்ள மவண்டுமானால், சுற்றி
வந்தாலும் சாந்தத்ரதக் காட்டும் ப்ரதக்ஷிண ரீதியில்
வலமாகமவ வர மவண்டுபமன்று ரவத்திருக்கிறார்கள்.

ஸூர்யரனச் சுற்றிவருவமதாடுகூட, பூமி தன்ரனத்


தாமன சுற்றிக் பகாள்வது மபாலவும் நாம் பண்ண
மவண்டும்; இருக்கிற இடத்திமலமய இருந்து பகாண்டு
நம்ரம நாமம சுற்றிக் பகாள்ளவும் மவண்டும் என்று
ரவத்திருக்கிறார்கள்.

நமக்கு பவளியிமல ஸ்வாமி என்று ரவத்து அவரரச்


சுற்றி நடந்து ப்ரதக்ஷிணம் பண்ணுவமதாடுகூட, அந்த
ஸ்வாமி நமக்குள்மளயும் இருக்கிறார் என்பரத ஏமதா
சில க்ஷணத்திற்கு ஒரு பாவரனயாகவாவது புரிந்து
பகாண்டு, பாவிக்கப்படுகிற அவன் நம்முரடய ஹ்ருதய
மத்தியிமலமய ஜீவமூலமாக இருக்கிறவன்.

பாவிக்கிறவன் என்று அவனுக்கு மவறாக நாம் உள்ள


மட்டும் அந்த மத்திரயச் சுற்றிச் சுற்றி வந்மத
வாழ்கிமறாம்’ என்ற நிரனப்மபாடு உள்மள
அசலமாயிருக்கும் அந்த ஈச்வரனான மத்யப் புள்ளிரய
அந்தப் புள்ளி தவிரச் சலிதமாகமவயிருக்கும்.

A free publication by Kanchi Periva Forum Page 10


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

இந்த ஜீவ சரீரத்தால் ப்ரதக்ஷிணம் பண்ண மவண்டும்.


இது நமக்குள்மளமய உள்ள நம்முரடய நிஜ நாரன
பபாய் நானான சரீரத்தால் சுற்றும் ஆத்ம ப்ரதக்ஷிணம்.
இரதத் ’தன்ரனத் தாமன சுற்றிக் பகாள்வது’ என்று
பசால்வது.

அப்படிச் பசால்லும்மபாது முதலில் பசான்னது நிஜமான


‘தான்’ (Self); அப்புறம் பசான்னது பபாய்யான ‘நான்’ (ego).
இரண்ரடயுமம ஸம்ஸ்க்ருதத்தில் ஆத்மா என்று
பசால்லும் வழக்கமிருப்பதால் ‘ஆத்ம ப்ரதக்ஷிணம்’
என்று சுருக்கமாகச் பசால்வது.

கடிகார முள் கடிகாரத்ரதவிட்டு பவளியிமல மபாய்


அரதச் சுற்றி வரவில்ரல. கடிகாரத்துக்குள்மளமயதான்
சுற்றுகிறது. அதன் ஒரு மகாடி கடிகாரத்தின் மத்யப்
புள்ளியுடமனமய ஐக்யப்பட்டிருக்கிறது. அந்தக் மகாடி
அசலம். அதுதவிர, முள்ளின் மற்ற பாகம் பூராவும்
சலமாக அந்த மத்யத்ரதத்தான் சுற்றி வருகிறது. அந்த
மாதிரிதான் இதுவும் என்று ரவத்துக் பகாள்ளலாம்.

இப்படி இருந்த இடத்திலிருந்மத சுற்றிக் பகாள்வது,


இன்பனான்ரற மத்யமாக ரவத்து அரதச் சுற்றுவது
என்ற ‘பராமடஷன்’, ‘பரவல்யூஷன்’ ஆகிய இரண்டிலுமம
நமக்கும் பூமி முதலான க்ரஹங்களுக்கும் ஒரு பபரிய
வித்யாஸம் பசான்னரத இன்பனாரு தடரவ
வின்யாஸம் பசய்கிமறன்:

மகாளங்கள் rotation, revolution ஆகிய இரண்ரடயுமம


அப்ரதக்ஷிணமாகத்தான் பண்ணுகின்றன!
தன்ரனத்தாமன சுற்றிக் பகாள்வது,

A free publication by Kanchi Periva Forum Page 11


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

ஸூர்யரனச் சுற்றி வருவது என்ற இரண்டிலும் ப்ரபஞ்ச


தர்மம் என்று நான் பசான்ன விதி
அப்ரதக்ஷிணமாகத்தான் இருக்கிறது. ‘வலம்’ வருவது
இல்ரல; ‘இடம்’ வருவது!

ஆத்ம ப்ரதக்ஷிணமும், பதய்வ ப்ரதக்ஷிணமும்

ப்ரபஞ்ச தர்மத்தின் அம்சமாகமவ மநுஷ்யனும் ஆத்ம


ப்ரதக்ஷிணமும், பவளி சுவாமி ப்ரதக்ஷிணமும்
பண்ணுவது என்று பசால்லிவிட்டு இப்படி இரண்டிற்கும்
ஒரு பபரிய வித்யாஸமும் பசான்னால்?

ப்ரபஞ்ச தர்மத்ரத ஒட்டிமய மநுஷ்யன் மபாக மவண்டும்


என்பது வாஸ்தவந்தான். ஆனால் அமதாடு முடிந்து
மபாய்விடக்கூடாது. அமதாடு ஒட்டிப் மபாமய அதற்கு
மமமல எழும்பி, உசந்து மபாக மவண்டும். தர்மம்,
அதர்மம் எல்லாவற்ரறயும் கடந்த பரம ஸத்ய
நிரலக்குப் மபாக மவண்டும்.

ப்ரக்ருதி தர்மத்ரத ஒட்டிப் மபாவது, அரதக் கடந்து


மபாவது என்ற இரண்ரடயும் மசர்த்துத்தான் நமக்கு
ப்ரதக்ஷிண விதிரய ஏற்படுத்தித் தந்திருப்பதாக
பதரிகிறது. ப்ரபஞ்ச தர்மத்ரதமய நாமும் அநுஸரித்துப்
பண்ணுவதற்குத்தான் க்ரஹங்கள் மாதிரிமய ஒரு மத்ய
மூலத்ரத, மகந்திர ஸ்தானத்ரதச் சுற்றுவதும்,
தனக்குள்மளமய உள்ள மத்ய மூலத்ரத சுற்றிக்
பகாள்வதும்.

அவற்றின் தர்மத்ரதக் கடக்கிறமபாது மாறுதலாகக்


காட்டினால்தாமன ‘அந்த தர்மம் மபாயாச்சு’ என்று

A free publication by Kanchi Periva Forum Page 12


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

புரியும்? அதனால் அந்தச் சுற்றுதல்கரள எதிர்த்


திரசயில் பண்ணுவது.

அமசதனமான மகாளங்கள் பண்ணுவதற்கு


வித்யாஸமாகத்தாமன மசதனமான ஜீவன் பண்ணுவது
இருக்க மவண்டும்? அப்படிச் மசதனன் பண்ணுவதுதான்
ஏக ரசதன்யத்திமலமய [ஒன்மறயான மபருணர்வும்
மபரறிவுமானதிமலமய] பகாண்டு மசர்க்கும்.

அதுதான் வலது பக்கத்ரதமய மூலவஸ்துவுக்கு


எப்மபாதும் காட்டிப் பண்ணுகிற ப்ரதக்ஷிணம்.

சக்தி விலாஸத்ரதக் காட்ட அமசதன மகாளங்கள்


சக்திகரமாகச் சலித்துக் பகாண்மட இருக்கலாம். ஆனால்
மசதனனுக்கு சக்தி விலாஸத்தில் எத்தரனமயா
அற்புதங்கள், பஸளந்தர்யங்கள் இருந்தாலும்
சக்திபயல்லாம் அடங்கிய சாந்தத்தில்தாமன
பூர்ணத்வம்?

‘சாந்தம் சிவம் அத்ரவதம்’ என்று உபநிஷத்மத


பசால்லியிருக்கிறது2. அந்த சாந்த சிவனுக்குரிய பக்கம்
வலம். சாந்தத்தில் முடிய மவண்டிய நாம் அந்தப்
பக்கமாகத் தாமன சுற்றணும்? சக்தி விலாஸத்துக்காகச்
சுற்றுவது, அதிமலமய சாந்த முடிரவயும் முடிச்சுப்
மபாட்டு வலமாகச் சுற்றுவது என்று ப்ரதக்ஷிண
தத்வத்ரத அர்த்தம் பண்ணிக் பகாள்ளலாம்.

ப்ரபஞ்ச ரீதியிமலமய ஓடினால் ப்ரபஞ்ச


அநுபவத்மதாமடமய வாழ்க்ரக முடிந்து மபாய்விடும்.
ஆத்மாநுபவத்திற்கு வழி ஏற்படாது. மலாக

A free publication by Kanchi Periva Forum Page 13


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

வாழ்க்ரகயில் இருக்கிற மட்டும் அதற்கு


அநுஸரரணயாக இருந்து பகாண்டு, கர்மாரவக்
கழித்மத, அரதக் கடப்பதற்கான வழிரயப் பண்ணிக்
பகாள்ளமவண்டும்.

அதுதான் ப்ரதக்ஷிண தத்வம். ஜட ப்ரபஞ்சத்துக்கும்


மசதன ஜீவனுக்கும் உள்ள ஒற்றுரம-மவற்றுரமகரள
இரணத்துக் காட்டிப் புரியரவக்கும் தத்வம்.

‘ப்ரபஞ்ச ரீதியிமலமய ஓடுவது’ என்மறன். ஓட்டப்


பந்தயத்தில் பார்த்தீர்களானால் அப்ரதக்ஷிணமாகத்தான்
ஓடுவார்கள். அங்மக முழுக்க பபளதிக சக்தியின்
கார்யந்தாமன? ஆத்ம ஸம்பந்தம் இல்ரலதாமன?

அதனால் பூத ப்ரபஞ்சமான க்ரஹங்கள் பண்ணும்


ரீதியிமலமய மநுஷ்யனும் பண்ணுவது. பபளதிகமான
சரீரத்தின் ப்ரயாரஸ நிரறய இருக்கிறமபாது பூத
ப்ரபஞ்ச தர்மந்தான். மாற்றிப் பண்ணினால் பபளதிகமாக
இருக்கப்பட்ட நம்முரடய சரீரத்துக்குக் பகடுதி
உண்டாகும்.

மகாவில் மகாபுரங்களுக்குள்மளகூட சுற்றிச் சுற்றி ஏறிப்


பார்ப்பதற்காகப் மபாட்டிருக்கும் படி வரிரசகள் இடது
பக்கமாகமவ திரும்பிப் மபாகிற மாதிரிதான்
மபாட்டிருப்பார்கள்.

‘அந்த நாளிமலமய, இவர்களுக்கு எத்தரன ஸயன்ஸ்


ஞானம்?’ என்று அந்நிய மதசஸ்தர்கள் கூட
ஆச்சர்யப்பட்டுச் பசால்கிறார்கள்.

A free publication by Kanchi Periva Forum Page 14


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

அம்பாளின் சிரஸில் ஸூர்யன்

நம்முரடய ஆதி ஆசார்யாள் இயற்றிய பஸளந்தர்ய


லஹரியின் 42-வது ஸ்மலாகத்தில், எடுத்த எடுப்பில்
அம்பாளுரடய மசகரத்ரத [சிரரஸ] வர்ணிப்பதற்கு
ஏற்கக் கவித்வ சிகரமாகக் கல்பரனகரளக்
பகாட்டியிருக்கிறார்.

தகதக என்று ஸூர்யனின் பிரகாசம் மாதிரியான


கம்பீரமும், குளுகுளுபவன்று சந்திரரனப் மபான்ற
மாதுர்யமும் கூடின கல்பரனரயயும் வாக்ரகயும்
பார்க்கிமறாம். ஸுர்ய-சந்திரர்கள் இரண்டு மபரரயும்
அம்பாள் சிரஸிமல மசர்ப்பதாகமவ ச்மலாகம்
அரமந்திருக்கிறது. [ச்மலா 42]

கரதர் மாணிக்யத்வம் ககமநணிபி: ஸாந்த்ர-கடிதம்


கிரீடம் மத ரஹமம் ஹிமகிரிஸுமத கீ ர்தயதி ய: |
ஸ நீமடயச்-சாயாச்-சுரண-சபலம் சந்த்ர-சகலம்
தநு: பசௌநாஸீரம் கிமிதி ந நிபத்நாதி திஷணாம் ||

[தபாருள்: (ஹிமகிரிஸுமத) இமயமரலயின் மகமள!


(மாணிக்யத்வம்) ரத்னமாக இருக்கும் தன்ரமரய
(கரத:) அரடந்துள்ள (ககநமணிபி:) [பன்னிரண்டு]
ஸூர்யர்களால் (ஸாந்த்ர-கடிதம்) பநருக்கமாக
இரழக்கப்பட்ட (மத) உனது (ரஹமம் கிரீடம்) பபாற்
கிரீடத்ரத (ய:) எவன் (கீ ர்த்தயதி) வர்ணிக்கிறாமனா (ஸ:)
அவன் (சந்த்ர சகலம்) [(அக் கிரீடத்திலுள்ள] சந்திரப்
பிரறரய (நீமடயச் சாயாச் சுரண) அக்கூட்டின் [கூடு
மபான்ற கிரீடத்தில் உள்ள மமற்படி ஸூர்யர்களான
ரத்னங்களின்] சாரயயினால் முலாம் பபற்று (சபலம்)
A free publication by Kanchi Periva Forum Page 15
ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

நானாவர்ண விசித்ரம் பகாண்ட (பசௌநாஸீரம் தநு:)


[இந்த்ர தநுஸ் எனப்படும்] வானவில் (இதி) என்ற
(திஷணாம்) சிறந்த கருத்ரத (கிம் ந நிபத்நாதி) எப்படிப்
பபாருத்தாதிருக்க இயலும்?]

ஆற்பறாழுக்கு, மதபனாழுக்கு என்று பசால்கிற மாதிரி


லளிதமான வாக்குகளால் ரம்யமான அபிப்ராயங்கரளச்
பசால்வரத ஸம்ஸ்க்ருதத்தில் ‘ரவதர்பீ ரீதி’
என்பார்கள்.

‘விதர்ப மதசத்து Style’ என்று அர்த்தம். அந்தச் சீரமயின்


கவிவாணர்கள்தான் ஆதியில் இந்த ஸ்ரடலில் மதர்ச்சி
பபற்றிருந்திருக்க மவண்டும். “பகௌடீ ரீதி” என்கிற
ஸ்ரடல் பகௌடமதசமான வங்காளத்தில் மதான்றி
ப்ரஸித்தி அரடந்திருப்பது.

இதில் அபிப்ராயங்கள் எளிதில் புரியாததாக இருக்கும்;


வாக்கும் ஆர்பாட்டமாக இருக்கும். ‘பஸளந்தர்ய
லஹரி’யில் இரண்டு ஸ்ரடரலயும் கலந்துதான்
பண்ணியிருக்கிறார். ‘ஜனனி’ என்று முன் ச்மலாகத்தில்
பராம்பக் கிட்டக்மக பகாண்டு வந்து விட்டதால்,
அவளுரடய கம்பீரம், மஹிரம பதரியாமல் மபாக
விடப்படாது என்ற மாதிரி இங்மக தடபுடலாக பகாஞ்சம்
கடபுடபவன்மற ஆரம்பித்திருக்கிறார்.

அபிப்ராயமும் [ச்மலாகத்தின் கருத்தும்] complicated-


ஆகத்தான் [சிக்கலாகத் தான்] இருக்கிறது. லஹரி-
பிரவாஹம் – அடித்துப் புரடத்துக் பகாண்டு வருகிற
மாதிரி இந்த பஸக்ஷனின் ஆரம்பம் இருக்கிறது.

A free publication by Kanchi Periva Forum Page 16


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

மதலமவாகத்திலிருந்து தடதடபவன்று வந்த கங்ரக


ஈச்வரனுரடய சிரஸில் மசர்ந்த பிறகு மவகத்ரதக்
குரறத்துக் பகாண்ட மாதிரி, அம்பாளுரடய சிரஸு
ஸம்பந்தமான வர்ணரன முடிந்த அப்புறம் அடுத்த
ச்மலாகங்களின் style தணிந்து சாந்தமாகிறது.

ஸூர்ய சந்திரர்கரள அம்பாளின் சிரஸில்


மசர்த்திருப்பதாகச் பசான்மனன். அவள் சந்திரமசகரி
என்ற விஷயம் முன்னாடிமய பசால்லியிருக்கிறது.
ஸூர்யமசகரி என்பது புது விஷயம்!

அதிலும் ஒரு ஸூர்யன் மாத்ரமில்ரல; பன்னிரண்டு


ஸூர்யர்கரளயும் தரலயில் ரவத்துக்
பகாண்டிருக்கிறாள் என்கிறார்.

பாநுமசகரன்

சந்திரமசகரன் என்று ப்ரஸித்தமாயுள்ள ஸ்வாமிக்கும்


ஸூர்யமசகரன் என்று பபயரிருக்கிறது. பாநுமசகரன் –
தற்காலத்து ‘பாநுமஷகர்’ என்ற பபயருக்கும் அந்த
அர்த்தந்தான்.

உதய ஸூர்ய ரச்மி லிங்கத்தின் தரலயில் விழுகிற


தினுசில் அமநக மக்ஷத்ரங்களில் இருக்கிறதல்லவா?
அப்மபாது ஸ்வாமி ஸூர்யமசகரனாயிருப்பதாகச்
பசால்லலாம்.

தரலஞாயிறு என்மற பபயமராடு தஞ்சாவூர்


ஜில்லாவிமலமய இரண்டு சிவமக்ஷத்ரங்கள்
இருக்கின்றன.
A free publication by Kanchi Periva Forum Page 17
ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

ஒன்று ரவத்தீச்வரன் மகாவிலுக்கு மமற்மக இருப்பது.


மதவாரத்தில் அதற்குக் கருப்பறியலூர் என்று பபயர்.
இன்பனாரு தரலஞாயிறு திருத்துரறப்பூண்டி
தாலுகாவில் இருப்பது.

அங்மக சிவலிங்க சிரஸில் ஸூர்ய கிரணம்


இருப்பதாமலமய ‘தரல ஞாயிறு’ என்று பபயர்
ஏற்பட்டதாகச் பசால்கிறார்கள்.

‘நமபாமணி’, ‘ககனமணி’ என்பறல்லாம் பசான்னால்


ஆகாசத்தில் மணி மாதிரிப் பிரகாசித்துக்
பகாண்டிருக்கும் ஸூர்யன் என்று அர்த்தம்.
“ககனமணிபி:” என்று இந்த ச்மலாகத்தில் plural-ல்
(பன்ரமயில்) பசால்கிறார்.

நம்முரடய பூமலாகமும் நவக்ரஹங்களும் ஒரு


ஸூர்யரனச் சுற்றி வருவதால், universe (விச்வம்)
என்பதிமலமய ஒரு ஸூர்யன்தான் உண்டு என்றில்ரல.

இன்னும் எத்தரனமயா ஸூர்யர்கள், நக்ஷத்ர


மண்டலங்கள் உண்டு. த்வாதச ஆதித்யர்கள் என்பதாகப்
பன்னிரண்டு ஸூர்யர்கள் இருப்பதாக சாஸ்திரம்
பசால்கிறது.

விச்வாகாரிணியான அம்பாளுரடய சிரஸில் உள்ள


கிரீடத்தில் ரத்னகற்களாக இரழக்கப்
பட்டிருப்பபதல்லாம் அந்த எல்லா ஸூர்யர்களுந்தான்
என்கிறார். “ஸாந்த்ர கடிதம்” என்றால், ‘பநருக்கமாக
இரழக்கப்பட்ட’ என்று பபாருள். இப்படி அவள்

A free publication by Kanchi Periva Forum Page 18


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

ஸூர்யமசகரியாக இருப்பரதத்தான் முதல் வரி


பசால்கிறது.

வர்ணரன ஆரம்பத்திமலமய இவ்வளவு


கண்ரணக்கூசும் – கண்ரணப் “பறிக்கும்” என்மற
பசால்ல மவண்டும் – பிரகாசத்ரத, உஷ்ணத்ரதச்
பசான்னதற்கு மாற்றாக அடுத்த வரியில் அம்பாரளக்
குளிச்சியாக ‘ஹிமகிரிஸுமத!‘ என்கிறார்.

ரக்தஜ்மயாதிஸாக ஆயிரம் உதய ஸூர்யகாந்திமயாடு


இருக்கிற காமமச்வரிரய, முதலிமலமய ஏகப்பட்ட
ஸூர்யர்கரளச் பசால்லி விட்டதால், பச்ரசப் பமசல்
என்ற ஹிமகிரி குமாரியான பார்வதியாகச் பசால்லிக்
கூப்பிடுகிறார்.

ஏறக்குரறய ஸ்மதாத்ரம் முடிகிற இடத்தில் [ச்மலா-96]


பார்வதியாக ஆவிர்பவிப்பதற்குப் பூர்வாவதாரத்தில்
தக்ஷன் பபண்ணாக வந்தமபாது அவளுக்கு இருந்த ‘ஸதி’
என்ற மபரரச் பசால்லி, “தவ ஸதி ஸதீநாம் அசரமம”
என்று கூப்பிடுகிறார். ஸதி தக்ஷணின் யஜ்ஞகுண்டத்தில்
சரீரார்ப்பணம் பண்ணினவள்.

ஆனால் சாம்பலாக முடிந்து மபாகாமல், மநர்மாறாக ஜீவ


ஸாரமான பச்ரச நிறத்தில் பச்பசன்று பார்வதியாக
அவதாரம் பசய்தாள்! அக்னி குண்டத்திலிருந்து மநமர
ஐஸ் மரலக்குப் மபாய் அங்மக பசுரமயாக ரூபம்
எடுத்துக் பகாண்டாள்!

சமணர்கமளாடு வாதம் பண்ணினமபாது ஞானஸம்பந்தர்


அக்னியில் மபாட்ட மதவார ஏடு எரிந்துமபாகாமல்

A free publication by Kanchi Periva Forum Page 19


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

பச்மசாரலயாக பவளியில் வந்ததும் இந்த மாதிரிதான்!


இங்மக அம்பாரள ஆசார்யாள் பராம்பவும்
உஷ்ணத்துக்கு அப்புறம் ‘பனி மரலயின் பபண்மண!’
என்றவுடன் ஜில்பலன்றாகிவிடுகிறது!

அதற்க்கப்புறம் அம்ருததாரரயாக சீ தகிரணங்கரளப்


பபாழியும் ‘சந்த்ர சகலம்‘ என்ற பிரறச் சந்திரரனச்
பசால்லி நன்றாகத் தாபசமனம் பசய்து விடுகிறார்.

அம்பாளுரடய கிரீடத்தில் ‘சந்த்ர சகலம்’ இருக்கிறது.


அந்தக் கிரீடம் தங்கத்தாலானது. ‘ரஹமம் கிரீடம்‘
என்று இருக்கிறது. ‘மஹமம்’ என்றால் தங்கம். ‘ரஹமம்’
தங்கத்தாலானது. ‘ஹிமம்’ என்றால் பனி. இவள்
ஹிமகிரிஸுதாவாக இருக்கிறாள்.

மகமநாபநிஷத்திமல பிரம்ம வித்யா ஸ்வரூபிணியாக


வந்து இந்திரனுக்கு உபமதசம் பசய்யும் அம்பாரள
‘ரஹமவதி’ என்று பசால்லியிருக்கிறது.

அதற்கு ஹிமகிரிஸுதா என்றும், மஹமகாந்திமயாடு


ப்ரகாசிக்கிறவள் என்றும் இரண்டு அர்த்தமும்
ஆசார்யாள் பண்ணியிருக்கிறார். இங்மக பஸளந்தர்ய
லஹரி முதல் ச்மலாகத்திமலமய உபநிஷத் ஸம்பந்தம்
காட்டிவிடமவண்டுபமன்று ஹிமகிரி, மஹமம்
இரண்ரடயும் பிரஸ்தாபித்திருக்கிறார!

அது மட்டுமில்ரல. அங்மக இந்த்ரனுக்குத்தாமன


உபமதசித்தாள்? இங்மகயும் “தநு: பசௌநாஸீரம்” என்பதாக
வானவில்ரல அந்த இந்த்ரனின் தநுஸாகமவ
பசால்கிறார்.

A free publication by Kanchi Periva Forum Page 20


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

“ரஹமம்-ஹிம” என்று அடுத்தடுத்துப் மபாட்டிருக்கிறார்;


‘சபலம்’-‘சகலம்’ என்று அடுத்த வரியில் வருகிறது.
எதுரக, மமாரன முதலிய அணிகரள இப்படி
ஸ்மதாத்ரம் பூராவும் ஏராளமாகக் பகாட்டியிருக்கிறார்.

ஸூர்யர்கரள மாணிக்கங்களாக இரழத்த


அம்பாளுரடய தங்க கிரீடத்தில் சந்திரகரல
இருக்கிறது. நாம் பார்க்கிற சந்திரன் ஸூர்யரனவிட
மஹா சின்னது.

ஆனால் இங்மகமயா ஸூர்யர்கள் கிரீடத்தில் சின்னச்


சின்ன கல்லு என்றால், அந்தக் கிரீடத்திமலமய
பபரிசாகப் பூசணிப் பத்ரத மாதிரியான பிரறச் சந்திரன்
இருக்கிறது!

சந்திரன் அம்ருதம், பனி இரண்ரடயும் பபருக்குகிறவன்.


பனிரய உற்பத்தி பண்ணுவதால் அவன் ‘ஹிமகரன்’.
நாலஞ்சு ச்மலாகம் தள்ளி [46)] “ராகா ஹிமகர” என்று
வருகிறது. அது பூர்ணிரம.

இது மூன்றாம் பிரற – வரளந்து வில் ரூபத்திலுள்ள


பிரற. அதன் நிலா பனித்திவரலகளாகப்
பரவியிருக்கிறது.

ஸூர்ய மணிகளின் ஒளி அந்தப் பனிப்படலத்தில்


படுகிறது.

“நீமடயச்சாயா” என்பதில் ‘நீடம்’ என்றால் பக்ஷிக்கூட்டின்


ரூபத்திலுள்ள கிரீடம். அதிலுள்ள மணிகளின் “சாயா”
என்பது ஸூர்ய ப்ரகாசம்.
A free publication by Kanchi Periva Forum Page 21
ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

ஸூர்ய ப்ரகாசத்தால் ஏற்பட்ட வானவில்

ஸூர்ய ப்ரகாசம் பனிப் படலத்தின் மமமல பட்டவுடன்


என்ன ஆகிறது? நீருண்ட மமகத்தின் மமமல ஸூர்ய
பவளிச்சம் பட்டவுடன் என்ன ஆகும்? வானவில்
மதான்றுமமால்லிமயா?

ஸப்த வர்ணமும் மசர்ந்த அந்த வான வில்லுக்கு


ஸமானமாக வர்ண விசித்ர அழகுக்கு எதுவுமில்ரல.
அம்பாளின் கிரீடத்திலுள்ள பனி நிலாவின் மமமல
ஸூர்ய மணிகளின் பவளிச்சம் பட்டு முலாம்
ஏற்றியதும் – “சுரணம்” என்றால் முலாம் மபாடுவது;

அப்படி மபாட்டவுடன் – refraction-ல் [ஒளிச் சிதறலில்]


அந்த வில்லு ரூபமான பிரற ஸப்தவர்ணமும் பபற்று –
“சபலம்” என்றால் ‘வர்ண விசித்ரம்’ – ஸப்த வர்ண
மபதங்கரளயும் பலபலபவன்று பகாட்டுகிறது. அதாவது
அது வானவில் மாதிரி ஆகிவிடுகிறது.

‘சந்திரன் ஸ்வய ப்ரகாசமில்லாத ஒரு ஸாட்ரலட்.


ஸூர்ய பவளிச்சம் பட்டுத்தான் அது நிலா என்ற
சந்திரிரகரயப் பபறுகிறது. ஸன்ரலட் பட்டுத்தான்
ஸாட்ரலட்டில் மூன்ரலட் உண்டாவது’ என்பது
ஸயன்ஸ் பாடம். கவிரத பசால்லும் பாடலிமலா
ஸ்வப்ரகாசமான சந்த்ரகரல மமமல ஸூர்ய பவளிச்சம்
பட்டு அது வானவில்லாகி வர்ண ஜாலம் பண்ணுகிறது!

ஸாக்ஷாத் அம்பிரகயின் சிரஸிமல பார்க்கப் பார்க்கத்


பதவிட்டாத அழகும் குளுரமயும் பகாண்ட
வானவில்லாகப் பிரறச் சந்திரரனக் காட்டி

A free publication by Kanchi Periva Forum Page 22


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

இப்படிபயாரு அதீத கல்பரன மஹாகவியான


ஆசார்யாள் பகாடுத்திருக்கிறார்!

ஆனால் இது ஏமதா தமக்குத்தான் உதித்த அபார


கல்பரன என்று நிரனக்காமல், ‘உன் கிரீட மணி
ஒளிகள் சந்திரனில் மசர்ந்து விசித்ர வர்ணங்கரள
உண்டாக்குவரத வர்ணிக்கிற எவன்தான் அரத
வானவில்மலாடு பபாருத்தி உவரம
பசால்லாமலிருப்பான்?’ என்று மகட்கிறார். ”

பசௌனாஸீரம் தநு : இதி திஷணாம் கிம் ந நிபத்நாதி ? ‘


என்று நாலாம் வரியின் prose order . ‘வானவில் என்ற
அபிப்ராயத்ரத எப்படிக் கவிரதயில்
பபாருத்தாமலிருக்க முடியும்?’ என்று அர்த்தம். ” ய :
கீ ர்த்தயதி ” என்று இரண்டாம் வரியில் பசால்வதற்கு
‘எவன் வர்ணித்தாலும்’ என்று அர்த்தம். பபரிய கவிமயா,
சின்ன கவிமயா எவனானாலும் தன் வர்ணரனயில்
இந்தக் கருத்ரதச் பசால்லாமலிருக்க முடியாது
என்கிறார்.

‘பஸளந்தர்ய லஹரி’ ஆரம்பத்திமலமய இப்படித்


தம்ரமக் குரறத்து அடக்கிக்பகாண்டு மபசும் ஆசார்யாள்
முடிவு வரரயில் இந்த விநய ஸம்பத்ரத
பவளிப்படுத்திக் பகாண்டு மபாகிறார்.

மரழக்கு அதிபதி இந்த்ரன். அவனுரடய வஜ்ராயுதம்


மபாடு மபாபடன்று மபாடுவதுதான் இடி. அவன் ரக
வில்லுதான் வானவில். அரத ‘இந்த்ர தநுஸ்’ என்மற
பசால்வது. இங்மக ‘பசௌநாஸீரம் தநு:’ என்று
அரதத்தான் பசால்லி இருக்கிறார். மஸரனயிமல
முதலாக, front-ல், நின்று யுத்தம் பசய்வதால் இந்த்ரனுக்கு
A free publication by Kanchi Periva Forum Page 23
ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

‘சுநாஸீரன்’ என்று மபர் – ‘அமர’த்திமலமய இருக்கிறது.


அவனுரடய தநுமஸ “பசௌநாஸீரம் தநு:”

நிர்குண பிரம்மத்திலிருந்து பராசக்திப் பிரபாவத்தால்


இத்தரன ஸ்ருஷ்டி விமநாதமும் வந்திருப்பரதமய
refraction-ல் சுத்த பவளுப்பு நானா வர்ணங்களாகப்
பரிணமிப்பமதாடு ஒப்பிடலாம். அம்பாள்
பஸளந்தர்யத்ரத வர்ணிக்க ஆரம்பிக்கும் முதல்
ச்மலாகத்திமலமய இந்த அபிப்ராயமும் வந்துவிடுகிறது!

இங்மக பசால்வது refraction இல்ரல, reflection [பிரதிபலிப்பு]


தான் என்றும் அர்த்தம் பண்ணிக் பகாள்ளலாம். ஸூர்ய
ஒளி சந்திரப் பிரறயில் பட்டு அதன் பனிக் கசிவில் பல
வர்ணங்களாகப் பிரிந்தது என்று எடுத்துக் பகாள்ளாமல்,
பல ஸூர்யர்களும் பல்மவறு கலர்களில்
இருப்பதாகவும், அரவ எல்லாம் கண்ணாடி மாதிரி
உள்ள சந்திரகரலயில் பிரதிபலித்து (reflect-ஆகி) அரத
இந்திர தநுஸாக்கிவிடுகிறது என்றும் ரவத்துக்
பகாள்ளலாம்.

சந்த்ர-ஸூர்ய பமௌள ீச்வரி

இப்படி ஸ்வரூப வர்ணரனயின் முதல்


ச்மலாகத்திமலமய மலாக வாழ்க்ரக பூராவுக்கும்
ஸத்துத் தரும் சந்திர ஸூர்யர்கரள அம்பாளின்
சிரஸிமல காட்டி சந்த்ர-ஸூர்ய பமௌள ீச்வரியாக
தர்சனம் பண்ணி ரவக்கிறார். த்ரிமலாக
சக்ரவர்த்தினியாகக் கிரீடம் தரித்துக் பகாண்டு சந்திர
ஸூர்யர்கரள அதிமலமய ரவத்துக் பகாண்டிருக்கிற
ராஜ கம்பீரமான தர்சனம்!

A free publication by Kanchi Periva Forum Page 24


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

ஆனால் அப்மபாதும் தாயார் என்ற நிரனப்பும்


வரும்படியாகத்தான் முன் ச்மலாகம் ஒன்றிமலமய
[ச்மலா-34] “சசி மிஹிர வமக்ஷாருஹ யுகம்”: ‘சந்திர
ஸூர்யர்களால் மலாகத்துக்குப் பாலூட்டுகிறாள்’ என்று
மபாட்டிருக்கிறார்

ஸூர்ய அவதாரமான ஸ்ரீ சங்கரர்

பஸௌர புராணம் என்று ஸூர்யரனமய பரமாத்வாகச்


பசால்லும் ஒரு புராணம் இருக்கிறது. ஸூர்யனுக்கு
ஸவிதா என்று ஒரு பபயர்.

‘ஸாவித்ரி’ என்பது இந்த ‘ஸவிதா’வின் பதாடர்பாக


ஏற்பட்ட பபயர்தான். தாயாக உயிரர உண்டாக்கிப்
மபாஷிப்பதால் ஸவிதா என்று பபயர்.

ப்ரஸவம்‘ என்று ஒரு உயிர் பிரப்பரதச்


பசால்கிமறாமல்லவா? ஸவ – ஸவிதா. காயத்ரி
மஹாமந்த்ரத்தில் ஸவிதா என்ற பபயமர
குறிப்பிடப்படுகிறது.

அந்த ஸவிதாதான் சங்கரராகப் பிறந்து


வ்யாஸாசார்யாளின் ப்ரஹ்ம ஸூத்ரத்தின் ஸரியான
அர்த்தத்ரத விளக்கிச் பசால்லி, மவதத்தின்
பரமதாத்பர்யத்ரதமய தர்க்க ரீதியில் ஸ்தாபித்தவர்
என்று பசௌர புராணத்தில் பசால்லியிருக்கிறது.

வ்யகுர்வந் வ்யாஸ ஸூத்ரார்த்ெம் ச்ருதெரர்த்ெம் யதொெிவாந்|


ச்ருதெர்-ந்யாய்ய: ஸ ஏவார்த்ெ: ெங்கர: ஸவிொநநா ||

A free publication by Kanchi Periva Forum Page 25


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

[“ஸவிதாநநா” என்பது “ஸவிதா ந நா” என்று மூன்று


பதங்களாகப் பிரிய மவண்டும். இது குறித்து
ஸ்ரீசரணர்களின் விளக்கம்: “ஆசார்யாள் பதய்வமான
ஸவிதாமவ; அதாவது ஸூர்யமன: ஸாதாரண
மனுஷ்யரில்ரல என்று ச்மலாகம் பசால்கிறது. ‘ந நா’
என்றால் மனுஷ்யர் இல்ரல.

‘பித்ரு’ என்பது ‘பிதா’ என்று வருகிறது. ‘ஸவித்ரு’


என்பது ‘ஸவிதா’வாகிறது. ‘நர’ என்பரத ‘ந்ரு’ என்றும்
பசால்வதுண்டு. ‘நரஸிம்ஹ’த்ரத ‘ந்ருஸிம்ஹம்’
என்றும் பசால்கிமறாமல்லவா” ‘பித்ரு-பிதா’, ‘ஸவித்ரு-
ஸவிதா’ மாதிரி ‘ந்ரு – நா’. அதாவது ‘நா’ என்றாமல நாம்
நரர், மநுஷ்யர் என்று பசால்வது. “ந நா” என்றால்
‘மநுஷ்யரில்ரல’ என்று அர்த்தம்”].

சிவாவதாரம் என்று மற்ற புராணங்கள் பசால்லும்


மபாதும் அந்த சிவரனப் பரமாத்மாவாகக் கருதிமய
அப்படிச் பசால்லியிருக்கிறது.

இங்மக ஸூர்யரனப் பரமாத்வாகக் கருதும் புராணத்தில்


ஸூர்ய மூத்திதான் அவ்வாறு அவதரித்தது என்று
பசான்னால் இதுவும் அமத அபிப்ராயத்ரதத்தான்
பகாடுக்கிறது.

ஆசார்யாரள ஸூர்ய மூர்த்தியாகச் பசால்வதிலும் ஒரு


தனிப் பபாருத்தம் இருக்கிறது. அஞ்ஞானத்ரதத்
தமஸாகவும் (இருட்டாகவும்) ஞானம் தருபவரரத்
தமரஸப் மபாக்கி ப்ரகாசத்ரதக் பகாடுக்கும்
ஸூர்யனாகவும் பசால்வது வழக்கத்தில் உள்ளதுதான்.

A free publication by Kanchi Periva Forum Page 26


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

ஞான பாஸ்கரன்

“ஞான பாஸ்கரன்” என்று மஹாமதியாக


இருக்கப்பட்டவர்கரளச் பசால்வதுண்டு. குறிப்பாக
நமக்கு இவ்விஷயத்தில் என்ன குதூஹலம்
அளிக்கிறபதன்றால் ஆசார்யாளின் மநர் சிஷ்யர்களாக
இருந்த இரண்டு மபர் — மஹா பபரியவர்கள் — அவரர
இப்படி ஸூர்யனாகச் பசால்லியிருப்பதுதான்.

ஆசார்யாரளப் பற்றிய ஸ்மதாத்ரங்களில் முதல்


ஸ்தானம் பபற்றிருப்பது “மதாடகாஷ்டகம்”. மநர்
சிஷ்யரான மதாடகர் அவரர ஸ்துதித்துப் பண்ணிய
அஷ்டகம்.

அதில், ஆசார்யாளின் ஸந்நிதானத்தில் மநமர


நின்றுபகாண்டு, அவரரப் பார்த்து, ஒமரயடியாய்
ஆனந்தபாஷ்பம் பசாறிந்துபகாண்டு,

“அஹிமாம்சு- ரிவாத்ர விபாஸி!”

என்கிறார்.

“ஸூர்யனாக இங்மக ஜ்வலித்துக்


பகாண்டிருக்கிறீர்கமள!” என்று அர்த்தம். ஹிமம்
என்றால் பனி.

ஹிமாம்சு என்றால் பனிரயத் தான் கிரணங்களால்


பபருகவிடும் சந்திரன். முதலில் ‘அ’ பசய்தது
அஹிமாம்சு என்றால் பணிரய வற்ற அடித்துவிடுகிற

A free publication by Kanchi Periva Forum Page 27


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

ஸூர்யன். அப்படிப்பட்ட ஸூர்யனாக ஆசார்யாள்


இருக்கிறாராம்!

அவருரடய நான்கு பிரதானமான சிஷ்யர்களில்


இன்பனாருவர் ஸுமரச்வராசார்யாள். அவர்
ஆசார்யாளின் ப்ருஹதாரண்யமகாபநிஷத் பாஷ்யத்திற்கு
வார்த்திகம் (விரிவுரர) பசய்திருக்கிறார்.

அதில், உதயகிரியிலிருந்து அஸ்தமனமாகிற


மரலவாசல் வரரயில் ஆசார்யாளான ஞான ஸூர்யன்
தம்முரடய கீ ர்த்திக் கிரணங்களாக உள்ள சிஷ்யர்களால்
வ்யபித்துக்பகாண்டு மலாகத்தின் அஞ்ஞானஅந்தகாரம்
முழுவரதயும் மபாக்கடிக்கிறார் என்று
பசால்லியிருக்கிறது

ஸூர்ய சந்திரரரக் பகாண்டு பாலூட்டும் தாய்

ஸித்தாந்தங்கள் நமக்கு எட்டும், எட்டாது! எட்டாமல்


மபானாலும் மதாஷமில்ரல. அன்பு எவருக்கும்
எட்டாமல் மபாகாது! அதுதான் நமக்கு மவண்டியது.

அந்த அன்ரப – ஜகத்துக்பகல்லாம் மாதாவாக அந்த


ஜகத்ஸ்வரூபமாகமவ இருக்கிறவளின் அன்ரப –
ஸ்வாமி என்ற உயிருக்கு உடம்பாக அவரளச்
பசால்லும்மபாமத ஆசார்யாள் தாய்ப்பாலாகக் பகாண்டு
வந்து பகாடுத்து விடுகிறார்!

அம்பாரள அவயவ சரீரமாக இல்லாமல்


விச்வாகாரமாக, விராட் ஸ்வரூபமாகச் பசான்னாலும்

A free publication by Kanchi Periva Forum Page 28


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

அது ஜடம் என்று பசால்ல அவருக்கு மனஸ்


வரவில்ரல.

அம்பாளுரடய மாத்ருத்வத்ரத அவரால் மறக்க


முடியவில்ரல. அதனால்தான் ஸமஸ்த
ஜீவராசிகளுக்கும் பால் பகாடுக்கிற தாயாக இந்த விராட்
ஸ்வரூபத்திமலமய அவரள நிரனத்து, “சசி-மிஹிர-
வமக்ஷாருஹயுகம்” என்கிறார். அதாவது ஸூர்யன்
சந்திரன் இரண்டும் அவளுரடய [விராட் ரூபத்தில்]
ஸ்தனங்களாக இருக்கின்றன என்கிறார்.

குழந்ரதகளுக்குத் தாய் ஸ்தன்யபானம் பண்ணுவிக்கிற


மாதிரி மலாகமாதா அத்தரன ஜீவராசிகளுக்கும்,
தாவரங்களுக்குங்கூட ஸூர்ய சந்திரர்களின் கிரண
தாரரகளால் பாலூட்டுகிறாள். தாவரங்களுக்கும் ஜீவன்
உண்டு.

ஜகதீஷ் சந்திரமபாஸ் இந்த நூற்றாண்டு ஆரம்பத்தில்


இரத ஸயன்ஸ்படி நிரூபித்துக் காட்டுவதற்கு பராம்ப
முன்னால், மவத காலத்திலிருந்மத தாவரங்களுக்கு
உயிரும் உணர்ச்சியும் உண்டு என்பது நமக்குத் பதரியும்.

‘ஸூர்ய சந்திரர்களின் பிரகாசத்தால் உணவூட்டுகிறாள்:


உயிரூட்டுகிறாள்’ என்றால் என்ன அர்த்தம்? ஸூர்ய
ரச்மியிலிருந்துதான் தாவரங்கள் ஜீவன் பபறுகின்றன
என்பது பதரிந்த விஷயம். ஸூர்ய பவளிச்சமில்லாத
இருட்டான இடத்தில் விரத மபாட்டால் பசடி வராது.
தாவரங்கள் மநராகத் தாங்கமள ஜீவ ஸத்ரத
ஸூர்யனிடமிருந்து பபறுகின்றன.

A free publication by Kanchi Periva Forum Page 29


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

ஸூர்யனிடமிருந்மத ஜீவ சக்தி

அமதாடு நிற்காமல் பமராபகாரமாக, இப்படி மநமர


ஸூர்யனிடமிருந்து ஜீவ ஸத்ரதப் பபற முடியாத
நமக்காகவும் தாவரங்கமள நாம் அடுப்பு மூட்டிச்
சரமக்கிற மாதிரி ஸூர்ய உஷ்ணத்தில் அந்த ஸூர்ய
சக்திரயமய நமக்கு ஜீர்ணமாகிற மாதிரி ரூபத்தில்
மசமித்து ரவத்துக் பகாள்கின்றன. ‘மஸாலார் குக்கர்’!

காய்கறிகரளயும், அரிசி முதலான தானியங்கரளயும்


நாம் சாப்பிடும்மபாது இந்த ஸூர்ய ப்ரஸாதமான
சக்திதான் நமக்கு உள்ள மபாய் ஜீவஸத்ரதத் தருகிறது.

ஸூர்ய சக்தியாமலமய biosphere என்கிறதாக இந்த


மலாகம் ஜீவ மலாகமாக இருக்கிறது. ஸூர்யனுரடய
பவளிச்சத்திமல ஓயாமல் ரிலீஸாகிக்
பகாண்மடயிருக்கும் சக்தி ஸகல
அணுக்களுக்குள்மளயும் வியாபித்தும், தாவர
வர்க்கத்தில் மமமல பசான்னாற்மபால
‘ஃமபாமடாஸிந்தஸிஸ்’ (photosynthesis) உண்டாக்கியுந்தான்
ஜீவ ப்ரபஞ்சத்ரத நடத்துகிறது என்று இப்மபாது
ஸயன்ஸில் பசால்வரத எத்தரனமயா யுகம் முந்திமய
நம்முரடய மவத சாஸ்திரங்களில் பசால்லியிருக்கிறது.

தாவரம் மாதிரிமய நாமும் மநமர அந்தச் சக்திரயப்


பபறுகிறதற்குத்தான் காயத்ரீ முதலான மந்த்ரங்கரளக்
பகாடுத்திருக்கிறது. [ஸயன்ஸுக்கும்] பல படி மமமல
மபாய் மதஹ சக்திமயாடு நிறுத்திக் பகாள்ளாமல் புத்தி
சக்தி, பாரமார்த்திகமான ஸாதனா சக்தி
ஆகியவற்ரறயும் அவனிடமிருந்து க்ரஹித்துக்
பகாள்வதற்கு காயத்ரீரயக் பகாடுத்திருக்கிறது.
A free publication by Kanchi Periva Forum Page 30
ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

அங்மக ‘ஸவிதா’, ‘ஸாவித்ரி’ என்று நம்ரமப்


பபற்பறடுத்து வாழ்வு தருகிற ப்ரியமான தாயாகமவ
ஸூர்ய சக்திரயச் பசால்லியிருக்கிறது. இந்த சக்தியும்
ஆதி சக்தியான பராசக்தி என்ற மூலமான தாயாரின்
அங்கந்தான் – பாலூட்டும் அங்கந்தான் – என்கிறார்
ஆசார்யாள்.

ஆக, அன்னபூர்மணச்வரியாக நமக்குச் சாப்பாடு மபாட்டு


ரக்ஷிக்கிறவள் ஸூர்ய சந்திரர்கரளக் பகாண்மட
பாலூட்டுகிறாள் என்பது பராம்பவும் பபாருத்தமாக
இருக்கிறது.

ஸூர்யனுரடய உஷ்ண தாரர, சந்திரனுரடய சீதள


தாரர இரண்டாலும் அம்பிரக ஜீவ ஸமூஹத்திற்கு
ஸ்தன்ய பானம் பகாடுத்து வளர்க்கிறாபளன்று
பசால்வது ஸயன்ஸின் உண்ரமகரளமய பக்தி
பாரஷயில் பசால்வதுதான்.

ஸூர்யன் புத்தி ப்ரகாசத்ரத உண்டாக்குகிறாபனன்றால்,


சந்திரன்தான் மனஸுக்கு அதி மதவரத. பபௌர்ணமி,
அமாவாஸ்ரயகள் உப்பு ஸமுத்ரத்தில் tide
உண்டாக்குகிறாற்மபாலமவ சித்தத்தின் எண்ண
ஸமுத்ரத்திலும் பாதிப்பு உண்டாக்குவது ப்ரத்யக்ஷமாகத்
பதரிகிறது.

சித்தக் மகாளாறு உள்ளவர்கள் விஷயத்தில் அது


நன்றாகத் பதரிகிறது. அவர்கரள ‘lunatic’ என்பது சந்திர
ஸம்பந்தப் படுத்தி ரவத்த பபயர்தான். [லத்தீனில் ‘luna’
என்றால் சந்திரன்.]

A free publication by Kanchi Periva Forum Page 31


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

அமாவாஸ்ரயயில் தர்ப்பணம், அரத ‘நிரறந்த நாள்’


என்பது, க்ரஹண காலத்தில் மந்த்ர ஜபத்திற்கு வர்யம்

கூடுதலாவது முதலானரவ ஸூர்ய சந்திரர்களுக்கு
இஹமலாக பரமலாகங்களின் உள்ள அநுக்ரஹ
சக்திரயக் காட்டுகின்றன. அந்த அநுக்ரஹபமல்லாமும்
முடிவிமல அம்பாள் பகாடுக்கும் ஞானப்பாலின்
பசாட்டுக்கள்தான்!

இரதபயல்லாம் அடக்கித்தான் “சசி மிஹிர


வமக்ஷாருஹ யுகம்” என்றார்.

ஸூர்ய – சந்திரர்கரளப் பரமாத்மாவின் வலது-இடது


கண்களாகச் பசால்வது வழக்கம். “ஸூர்யனாயிருந்து
பகாண்டு உன்னுரடய வலது கண் பகல் மவரளரயப்
பரடக்கிறது; சந்திரனாயிருந்து பகாண்டு இடது கண்
ராத்ரிரயப் பரடக்கிறது” என்று நம்
ஸ்மதாத்திரத்திமலமய ஒரு ச்மலாகம் (ச்மலா. 48)
பசால்கிறது. அம்பாளுரடய தாடகங்களாக ஸூர்ய
சந்திரர்கரள ஸஹஸ்ரநாமத்தில்
பசால்லியிருப்பரதயும் முன்னாடி பசான்மனன்.
இபதல்லாவற்ரறயும் விட நம்ரமக் குழந்ரதகளாக்கி
அவள் பால் பகாடுக்கிற வமக்ஷாருஹங்களாக
அவற்ரறச் பசால்வமத பநஞ்ரசத் பதாடுகிறது.

புராதன நூல்களில் நவனக்


ீ கண்டுபிடிப்புக்கள்

வராஹமிஹிரர் “ப்ருஹத் ஸம்ஹிரத’ என்று ஒரு


கிரந்தம் எழுதியிருக்கிறார் என்மறனல்லவா? அதில்
இல்லாத விஞ்ஞானக் கண்டுபிடிப்பு இல்ரல.

A free publication by Kanchi Periva Forum Page 32


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

பவறும் ஆகாசத்தில் இந்தக் கிரஹங்கபளல்லாம்


இருக்கின்றனமவ. விழாமல் எப்படி நிற்கின்றன?
இதற்குக் காரணத்ரத நியூடன் என்பவர்தாம்
கண்டுபிடித்தார் என்று எல்மலாரும் நிரனக்கிறார்கள்.

மிகப் பரழய காலத்தில் உண்டான சூரிய சித்தாந்தத்தின்


ஆரம்பத்தில் இருக்கிற ச்மலாகமம, பூமி விழாமல்
இருப்பதற்கு ஆகர்ஷண சக்தி காரணம் என்று
பசால்லுகிறது. நம் பகவத்பாதாளின் உபநிஷத்
பாஷ்யத்திலும் பூமிக்கு ஆகர்ஷண சக்தி இருக்கிறது
என்று பசால்லப்பட்டிருக்கிறது. ஒரு வஸ்துரவ நாம்
மமமல வசி ீ எறிந்தால் அது மறுபடியும் கீ மழ வந்து
விழுகிறது.

அப்படி விழுவது அதனுரடய ஸ்வபாவகுணம் அல்ல.


அது பூமியில் விழுவதற்குக் காரணம் பூமியின்
ஆகர்ஷண சக்திமய. ஆகர்ஷண சக்தி பயன்றால்
இழுக்கும் சக்தி என்பது அர்த்தம். பிராணன் மமமல
மபாகும்; அபானன் அரதக் கீ மழ இழுக்கிறது. ஆகமவ,
கீ மழ இழுக்கிற சக்திக்கு அபானசக்தி என்று பபயர். ஸ்ரீ
ஆசார்யரவர்கள் பிருதிவிக்கு அபானசக்தி, அதாவது
ஆகர்ஷண சக்தி, இருக்கிறபதன்று
பசால்லியிருக்கிறார்கள்.

ப்ரச்மநாபநிஷத்தில் (III.8.) “ப்ருதிவியின் மதவரதமய


மநுஷ்ய சரீரத்தில் அபானரன இயக்குகிறது” என்று
வருகிறது. அதன் பாஷ்யத்தில் ஆசார்யாள், மமமல
மபாட்ட பபாருரள பூமி ஆகர்ஷிக்கிற மாதிரி, மமமல
மபாகிற பிராணரன அபானம் கீ மழ இழுப்பரதப் பற்றிச்
பசால்கிறார். இதனால் உபநிஷத்திமலமய Law of Gravitation
மபசப்படுவதாக ஆகிறது.

A free publication by Kanchi Periva Forum Page 33


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

இரவகரளப் மபான்ற பல அருரமயான விஷயங்கள்


நம்முரடய சாஸ்திரங்களில் இருக்கின்றன. நமக்கு
இரவகள் பதரியாததனால் மதசாந்திரத்தில்
உள்ளவர்கள் நமக்கு எவ்வளமவா காலம் பிற்பட்டு
எழுதியரவகளுக்கு அளவில்லாத பகௌரவத்ரதக்
பகாடுக்கிமறாம்.

இப்பபாழுது எவ்வளவு விதமான கணக்குகள்


மலாகத்தில் இருக்கின்றனமவா அவ்வளவு கணக்குகளும்
எவ்வளமவா வருஷங்களுக்கு முன்மப உண்டான
நம்முரடய ஜ்மயாதிஷ சாஸ்திரங்களில் இருக்கின்றன.

[ஸ்ருஷ்டி பதாடக்கமான] கல்பாரம்பத்தில் எல்லாக்


கிரஹங்களும் ஒமர மநராக இருந்தன.

அப்புறம் காலம் ஆக ஆக அரவ பகாஞ்சங் பகாஞ்சமாக


மாறிக் பகாண்மட வருகின்றன. மற்பறாரு
கல்பாரம்பத்தில் மறுபடியும் மநராக வந்துவிடும்.

நாம் பசய்யும் கர்மாக்களில் முதலில் பசால்லும்


ஸங்கல்பத்தில் பிரபஞ்ச வர்ணரன, கால அளரவ
என்பறல்லாம் பசால்லப்படுகிற அவ்வளவும் ஜ்மயாதிஷ
விஷயந்தான்.

பூ ஆகர்ஷணம் மட்டுமில்ரல, பூமி சுற்றுவரதயும்கூட


ஆர்யபடர், வராஹமிஹிரர் முதலானவர்கள்
பசால்லியிருக்கிறார்கள். ‘பூமிதான் நம் பிரபஞ்சத்துக்கு
மத்தியாக நின்ற இடத்தில் நின்று பகாண்டிருக்கிறது.
ஸூர்யமன அரதச் சுற்றி வருகிறான்.

A free publication by Kanchi Periva Forum Page 34


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

அதனால்தான் இரவு பகல் உண்டாயிருக்கின்றன’ என்மற


மமல் நாட்டுக்காரர்கள் பதினாறாம் நூற்றாண்டுவரர
நிரனத்து வந்தார்கள்.

இதற்குக் பகாஞ்சம் மாறாக யாராவது ஆராய்ச்சி


பண்ணிச் பசான்னால், அவரர மதகுருமார்கள் stake என்ற
கம்பத்தில் கட்டி பநருப்ரப ரவத்துக் பகாளுத்தினார்கள்!
ஆனால் பராம்பவும் பூர்வ காலத்திமலமய நமக்கு இந்த
விஷயங்கள் பதரிந்திருந்தன.

பூமிதான் ஸூர்யரனச் சுற்றுகிறது, ஸூர்யன் பூமிரயச்


சுற்றுவதில்ரல என்பதற்கு, ஆர்யபடர் பராம்ப அழகாக
ஒரு மபர் பகாடுத்திருக்கிறார். அதற்கு ‘லாகவ – பகௌரவ
நியாயம்’ என்று மபர்.

லகு என்றால் மலசானது, சின்னது என்று அர்த்தம்.


‘லகு’ரவக் குறிப்பது ‘லாகவம்’. ‘மலசாக’, ‘ரலட்’டாக
ஒன்ரற எடுத்துக் பகாண்டு பசய்வரதத்தான் ‘ரக
லாகவம்’, ‘ஹஸ்த லாகவம்’ என்கிமறாம்.

லகுவுக்கு ஆப்மபாஸிட் (எதிர்ப்பதம்) குரு. கனமானது,


பபரியது எதுமவா அதுமவ குரு. மஹாகனம்
பபாருந்தியவர், கனவான், பபரியவர்கள் எனப்படுகிறவமர
குரு. அவர்தான் ஆசாரியர்.

ஆசாரியர் குரு என்றால், அப்மபாது சிஷ்யன்தான் லகு.


குருவான ஆசாரியரரத்தாமன லகுவான சிஷ்யன்
பிரதக்ஷிணம் பண்ணுகிறான்? அதாவது சுற்றிச் சுற்றி
வருகிறான்? ஆசாரியர் சிஷ்ய பிரதக்ஷிணம்
பண்ணுவாரா? மாட்டார்.

A free publication by Kanchi Periva Forum Page 35


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

ஸூர்யமன குரு

நம் பிரபஞ்சத்தில் (solar system -மல) பபரியது, குருவானது


ஸூர்யன் தான்; லகு பூமி. குருரவத்தான் லகு
பிரதக்ஷிணம் பசய்யும் என்பமத ‘லாகவ-பகௌரவ
நியாயம்’! இதன்படி பூமிதான் ஸூர்யரனச் சுற்ற
மவண்டும். இப்படிப் பிரபஞ்சத்ரத குரு – சிஷ்ய
கிரமமாக பார்த்து சாஸ்திரமாகவும் ஸயன்ஸாகவும்
ஆர்யபடர் பசால்லியிருக்கிறார்.

இப்மபாது நாம் எந்த மதஸ்தர்கள் விஞ்ஞான சாஸ்திரம்


வளர முடியாதபடி விஞ்ஞானிகரள ‘பஹரிடிக்’ என்று
பசால்லிக் பகாளுத்தினார்கமளா, அமத மதஸ்தர்கமளாடு
மசர்ந்துபகாண்டு, “இந்தியாவில் ஸயன்ஸ் வளராததற்கு
காரணம் ஹிந்து மதம்தான்.

பரமலாகம், பரமலாகம் என்று பசால்லிக்பகாண்டு ஹிந்து


மதம் இந்த மலாகத்து விஷயங்கரளபயல்லாம்
அலக்ஷ்யம் பசய்துவிட்டது” என்று குற்றம்
பசால்கிமறாம்! வாஸ்தவத்தில் அத்தரன
ஸயன்ஸுகளும் நம் சாஸ்திரங்களிமல இருக்கின்றன.

ஸூர்யன் இருந்தபடிதான் இருக்கிறது; பூமிதான் அரதச்


சுற்றி வருகிறது; பூமி சுற்றுவதால்தான் ஸூர்யன்
உதிப்பதாகவும் அஸ்தமிப்பதாகவும்
மதான்றுகிறமதயன்றி வாஸ்தவத்தில் ஸூர்யன்
பூமியின் கிழக்மக தினம் தினம் உதித்து அப்புறம்
மமற்மக நகர்ந்துபகாண்மடமபாய் அஸ்தமிக்கவில்ரல
என்ற விஷயம் ரிக்மவதத்திலுள்ள ஐதமரய
பிராம்மணத்திமலமய பசால்லப்பட்டிருக்கிறது.

A free publication by Kanchi Periva Forum Page 36


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

“ஸூர்யன் உதிப்பதும் இல்ரல; அஸ்தமிப்பதும்


இல்ரல” என்று அதிமல பதளிவாகச்
பசால்லியிருக்கிறது

ஸூரியன் சுற்றுகிறதா ? பூமி சுற்றுகிறதா?

பூமி சுற்றுகிற விஷயம் வித்வான்கள் எல்மலாருக்கும்


பதரிந்திருந்த விஷயம் என்பதற்குத் திருமரல
நாயகரிடம் மந்திரியாக இருந்த நீலகண்ட தீக்ஷிதரின்,
“சிமவாத்கர்ஷ மஞ்ஜரி”யில் ஆதாரம் இருக்கிறது. ‘பூமிர்
ப்ராமயதி’ என்மற இதில் கரடசி சுமலாகம்
ஆரம்பிக்கிறது.

அந்த ச்மலாகத்திலிருந்து, நீலகண்ட தீக்ஷிதருக்குப்


பபரிய பாட்டனாரான அப்பய தீக்ஷிதருக்கும் பூமி சுற்றும்
விஷயம் பதரியும் என்பது பதரிகிறது. [அந்த]
ச்மலாகத்தில் என்ன பசால்லியிருக்கிறது?

ஈச்வரனுக்கு அஷ்டமூர்த்தி என்பது ஒரு பபயர். பூமி,


ஜலம், வாயு, அக்னி, ஆகாசம், ஸூர்யன், சந்திரன் (யாகம்
பசய்கிறவனான) யஜமானன் ஆகிய இந்த எட்டும்
ஈச்வரனுரடய மூர்த்திகள். இவற்றிமல யஜமானன்
ஒருத்தனுக்கு மட்டும் ப்ரமணம் (சுற்றுதல்) இல்ரல.

பாக்கி ஏழும் ப்ரமணம் உரடயரவமய என்று அப்பய


தீஷிதர் பசால்லியிருக்கிறார். அப்படி அவர்
பசால்லியிருக்கிறார் என்பரத அவருரடய தம்பி
மபரரான நீலகண்ட தீக்ஷிதர் இந்த ச்மலாகத்தில்
எடுத்துக்காட்டியிருக்கிறார்.

A free publication by Kanchi Periva Forum Page 37


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

காற்று நின்ற இடத்தில் நிற்காமல் சுற்றுவதும், பநருப்பும்


பகாஞ்சம்கூட ஸ்படடியாக இல்லாமல் அரசந்து
ஆடுவதும், ஜலமும் இப்படிமய ஒரு இடமாக இருக்க
முடியாமல் ஓடுவதும் நம் கண்ணுக்மக பதரிவதுதான்.

ஆகாசத்ரதப் பார்க்கும் மபாது ஸூர்ய – சந்திரர்கள்


சுற்றுவது பதரிகிறது. ஆகாசத்திமலதான் ஸகல
ஸப்தங்களும் இருக்கின்றன. சலனம்தான் சப்தமூலம்
என்பதால் அந்த ஆகாசமும் ப்ரமணமுரடயது என்று
பதரிகிறது.

ஆனால் பூமிரயப் பார்த்தால் அது, மபாட்டது மபாட்டபடி


இருக்கிற மாதிரித்தாமன பதரிகிறது? இப்படித்
பதரிந்தாலும், அதுவும் சுற்றுகிற ஏழில் ஒன்று என்மற
அப்ரபய தீக்ஷிதர் கருதியிருக்கிறார். “பூமிர் ப்ராமயதி”
என்று ச்மலாகம் ஆரம்பிப்பது பூமியின் சுழற்சிரயத்
தான் பசால்கிறது.

பூமியின் ஆகர்ஷணம், சுற்றுவது முதலியன


இருக்கட்டும். பூமியின் ரூபத்ரதமய பார்க்கலாம்.
பவள்ரளக்காரர்கள் என்ன பசால்கிறார்கள்?

‘பூமி தட்ரடயாகத் மதாரசக்கல் மாதிரி இருக்கிறது


என்றுதான் பழங்காலத்தில் நிரனத்தார்கள். அது
தட்ரடயாக இல்ரல, பந்து மாதிரி உருண்ரடயாக
இருக்கிறது என்று நாங்கள்தான் ஸமீ ப
நூற்றாண்டுகளில் கண்டுபிடித்மதாம்’ என்கிறார்கள்.

ஸரி, ‘ஜாகரஃபி’க்குப் மபர் என்ன பசால்கிமறாம்? ‘பூமகாள


சாஸ்திரம்’ என்கிமறாம். ‘பூசாஸ்திரம்’ என்று

A free publication by Kanchi Periva Forum Page 38


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

பசான்னாமல மபாதும். ஆனாலும் பூமியானது


மகாளமாக, அதாவது உருண்ரடயாக இருப்பது நமக்கு
ஆதிகாலத்திலிருந்மத பதரியும் என்று
பதரிவிப்பதாகத்தான் ‘பூமகாளம்‘ என்று
பசால்லியிருக்கிறது.

Universe - ப்ரம்மாண்டம்

Universe எனப்படும் ஸகல நக்ஷத்ர மலாகங்களும்


உட்பட்ட பிரபஞ்சத்ரத ‘ப்ரம்மாண்டம்’ என்கிமறாம்.
‘பிரம்மனால் பரடக்கப்பட்ட அண்டம்’ இது. அண்டம்
என்றால் என்ன பதரியுமா? மகாழி முட்ரட. மகாழி
முட்ரட திட்டமான உருண்ரடயாக இருப்பதல்ல.

ஒரு உருண்ரடயின் ஓரங்கரளத் தட்டிவிட்ட மாதிரி


நீளவட்டத்தில் கனபரிமாணம் உள்ளதாக முட்ரட
இருக்கிறது. நவனீ விஞ்ஞானத்திலும் Universe என்பது
உருண்ரடயாக (spherical) இல்ரல; முட்ரட மாதிரி oval
வடிவத்தில் கனபரிமாணமுள்ளதாக elliptical -ஆகமவ
இருக்கிறது என்கிறார்கள்.

இந்தப் பிரபஞ்சம் முழுக்க நகர்ந்து பகாண்மடதான்


இருக்கிறது என்ற மாடர்ன் அஸ்ட்ரானமியில்
பசால்கிறார்கபளன்றால் மவதகாலத்திலிருந்து நாம்
இதற்குத் தந்திருக்கிற மபமர இந்த உண்ரமரயத்தான்
பசால்கிறது.

‘ஜகத்’, ‘ஜகத்’ என்மற நாம் பசால்கிமறாம். ‘ஜகத்’ என்றால்


நின்ற இடத்தில் நிற்காமல் மபாய்க்பகாண்மடயிருப்பது
என்றுதான் அர்த்தம் .

A free publication by Kanchi Periva Forum Page 39


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

பூமி சுற்றுகிறது என்ற வாதத்ரத ஆமக்ஷபித்தவர்களும்


நம்மவர்களில் சிலர் இருந்துதான் இருக்கிறார்கள்.
அவர்களில் ஒரு சாராருரடய அபிப்பிராயத்ரதச்
பசால்கிமறன்:

பூமியின் சுற்றளவு (circumference) சுமார்


இருபத்ரதயாயிரம் ரமல். அதனால் ஒரு நாளில் (24
மணிகளில்) பூமி ஒரு தடரவ தன்ரனத்தாமன சுற்றிக்
பகாள்கிறது என்றால், அது மணிக்கு ஆயிரம் ரமல்
சுற்றுகிறது என்று அர்த்தம். அப்படிபயன்றால், ஒரு
நிமிஷத்தில் அது பதினாறு அல்லது பதிமனழு ரமல்
சுற்றுகிறது.

அதாவது, பூமி சுற்றிக் பகாண்மடயிருப்பதால் இந்த


நிமிஷத்தில் இந்த மயிலாப்பூர் இருக்கிற இடத்தில்,
அடுத்த நிமிஷம் இங்மகயிருந்து பதிமனழு ரமலில்
இருக்கிற ஒரு ஊமரா, சமுத்ரமமா வந்தாக மவண்டும்.

இந்த நிமிஷத்திமல இந்த மயிலாப்பூரில் உட்கார்ந்து


பகாண்டிருக்கிற காக்காய் உட்கார்ந்த இடத்ரதவிட்டு
எழும்பி ஆகாசத்தில் மநமர மபாகிறது. அடுத்த நிமிஷம்
அது கீ மழ வருகிறது. முன்மன எங்மக
உட்கார்ந்திருந்தமதா அமத மயிலாப்பூர் மரத்தில்
அல்லது மாடியில் வந்து உட்காருகிறது. பூமி சுற்றுவது
நிஜமானால் இது எப்படி ஸாத்தியமாக இருக்க முடியும்?

அது மமமல எழும்பின ஒரு நிமிஷத்தில் கீ மழ இருக்கிற


பூமி சுற்றுகிற சுற்றில் மயிலாப்பூர் இருக்கிற இடம்
நகர்ந்து பதிமனழு ரமலுக்கு அந்தண்ரட உள்ள
இடமல்லவா இங்மக வந்திருக்க மவண்டும்? – இப்படிக்
மகட்கிறார் பூப்ரமண ஸித்தாந்தத்ரத ஆமக்ஷபிக்கிறவர்.
A free publication by Kanchi Periva Forum Page 40
ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

இதற்கு மமற்படி ஸித்தாந்திகள் என்ன பதில்


பசால்கிறார்கள் என்று நான் பார்க்கவில்ரல. ஆனால்
நவன ீ விஞ்ஞானம் படித்தவர்கரளக் மகட்டமபாது,
“பூமிரயச் சுற்றி சுமார் 200 ரமலுக்கு atmosphere என்ற
காற்று மண்டலம் இருக்கிறது; அதற்கப்புறமும் உரறகள்
மாதிரிச் சில மண்டலங்கள் இருக்கின்றன; இரவயும்
பூமிமயாடு கூடமவ சுற்றி வருகின்றன” என்று
விளக்குகிறார்கள்.

நான் இப்மபாது பசான்னதில் பகாஞ்சம் பிசகு


இருந்தாலும் இருக்கலாம். அபதப்படியானாலும், பூமி
மட்டுமன்றி அதன் அட்மாஸ்ஃபியரும் அமதாடுகூட
சுற்றுகிறது என்பதில் சந்மதகமில்ரல. Arabic Numeral
என்று பசால்கிற 1,2,3,4 இலக்கங்களுக்கு இந்தியாதான்
மூலமான தாய்வடு ீ என்று, இப்மபாது மமல் நாட்டினர்
கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ரஸஃபர் என்பமத இந்தியாவிலிருந்து வந்ததுதான்


என்று மமல்நாட்டு அறிஞர்கள் பசால்கிறார்கள். இது
பதரிய வந்ததால்தான் கணித சாஸ்திரம் பூரண ரூபம்
பபற முடிந்தது என்கிறார்கள்.

ரஸஃபர் வந்தது மட்டுமில்ரல, எந்த இலக்கத்ரத


ரஸஃபரால் வகுத்தாலும் infinity (அனந்தம்) வருகிறது
என்ற சூக்ஷ்மமான கணித உண்ரமரயயும்
பாஸ்கராசாரியார் பசால்லி அரதப் பரமாத்ம
தத்வத்மதாடு மசர்த்துத் தம் கணித சாஸ்திரத்தின்
மங்கள ச்மலாகமாகக் கூறுகிறார்.

வகுக்கும் எண் (divisor) சின்னதாக ஆக ஆக ஈவு (quotient)


பபரிதாகும் அல்லவா? பதினாரற எட்டால் வகுத்தால்
A free publication by Kanchi Periva Forum Page 41
ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

(அதாவது வகுக்கும் எண் எட்டாக இருந்தால்) ஈவு 2;


வகுக்கும் எண் நாலானால் ஈவு 4; இரண்டானால் ஈவு 8
ஆகிறது. ரஸஃபராமலமய வகுத்து விட்டால்? அப்மபாது
ஈவானது எண்ணிக்ரகயாமலமய குறிப்பிட முடியாத
அனந்தமாகிவிடுகிறது; infinity ஆகி விடுகிறது.

வகுபடும் எண் எதுவானாலும் சரி, அரத வகுக்கிற எண்


ரஸஃபரானால் ஈவு அனந்தம். இதற்கு கஹரம் என்று
பாஸ்கராச்சாரியர் மபர் பகாடுத்திருக்கிறார். ‘கம்’ (Kham)
என்றால் ரஸஃபர்; ‘ஹரம்’ என்றால் வகுத்தல், ‘இப்படி
அனந்தமாக இருக்கிற பரமாத்மாரவ நமஸ்கரிக்கிமறன்’
என்று தம்முரடய கணித சாஸ்திரத்தில் அவர்
பசால்கிறார்.

ஆமராக்யம் பாஸ்கராத் இச்மசத்

இது இதற்கு இன்னின்ன ஸ்வாமியிடம் மபா’ என்று


பசால்லும்மபாது ஆமராக்கியத்திற்கு ஸூர்யன் மாதிரி,
ஞானத்திற்கு ஈச்வரனிடம் மபாகச் பசால்லியிருக்கிறது:

ஆதராக்யம் பாஸ்கராத்-இச்தெத் ஞாந-ொொ மதஹச்வர:

“அவனுரடய அநுக்ரஹத்தினாமல பரம சாந்தமான


சாச்வத ஸ்தானத்ரத அரடவாய்” என்கிறார். அந்த
ஸ்தானம்தான் ஞானத்தினால் பபறும் மமாக்ஷம்.

ஸ்ரீ ஸூர்ய நாராயண ஸ்வாமிதன நம:

ஸ்ரீ மஹா தபரியவா ெிருவடிகளில் ெமர்ப்பணம்

A free publication by Kanchi Periva Forum Page 42


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

A free publication by Kanchi Periva Forum Page 43


ஞான பாஸ்கரம் ஸ்ரீ மஹா பபரியவா அருளுரர

A free publication by Kanchi Periva Forum Page 44

You might also like