You are on page 1of 6

ஜெய் ஸ்ரீ ராம். மஹா பெரியவா சரணம்.

இன்று ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ


காலபைரவாஷ்டகம் அர்த்தத்துடன் படித்துப் பிரார்த்திப்போம்.

ஸ்ரீ காலபைரவாஷ்டகம்

1)

தேவராஜ ஸேவ்யமான

பாவநாங்க்ரி பங்கஜம்

வ்யால யக்ஞஸூத்ரமிந்து

சே'கரம் க்ருபாகரம் /

நாரதாதி யோகிப்ருந்த

வந்திதம் திகம்பரம்

காசி'காபுராதி நாத

காலபைரவம் பஜே //

தேவர்கள் தலைவனான இந்திரன் வணங்கும் தாமரைபோன்றத் திருவடிகளை


உடையவரும், சர்ப்பத்தை யக்ஞோபவதமாக
ீ அணிந்தவரும், சந்திரனை சிரசில்
அணிந்தவரும், பரம காருண்யாமூர்த்தியும், நாரதர் முதலிய முனிவர்களால்
போற்றப்படுபவரும், திகம்பரனாய்த் திகழ்பவருமாகிய காசிநகரத்தை ஆளும்
ஸ்ரீ காலபைரவரை வணங்குகிறேன்.

2)

பாநுகோடி பாஸ்வரம்

பவாப்தி தாரகம்பரம்

நீலகண்ட மீ ப்ஸிதார்த்த

தாயகம் த்ரிலோசனம் /
கால காலமம்புஜாக்ஷ

மஸ்தசூ'ன்ய மக்ஷரம்

காசி'காபுராதி நாத

காலபைரவம் பஜே //

கோடிஸூர்யப் பிரகாசத்தைக் கொண்டவரும், சம்சாரக் கடலினின்று


கரைத்தேற்றுபவரும், நீலகண்டரும், நம் விருப்பங்களை பூர்த்தி செய்பவரும்,
முக்கண்ணரும், இறப்பிற்கு அப்பாற்பட்டவரும், தாமரை மலர் போன்ற
கண்களை உடையவரும், திரிசூலத்தால் இவ்வுலகைக் காப்பவரும், அக்ஷர
ரூபமாய்த் திகழ்பவருமான காசிநகரத்தை ஆளும் ஸ்ரீ காலபைரவரை
வணங்குகிறேன்.

3)

சூ'லடங்க பாச' தண்ட

பாணி மாதி காரணம்

ச்'யாம காய மாதிதேவ

மக்ஷரம் நிராமயம் /

பீம விக்ரமம் ப்ரபும்

விசித்ர தாண்டவ ப்ரியம்

காசி'காபுராதி நாத

காலபைரவம் பஜே //

சூலம், உளி, பாசம் தண்டம் ஆகியவற்றை கையில் தாங்கியவரும்,


ஆதிமூலமானவரும், கருத்தமேனியை உடையவரும், குறைவில்லா
அக்ஷரரூபமாய்த் திகழ்பவரும்,
கண்டிப்பான நெறிமுறைகளைப் பேணுபவரும், விசித்திரமான தாண்டவம்
புரிவதில் ஆர்வம் உள்ளவராய்த் திகழும் காசிநகரத்தை ஆளும் ஸ்ரீ
காலபைரவரை வணங்குகிறேன்.

4)

புக்தி முக்தி தாயகம்

ப்ரச'ஸ்தசாரு விக்ரஹம்

பக்தவத்ஸலம் ஸ்திரம்

ஸமஸ்தலோக விக்ரஹம் /

நிக்வணந் - மநோக்ஞ

ஹேம கிங்கிண ீ லஹத்கடிம்

காசி'காபுராதி நாத

காலபைரவம் பஜே //

போகத்தையும், மோக்ஷத்தையும் அருள்பவரும், அழகிய உருவம்


கொண்டவரும், பக்தர்களிடத்தில் பேரன்புடையவரும், உறுதியாக, சகல
லோகங்களையும் ரூபமாக உடையவராயும், ஒலி எழுப்பக்கூடிய
தங்கத்தினால் ஆன அரைச்சதங்கையை அணிந்தவருமான காசிநகரத்தை
ஆளும் ஸ்ரீ காலபைரவரை வணங்குகிறேன்.

5)

தர்மஸேது பாலகம்

த்வதர்ம மார்க நாச'கம்

கர்மபாச' மோசகம்

ஸுச'ர்ம தாயகம் விபும் /

ஸ்வர்ணவர்ண கேச'பாச'
சோ'பிதாங்க நிர்மலம்

காசி'காபுராதி நாத

காலபைரவம் பஜே //

தர்மமாகிய பாலத்தைக் காப்பவரும், அதர்மவழியை அழிப்பவரும்,


கர்மவினைகளை நீக்கிக் காத்தருள்பவரும், எங்கும் நிறைந்திருப்பவரும்,
தங்கமயமான கேசங்களைக்கொண்ட தூயவருமான காசிநகரத்தை ஆளும் ஸ்ரீ
காலபைரவரை வணங்குகிறேன்.

6)

ரத்னபாதுகா ப்ரபாபி

ராம பாதயுக்மகம்

நித்யமத்வி தீயமிஷ்ட

தைவதம் நிரஞ்ஜனம் /

ம்ருத்யுதர்ப நாச'னம் கரால

தம்ஷ்ட்ர பூஷணம்

காசி'காபுராதி நாத

காலபைரவம் பஜே //

அழகிய பாதங்களில் ஒளிவசும்


ீ ரத்தினங்கள் பதிக்கப்பட்ட பாதுகைகளை
அணிந்து மேலும் அழகாக விளங்குபவரும், அனைத்தையும் கடந்து
எப்பொழுதும் நித்யமாய் இருப்பவரும், இரண்டாகக்கொள்ளப்படாமவரும்,
யமனின் கர்வத்தை அழித்தவரும், தம் கோரைப்பற்களால் நமக்கு மோக்ஷம்
அருள்பவருமான காசிநகரத்தை ஆளும் ஸ்ரீ காலபைரவரை வணங்குகிறேன்.

7)
அட்டஹாஸபின்ன பத்ம

ஜாண்டகோச' ஸந்ததிம்

த்ருஷ்டி பாத நஷ்ட பாப

ஜாலமுக்ர சா'ஸனம் /

அஷ்டஸித்தி தாயகம்

கபால மாலிகாதரம்

காசி'காபுராதி நாத

காலபைரவம் பஜே //

அட்டஹாசச் சிரிப்பால் பிரம்மா சிருஷ்டி செய்த அண்டகோசம் என்னும்


கூட்டை உடைத்தவரும், தம் பார்வையிலேயே பாபங்களை அழிப்பவரும்,
உக்கிரமான நெறிமுறைகளை உடையவரும், கபால மாலை அணிந்து
அஷ்டசித்திகளை வழங்குபவருமான காசிநகரத்தை ஆளும் ஸ்ரீ
காலபைரவரை வணங்குகிறேன்.

8)

பூதஸங்க நாயகம்

விசா'லகீ ர்த்தி தாயகம்

காசி'வாஸிலோக புண்ய

பாபசோ'தகம் விபும் /

நீதிமார்ககோவிதம்

புராதனம் ஜகத்பதிம்

காசி'காபுராதி நாத

காலபைரவம் பஜே //
பூதகணங்களுக்குத் தலைவராய், பரந்த கீ ர்த்தியை அருளும், காசிநகரத்தில்
வாழ்பவர்களின் புண்ணிய பாபச்செயல்களை ஆராய்பவராகவும், எங்கும்
நிறைந்த, நீதிமார்க்கத்தின்படி நமக்கு வழிகாட்டுபவரும், புராதானமான
காலத்திலிருந்து இப்பிரபஞ்சத்தில் விளங்கும் காசிநகரத்தை ஆளும் ஸ்ரீ
காலபைரவரை வணங்குகிறேன்.

9)

காலபைரவாஷ்டகம்

படந்தி யே மனோஹரம்

ஜ்ஞானமுக்தி ஸாதனம்

விசித்ர புண்யவர்த்தனம் /

சோ'கமோஹ லோபதைன்ய

கோபதாப நாச'னம்

தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி

ஸந்நிதிம் த்ருவம் //

அழகான, மனதைக் கொள்ளைகொள்ளும் இந்த காலபைரவாஷ்டகத்தை பக்தி


சிரத்தையுடன் படிப்பவர்களுக்கு ஞானமும், முக்தியும், மேலும் பல
புண்ணியங்களும் கிட்டுவதோடு துக்கம், மோஹம், லோபம், வறுமை,
கோபதாபங்கள் நீங்கி இறுதியில் ஸ்ரீ காலபைரவரின் இருப்பிடத்தை
எய்திடுவர்.

நாளை மேலும் சில ஸ்லோகங்களைப் பார்ப்போம்.

மஹா பெரியவா சரணம். ஜெய் ஸ்ரீ ராம்.

You might also like