You are on page 1of 24

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - August 7,

2016

நீதியை நிலை நாட்டவும், கம்சனை வதம்செய்யவும் மகாவிஷ்ணுஅவதரித்த


ஆவணி அஷ்டமி நன்நாளையே, கோகுலாஷ்டமியாக நாம் கொண்டாடுகிறோம்.

ஆவணி மாதம், ரோகிணி நட்சத்திரம் கூடிய அஷ்டமி திதியில், இரவு 12.00


மணியளவில், மதுரா சிறைச்சாலையில், வசுதேவர்- தேவகி தம்பதியருக்கு
எட்டாவது குழந்தையாக கண்ணன் அவதரித்தான். அவதாரம் என்ற வடமொழிச்
சொல்லுக்கு கீ ழே இறங்கி வருதல் எனப் பொருள். இப்படி மகாவிஷ்ணு நீதியை
நிலை நாட்டும் பொருட்டும், கம்சனை வதம்செய்யும் பொருட்டும் இப்பூவுலகில்
அவதரித்தார். கண்ணன் அவதரித்த ஆவணி அஷ்டமி நன்னாளைத்தான்
கோகுலாஷ்டமியாக இமயம் முதல் குமரி வரை அனைவரும்
கொண்டாடுகின்றனர். கண்ணன் பிறந்தது மதுரா என்ற வடமதுரை; கண்ணன்
வளர்ந் தது ஆயர்பாடியான கோகுலம். இவ்விரு தலங்களும் யமுனையின்
எதிரெதிர் கரையில் அமைந்துள்ளன. ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஆனவன் கிருஷ்ணன். கோகுலாஷ்டமி கொண்டாடும் விதம்
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - August 7,
2016

அன்று இல்லங்களைத் தூய்மை செய்து, வாயிற்படியிலிருந்து பூஜையறை வரை


கண்ணனின் திருப்பாதங்களை மாக்கோலத்தால் வரைந்து அழகு பார்ப்பார்கள்.
கண்ணனே தன் திருப்பாதங்களைப் பதித்து பூஜையறைக்கு வந்து நாம்
வைத்துள்ள நிவேதனப் பட்சணங்களை ஏற்றுக்கொள்வதாக நம்புகின்றனர்.
பூஜையறையில் கண்ணன் விக்ரகம் அல்லது படம் வைத்து அலங்கரித்து,
இருபுறமும் குத்துவிளக்கேற்றி, பூஜைப் பொருட்களான தேங்காய், வெற்றிலை,
பாக்கு, பூ, பழம் வைத்து, நிவேதனப் பொருட் களான வெல்லச் சீடை, சீடை,
முறுக்கு, தேன்குழல், மைசூர்பாகு, லட்டு, பால்கோவா, அல்வா, பாதாம் கேக்
போன்ற பட்சணங்களுடன் நாவல்பழம், கொய்யாபழம், வாழைப்பழம்,
விளாம்பழம் போன்றவற்றையும் வைக்க வேண்டும்.. முன்னதாக கிருஷ்ணன்
பாடல்களைப் பாடி, பிறகு தூபதீபம் காட்டி நிவேதனம் செய்ய வேண்டும். பின்னர்
ஆலயம் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடக்கும் உறியடி, வழுக்கு மரம்
ஏறுதல் பார்த்து மகிழ்ந்து, இல்லம் திரும்பி பட்சணங்களை அனைவருக்கும்
கொடுத்தபின் நாம் உண்ண வேண்டும். துவாபர யுகத்தில் இராமயண காலத்தில்
உருவான ஊர் மதுரா. இங்கு யது வம்ச போஜகுலத்தில், உக்ரசேன மன்னனின்
மகனாக கம்சன் பிறந்தான். இவன் தன் தந்தையையே சிறை வைத்து, அரசை
தானே ஆண்டு வந்த கொடியவன். இவனுக்கு கம்சை, தேவகி என்ற இரு
தங்கைகள். தேவகிமீ து கம்சன் மிகுந்த பாசம் வைத்திருந்தான். வசுதேவருக்கு
தேவகியை மணம் முடித்து இருவரையும் தன் தேரில் ஏற்றிக் கொண்டு தானே
ஓட்டி வந்தான் கம்சன். அப்போது வானில் அசரீரி, ""கம்சா! தேவகியின் எட்டாவது
மகன் உன்னைக் கொல்வான்'' என்றது. ஆத்திரமடைந்த கம்சன் தேவகியைக்
கொல்ல முயல, அவனை வசுதேவர் தடுத்தார். ""கம்சா! தேவகியின் எட்டாவது
மகன்தானே உன்னைக் கொல்வான்? நாங்கள் எங்களுக்குப் பிறக்கும் எல்லா
குழந்தைகளையும் உன்னிடம் தந்துவிடுகிறோம் தேவகியை விட்டுவிடு'' என்று
மன்றாடினார். அதை ஏற்றுக்கொண்ட கம்சன் இருவரையும் மதுரா சிறையில்
அடைத்தான். வசுதேவர்- தேவகி தம்பதியருக்குப் பிறந்த குழந்தைகளை
இரக்கமின்றிக் கொன்று தீர்த்தான் கம்சன். இவ்வாறு ஆறு குழந்தைகள் கொல்லப்
பட்ட நிலையில், தேவகி ஏழாவது முறை கருவுற் றாள். கரு ஏழு மாதங்கள்
வளர்ந்திருந்த நிலை யில், அது மாயையின் உதவியால் கோகுலத்திலிருந்த
வசுதேவரின் முதல் மனைவி ரோகிணியின் வயிற்றுக்கு மாற்றப்பட்டது. அந்தக்
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - August 7,
2016

குழந்தையே பலராமன். (கரு கலைந்துவிட்டதாக கம்சனிடம் கூறிவிட்டனர்).


அடுத்து எட்டாவது முறையாக சூலுற்ற தேவகி, அஷ்டமி திதியில் நள்ளிரவு 12.00
மணிக்கு கண்ணனை ஈன்றெடுத்தாள். அந்த நேரத்தில் மாயையின் பிடியில் சிக்கி
மதுராவிலிருந்த அனைவருமே உறங்கிக் கொண்டிருந்தனர். வசுதேவர், தேவகி,
சந்திரன் ஆகிய மூவர் மட்டுமே விழித்திருந்தனர். மகாவிஷ்ணு உணர்த்தியபடி,
வசுதேவர் குழந்தையை ஒரு கூடையில் வைத்துக்கொண்டு யமுனைக்
கரைக்குச் சென்றார். அப்போது மழை பொழிய, ஆதிசேஷன் குடைபிடித்தபடி
அவர் கள் பின் சென்றது. யமுனை நதி இரண்டாகப் பிளந்து வழிவிட, வசுதேவர்
அக்கரையிலிருந்து ஆயர்பாடியான கோகுலம் சேர்ந்தார். அங்கே நந்தகோபரின்
மனைவி யசோதையின் அருகே குழந்தையை வைத்துவிட்டு, யசோதைக்குப்
பிறந் திருந்த பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு சிறைச்சாலை வந்து
சேர்ந்தார். அப்பொழுது மாயை விலக, அனைவரும் கண் விழித்தனர்.
குழந்தையின் அழுகுரல் கேட்டு, செய்தி கம்சனுக்குத் தெரிவிக்கப்பட்டது.
தன்னை அழிப்பதற்காகப் பிறந்திருக்கும் குழந்தை இதுதானே என்று
ஆக்ரோஷமாகப் புறப்பட்டு வந்த கம்சன், பெண் குழந்தையென்றும் பாராமல்
அதைக் கொல்ல முயல, அவன் பிடியிலிருந்து விலகி அந்தரத்தில் நின்று சிரித்த
குழந்தை, ""கம்சா! உன்னைக் கொல்லப் பிறந்தவன் கோகுலத்தில் வளர்கிறான்''
என்று கூறி மறைந்துவிட்டது. அது காளி தேவி. பெருங்கோபம் கொண்ட கம்சன்
தன் அசுரப் படைகளை அழைத்து, எந்த வடிவிலாவது சென்று கண்ணனைக்
கொன்றுவிடுமாறு கட்டளையிட்டான். வண்டிச் சக்கரமாக வந்த சகடாசுரன்,
கடத்த வந்த தீப்திகன், பாலூட்ட வந்த பூதகி, கொக்காக வந்த பகன், பாம்பாக வந்த
ஆகா சுரன், கழுதையாக வந்த தேனுஜன், இடை யர்களாக வந்த பிரம் பலன்-
வியோமன், காளையாக வந்த அரிஷ்டன், குதிரை யாக வந்த கேசி என பலரும்
வஞ்சகமாக கண்ணனைக் கொல்ல வந்தனர். அத்தனை பேரையும் குழந்தைக்
கண்ணன் விளையாட்டாகக் கொன்றான். காளிங்கனை மட்டும் அடக்கி
மன்னித்துவிட்டான். கண்ணனுக்கு இப்படி பல இடையூறுகள் வருவதைக் கண்ட
ஆயர்பாடியினர் ஐந்து வயதான கண்ணனை அழைத்துக்கொண்டு பசுக்
கூட்டங்களுடன் பிருந்தாவனம் சென்று விட்டனர். எவ்வளவு முயன்றும்
கண்ணனைக் கொல்ல முடியவில்லையே என்று ஆத்திரமுற்ற கம்சன்,
வேறொரு உபாயம் செய்தான். அதன்படி கண்ணனை தன் அரண்மனைக்கே
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - August 7,
2016

வரவழைத் தான். அரண்மனை வாயிலில் ஒரு யானையிடம் இரும்பு


உலக்கையைக் கொடுத்து, அதைக் கொண்டு கண்ணனைக் கொல்ல ஏற்பாடு
செய்திருந்தான். ஆனால் பலராமனும் கண்ணனும் அந்த யானையையே கொன்று
விட்டனர். பிறகு சானுகன், கூடன், சலன், முஷ்டிகன், தோகலன் என்னும்
மல்யுத்த வரர்கள்
ீ ஐவரை அனுப்பினான் கம்சன். அவர்களையும் கொன்றான்
கண்ணன். இதைக் கண்டு பெருஞ்சினங்கொண்ட கம்சன் தன் படை வரர்களை

நோக்கி, ""இந்த இரு பயல்களையும் உடனே கொல்லுங்கள். அத்துடன்
சிறையிலுள்ள வசுதேவன், தேவகி, உக்கிரசேனன் என எல்லாரையும்
கொல்லுங்கள்!'' என்று கர்ஜித்தான். அதைக்கேட்ட கண்ணன்
சிம்மாசனத்திலிருந்த கம்சனை இழுத்து தரையில் கிடத்தி, அவன்மீ து ஏறி
அமர்ந்து, தன் கைகளால் கம்சனின் மார்பில் குத்தியே கொன்றான். அதன்பின்னர்
கம்சனின் தந்தையும் கண்ணனின் தாத்தாவுமான உக்கிரசேனர் அரியணை
ஏறினார். பலராமனுக்கும் கண்ணனுக் கும் உபநயனம் செய்வித்து, சாந்திபணி
என்ற குருவிடம் குருகுலக் கல்விக்கு அனுப்பி வைத்தார் உக்கிரசேனர். அங்கு 64
கலைகளையும் கற்ற அவர்கள், குருவின் மகனை மீ ட்டு குரு காணிக்கையாகச்
செலுத்திப் பெருமை கொண்டனர். பின்னர் பூபாரம் தீர்க்க பாரதப்போர், உலக
மக்கள் நற்கதி பெற கீ தோபதேசம் என பல அருஞ்செயல்கள் புரிந்த கண்ணன்
துவாரகையில் அரசு புரிந்துவந்தார். இறுதியில் தன் அவதார காலம் முடிவுறும்
தருணம் நெருங்கிவிட்டதை உணர்ந்து, ஒரு மரத்தடியில் சென்று கால்நீட்டிப்
படுத்தார். அப்போது வேடன் ஒருவன் மறைந் திருந்து எய்த அம்பின் விஷ நுனி
கண்ணனின் காலில் பாய்ந்தது; கண்ணன் உயிர் பிரிந்தது. வைகுண்டம் சேர்ந்தார்
பரமாத்மா. கண்ணன் மனைவிகள் ருக்மணி, சத்யபாமா, காளிந்தி, ஜாம்பவதி,
விக்ரந்தை, சத்யவதி, பத்தரை, லட்சுமணை என பட்டத்தரசிகள் எட்டு பேர்.
இவர்களன்றி பதினாயிரம் இளவரசிகள். ஒவ்வொருவருக்கும் பத்துப் பிள்ளைகள்.
கண்ணனின் பல பிள்ளைகளில் 18 பேர் கீ ர்த்தி பெற்றவர்கள். பிரத்யும்னன்,
அனிருத்ரன், தீப்திமான், பானு, ப்ருஹத்பானு, சாம்பன், விருகன், அருணன்,
புஷ்கரன், வேதபாஸு, ஸ்ருததேவன், சுனந்தனன், இந்திரபாஸு, விருமன், கவி,
நிகரோதனன், சித்திரபானு, மது என்பவர்களே இவர்கள். கண்ணனின் காலம்
கண்ணனின் பூலோக சஞ்சாரம் 125 வருடங் கள் என ஞானானந்த சரஸ்வதி
சுவாமிகள் கூறியுள்ளார். கி.மு. 3102 பிப்ரவரி 18-ல்- 125 வருடம், 7 மாதம், 6 நாட்கள்,
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - August 7,
2016

பிற்பகல் 2 மணி, 27 நிமிடம், 30 வினாடியில் கிருஷ்ணாவதாரம் முடிந்தது


என்கிறார்.

கிருஷ்ணர் இரவில் பிறந்தார் என்பதால், முதிர் மாலை வேளையில் பூஜை


செய்வது வழக்கம். இல்ல வாயிலில் கோலமிட்டு, செம்மண் வரைய
வேண்டும். கண்ணனை குழந்தையாகவே பாவிப்பதால், சின்னச் சின்னப்
பாதங்களை வாசலிலிருந்து இல்லத்தின் உள்ளே வருவதுபோல
கோலமாக வரைவர்.

வாயிலில் தோரணம் கட்டி, மாவிலை வைத்து வாயில் நிலைப்படியை


அலங்கரிக்க வேண்டும். கிருஷ்ணரின் பிறந்தநாள் என்பதால்,
குழந்தைகளுக்குப் பிடித்த பட்சணங்கள் செய்ய வேண்டும். அதில்
வெல்லச் சீடை, உப்புச் சீடை, கைமுறுக்கு, தட்டை, களவடை- வெல்லச்
சீடை மாவில் செய்வது, தேங்காய் பர்பி, திரட்டுப் பால் உட்பட பல
பட்சணங்கள் செய்ய வேண்டும்.

முன்னதாக அலங்கரித்து வைத்துள்ள கிருஷ்ணர் படத்திற்கு அவரது பல


நாமங்களை கூறிப் பூக்களாலும், அட்சதைகளாலும் அர்ச்சனை செய்ய
வேண்டும். பின்னர் அவரவர் வேண்டுதல்களை மனதில் நினைத்து வழிபட
வேண்டும். உலகத்தில் உள்ள அனைவரும் சுகமாக வாழட்டும் (சர்வே
ஜனா சுகினோ பவந்து) என்று வேண்டிப் பூஜையை நிறைவு செய்வது
வழக்கம். கண்ணனை வேண்டிக்கொண்டால் அவன் நம் கவலைகள்
யாவையும் தீர்ப்பான் என்பது ஐதீகம்.
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - August 7,
2016

அசுரர்களின் அக்கிரம செயலால் பாவங்கள் அதிக ரித்து பாரம் தாங்காமல்


பு+மாதேவி பிரம்ம தேவரிடம் சென்று முறையிட்டாள். அதற்கு
பிரம்மாவோ, சிவன் மற்றும் தேவர்களையும் அழைத்து கொண்டு
மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார்கள்.

மகாவிஷ்ணுவும் அவர்கள் குறையை தீர்த்து வைப்பதாக கூறினார்.

யது வம்சத்தில் போஜகுலத்தில் தோன்றிய உக்ரசேனனின் மகன் கம்சன்.


இவன் வட மதுராவை ஆண்டு வந்தான். இவனுக்கு கம்சை, தேவகி என
இரண்டு சகோதரிகள். இதில் தேவகி மீ து அளவு கடந்த அன்பு
வைத்திருந்தான் கம்சன். தேவகியை, சு+ரசேன மகாராஜ h வின் மகனான
வசுதேவருக்கு திருமணம் செய்து கொடுத்தான்.

இவர்கள் இருவரையும் கம்சன் தன் ரதத்தில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து


சென்ற போது தீடீரென ஆகாயத்தில் இருந்து அசரீரி ஒன்று, கம்சா தேவ
கியின் எட்டாவது பிள்ளையால் நீ கொல்லப்படுவாய் என்று கூறியது.

இதனால் கடும் குழப்பமடைந்த கம்சன் தன் தங்கையை கொல்ல முற்பட


வசுதேவர் தடுத்து இவளால் உனது உயிருக்கு பிரச்சினை இல்லையே.
எனவே இவளை விட்டு விடு.
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - August 7,
2016

இவள் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளை எல்லாம் உன்னிடம் கொடுத்து


விடுகிறேன். அவற்றைக் கொன்றுவிடு என்று கூற அதனை ஏற்று
தேவகியை உயிருடன் விட்டான்.

எனினும் அவர்கள் இருவரையும் சிறையுள் வைத்திருந்தான். தேவகிக்கு


சிறையுள் பிறந்த ஆறு குழந்தைகளையும் கம்சன் கொலை செய்தான்.

எழாவது குழந்தையாக ஆதிN'சன் கருவில் தங்கினான். ஏழாவது


மாதத்தில் மகாவிஷ்ணுவின் மாயையால் வசுதேவரின் முதல் மனைவி
ரோகினியின் கருவில் சேர்க்கப்பட்டு பலராமனாக பிறந்தார்.

தேவகிக்கு பிறக்க போகும் எட்டாவது குழந்தைக்காக ஆவேசத்துடன்


காத்திருந்தான் கம்சன். எட்டாவது குழந்தையாக அவதரித்தார்
மகாவிஷ்ணு. அவருடைய ஆணைப்படி அக்குழந்தையை கோகுலத்தில்
இருந்த நந்த கோபரின் மனைவி யசோதை யிடம் மாற்றி அவள் பெற்ற
பெண் குழந்தையை தேவகியிடம் கொண்டு சேர்த்தார் வசுதேவர்.

கம்சன் பெண் குழந்தை என்றும் பாராமல் அதனை கொல்ல முயன்ற போது


அது அவன் பிடியில் இருந்து தப்பி வானத்தில் பறந்து சென்றது. கம்சா! நீ
என்னை கொல்ல முடியாது. உன்னை கொல்பவன் ஏற்கனவே பிறந்து
விட்டான் என்று கூறி மறைந்தது.

கோகுலத்தில் பலராமனும் கிருஷ்னனும் ஒன்றாகவே வளர்ந்து


கன்றுகளை மேய்த்து வந்தனர்.

கம்சன் தன்னை அழிக்கப் பிறந்திருக்கும் குழந்தையை தேடி அழிக்க பல


அரக்கர்களை அனுப்பினான். எதுவுமே வெற்றி பெறவில்லை.
கிருஷ்ணனை கொல்ல நினைத்த கம்சனின் முயற்சிகள் பலவும்
வணாகின.

ஆயர்பாடியில் கிருஷ்ணன் வருடாந்த இந்திர விழா தடுக்கப்பட்டதால்


கோபம் அடைந்த இந்திரனின் ஆணவத்தினை கோவர்த்தன மலையை
குடையாக ஏந்தி மக்களை காத்ததன் மூலம் அழித்தான்.
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - August 7,
2016

இறுதியாக கம்சன் மல்யுத்த வரர்


ீ இருவரை அனுப்பி பலராமன்,
கிருஷ்ணன் இருவரையும் மல்யுத்தம் மூலம் கொல்ல முயன்றான்.
எனினும் இருவரும் கொல்லப்பட கம்சன் தானே கிருஷ்ணனுடன் மோத
முயன்றான்.

இறுதியில் கிருஷ்ணன் கம்சனை தரையில் தள்ளி அவன் மீ து பாய்ந்து


மேலே அமர்ந்ததும் பாரம் தாங்காமல் கம்சன் இறந்தான்.

பின்னர் பலராமனும் கிருஷ்ணனும் சிறையில் இருந்த தமது தாய்


தந்தையரை விடுவித்தனர். அதன் பிறகு இருவரும் கோகுலத்துக்கு
செல்லாமல் வசுதேவருடனே இருந்து வந்தனர்.

இருவருக்கும் சாந்தீப முனிவர் கல்வி போதித்து வந்தார்.


குருதட்சனையாக குருவின் இறந்து போன மகனை மீ ட்டு கொடுத்தார்கள்.

கம்சனின் மரணத்தினை தாங்காது அவனது மனைவிகள் தமது தந்தை


ஜராசந்தனிடம் அழுது புலம்ப அவன் கோபம் கொண்டு யாதவ குலத்தி
னையே அழித்துவிடுவதாக கூறி படை எடுத்து வந்தான். ஒவ்வொரு
முறையும் தோல்வி அடைந்து செல்லும் போதும் மனம் தளராது மீ ண்டும்
மீ ண்டும் வந்தான்.

இதனால் யாதவ குலத்தினை காக்க விஸ்வகர்மா மூலமாக துவாரகை


எனும் பெரும் பட்டணத்தை நிருமாணித்து அதில் யாதவர்களை குடியேற
செய்தான் கிருஷ்ணன்.

விதர்ப்பராஜ h வின் மகளான ருக்மணி, தனது தந்தை தன்னை சிசுபாலன்


என்பவனுக்கு திருமணம் செய்ய நிச்சயத்திருபதனை அறிந்து தன்னை
காப்பாறும்மாறு கிருஷ்ணனிடம் தகவல் அனுப்ப அவளை மீ ட்டு பின்னர்
மணந்து கொண்டான்.

உறவினரான குந்திதேவி, கணவரை இழந்து ஐந்து பிள்ளைகளுடன்


கஷ்டப்படுவதனை அறிந்து உதவிகள் புரிந்தார். அவளது பிள்ளைகளான
பாண்டவர்களுக்கு சேர வேண்டிய நாடு, நகரங்கள் எல்லாவற்றையும்
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - August 7,
2016

துரியோதனன் வஞ்சகமாக சு+தாட்டம் மூலம் பறித்து கொண்டு அவர்கள்


மனைவி பாஞ்சாலியையும் மானபங்கம் செய்தான்.

அவர்கள் வனவாசம் சென்று வந்தால் நாடு நகரங்கள் எல்லாவற்றையும்


திருப்பி கொடுப்பதாக சொன்ன சொன்ன துரியோதனன் அவ்வாறு
செய்யவில்லை. இது குறித்து தூது சென்ற கிருஷ்ணனையும் இழிவாக
பேசினான்.

இதனால் பாரத போர் மூண்டது. கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு


தேர்ரோட்டியாக இருந்து போரை நடத்தினான். ஒரு சமயம் தயங்கி நின்ற
அர்ச்சுனனுக்கு தன் விசுவரூபம் காட்டி பகவத் கீ தையை உபதேசித்தார்.
பாரத போர் முடிவில் பாண்டவர்கள் அஸ்தினாபுரத்தினை ஆண்டு
வந்தனர்.

கார்க்க முனிவர்தான் நந்தனின் குழந்தைக்கு கிருஷ்ணன் என்று பெயரிட்டார்.


கிருஷ்ணன் என்றால் கருப்பு நிறம் உடையவன் என்று பொருள். ஆனால் இந்தப்
புராணத்தில் கிருஷ்ணன் என்றால் மிக உயர்ந்த மோட்சம் அளிப்பவன் என்று
பொருள் தரப்படுகிறது. பலராமனுக்கு சங்கர்ஷணன் என்ற பெயரும் உண்டு.
ஒருநாள் நந்தன், கிருஷ்ணனை அழைத்துக்கொண்டு மாடுகளை மேய்ச்சலுக்கு
ஓட்டிச்சென்றான். அங்கிருந்த பெண்ணிடம் கிருஷ்ணனை ஒப்படைத்து விட்டுக்
காட்டுக்குப் போனான். அவள்தான் ராதை.
இருவரும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். கிருஷ்ணன் தன் மாய லீலையால்
அவளிடமிருந்து மறைந்து தவிக்க வைத்துக் கண்ணாமூச்சியாடினான். இதனால்
ராதை துன்பப்பட்டாள்.
"கண்ணா, கண்ணா!’ என்று ஏங்கித் தவித்தாள். ராதையை பிருந்தாவனம் வரச்
சொல்லி, அங்கும் அவளுடன் ஓடியாடி பாடி மகிழ வைத்தான். அவன் நிழல்
மட்டும் வட்டில்
ீ இருந்தது. கிருஷ்ணாவதாரத்தில் ஒரே சமயத்தில் அவன் எங்கும்
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - August 7,
2016

நிறைந்திருப்பான் என்பதே அவனது மகிமை. ராதையுடன் பரமாத்மாவாக


விளையாடியவன் கிருஷ்ணன்.
ஒருசமயம் பார்வதி, ராதா கிருஷ்ணனை முன்னிட்டு தவம் செய்து
கொண்டிருந்தாள். தினசரி பூனைக்கு அருகில் இருந்த சித்திரா என்னும் நதியில்
பூக்கும் தாமரை மலர்களை பறித்துப் பயன்படுத்தி வந்தாள். அந்த மலர்கள்
அவளுடைய பூனைக்காகவே மலர்வை அவற்றை வேறு யாராவது பறித்தால்
அரக்கர்கள் ஆவார்கள் என்ற சாபம் உண்டு.
கிருஷ்ணனுக்கு விஷப்பால் ஊட்டி கொல்ல முயன்றவள் பூதகி என்னும் அரக்கி.
இவள் முற்பிறவியில் அசுரமன்னன் மகாபலிக்கு மகளாகப் பிறந்தவள். அப்போது
அவள் பெயர் ரத்னமாலா. மகாவிஷ்ணு வாமனராக வந்தபோது அவருக்குப்
பாலூட்ட எண்ணியவள்.
கிருஷ்ணனால் கொல்லப்பட்ட அரக்கனான திருணாவர்த்தன், முற்பிறவியில்
மன்னன். சகஸ்ராக்ஷன் என்னும் பெயருடைய அவன் பாண்டிய குலத்தவன்.
யசோதை கிருஷ்ணனனை கயிறு கொண்டு கட்டியதால் அந்த அடையாளம்
காரணமாக தாமோதரன் என்று பெயர். ஆனால் இந்தப் புராணத்தில் கிருஷ்ணனே
நீண்ட துணியால் தன்னைப் பிணைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
கோகுலத்துச் சிறுவர்கள் கோபர்கள். சிறுமிகள் கோபியர்கள். ஒருசமயம்
இக்கோபர்கள் ஒரு ஆலமரத்தின் கீ ழ் சண்டிகா தேவியை பூஜை செய்து விட்டு
அப்படியே படுத்து உறங்கி விட்டார்கள். அந்த இரவில் தேவ தச்சனான
விசுவகர்மா, பிருந்தாவனத்தில் வடுகளை
ீ நிர்மாணம் செய்தானாம்.
அதில் ஒவ்வொரு கோபர் பெயரையும் எழுதி வைத்தான். கோபர்கள் உறங்கி
இடமே பிருந்தாவனம். காலையில் கண் விழித்த கோபர்கள் ஆச்சர்யப்பட்டார்கள்
தங்கள் பெயருள்ள வட்டில்
ீ குடி புகுந்தனர்.
பிருந்தாவனம் என்ற பெயருக்க வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.
ஸ்வயம்புவ மனுவின் குலத்தோன்றல் மன்னன் கேதாரன். அவன் மனைவி
பிருந்தை. இவளை விருந்தை என்று அழைப்பர். அவளது பெயராலேயே
பிருந்தாவனம் என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
பிரம்ம வைவர்த்த புராணம் வேறு ஒரு காரணத்தைச் சொல்கிறது. ராதையின் பல
பெயர்களுள் ஒன்று, பிருந்தை. கண்ணனும் ராதையும் ஓடியாடி விளையாடிக்
களித்த இடம் என்பதால் இவ்விடம் பிருந்தாவனம் என்று பெயர் பெற்றது
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - August 7,
2016

என்கிறது.
ஒரு சமயம் கிருஷ்ணரும் அவர் தோழர்களும் அந்தணர்களிடம் சென்று உணவு
கேட்க, அவர்கள் உணவிடவில்லை.
கிருஷ்ணரின் ஆணைப்படி அவன் தோழர்களான கோபர்கள் அந்த வேதியர்களின்
மனைவியரிடம் கேட்க, அவர்கள் கிருஷ்ணர் இருக்குமிடத்திற்கே வந்து உணவை
படைத்தார்கள். பசி தீர்ந்தது. அவர்கள் கிருஷ்ணனிடம் அவன் தரிசனத்திலேயே
சதா இருக்கும் வரத்தை வேண்டினர். விண்ணிலிருந்து ஒரு விமானம் வர
அப்பெண்கள் அதிலேறி கோலாகலம் சென்று ஆனந்தமாக இருந்தார்கள்.
அவர்களின் நிழல்களே வேதியர்களின் குடில்களுக்குச் சென்றன. கிருஷ்ணனின்
அருள் இது.
காளியன் எனும் கொடிய விஷப்பாம்பு, தன் மனைவியுடன் பெரிய மடு ஒன்றில்
வசித்து வந்தது. அதனால் அந்த மடுவின் நீர் விஷமாகியது. அதை அருந்திய ஆடு,
மாடுகள் இறந்து போயின. காளியனைக் கொல்ல கிருஷ்ணன் மடுவில்
குதித்தான். காளியன், கிருஷ்ணனை விழுங்கினான். அடுத்த கணம் காளியனின்
உடலில் தாங்கமுடியாத எரிச்சல் ஏற்பட்டது. பயந்துபோன அவன், கிருஷ்ணனை
வெளியே துப்பினான்.
கிருஷ்ணன், காளியனின் படத்தின் மீ து ஏறி நர்த்தனம் புரிந்தான். பளு தாங்காமல்
காளியன் ரத்தமும், விஷமுமாகக் கக்கி மயங்கிப் போனான். காளியனின்
மனைவி சுரசை கிருஷ்ணனை பிரார்த்தித்தாள். அச்சமயம் வானிலிருந்து ஒரு
விமானம் வந்தது. அதில் ஏறி சுரசை கோலோகம் சென்றாள். அவள் நிழலைக்
காளியன் பெற்று மடுவை விட்டு நீங்கி ரமணகம் என்னும் இடத்தை அடைந்து
வாழலானான்.
கந்தமான பர்வதத்தில் துர்வாச மகரிஷி தவம் செய்து கொண்டிருந்தார். அச்மயம்
சஹசிகன் என்பவன் திலோத்தமையுடன் அப்பகுதிக்கு வந்தான். முனிவரின்
தவத்தை சிறிதும் மதியாமல் கேளிக்கைகளில் ஈடுபட்டார்கள். முனிவரின் தவம்
பங்கப்பட்டது.
துர்வாச மகரிஷிக்குக் கோபம் வரக் கேட்கவா வேண்டும்? சஹசிகன்
மறுபிறவியில் கழுதையாகப் பிறந்து கிருஷ்ணனால் கொல்லப்படுவான் என்று
சபித்தார். திலோத்தமையை பாணாசுரனின் மகளாகப் பிறந்து கிருஷ்ணனின்
பேரன் அனிருத்ரனை மணப்பாய் என்று சபித்தார். தவம் பங்கப்பட்டு திரிந்து
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - August 7,
2016

கொண்டிருந்த துர்வாசர், அவுரவ முனிவர் மகள் கந்தவியைக் கண்டு அவளை


மணக்க ஆசைப்பட்டார்.
அவுரவ முனிவரோ அவள் சண்டைக்காரி என்று கூறினார். துர்வாசரோ
அவளுடைய நூறு திட்டுக்களை மன்னிப்பதாகக் கூறி மணந்தார். அவுரவ
முனிவர் கவலையுடன் மகளுக்கு அறிவுரை கூறி அனுப்பினார்.
ஒருமுறை கந்தவி நூறு முறைக்கு மேல் திட்டிவிட துர்வாசர் அவனை
சாம்பலாகும்படி திட்டினார். அவள் சாம்பலாகி விடவே துர்வாசம் மனம் கலங்கிப்
போனார்.
கிருஷ்ணன், துர்வாசரை சிறு பையன் வடிவில் வந்து சமாதானப்படுத்தினார். தன்
மகளின் முடிவைக் கேட்டு மனம் கலங்கிப் போன அவுரவ முனிவர் உடனே
துர்வாசர் பெரிய தோல்வியைச் சந்திப்பார் என்று சாபமிட்டார்.
மன்னன் அம்பரீஷனிடம் கோபம் கொண்டார் துர்வாசர். அவனைக் கொல்ல
எண்ணி ஒரு வரனை
ீ வாளுடன் தோற்றுவித்தார். அம்பரீஷன், திருமாலை
வேண்டினான். சுதர்ஸன சக்கரம் தோன்றி வரனின்
ீ கழுத்தை வெட்டிக்
கொன்றதுடன் நில்லாமல், துர்வாசரையும் துரத்தியது.
அவர் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று சரணடைந்தும் பலன் ஏதுமில்லை.
மறுபடியும் அம்பரீஷனையே சரணடைந்தார் துர்வாசர். சக்கரமும் சாந்தம்
அடைந்தது. அதுமுதல் துர்வாசர், விஷ்ணு பக்தர்களிடம் கோபம் கொண்டு
சபிப்பதைத் தவிர்த்தார்.
கிருஷ்ணன் நிறைய ராசலீலைகள் புரிந்தவன். கோபியர்களின் ஆடைகளைக்
கவர்ந்து கதம்ப மரத்தின் மீ தமர்ந்து வேடிக்கை காட்டியவன். ராதை நீரிலேயே
இருந்து தியானித்துக் கிருஷ்ணன் புகழ்பாடி, உடைகளைத் திரும்பக் கொடுக்க
வைத்தாள்.
கிருஷ்ணன், ராதையுடன் எல்லா இடங்களுக்கும் சுற்றித் திரிந்தான். கடைசியில்
மலய மமலையை அடைந்தார்கள். பரந்த ஆலமரத்தின் அடியில் கேதகிப் புதர்கள்
அருகில் அமர்ந்தார்கள். கிருஷ்ணன் பல கதைகளை ராதைக்குக் கூறலானான்.
அச்சமயம் அஷ்ட வக்ரமுனிவர் அங்கே வந்தார். அவரைப் பார்த்ததும் ராதை
சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தாள். கிருஷ்ணன் அவள் சிரிப்பைத் தடுத்தான்.
அம்முனிவரின் கதையைக் கூறலானான்.
முற்பிறப்பில் தேவலன் என்ற அந்தணனாகப் பிறந்தார், அஷ்ட வக்ரமுனிவர்.
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - August 7,
2016

மனைவியுடன் வாழ்ந்த அவர் வேறு எந்தப் பெண்ணுடனும் உறவு


கொள்வதில்லை என்று உறுதி பூண்டார். ஆனால் தேவலோக ரம்பை அவரைக்
கண்டாள். தன்னை மணந்து கொள்ளுாறு வேண்டினாள். அவரோ மறுத்தார்.
அதனால் அம்முனிவர் உடல் வக்ரமாகும் படியும், அவர் அதுவரை பெற்ற
புண்ணியங்கள் அனைத்தும் இழந்து விடுவார் என்றும் சாபமிட்டாள். அதைக்
கேட்ட அம்முனிவர் தீக்குளிக்க முற்பட்டார். அச்சமயம் கிருஷ்ணன் தோன்றி,
தடுத்ததுடன் அவருக்கு அஷ்ட வக்ரன் என்ற பெயரையும் சூட்டினார்.
அஷ்ட வக்கிரர் நெடுங்காலம் தவம் இயற்றினார். இங்கு கிருஷ்ணனையும் –
ராதையையும் கண்டதும் அவருடைய சாபம் நீங்கியது. அவர்களை வணங்கித்
துதித்தார்.

அஷ்டமி திதியில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர். இதனால் இந்த திதியானது


கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது. அஷ்டமி, நவமி திதியில் சுபகாரியங்கள்
செய்யக் கூடாது என்பார்கள். காரணம், இந்த திதிகளில்தான் கிருஷ்ணரும்,
இராமரும் பிறந்து, அதிக கஷ்டங்களை சந்தித்துவிட்டார்கள் என்ற காரணம்
சொல்லப்படுகிறது. (இராமர் பிறந்த நாள், இராம நவமி) ஆனால் முதலில்
துன்பங்களை கண்ட இந்த இருவருமே, பிறகு சாதனையும், சக்தியும் படைத்தவராக
திகழ்ந்தார்கள்.

தாங்கள் பிறந்த திதி-நட்சத்திர நாட்களை, மிக நல்ல சக்தி படைத்த நாட்களாக


மாற்றினார்கள், அஷ்டமி, நவமி என்பது புனிதமான திதிகள். அவை இறைவனுக்கு
உரியவை. தோஷ பரிகாரங்களுக்கு ஏற்ற நாட்கள் இவை.

கிருஷ்ணபரமாத்மாவின் மகிமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அத்தனை


சிறப்புமிக்கது. தனக்காக இல்லை என்றாலும் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான்
இவரை “கண்ணா“ என்கிறோம். அதாவது கண்ணைபோல் காப்பவன், “முகுந்தா”,
”மு” என்றால் முக்தியை அருள்வது என்ற பொருள். “கு” என்றால் இவ்வுலக
இன்பங்களை அருள்வது. இவ்வூலகில் வாழ்வதற்கும், முக்தியை பெறுவதற்கும்
கிருஷ்ணரே மூலவர் என்ற பொருளின் அடிப்படையில்தான் “முகுந்தா” என்று
அழைக்கிறோம்.
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - August 7,
2016

தர்மன் செய்த தவறு

துரியோதனன் சூதாட்டத்திற்கு பாண்டவர்களை அழைத்தபோது, தர்மர் மறுத்தாலும்


பிறகு சபையில் கர்ணன், பாண்டவர்களை கிண்டல் செய்ய, அர்ஜூனன் கோபமாக
பேச, தேவை இல்லாமல் வாக்குவாதம் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலையில்
துரியோதனன் சூதுக்கு அழைத்த பிறகு தர்மரும் சூதாட்டம் ஆட தொடங்கினார். 

என் சார்பாக என் மாமா சகுனி ஆடுவார்“ என்றான் துரியோதனன். பாண்டவர்களின்


சார்பாக நான் ஆடுவேன்” என்றார் தர்மர் யோசிக்காமல். சகுனியின் தந்திரத்தால்
பாண்டவர்கள் சூதில் தோற்றார்கள். தன்னால் எல்லாம் முடியும் என்று எண்ணிய
தர்மர், கிருஷ்ணரை அழைக்கவில்லை. ஒருவேலை, “எங்கள் சார்பாக கிருஷ்ணர்
விளையாடுவார்” என்று தர்மர் சொல்லி இருந்தால் நிச்சயம் மாயகண்ணன்
கௌரவர்களை ஜெயித்து இருப்பார். 

இதை திரௌபதி உணர்ந்ததால்தான், துச்சாதனன் திரௌபதியின் துகில்


உரித்தபோது, அண்ணனை நினைத்து “கோவிந்தா” என்று கண்ணனை அழைத்தாள்.
அதனால் திரௌபதியின் மானம் சபையில் காக்கப்பட்டது. 

அதேபோல், போர் களத்தில் கிருஷ்ணனால்தான் ஜெயித்தேன் என்று அர்ஜுனனும்


கடைசியில் உணர்ந்தான் என்கிறது வில்லிபாரதம். கிருஷ்ணபரமாத்மாவை
நம்பினால் நிச்சயம் வெற்றிதான். மனதால் கண்ணனை நினைத்தாலே நன்மைகள்
தேடி வரும் என்பதற்கு பக்தர்களின் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை செய்து
இருக்கிறார் பகவான். 

கிருஷ்ணபரமாத்மா பாண்டவர்களுக்கு மட்டுமல்ல, எவரும் மனதால்


நினைத்தாலேபோதும், மனித உருவத்தில் நமக்கும் உதவிட பகவான் வருவார்.
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - August 7,
2016

பூரி ஜகன்நாதர் ஆலயத்தில் கிருஷ்ண பகவான் வடித்த சிலை

இஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த மன்னன் இந்திரத்யும்னன். இவருக்கு


பிள்ளைபாக்கியம் இல்லாததால் ஒரு பிள்ளையை தத்தெடுத்து வளர்ந்தார். அந்த
வளர்ப்பு மகனின் பெயர் யக்ஞ நாராயணன். அவர் தன் தந்தையிடம், அசரீரி
தன்னிடம் ஒரு ஆலயம் கட்ட சொன்னதாகவும், அந்த ஆலயத்திற்கு இறைவனின
திருமேனியை உருவாக்க, சமுத்திரத்தில் இருந்து மூன்று கட்டைகள் வரும், அந்த
கட்டைகளில் இருந்துதான் இறைவனின் உருவத்தை உருவாக்க வேண்டும் என்று
அசரீரி சொன்னதாகவும் சொன்னார்.

தன் வளர்ப்பு மகன் சொன்னதுபோல் அரசரும் கோவில் கட்டும் பணியை சிறப்பாக


செய்து வந்தார். அசரீரி சொன்னதுபோல சமுத்திரத்தில் இருந்து இறைவனின்
உருவம் செய்ய கட்டைகள் மிதந்து வந்தன. மிதந்து வந்த கட்டைகளை கொண்டு
பகவானை சிலையாக வடிக்கும்படி சிற்பிகளிடம் சொன்னார். ஆனால் எவராலும்
அதில் பகவானின் திருஉருவத்தை உருவாக்க முடியவில்லை.

வருத்தத்தில் இருந்தார் அரசர். அப்போது ஒரு கிழவன், “நான் இந்த


கட்டைகளிலிருந்து மூன்று சிலைகள் செய்கிறேன். என்னென்ன சிலைகள் செய்ய
வேண்டும்?” என்று கேட்க, ஸ்ரீபலராமர், ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் சுபத்திரை சிலைகளை
வடித்து தரும்படி அரசரும் விருப்பத்தை சொல்ல, அதற்கு அந்த கிழவன், “சரி.
அப்படியே செய்கிறேன். ஆனால் அதற்கு 22 நாட்கள் ஆகும். அதுவரை யாரும் ஆலய
கதவை திறக்கக்கூடாது” என்றார்.
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - August 7,
2016

அரசரும் சம்மதித்தார். நாட்கள் பறந்தது. 22 நாட்கள் ஆவதற்குள், “ஆக்க


பொறுத்தவனுக்கு ஆற பொறுக்க முடியவில்லை” என்பதுபோல், ஒருநாள் அவசர
அவசரமாக ஆலய கதவை திறந்தார் அரசர். சிலை வடித்துக்கொண்டிருந்த கிழவர்
அப்படியே மறைந்து விட்டார். கிழவன் வடிவில் வந்தது கிருஷ்ணபரமாத்மா
என்பதை உணர்ந்தார் அரசர். இறைவனின் சிலை முழுமையாக இல்லாமல்
இருந்ததை கண்டு, தன் அவசரத்தால் இப்படி நடந்தவிட்டதே என்று மனம்
வருந்தினார். அப்போது அசரீரி குரல் ஒலித்தது.

“மனம் வருந்த வேண்டாம் இப்படியே அங்கஹீனனாக என்னை பிரதிஷ்டை செய்து


வணங்கு” என்றது அசரீரி. கிருஷ்ணபகவானால் உருவாக்கபட்டதுதான் பூரி
ஜகன்நாதர் ஆலயத்தில் இருக்கும் தெய்வசிலை.
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - August 7,
2016

முராரி என்று ஏன் பரமனை அழைக்கிறோம்.

கிருஷ்ண பரமாத்மாவை முராரி என்று அழைப்போம். ஏன் கிருஷ்ண பரமாத்மாவை


இப்படி அழைக்கிறோம் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம். கேரளாவில்
முகத்தல என்ற இடத்தில் முரன் என்ற அசுரன் இருந்தான். அவன் அந்த பகுதி
மக்களுக்கு பெரும் துன்பத்தை கொடுத்து வந்தான். அவனிடம் மாட்டினால்
கொன்றுவிடுவான். இதனால் அந்த ஊர் மக்கள் வேதனை அடைந்தார்கள்.
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - August 7,
2016

“தங்களுக்கு விமோச்சன காலம் எப்போது வரும் நாராயணா?” என்று தினமும் ஸ்ரீமந்


நாராயணனை வேண்டி வந்தார்கள்.

ஒருநாள் ஒரு மூதாட்டியின் வட்டு


ீ கதவை யாரோ தட்டுவது போல் இருந்தது. இதை
கேட்ட அந்த வட்டின்
ீ கிழவி, தன்னை கொல்ல அசுரன் முரன் வந்துவிட்டானோ
என்று பயந்தபடி கதவை திறந்தாள். ஆனால் வாசலில் ஒரு சிறுவன் நிற்பதை
கண்டாள்

அந்த சிறுவன் கறுப்பாக இருந்தாலும் அழகாக இருந்தான். அவனை பார்த்தவுடன்


அந்த மூதாட்டிக்கு பயம் நீங்கியது. “நீ யாரப்பா. எங்கிருந்து வருகிறாய்?“ என்று
கேட்டாள். “நான் யார் எங்கிருந்து வருகிறேன் என்பதை பிறகு சொல்கிறேன் பாட்டி,
எனக்கு பசியாக இருக்கிறது. உணவு தருவாயா?” என்று கேட்டான் அந்த சிறுவன்.

அவனை வட்டுக்குள்
ீ அழைத்து உட்கார வைத்து, அரிசி கஞ்சியை கொண்டு வந்து
அந்த சிறுவனிடம் கொடுத்தாள். “அப்பா.. நான் ஒரு ஏழை கிழவி. உனக்கு ருசியான
சாப்பிட கொடுக்க என் வட்டில்
ீ எதுவும் இல்லை. இந்த ஏழை பாட்டியால் இந்த அரிசி
கஞ்சியைதான் தர முடிந்தது.” என்று சொல்லி தந்தாள். அதை வாங்கி சாப்பிட்டான்
சிறுவன்.
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - August 7,
2016

“பாட்டி.. நீ எனக்கு அன்பாக கொடுத்த அரிசி கஞ்சி அமுதமாக இருந்தது. அன்புள்ளம்


கொண்ட நீ ஏழை இல்லை. நீ கொடுத்த இந்த அரிசி கஞ்சிக்கு நான் உனக்கு ஏதேனும்
உதவி செய்ய வேண்டும். என்ன உதவி வேண்டும் கேள்.” என்றான் சிறுவன். அந்த
சிறுவன் பேசியதை கேட்டு சிரித்துவிட்டால் பாட்டி. “ஏன் சிரித்தாய்?” என கேட்டான்
சிறுவன். “அட சுட்டி பயலே. நீ என்ன பகவான் கிருஷ்ணனோ. நீ அப்படி என்ன எனக்கு
உதவி செய்துவிடுவாய்.?” என்றாள் பாட்டி.

“ஆமாம் பாட்டி. நான் படுசுட்டிதான். என் அம்மாவும் அப்படிதான் சொல்வாள். இந்த


சுட்டி பயலுக்கு எல்லோரும் சின்ன வேலையாக தருகிறார்கள். நீயாவது பெரிய
வேலையை தா” என்றான் சிறுவன். “நீ என் பேரனை போல இருக்கிறாள். அதனால்
சொல்கிறேன். இந்த ஊரில் முரன் என்ற அசுரன் இருக்கிறான். அவன் கண்ணில் நீ
படாமல் இருந்தாலே போதும். நேரம் இருட்டிவிட்டது. இங்கேயே தூங்கிவிட்டு
காலையில் பத்திரமாக வடு
ீ போய் சேர்.” என்றாள் பாட்டி.

“எங்கள் ஊரில் நான் பாம்பின் மேல் தூங்கி பழகியவன். வட்டுக்குள்


ீ தரையில்
படுத்தால் எனக்கு தூக்கம் வராது. திண்ணையில் படுத்துக்கொள்கிறேன் பாட்டி
விடிந்ததும் புறப்படுகிறேன்.” என்ற சிறுவன், திண்ணையில் படுத்துக் கொண்டான்.
மறுநாள் பொழுது விடிந்தது. அப்போது – “படார்” என்று குண்டு வெடிப்பது போல
பலத்த சத்தம் அந்த ஊரையே அதிர வைத்தது. என்ன ஏது என்று புரியாமல் பாட்டியும்,
அவ்வூர் மக்களும் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்து பார்த்தார்கள்.

நடுதெருவில் அசுரன் முரன் இறந்து கிடந்தான். “யார் இந்த அசுரனை கொன்றது?”


என்று ஒருவரையோருவர் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். பாட்டி
திண்ணையை பார்த்தாள். அந்த சிறுவன் இல்லை. நேற்றிரவு வந்தது கண்ணன்தான்
என்பதை தெரிந்துக்கொண்டாள். “இந்த அசுரனின் தொல்லையில் இருந்து காப்பாற்ற
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - August 7,
2016

தினமும் நாம் ஸ்ரீமந் நாராயணனிடம் வேண்டுவோமே. அந்த கண்ணனின்


லீலைதான் இது.” என்றாள்.

முரன் என்ற அசுரனை கொன்றதால் கிருஷ்ண பரமாத்மாவுக்கு “முராரி” என்று பெயர்


ஏற்பட்டது. “ஜெயகிருஷ்ண முகுந்தா முராரே” என்று பாடினாலே எந்த அசுர
சக்தியாலும் நம்மை வழ்த்த
ீ முடியாது.பகவான் கிருஷ்ணர், நம்மை எப்போதும்
காப்பார். அர்ஜுனன் போருக்கு செல்ல தேரில் ஏறும்போது, தேரில் ஏறுவதற்கு
வசதியாக அர்ஜுனனை தன் தோள் மீ து ஏற்றி தேர் ஏற வைத்தார் பகவான்.

இப்படி தன் பக்தர்களின் வெற்றிக்காக ஒரு சேவகனாகவே இருந்து நமக்காக உதவி


செய்வார் பகவான் கிருஷணர். இறைவனின் குழந்தை நாம். ஆனால் கிருஷ்ணன்
ஒருவன்தான் பூலோக மக்களுக்கு செல்லக் கண்ணனாக யுகயுகமாக இருக்கிறான்.
பகவான் கிருஷணர் என்றும் நமக்கு குழந்தைதான். அவன், குழந்தை வடிவில் உள்ள
தெய்வம்.

கிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டிய பாகத்தை ஏமாற்றிய குசேலர்

கிருஷ்ணருடைய பால்ய சினேகிதராக விளங்கியவர்களில் குசேலர் என்கிற


சுதாமாவும் ஒருவர். ஒன்றாக குருகுலத்தில் படித்தவர்கள். ஒருநாள் குருபத்தினி,
கிருஷ்ணருக்கும் குசேலருக்கும் அவல் தயாரித்து கொடுத்தார். ஆனால் குசேலரோ
கிருஷ்ணணுக்கு அதை சரிபங்கு கொடுக்காமல் அத்தனை அவலையும் குசேலனே
சாப்பிட்டார். அதை நினைத்து கிருஷ்ணர் கவலைப்படவில்லை. ஆனால் குருவோ,
“குசேலன் செய்த மிகப் பெரிய பாவச்செயல் இது.” என்றார். “இதனால் குசேலா நீ
வறுமையில் வாடுவாய்.” என்றார். சிறு வயதில் நடந்த இந்த சம்பவத்தை காலம்,
மறக்கச் செய்தது. குசேலருக்கு திருமணம் நடந்தது. குழந்தைகள் பிறந்தனர்.
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - August 7,
2016

சந்தர்பத்திற்காக காத்திருந்த விதி, தன் வேலையை தொடங்கியது. குசேலன்


வறுமையில் வாடினார்.

“எனக்கு இல்லையெனாலும் பராவாயில்லை, ஆனால் நம் குழந்தைகள் உடுக்க


மாற்று ஆடை கூட இல்லாமல் இருக்கிறதே. உயிர் வாழ அடுத்த வேளை சாப்பாடும்
இல்லையே.” “திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பார்களே. தெய்வம் போல
இருக்கிறாரே உங்கள் நண்பர் கிருஷ்ணர். அவரை சந்தித்து வாருங்கள்.” என்றாள்
சுசீலை. மனைவியின் யோசனையை ஏற்று குசேலன், கிருஷணரை சந்திக்க
புறப்பட்டார். அப்போது சுசீலை தன் கையில் சிறு மூட்டையுடன் வந்தாள்.

“பல வருடங்களுக்கு பிறகு உங்கள் நண்பரை சந்திக்க செல்கிறீர்கள். கிருஷ்ணருக்கு


அவல் என்றால் மிக பிடிக்கும் என்பீர்களே. இதோ இதில் கொஞ்சம் அவல்
இருக்கிறது. கொண்டு செல்லுங்கள்.” என்றால் மனைவி கொடுத்த
அவுள்முட்டையுடன் புறப்பட்டார் குசேலர். கிருஷ்ணபரமாத்மாவை பார்க்க. குசேலர்
என்பவர் வந்திருப்பதாக கிருஷ்ணரிடம் பணியாளர்கள் சொன்ன உடன் வாசலுக்கு
ஓடோடி வந்தார் கிருஷ்ணர். குசேலனை கட்டித்தழுவி உள்ளே அழைத்துச் சென்றார்.

“அண்ணி எப்படி இருக்கிறார்கள் சுதாமா.? எனக்கு என்ன தந்தனுப்பினார்கள்.? அது


என்ன மூட்டை?.” என்றார் கிருஷ்ணர். குசேலன் மூட்டையை பிரித்து அவலை
கையில் எடுத்தான். அதை ஆசையாக வாங்கி சாப்பிட்டார் கிருஷ்ணர்.

“அடேங்கப்பா, என் பங்கு அவல் கிடைக்க எத்தனை வருட காலம் காத்திருக்க


வேண்டியிருந்தது பார்த்தாயா.” என்று சிரித்தார் கிருஷ்ணர். குசேலரும்
சிரித்துவிட்டார். கிருஷ்ணரிடம் உதவி கேட்காமல் திரும்புகிறோமே என்ற வருத்தம்
குசேலனிடம் இல்லை. நண்பனின் அன்பே போதும் என்று வடு
ீ திரும்பினார். அங்கே
தன் இல்லம் பொன்மயமாக ஜொலிப்பதை கண்டு, எல்லாம் கிருஷ்ணரின் செயலே,
என்று மகிழ்ந்து போனார் குசேலர்.
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - August 7,
2016

குழந்தை கிருஷ்ணரின் பாதத்தை ஏன் வட்டில்


ீ கோலமாக வரைகிறோம்
தெரியுமா

நாரதமுனிவர் ஒருசமயம் ஒவ்வோரு கிருஷ்ண பக்தர்களின் வட்டுக்கும்



சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு
அதிசயித்தார். அதேபோல் பிருந்தாவனத்தில் ஒவ்வோரு வட்டிலும்
ீ கிருஷ்ணர்
ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து பரவசமும் ஆனந்தமும்
அடைந்தார். இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் நம்
கிருஷ்ணபரமாத்மா.“ நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள்
இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன, காப்பேன் என்பதைக்
குறிப்பிடவே ஒவ்வோருவர் வட்டிலும்
ீ கிருஷ்ணஜெயந்தியன்று கிருஷ்ணதிருவடிக்
கோலம் போடுகிறார்கள்.
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - August 7,
2016

கிருஷ்ணஜெயந்தி பூஜைமுறை

வட்டின்
ீ நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை மாவால்
பதியச் செய்ய வேண்டும். கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய
வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு. பிறகு கிருஷ்ணருக்கு பிடித்த
தயிர், வெண்ணை, அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முருக்கு, லட்டு
போன்ற இனிப்பு உணவுகளை வைக்கவேண்டும். முடிந்த அளவுக்கு பூஜையை
மாலை 6.00 – 7.00 மணிக்குள் செய்தால் சிறப்பு. நீ எனக்கு ஒரு இலையைக் கொடு ;
அல்லது பூவை கொடு ; இல்லை ஒரு பழத்தைக் கொடு ; அதுவும் இல்லையென்றால்
கொஞ்சம் தண்ண ீர் கொடு ; எதைக் கொடுத்தாலும் பக்தியோடு கொடு. சுத்தமான
மனம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் சாப்பிடுவேன்.“ என்றார் கீ தையில்
கண்ணன்.

பாகுபாடு பாராமல் குழந்தை உள்ள படைத்த கண்ணனை வணங்கினால் வாழ்நாள்


முழுவதும் கிருஷ்ணபரமாத்மா, தம் பக்தர்களை தன் கண்ணைபோல் காப்பார்.
கண்ணனின் அருளாசியால் சகலநலங்களும் பெற்று வளமோடும் நலமோடும்
அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வோம். 
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - August 7,
2016

You might also like