You are on page 1of 7

திருநாளைப் போவார் நாயனார் 

அல்லது நந்தனார் சைவ
சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து
மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.

தமிழ்நாட்டில் கொள்ளிட நதியால் வளம்பெற்ற ஓர் ஊர் ஆதனூர். இவ்வூர்ச்


சேரியிலே புலைப்பாடி ஒன்று இருந்தது. அப்புலைப்பாடியில்
வாழ்ந்தவர்களின் தலைவராக ‘நந்தனார்’ என்றோர் நல்லவர் இருந்தார்.
அவர் பிறப்பு அறிவறிந்த காலந்தொட்டு சிவபிரானிடத்து மிகுந்த
அன்புடையவரானார். திருவடி நினைவன்றி மறந்தும் மற்றைய நினைவு
கொள்ளாதவர். அவர் தமது குலப்பிறப்பிற்கேற்ற கொள்கையால்
‘புறத்தொண்டு’ புரிந்து வந்தவர். கோயில் பேரிகைகளுக்காக
போர்வைத்தோல், விசிவார் என்பன கொடுப்பார். அருச்சனைக்காக
கோரோசனை கொடுப்பார். பேரன்புப் பெருக்கால் ஆடுதலும் பாடுதலும்
செய்வார்.

ஒருநாள் அருகேயுள்ள திருப்புன்கூருக்குச் சென்று வழிபட விரும்பினார்.


விருப்பம் போன்று சென்று வாயிலினின்று இசைபாடி நின்றார். அப்பொழுது
பெருமானை நேரில் கும்பிடவேண்டுமென்ற ஆசை பெருகியது. அன்பரின்
ஆசை தீர்த்தற்குப் பெருமான் நந்தியை விலகுமாறு செய்து நேரே தரிசனம்
அளித்தார். நேர்த்தரிசனம் பெற்றுப் பரவசத்தரான நந்தனார் பணிந்தெழுந்து
வதிவலம்
ீ வரும்போது பள்ளமான ஓரிடத்தைக் கண்டார். அவ்விடம் குளம்
தோண்டுவதற்கு அமைவாயிருப்பது கண்டு குளம் அமைத்தார். பின்
கோயிலை வலம் வந்து நடமாடி விடைபெற்று தம்மூர் சேர்ந்தார்.
இவ்வாறு அயலூர்களிலேயுள்ள திருகோயில்கள் பலவற்றிற்கும் சென்று
திருத்தொண்டு புரிந்துவந்த நந்தனாருக்கு ஒருநாள் தில்லைத் தரிசனம்
செய்யும் ஆசை பெருகியது. அதனால் அன்றிரவு கண்துயிலாது கழித்தார்.
விடிந்ததும் தில்லைபதியின் பெருமையையும் தம்குலப்பிறப்பையும்
நினைத்து போவாது தவித்தார். மீ ண்டும் ஆசை அளவின்றிப் பெருகவே
“நாளைப்போவேன்” என்று கூறி நாட்களைக்கழித்தார். இவ்வாறு நாள்
கழிதல் பொறாதவராய் ஒருநாள் தில்லைத் திருத்தல எல்லையைச்
சென்று சேர்ந்தார். சேர்ந்தவர் எல்லையில் வணங்கி நின்று அங்கு
எழும்வேள்விப் புகையைக் கண்டார். வேதம் ஓதும் ஒலியைக் கேட்டார்.
தாம் பிறந்த குலத்தினை நினைத்து அதனுள்ளே புகுவதற்கு அஞ்சி
நின்றார். ‘அந்தணர் மாளிகைகள் வேள்வி மண்டபங்கள் நிறைந்த
இவ்விடத்தில் எனக்கு அடைதல் அரிது’ என்று கைதொழுது
வலங்கொண்டு சென்றார். இவ்வாறு இரவு பகல் தில்லைத் திருப்பதியை
வதி
ீ வலம்வந்தவர் ‘மை வண்ணத் திரு மிடற்றார் மன்றில்
நடங்கும்பிடுவது எவ்வண்ணம்? என்று எண்ணி ஏக்கத்துடன் துயில்
கொண்டார். ‘இன்னல்தரும் இழிபிறப்பாகிய இது இறைவன் ஆடல் புரியும்
பொன்னம்பலத்தை வழிபடுவதற்குத் தடையாயுள்ளதே? என்று வருந்தித்
துயில் கொள்பவராகிய நந்தனாரது வருத்தத்தை நீக்கியருளத்
திருவுளங்கொண்ட தில்லைக் கூத்தப் பெருமான், ‘என்று வந்தாய்’ என்னும்
புன்முறுவற் குறிப்புடன் நாளைப்போவாரது கனவில் தோன்றினார்.
“இப்பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி, முப்புரிநூல் மார்புடன்
முன்னணைவாய்” என மொழிந்து, அவ்வண்ணமே வேள்வித்தீ
அமைக்கும்படி தில்லைவாழந்தணர்க்கும் கனவில் தோன்றி அருள்புரிந்து
மறைந்தருளினார்.

அந்நிலையில் தில்லைவாழந்தணர்கள் விழித்தெழுந்து கூத்தப் பெருமானது


கட்டளையினை உணர்ந்து ‘எம்பெருமான் அருள் செய்த பணிசெய்வோம்’
என்று ஏத்திப் பெருங்காதலுடன் வந்து திருத்தொண்டராகிய
திருநாளைப்போவாரை அடைந்து, ‘ஐயரே, அம்பலர் திருவடிகளால் உமக்கு
வேள்வித் தீ அமைத்துத் தரவந்தோம்’ என வணங்கினார். தெய்வமறை
முனிவர்களும் தெந்திசையின் மதிற்புறத்துத் திருவாயில் முன்பு
தீயமைத்தார்கள். நாளைப்போவார், இறைவன் திருவடிகளை நினைத்து
அத்தீக்குழியினை அடைந்தார். எரியை வலம் கொண்டு கைதொழுது
அதனுள்ளே புகுந்து புண்ணிய மாமுனி வடிவாய் செங்கமல மலரில்
உதித்த பிரமதேவனைப் போன்று செந்தீயில் வந்தெழுந்த அந்தணனாகத்
தோன்றினார். அதுகண்டு தில்லை வாழந்தணர்கள் கைதொழுதார்கள்.
திருத்தொண்டர்கள் வணங்கி மனங்களித்தார்கள். வேள்வித்தீயில் மூழ்கி
வெளிப்பட்ட திருநாளைப் போவாராம், மறைமுனிவர் அருமறைசூழ்
திருமன்றில் ஆடுகின்றகழல் வணங்க, தில்லைவாழந்தணர் உடன்செல்லத்
திருக்கோயிலின் கோபுரத்தைத் தொழுது உள்ளே சென்றார். உலகுய்ய
நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார். உடன் வந்தோர் யாவரும்
அவரைக் காணாதவராயினர். நாளைப்போவார் அம்பலவர் திருவடியிற்
கலந்து மறைந்தமை கண்டு தில்லைவாழந்தணர்கள் அதிசயித்தார்கள்.
முனிவர்கள் துதித்துப் போற்றினார்கள். வந்தணைந்த திருத்தொண்டராகிய
நந்தனாரது வினைமாசறுத்துத் தம்முடைய திருவடிகளைத் தொழுது
இன்புற்றிருக்க அந்தமில்லா ஆனந்தக் கூத்தினர் அருள் புரிந்தார்.

“செம்மையே திருநாளைப் போவார்க்கு அடியேன்” – 

திருத்தொண்டத் தொகை
ப்பர் திருநாவுக்கரசு நாயனார் கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், 
தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும்,
63 நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரை தேவார மூவருள்
இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பத்தி செலுத்துதலில் தொண்டை
அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.

இவரை திருஞானசம்பந்தர் அப்பர் (தந்தை) என்று அழைத்தமையால்,. அப்பர்


என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார். இவர் தாண்டகம் எனும்
விருத்த வகையை பாடியமையால் இவரை தாண்டகவேந்தர் என்றும்
அழைக்கின்றனர்.

நாயன்மார்களில் பல்வேறு பெயர்களைக் கொண்டவர் இவர். இயற்பெயர்,


மதம் மாறியமையால் பெற்றமை, செயல்களாலும், கவியாலும் பெற்றவை
என பல பெயர்கள் இவருக்கு உள்ளது.

மருணக்கியார்
ீ - இயற்பெயர்

தருமசேனர் - சமண சமயத்தை தழுவிய போது கொண்ட பெயர்

நாவுக்கரசர், திருநாவுக்கரசர் - தேவாரப் பாடல்களை பாடியமையால் பெற்ற


பெயர்

அப்பர் - திருஞானசம்பந்தர் அழைத்தமையால் வந்த பெயர்

உழவாரத் தொண்டர் - சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியை


செய்தமையால் பெற்ற பட்டப்பெயர்
தாண்டகவேந்தர் - தாண்டகம் எனும் விருத்த வகையை பாடியமையால்
பெற்ற பட்டப்பெயர்

திருநாவுக்கரசர் சோழநாட்டின் திருமுனைப்பாடி பகுதியிலிருந்த கடலூர்


மாவட்டத்தில் உள்ள திருவாமூர் எனும் ஊரில் சைவ
வெள்ளாளர் குலத்தில் புகழனார் மற்றும் மாதினி இணையாருக்குப்
பிறந்தவர். இவருடைய இயற்பெயர் மருணக்கியார்
ீ ஆகும். இளமையில்
சைவசமயத்தினை விட்டு சமண சமயத்தவரானார். சமண நூல்களைக்
கற்று அம்மத தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். அப்போது
தருமசேனர் என்று அழைக்கப்பட்டார்.

தருமசேனரின் தமக்கையார் திலகவதியார். இவர் சிவபக்தராக இருந்தார்.


அதனால் சமண சமயத்தில் தன்னுடைய தம்பி இணைந்ததை எண்ணி
வருந்தி இறைவனிடம் முறையிட்டார். அதனால் தருமசேனருக்கு
கடுமையான சூலை நோய் (வயிற்று வலி)  ஏற்பட்டது. சமண
மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல் போகவும்,
திலகவதியாரின் ஆலோசனைப்படி தருமசேனர் "கூற்றாயினவாறு
விலக்ககலீர்" எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். இப்பாடலால் நோய்
தீர்ந்தது. அதன் பிறகு சைவ சமயத்தவராகி நாவுக்கரசர் என்று
அழைக்கப்பட்டார்.

பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடினார்.


அத்துடன் சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியையும் செய்தார்.
இதனை உழவாரப் பணியென்று சைவர்கள் அழைக்கின்றனர். பல்வேறு
சிவாலயங்களில் உழவாரப் பணிச் செய்து முன்னோடியாக
இருந்தமையால், "உழவாரத் தொண்டர்" என அழைக்கப்பட்டார். இன்றும்
சைவர்கள் உழவாரப் பணியின் தலைவராக நாவுக்கரசரையே
கொள்கின்றனர். இவர் இறைவனை தொண்டு வழியில் வழிபட்டமை
குறிப்பிடத் தக்கதாகும்.

சமண சமயத்தை சேர்ந்த மன்னன் மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசரைப்


பலவிதங்களில் துன்புறுத்தினான். அத்துன்பங்களை திருநாவுக்கர் இறைவன்
அருளால் வென்றார். இத்தகைய துன்பங்கள் இழைக்கப்பட்டும், இறைவன்
அருளால் மீ ண்டதை, "கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும்
நற்றுணை ஆவது நமச்சிவாயவே" எனும் நமச்சிவாயப் பதிகத்தில் பதிவு
செய்துள்ளார். இறுதியில் மகேந்திர பல்லவனும் சைவ சமயத்தை
தழுவினான்.
தனது முதிர்ந்த வயதில் சிறுவராயிருந்த திருஞான சம்பந்தமூர்த்தி
நாயனாருடன் சேர்ந்து தல யாத்திரைகள் செய்தார். மேலும்
திருஞானசம்பந்தரால் அப்பர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் பாடிய
தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய
மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன. சமயத் தொண்டு புரிந்த
திருநாவுக்கரசர் 81 ஆவது வயதில் திருப்புகலூரில் சித்திரைச் சதயத்தில்
இறைவனடி கலந்தார்.

கரக்கோயில்

அவர் பாடிய தலங்களில் முக்கியமான தலம் மேலக்கடம்பூர்


அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆகும். இங்கு அவர் என் கடன் பணி
செய்துகிடப்பதே என்னும் வரிகளைப் பாடி அருளினார். மேலும் அவர்
கரக்கோயில் என இத்தலத்தினை பாடியுள்ளார். ஒன்பது வகைக்
கோயில்களில் கரக்கோயில் என போற்றப்படும் ஒரே
தலம் மேலக்கடம்பூர் ஆகும்.

அற்புதங்கள்

சமணர்களாலே 7 நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து


வைத்திருந்தும் வேகாது உயிர் பிழைத்தார்

சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும் சாகாது உயிர்


பிழைத்தார்

சமணர்கள் விடுத்த கொலை யானை வலம் வந்து வணங்கிச் சென்றது

சமணர்கள் கல்லிற் சேர்த்துக்கட்டிக் கடலில் விடவும் அக்கல்லே


தோணியாகக் கரையேறியது.

சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றது

வேதாரணியத்திலே திருக்கதவு திறக்கப் பாடியது.

விடத்தினால் இறந்த மூத்ததிருநாவுக்கரசை உயிர்ப்பித்தது

காசிக்கு அப்பால் உள்ள ஒரு தடாகத்தினுள்ளே மூழ்கி திருவையாற்றிலே


ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையேமகறியது.

பதிகங்கள்

திருநாவுக்கரசர் 49,000 தேவாரப் பதிகங்களை பாடியுள்ளார். இவற்றில் சில


பதிகங்களை தாள அமைப்பினைச் சேர்ந்ததாக குறிப்பிடுகின்றனர். இவ்வாறு
தாள அமைப்புடன் பாடப்பட்டவற்றைப் பண்ணாங்கப் பாடல்கள் என்றும்,
தாள அமைப்பு இல்லாத பாடல்கள் சுத்தாங்கப் பாடல்கள் என்றும்
அழைக்கப்படுகின்றன. திருத்தாண்டகம், திருவிருத்தம், திருக்குறுந்தொகை
ஆகியவை அப்பர் பாடிய சுத்தாங்கப் பதிகங்கள். அப்பரின் பாடல்கள் தமிழ்ச்
சுவையும் பக்திச் சுவையும் தோய்ந்தவை. உதாரணத்திற்கு,

"மாசில் வணையும்
ீ மாலை மதியமும்

வசு
ீ தென்றலும் வங்கிள
ீ வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே"

ஈசனுடைய அடிகளில் சரணடைந்தால், மர நிழல் தரும் குளுமை போன்று


இருக்கும் என்று கூறிய அப்பர் அடிகள், அந்த நிழலானது குற்றமற்ற
வணை
ீ இசை போன்றது; இளம் மாலையில் தோன்றிய நிலவின்
குளுமையை ஒத்தது. வசுகின்ற
ீ தென்றல் போன்றது. இளவேனிற்
காலத்தின் உயிர்ப்பைக் கொண்டது. தாமரை மலர்களைச் சுற்றும்
வண்டுகளைக் கொண்ட குளம் போன்றது என்கிறார். அவர் உதாரண மாகக்
கூறிய அனைத்தும் மனதுக்கு இனிமை சேர்ப்பவை. அனைத்து
இனிமைகளையும் ஒரு சேர அளிப்பது இறைவனது பாத நிழலே என்கிறார்
அப்பர்!

திருவதிகை வரட்டானம்
ீ முதற்பதிகப்பாடல்

கூற்றாயின வாறு விலக்கலீர்

கொடுமை பலசெயதனநான் அறியேன்

ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும்

பிரியாது வணங்குவன் எப்பொழதும்

தோற்றாதென் வயிற்றின் அகம்படியே

குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில

வரட்டா
ீ னத்துறை யம்பானே

இசை ஞானம்
திருநாவுக்கரசர் இசைத்தமிழில் சிறந்த ஞானம் கொண்டவர். நான்காவது
திருமுறையில் உள்ள பாடல்களில் திருநாவுக்கரசின் இசைத்திறன்
வெளிப்படுகிறது. இவருடைய பாடல்களில் கீ ழ்காணும் பத்து பண்கள்
காணப்படுகின்றன.

கொல்லி

காந்தாரம்

பியந்தைக்காந்தாரம்

சாதாரி

காந்தார பஞ்சமம்

பழந்தக்கராகம்

பழம் பஞ்சுரம்

இந்தளம்

சீகாமரம்

குறிஞ்சி

You might also like