You are on page 1of 2

±ý¨É ¿ýÈ¡¸ þ¨ÈÅý À¨¼ò¾Éý ¾ý¨É ¿ýÈ¡¸ò ¾Á¢úî ¦ºöÔÁ¡Ú!

காலை இளம்பருதி துயில் எழுந்து ஒளிவீசும் இவ்வினிய பொழுதினிலே, தாமரை தடாகத்தே


வீற்றிருக்கும் அவைத்தலைவர் அவர்களே, நக்கரீ ர் வழித்தோன்றல் நீதிவழுவா நீதிமான்களே,
காலமதைப் பொன்னெனக் காக்க வந்துள்ள மணிக்காப்பாளரே, தலைமையாசிரியர்களே,
ஆசிரியப் பெருமக்களே, பெற்றோர்களே, சக மாணவ மாணவியரே, உங்கள் அனைவருக்கும்
அன்னைத் தமிழின் பாதம் பணிந்து சமர்ப்பிக்கின்றேன், வணக்கம். இத்தருணம் உங்கள்
முன்னிலையில் நான் பேச எடுத்துக் கொண்ட தலைப்பு‘ கண்ணப்பநாயனார் ‘ என்பதாகும்.

சைவ சமய விருட்சங்களாகத் திகழும் சிவனடியார்களான 63 நாயன்மார்களில்


கண்ணப்ப நாயனார் என்பவர் தனி இடம் வகித்தவர். வேடுவ குலத்தின் தலைவனான நாகன்
என்பவருக்கும் தத்தை என்பவருக்கும் புத்திரராக அவதரித்தவர். திண்ணன் என்ற
இயற்பெயரை உடைய இவர், தன் பூர்வ ஜென்ம பலனால் காளத்தி மலைக்கு வேட்டையாடச்
செல்கின்றார். அம்மலையின் மீது ஏறவே ஓர் இனம் புரியாத உள்ளுணர்வு ஏற்படுகின்றது
திண்ணனுக்கு. மலையில் குடுமித்தேவர் என்ற திருப்பெயர் கொண்டு அருள்பாளிக்கும்
சிவபெருமானைக் காணவே எல்லையில்லா மகிழ்ச்சிகொண்டு அவரைத் தினமும் வழிபடத்
தொடங்குகின்றார்.

சூது வாது அறியாத திண்ணன் இறைவனை வழிபட வேண்டி, தன் வாய் முழுக்க ஆற்று
நீரும், பூக்களைக் கொய்து தலையிலும் பின் இறைவனின் பசி தீர வேண்டும் என்ற
எண்ணத்தில் வேட்டையாடிய பன்றி இறைச்சியையும் கொண்டு வருவார். ஈசனை மனமகிழ
வணங்கியபின் இருள் சூழ்வேளையில் அவருக்குக் காவலாகக் கண் விழித்திருப்பார்.
காலையில் மீண்டும் வேட்டைக்குச் சென்று மாலையில் திரும்பியதும் வழிபாட்டிற்கான
வேலைகளைக் கவனிப்பார்.

அதேவேளையில், சிவகாமநெறி அறிந்த சிவகோச்சாரியார் காலையில் குடுமித்தேவரை


வணங்க வருவார். “ஐயோ, அபசாரம்.. அபசாரம்.. எவன் இப்படி செய்தான்’ என்று
பதறிப்போய் அவ்விடத்தைச் சுத்தம் செய்து வழிபாடு செய்து புறப்படுவார். மாலையில் மீண்டும்
தன் வாயில் கொண்டு வந்த நீரினால் பெருமானை நீராட்டி, தலையில் சொருகியிருந்த
பூக்களால் அர்ச்சித்து, வேட்டையாடிய இறைச்சியைப் படையல் செய்து மகிழ்வார். இவ்வாறாக
அனுதினமும் காலையில் சிவகோச்சாரியார் பதறுவதும் மாலையில் திண்ணன்
அகமகிழ்வதுமாக இருந்தது.

ஒரு நாள் இரவில், சிவகோச்சாரியார் நித்திரையில் ஆழ்ந்திருந்த பொழுது, சிவபிரான்


அவர் கனவில் தோன்றி ‘அன்பு வழிபாட்டை நாளை மரத்தின் மறைவில் நின்று பார்ப்பாயாக’
என்று கூறி மறைகின்றார். முறையே ஏழாவது நாள் வழிபாட்டிற்கானப் பொருள்களோடு வந்தார்
திண்ணன். அப்போது, பெருமானின் வலக்கண்ணில் உதிரம் கொட்டுவதைக் கண்ட திண்ணன்
செய்வதறியாது திகைத்தார். செங்கனலில் உருண்டெழுந்தது போல உணர்நத ் ார். கண்களில்
கண்ணரீ ் ஆறாய் பெருக்கெடுத்தது. கண்கண்ட மூலிகைகளை எல்லாம் கொண்டு உதிரம்
வழிவதை நிறுத்த முனைந்தார். பயனற்றுபோனது.
சட்டென்று ஒரு கனப்பொழுதும் யோசியாமல் தன் வலக்கண்ணினைத் தோண்டி
பெருமானுக்குப் பொருத்தினார். உதிரம் வழிவது நின்றது. ஆகா..எல்லையில்லா ஆனந்தம்..
பேரானந்தம் கொண்டார் திண்ணன். மறுகனம் பெருமானின் இடக்கண்ணில் உதிரம் கொட்டத்
தொடங்கியது. உடனே ஒரு காலின் பெருவிரலை அடையாளமாக உதிரம் வழியும் இடத்தில்
வைத்து, தன் மறுகண்ணையும் தோண்ட முற்பட்டார்.

கள்ளங்கபடமற்ற அந்த உண்மை பக்தியைக் கண்டதும் ‘நில் கண்ணப்பா’ என்ற அசரீரி


ஒலிக்க இறைவன் பேரொளிப்பிழம்பாய் திண்ணன் முன் தோன்றினார். நடந்தவை
அனைத்தையும் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த சிவகோச்சாரியர்,

‘ கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்

என்னப்பன் என்னொப்பின் என்னையும் ஆட்கொண்டருளினார்’


என்று மனமுருக நின்று கொண்டிருந்தார்.

எனவே, அவையினரே, கருனையும் அன்பும் நிறைந்த இறைவன் புலால் உண்பவன் புலால்


மறுப்பவன் என்ற பேதம் கொண்டு அருள்வதில்லை. இறைவன் பார்வையில் தூயபக்தியே
மேன்மையானது. உண்மையான பக்தியும் சுத்தமான உள்ளமும் கொண்ட எந்த மனிதனும்
பரம்பொருளுக்கு நெருக்கமானவனே. இதை தவறாது மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில்
சமய வகுப்புகளுக்குப் பிள்ளைகளை அனுப்ப வேண்டும். இதன்வழி, மேன்மைகொண்ட
சமயநெறி அறிந்த சமுதாயத்தினரை உருவாக்க இயலும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

வாய்ப்பளித்தமைக்கு நன்றி. வணக்கம்.

இன்பமே சூழ்க..எல்லோரும் வாழ்க..

You might also like